யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்பிளக்கத்தொடங்கினது அப்பத்தான்.. அதில லயன்கிங் 1.5 எண்ட படத்தில ககூனமடாட்டா எண்ட ஒரு வசனம் வரும்.. அப்பிடீன்ன கவலையே இலலாமைன்னு அர்த்தம்.. அதை அடையிறதுக்கு see beyond What you See ங்கிறதுதான் தாரக மந்திரமாம்னு ஒரு கிழட்டுக்குரங்கு சொல்லும்.. அது மனசில ஆழமா பதிஞ்சிட்டுது..
நீ இப்ப உனக்கு கிட்டவா தெரியிற இலக்குகளை மட்டுமல்லாமல் , அங்கால தள்ளி தெரியிற இலக்குகளையும் பாக்கணும்.. அதுதான் அந்த வசனத்தோட தார்ப்பரியம்..
செஸ் விளையாட்டை எடுத்துக்கொண்டீங்களெண்டால் ஒரு மூவ் பண்ணும் போது அதுக்கடுத்த 64 மூவ் பற்றி சிந்திக்கவேணும்.. ஒரு எக்சாமுக்கு காசு கட்டிறீங்களெண்டால் பைனல் எக்சாம் வரைக்கும் போக வசதிவருமா எண்டு யோசிக்கணும்..
அப்பிடி யோசிச்சு வாழ்ந்தா நிச்சயம் லைப் நல்லாத்தான் இருக்கும்.. இருபத்தைஞ்சு வயிசில நல்ல வேலைக்கு போய் , சொந்தக்காசில அம்மாவுக்கு சாறி எடுத்துக் குடுக்கணும் , நம்ம பக்கத்து வீட்டு பிகருக்கு பவுடர் வாங்கி குடுக்கணும் , எண்டு விதவிதமா யோசிச்சு ஓலெவல் படிக்கிறதில ஒரு சுகமப்பா..
ககூனமடாட்டா! :)
இப்போ 25 வயசாயிடுச்சு.. நல்ல வேலைக்கு போயாச்சு.. அம்மாவுக்கு சாறியும் எடுத்து குடுத்தாச்சு.. ( ஆனா பக்கத்து வீட்டுக்கு பிகருக்குதான் எவனோ கிழவாடி கனடாவிலருந்து வந்து பவுடரப்போட்டுட்டான்.. அதை விடுங்க.. :( ) ..
இப்போ இந்த வயசில கலகல ஜலஜல எண்டு இருக்கும்போது , ட்ரிப்புகள் போகும் போது, ஜாலியா இருக்கும்போது , ரோட்ல டைட் டீசேட் போட்டு மசில்ச காட்டி நடக்கும் போது , பிகருகள் ரகசியமா பாக்கிறதை ரசிக்கும்போது , இதுதான்டா சொர்ககம் எண்டு புல்லரிக்கும்.. எதையும் சாப்பிடலாம் , எதையும் ரசிக்கலாம், பாடலாம் ஆடலாம் பகிடிவிடலாம், டெங்கு நுளம்பு வந்தா ஏய் இங்க குத்தேன் ஏய் இங்க குத்தேன் எண்டு லுலுலாயி காட்டலாம்.. மதர் மதர்ப்பு தெனாவட்டு இளரத்தம்.. அப்பிடி வாழ்க்கை இனிக்கும் போதுதான் குறுக்கால ஒரு கிழவன் போனான்.
கால்மூட்டெல்லாம் தேஞ்சு, 2 தரம் பைபாஸ் செஞ்சு, வாதம் வந்து , கண்பார்வை போய், பின்னாடி வாற ஓட்டோக்காரன் ஹோண் அடிச்சது கேக்காம அவன் கிட்ட ” கிழட்டு முண்டம் வயசானா வீட்ட கிடந்து சாவுறதுதானே ” எண் பேச்சு வாங்கிட்டு தட்டுத்தடுமாறி விழப்பாத்து என்னில தாங்கிப்பிடிச்சிட்டு பரிதாபமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு தாண்டிதாண்டி போனான்..
ஒருவித இனம்புரியாத அதிர்ச்சி..
மறுபடி கனகாலத்துக்கு பிறகு ”ககூனமடாட்டா ”.
வயசு போய் மண்டையப்போடுறது ஒரு கரையா இருந்தாலும் , அதில எத்தினை பிடுங்குப்பாடுகள்? வாழ்க்கை சந்தோசமா இருக்க காரணமான சகல சாமானும் ஒரு 50 வயசில போக தொடங்கிடும்.. கண்ணு , காது , மூக்கு , நாக்கு எண்டு எல்லாம் ப்யுஸ் போய் , இப்போ தேக்கு இருக்கிற பாடி , பின்னாடி சக்கு மரத்தில செஞ்ச பாத்ரூம் கதவு மாதிரி ஆயிரும்..
ஆகவே அதே ககூனமட்டாட்டா ..... இப்போ சந்தோசமாயில்ல..
நாமளும் தூரத்தில வாற ஆள் மங்கலா தெரிய நொண்டி நொண்டி உடம்பெல்லாம் நோக கிட்டபோய், ”ஆ? என்ன மோனை சொன்னனீஈஈஈ?” எண்டு வாய்கிழிய கத்திறத நினைக்க வயத்த கலக்கிச்சு..
எமன் எல்லாம் எருமைக்கு ஏசி போட்டுட்டு வந்தன்னா ஒரு கம்ஃபடபிள் சீட்டா பாத்து இப்பவே ஏறி ப்போயிரலாமுன்னு கூட நெச்சேன்.. எவ்ளோ கொடுரம்.. :-o
அப்போதான் கிட்டடியில யாழ்ப்பாணம் போனப்போ எங்க அம்மம்மா கூட கனநேரம் கதைக்க முடிஞ்சுது. ஏப்ரல் வெக்கையில யாழ்ப்பாணம் புழுங்குவதால பலாமரத்துக்கு கீழ கதிரைய போட்டு கடலைய போட்டுட்டிருந்தப்ப அந்த கேள்வியகேட்டேன்.. ”அம்மம்மா ! வயசு போனது உங்களுக்கு கஸ்டமாயில்லயோ ? எல்லாம் முடிஞ்சுது எண்டு பயமாயில்லயோ? பழசை நெச்சு பாக்க மறுபடி அங்க போகமாட்டமோ எண்டு கவலையாயில்லயோ? ”
ஏதோ ஆறுதல் தேடி என்ட பயத்தை சொன்னேன்.. மனுசி 5 ஆம் வகுப்பு பாஸ் பண்ணிச்சோ தெரியல்ல.. ஆனாலும் சொன்னன்..
வாழ்க்கையில் சில விடயங்கள் பளாரெண்டு அறையும்.. அத மாதிரித்தான் அந்த மனுசி சொன்ன பதிலும்..
”என்னோட இருந்த , வளர்ந்த எல்லாரும் இப்ப இப்பிடித்தானேயாடா ராசா இருக்கினம் ? எங்கட வருத்த துன்பங்களை ஆளாளுக்கு சொல்லிக்கொள்றதிலயும் ஒரு பெருமைமாதிரி இருக்கும்.. அதுவும் ஒரு சுகம்தானடா! அண்டைக்கு நம்மோட படிச்சவளிண்ட செத்தவீட்டுக்கு போகேக்க அவளிண்ட பொடிய பாத்து எனக்கு சற்று பொறாமையாயும் பெருமையாயும் இருந்திச்சு மோன.. நாம வாழ்ந்து களைச்சது காணும்.. .இனி படுக்கைப்பாயில கிடந்து சீரழியாம போற வேலைய பாப்பம்” சொன்னபடி மனுசி தேத்தண்ணி வைக்கப்போச்சு.. அந்த வெக்கையிலும் அவாண்ட பிளேண்டிய குடிக்கிறதில எனக்கு ஒரு தனிருசி தெரிஞ்சுது..
வாழ்க்கையில அந்தந்த வயசில பலப்பலவிடயங்கள் பிடிக்கும்.. உதாரணமா 3 வயசில கலரடிக்கிற புத்தகம் வாங்கி கிறுக்க ஆசை.. அப்பிடியே 7 வயசில சின்ன ஆமிக்காரன் நிறைய வாற அந்த செட் வாங்கி தம்பியோட பிரிச்சு விளயாட ஆசை, அப்புறம் கிரிக்கட், றோட்டு சுத்துறது, அது இதெண்டு ஒவ்வொரு வயசிலயும் பலப்பல.. ஆனா இப்போ கலர் புத்தகத்தை கண்டா நிண்டு கிறுக்கதோணாது.. தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவம்.. ஏனெண்டால் வயசோட ஆசையளும் தேவையளும் மாறும்.. இப்ப நமக்கு பிடிக்கிறது பிறகு பிடிக்காமபோகும். அந்த நேரம் வேற ஏதாவது பிடிக்கும்.. இது நியதி.. நீங்களும் யோசிச்சு பாருங்க... உண்மைதானே? ஆகையால வயசு பேனாப்புறம் மனம் விரும்பிறது நமக்கு இப்ப புரியாது.. அப்ப கிடைக்கிறத வச்சு நம்ம மனம் சந்தோசப்பட்டுக்கும்.. அது சிலவேளை நம்ம கண்பார்வை குறையிறத நம்ம கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன் கூட பகிர்ந்துக்கிறதாயும் இருக்கலாம்.. ஆகவே டோன்ட் வொறி பீ ஹப்பீ....
உண்மைதானே.. உங்களோட பெஸ்ட் பிரெண்ட றோட்டு வழில கண்டு ”மச்சான் இப்ப ஒண்டுமே தெளிவா தெரியிதில்ல” எண்டு நீங்க சொல்ல அந்தாள் தன்ட நாரிப்பிடிப்பை பற்றி கதைக்க ரெண்டுபேரும் செத்துப்போன உங்கட ப்ரெண்டோட சேர்ந்து செஞ்ச குறும்பை நினைச்சு சிரிக்க.. நாம வாழ்ந்து முடிச்சவங்கடா எண்ட பெருமையோட றோட்டில சிரிச்சிட்டே நடக்கும்போது கிழடுங்க விழப்போகுதுங்க எண்டு தாங்கி பிடிக்க வாற இளவட்டத்தை பாத்து சிரிச்சிட்டு பொவீங்க.. இது நடக்கும் பாருங்களேன்.. :-)
ம்ம்.. Anyway, இப்போ மறுபடியும் இனிக்குது..
அதே ககூனமடாட்டா! :)
ஆகவே இப்பவே நமக்கு நெருக்கமான , நம்ம கடைசிக்காலத்தில நம்ம கூட சிரிச்சிட்டே சந்தொசமா மறையக்கூடிய உறவுகளை உருவாக்கிக்கொள்ளறது முக்கியம்பா.. முக்கியமா பொஞ்சாதி புருசன் எல்லாம் கவனமா செலக்ட் பண்ணணும்.. காசுக்கும் கனடாவுக்கும் ஆசைப்பட்டு கண்ட கஸ்மாலத்தையெல்லாம் கட்டினால் கடைசிக்காலத்தில தனிய இருந்து சுறா படம்தான் பாக்கணும்.. நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)
வர்ட்டா! சேசே!
ககூனமடாட்டா ;)
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)

சிதறிய சிரிப்புக்கள்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
-
எச்சரிக்கை7 months ago
-
செந்திலாண்டவன்8 months ago
-
இறுதிச்சடங்கு3 years ago
-
-
-
-
பெண் வளர்க்கும் ஆண்5 years ago
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!7 years ago
-
”முடியல...... ” கதைகள்8 years ago
-
Testing Blog8 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!8 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்10 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?10 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...11 years ago
