காவியநாயகர்களைக் களங்கம் செய்யாதீர் : விஷமிகளுக்கு கடும் எச்சரிக்கை


  சமீப காலமாக வில்லு தொடர்பான விமர்சனங்கள் வலைப்பூக்களில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதாக அமைவது எனக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. காசு கொடுத்து காவியங்களை ஒளிப்படங்களாக பார்க்கும் எங்களை என்ன பேயர் என்றா நினைத்துக் கொண்டீர் பதிவாளர்களே? அன்னம் போல் பாலுண்ணப் பழகுங்கள். ஆங்காங்கே சிதறிக்கிடக்கம் சில சிறு பிழைகளை தலையில் வைத்துக்கொண்டாடி எதிர்கால தமிழ் வளர்ச்pக்கு தடையாயிராதீர் என கடுமையாக எச்சரிக்கிறேன்.

  ஆழ்வார் படத்தைப் பார்த்ததிலிருந்து அஜித் சாரின் தீவிர ரசிகனாக மாறியவன் நான். அவர் கிருஷ்ணாவதாரம் நரசிம்மாவதாரம் என்று ஒவவொன்றாக பலவற்றை எடுத்தபோது திக்குமுக்காடிப்போய் தமிழ் சினிமாவின் அடுத்த மைல்கல் என ஆர்ப்பரித்தவன் நான். பக்கத்தில் இருந்து “ என்ன இழவடா இது ? படமா இல்லாட்டி பப்பட் ஷோவா?” என்று பகிடி விட்ட பரதேசியின் பல்லை உடைத்தவன் நான். அபூர்வ சகோதர கமல் என்ன கமல்? நம்ம தலை பத்தே நாளில சீமைப்பன்னி சைசில இருந்து பல்லியா மாறி மறுபடியும் அதே பன்னி சைசுக்கு மாறக்கூடிய பவர் படைத்தவர் என மார்தட்டியவன் நான். ஆனால் அது குருவி படம் பார்க்கும் வரைதான். ஆககா! ஒரு குலோமீட்டர் தூரம், நம்ம தளபதி குடுகுடுன்னு பறந்தப்ப கண்ணால தண்ணி பொலபொலன்னு கொட்டிச்சு! அதுல தலை நினைவுகளும் கழுவுண்டு போயிடிச்சு. கூடவே உணர்ச்சிப் பெருக்கில வறாட் அட்டாக் வந்தாலும் வரும்னு டாக்டர் எச்சரித்ததுனால ஏகன் இன்னும் கூட பாக்கல. ஆனா தளபதி பக்தி உந்தித்தள்ள வில்லு பாக்கபோனேன். ஆகா! என்ன படம்! என்ன படம்! படம் இல்ல அது! காவியம் ! நான் பிறந்த நற் பயன் அடைந்து விட்டேன்…. அடைந்து விட்டேன்.

  இன்னும் படம் பார்க்காத தளபதி ரசிகர்களுக்கு இது சமர்ப்பணம். தயவுசெய்து சீரியசாகவும் கடுமையான தொனியிலும் வாசிக்கவும்.
  படத்தின் கதை “தீமை வெல்வது போல முதலில் தோன்றினாலும் நன்மைதான் இறுதியில் வெல்லும்.” கதை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? மகாபாரத கதையின் ஷோட் வேர்சன் தான் இது.; இதுவே உலக வரலாற்றில் முதன்முறையாக மகாபாரதத்தை ரீமேக் செய்வது. ஆகவே இதில் நடித்த பெருமை நம் தளபதிக்கு. ஆனால் அந்த படத்தில் சொல்லப்படும் கருத்துகள் ஏராளம். கீதை தோற்றுவிடும். நாம் அவற்றை ஒவவொன்றாகப் பார்ப்போம்.

  நயன்தாரா…. பாலருக்கு பாங்கான விதத்தில் பாலியல் கல்வியை கற்பிப்பது என்று திணறிக்கொண்டிருந்த எமக்கு விடை அளித்தது தாராவின் பாத்திரம். இப்படியான படங்களைப் பார்ப்பதன் மூலம் குழந்தைகள் முதல்; கிழவர் வரை தம் பாலியல் உணர்வைத்தூண்டி…. மன்னிக்கவும் பாலியல் விழிப்புணர்வைத்தூண்டி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கமுடியும்.

  மேலும் “மானாட மயிலாட”வில் அழுதழுதே இந்தியாவில் கூவத்தை நிரப்பிய நர்த்தன சுந்தரி குஷ்பூ அவர்கள் எங்கள் காவியத்திலும் ஒரு பாடலில் குலுங்கி குலுங்கி எமக்கு ஒரு அறிவுரையை தந்தார்; அதாவது ஒரு அளவுக்கு மேல் தின்று பருத்தால்; குந்தி எழும்பவே எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று ராமா ராமா பாடலில் செய்து காட்டினார். இது எம் சமுதாயம் உணவுக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பெற வழிவகுக்கும்.
  மேலும் மாட்டுக்கொட்டிலில் தளபதி சாட் செய்யும் காட்சியானது கிராமங்களில் இனிமேல் மாட்டுக்கொட்டாய்களிலும் வைபை வைமாக்ஸ் ரௌட்டர்களை பூட்டவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

  அத்துடன் சுவிட்சர்லாந்தில் கூட அவ்வூர் அம்மணக்குட்டிகள் “டாடி மம்மி வூட்ல இல்ல”ன்னு தமிழில் பாடி காபரே ஆடுவது, தமிழின் உலகமயமாக்கலை உதாரணப்படுத்துகிறது. பாரதி சொன்னது போல மெல்லத்தமிழினி வாழும்.

  கூடவே எல்லா மொள்ளமாரிகளும முடிச்சவிக்கிகளும் ஏதோ வைறடேக் விள்வெளிக்கப்பலை ஒத்த குகைகளையும் லேசர் ஆயுதங்களையும் பயன்படுத் விரும்புவதால் கல்லுரரிகளில், உவற்றை கட்டுவதற்கு கற்பிக்கும் தனியான ஒரு பொறியியற் பீட உருவாக்கத்தின் அவசியம் தெளிவாக்கப்படுகிறது.

  மேலும் இராணுவத்தில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கோமாளிகளின் தேவையை மேஜர் சரவணன் கரக்டரில் தளபதி உணர்த்துகிறார். வடிவேலுமை ஓரங்கட்டி விட்ட தளபதியின் இந்தப்பாத்திரம்; அவரின் நகைச்சுவை உணர்வுக்கோர் சான்று. மேலும் கரப்பு மீசை, நெற்றியில் பச்சை குற்றல் என படம் முழுக்க இளைஞரை குறிவைத்து பாஷன் ஷோ வேறு.

  அத்துடன், பஸ்களில், ரயில்களிலும் தொங்கிச் செல்வதன் மூலம் அரசாங்க வளங்களை முழுமையாகப் பயன்படும்தும் நாங்கள் ஏன் விமானங்களை விட்டுவிட்டோம் என ஒரு வினாவை எழுப்பும் தளபதி , தானே விதவிதமாக விமானத்தில் தொங்கி எமக்கு அறிவூட்டும் காட்சி எதிர்காலப் புரட்சிக்கு கட்டியம் கூறி நிற்கிறது.

  கடைசியாக கிளைமாக்ஸில் சொல்லப்படும் காட்சி உலக விஞ்ஞானிகளுக்கே சில சந்தேகங்களை தீர்க்கும் என்பது நிச்சயம். மண்ணரிப்பின் விளைவுகளையும் காரணிகளையும் விரிவாக ஆராயும் கடைசி நிமிடங்கள் மக்களை விறுவிறுப்பின் உச்சிக்கிட்டுச்செல்லும்.முதலில் திறப்பை விட வேகமாக தொலையும் சடலம் மண்ணரிப்பின் உக்கிரத்தை உறுத்திநிற்கிறது. பின்பு தளபதியை வெளியே எடுத்துவிடும் சுழல் காற்று கிணறு கிண்டுவதில் சுழல்காற்றின் பயன்பாட்டை விளக்கி நிற்கிறது.

  இவ்வாறு ஒரு ஒப்பற்ற காவியமாக வில்லு படைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் பயன்படுத்தபடும் தொழிநுட்பம் தொடர்பான விளக்கங்களை மக்களுக்கு அளித்திருகக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக புலூ றே டிஸ்க்கை ஏதோ புளுபிலிம் டிஸ்க்கென தவறாக புரிந்து கொண்ட பக்கத்து சீட்டு பெரிய மனுசன், படம் முடியும் வரைக்கும் சீட்டு நுனியில் ஆர்வமாக இருந்ததும், முடிந்த பின் “ அடச்சே புளு டிஸ்க்ல இருக்கற டிடெயல்ஸ் ஒண்ணும் காட்டவே இல்ல” என்று முனகியதும் படத்திலிருந்த ஒரே குறையைச் சுட்டிக்காட்டியது.

  ஆகவே இப்படிச்சில குறைகளை தவிர்த்துப் பார்க்கையில் இந்தப்பூரண காவியத்தின் படைப்பாளிகள் மெச்சப்படவேண்டியதன் அவசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். ஆகவே படத்தின் நடிகர்குழாழும் டைரடக்டரும் கோல்டன் குளோப்பு விருதுக்கும் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்படுவதும் அவசியமாகும். மேலும் இப்படத்தின் கதையென்ற ஒன்ற தனியாக வேறொருவர் எழுதினாராம். அவர் இந்த கதையை நாவலாக பல மொழிகளில் வெளியிடும் பட்சத்தில் அப்புத்தகம் புலிட்சர் விருது பெற வாய்ப்புண்டு.

  சீரியசாய்
  புல்லட்பாண்டி

  26 Responses

  1. தளபதி வாழ்க!!!

  2. உண்மை தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் விஜய் படம் பார்க்கும் போது படம் முடிய முடிய மனசு இறுகிவிடும் . இப்படி ஒரு சொதப்பல் ஆகா இருக்கிறதே என்று. அதை வசூலில் உதைபட்ட போது கூட விஜய் உணரவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
   உதாரணமாக ஆதி(மிக மோசம் ), அழகிய தமிழ் மகன், குருவி(பாடாவதி தெலுகு படம்)

  3. Damn, you forgot to nominate the movie for the oscars!

  4. ஆமாம் உங்களை மாதிரி ஆட்களுக்கு யார் தான் காவிய நாயகர்கள் .நீங்கள் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தால் அவரையும் குறை சொல்லும் கூட்டம் .ஏன் அப்போது தானே உங்களை மாதிரி ஆட்கள் அதி மேதாவி என்று சொல்லி கொள்ளலாம்.இப்போது வில்லு படத்தில் விஜயும், ஏகன் படத்தில் அஜித்தும் செய்ததை ஒரு பெயர் தெரியாத இங்கிலீஷ் படத்தில் வந்தால் கருமம் புரியவில்லை என்றாலும் கை தட்டும் கூட்டம் தானே நீங்கள் .

  5. கலக்கல். இப்படி ஒரு விமர்சனம் இதுவரை படிச்சதே இல்ல. சூப்பர்.

  6. புல்லட்.. பிரமாதம். கிண்டிக் கிழங்கெடுத்துட்டீங்க.... நம்ம நடமாடும் கிருஷ்ணாவதாரம்;ஒரு கெட்டப்பிலேயே ஓராயிரம் அவதாரம் எடுக்கும் எங்கள் காவிய தளபதியின் அற்புதக் காவியம் லொள்ளு.. சாரி வில்லு பற்றி நீங்க எழுதியதை வாசிக்க வாசிக்க என் கண்களில் எல்லாம் ஆனந்த நீரூற்று..

   எல்லாம் சரி நம்ம நயன் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நயந்திருக்கலாமே.. (எவ்வளவு காட்டினானாங்க .. அவங்களுக்கு இவ்வளவு தானா?)

  7. வில்லு படத்தில் இத்தனை பாடங்களா? தீவிர ஆராய்ச்சி செய்தமைக்கு பிடியுங்கள் டாக்டர் பட்டம்........
   டாக்டர் விஜயின் தீவிர ரசிகன்

  8. இவ்வளவு இருக்கா நான் ஒரு முன்பழமைத்துவ காவியம் அப்படின்னு தப்பா விமர்சனம் எழுதிட்டேன்.மிகப்பெரிய அறிவியல் காவியம் என்று புரிந்துகொண்டேன்

  9. சிபி , வானம்பாடி , மது , ஷர்மா , சேவியர் , சுரேஷ் : பின்னூட்டலுக்கு நன்றிகள் :)

   இஸ்கான் , முத்து : நான் செய்யும் தொழிலை ஒழுங்காகச் செய்யத்தவறினால் என் வாடிக்கையாளன் திட்டத்தான் செய்வான். அது எல்லாத் தொழிலிலும் சகஜம். அவர்கள் என்ன தர்மத்திற்கா படம் போடுகிறார்கள்? எத்தனை தடவைதான் பொறுப்பது? காதலுக்கு மரியாதை,கில்லி வந்த போது கைதட்டியவர்கள்தான் நாம். இப்போ வெறுத்துவிட்டது. தொழில் செய்கையில் நேர்த்தியாகச் செய்ய வேண்டும். :)

   லோசன் : இத்தனை வயதாகியும் பத்மாவுக்கோ முருகனுக்கோ படம் பார்க்கப் போனதில்லை என் நண்பர்கள் என்னை கேலிசெய்வதுண்டு. ஆனால் இனி சொல்லமாட்டார்கள். அந்த நன்றிக்கடன்தான். ;) நயன் இந்த ரேஞ்சுல போனா பத்மாவ இழுத்து மூட வேண்டியதுதான்.

   குடுகுடு: தமிழ்சினிமாவை நாங்க தலைகீழா நிண்டு பாத்தாதான் கன விஷயம் தெரியும். :)

  10. Joe: Hmm Joe, Sorry man, I should have done that. ;) Thanks 4 d feedback. :)

  11. இந்த காவியத்தை(கருமத்தை) எல்லாம் பார்க்கனும்னு நம்ம தல எழுத்து..

  12. அருமையாக எழுதியிருக்கிறீங்கள்
   :)))))

  13. A couple of years a ago there were very few blogs interesting blogs only... Now lot..

   Who said tamil ini mella sakum endu... You guys are just awesome.... I never read such interesting review... well done... pullat paandi enna kokka.. but how these movies are getting profits if its bad...

   i still wonder... India gave "zero" , chess this n tat to the world.. not man so messed up.... Director - i ooda vittu adikonum.. illa oru 10 times let him watch his movie continuously.. he may run away frm the field...

  14. now man...... so messed up

  15. என் அறிவு கண்ண திறந்திட்டீங்க... இனிமே அந்த உள்ளங்கை நெல்லிக்கனியை பத்திரமா பாதுகாப்பேனுங்க....

  16. kannan: Thanks for the feed back:
   Maya: Thank you so much for your support.
   Truimp: 10 times is too much. Just 3 times is enough. He will just suicide by remorsing for the sin he has done by releasing that film. Anyways thank you so much for your compliments. (If you change your font color of your artilcles, i'l find it very easy to read, it is bit garish now :))

  17. //நான் ஆதவன் சொன்னது…

   என் அறிவு கண்ண திறந்திட்டீங்க... இனிமே அந்த உள்ளங்கை நெல்லிக்கனியை பத்திரமா பாதுகாப்பேனுங்க....//

   ஆதவன்! கவலப்படாதீங்க ! சண் டீவியில அடுத்த படம் ட்ரெய்லர் பாத்ததும் அதுவா மூடிரும். எனக்கும் உப்பிடித்தான் அது அடிக்கடி திறந்து மூடுறது. உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களுக்கான பதில்களும் செம நக்கல்ஸ். அடிக்கடி எழுதுங்க. பின்னூட்டலிற்கு நன்றி.

  18. That blog was made to share something i found funny..one or two my work the rest are others... i did it 2 years back n posted last oct only... have time.. writing lot as i got the tamil font now..

   but need to organise n post.. wont lie as i dont have time.. i do.. if not i would not read 20 blogs a day... must add ur blogs as i follow them.. just lazy yaar... studies work this n tat just take my time n all i want to do is waste the time or rest...will check it ya...

  19. sry this yaar is coz of my indian friends.. i used to mock them with the yaar.. but iam so used to it...

  20. //Triumph சொன்னது…

   sry this yaar is coz of my indian friends..//
   யாரோ அடியோ! நல்லாத்தான் இருக்கு! நானும் சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ் , சேரித்தமிழ் எண்டு எல்லாத்தில கதைச்சாலும் வீட்டில எப்பவும் இனிக்கும் யாழப்பாணத்தமிழ்தான் கண்டியளோ! ஆகவே உதைப்பற்றி பெரிதாக கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். ஆங்கிலத்துக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்காவிட்டால் சரிதான். தமிழில் வெற்றிப்பதிவை தொடங்க வாழ்த்துக்கள்.

  21. "வில்லு சரியான லொள்ளு"