மச்சான் மச்சான்….

  சிம்புவின் மீது எனக்கொரு இனம்புரியாத ஈர்ப்பொன்றுண்டு. சிறுவயதில், குடும்பத்தில் உள்ள மூத்தவர் எல்லாராலும் அடக்கப்பட்டு அவமானப்பட்டு கூனிக்குறுகியிருந்த வேளை, திரைப்படங்களில் சிம்புவின் பொறியில் யாராவது கிழட்டு வில்லனோ வில்லியோ அகப்பட்டு அல்லலுறும் போது பலமாக கைதட்டி கத்தி என் உள்ளக்குமுறலை வெளியிட்டுக்கொள்வேன். அடக்குமுறைக்கு எதிரான சின்னமாக சிம்பு எங்களுக்கு மனதில் வேருன்றியிருந்தான். காலச்சக்கரத்தில் எல்லாம் அகப்பட்டு சின்னாபின்னமாகி மறக்கப்பட்ட அவன், அழகான வறீரோவாகி அடுத்தடுத்து தோல்விப்பட்ங்களைக் கொடுத்தாலும் அவன் மீதுள்ள பாசம் குறையவில்லை. அப்படித்தான் அவனுடைய புதுப்படம் “சிலம்பாட்டம்” பார்க்க பாமன்கடை தவறணை “ஈரோஸ்” க்கு தனியாகச் சென்றிருந்தேன்.

  அவசரஅவசரமாக உள்நுழைந்த குடிமக்கள் ஆங்காங்கே பரவலாக அமர்ந்து தத்தம் அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தாலும், படம் தொடங்கியதும் காமடிகளில் கமகமத்த நறுமணம் காரணமாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள். எஞ்சி இருந்தவர்களும் ஒரு கிழவி விட்ட டண்டணக்கா ஜோக்குடன் துண்டக்காணம் துணியக்காணம் என்று எழுந்து ஓடிவிட்டார்கள். ஆனால் இருந்து படம் முழுவதையும் நான் பார்க்க காரணம் பாடல்கள். பாடல்களும் நடனங்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. யுவன் என்னத்தைக் கிழிக்கப்போகிறார் என்ற நினைப்பில் டமில்பீட்டில் பாடலை இறக்கிக் கேட்க விரும்பாத நான், நேரடியாக பெருந்திரையில் கேட்ட போது விக்கித்துப்போய்விட்டேன். என் மதிப்புக்குரிய இசைஞானி அவர்கள் பாடிய பாடல் என்னை மெய்மறக்கச் செய்தது. ஆனாலும் படத்தின் இசையமைப்பு தொடர்பாக வலைப்பூக்களில் அதிகம் வராதது எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியதால் இப்பதிவை வரைந்தேன்.

  நான் இப்போது கீபோரட்டில் அதிகம் வாசித்து மகிழும் பாடல்கள் சிலம்பாட்டம் மற்றும் வாரணம் ஆயிரம் பாடல்களே. மச்சான் மச்சான் பாடல் ஸ்டிரிங்ஸ் ரெக்கோர்ட் பண்ணி; கரகர குரலில் நாமே பாடிமகிழ அருமையாக இருக்கும். அதேபோல அனல் மேலே மழைத்துளி பாடல் 1 ½ கட்டை குழலில் வாசிக்க அருமையாக இருக்கும். வாசகர்களுக்கோ அவர்களின் குழந்தைகளுக்கோ பிரயோஜனப்படலாம் என்ற நம்பிக்கையில் கடினப்பட்டு மச்சான் பாடலின் கீபோர்ட் நோட்ஸினை பதிவு செய்து இங்கு தருகிறேன்.

  மச்சான் மச்சான் ஒன்மேல // Fm Eb
  C C AbBb GG
  ஆச வச்சான் வச்சு // Eb Fm
  G Ab G F FGAbBb
  தச்சான் தச்சான் உசிரோட // Fm Eb
  C C AbBb GG
  உன்னத் தச்சான் // Eb Fm
  G Ab G F
  ஏழேழு சென்மந்தான் // G# _
  AbBbEb Eb
  எடுத்தாலும் எப்போதும் // Cm _
  FEbFEb EbEbCBb
  நெஞ்சுக்குள்ளே உன்ன சுமப்பேனே //G# _ Eb _
  CBbCEb CBb AbCBb
  தாயாகி சிலநேரம்
  AbBbEb Eb
  சேயாகி சிலநேரம்
  FEbFEb EbEbCBb
  மடிமேல ஒன்ன சுமப்பேனே
  CBbCEb CBb AbCBb
  சந்தோசத்தில் என்ன மறப்பேனே
  CBbCEb CBb AbCBb
  ஓ……
  CBbAbGF
  கொன்னுபுட்டே ஏ // Fm _ Cm _
  CFEbF AbGFEbFG
  கொன்னுபுட்டே ஏ / Fm _ Cm _
  CFEbF AbGFEbFG
  கொன்னுபுட்டே கொன்னுபுட்டே // Fm _ Cm _
  CFEbF BbEbDEb
  நெஞ்சுக்குள்ளே //G#_ Fm_
  AbBbEbC  கொன்னுபுட்டே
  CFEbF AbGFEbFG
  கொன்னுபுட்டே
  CFEbF AbGFEbFG
  தென்னங்கொட்டே(?) தந்துபுட்டே
  CFEbF BbEbDEb
  நெஞ்சுக்குள்ளே…….
  AbBbEbC


  சொல்லவந்த வார்த்த // Fm
  Ab FAb
  சொன்ன வார்த்த // Fm
  Ab FAb
  சொல்லபோகும் // Fm
  CBbAbCBbAb
  வார்த்த யாவும் //_Fm
  Ab
  நெஞ்சில் இனிக்குதே // Cm
  FAb க்பிக்பிப்

  என்ன என்ன கேட்டு /
  Ab FAb
  என்ன சொன்னே
  Ab FAb
  என்ன ஆனேன்
  CBbAbCBbAb
  இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
  FAb க்பிக்பிப்

  பெண்ணே உங்தன் கொலுசு // Cm
  C
  எந்தன் மனசு மாட்டிப்போகுதே // _G
  DB CD EbDEb
  போகும் வழி எங்கும் விடுவேனே // Cm
  EbD EbD EbF EbDC
  ஓஓ // F
  DG

  உன் பேரத்தான் சொல்லிதினம் / Cm
  Eb DEbDEb Eb DEbDEb
  தாவணியப் போட்டேனே // Gm
  CDEbD CBbCG

  உசிரத்தானே விட்டாகூட
  EbDEbDEb Eb DEbDEb
  உன்னவிட மாட்டேனே
  CDEbD CBbCG
  மானே…… அடிமானே…. ஓ
  GC FC EbF


  ஆரம்ப இசை

  FFCC FFCC BbBbBb CCCC
  FFAbAb FFAbAb G..BbAbGF
  FFCC FFCC BbBbBb CCCC
  FFAbAb FFAbAb G..BbAbGF
  F…. AbGFEb GFEbDb…… EbDbC  இடையூட்டுகள் கடினமில்லை. நீங்களே ட்ரை பண்ணலாம். தேவையானால் பின்பு தருகிறேன். நேரமாகிவிட்டது.
  கோட்ஸ் வரிகளுக்கு அருகாமையில் தரப்பட்டுள்ளது. நோட்ஸ் கீழே தரப்பட்டுள்ளது. யுடி ஸகேலிலே பாடல் அமைந்துள்ளது. நான் அதிக நேரம் செலவழிக்காததால் திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகிறன. மேலும் பாடல்களை பதிவு செய்ய ஆசைதான் ஆனாலும் இதை கீபோட்டில் வாசித்து வாசித்து டைப் அடிக்க சீவன் போய்விட்டது. அம்மாடி… இதுதான் இதையொத்த கடைசி பதிவு….ஃப்பூ. நன்றி வணக்கம்.

  5 Responses

  1. //சிம்புவின் மீது எனக்கொரு இனம்புரியாத ஈர்ப்பொன்றுண்டு.
   அதுதான் பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்களே... :D

  2. கிகி! நீங்களும் படத்த நல்லா மணந்தீங்களோ? சாரி ரசிச்சீங்களோ! பாவம் சிம்பு, நம்ம பச் பெடியன் தானே, ஓவரா அவுக்காம வுட்டுறுவோம் என்ன? :D

  3. இசை ஞானம் அதிகம் போல இருக்கு

  4. //குடுகுடுப்பை சொன்னது…

   இசை ஞானம் அதிகம் போல இருக்கு//
   இசை ஞானமெல்லாம் கிடையாது. ஆனா கடும் இசையார்வம் இருக்கு. கீபோட் அனேகமா எல்லாரும் வாசிப்பாங்கதானே! அதுதான் கஷ்டப்பட்டு எழுதி பதிந்தேன். ஆனா யாரும் இந்த பக்கம் வந்ததாகவே தெரியல. ப்ச். ஒண்ணு அவங்களுக்கு அந்த பாட்டு பிடிக்கல அல்லது எல்லாரும் வாரணம் ஆயிரத்தோட கிட்டாருக்கு மாறியிருக்கணும். என்னன் னே புரியல! என்றாலும் பின்னூட்டலுக்கு நன்றிகள் குடுகுடு.

  5. //சிம்புவின் மீது எனக்கொரு இனம்புரியாத ஈர்ப்பொன்றுண்டு.//

   //அழகான வறீரோவாகி//


   இத்தோட உங்கட சகவாசத்த விடப் போறன் சாமி..பின்ன என்ன அண்ண..அவன் தான் லூசன் என்டா, நீங்களும் ஏதோ 'அழகான ஹீரோ', 'இனம்புரியாத ஈர்ப்பு' என்டு கொண்டு..சீ..கொடுமை.எங்க
   போய் சொல்றது..