"புஷ்" க்கு மட்டுமா எறிந்தார்கள்?

  எமது பல்கலை தமிழ் விழாவொன்றில் அவசர தயார் படுத்தலுடன் ஒரு கவியரங்கிற்கு தயாராக வேண்டி ஏற்பட்டது. என் முதல் கவியரங்கு. பெருங்கவிஞன் என்றோ , கவிதையில் பெரிய ஆர்வலன் என்றோ என்னை பங்கு பற்ற அழைக்கவில்லை , நான் சென்றும் கேட்கவில்லை. எவனோ ஒருவன் கடைசி நேரத்தில் கம்பி நீட்டி விட்டதால் இசை நிகழ்ச்சிக்குப் பொறுப்பாயிருந்த என் மீது இந்த பொறுப்பும் வீழ்ந்தது.

  தலைப்பை வாங்கி, அவசர அவசரமாக ஏதோ எழுதித்தள்ளி, மேடையில் ஏறி, வைரமுத்து எங்கோ கவிதை வாசித்து பார்த்த ஞாபகத்தை வைத்து இரண்டு மூன்று தடைவை சில வசனங்களை வாசித்து, வேர்த்து விறுவிறுத்து முடித்தேன். கருத்து பலருக்கு விளங்கியிருக்காது என்று நினைத்தாலும் எல்லாம் விளங்கி பெடி பெட்டையள் எல்லாம் செருப்பால் எறியாத குறை. . காச்சு மூச்சென்று கத்தி கடும் பிரளயம் ஒன்றை ஏற்படுத்திவிட்டார்கள். அன்று இறங்கி ஓடியதுதான். பின்னர் கவியரங்குகள் பக்கமே பலகாலம் தலைவைத்துப்படுத்ததில்லை.இனிமேல் ஏறவும் பயமாக இருக்கிறது. “புஷ்” க்கு எறிந்து எறிந்து எல்லாரும் நன்கு செருப்பெறிய பழகிவிட்டார்கள்.

  அன்று தலைப்பாக “வழியனுப்பும் காலம்” என்பதும் உபதலைப்புகளாக வீரம் , விடுதலை , காதல் , தமிழ் போன்ற சிலவும் காணப்பட்டன. அதில் எனக்கு வழங்கப்பட்டது காதல். வழமையாகவே மற்றவரை சீண்டுவதிலும் குறும்புத்தனத்திலும் பெயர்போன நான் என் சக மாணவர்களைச் சீண்டும் நோக்குடன் எழுதியதே இது.

  காதலை - வழியனுப்பும் காலம்

  வாலிபக்குளக்கரையில் - அதோ
  வாழ்க்கையெனும் வயற்பரப்பு
  காமத்துப்பச்சை கண்டு
  காதலெனும் அவசரத் தோணி – நாம் (வாலிபக்…)

  கவிழும் தோணிகளுண்டு – மெல்ல
  மூழ்கும் தோணிகளுண்டு –சட்டென (கவிழும்;….)
  சொகுசாய் கரையடைந்ததும் பச்சை
  மங்குவது கண்டு மயங்கிப் போனவருண்டு

  கரம் பிடிக்கும் முன்னே காதல் வரும் காலம்
  அட்டமத்துச்சனியின் ஆரம்பகாலம்
  பெற்றோரின் கண்ணீருப்பில் நீ
  சுவை கறி சமைக்கும் காலம்

  இனிய காதலெனும் தௌ;ளிய குட்டை – குருணிக்
  கல்லுக்கே குதம்பி விடும்
  படிந்துள்ள சேறு மேலெளும்பி
  பார்ப்பவரை முகம் சுளிக்க செய்யும்

  காதலை வழியனுப்பக்
  கனவழிகள் உண்டு
  அரைக்கோடி சீதனமே
  ஒப்பற்றதோர் ஆப்பு

  பாடசாலையில் கற்றோரோ
  பட்டம் பெற்றோரோ
  பணத்தருமை புரிந்தால்
  படும் காதல் பாடு

  வறட்டு கௌரவம்
  காதலின் சவக்காட்டு கொள்ளி
  பொறாமையில் பொரிந்து
  காதல் ஓடும் துள்ளி – போட்டி…( பொறாமையில்)

  காதலித்து கரம் பிடிப்பவர்
  கண்ணிலிருக்குமாம் காதல்
  மனையாள் சற்று சதைப்பிடித்தால்
  முதுகு வழியிறங்கி எங்கோ மூலைக்கோடிவிடும்

  சந்தேகம் எனும்
  தொண்டையில் சிக்கும் முள்ளு
  அது காதலின் மூக்கிலடிக்கும்
  மூட்டைப்பூச்சி மருந்து

  வீண் தழையென்றாலும் தனக்கு மட்டும்தான் என்பது
  தமிழனின் பண்பு
  மாற்றானோடு சிரித்தாலும் இறங்கிவிடும்
  அந்த விலாங்கு மீன் முள்ளு

  இனம் பெருக இயற்கையின்
  சாவிதான் காதல்
  அதன் சுதியல் உலாகாட
  அது செய்த சதிதான் காதல்

  அற்பமான இவ்வாழ்வில்
  எதுவுமே நிலையில்லை
  சொற்பமான உண்மைக் காதல்கள் - அவை
  பாசத்தின் மிகை உருவகமே

  இல்லறத்தில் முன்பாக இளமையில் காதல்
  அதை வழியனுப்ப தேவையில்லை ஒப்பாரி ஆடல்
  வரும் காயங்கள் மாறக் காலம் எடுக்கலாம்
  அந்த வலியின் முடிவில் நீ விளைவும் எடுக்கலாம்

  ஆனால் இல்லறத்தில் உன் காதலை
  வழியனுப்பும் காலம்
  அது உன் வாழ்க்கையின் இன்பங்களுக்கு நீ
  கடைசி கையசைக்கும் காலம் -கவனம் (அது உன்…)

  நண்பா – பிள்ளைக்கு வரன் பார்ப்பதோர் அளப்பரிய பொறுப்பு
  அதை செய்வதில் பெற்றோருக்கு ஒரு கம்பீர மிடுக்கு –உன்
  காதலுக்கு சம்மதித்தாலும் அவர் கண்களிலோர் பாரம்
  ஊட்டி வளர்த்ததுக்கு பரிசாய் அவர் உள்ளொளி சோரும்

  உன் சுகத்துக்காய் உற்றோர்
  விழிநீர் உகுப்பதா?
  புரிந்திருக்கும் நண்பா - இது
  (உன்) காதலை வழியனுப்பும் காலம். // இது கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டுது.

  குறிப்பு: இக் கொள்கை என் உள் மனதிலிருந்து வந்தது என்று சொல்லமாட்டேன். ஆனால் உண்மை இருக்கிறது என்பதையும் மறுக்கமாட்டேன்.; இந்த கொள்கைக்கு எந்த இளைஞனும் ஆதரவில்லாததுதான் எனக்கு அதிசயம். உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறன.

  3 Responses

  1. அட அண்ணே...உண்மையைச் சொல்லுங்கோ..இத நீங்க எழுதலை தானே..? சும்மா பகிடிக்கு

   உண்மையா நல்லாயிருக்கு..பெயருக்கேற்ற மாதிரி புல்லட்டா சீறுங்கோ..

  2. good thinking friend, but bad time & place you recited.. that's y u good slippers...

   கொஞ்சம் காலத்துக்கு பிறகு (எல்லோருடைய கலியாணத்துக்கு) பிறகு வாசிச்சு இருந்திருந்தா, உங்களுக்கு கிடைக்கிற வரவேற்பே தனி...

   அனுபவமா என்று கேட்காதிங்கோ.. எல்லாம் புத்தக அறிவும், உங்கள மாதிரு பெரிய ஆட்களிட்ட பார்த்து தெரிஞ்சு கொண்டதும் தான்...

  3. டொன்லீ அண்ணேஏஏ ! நானென்ன திருவிளையாடல் நாகேசா சிவாஜியிடம் பாட்டு கேட்க இல்லாட்டிக்கு டொன்லீயின் ப்ரெண்டா போன் பண்ணி கவிதை கேக்க? பாட்டும் நானே பாவமும் நானே! உங்கட பப்பா மரத்தயெல்லாம் நம்பி ஏறினா பிறகு சங்கிமங்கி மாரி எனக்கும் ப்ராஞ்சு துறந்துடமாட்டீங்க? நாமெல்லாம் படு உசார்பா இப்போ! ;)

   ஊட்டியதுக்கு நன்றிகள் டான்லீ.

   வை நாட்டு: கலியாணம் கட்டினவனெல்லாம் எங்க கவியரங்குக்கு வாறான்? எங்கயாவது சமையல்குறிப்பு வாசிச்சாங்கன்னா போவான் அல்லது சீக்கிரம் துவைப்பது எப்படின்னு கோர்ஸ் தொடங்கினா போவான். நாம என்ன செய்யறது? ஆப்பிட்டவனத்தான அவுக்கமுடியும்? Thanks for the feed back!