மீளுமா என் யாழ்ப்பாணம்?

  யாழ்ப்பாணம் உலகத்திலேயே மிகவும் அழகான பிரதேசம்தான். ஆனால் இப்போது சிதைந்து சின்னா பின்னமாகிவிட்டது. ஆனால் அதை மீண்டும் கட்டியெழுப்பும் வல்லமை உள்ளத ஒரே இனம் என்றால் அது ஈழத் தமிழினம்தான். எந்த இழப்பிலிருந்து கணத்தில் மீண்டு வரக்கூடிய வல்லமை படைத்தவர்கள் நாங்கள். எப்படியிருந்தாலும், இனிமேல் முப்பது வருடத்துக்கு முன்னிருந்த வசந்தகாலம் மீளத்தரும்புமா என்று கேட்டால் அதற்கு பதில் மௌனம்தான் . இழப்புகள், அதிர்ச்சிகள் ,சதா கவலைகள் என வாழ்க்கையின் மோசமான பக்கங்களையே படித்து வந்த எம்மக்கள் மென்மை இழந்து தடித்த தோலுடையவர்களாக கூர்ப்படைந்து விட்டார்கள். கல்விக்கு மதிப்பளித்து கல்வியைத்தேடி கல்வியின் சட்டத்துன் வாழந்த எம்மினிய மக்கள் வன்முறையும் களியாட்டமும் தேடும் ஒரு சமூகமாக மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு விடை எல்லோருக்கும் தெரியும். அ‌மைதியாய், மற்றவருக்கு மதிப்பளித்து, விருந்தோம்பி , விழாக்களில் வெகுளிகளாய் கூடி மகிழ்திட்ட எம்மை எப்படி மீட்பது? விடை எனக்கும் தெரியவில்லை. தெரிந்தால் விளம்பிடுவீர்.

  சேலை வேட்டிகளில் எம்மவர் கோயில்களிலும் விழாக்களிலும் மங்களகரமாய் தெரிவார்கள்.
  ஆனால் எதிர்காலங்களில் அங்கு புலம் பெயரந்தொரின் முக்கால் காற்சட்டைகளும் கன்டிகாம்களும் குடுமித்தலைகளும் பச்சைகுத்திய ‌தோள்களும் தடித்த சங்கிலிகளும்தான் கவனயீர்ப்பான்களாகத் துலங்கப்போகிறன என்பதை சமாதான காலம் கட்டியம் கூறிற்று. சமாக்களில் நாதஸ்வரக்காரர்கள் இந்கிலாந்தின் தேசிய கீதத்தை வாசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை மாற்றும் வலிமை யாரின் கையிலுண்டு என்று உங்களுக்கே புரியும் புலம் யெர்ந்தோரே!உங்கள் பொருளாதாரம்தான் எம்மை மீளக்கட்டி‌யெழுப்பப்போவதை ஒத்தக்கொள்கிறேன். ஆனால் கலாச்சாரமல்ல. தவறிருந்தால் மன்னித்து விடுங்கள.

  என்னை கிழவன் என்று நினைத்தவிடாதீர்கள். ஆசைகள் நிறைந்த ஒர சாதாரண இளைஞன் நான். நான் கனவுகாணும் யாழப்பாணம் எப்படி இருக்குமென்று தெரிய நீங்கள் ஆசைப்பட்டால் சிம்பிளாக கூறிவிடுகிறேன் . அங்கு என்னவெல்லாம் இருக்கு‌மென்றால்......

  கலியாண வீடுகளில் பாயில் சம்மாடிகட்டி இருந்து வா‌‌ழையிலையில் வழித்துச்சாப்பிடும் அந்தச்சாப்பாடு. பிறகு தகரக்கதிரையில் இருந்து வெற்றிலையைப்போட்டபடி ஊர்ப்பிள்ளைகளெல்லாம் வெள்ளை மனத்தோடு வி‌ளையாடுவதை பார்க்கும் போது வரும் அந்த சந்தோசம்.

  அடுத்தநாள் கலியாணத்துக்கு இரவிரவாய் வடைசுடும் கிழவிகள், அதுகள் கதைக்கும்போது பாவிக்கும் பழமொழிகள். நடுவில் தேனீர் தர வரும் விடலைக்கு அவள் மச்சானை விசாரித்து அதுகள் அடிக்கும் லூட்டிகள்.

  இரவிரவாய் நடக்கும் திருவிழாக்கள். அங்கு பிரசங்கத்தைக்கேட்டவாறு குளிர்மணலில் கும்பலாய் அமர்ந்திருந்து சாப்பிடும் கச்சான்,சோளங்கள்.

  வாரணம் ஆயிரம் பாரத்துக் கெட்டுப்போகாமல், மகனின் கல்விக்காய் தன் பாசத்தைத்தியாகம் செய்யும் அந்த கண்டிப்பான தந்தைகள். பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் தந்தையின் பாசத்தையும் சேர்த்து சோற்றை ஊட்டும்போது கலகலக்கும் எம்தாய்களின் தங்க வளையல்கள்.

  எவ்வளவுதான் கற்றாலும் எவ்வளவு ஆங்கில புலமை பெற்றிருந்தாலும் கடைதெருவில் சந்திக்கும் போது சுத்த தமிழில் தந்தைதாய் நலன் விசாரிக்கும் எம்மூர்ப் பெரியவர்கள்.

  பயிரை மேயாத வேலிகள் , படித்தவருள்ள கட்சிகள் ,
  நல்ல சினிமாக்கள், விடீசஷங்களில் மட்டும் பட்டாசுகள்,
  பங்கர் இல்லாத காணிகள் , கிழிந்து தொங்காத ‌வேலிகள்,
  பார்போற்றும் பள்ளிகள், படித்தவர் கூட பல்கலைக்கழகங்கள் ,
  ஸ்பீக்கர் பூட்டாத கொவில்கள் ,வட்டுள்ள தென்னைகள்,
  செம்மணி வயல்கள் , கொழும்புத்துறை மீன்கள் .. இவற்றுடன்
  கடைசியாக எங்கள் அன்புக்குரிய யாழ்தேவி.

  இத்தனையும் நான் புதிதாய்க் கேட்கவில்லை.. என் தந்தை என் வயதில் அனுபவித்தவற்றைதான் திருப்பிக்கேட்கிறேன். தருவீர்களா உரியவர்களே?

  22 Responses

  1. எனக்கு ஒரு கனவிருக்கிறது என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் உரை போல் இருக்கிறது இந்த பதிவு.. அருமை...

   நடக்கும், கிடைக்கும் என நம்புவோம்...

  2. "ஸ்பீக்கர் பூட்டாத கொவில்கள் ,வட்டுள்ள தென்னைகள்,
   செம்மணி வயல்கள் , கொழும்புத்துறை மீன்கள் .. இவற்றுடன்
   கடைசியாக எங்கள் அன்புக்குரிய யாழ்தேவி."
   உங்கள் கனவுதான் எங்கள் எல்லோரினதும் கனவு.
   நிறைவேறும் என நம்புவோம்

  3. //Thinks Why Not - Wonders How சொன்னது…

   எனக்கு ஒரு கனவிருக்கிறது என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் உரை போல் இருக்கிறது இந்த பதிவு.. அருமை...

   நடக்கும், கிடைக்கும் என நம்புவோம்.//

   தம்பி வைநாட்டு! வருகைக்கு நன்றியப்பா! எனக்கு மாட்டின் லூதர் என்ன சொன்னவர் எண்டு தெரியாது. அவர் ஏதாவது சாக்கு நிறைய பேகர் வேணும்! சட்டி நிறைய சரக்கு வேணும்! எண்டு பாடியிருப்பாரெண்ட நினைப்பில நெட்டில பாத்தா பாவம் மனுசன் கறுப்பும் வெள்ளையும் கலந்து வாழுவமெண்டு அழுதுகுழறி இருக்கார். வெள்ளையெல்லாம் வந்திருந்து எங்கட தாலிய அறுத்தாங்கள். இப்ப கறுப்போண்டு வந்து நிண்டு பெரிசா சவுண்டு விடுது. பாப்பம் இப்பவாவது ஏதாவது எங்களுக்கு விடியுதாவெண்டு.

  4. // கலியாண வீடுகளில் பாயில் சம்மாடிகட்டி இருந்து வா‌‌ழையிலையில் வழித்துச்சாப்பிடும் அந்தச்சாப்பாடு. பிறகு தகரக்கதிரையில் இருந்து வெற்றிலையைப்போட்டபடி ஊர்ப்பிள்ளைகளெல்லாம் வெள்ளை மனத்தோடு வி‌ளையாடுவதை பார்க்கும் போது வரும் அந்த சந்தோசம்.//

   நிச்சயமாக எல்லாம்
   நடக்குமென கனவுகாணுவோம் :)
   மார்ட்டின்லூதர் கிங் அவர்களின் கனவு நனவாக எவ்வளவு காலமாச்சு ? அதுமாதிரித்தான் உங்கள் கருத்தும்.
   சிலவேளைகளில் இக்கனவினை நீங்கள் அனுபவிக்காமல் போகக்கூடும், ஆனால் உங்கள் சந்ததி அனுபவிக்கும்.

  5. //டொக்டர்.எம்.கே.முருகானந்தன் சொன்னது…
   உங்கள் கனவுதான் எங்கள் எல்லோரினதும் கனவு.
   நிறைவேறும் என நம்புவோம்//
   டொக்டர் உங்களுக்கு கஷ்டம் தான். சமாதானம் வந்திட்டால் ப்ரஷ்சான காயங்களுக்கு மருந்து போடவேண்டியிராது. எல்லாம் சலரோகக்காரர்தான் வருவினம். முல்லைத்தீவு டொக்டரமாருக்கு நாள்பட்ட காயங்களுக்கு போடுற மருந்தே மறந்து போயிருக்கும். சமாதானம் வந்தா எப்பிடித்தான் சமாளிக்கப்போயினமோ? குறை நெக்காதீங்கொ... எண்ட தம்பிய நான் இப்பிடித்தான் கலாய்க்கிறது. (அவனும் உங்கட தொழில்தான் படிக்கிறான்) யாழ்தேவில யாழ்ப்பாணம் போகேக்க எல்லாரும் டொக்டர் தலைமையில பதிவர் சந்திப்பு வைப்பம். சரிதானே டொக்டர். :) வருகைக்கு மெத்தப்பெரிய உபகாரம்.

  6. //மாயா சொன்னது…
   சிலவேளைகளில் இக்கனவினை நீங்கள் அனுபவிக்காமல் போகக்கூடும், ஆனால் உங்கள் சந்ததி அனுபவிக்கும்.....//

   ஐயோ நண்பரே..... காண்றதே கனவு! அதவேற ஏன் பயங்கரமாக்காணுவான்? எங்களுக்கும் எல்லாம் நல்லபடி நடக்குமெண்டு நினைப்பம். நீங்களும் புலத்தில இருந்து முக்கால் காச்சட்டையோட வராட்டிச்சரி. :P பின்னூட்டலுக்கு நன்றிகள்.

  7. ம்ம் அப்ப காணுறது கனவாவே முடிஞ்சிடுமா ? ? ?

  8. கனவுகள் நிறைவேறும் அதுவரை காத்திருப்போம்

  9. //சமாக்களில் நாதஸ்வரக்காரர்கள் இந்கிலாந்தின் தேசிய கீதத்தை வாசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

   சமாதான(?) காலத்தில் இசைநிகழ்ச்சியொன்றில் வந்தே மாதரம் இசைத்தார்கள். அருகிலிருந்த அறுபதைக் கடந்த ஒருத்தர் கேட்காமலே விளக்கம் தந்தார். என்ன செய்தாலும் அவங்கள் தானே எப்பவும் எங்களுக்கு உதவி. எனக்கு அப்போதும் புரியவில்லை... இப்போதும் தான்...

  10. இத்தனையும் நான் கேட்கவில்லை.கொழும்புத்துறை மீன்கள் மட்டும்.

  11. Naan Trichy tamil nadu karan, 2002 samaathaana kalathil Yarl poi vanthen, yenakku yeen Jaffnavil pirakka villai yendru varutham, athe nerathil jaffna tamilarkal colombil vasikkum pothe vazhkkaiyil matram therigirathu, innum Tamil eelam pirantha piragum Neengal ninaikkira pazhaiya eela vazhkkai anupavippeergal yendru yennal koora mudiya villai, appadi nadanthaal naane muthalil magilchiyadaiven,.

  12. உங்கள் கனவு ஒரு நாள் நிச்சயம் நிஜமாகும்...வெகு சீக்கிரத்தில்...அதற்கு அந்த யாழ்தேவியே அருள் புரிவாள்

  13. //’டொன்’ லீ சொன்னது…

   கனவுகள் நிறைவேறும் அதுவரை காத்திருப்போம்
   //
   வேற வழி? ஆனா கனபேர் உந்த கனவை வைச்சே பிசினஸ் பண்றாங்கள். வருகைக்கு நன்றி டான்லீ. வர வர ப்ளாக் சீரியசா போகுது அடுத்ததிலிருந்து ட்ரக்கை மாத்துவம் என்ன?

  14. // ஆதிரை சொன்னது…

   சமாதான(?) காலத்தில் இசைநிகழ்ச்சியொன்றில் வந்தே மாதரம் இசைத்தார்கள். அருகிலிருந்த அறுபதைக் கடந்த ஒருத்தர் கேட்காமலே விளக்கம் தந்தார். என்ன செய்தாலும் அவங்கள் தானே எப்பவும் எங்களுக்கு உதவி. எனக்கு அப்போதும் புரியவில்லை... இப்போதும் தான்...//

   தமிழ்நாட்டுச்சனங்கள் நல்லதுகள். அப்பாவியள். ஆனா உந்த அரசியல்வாதியள் சரியான நரிக்குட்டியள் , ஓரிருவரைத்தவிர..... திருமா கடைசியா செய்த டயற் புறோகிறாம் வலு சூப்பர். ஆனா கலைஞர் கதிரையில இருக்குpறதுதான் எங்களுக்கு பாதுகாப்பு. அந்த லலிதா...குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்....இதையெல்லாம் எப்பிடி கோடாரிக்காம்பெண்டு சொல்றது?.... சாகிற முயல் அடிக்கவந்த சவக்காட்டு பூதம்....ம்ம் இது நல்லாருக்கு... சைசுக்கு பொருந்தும்.... அத வந்துதெண்டால்... இலங்கைத்தமிழரெல்லாம் நீர்வாழ் உயிரினங்கள்... முந்தி கடலில நீந்திக்கொண்டு திரிஞ்சதுகள் அதுகளை கொண்டுபோய் கடலில கொட்டிவிடுங்கோ எண்டு சொன்னாலும் சொல்லும். ஆகையால நாயட்ட தப்பி ஓநாயிட்ட மாட்டிக்கொண்ட கதையாபோடுமெண்ட படியால டாக்டர் கலைஞர் சவுண்டு விடும்போதெல்லாம் வாங்களும் சமாவில இவருடைய பாசக்கிளிகள் பாட்டைவாசிச்சு சந்மொசமடைவம். என்ன நான' சொல்றது?

  15. //kenneth சொன்னது…

   இத்தனையும் நான் கேட்கவில்லை.கொழும்புத்துறை மீன்கள் மட்டும்.//

   அதண்ட ருசி தனி ருசிதான் கடலுக்க இறங்கி போட்காரனிட்டயே போய் துடிக்கத்துடிக்க வாங்கலாம். மலிவாத்தருவான். ஆனால் ஐஞ்சரை ஆறுக்கிடையில போகவேணும். ஆரும் விருந்தினர் வாறதெண்டால் நானும் அப்பாவும் விடிய நாலரைக்கே சைக்களுழக்க தொடங்கினால்தான் நேரத்துக்குப்பொய்ச்செரலாம். அப்பிடியேல்லாம் வாழ்நத ஊர்... இப்ப... ப்ச்

  16. //Ramesh சொன்னது…

   Naan Trichy tamil nadu karan, 2002 samaathaana kalathil Yarl poi vanthen, yenakku yeen Jaffnavil pirakka villai yendru varutham, athe nerathil jaffna tamilarkal colombil vasikkum pothe vazhkkaiyil matram therigirathu, innum Tamil eelam pirantha piragum Neengal ninaikkira pazhaiya eela vazhkkai anupavippeergal yendru yennal koora mudiya villai, appadi nadanthaal naane muthalil magilchiyadaiven,.//

   ஏன் பிரிச்சு பேசுறியள்? அதுவும் உங்கட ஊர்மாதிரித்தான். எல்லாரம் தமிழர்தானே? உங்களுக்கு இப்ப இன்னும் மரியாதை கூடியிருக்கும். உங்கட போராட்டங்களுக்கும் உணவுப்பொருட்களுக்கும் எல்லாத்தமிழனும் எப்பவும் கடமைப்பட்டிருக்கான். நான் எந்த இயக்கத்துக்கும் ஆதரவானவன் இல்லை. என்ட ஒரே கவலை, பிரச்சனை வேணாமெண்டு தானும் தன்பாடுமா வாழுவபனையுமல்ல இந்த யுத்தம் கொல்லுது! இதுவும் கடந்தபோகுமெண்டு நம்புவம். மீண்டும் கட்hயம் யாழப்பாணம் வாங்கொ! பின்னூட்டிட்துக்கு நண்றி ரமேஸ்.

  17. //Raj சொன்னது…

   உங்கள் கனவு ஒரு நாள் நிச்சயம் நிஜமாகும்...வெகு சீக்கிரத்தில்...அதற்கு அந்த யாழ்தேவியே அருள் புரிவாள்//

   எப்பிடி உவளவு உறுதியாச் சொல்லறியள்? ஒண்டில் நீங்க டலஸ் அழகப்பரும வாய் இருக்கவேணும் இல்லாட்டி யாழ்தேவி ட்ரைவரா இருக்கவேணும்! ;) பாப்பம் என்ன நடக்குதெண்டு. வருகை;ககு நன்றி ராஜ்.

  18. பிரச்சினைகள் முடிந்த ஒரு நல்ல காலத்தில் நானும் ஒருமுறை யாழ்ப்பாணம் வர ஆசைப்படுகிறேன்.

  19. பச்சைகுத்திய ‌தோள்களும் தடித்த சங்கிலிகளும்தான் கவனயீர்ப்பான்களாகத் துலங்கப்போகிறன என்பதை சமாதான காலம் கட்டியம் கூறிற்று. //

   என்ன புல்லட் பாண்டி எப்படிச் சுகம்???? ம்.. கலக்குறீங்கள்.....யாழ் மண் வாசனை என்றுமே மறக்காது....மீண்டும் அந்த மிடுக்குத் தொடர வேண்டும்....

  20. //குடுகுடுப்பை சொன்னது…

   பிரச்சினைகள் முடிந்த ஒரு நல்ல காலத்தில் நானும் ஒருமுறை யாழ்ப்பாணம் வர ஆசைப்படுகிறேன்.//
   இப்ப இங்கு வந்ததுக்கு நன்றி. இனி அங்க வரப்போவதுக்கும் நன்றி. :)

  21. //கமல் சொன்னது…

   பச்சைகுத்திய ‌தோள்களும் தடித்த சங்கிலிகளும்தான் கவனயீர்ப்பான்களாகத் துலங்கப்போகிறன என்பதை சமாதான காலம் கட்டியம் கூறிற்று. //

   என்ன புல்லட் பாண்டி எப்படிச் சுகம்???? ம்.. கலக்குறீங்கள்.....யாழ் மண் வாசனை என்றுமே மறக்காது....மீண்டும் அந்த மிடுக்குத் தொடர வேண்டும்....//

   ஆககா! வாங்கோ கமல். வருகைக்கு நன்றி. ஏன் நீங்களும் பச்சை நீலம் எண்டு கலர்கலராக்குத்திப்போட்டியளோ? கிக்கி! பரவாயில்லை. யாழப்பாணத்திலயும் முருகன் படம் குத்துறவங்கள்தான். உங்களுக்கு யாழப்பாணம் வாசனை வேண்டுமெண்டால் டிங்கயாவது லாப் வழிய கந்தகம் பொட்டாசியம் கிடைச்சால எடுத்து மணந்துபாருங்கோ... கிட்டத்தட்ட அந்த ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு...ம்

  22. @ கமல்
   : பேர மாத்தினதுக்கு நான்தான் காரணமோ? மன்னிச்சுக்குங்க கமல். ரொம்ப கவலையா இருந்தா மெல்போர்ண் கமலை யாழ்போர்ன் (Yarl Born) கமல் எண்டு மாத்தி வைச்சிக்கொள்ளுங்களேன். நல்லாருக்கும் :)