கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும் - பகுதி இரண்டு


  முன்கதைச்சுருககம்
  கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும்

  கந்தப்புவின் வீட்டுக்கு கள்வன் வந்து கதவைத்திறக்கச்சொல்கிறான். திறக்கவிட்டால் உடைத்து உள்ளே வந்து உயிராபத்து விளைவிப்பதாக எச்சரிக்கிறான். அதைத்தொடர்ந்து…..

  திருடன்1 :::: மம் அப்ப என்ன முடிவு?

  கந்தப்பு :::: வேறவழி? ஒப்சன் ஏ தான்.

  திருடன்1 :::: ம்ம் குட் டிசிசன். அனேகமா எங்கட கஸ்டமர்ஸ் எண்ட தேர்வு அதுதான்…. ஆனாலும் வீட்ட நல்ல வடிவான இளம் பிள்ளையள்pருந்துதெண்டதால் நாங்கள் ஒப்சன் சி ஐ தெரிவுசெய்யச்சொல்லி வேண்டுகோள் விடுக்கிறனாங்கள்.

  கந்தப்பு கதவைத்திறந்துவிட திருடன் 1 உம் திருடன் 2 உம் உள்நுழைகிறார்கள். ஏனையோர் காவலுக்கு வெளியே நிற்கிறனர். திருடன் 1 கிழவனின் மண்டையில் செல்லமாக தட்டுகிறான்.

  கந்தப்பு :::: அய்யோ தயவுசெய்து அடிக்காதீங்க. நான் நெஞ்சு வருத்தக்காரன்.

  திருடன்1 :::: நெஞ்சுவருத்தமோ?

  கந்தப்பு :::: ஓமப்பன்.! நெஞ்குக்க ஒரே குத்துழைவா கிடக்குறது தம்பி. உப்பிடி நீங்க தட்ட அதிர்ச்pயில போய்ச்சேரந்திடுவன். தயவுசெய்து அடிக்காதயுங்கோ!

  திருடன்1 :::: அட கிழவா! பயப்படாத! உது வெறும் வாய்வு! நீ என்ன செயயெண்டால் எங்கட திருமா அண்ண இருந்தமாதிரி ஒரு நாலுநாள் டயட்டில இரு! உந்த வாய்வு எல்லதம் இறங்கி காத்துப்போன ஜெயலலிதா பொம்மை மாதிரி ஆயிடுவாய்.

  கந்தப்பு :::: பகிடி விடாதயுங்கோ தம்பி! எங்களட்ட ஒணடுமே இல்ல. எல்லாம் முடிஞ்சுது. மகன் மாசாமாசம் அனுப்பிற பிச்சைக்காசிலதான் சீவியம் நடக்குது. நீங்கள.; பிழையான இடத்துக்கு வந்திட்டியள்.

  திருடன்1 கண்ணைக்காட்ட திருடன் 2 சாக்கொன்றுடன் குசினிக்குள் நுழைகிறான். மளமளவெண்டு மேசையில் கிடந்த மரக்கறி ஐட்டங்கள் முட்டைகள் எல்லாவற்றையும் எடுத்தக்கொண்டு வெளியேறுகிறான். விக்கித்து நின்ற கந்தப்புவைப்பாரத்து சிரித்த திருடன் 1 ….

  திருடன்1 :::: கிழவா… எங்களுக்குத்தெரியும்…. உங்களட்ட ஒண்டுமில்லையெண்டு…. பாதை மூடினவுடனே ப்ளைட்டுக்கும் கப்பலுக்கும்; எஞ்சினத எங்களுக்கும் குடுத்து உங்களட்ட எல்லாம் முடிஞ்சுதெண்டு. அந்த நெரம் உலகிலேயே பைத்தங்காய் 2000 ருபாக்கு வித்த ஒரே ஊரெண்டால் அது யாழப்பாணம்தான். அதே ட்ரேண்டு இப்ப மறுபடியும் வெள்ளத்துக்கு பிறகு வந்திருக்கு. நீ இண்டைக்கு கிடச்ச 15000 ருபா காசைக்கோண்டுபோய் கல்லியங்காட்டுச்சந்தையில ஒரு சொப்பிங் பையில மரக்கறி வாங்கிக்கொண்டு போறத எங்கட இண்டலிஜன்ஸ் இன்போம் பண்ணினவங்கள். நாளைக்கு இதே சாமான 30000 போகும்… காலம நாங்களே கடயப்பொட்டு விப்பொம்… இரவு மறுபடியும் அடிச்சுருவொம்…. கறன்ட் ஸ்டொக் மாக்கட் இதுதான் நம்மளுக்கு… இது எப்டி இருக்கு? வர்ட்டா கிழம்ஸ்?

  கந்தப்பு :::: டேய் பொறுங்கடா….. ஏ9 திறந்தாப்பேந்து சட்டம் ஒழுங்கெல்லாம் வரும். அதுக்கு பிறகு என்ன செய்வீங்கன்னு பாப்பொம்.

  திருடன்1 :::: வரும்வரும் பாத்தக்கொண்டிரு…. அபின் வருவாக.. கஞ்சா வருவாக… பலான படம் வருவாக… மற்றும் பல அவர்களின் உறவினர்கள் வருவாக…நானும் ஒரு சிட்டுக்குருவி லேகியக்கடை திறக்கிறதா இரக்கேன். நீ வேணுமெண்டால. இப்பவே ஓடர் பண்ணு! பிறகு உந்தக்கிழவியை துரத்திப்போட்டு ஒரு கட்டைய கரக்ட் பண்ணிக்க. நானும் அடுத்த தடைவ வரும்போது ஒரு சேஞ்சுக்கு ஒப்சன் சியை ட்ரை பண்ணலாம். எப்பிடி வசதி? கிக்கி… குட்பை…!

  கந்தப்பு :::: ஙே?
  ____________________________________
  உண்மைக்கதை: புங்கன்குளத்தில் வயோதிப தம்பதி; வீடொன்றினுள்; புகுந்த ஆயுததார திருடர்கள் நகைகளை கொள்ளையடித்ததுடன் உணவுப்பொருட்களையும் அள்ளிச்சென்று விட்hர்கள். செல்லமுன் நிறைய நேரம் அளவளாவிய திருடர்கள் தாங்கள் யாnர்பதையும் கூறி வீட்டுக்காரருடன் ப்ரிட்ஜிலிருந்த பாதாரத்தங்களை சூடாக்கி சாப்பிட்டுவிட்டுச்சென்றுள்ளார்கள்.


  இத எழுதி முடிக்க ஊக்குவித்த காரத்திகைப்பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள்.

  10 Responses

  1. அடடா உண்மைக் கதையா....:-(((

   எழுதின விதம் ரசிக்க வைத்தது..கலக்கிறியள் புல்லட்...

  2. //’டொன்’ லீ சொன்னது…

   அடடா உண்மைக் கதையா....:-(((

   எழுதின விதம் ரசிக்க வைத்தது..கலக்கிறியள் புல்லட்...//
   மிக்க நன்றி டான்லீ மிக்க நன்றி !
   ஓவரா வாயத்திறக்கிறனோ எண்ட பயம் எனக்கு இருக்கு... எதுக்கும் உங்கட பதுங்குகுழிக்க எனக்கும் ஒரு இடம் வையுங்கோ. ஆரும் அடிக்க வந்தா ஓடிவந்து பதுங்குவம்.

  3. நிஜங்களும் ரணங்களும் நகைச்சுவையாக...

   கந்தப்பு சொன்ன ஏ9 திறப்பும் அதற்கு திருடன் சொன்ன பதிலும் நிஜ வாழ்வின் வலிகளைப் பேசுகின்றன. அதனை வெட்டி எடுத்து இங்கு மேற்கோள் காட்டினால் அது சீரியஸ் விடயங்களாகி விடும்.

   நல்லதொரு எழுத்து நடை. தொடருங்கள்.

  4. சிறிய வேண்டுகோள் ஒன்று:
   இப்பதிவின் பகுதி ஒன்றுக்கு ஒரு தொடுப்பு கொடுக்கவும். அதேபோல பகுதி ஒன்றின் இறுதியில் இப்பதிவுக்கும் ஒரு தொடுப்பு வழங்கவும்.

  5. ஓவரா வாயத்திறக்கிறனோ எண்ட பயம் எனக்கு இருக்கு... எதுக்கும் உங்கட பதுங்குகுழிக்க எனக்கும் ஒரு இடம் வையுங்கோ. ஆரும் அடிக்க வந்தா ஓடிவந்து பதுங்குவம்.

   எலி வளையானாலும் தனிவளை மாதிரி, என்ர பதுங்குழிக்குள்ள எல்லாம் இடம் தர ஏலாது...பேசாம நீங்களும் ஒரு பதுங்கு குழி கிண்டி வையுங்கோ...ஆல் தி பெஸ்ட்...:-)

  6. //ஆதிரை சொன்னது…

   நிஜங்களும் ரணங்களும் நகைச்சுவையாக...
   நல்லதொரு எழுத்து நடை. தொடருங்கள்.//

   மிக்க நன்றி ஆதிரை!

   // கந்தப்பு சொன்ன ஏ9 திறப்பும் அதற்கு திருடன் சொன்ன பதிலும் நிஜ வாழ்வின் வலிகளைப் பேசுகின்றன. அதனை வெட்டி எடுத்து இங்கு மேற்கோள் காட்டினால் அது சீரியஸ் விடயங்களாகி விடும்.//

   ஓமோம்! வெளிநாட்டில செட்டிலானவன் மட்டும்தான் சீரியசாக் கதைக்கலாம். நாமெல்லாம கதைச்சா எங்களுக்கு சீரியஸாக்கிடுவாங்க. :D

   //சிறிய வேண்டுகோள் ஒன்று:
   இப்பதிவின் பகுதி ஒன்றுக்கு ஒரு தொடுப்பு கொடுக்கவும். அதேபோல பகுதி ஒன்றின் இறுதியில் இப்பதிவுக்கும் ஒரு தொடுப்பு வழங்கவும்.//

   அறிவுறுத்தியமைக்கு நன்றி. கட்டளை நிறைவேற்றப்பட்டது. :)

  7. //’டொன்’ லீ சொன்னது…
   எலி வளையானாலும் தனிவளை மாதிரி, என்ர பதுங்குழிக்குள்ள எல்லாம் இடம் தர ஏலாது...பேசாம நீங்களும் ஒரு பதுங்கு குழி கிண்டி வையுங்கோ...//

   சுத்தமான தமிழ்ப்பண்பு... எனக்குப்புல்லரிக்குது :D

   //ஆல் தி பெஸ்ட்...:-)//

   ம்கும்.... உதுக்கு மட்டும் குறைச்சலில்லை. :D

  8. எங்களுக்குத்தெரியும்…. உங்களட்ட ஒண்டுமில்லையெண்டு…. பாதை மூடினவுடனே ப்ளைட்டுக்கும் கப்பலுக்கும்; எஞ்சினத எங்களுக்கும் குடுத்து உங்களட்ட எல்லாம் முடிஞ்சுதெண்டு. அந்த நெரம் உலகிலேயே பைத்தங்காய் 2000 ருபாக்கு வித்த ஒரே ஊரெண்டால் அது யாழப்பாணம்தான். அதே ட்ரேண்டு இப்ப மறுபடியும் வெள்ளத்துக்கு பிறகு வந்திருக்கு. நீ இண்டைக்கு கிடச்ச 15000 ருபா காசைக்கோண்டுபோய் கல்லியங்காட்டுச்சந்தையில ஒரு சொப்பிங் பையில மரக்கறி வாங்கிக்கொண்டு போறத எங்கட இண்டலிஜன்ஸ் இன்போம் பண்ணினவங்கள். நாளைக்கு இதே சாமான 30000 போகும்… காலம நாங்களே கடயப்பொட்டு விப்பொம்… இரவு மறுபடியும் அடிச்சுருவொம்…. கறன்ட் ஸ்டொக் மாக்கட் இதுதான் நம்மளுக்கு… இது எப்டி இருக்கு? வர்ட்டா கிழம்ஸ்//


   புல்லட் ம்...நல்லா நொந்திட்டீங்கள் போல யாழ்ப்பாணத்திலை...எனக்கும் இந்த நிகழ்வுகளை மறக்க ஏலாது...

  9. வரும்வரும் பாத்தக்கொண்டிரு…. அபின் வருவாக.. கஞ்சா வருவாக… பலான படம் வருவாக… மற்றும் பல அவர்களின் உறவினர்கள் வருவாக…நானும் ஒரு சிட்டுக்குருவி லேகியக்கடை திறக்கிறதா இரக்கேன். நீ வேணுமெண்டால. இப்பவே ஓடர் பண்ணு! பிறகு உந்தக்கிழவியை துரத்திப்போட்டு ஒரு கட்டைய கரக்ட் பண்ணிக்க. நானும் அடுத்த தடைவ வரும்போது ஒரு சேஞ்சுக்கு ஒப்சன் சியை ட்ரை பண்ணலாம். எப்பிடி வசதி? கிக்கி… குட்பை…!//

   புல்லட் உமக்கு என்ன விசயம் தெரியாதா??? இதிலை எவ்வளவோ அயிட்டங்கள் ஏற்கனவே பாதை மூட முதலே யாழ்ப்பாணத்திலை இருந்து உந்தக் கலாச்சாரம் பேணும் குழுவினர் கட்டுப்படுத்தினதை மறந்து போட்டீங்களோ???

  10. //கமல் சொன்னது…
   புல்லட் உமக்கு என்ன விசயம் தெரியாதா??? இதிலை எவ்வளவோ அயிட்டங்கள் ஏற்கனவே பாதை மூட முதலே யாழ்ப்பாணத்திலை இருந்து உந்தக் கலாச்சாரம் பேணும் குழுவினர் கட்டுப்படுத்தினதை மறந்து போட்டீங்களோ???//

   அப்பன் கமல்! உதுகளப்பற்றிக் கதைக்கப்படாது என்ன? பிறகு பாதை ரண்டாம் தரம் திறக்கமுன்னம் புல்லட் பாண்டி எண்டு ஒருத்தன் இருந்தவன் எண்டு யொசிச்சு கவலைப்படுவியள்.