கடுப்பைக் கிளப்பும் பெண்கள்

  “பெண்களில் சந்தேகம் கொள்ளும் ஆணினமே….உன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து விடாதே…எவன் ஒருவன் தன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறானோ அவன் தன்னைப் பெற்ற தாயையும் சந்தேகம் கொண்டு நோக்குபவனாக இருப்பான்.”
  இப்படி உறுமியது நானல்ல.
  யாரோ பிரியா மாசிலாமணியாம். திருகோணமலையிலருந்து கடந்த ஞாயிறு வுPரகேசரி மங்கையர் சங்கமத்தில, ஏறி இருந்து எழுதி இருக்கா.
  இப்பிடியே “அடிமைப்பட்ட பெண்ணினமே…” , “அடக்கியாளும் சமுதாயமே…” என்று ஒரு பக்கம் முழுவதும் ….மே…மே…. என்று ஆடுபோல் நீட்டி முழக்கியிருக்கும் இவாவுக்கு என்ன பிரச்சனையாம் என்று ஆராயந்தால்.. பக்கத்து வீட்டுக்காரனோடு அவா சிரிச்சுக்கதைச்சதில கோபமடஞ்ச எங்கட மாசிலாமணி, மணியைக் கொஞ்சம் அழுத்தி அடிச்சிருக்கார். விளைவு … மாசிலாமணிண்ட மானத்தை மனுசி பேப்பர் கடையில கூவிக்கூவி வித்துப்போட்டுது.
  உது புதுசில்ல.
  ஒவ்வொரு ஞாயிறும் ஆரும் டோஸ் வாங்கின கேஸொண்டு இப்பிடி எழதும்…..
  உதைப்படிச்சுப்போட்டு ஒழுங்கா இருக்கிற மனுசியளும் சட்டிய பானைய போட்டுடைச்சு தங்களுக்கும் சமவுரிமை இருக்கா எண்டு டெஸ்ட் பண்ணுங்கள்;…
  தேவையா இப்பிடி சொந்த செலவில சூனியம்?

  பொம்பிளையளுக்கு ஒண்டு விளங்கவேணும்….. அடிப்படையில மனுசனும் ஒரு விலங்கு. ஒரு பேடு அடங்காட்டி தலையில கொத்துற சேவலை எல்லாரும் பாத்திருக்கிறம். வேற சேவல் தன்ட பேட்டை கூட்டிட்டு போறதை வலிமையுள்ள எந்த சேவலும் அனுமதிக்காது. அது அதண்ட ஆண்மைக்கு விடுக்கப்படுற சவால். அதே போலதான் மனுசனும். தன்னுடைய துணை தனக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தரவேணும் எண்டு நினைக்கிறதில தப்பேதும் இல்லை.. பக்கத்த வீட்டுக்காரன் நல்லாப் பகிடிவிடுவான் எண்டு போட்டு அவன்கூட போய்நிண்டு சிரித்துக்கொண்டிருந்தால் அதுவும் உன் கணவனின் ஆண்மைக்கு விடுக்கப்படும் சவால்தான். அவன் அதை எண்ணிப்பொருமுவது மனித இயல்பே. தன்னை விட்டுவிட்டு கணவன் எங்காவது சுற்றுலாவுக்க செல்லகிறானென்றால் எந்த பெண்ணும் அனுமதிக்கப்போவதில்லை. காரணம் அவனுடைய சந்தோசமான தருணங்களில் தானும் இருக்கவேண்டும் என்ற பொசசிவ்நெஸ் தான்;. உண்மையான தமிழ் மனைவிக்கு அப்படி இருக்கும். அதை கணவனும் மதிப்பான.; மதிக்கவேண்டும். அதையே பெண்ககளிடம் எதிர்பார்த்தால் கெட்டது காரியம்… சந்தேகப் பேய் பிடித்து ஆட்டும் ஆணினமே அலியினமே எண்டு அடுத்த வாரமஞ்சரில அலங்கோலமா வரும்….. ஏன் இந்தக் கொலைவெறி.?

  ம்….. இப்ப தான் பெரிய ஸ்மாட்டாம் என்ற நினைப்பில சில பெண்கள் சொல்லுவினம். “எங்களுக்க மிருகங்கள் வேண்டாம். மனுசர்தான் வேணும். மிருக இயல்பை அடக்கத்தெரியாதவனெல்லாம் ஏன் கலியாணம் கட்டுவான்?” சரிதான் அப்பிடி ஒரு லூசன் அம்பிட்டான் எண்டால் கட்டுங்கோ.. பிறகு தெரியும் சேதி.
  அவன் கண் முன்னால உங்களை யாரும் கற்பழிக்க முயற்சி செய்யேக்க, சாவகாசமா கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு, போலிசுக்க போன் பண்ணிக்கொண்டிருப்பான். ஏனெண்டால் அவன் மிருக இயல்பில்லாத மனுசனல்லொ.
  தாயைக்கெட்ட வாரத்தையில ஆரும் திட்டினாலோ மகனை எவனாவது கதற கதற அடிச்சாலொ கண்ணில ரத்தம் தெறிக்கிறதுக்கு காரணம் எங்கட மிருகத்தனமான பொசசிவ்நெஸ் தான்;. உண்மையச் சொல்லப்போனால் பாசத்திண்ட அடிப்படையே அதுதான்.

  எந்தத் தமிழனும் கலியாணம் கட்டேக்க குடும்பப்பாங்கான தமிழ்ப்பெண் வேணுமெண்டு கேட்டுத்தான் வாறவன். அப்பிடி ஓமெண்டு கழுத்த நீட்டுறவை தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு அச்சம் மடம் நாணம் பயிர்ப்போட இருக்கவேணும். இல்ல, நான் பப்புக்கு போவன்… பாவாடைய தூக்குவன் எண்டு அடம் பிடிச்சால நீங்கள் யாரும் பீட்டரையோ பிக்கானையோ பாத்து வெளிநாட்டில கலியாணம் பண்ணிக்கொள்ளலாம். யாரும் தடுக்கேல்ல. பெண்ணின் உரிமை வரம்பைத் தீர்மானிப்பது ஆண்தான். ஆனால் அதை வெருட்டியோ , தன்பாட்டிலேயோ ஒரு பெண் அதிகரிக்க நினைத்தால் வாழ்க்கை அசிங்கமாகிவிடும். அதைப் பெண் நயந்;துதான் பெற்றுக்கொள்ளவெண்டுமென்பதை பலான பீல்டில் பேமசான டொக்டர் ஷாலினியே சொல்லி இருக்கிறார். இதுக்கமேல நான் என்னத்தைச்சொல்ல?

  நான் அ+ணாதிக்கவாதியல்ல….நியாயவாதி… வீட்டில் பெண்துணையின் நியாயமான தேவைகளைப் புறக்கணிப்பவனை…இ நியாயமான கருத்துகளை உதாசீனம் செய்பவனை…, அதுவும் ஒரு மனுச ஜென்மம் என்று மதிக்காதவனை ஒரு பேடி என்ற வகையில் அடக்குபவன் நான். ஆனால் சில விடயங்களில் ஆணுக்கு மேன்மை படைப்பிலேயெ எழுதப்பட்டுவிட்டது. அவ்வாறே பெண்ணுக்கும் சில விடயங்கள் எழுதப்பட்டு விட்டது. அவற்றையும் மாற்றவேண்டுமென யாராவது கருதினால்.. முதலில்…. ஒரு பிறந்த குழந்தையை “அம்மா” சொல்ல முன்பு “அப்பா” என்று சொல்ல வையுங்கள்…
  பிறகு பார்க்கலாம்…..

  54 Responses

  1. //ஆனால் சில விடயங்களில் ஆணுக்கு மேன்மை படைப்பிலேயெ எழுதப்பட்டுவிட்டது. அவ்வாறே பெண்ணுக்கும் சில விடயங்கள் எழுதப்பட்டு விட்டது.//

   இதில் எனக்கு உடன்பாடில்லை..புரிதலின் உச்சத்தில் இந்தப் பாகுபாடுகள் கலையும்....ஆண் பெண் என்ற பேதம் தவிர்த்து அன்பு, புரிந்துணர்வை வளர்க்கையில் எல்லா மாயைகளும் உடைபடும்...

  2. சில விடயங்களில எண்டு நான் சாடைமாடையாச்சொன்னதை நீங்க புரிந்து கொள்ளவில்லையா டான்லீ.? தர்க்கரீதியில , பல விடயங்களில பெண்ணுக்குதான் மேன்மை எண்டு நான் சொல்லாமல் சொல்லியிருக்குறன். எனக்கு இன்னும் கலியாணம் ஆக கன காலம் இருக்கு. ஆதலால நீங்கள் சொல்லறது உண்மையோ எண்டு பிறகுதான் தெரியும். நான் படிப்புக்காக கொழும்பு வரேக்க எங்கட பாட்டி ஒண்டு சொல்லி அனுப்பினவ "அப்பன் ராசா! பெட்டயளோட கனக்க பழகாதயணை... இடத்தக்குடுத்தா மடத்த புடுங்கிப்போடுவாளயள்.. கவனம்"

  3. வித்தியாசமா இருக்கே...நல்ல இருக்குதண்ணே பதிவு...

   //எந்தத் தமிழனும் கலியாணம் கட்டேக்க குடும்பப்பாங்கான தமிழ்ப்பெண் வேணுமெண்டு கேட்டுத்தான் வாறவன். அப்பிடி ஓமெண்டு கழுத்த நீட்டுறவை தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு அச்சம் மடம் நாணம் பயிர்ப்போட இருக்கவேணும்.//

   நானும் கூட அடிக்கடி இவற்றை பற்றி யோசித்ததுண்டு..அனாலும், உலகம் எங்களுக்கு எப்பயும் sexist என்றே லேபலே தரப்போகிறது.

  4. we invite you to join now in bloggersunit

  5. This comment has been removed by the author.
  6. This comment has been removed by the author.
  7. என்ட கடவுளே! என்ட பதிவை விடப்பெரிசாக்கிடக்கு கொமெண்ட். இருந்தாலும் வாசிக்கும் போது வேர்த்தே போச்சு எனக்கு! தாயே எவனாவது என்ன மாதிரிக்கோணங்கி அகப்பட்டானோ உன்னட்ட செதத்தான் பேர்வழி.

   நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான். அந்த அச்சம் மடம் கொன்சப்டு அது ஏதோ புலோவில வந்திட்டுது. அது பிழைதான் போல கிடக்கு உங்கட வாதத்தை பார்த்தப் பிறகு. மன்னிச்சுக்கம்மா! பெண்ணுக்கு அச்சம் மடம் தேவையில்ல மற்ற இருண்டும்தான் தேவை. ஓகே?

   மிச்சமெல்லாம் எனக்கு அக்செப்ட் பண்ண ஒரு மாதிரியிருந்தாலும் உங்கட பார்வையில சரியாயிருக்கலாம். நான் என்னுடைய பார்வையைத்தான் எழுதியிருந்தனான். எல்லா ஆண்களும் என்ன மாதிரி இருக்கமாட்டாங்கள். மொடேன் பிள்ளையள விரும்பிறவங்களும் இருக்கிறாங்கள்.

   அதேமாதிரி எல்லாப்பிள்ளையளும் உங்கள மாதிரி மொடேன் பிள்ளையளா இருப்பினமெண்டு நான் நினைக்கயில்ல. (அதை நான் பிழையெண்டு சொல்லயில்ல) வீட்டில கட்டுப்பாடாக கண்டிப்போட வளர்ந்த பிள்ளையள் யாரையும்தான் இலங்கையில இப்ப இருக்கிற பெடியங்கள் விரும்புவாங்கள் எண்டு நினைக்கிறன். வெளிநாட்டில கலாச்சாரம் வேறதானே பிள்ள! உங்கன இருக்கிற பெடியங்கள் உங்கட மனப்பான்மைய புரிஞ்சு கொண்டு பப்புக்கு கூட்டிக்கொண்டு போகக்கூடியவங்களாயிருக்கலாம். இங்கயும் கொழும்பில கனகாலம் வளர்நத பெடியள் கொஞசம் அப்பிடியானாக்கள் இருக்கிறாங்கள். யாழப்பாணத்துல அதெல்லாம் சரிவராதெண்டது எண்ட கருத்து!
   நானித சண்டையா எடுக்கயில்ல... இருவேறு கருத்து கொண்ட தமிழரிண்ட வாதமா எடுத்துக்கொள்ளுறன். நீங்களும் மனதில குறை ஏதும் நினைக்காமல் புளொக்குக்கு அடிக்கடி வரவேணும்.
   டொண்லீ நீங்கள் ஏதும் பதிலெழுதலாம் .... :)

  8. //தியாகி சொன்னது…

   வித்தியாசமா இருக்கே...நல்ல இருக்குதண்ணே பதிவு...

   //எந்தத் தமிழனும் கலியாணம் கட்டேக்க குடும்பப்பாங்கான தமிழ்ப்பெண் வேணுமெண்டு கேட்டுத்தான் வாறவன். அப்பிடி ஓமெண்டு கழுத்த நீட்டுறவை தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு அச்சம் மடம் நாணம் பயிர்ப்போட இருக்கவேணும்.//

   நானும் கூட அடிக்கடி இவற்றை பற்றி யோசித்ததுண்டு..அனாலும், உலகம் எங்களுக்கு எப்பயும் sexist என்றே லேபலே தரப்போகிறது.//
   தியாகீ.....! எனக்கு வந்த சோதனப்பாத்தியா தம்பி! அரைபக்கம்... ! எழுது எழுதெண்டு எழுதி புல்லட் பாண்டிய புள்ளப்பூச்சி மாதிரி நசுக்கிப்பொட்டுது ட்ரையம்பு! அதுக்கு காக்கைவன்னியன்... டான்லீ சப்போட்டு வேற? நானென்ன செய்ய? பேசாம நாங்களும் மனுசிமாரிட்ட கொடியக்குடுத்துட்டு குடத்தையும் கொண்டு தண்ணியள்ளப்பொவோம். என்ன நான் சொல்றது?

  9. This comment has been removed by the author.
  10. அடேங்கப்பா நீங்க எழுதுற கருத்துரைகளை வச்சே நாலஞ்சு பதிவு போடலாம் போலயே.. பதிவு நன்றாக உள்ளது புல்லட்..

  11. This comment has been removed by the author.
  12. ஆளவிடம்மா தாயே ... நான் இந்த விளையாட்டுக்கே வரேல்ல. ஒரு மனுசனப்போட்டு இப்பிடியா அடிக்கிறது? கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணாம்? நான் சரண்டர். நீங்க சொன்னா எல்லாமே சரிதான். (இப்பிடித்தான் எல்லா வீட்டிலயும் சண்டையள் முடியுறது பாவம் ஆண்கள். :( )

  13. This comment has been removed by the author.
  14. //கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

   அடேங்கப்பா நீங்க எழுதுற கருத்துரைகளை வச்சே நாலஞ்சு பதிவு போடலாம் போலயே.. பதிவு நன்றாக உள்ளது புல்லட்..//

   நடந்த கடுமையான நண்டையில உங்கள கவனிக்காம விட்டுட்டன் சேர். வந்தனிங்கள் எதையாவது எழுதி அடிவாங்கிக்கொண்டு பொகலாமில்ல?நழுவினா எப்பிடி?
   எண்டாலும் வருகை தந்ததுக்கு நன்றி சேர்!

  15. அப்பாடா..இப்ப தான் ட்ரயம்ப் அக்கா(?)விண்ட பதிவுகள வாசிச்சு முடிச்சனான்..புல்லெட் அண்ணே, இவா சொல்ற மாரி பாத்தா நாங்க தான் எங்கேயோ பிழ விட்ற மாரி கிடக்குது.அக்கா(?) சொல்றது சரி எண்டு கூட படுது..நாங்க தான் ஒருத்தர் ரெண்டு பேர கண் முன்னாடி நிறுத்தி generalize பண்ணி கதக்கிரமோ?சில பெட்டயளிண்ட நட, உட பாவனைய பாத்தாலே சகிக்காது.அருவருப்பா இருக்கும்..ஏன்டா கொம்மா அடிக்கடி சொல்ற மாரி கு**க்கு கீழ நல்ல அகப்ப கம்பால சூடு வக்க வேணும் போல இருக்கும்...அக்கா(?)விண்ட பதிவுகள வசிச்ச பிறகு அந்த கூட்டம் ஒரு மைநாரிடியா இருக்குமோ எண்டு இப்ப யோசிக்கிறன்...என்ன ட்ரயம்ப் அக்கா(?), நான் சொல்றது சரி தானா??

  16. புல்லட் ஐயோ தாங்க முடியலையே??? ஏன் உங்கள் பதிவைத் தமிழ் மணத்திலும் இணைத்தால் இன்னும் நிறையப் பேர் வருவீனம் தானே?? ஏதும் உதவி தேவை என்டால் மெயில் போடுங்கோ...இல்லை என்டால் tamilmanam.net இல் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்க எனும் பகுதியைப் பாருங்கோ....

   எப்பிடீங்க இதெல்லாம் உங்களாலை முடியுது????

  17. புல்லட் எனக்கென்னமோ உங்களுக்கே புல்லட் பாயுற மாதிரி பின்னூட்டங்கள் வரும்மெண்டு தெரியுது. கலக்குங்கோ...

  18. Hi,
   U r having attractive writing style and different views..so I hv the habit of reading ur posts regularly..But this post has reduced the esteem on u, which has been developed within me so far...

   I want to hats off Triumph akka for her forwardness on expressing the girl's view... keep it up...

   bullet pls think...ok let say.. u r marrying a "kudumpapangana ponnu"(here kudumpapangana girl means ur point f view ok..my point of view just same to Thirumph's view) and having 2 delta bullets(children)..one day u die, think ur wife and children situations...if ur wife works and is gd enough to handle that situation... ur deltas can be engineers like u in futures....

   in ramayana(I saw n Sun TV)... ravanan said onething "shakthi ullavan sollvathe tharmam ahum"..It is what happened in our culture...Gents tried to rule females by putting non sense and stupid stuffes...

   I think ur wife is only going to struggle with u..not Thirumph's husband..

   Ok..if i hurt u or anythg....pls forgive me.... I like ur all posts(except this)...keep the rocking Mr.Bullet.

   looking forward more gd posts...
   (after all, u may think I am a female...but not...)

  19. //Triumph சொன்னது…

   ha ha.... I cant stop laughing.... I never laughed like this after my dad passed away... Kannila thanni varum varai serichan... Thanks anna...

   இப்ப முல்லைத்தவில இருக்கிறவண்ட நிலமை எங்களுக்கும் எப்பவும் வரலாம்.... அதானால பழச போட்டு மனசக்குழப்பாம எப்பவும் சந்தோசமா இருப்பம் என்ன? தங்கச்சி சிரிச்சால அண்ணனுக்கு சந்தோசம்தானே!
   // Last Punch:
   We (Nalla Pengalai Patti solluran) are always right... so you guys have to give up...//

   நீங்கள் சொன்ன மாதிரி நான் கலியாணம் கட்டினாப்பிறகு மனுசிய பூப்போல வைச்சுக் காப்பாத்துறன் என்ன! எங்கயாவது குடிச்சுட்டு விழுந்து கிடந்தாலும் தூக்கிக்கொண்டு வீட்ட வந்து விசுக்கிவிடுவன். உண்ணாணை நக்கலுக்கு சொல்லேல்ல!வாறன்! :)

  20. //தியாகி சொன்னது…

   அப்பாடா..இப்ப தான் ட்ரயம்ப் அக்கா(?)விண்ட பதிவுகள வாசிச்சு முடிச்சனான்..புல்லெட் அண்ணே, இவா சொல்ற மாரி பாத்தா நாங்க தான் எங்கேயோ பிழ விட்ற மாரி கிடக்குது.//

   தம்பி நீங்களுமா? ட்ரையம்பு ஸ்கொட்லண்டெல்லாம் தேடிவந்து கலியாணத்தல கல்லக்குத்தாது. அதால நீங்கள் கவலைப்படாம கதைக்கலாம். அடிவாங்கினப்பிறகு சரண்டராகிறது ஒரு மரியாதை... அடிவிழும் எண்ட பயத்தில சரண்டராகிறது அவமானம்... நீங்கள் தியாகியாயிருக்கலாம் அதுக்காக தன்மானத்தையெல்லாம் தியாகம் பண்ணக்கூடாது.. என்ன?.............. சும்மா பகிடிக்குச்சொன்னனான். சீரியசா எடுத்துப் போடதயப்பன்.

  21. //கமல் சொன்னது…

   புல்லட் ஐயோ தாங்க முடியலையே??? ஏன் உங்கள் பதிவைத் தமிழ் மணத்திலும் இணைத்தால் இன்னும் நிறையப் பேர் வருவீனம் தானே?? ஏதும் உதவி தேவை என்டால் மெயில் போடுங்கோ...இல்லை என்டால் tamilmanam.net இல் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்க எனும் பகுதியைப் பாருங்கோ....//

   ஏதாவது கோவமிருந்தால வெளிப்படையாச் சொல்லோணும்....யாழ்போண் கமல் அலயாஸ் மெல்போண் கமல் இருக்கிறவங்களையே சமாளிக்க முடியல்ல. இதுக்க தமிழ்மணத்தில வேற இணைச்சு எக்ஸ்ட்ராவா 5,6 அடி வாங்கட்டோ? .....

   சும்மா பகிடிக்குச்சொன்னான். உங்களையும் சேர்த்து கனபேர் சொன்னபடியால கட்டாயம் இணைக்கிறன். வருகைக்கு நன்றி கமல் அலயாஸ்... வேணாம் கொஞசம் ஓவராப்போச்சென்ன?.

  22. //மதுவதனன் மௌ. சொன்னது…

   புல்லட் எனக்கென்னமோ உங்களுக்கே புல்லட் பாயுற மாதிரி பின்னூட்டங்கள் வரும்மெண்டு தெரியுது. கலக்குங்கோ...//

   வாங்கோ மாட்டுப்பையன். உங்களுக்கு கண்ணில ஏதாவது கோளாறா? பெரிய பீரங்கியே வைச்சு அடிக்கிறாங்கள்...புல்லட் எண்டுறீங்கள்.... இதைத்தான் சொல்லுறது பீரங்கியக்குடுத்து அடிவாங்கிறதேண்டு. என்ன செய்யுறது நேற்று எனக்கு கையில சனி.

   வருகைக்கு நன்றி மதுவதனதன். அடிக்கடி வாங்கோ!

  23. //Saraketha சொன்னது…

   Hi,
   U r having attractive writing style and different views..so I hv the habit of reading ur posts regularly..But this post has reduced the esteem on u, which has been developed within me so far...//
   வாங்கோ கேதா!
   உங்களுடைய நற்கருத்துக்கு நன்றி. ஆனாலும் ஆணாதிக்க சமுதாயத்தில வளர்ந்த நான் இவ்வளவு தூரம் மாறினதே பெரிய விஷயம். என்னுடைய மகனை வேணுமெண்டால ட்ரையம்பிண்ட அப்பாவப்போல வளர்க்க ட்ரை பண்ணறன். எஸ்டீம் குறையுதெண்டு சுயத்தை மறைக்கிறதில எனக்கு உடன்பாடு கிடையாது. ஆக்கம் உங்களை பாதிச்சிருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க.

   //one day u die, think ur wife and children situations...if ur wife works and is gd enough to handle that situation... ur deltas can be engineers like u in futures....//
   அது உண்மைதான். ஆனா அதுக்கு எங்கட சமுதாயத்தில சழுக பாரம்பரியங்களில நிறைய வழிவகை செய்திருக்கிறாங்கள். அதைப்பற்றி எழுதினால் இங்க அடியில்ல கொலையே விழும்..... ;)ஆனால் ஏனந்த வழக்கு வந்தது எண்டதுக்கு இது உதாரணம்.


   //I think ur wife is only going to struggle with u..not Thirumph's husband..//

   ஏனப்பா சாபமெல்லாம் விடுறீங்கள். என்னுடைய மனைவியை அழாமல் செல்லப்பொம்மை மாதிரி வைத்திருக்க வேண்டும் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்க வேண்டுமென்றுதான் எல்லா ஆணும் விரும்புவான். அப்படி ஒரு கருத்தைத்தான் நானும் கொண்டிருக்கிறேன். இந்த லொகத்தில் அப்படி ஒருத்தனை விரும்பும் பெண் இல்லாமலா போய்விடுவாள்.

   //looking forward more gd posts...
   (after all, u may think I am a female...but not...)//

   நானும் பொம்பிளையெண்டல்லோ நினைச்சன். நல்லா இருக்கெண்டு இவளவு நாளும் பாராட்டாமல் திடீரெண்டு சண்டைபிடிக்க மட்டும் வந்தவுடனே நான் அப்பிடித்தான் நினைச்சன். ஏனெண்டால் எனக்கு இதுவரை தெரிஞ்ச பிள்ளையள் இப்பிடித்தான். "உங்கள எப்பிடியெல்லாம் நினைச்சேன். சேய்! எனக்கும் சேர்த்து ஒரு ரியுட் எடுத்திருக்கலாம்தானே? ".......... நட்பிருக்கெண்டால் அதை வெளிப்படுத்தினாலல்லோ? ......ம்! அதே கரக்டரோமுதல் மதலா ஒரு ஆம்பிளையப்பாரக்கிறன். :D

   கிக்கி! குறை நெக்காதீங்கோ...ஒரு நக்கலுக்கு சொன்னனான்... அடிக்கடி வாங்கோ சர்மா ! என்ன ...... :D

  24. //அடிவிழும் எண்ட பயத்தில சரண்டராகிறது அவமானம்//

   ஹாஹாஹா...அதில்ல புல்லெட் அண்ணே...நான் மனசில பட்டத சொன்னனான்..என்னண்டா, என்னக்கும் கொஞ்சம் guilty தான் பாருங்கோ...எல்லா பெட்டயளையும் சுட்டெரிக்கிற மாறி பாக்காலாமோ இல்லாட்டி சில பெட்டயல மட்டுமோ எண்டு..அதான் ட்ரயம்ப் அக்கா(?)விட்ட கேக்கலாம் எண்டு...(மெதுவா அவாவ அக்கா ஆக்கி போட்டன் பாத்தியளோ?ஹிஹிஹி..)

   கலியாணத்துக்கு பிறகு பிள்ளயள வளக்குறது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது பாருங்கோ ..இன்று வரெக்கும் அனுபவமும் இல்லை..ஹிஹிஹி...அதனால அதுகள பற்றி கதைக்க வரேல்ல..ஆள விடு சாமி..

  25. This comment has been removed by the author.
  26. This comment has been removed by the author.
  27. This comment has been removed by the author.
  28. This comment has been removed by the author.
  29. This comment has been removed by the author.
  30. Hi bullet anna,

   sorry.. extremely sorry for my first comment in harsh words,i hv a blog for my profession and i dont have a blog to write like this.. but i hv da habit of reading this kind of blogs..but dnt hv da habit of commenting(it s bz i thought that may affect my professional blog..i may be wrong), but 2day i couldn't control..that why i commented.

   I didn't curse u..to be frank, if any male talks as mad like this(sorry 2 use this word).. I will get angry and start to shout..it is common nature of me.(I tried to control, but couldn't). It s because I am a male who suffered lot by "masculine"(aanaathikkam) from my child hood..

   My father had lot of bad habits and wasted money in all and everyday he fought with mom in front of us(he was an engineer(like u bullet)he did not only waste his earnings, he wasted our mom dowry stuff also)...one day he died in accident(including me 4 children n my family, when he died, all children were under age of 7)...aft that mom, grandmom and great grand mom and we stuggled lot...(all ladies r widow..so no males in our hm and also no brothers to mom)...so v suffered lot..many males in society tried to cheat as there r no males n our family..sm ppl came and said our dad brought debt fr them and so on and got money fr mom and grand ma..

   ok...there r lot of stories in my life...i thk i hv faced almost all problems by "aanathikkam"...


   sorry i couldn't control my self...
   ok...i will post gd comment to gd posts...

   cool bullet anneeee

  31. Hi Triumph,

   Are u third year student? so may be, u r akka 2 me..ok hereafter i wont refer u as akka...cool..and I read ur blogs.. so nice...

   I dnt know whether we want to change our point or not(at least to small extent)....but Bullet Anneeee should change his views..But I DO NOT think "It will happen"..Am I right Bullet anneeee??? OK nice to hear that " At least delta bullet may be....."

   Take Care

  32. //அட பாவி தியாகி,
   என்னை அக்காவாக்குவதில் உனக்கென்னப்பா சந்தோசம். நான் இப்பத்தான் UG 3rd year.//

   பீரங்கி தாக்குதல்ல இருந்து தப்பிக்கத்தான்..ஹிஹிஹி..

  33. This comment has been removed by the author.
  34. அடடா..கெதியில் இது சூடான இடுக்கையாக மாற வாழ்த்துகள்...

   புல்லட்..உடனடியாக ஒரு பதுங்கு குழி பாரும்..நல்லா வாங்கிக் கட்டப்போறீர்..

  35. அடடா! கொஞ்சநேரம் வேலையப்பாத்துட்டு வரக்கிடயில பொழிஞ்சு தள்ளிட்டாங்களே! பரவாயில்ல!
   தம்பி சரக்கீதா... கவலைப்படாதயப்பன்... குடியில்லாத சமுதாயம் ஒண்டு உருவாகும். patriarchial family structue இல்லாமல் போகும்.
   ஆனால் நானதை விடுறதா இல்ல. ;).( சும்மா சொன்னன்.மறுபடியும் சண்டைக்கு வராதீங்க ) விரைவில சிரிக்கிறதுக்கு ஏதாவது எழுதுவன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி....

   //
   Triumph சொன்னது…
   அட பாவி தியாகி,
   என்னை அக்காவாக்குவதில் உனக்கென்னப்பா சந்தோசம். நான் இப்பத்தான் UG 3rd year.//

   சச்சின் படத்துல பத்துவருசமா ஒரே இயர் படிச்ச வடிவேலு கேஸ் எண்டு யோசிசிசிட்டானாக்கும் பெடிப்புள்ள. உதுதான் கிழவி மாதிரி கதைக்க்கூடாதென்டுறது. ;)
   வேணாம்...பிளீஸ் ஒண்டும் அடிக்கவேண்டாம்! அவமானம் அக்செப்ட்டட். Ok? :D
   C ya at next post! :D

  36. பதிவை வாசிக்கும் போது சும்மா ஏறிக்கொண்டு வந்திச்சு... காட்டு காட்டுவம் என்று நினைச்சுக் கொண்டே comments ஐ வாசிக்கும் போது சப்பென்று போயிட்டுது..

   தேவையா புல்லட் பாண்டி... hats off Triumph.. You have written all what I thought to write.
   எதையுமே விட்டு வைக்கேல...

   அனானியான கருத்து சொல்லேலாதோ.. :(

  37. இந்தப்பதிவில் எனக்கு நிறைய உடன்பாடில்லை நண்பரே

  38. மன்னிக்க தோழர் பாண்டி... என்னால் இன்று இரவுதான் இணையத்துக்குள் நுழைய முடிந்தது. உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு அருகில் இருக்காதது மனதை வாட்டுகின்றதுதான். என்ன செய்ய...?

  39. வேண்டுமானால் உங்கள் மீது வீசப்படும் எறிகணைகளை நிறுத்தச் சொல்லி ஒரு கால அவகாசம் கொடுத்துவிட்டு வைத்தியசாலைக்கு போகட்டா? முதுகுப்பக்கத்தில் கொஞ்சம் வலி எடுக்குது. அதுக்கிடையில் நீங்கள் மரணித்தால் என் பதிவில் ஒரு கவிதை போடுவன். நீங்கள் சாந்தி அடைய வேண்டும்.

  40. This comment has been removed by a blog administrator.
  41. //
   Vishnu சொன்னது…

   பதிவை வாசிக்கும் போது சும்மா ஏறிக்கொண்டு வந்திச்சு... காட்டு காட்டுவம் என்று நினைச்சுக் கொண்டே comments ஐ வாசிக்கும் போது சப்பென்று போயிட்டுது..

   தேவையா புல்லட் பாண்டி... hats off Triumph.. You have written all what I thought to write.
   எதையுமே விட்டு வைக்கேல...

   அனானியான கருத்து சொல்லேலாதோ.. :(//

   எல்லாரும் அம்மணமா ஓடேக்க எனக்கு மட்டும் கோமணம் எதுக்கு விஷ்ணு! அவுட்டுறுவொம். :) சும்மா சொன்னனான். சில விடங்களில எனக்கு சரிபிழை வடிவாத்தெரியாது. வயசு கிடக்கு. பாப்பம் என்ன நடக்குதெண்டு. டொக்டர் ஷாளினிண்ட கருத்துகளை வாசிச்சு வந்த ஒரு கருத்தடிப்படையிலதான் நான் எழுதினனான். வருகைக்கு நன்றி.

   எல்லாப்பின்னூட்டலாளருக்கும் தனிதனி கவனம் வெலுத்துவேண்டுமென்று நினைக்கிறவன் நான். ஆதலால அனானிய வந்து அசிங்கம் செய்யுறாக்கள அனுமதிக்க முடியாதுதானே. திட்டுறதை நேர திட்டுங்கவன். ஏன் மறைஞ்சு நிண்டு திட்டவேணும்? அடிக்கடி வாங்க கோவம் வந்தா திட்டுங்க. நோ புறொப்ளம்.

  42. //குடுகுடுப்பை சொன்னது…

   இந்தப்பதிவில் எனக்கு நிறைய உடன்பாடில்லை நண்பரே//

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர். எல்லாருக்கும் ஒரே விதமான கருத்திருந்தால் உலகம் ஏனிந்த நிலையிலிருக்கப்போகிறது. வறட்டு கௌரவம் என்னிடம் இல்லை. ஆகையால் என் மீது பிழை என்று தெரிந்தால் நிச்சயம் மாறிவிட்டுப்போகிறேன். பெண்கள் சகவாசம் பெரிதாக இல்லாமையால இப்படியான கருத்துக்கள் ஏற்பட்டனவோ தெரியவில்லை. நன்றி.

  43. Hi Bullet Anneeee,

   Now it seems all people are disappointed by ur post..there are no posts to support u in ur view..but I think u r happy about this much comment on u.. U r a electronical engineer no..u said n past posts that u get all distinction n O/L and A/L..so After all I think u r a Moratuwa Uni student(am i right?)..I ddt expect this much "pittpokkuvatham" from MORA boy...Hope u will think all and will post a gd post about girls....

   (In my search I found "who u r?" i need to clarify that 100%...dnt worry, i wont fight with u in real as like this...I will watch u silently)... But the people I asked about u gave good reviews..mmm...

   bullet anneeee...
   //சீரியஸ் மாட்டரை கையிலெடுத்து கட்டயில போகப்பார்த்து கடைசியா ஒரு முடிவெடுத்தேன்..... எனக்கெல்லாம் எதுக்கு போர்த்தேங்காய்? :(//

   I think u forgot ur aim...that why this much...ok I am ready to stop scolding u in this posts as Triumph said, and ready to laugh as past(will post comments)..

   (if u r admitted in any hospital pls tell me.. i will cm with "Horlicks" and Dr.Shalini Books(!!!))

   Take Care..

  44. //ஆதிரை சொன்னது…

   வேண்டுமானால் உங்கள் மீது வீசப்படும் எறிகணைகளை நிறுத்தச் சொல்லி ஒரு கால அவகாசம் கொடுத்துவிட்டு வைத்தியசாலைக்கு போகட்டா? முதுகுப்பக்கத்தில் கொஞ்சம் வலி எடுக்குது. அதுக்கிடையில் நீங்கள் மரணித்தால் என் பதிவில் ஒரு கவிதை போடுவன். நீங்கள் சாந்தி அடைய வேண்டும்.//

   எனக்கே நக்கலா ?... நண்பரே! உடுக்கை இழந்தவன் கையைதட்டி விட்டு பறித்துக்கொண்டோடுவதல்ல நட்பு. :). காலத்துக்கேற்ற நகைச்சுவை. ஆனால் சோகம்தான் கண்ணில் வருகிறது.

   விதை நாங்களும் எழுதுவோம். உதவி உயரத்திலுள்ளவனால்தான் செய்யமுடியும். உள்ளம் உவந்தால்தான் உதவி செய்யமுடியும். அடித்தா உதவிபெறமுடியும்.

  45. // Saraketha சொன்னது…//

   Brother... :D! Don't worry abot tracing me... I can take care of myself... ;)....

   As for others, this could be parochial view... that's their opinion and rebuking throguh healthy comments is welcome in blogging world. Therefore I'm much nonchalant about thiese comments.

   I dint mean this as a serious topic... There are more risky but interesting topics to write about,in Sri Lanka.Always Writing in a homogenius manner is boring, isn't it? I expected such comments as I got above. I dont take them as comeuppance but rewards for my writing. :)

   I dont care , even , if you come to me with a knife, since, whatever happens, you going to go back happily, after making a nice friend ..the bullet. Hope to c you hanging around here. Thanks for the visits and comments.

  46. lol...Did I say I will bring knife, when I meet u...lol

   நாங்க கத்தியைக் கண்டால் ஓடும் கூட்டம்

   To be frank, I have started to search u before this post

   It is because, I liked ur earlier posts, at the same time ur posts hv said u r mora man.. so i liked to knw(who r u??....bz i am also little interconnected with Mora)...

   But like our tamil cinema stories, we started fighting..lol... dont worry.(I am not a man to warn people who r hving differnt ideas)..

   U have gd Vocabulary in English...for reading ur last posts..I used onelook.com manytime man..(eg..comeuppance,nonchalant and so on)..hyo...r these english words??? really this s first time i saw them...(if u wish, can u post one post abt ur vocabulary building...)

   ok...if i meet u, I will introduce myself...
   finally I like to ask "Sorry" for all....

   Take Care

  47. @ Saraketha...
   Heeeeeeey! :D .... I'm a cool guy ,man. You should have imagined me as a choleric boor, probably after reading this post. Anyway , you wont beleive that ,actually, I'm a funny, affable person with frivolous conduct.

   Esoteric Vocabulary? .... Man! Those are the most frequently used words in magazines,books and papers... even in our daily news.... Read...Read ...Read.... and use it. But I'm not good at complicated english and deep grammer. :(

   Anyways...... thanks for the visit. Forget the past. Keep yourself up! May god be with you! :)

  48. This comment has been removed by the author.
  49. This comment has been removed by the author.
  50. This comment has been removed by the author.
  51. //Triumph சொன்னது…
   anne, an idotic friend of mine has commented...//

   அம்மாடி ஆத்தாடி... நண்பன் ஒருத்தன் போன் பண்ணிச்சொன்னான்... டேய் கோமண்ட பார்ரா... உண்ட தங்கச்சி ப்ளாக்குக்கே சூனியம் வச்சுட்டாள் எண்டு.... வந்து அவசரஅவசரமா பாத்து பதிவை இனாக்டிவ் ஆக்கினது...
   அவர் வேணுமெண்டு சொல்லேல்லத்தானே? தவறுதலா வந்திட்டுது போல... ஆனா தனிப்பட்ட ரீதியில ஒரத்தரின்ட மனசு நோகிற மாதிரி பேசுறது பொம்பிளைக்கு அழகெண்ட மாதிரி தோணேல்ல எனக்கு.....
   அந்த வானரத்தை நான் கேட்டதா சொல்லுங்கோ...அதுதான் உங்கட ப்ராந்து.. சொறி ப்ரெண்டு :)

  52. This comment has been removed by the author.
  53. ஹா...ஹா...ஹா...ஹா...
   கலக்கிட்டீங்க

  54. //காரணம் அவனுடைய சந்தோசமான தருணங்களில் தானும் இருக்கவேண்டும் என்ற பொசசிவ்நெஸ் தான்;. உண்மையான தமிழ் மனைவிக்கு அப்படி இருக்கும்.//
   அப்ப இங்கிலீஸ் மனைவிக்கு எப்படி இருக்கும்..