பீப்பீசீ


  வேலைநேரத்தில் வாசித்த நெட்செய்திகள் பாரமாய் அழுத்த…

  இருள் கவ்விய மனத்துடன் சாய்மனையில் சாய்ந்தேன்……

  கண்ணை மூடினால் ஏதேதோ ஞாபகங்கள் வந்து வலியூட்டின….

  எதற்கும் உதவாத சிறுக்கன் நீ என்று அவை எள்ளி நகையாடின….

  அது உண்மைதான் என்று உள்ளுணர்வும் ஆமோதிக்க

  இயலாமை சுயத்தின் இருக்கையை கபளீகரம் செய்துகொண்டது….…  சிந்தனையை திருப்பும் நோக்குடன் எதையாவது வாசிக்க எண்ணி

  சுற்றுமுற்றும் தேடினேன்….

  எங்கேயோ பார்சல் சற்றி வந்த அரசசார்புப் பத்திரிகைப்பக்கமொன்று…

  கையில அகப்பட்டதை எடுத்து வாசித்தேன்…. அது

  ஊடகசுதந்திரம் நாட்டில் இல்லையென்று விசமிகள் கதை பரப்புவதாக

  கண்டனம் தெரிவித்திருந்தது…

  மகாராசா தன்மண்டையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டதாயும்..

  பத்திரிகையாசிரியர்கள் தங்களைத் தாங்களெ அடித்துக்கொள்வது போலவும்…

  நம்புவது போல எழுதியிருந்தது….

  வெற்றி நடைபோடம் அரசாங்கத்தின்

  ஒவ்வொரு துணிக்கைச் செய்தியும் மக்களைச் சென்றடைவதாயும்

  மக்கள் அதையிட்டு மகிழ்ச்சியடைந்திருப்பதாயும்…

  பரவசப்பட்டிற்று….

  யுத்தம் நடைபெறாத நாடுகளை விட தம் நாட்டிலேயே…

  மக்களுக் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாய்

  கூறி முழங்கிற்று….

  எனக்கு நானே சிரித்தபடி கவலையாய்க் கண் மூடினேன்….

  கடவுளே! எல்லாம் விரைவில சரியாக வேணும்….

  மங்கலக்குறியாய்…..

  பக்கத்து வீட்டுக்காரன் ரேடியோவில் நாதஸ்வர இசை…

  கம்சத்வனி கமகமத்தது…

  கவலையை மறந்து ரசிக்க ஆரம்பித்தபோது ஒலித்தது….

  நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது லண்டன் பீபீசியின் தமிழோசை..

  இலங்கைக் கண்ணோட்டம் கேட்டீர்கள்….

  13 Responses

  1. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருப்போம் தோழா..

  2. சில காலம் முதலில் உயிரையாவது சேமிப்போம் என்று சொன்ன நண்பன் அதையும் மறந்து எழுதுவது, நம்ப மறுக்கிறது மனம். ஆனாலும் புரிகிறது உண்மை உணர்வு.

  3. பீப்பீசிக்காரனையும் நாடு கடத்தப்போகினமாம்.

   முன்கூட்டிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  4. @ டொன்லீ... கார்த்தீ... பாண்டியன்சேர்...
   வருகைக்கும் கவலையை வெளியிட்டமைக்கும் நன்றி..

  5. //வானம்பாடி சொன்னது…

   சில காலம் முதலில் உயிரையாவது சேமிப்போம் என்று சொன்ன நண்பன் அதையும் மறந்து எழுதுவது, நம்ப மறுக்கிறது மனம். ஆனாலும் புரிகிறது உண்மை உணர்வு....//


   அப்ப பொதுச்சனம் பெரிசா சாகேல்ல... இப்ப அதுமட்டும்தான் சாகுது....
   நானும் ஒரு பொதுமகன்தான்....
   அந்த சனம் எல்லாம் அழுது குழறுறதைப்பாக்க தாங்கமுடியேல்ல...
   அதுதான் ஓரளவு சாடைமாடைக்குதன்னும் எழுதுவமெண்டு வெளிக்கிட்டன்...
   பல நண்பர்கள் போன் பண்ணி அதை எழுது இதை எழுது என்று வேண்டும்போதெல்லாம்
   எல்லாருக்கும் அந்த வலி இருப்பதை உணரந்து கொண்டேன்....
   எனது ஆக்கங்களை எனது நலன் கருதி தணிக்கை செய்து உதவும் நண்பனுக்கு
   (அவரும் ஒரு திறமையான பதிவாளர்)
   இச்சமயத்தில் நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்...
   வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் வானம்பாடி...

  6. //ஆதிரை சொன்னது…

   பீப்பீசிக்காரனையும் நாடு கடத்தப்போகினமாம்.

   முன்கூட்டிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.//

   வாங்கோ குசும்புடன் கூடப்பிறந்த ஆதிரை.. :D

   நேற்று BBC கேட்டியளோ? பீப்பீ வாசிக்கேல்ல...
   அப்பவே யோசிச்சனான்.... பீப்பீ கசட்டு முடிஞ்சிருக்கவேண்டுமெண்டு...
   அதுதான் மாற்றுவழியை தேடி பாத்திருப்பாங்கள்....
   பீப்பீக்கசட்டு தேடுற நேரம் அவனையே துரத்திவிட்டால் கரச்சல் ஒழிஞ்சுதெண்டு....
   நிருபருக்கு விசாக்குடுக்கிறாங்கள்..
   போட்டுத்தள்ளாம விட்டவரைக்கும் புண்ணியமெண்டு
   ஓடிப்போய் அங்கன அப்பிள் புடுங்கிற வேலையப்பாக்கட்டும் பயபுள்ள...

  7. ஆ.... மறந்துட்டன்.....
   அனைத்து வாசகர்களுக்கும்
   இலங்கை...
   சனநாயக...
   சோசலிச..
   குடியரசின்....
   61வது....
   சுதந்திரதினத்தையொட்டி ....
   அதை மகிழ்ச்சியாக வீட்டுக்குள் இருந்து கொண்டாட...
   அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....

   எதுக்கும் பொலிஸ்பதிவு கிடக்கா எண்டு பாத்துக்கொள்ளுங்கோ....
   விடியல வாழ்த்துச்சொல்ல வந்தாலும் வருவின...
   என்ன நான் சொல்றது... :D

  8. This comment has been removed by a blog administrator.
  9. புல்லட் எப்பிடிச் சுகம்?? உதே போலத்தான் நான் முந்தி ஊரிலை இருக்கும் போதும் ஒரு றேடியோவிலை செய்தி கேட்கிறனான். அதுக்குப் பேர் இலங்கை ஒழிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனம். அது தொடர்பாகவும் ஒன்று சொல்லுறவை. தெரியுமோ?? இதைப் படியுங்கோ.

   பூலோகத்தில் பொய் களவு சூது வாது எல்லாம் நிறைந்து விட்டன. பூலோக பிரதி நிதி ஒருவர் இறைவனிடம் செல்கின்றார்.

   இறைவா நமது தேசத்தில் பொய்யும் புரட்டும் புரண்டோடுகிறது. நீ கண்டும் காணாதும் போல இருக்கிறாயே என்று அவர் இறைவனிடத்தில் நொந்து கொண்டார்.

   பக்தா, கவலை அறு. அங்கு நடக்கும் எல்லாவற்றையும் நான் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று இறைவன் சொல்ல எப்படி இறைவா என்கிறார் பக்தர்.

   வா என்று அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கின்றார் இறைவன். அங்கே ஒரு சுவர் முழுக்க சிவப்பு விளக்குகள்.

   பக்தருக்கு எதுவும் புரியவில்லை. ஆச்சரியத்தடன் அவர் இறைவனைப் பார்க்கின்றார். இறைவன் விளக்கம் கொடுக்க தொடங்கினார்.

   பூலோகத்தில் யார் பொய் சொன்னாலும், அவர்கள் சொல்லும் பொய்யின் அளவுக்கேற்ப இங்கிருக்கின்ற சிவப்பு விளக்குகள் எரியும். அதன் படி நான் அறிந்து கொள்வேன் என்கிறார் இறைவன்.

   திடீரென்று அங்கிருந்த அத்தனை சிவப்பு விளக்குகளும் எரியத் தொடங்கின. பக்தருக்கு குழப்பம்.

   இறைவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு அமைதியாக சொன்னாராம். வேறொன்றுமில்லை. இலங்கை என்கிற நாட்டில் அவர்களுடைய அரச வானொலியில் இப்போது மாலைச் செய்தி ஆரம்பித்திருக்கிறது. செய்தி முடியும் வரை அத்தனை சிவப்பு விளக்குகளும் எரிந்து கொண்டுதானிருக்கும். ??????

  10. //இலங்கை ஒழிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனம்.//
   நானும்தான் கேட்டிருக்கன்...

  11. @ கமல் , கவின்:

   கதை சூப்பர்… உதைத்தனியா ஒரு பதிவாப்போட்டிருந்தா கமண்டடிச்சு ஒரு ரெக்கோடே வைச்சிருக்கலாம் கமல்
   நான் வாயைத்திறக்கேலாது….
   ஓல்ரெடி மிரட்டல்கள் வந்தாச்சு….
   இனி அடக்கித்தான் வாசிக்கவேணும்…
   இல்லாட்டில்; பிறகு நான்தான் ஒளிஞ்சு மறைஞ்சு திரியவேணும்…..
   கடவுள் கூட இத்தரைக்கும் பல்பிண்ட ப்யூசைப்புடுங்கிப்போட்டுட்டு
   “அது ஒரு சுத்தமான நாடு , பாத்தீங்களோ பல்பு ஒண்டும் எரியேல்ல”
   எண்டு அறிக்கை விட்டிருப்பார்…
   காரணம் அங்கயும் வெள்ளை மயில் , வெள்ளை எலி , வெள்ளை சிங்கம் எண்டு கனக்கத்தில திரியுறாங்களாம் இனம் தெரியாத நபர்கள்….
   கடைசியாப்போய்ச்சேர்ந்த லசந்த அங்க ஒரு பேப்பரில ரிலீஸ் பண்ணியிருக்கார்