துடிக்கப் பதைக்கச் சமைப்போம் வாங்க....

  அடப்பாவி மக்கா…. உனக்கு கலியாணம் ஆகப்போகுதா….?
  வெரிகுட் வெரிகுட்…
  அப்புறம் ..? என்னது இன்னும் சமைக்கப் பழகேல்லயா?
  ஏம்பா? தெரியாமத்தான் கேக்கறேன்… உனக்கு அடி உதை வாங்காம வாழணும்னு ஆசையில்லயா என்ன?
  சரிசரி அழாத… நானிருக்கன்… கவலய வுடு…..
  உனக்கு ருசியா கலவாய் மீன் கறி செய்யுறது எப்பிடீன்னு அண்ணன புல்லட்; … நான் சொல்லித்தாரேன்…. கவனமாக்கேட்டுக்க என்ன?

  “நாளைலேருந்து நீதான் சமைக்கணும்…...
  எங்கினாச்சும் உப்பு சப்பு குறைஙஞ்சுது…டவுசர் கழண்டுறும் ஆமா” ன்னு மனுசி எச்சரித்ததும்
  விரைவாக ஓடிச்சென்று மீன்காரனிடம் அடுத்தநாள் ஒரு பெரிய கலவாய் மீனை உயிருடன் கொண்டு வருமாறு வேண்டிக்கொள்ளவும்….

  அடுத்தநாள்….
  உங்கள் கன்னிச்சமையலாய் கலவாய்க்கறி செய்யும் நாள்…
  உயிர்கலவாயை உப்பு நிரில் உயிருடன் ஊறவிடவும்….
  அது நீந்தித்திரிவதற்கு ஏதுவாய் பெரியபாத்திரத்தில் இடவும்…
  பிறகு அடுப்பைப்பற்ற வைக்கவும்….
  அடுப்பின் மேல் சட்டியொன்றை வைத்துச்சூடாக்கி அதனுள் நல்லெண்ணெய் விடவும்…
  கொதிக்கும் வரை பாரத்து நிற்கவும் …
  எண்ணெய் கொதித்துவிட்டதா என்று அறிய
  மாமியாரைக் கூப்பிட்டு அவர் மண்டையில் சிறிது ஊற்றிப்பாரக்கவும்…
  அவர் வுடும் சவண்டின் அளவைவைத்து வெப்பநிலையை அறிந்து கொள்ளலாம்…(நவீன வெப்பமானி)
  எண்ணெய் கொதிக்கும் அறிகுறி தெரிந்ததும் மாமி மற்றும் மனைவியை சாப்பாட்டு மேசையில் காத்திருக்குமாறு அழைக்கவும்…
  பாத்திரத்துள் நீந்திக்கொண்டிருக்கும் கலவாயை குறிவைத்துப்பாய்ந்து பிடித்து
  கரபுரவென்று அதன் செதிலை கொகனட் ஸ்கிறேப்பரால் நீக்கவும்….
  உங்களுக்கு அதற்காகத் தரப்படும் நெரம் வெறும் 15வினாடிகள் மாத்திரமே…
  கடினமென்று தோன்றினால்
  வேகமாக செய்வதற்கு உங்கள் மாமனாரின் சொடுகு மண்டையில் தேய்த்துப்பழகவும்…
  செதில் நீக்கிய மீனை மறுபடியும் தண்ணீருள் பொட்டுவிடவும்..
  அது உயிருடன்தான் இருக்கிறதென்பதை ஸ்டெதஸ்கோப்பொன்றை வைத்து அறிந்து கொள்ளவும்…

  இப்போது ஆபரெசன்..
  மீனை மறுபடியும் பிடித்து வயிற்றுப்பகுதியை கத்திரிக்கோலால் கிழித்து குடற்பகுதியை அகற்றவும்…
  பிறகு மீனின் தலைப்பகுதியை ஈரமான துணியால் சுற்றவும்…(கண்டபகுதியில் கடித்தவைத்துவிடுமென்பதால்)
  பிறகு அப்படியே தலைப்பகுதியில் பிடித்துச்சென்று...
  கொதிக்கும் எண்ணெயில் மீனின் தலைதவிர்ந்த ஏனைய பகுதிகளைப்பிடிக்கவும்..
  இத்தனையும் செய்ய உங்களுக்கு தரப்படும் கால அவகாசம் 40 வினாடிகள் மாத்திரமே..
  30விநாடிகள் பொரிந்த பின்பு…
  தட்டில்வைத்து…
  வீணி வடியக்காத்திருக்கும் மனைவிமாமியாரிடம் எடுத்துச் செல்லவும்….
  பிறகு பாருங்கள் நடக்கும் அதிசயத்தை…

  செய்முறை விளக்கத்தை தருகிறார் என் யௌவனகால யாலுவா . யசூசி அக்காசி…  உதோட ஒண்டில் உங்களுக்கு டைவோஸ் கிடைக்கும்…
  அல்லது சமையலிலருந்து விடுதலை கிடைக்கும்… இல்லாமல்
  நல்லாயிருக்குதென்று மனுசி சொன்னால்…
  அடுத்தமுறை என்னுடைய பால்ய நண்பன் பாகிமூன்
  ஆட்டுக்குட்டியை இப்படி சமைப்பது பற்றி செய்முறை விளக்கமளிப்பார்…

  31 Responses

  1. அடேய் பொடியா! நீ வலு கெட்டிக்காரன் தான். என்ர மனிசிட்டையும் நானும் எத்தினையோ நாளாய்க் கேட்டுப் பார்க்கிறன். எனக்கு மீன் கறி வைக்கிறது எப்பிடி என்டு சொல்லித் தாவன் என்று. அவள் அதுக்கு அது பொம்பிளையளின்ர கலை என்று சொல்லி என்னை ஏக்காட்டினாள்.. நீ தானப்பு நல்ல மனுசன் உலகக்திலை..உப்பிடி நிறையச் சமையல் வேலையளோடை தொடர்ந்தும் வந்தா ஆண் வர்க்கமும் அபிவிருத்தியடைஞ்சிடுமெல்லே???? சமையலிலை....

  2. This comment has been removed by the author.
  3. புல்லட்..நாங்கள் இஞ்சால படிக்க வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமையலில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டோம்..ஆகவே எனக்கு இதெல்லாம் ஜூஜூபி...

   சமையல் தெரிந்திருப்பது அவசியம்..ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும்..:-)

  4. பேசாமல் உங்க பேரிலுள்ளதை அதன் மேல் பாய்ச்சியிருக்கலாம்!!!!

  5. //சக்(ங்)கடத்தார் சொன்னது…
   எத்தினையோ நாளாய்க் கேட்டுப் பார்க்கிறன். எனக்கு மீன் கறி வைக்கிறது எப்பிடி என்டு சொல்லித் தாவன் என்று. அவள் அதுக்கு அது பொம்பிளையளின்ர கலை என்று சொல்லி என்னை ஏக்காட்டினாள்..//

   எணயப்பு உனக்கு ஒரு மகளிருந்துதெண்டால்....
   உண்ணானை ஒரு அஞ்சியம் சீதனம் வாங்காமல் அவளைக்கட்ட நான் ரெடி...
   ஆனா ஒரு கொண்டிசன்...
   அவளும் சமைக்கிற ரகசியத்தை அவளோடயே வைச்சுக்கொண்டிரவேணும்..
   என்னத்தொந்தரவு பண்ணப்படாது....
   என்ன நான் சொல்லுறது :D

  6. //Triumph சொன்னது…

   Grrrrrrrrr,,,,,,,,,,,,//

   சரியாப்பசிக்குதோ...
   கர்புர் எண்டு வயிறு சவுண்டு விடுது பிள்ளைக்கு..

   :D சும்மா பகிடிக்குதானே ;) நானிப்ப நல்லபிள்ளை..
   அவா சோறு வச்சா நான் மற்ற அடுப்பில பருப்பு வைப்பன்...
   எல்லாம் சரிசமன்... ஓகேதானே... :D

  7. //’டொன்’ லீ சொன்னது…

   புல்லட்..நாங்கள் இஞ்சால படிக்க வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமையலில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டோம்..ஆகவே எனக்கு இதெல்லாம் ஜூஜூபி...//

   அடக்கடவுளே.. இதெல்லாம் ஜூஜூபியா?
   உங்களையெல்லாம் யாழ்ப்பாணம் திரும்ப விடக்கூடாது...
   ஓடுற மாட்டில ஏறி இருந்து அதையே சாப்பிடக்கூடியாக்கள்...
   சிங்கப்பூரில ஏதாவது சீனத்து அபூர்வபறவையை சந்திச்சனீங்களோ?
   :D


   // சமையல் தெரிந்திருப்பது அவசியம்..ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும்..:-)//

   ஏனப்பன் ஏதாவது சிங்கப்பூர் மகளிர் மன்றத்தில கௌரவ உறுப்பினராச் சேந்திட்டீங்களோ...
   பாசம் பொங்கி வழியுது...
   சும்மாச்சொன்னான்... டொன்லீ சொன்னாச் சரிதான்... :D

  8. //9-west சொன்னது…

   பேசாமல் உங்க பேரிலுள்ளதை அதன் மேல் பாய்ச்சியிருக்கலாம்!!!!
   //

   ஓமோம்... ஏன் வெறும் புல்லட்டு...ஒரு வெடிகுண்டு இருந்தா அதையும் பாவிக்கலாம்
   அல்கைதா... அலிபாபான்னு எங்கயாவது இருந்து கிளம்பி வாறாங்களோ கமண்ட் அடிக்க...
   :D சும்மா சொன்னேன்... வருகைக்கு நன்றி... அடிக்கடி வாங்க...

  9. புல்லட் கலக்குறீஙகள். எனக்கு ஒரு சட்டிக் கறி வேணும்?? நீங்கள் சமைக்கிறதை சாப்பிட்ட ஆட்கள் எல்லாம் இப்ப எங்க?? இருக்கினமோ??

  10. நிச்சயம்....... டைவர்ஸ்தான்.

  11. எழுத்து நடையைபாத்தா ஈழத்து காரன்மாதிரி தெரியலையே......

  12. This comment has been removed by the author.
  13. This comment has been removed by the author.
  14. ஐயோ.......... பார்க்கவே கொடூரமாக உள்ளது!

  15. புல்லட் பாண்டி சொன்னது…
   எணயப்பு உனக்கு ஒரு மகளிருந்துதெண்டால்....
   உண்ணானை ஒரு அஞ்சியம் சீதனம் வாங்காமல் அவளைக்கட்ட நான் ரெடி...
   ஆனா ஒரு கொண்டிசன்...
   அவளும் சமைக்கிற ரகசியத்தை அவளோடயே வைச்சுக்கொண்டிரவேணும்..
   என்னத்தொந்தரவு பண்ணப்படாது....
   என்ன நான் சொல்லுறது :D//


   பொடி என்ன ஆளையே காணேல்லை...என்ன சுதந்திர தினம் சூடு பிடிக்குது போல? நீரும் சிங்கக் கொடியோடை கலக்குறீராமே? தம்பி மகளைத் தந்து தான் ராசா சமையல் கற்க வேணும் என்டால் உண்ணாணை உந்த அஞ்சியத்து அடுப்படி வேலை எனக்கு வேண்டாம். எங்கையாவது குத்த வாற குதிரையின்ரை கொம்பை ஆரும் சீவி விட்டதாக் கேள்விப் பட்டிருக்கிறீர்ரோ?? அது போலத் தான் என்ர நிலமையும் ஆகும் மோனை??

  16. வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

  17. //கமல் சொன்னது…

   புல்லட் கலக்குறீஙகள். //

   நன்றி கமல்…
   உண்மையச்சொல்லப்போனா இந்தமுறை நானொண்டையும்; கலக்கேல்ல கொஞ்சம் பொரிச்சிருக்கிறன்…

   //எனக்கு ஒரு சட்டிக் கறி வேணும்?? //

   ஏன் உங்களுக்கு ஏதாவது காதல்தோல்வியோ?
   தற்கொலை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் தெரியுமோ?

   //நீங்கள் சமைக்கிறதை சாப்பிட்ட ஆட்கள் எல்லாம் இப்ப எங்க?? இருக்கினமோ??//

   இருக்கினம் இருக்கினம்…
   தொடர்ந்து மூண்டு நாளா இருந்துகொண்டே இருக்கினம்….
   ஒருத்தற்ற வீடடிடல கொமேட் உடையுற ரேஞ்சுக்கு போயிடுச்சாம்…
   ஆனால் ஆள் இன்னும் நிப்பாட்டுறமாதிரி இல்ல…
   நிப்பாட்டுறதுக்கு ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்கோ…
   மனச்சாட்சி குத்துது….

  18. //கவின் சொன்னது…

   எழுத்து நடையைபாத்தா ஈழத்து காரன்மாதிரி தெரியலையே......//


   உங்களுக்கு எந்த மொழி வேணும் கவின்…
   நான் சேரித்தமிழ் .. சென்னைத்தமிழ்… கோவைத்தமிழ்..
   நெல்லைத்தமிழ் எண்டு எதுல கதைச்சாலும்
   வீட்ட எப்பவும் நாமணக்கும் ஈழத்தமிழ்தான்..
   ஆக்கங்களில் மலையாளம் தெலுங்கு இந்தி ஆங்கிலம்
   போன்ற மொழிகளை பயன்படுத்துவது ஒரு கிக்குக்காக..
   நானிங்கென்ன புதுசா சிவபுராணமா எழுதுறேன்…
   சும்மா ஒரு டைம்பாசுக்குதானே கவின்…
   உங்கட பின்னூட்டலுக்கு நன்றி கவின்…
   அடிக்கடி வாங்கோ என்ன ?

  19. //Triumph சொன்னது…
   Annoi,
   there are many spelling mistakes. what happened? got married? //

   விடிய கொஞ்சம் நேரம் கிடைச்சாப்போல அவசரஅவசரமா அடிச்சது…
   அதுதான் எழுத்துப்பிழை போல…
   அடுத்தமுறை ஒழுங்கா அடிக்கிறன் டீச்சர்..
   ஆனாலும் கலியாணம் கட்டினா(அதே ஒரு பெரிய மிஸ்டேக்கு) ஏன் ஸ்பெலிங் மிஸ்டேக் விடவேணும்? எனக்கு விளங்கேல்ல…   kandippaga u r going to get some pidari like my friend...//

   நீங்களே பிடாரி எண்டு சொல்லுற ரேஞ்சில ஒரு பெட்டை இருக்குதெண்டால்
   நிச்சயமா அது ஏதோ சூர்ப்பனகையின்ட வழித்தோன்றலாத்தான் இருக்கோணும்…
   அதயெல்லாம் கலியாணம் கட்டிப்போட்டு நானென்ன காலங்காத்தால மரதன் ஓடுறதே ஒவ்வொருநாளும்?
   ஏனிப்பிடியெல்லாம் சபிக்கிறியள்?
   உந்த சாபத்தாலதான் நேற்று நான் கண்ட வடிவான பிள்ளையொண்டு
   பொலோ பண்ணக்கிடையில மறைஞ்சிட்டுது…சே…

  20. //Yalini சொன்னது…

   ஐயோ.......... பார்க்கவே கொடூரமாக உள்ளது!//

   வாங்கோ யாழினி…
   இதெல்லாம் என்ன கொடுமை….
   கொடுமை நிறையக்கிடக்கு….
   எல்லாரும் திங்கிற சிக்கன் அதுவா சட்டில விழுந்த தற்கொலை பண்ணிக்குதா என்ன?
   ஊர்வழிய, பா பா… எண்டு கத்தி வளத்த கோழியையே தூக்கில போட்டு உரிப்பாங்கள்..
   அதுக்காகவெல்லாம் கதைக்க ஆளில்ல… தமிழரைப்போல…
   மனுசன் ஒரு பயங்கரமான மிருகம்… அவளவுதான்..

   மாயன் எண்ட ஒரு நாகரிகத்தை பற்றி படிச்சிருப்பீங்கள்…
   அவையின்ட கதைய வைச்சு அபோகலிப்டோவெண்டு ஒரு படமும் வந்தது…
   தெரியாட்டி சுவையாக ஒரு பதிவில தாறன் …
   அவையிண்ட முறையில ஒரு சமையல் இதோ….

   http://www.youtube.com/watch?v=GhLAb83oUNE

   (ps: don't watch,if you are too sensitve...)

   (அது சரி முதலில என்ன எழுதினனீங்கள்? எனக்கு மட்டும் ரகசியமாச் சொல்லுங்கோ..)

  21. //சக்(ங்)கடத்தார் சொன்னது…

   பொடி என்ன ஆளையே காணேல்லை...என்ன சுதந்திர தினம் சூடு பிடிக்குது போல? நீரும் சிங்கக் கொடியோடை கலக்குறீராமே? தம்பி மகளைத் தந்து தான் ராசா சமையல் கற்க வேணும் என்டால் உண்ணாணை உந்த அஞ்சியத்து அடுப்படி வேலை எனக்கு வேண்டாம். எங்கையாவது குத்த வாற குதிரையின்ரை கொம்பை ஆரும் சீவி விட்டதாக் கேள்விப் பட்டிருக்கிறீர்ரோ?? அது போலத் தான் என்ர நிலமையும் ஆகும் மோனை??//

   ஓமணையப்பு நேற்று புல்லா
   எங்கட ஜனாதிபதிண்ட பேச்சை திருப்பி திருப்பிப் பொட்டுப்பாத்து
   ஒவ்வொரு வரிக்கும் எழும்பி நிண்டு சலூட் அடிச்சுக்கொண்டிருந்தனான்... படு பிசி கண்டியளோ....
   அததான் தேசபக்தி தேசபக்தி எண்டுறது...

   என்னது குத்த வாற குதிரைக்கு கொம்பா?
   ம் அதை எங்ககாலும் கண்டா சொல்லுங்கோ...
   பிடிச்சு ஒரு கறிவைச்சுப்பாப்பம்...

  22. This comment has been removed by the author.
  23. This comment has been removed by the author.
  24. நல்லது....விவாகரத்து கிடைத்தால் உங்களுக்கு நல்லதுதான்... ஆனால் மாமியார் தலையில் சுடு எண்ணெய் ஊத்துவது போன்ற விடயங்களை பார்த்தால் சிறைசாலை போக வழிகள் தாரளமாக இருக்கு.......

  25. This comment has been removed by the author.
  26. @Triumph

   sorry அப்பன்...
   வேலை கூடவெண்ட படியால கமண்டுக்கு உடன உடன பதிலெழுத முடியேல்ல..
   //Annoooooooooooooooooooooooi,
   Here you go for Shalini's blog: http://linguamadarasi.blogspot.com/2009/01/blog-post_15.html//

   "ஆண்கள் பெண்களைக் கேவலமாய்த்தான் நடத்துகிறார்கள். அதை பெண்களும் அனுமதிக்கிறார்கள்....இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கூட. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
   எல்லாம் காரணத்தோடுதான். சாதாரணக் காரணங்கள் அல்ல. சில சுவாரசியமான, நியாயமான காரணங்கள்..."

   இதுதான் அந்த பதிவெண்ட கடைசி வரி... :D

  27. //Saraketha சொன்னது…

   நல்லது....விவாகரத்து கிடைத்தால் உங்களுக்கு நல்லதுதான்... ஆனால் மாமியார் தலையில் சுடு எண்ணெய் ஊத்துவது போன்ற விடயங்களை பார்த்தால் சிறைசாலை போக வழிகள் தாரளமாக இருக்கு.......//

   நல்லா வாய்நிறைய வாழ்த்துறீங்க எப்படி உங்களால மட்டும் மடியுது...
   சும்மா ஒரு பகிடிக்குச்சொன்னனான்...
   சாதாரணமா ஆம்பிளையளுக்கு மனுசிண்ட தாய்தேப்பன முக்கியமா தாயப் பிடிக்கிறதில்ல...
   என்னதான் நல்ல மனுசியாயிருந்தாலும் சரியான நரிக்கிழவி எண்டுதான் வெளில போய்ச்சொல்லவாங்கள்...
   அதுதான் அத்தகைய வாசகர்களை கவரும் நோக்கோட ;) எழுதினனான்.
   கடுப்பைக்கிளப்பும் பெண்களுக்கு எவ்வளவு அமோக வரவேற்பு தெரியுமோ?
   நான் யாரெண்டு தேடிக்கண்டுபிடிச்சு பாராட்டிக்குமிச்சுப்போட்டாங்கள்.
   கவலையென்னவெண்டால் எல்லாரும் ட்ரையம்புக்கு பயந்துதான் இங்காலுப்பக்கம் வாறேல்லயாம்... :D

  28. This comment has been removed by the author.
  29. ஆமாம் புல்லட் உண்மை தான் இலங்கையில் நடக்கும் கொடுமைகளே போதுமே, வெறென்ன வேண்டும்...........?

   ஆமாம் அதென்ன பெயர் "புல்லட் பாண்டி" .....?

  30. //Yalini சொன்னது…
   ஆமாம் அதென்ன பெயர் "புல்லட் பாண்டி" .....?//

   வழமையாக அந்த பெயரில்தான் நான் சட் செய்வது வழக்கம்… (இப்போது செய்வதில்லை)
   சட்டென்று ஏனைய சட்டர்களிகளின் கவனத்தை கவரும் பெயரது….
   மேலாக… நான் ஒரு வடிவேலு ரசிகன்…..
   அவ்ளோதான்…. :)