என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)

  நாளை இலங்கை நேரப்படி கும்மிருட்டில் கள்ளன் வருவது போல் வரப்போகிறதாம் புது வருடம்... பெயரை வேறு பயங்கரமாய் "விரோதி" என்று வைத்து கொண்டு வந்து கிலியூட்டுகிறது...... கடந்த வருடம் பிறந்த போது சாத்திரிகளின் புழுகுகளால் நிறைந்து வந்திருந்தது பத்திரிகை . தானை தடையுடைக்கும்... தமிழர் தலைநிமிர்வர்... அப்பிடி இப்பிடி என்று உறுமிக் கொட்டியிருந்தனர்.... இப்போது என்ன நடக்குதென்று எனக்கு புரியவில்லை... ஆகா புதுவருடம் என்று குதூகலித்த பலர் வீடுகளில் இன்று புற்றெழும்பி விட்டது... பட்டுச்சரிகையின் விலையில் படியரிசி கூட கிடைக்காத நிலையில் பரிதவிக்கிறனர் என் தமிழுறவுகள்...

  "ஆறரைக்கோடி இருந்தும் கூட ஒரு பிசாத்து இனம் பிச்சை போட கூட மறுக்கிறது... இதற்குள் அதிகாரம் பரவலாக்கம் எல்லாம் கனவுகள்... ஜெயலலிதா கூறியது போல தமிழகத்துககும் இலங்கைத்தமிழருக்கும் தூரம் அதிகமாயின் ஏன் இன்னும் இந்த தமிழை கட்டிப்பிடிச்சு அழவேணும்? பேசாமல் சிங்களவரோடு ஐக்கியமாகிவிடுவோம்..." பக்கத்து வீட்டு படித்த மனிதனின் கதையிது..

  உண்மையா வலிக்குது...

  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்மன்னன் இராவணன் தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களுடன் நல்லுறவைப் பேணிவந்தான்... அவர்களின் மன்னன் வாலியும் இராவணனும் நெருங்கிய நண்பர்கள்... இதனால் எரிச்சலடைந்த வட இந்தியர்கள் தென்னிந்தியாவை தம் ஆளுகையின் கீழ் கொண்டு வருவதற்காக வாலியின் முதுகில் குத்தி இராவணன் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி தம் படைப்பலம் முழுவதையும் பாவித்து இராவணனை கொன்றனர்... ஆட்சியை தம் பொம்மை துரோகி விபீசணன் கையில் கொடுத்து விட்டு சென்றனர்.. அப்போதே தமிழ் அழிந்திருக்கும்.. ஆனால் எம் முன்னோர் விடவில்லை... இவ்வளவு காலம் இழுத்து வந்துவிட்டனர்...


  இப்போது மறுபடியும் இராமாயணம் பாகம் இரண்டு அரங்கேற்றுகிறார்கள்... இம்முறை ஆட்சி கூனி கையில் இருக்கிறது... இராவணன் மீது சுக்கிரிவனை மோதச் செய்தவாறு மரத்தின் பின்னால் நின்று அம்பெய்கிறார்கள்...

  முடிவு இன்னும் சில நாட்களில் தெரியுமாம் ... இராவணன் தோல்வி முடிவு செய்யப்பட்டு விட்டதாம் ... :(


  நடப்பது நடக்கட்டும்

  இராமாயணம் எத்தனை பாகங்கள் நடந்தாலும் அதில் ஒன்றிலாவது இராவணன் வெல்வான் என்ற நம்பிக்கை எனக்குண்டு... நான் தமிழன் என்று சொல்வதி எம் குழந்தைகள் பெருமையடைவர் என்ற நம்பிக்கை எனக்குண்டு...

  அம்பாந்தோட்டை துறைமுகம் சீனரின் பாரிய ஆயுத கப்பல்களை தாங்கும் ஒரு நாள் வரும்.. அன்று தமிழினம் , துகிலுரியப்படும் கைகேயிகளையும் கூனிகளையும் தசரதர்களையும் கண்டு கை கொட்டிச்சிரிக்கும்... இந்த நம்பிக்கை எனக்குண்டு....

  தமிழனுக்கு எந்த அடியும் ஒரு மாத்திரமல்ல.. மீள வீரியத்துடன் சாதனை படைப்பது அவன் வரலாறு.. ஆனாலும் அதற்கு நாமும் பங்களிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்... ஆகவே ...

  உங்கள் எல்லாரிடமும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்..இந்த புதுவருடத்தில் நாம் ஒரு சிறு உறுதி செய்து கொள்வோம்... . கலப்படம் செய்யப்பட்ட தமிழை பாவிப்பதை குறைப்போம்... இராவணர் வெல்லும் வரை தமிழைக்காப்போம்... தமிழர் பாரம்பரியம் யாழ்ப்பாணத்தில் என்றும் வாழும் என்பதை உறுதி செய்து கொள்வோம்...


  சிறிது காலமாக நெட் பக்கம் வரவில்லை.. அதகால் ஏனைய பதிவுலக நண்பர்களின் பதிவுகளை வாசிக்கவோ பின்னூட்டமிடவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... அனைவரும் மன்னித்தருளவும்...

  மேலும் எனது இனிமையான பொழுதுகளில் ஒன்றாக பதிவுலகத்தில் செலவிடும் நேரத்தையும் மாற்றிய என் அன்புக்குரிய பதிவுலக பாச நெஞ்சங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)

  15 Responses

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
   தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
   www.ulavu.com
   (ஓட்டுபட்டை வசதிஉடன் )
   உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

   இவண்
   உலவு.காம்

  2. உங்களுக்கும் வாழ்த்துகள்...

  3. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்மன்னன் இராவணன் தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களுடன் நல்லுறவைப் பேணிவந்தான்... அவர்களின் மன்னன் வாலியும் இராவணனும் நெருங்கிய நண்பர்கள்... இதனால் எரிச்சலடைந்த வட இந்தியர்கள் தென்னிந்தியாவை தம் ஆளுகையின் கீழ் கொண்டு வருவதற்காக வாலியின் முதுகில் குத்தி இராவணன் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி தம் படைப்பலம் முழுவதையும் பாவித்து இராவணனை கொன்றனர்... ஆட்சியை தம் பொம்மை துரோகி விபீசணன் கையில் கொடுத்து விட்டு சென்றனர்.. அப்போதே தமிழ் அழிந்திருக்கும்.. ஆனால் எம் முன்னோர் விடவில்லை... இவ்வளவு காலம் இழுத்து வந்துவிட்டனர்...
   /////////
   புல்லட் அண்னா..இப்ப ராமயனம் தொடர்.. சன்ரீவில போடுறாங்க ஒருக்க பாருங்க ராவணனை எப்படி எல்லாம் கீழ்த்தரமா காட்டுறாங்க எண்டு!

  4. வாழ்த்துக்கள்... பாஸ் இல்ல இல்ல தல
   (உங்கள் எல்லாரிடமும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்..இந்த புதுவருடத்தில் நாம் ஒரு சிறு உறுதி செய்து கொள்வோம்... . கலப்படம் செய்யப்பட்ட தமிழை பாவிப்பதை குறைப்போம்)

  5. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  6. //உங்கள் எல்லாரிடமும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்..இந்த புதுவருடத்தில் நாம் ஒரு சிறு உறுதி செய்து கொள்வோம்... . கலப்படம் செய்யப்பட்ட தமிழை பாவிப்பதை குறைப்போம்//

   நல்லதொரு கருத்தை விட்டுச் சென்றுள்ளீர்கள் புல்லட். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...

  7. நீங்கள் இலங்கையில் எழுதப்பட்ட இராமாயணம் பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா புல்லட்? அதில் இராவணன் நல்லவனாகவே சித்தரிக்கப்படிகிறான். அது கம்ப இராமாயணத்திற்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்று. நான் நினைக்கவில்லை இலங்கை இராமாயணத்தில் தப்பொன்றும் இருப்பதாக!

  8. நான் என் வருகையைப் பதிவு செய்து விட்டு செல்கிறேன்... No further comments :-(

  9. நல்ல கருத்துக்கள்.. சிந்திக்க வேண்டியவை...

  10. நிஜமாகவா?..நான் ராவணன் கெட்டவன்னு இல்லை நினைச்சுட்டு இருக்கேன்...

   நம்ம மக்கள் அங்கயும் போயி இவங்க அரசியல் வேலையை காமிச்சுட்டாங்களா..

   எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ராவணனைப் பற்றி சொல்லப் படும் ஒரே நல்ல விஷயம் ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன் அப்டிங்குறது தான்

   எது எப்படியோ...தமிழ் வாழ்க...

   தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
   சிந்திக்க நல்ல விடயம் சொல்லி இருக்கிறீர்கள்.

  12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா..

  13. could you please post something which explains about nano technology...

  14. பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்...

   உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... :)

   சிறுவன்: கட்டாயம் எழுதுகிறேன்... நேரம்தான் இல்லை.. :(