இலங்கையில் சீனா பார்த்த வெடிகுண்டு

  இது ஏதோ அண்மையில் இலங்கையால் ரத்து செய்யப்பட்ட சீன ஆயுத இறக்குமதி சம்பத்தப்பட்ட பதிவு என்று நினைத்து விடவேண்டாம்... நண்பர் பாண்டியன் கூறியது போல கொஞ்ச நாளைக்கு சீரியஸ் இடுகைகள் வேண்டாம். எனக்கே வாசிக்க ஜகிக்கலை. கன்றாவியா இருக்கு…

  அதால மறுபடியும் அனுபவப்பதிவுகளுக்கு போகலாமெண்டு பாத்தா சரக்கில்லை… எதைடா எழுதுவம் என்று யோசிச்சா ரூம் மேட் சொன்னான் சினிமா விமர்சனம் எழுதேண்டா அப்படீன்னு… சரி சரி வேட்டைக்காரன் வரட்டும் ஒரு பெரிய ஹிட் காமெடிப்பதிவை போட்டிடலாம் எண்டு வெயிட் பண்ணாமல் கிட்டடியில் பார்த்த படங்களை விமர்சிக்கிறேன்..

  என்னுடைய பார்வை ஒரு சராசரி இளைஞனுடையது.. மனுசியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி சினிமாவுக்கு போகும் ஆப்பிழுத்த ஆசாமிகளுடையதல்ல.. ஆகவே பதிவை வாசித்து விட்டு சிவசிவான்னு கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் ஓட்டை போட்டு என்ஜாய் பண்ணுங்கள்..


  வெடிகுண்டு முருகேசன்
  சீனாவில் மருத்துவம் பயின்ற என் நண்பன் இருவார லீவில் இலங்கை வந்திருந்தான். சரி தவளை சூப்பும் கரப்பான் சிப்சும் சாப்பிட்டு ஒரு சுற்றுப்பருத்திருப்பானென்று சந்தோசமாய் சந்திக்கச் சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி.. ஏதாவது பூனைக்கறி அல்லது நாய்ச்சம்பல் ஒத்துவராமல் நான்கு வருடமாக பேதி புடுங்கியிருக்குமோ என்னவோ செத்துப்போய்ப் பத்துநாளான பல்லி போல சூம்பிப்போயிருந்தான் பயபுள்ள.

  சரி சரி .. வந்த பெடியனுக்கு நாம என்ன செய்யலாம் எண்டு கடுமையாக யோசிச்சதில் பேப்பரில் வந்த சினிமா அட் ஞாபகம் வந்தது.. கனகாலம் இருக்கும் அவன் தமிழ் சினிமா பாத்து என்று , அன்றுதான் கொன்கோட்டில் றிலீசாயிருந்த வெடிகுண்டு முருகேசனுக்கு நைட்ஷோ அழைத்துச் செல்ல ஏற்பாடாயிற்று.. வழியில் மண்டையப்போட்டுறுவானோ என்ற பயத்தில் கூடவந்திருந்த அவனுடைய தந்தையார் “பாத்து கவனம் தம்பி ” என்று அவனை கையில் தந்து விட்டு கண்ணீரும் கம்பலையுமாக விடை பெற்றார்.

  அந்த படத்திற்கு அழைத்துச் செல்ல காரணம் , முன்பு விடுப்பு தமிழ் சினிமா போன்ற பத்திரிகைகளில் ஏதோ வடிவேலுவுக்கு மேலாக பசுபதி பகிடி விட்டதில் வடிவேலு கடுப்பானதாக செய்திகள் வந்திருந்தது.. ஆகவே நல்ல சிரிப்பாக இருக்கும் என்றுதான் அந்த திரைப்படத்துக்கு அவனை அழைத்துச் செல்ல முடிவு சேய்தேன்.. நண்பர்களுடன் சேர்ந்து கண்ணீர் வரும்வரை சிரிப்பதில் இருக்கும் சந்தோசம் வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்? பத்து பேருடன் படமும் தொடங்கி வழமை போல எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் முடிவு பெற்றது . இனி படம் பற்றி பார்ப்போம்…  ஒரு தண்ணி வண்டில்காரன் , ஒரு மனநலம் சரியில்லாதபெண், ஒரு பொலீஸ்காரி , ஒரு வில்லன் பிரதர்ஸ் : இவைகள் தான் கதாபத்திரங்கள்.. தண்ணிவண்டில்காரன் அந்த மனநலம் சரியில்லாத பெண்ணை காப்பாத்துவதால் பொலிஸ்காரி அவனை காதலிக்க இந்த பிரச்சனைக்குரிய பெண்மணியால் உள்ளே வரும் வில்லன் பிரதர்ஸ் என்னவானார்கள் என்பதுதான் கதை.


  ப்ளஸ்பாய்ண்ட்ஸ் : பசுபதி வழமைபோல நடிப்பை நன்கு வெளிப்டுத்தியிருக்கிறார். வடிவேலு வருமிடங்களில் அனேகமாக சிரிப்புதான். ஜோதிர்மயி (ஜோதிமயி* னு எழுதிட்டேன் ) இறுக்கமான காவல்துறை ஆடையணிந்து கவர்சியாக வருகிறார். ஒட்டுண்ணிப்பாத்திரங்கள் எல்லாம் தம் கடைமையை செவ்வனே செய்துள்ளன.

  மைனஸ் பாயண்ட்ஸ் : நாசமாப்போவார் பாடல்களிலயாவது அந்தப் பசுபதிக்கு ஒரு விக்கை வச்சிருக்கலாம்.. சகிக்கலை.. அந்தாள் மொட்டைத்தலையுடன் ஒரு பிகரை இழுத்து பிடித்து உருண்டால் பாக்கிறவன் கதி என்னாகிறது… இதுபோதாதெண்டு வந்திருந்த கிழடுகள் எல்லாம் அப்பிடிப்போடு மச்சான் என்று விசிலடிக்குது… எவ்வளவு பெரிய சமுதாயச்சீர் கேட்டுக்கு வழி கோலப்போகுது இது?  அடுத்து அந்த மனநலம் சரியில்லாத பெண்.
  நாம படம் பாக்க போறது கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா அஞ்சாறு பிகர்.. ஆர்ம்சோட ஒரு ஹீரோ… ஆளைத்தூக்கிப்போடுறமாதிரி ஒண்டிரெண்டு பாட்டு… அயன்ல வாறமாதிரி ஒரு பைட்டு.. பக்ரௌண்டில ஒரு நல்ல கதை.. இதுகளை எதிர்பார்த்துத்தான்.... தனிய கதைய நல்லா வைச்சிருந்து பாத்திரங்கள் பார்க்கும்படியா இல்லாட்டா எவன் போவான்? படத்தையே நாசமாக்குறது அந்தப் பிள்ளைதான்.. அது பார்க்கும் படியா இல்லை.. அதோட சைசும் ஆளும்.. எங்க போய்ப் பிடிச்சானோ தெரியேல்ல டிரெக்கடர்.. கறுமம்… அத்தோட விட்டிருந்தா பறுவாயில்ல அத அந்த வில்லன் பரதேசி ரேப் வேற பண்ணுறான்.. அசிங்கோரம்… ரேப் காட்சியின் ன் போது எனக்கு குமட்டிக்கொண்டுதான் வந்தது.. அங்கால ரெண்டு பேர் உவ்வேக் எண்டு வாந்தியே எடுத்திட்டாங்கள்.. அப்புறம் அது கர்ப்பிணியாகி வாந்தியெல்லாம் எடுத்து , அதை ஜோதிர்மயி ஏந்தி கடவுளே ... தம்மால முடியும் வரைக்கும் மூக்கைப்பொத்தி வாயப்பொத்தி பாரத்துக்கொண்டிருந்தவனெல்லாம் ஒரு கட்டத்தில் எழும்பி ஓடிய போது வாயிலில் ஒரு ட்ரபிக் ஜாம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது... நானும் ஓடுவம் என்று பக்கத்தில் பார்த்தபோது "நாமெல்லாம் சாக்கடைக்குள்ளயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்தவனாக்கும்" என்ற ரீதியில் அந்த இருட்டில் ஒரு சலனமுமின்றி அமர்ந்திருந்தான் சைனா டாக்டர்.. இனி என்ன செய்வது விதியே என்று நானும் அமர்ந்திருந்தேன்...


  மூன்றாவது …. போஸ்டரில் வடிவேலுவுக்கு பாதி இடம் கொடுத்தவர்கள் படத்திலும் அப்பிடியல்லோ செய்ய வேணும்? ஆவலாப்போன எங்களுக்கு ஒரு அரை மணி நேரம் கூட காட்சிதரேல்ல தலைவர்… ( உண்மையா டாக்டர் பட்டம் குடுக்கோணும் ஆனா பிறகு விஜய் இவருக்கு ஈகுவல் எண்ட மாதிரி வந்திரும் .. அதனால நோ ) அத்தோட கதையை சொன்ன விதம் ஏதோ சரியில்ல….ஆஸ்பத்திரிய காட்டி வில்லனோட குணத்தை மாத்த முயற்சி செய்யுறதெல்லாம் “போங்கடா! “ என்று சொல்ல வைக்குது.. வெடிகுண்டு முருகேசன் என்று பெயர் வந்ததுக்கு சொன்ன காரணம் சப்...


  மொத்தத்தில படம் ரெண்டாம் தரம் பாக்கிற மாதிரி இல்லை… பசுபதி மற்றும் வடிவேலும் காமெடிகள் மாத்திரம் படத்திற்கு பலம்… படம் பிரச்சனையில்லாம முடிஞ்சுதண்டு சந்தோசமா ( வழமையா நான் தியேட்டருக்கு போனா படம் பாதியில நிக்கும்…ரீல் பிய்யும் அல்லது புரொஜெக்கடர் உடையும் ஆக்குறைஞ்சது ஒப்பரேட்டருக்கு பேதியாவது புடுங்கும் ) எழும்பினால்.... பக்கத்தில சீனாப்பார்ட்டி நாக்கு வெளில தள்ளிப்போய் பெப்பரப்பே எண்டு மல்லாக்க கிடந்தது.. எனக்கு குப்பென்று வேர்த்து விட்டது…

  நம்ம தமிழ் சினிமாண்ட எபெக்டில பயபுள்ள ஒரேயடியா கபால மோட்சம் வாங்கிட்டானோ ? இப்ப நான் தேப்பனுக்கு என்ன பதில் சொல்லுறதெண்டு விக்கித்துப்போய் செய்வதறியாமல் கையிலிருந்த கோக் முழுவதையும் அவன் முகத்தில் ஊற்றினேன்… அலறியடித்துக்கொண்டு எழும்பிய பெடி என்ன படம் முடிஞ்சுதாவெண்டு கேட்ட போதுதான் எனக்கு மூச்சு வந்தது… நாசமாப்போவான் இன்டவெல்லோட நித்திரையாப்போட்டானாம்… எனக்கு மயக்கமே வந்து விட்டிருந்தது...


  பிகு: படத்தை இரண்டே நாளில் போறணை ரொக்சிக்கு மாற்றி விட்டார்கள்.. அநியாயக்காசு.. ரெண்டு நாள் வெயிட் பண்ணியிருக்கலாம்...

  5 Responses

  1. நல்ல நகைச்சுவை.

   :))

  2. படத்தின்ர பெயரையும் வடிவேலுவையும் நம்பி நல்லா ஏமாந்து போனன் நான். பெயருக்கேற்றா போல பசுபதிக்கு காமடியான ரோல் எண்டு நினைத்தவன் தொலைஞ்சான். பின்னேரம் 4.30சோவுக்கு போன நான் கிட்டதட்ட அரைமணித்தியாலம் தியட்டரில தூங்கிப்போனன். பறுவாயில்லை ரிக்கெட் காசு 120ரூபா என்றபடியால்.....

   // கொன்கோட்டில் றிலீசாயிருந்த வெடிகுண்டு முருகேசனுக்கு
   ரொக்ஸியிலதானே இது ஓடுது....

   // பசுபதி மற்றும் வடிவேலும் காமெடிகள் மாத்திரம் படத்திற்கு பலம்…பசுபதியின் காமடி சகிக்க கூடியதாகவா இருந்திச்சு.????

  3. நன்றி ஆ!

   கார்த்தி , முதலில் கொன்கொட்டில்தான் வெளியிட்டார்கள்... படத்தின் ஓட்டததைக்கண்டு இரண்டே நாளில் ரொக்சிக்கு மாற்றி விட்டார்கள்..

   //பசுபதியின் காமடி சகிக்க கூடியதாகவா இருந்திச்சு.????//

   ஏதோ எல்லாரும் சிரித்தார்கள் என்று எழுதிவிட்டேன்.. உண்மயா எனக்கு சிரிப்பு வரேல்லத்தான்.. :-)

  4. //நண்பர்களுடன் சேர்ந்து கண்ணீர் வரும்வரை சிரிப்பதில் இருக்கும் சந்தோசம் வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்? //

   Very true.

   Btw, ithukku thaan sollurathu, just watch cartoons. No tension :D. Have you watched Ice age 3. I watched twice in the cinema. Wanna watch again for a couple of times. But, my idiotic friends are not ready to watch.... Looking to download :D