பதிவில ஒரு gap விழாம பாக்கிறதுக்காக சின்னதா ஒரு மெயில காப்பி பேஸ்ட் பண்ணிருக்கேன்.. வர்ணனை வதை நம்மதுதான்.. ( போட்டோக்கள பெரிய சைசில கொப்பி பண்ண ஏதாவது வழியிருக்கா? தெரிஞ்சா சொல்லுங்களேன்? ப்ளீஸ்...)
இப்பிடி எல்லாம் போனா ஈராக்காரன் ஓடாம என்ன செய்வான் ?... பாவம் சதாமு..
கழுதை உதைக்கும்னு படிச்சிருக்கேன்.. இதென்ன கடிக்குது.. மேல சம்பந்தப்பட்ட கழுதையா இருக்குமொன்னு டவுட்டு... வரிக்குதிரை கூட சரிவராம மறுபடி ஜொயின் அடிக்க வந்திருப்பா நம்ம மிஸஸ் கழுத... காண்டாகி கடிச்சிருப்பார் மிஸ்டர் கழத... ஆனா பாவம் பொடியன் போசைப்பாக்கும் போது தான் சிரிப்பு சிரிப்பா வருது...


ஒரு வேளை இலங்கையில தயாரிச்சிருப்பாங்களோ?
இலங்கைக்குள்ள ஹெலி சேவிஸ் எல்லாம் புறொவைட் பண்ணுறாங்களாம்.. கவனமுங்கோ... உப்பிடி ஏதாவது சேவிசோ தெரியெல்ல..

வெட்டுறது புடலங்காயயும் பூசணிக்காயயும் ... அதுக்குள்ள பில்லடப்புக்கு குறைச்சலில்ல.. நம்மூர்ல வந்து பாருங்க ப்ரதர்ஸ் கிச்சன்ல அய்யாமாருங்க எப்பிடி வெட்டுறாங்கன்னு..

பட்டால்தான் தெளியும் பலருக்கு... காரில எழுதியிருக்கிறத கவனி மாமு...


பட்டால்தான் தெளியும் பலருக்கு... காரில எழுதியிருக்கிறத கவனி மாமு...

9 Responses
படங்கள் அருமை நண்பா படங்களும் விளக்கங்களும் அருமை நண்பா...
விளக்கங்கள் படங்களுக்கு மேலே வந்திருந்தால் இன்னும் அருமையாய் இருக்கும்...
நன்றி நண்பா பின்னூட்டத்துக்கு.. அடுத்த தடவை நீங்கள் சொன்னபடியே செய்து விடுகிறேன்... உங்களுடைய இடுகைகளை வாசித்தேன்..அடுத்த இடுகைக்கு பின்னூட்டுகிறேன்.. தற்பொது ரணகளமாக போகுது... பெரிய்ய பெரிய்ய தiலங்களெல்லாம் களத்திலிருக்கும் போது சின்னப்புள்ளதனமா மூக்க நீட்டி டோஸ் வாங்க பயம்மா இருக்கு..
உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது கடலேறி...
கடலேறியையும், உங்களையும் லோஷன் அண்ணா மூலமாகவே அறிந்தேன். கடலேறிக்கும் உங்களுக்கும் நன்றிகள்...
நிஜமாத்தான் கேட்குறீங்களா படத்தை பெரிசா போடுவதை? என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?
சரி, ப்ளாகில் நீங்கள் படங்களை அப்லோட் செய்தபின் எடிட் ஹச்டிஎமெல் இல்
இப்படி வரும்தானே
img border="0" src="http://2.bp.blogspot.com/_SN7Gtp8zUfw/SnU_e2NXgxI/AAAAAAAABQI/9PlM-zuYH18/s200/handmade_friendship_card.jpg"
அதில் s200ஐ s400ஆகவோ... அல்லது s800 ஆகவோ மாற்றிப்பாருங்கள்.
படங்களும் பதிவுகளும் நன்று . மேலும் தொடருங்கள். நட்புடன் நிலாமதி
நன்றி சந்ரு மற்றும் நிலாமதி...
நண்பர் ஆ : நன்றி நண்பா! பிரச்சனை அங்கல்ல.. அப்லோட் செய்யும் பொதே எவ்வாறு சற்று பெரிய சைசில் தோன்றுமாறு செய்வதென்பதே எனது கேள்வியாயிருந்தது.. ஏதாவது டெம்லேட் கோடில் மாற்றம் செய்ய முடியுமென நினைக்கிறேன்... இப்போதைக்கு பிக்சல் சைசை மாற்றி அதை டெம்பரரியாக சரி செய்துள்ளேன்... (உங்களுடைய மெதேட் சரிவரவில்லை இதழ்... ஏனென்று தெரியவில்லை படத்தை பெரிதாக்கி தனி வின்டோவில் காட்டும் பொது s1600 காட்டுகிறது.. ஆனால் கோடில் மாற்றினால் மாறுதில்லை)
பிரச்சனையை கண்டுபிடித்விட்டேன்... நானொரு மக்கு... ஏற்கனவே இருந்தது சைஸ்320 இல் அதை பெருப்பிக்க சைஸ் 400 அல்லது 800தான் போடமுடியும்... ஆனால் என்னுடைய பொடி பாட் 500 பிக்சலுக்கு மேல் விடாது(480 ஆக வரையறுத்துள்ளேன்).. அதை மறந்து போய் நான் பட்ட பாடு...ஹிஹி!
அட்டகாசப் படங்கள் அதிலும் ஹெலிப் படம் சூப்பர்.
ஏ அஸ்க்கு புஸ்க்கு அடுத்த பதிவில இன்னும் மார்க்கமான படங்களை போடுங்க!!!!
Post a Comment