கிசுகிசு


  விரைவில் கொழும்பு பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது.. பரபரப்பாக தகவல்கள் பரிமாறப்பட்டுவருகிறது...ஒளிந்திருக்கும் பதிவர்கள் அனைவரும் வெளியில் வருமாறு மிரட்டப்படுகிறீர்கள்.. பழைய பதிவர்கள் எவராவது வருகை தராதவிடத்து அவர்களுக்கு பின்னூட்டம் எதுவும் வராதவாறு சூனியம் வைக்கப்படுமென அனானிகள் சங்கத்தலை அனோனிமக்குட்டி சார்பில் பேச வல்ல அதிகாரி ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்... புதிய பதிவர்களுக்கும் கொட்டாவி விடுதல் கொரட்டை விடுதல்போன்ற பலப்பல புதுமையான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன... ஆகுவேஅவர்களும் நிகழ்வை கலந்து சிறப்பிக் முடியும்...

  இடம் தலம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.. இது தொடர்பாக லோசன் அண்ணாவை வரும் சனி தொடர்பு கொள்வதாக உள்ளோம்.... அவரின் உறுதிப்படுத்தலின் பின்பு உத்தியோக பூர்வ அறிவித்தல் வந்தி அண்ணரால் வெளியிடப்படும் ...


  மேலும் இலங்கைப் பதிவர்களுக்கு கிசுகிசு எழுதுவதற்கு கிசுகிசு பெயர்கள் வேண்டப்படுகிறது... திறமையுடையவர்கள் பின்னூட்டல் மூலம் தெரியப்படுத்தலாம்..

  இதுவரை கிடைத்தவை கீழே தரப்பட்டுள்ளன..... பின்வருவபவர்களளை கண்டுபிடிப்பவர்களுக்கு பதிவர் சந்திப்பில் பலபரிசுகள் காத்திருக்கிறன..

  1) பதிவர் சட்ட மகன் ,
  2) உப்புமா செய்ய பயன்படும் பதிவர்..
  3) பதிவர் சீ க்ளைம்பர் :
  4) பதிவர் வொமிட்டிய தேவர் ..
  5) மகிழுந்தில் தீ வைத்த பதிவர்
  6) இளம்பெண்கள் மூஞ்சிக்கு பூசும் பதிவர் ...
  7) பதிவர் ரவை, ....
  8) பதிவர் பசுத்திரை
  9) பதிவாட்டி ப்யுச்சர் யாப்பணய
  10) இனிய எதிர்காலம் தேடும் பதிவர்
  11) பிரகாசமான யூமலப் பதிவர்
  12) மாடுபிடிக்கும் பதிவர்..
  13) பதிவர் துருப்பிடித்த மகன்
  14) ஊசி போடும் மூத்த பதிவர்..
  15) அறை வாங்கிய சுபமான பதிவர்..

  தகவல்கள் சுடசுட தொடரும்..

  15 Responses

  1. சிலரைக் கண்டுபிடித்துவிட்டேன்.

  2. :-) கலக்குங்கள்...

  3. நானும் சிலரைக் கண்டு பிடித்துவிட்டேன். ஆனால் சொல்லமாட்டேன்...

  4. யாரையும் கண்டுபிடிக்கலீங்க

  5. நானும் என்னவோ ஏதோ எண்டு நினைச்சன்!!

  6. ஏனய்யா இப்பிடி?
   இதென்ன புதுக் கொடுமை?

   அது சரி.. ஒரு கிசு கிசு தெரியுமோ?

   எங்கள் நாட்டின் இளைய பதிவர் ஒருவர்.. ட்வீட்டும் இணையத் தளம் ஒன்றில் அழகான அ நடிகைக்கு வலை விரித்துப் பிழைத்துப் போய், மப்பும் மந்தாரமுமான ஹிந்தியின் மல்லி நடிகையிடம் மயங்கிப் போயிருக்கிறாராம்..

   அவவும் இவருடைய டுமீல் வெடிப் பாராட்டுக்களில் கிறங்கி விட்டாராம்.. ;)

   எப்பூடி?

  7. This comment has been removed by the author.
  8. டான்லீ: நன்றி...

   வந்தி சந்துரு குடுகுடு: சே வெட்கம் வெட்கம
   உங்களுக்கு க்ளூ தரப்டுகிறது..
   1) சட்டம்= law மகன் = son
   2)உப்புமா செய்ய பயன்படுவது ரவை.. துப்பாக்யில் சுடப்படுவதும் அதுதான்..
   3) sea=கடல் climber=ஏறுபவர்
   4)வொமிட்= வாந்தி (குறில் நெடில் எல்லாம் கண்டுக்கப்டாது.. பின்ன உப்பிடி எல்லாம் குங்காத்தனமா பெயர் வச்சா நாம எப்பிடி கிசுகிசு எழுதறது? நறநற)
   5)மகிழுந்து = car
   6) இளம் பெண்கள் வெயில் முகத்தை பாதிக்காமல் இருக்க சில lotion களை பயன்படுத்துவார்கள்..
   8) பசு = ஆ
   9) யாப்பணய = யாழ்
   10) இவர் ஒரு மட்ரிமோனியல் வெப்சைட் வைத்து பொதுமக்களின் இம்சையை கூட்டுபவர் ;)
   11)யு = நீ
   12) டெக்சாசில் மாடுபிடிப்பவர்களை இங்கனம் அழைப்பர்..
   13) மகன் = சன் ( துரு மாற்றமில்லை)
   14) ஒரே ஒரு டொக்டர் பதிவர்..
   15) இதுக்கெல்லாம் எப்பிடி க்ளு சொல்றதுன்னு புரியலை..

   தம்பி கார்த்தி கிசுகிசு எண்டவுடனே வருவீங்களெண்டுதான் அந்த தலைப்பு ... ஆனா சரியா வெக் ஓளட் ஆகல ...

   லோசன் அண்ண.. ரத்த களரி ஆயிடும் சொல்லிக்கிடக்கு... ஆனால் ஆப்பு முதலாவதா என்னில இறங்குமெண்டு கனவிலும் நினைக்கேல்ல.. எல்லாம் அந்த தொட்டுமுக்காலப் பெருமாளின் கருணை.. எண்டாலும் எங்யோ சாடையா புகை வாசனை வருவது மாதிரி கிடக்கு....

  9. நல்ல பக‌டி இது லோஷன் அண்ணா.

   நல்லா வேணும் புல்லட்டிற்கு!:)

  10. சின்னப்பிள்ளத் தனமா இல்ல இதெல்லாம் தெரியாமலா இருக்கிறம். நேற்றுவரை கண்டு பிடிக்கல இன்று கண்கொண்டு பிடிச்சிட்டமில்ல... (வேற என்ன உங்க க்ளூ தான் உதவி செய்தது... )

   இதெல்லாம் திட்டம் போட்ட சதி மாதிரி தெரியுது. பதிவர் சந்திப்பில் கவனமாக இருப்பது நல்லது ரவை...

  11. இன்னொரு பதிவரும் மலபார் நடிகைக்கு ட்வீட்டரில் ட்விட்டுகிறார்.

  12. யாழினி: வேணாம் நம்ம சைடுக்கு வந்துடுங்க...

   சந்துரு : க்கும் ... அது க்கெல்லாம் பேர் க்ளுவா? ஆன்சர்ப்பா !

   //இதெல்லாம் திட்டம் போட்ட சதி மாதிரி தெரியுது. பதிவர் சந்திப்பில் கவனமாக இருப்பது நல்லது ரவை...//அப்பிடியும் இருக்குமோ? ரவையைக்கண்டா எச்சரிக்கோணும்.. ;)

   வந்திண்ணா: அந்த பதிவர்ற வெளாட்டு தாங்க முடியல... நாங்கதான் சின்னப்பசங்க அடிபடுறம் எண்டால் அவரும் சறத்தை தூக்கிகட்டுட்டு குதிச்சு விழுந்து வீடு கட்டுறார்... ஆனா ஒரே சந்தோசம் அவரு விட்ட ராக்கெட்டெல்லாம் புஸ்வாணமாகிட்டுது.. அதிலும் அடுத்த ப்ராஜெக்ட பத்தி விசாரிச்சு விடுற ராக்கெட்டல்லம் பாத்து கேவிக்கேவி அழுறாங்க பசங்க.. இப்போதைக்கு நம்ம பக்கம்தான் காத்து வீசுது..ஹிஹி

  13. புல்லட்...

   டெக்ஸாஸில் மாடுபிடிப்பவர்களை இப்படி அழைப்பார்கள்... யோவ்...

   மாடு மேய்க்கிறவங்கய்யா..

   ஆனாலும் அவங்க தோற்றத்தை வைத்துத்தான் அப்படி அழைப்பார்கள்..

  14. ஒண்ணுமே புரியல உலகத்துல!

  15. பின்னுாரீங்க bullet...

   loshan anna நானும் கேள்விப்பட்டன் டீவிட்டி கதைய பற்றி...