காதல் காசு கடவுள் அழகு : கரச்சல்


  யாரோ பலர் பலவாரங்களுக்கு முன் என்னை ஒரு தொடர்ப திவுக்கு அழைத்திருந்தார்கள்.. எனக்கு என்னவென்றே மறந்து விட்டிருந்தது.. அடுத்த சனி போடவதாக இருந்த ஒரு பதிவுக்குநடுவில் இந்த பதிவு.. இன்று
  design simulation .. நடுநடுவில நிறைய நேரம் வரும்.. அதனாலஒரு கடமையை கழித்துக்கொள்ளுகிறேன்..

  முதலாவது காதல்:


  எனக்கு சின்ன வயதில இரந்து பெட்டையள காணும்போது ஒரு ஈர்ப்பு ஒண்டு வரும்..
  அப்ப
  ஆண் பெண் கசமுச சமாச்சாரம் எதுவுமே தெரியாது..
  ‌ஆனால் பெட்டையளோட கதைச்சா ஒரு கிளுகிளுப்பு..
  அப்புறம் வயசாக வயசாக உந்த கறுமம் எல்லாம் அறிஞ்சு காதல் எண்டால்
  என்ன எண்டதுக்கு டெபினிசன் தேட வெளிக்கிட்டம்..
  பத்தாம் ஆண்டு படிக்கும்போது வீட்டு ஓணர் (இடம்பெயர்ந்திருந்த காலத்தில) இன்ட பெட்டை அடிக்கடி வலிய
  வந்து கதைக்கும்.. நமக்கும் ஒரு ஈர்ப்பாயிட்டுது.. நல்ல வடிவான
  வெள்ளைப்பெட்டை .. கன முக அக்சன் எல்லாம் போடுது.. சரி இது காதலா?
  எனக்கு வந்திருப்பது என்ன இழவென்று எப்பிடி கண்டுபிடிக்கிறது?
  தெரிந்த அண்ணர் ஒருவரிடம் விசாரித்தேன்.. அவர்சொன்னார் அண்டைக்கு அவள பாக்காட்டா பசிக்காது..


  ஓகே ! டெஸ்ட பண்ணிட வேண்டியதுதானெண்டுட்டு அம்மாட்டை சொல்லியாச்சு காலமை
  சமைக்கப்படாது.. ” எல்லாரும் கடையில வாங்கி சாப்பிடுங்க நான் விரதம்..”

  இடம்பெயர்நது ஓடிக்கொண்டிருக்கும்போது ஒன்தவேயில ஒரு கிலொ அரிசிய சாப்பிட்டவன்
  விரதம் எண்டவுடன அம்மாவுக்கு அதிர்ச்சி..

  சரி எண்டு நான் ரூமுக்க பூட்டிட்டிருந்து உண்ணாவிரதம் ஸ்டாரட்..
  ஒரு காமணித்தியாலம் கழிய மெதுவா ரூமை விட்டு வெளில
  எட்டிப்பாத்தா எல்லாரும் கடையில வாங்கிட்டு வந்த பாலப்பங்களை சுத்தியிருந்து வெட்டுறாங்கள்..
  நறுக்கு முறுக்கெண்டு அவங்கள் சத்தம்போட எனக்கு கண்ணால கண்ணீர் வழியுது.. எப்பியாவது காதலை கன்பேம் பண்ணிடுவமெண்டுட்டு பல்லைக்கடிச்சிட்டிருந்தா அடுத்த மணித்தியாலத்தில அம்மம்மா வாறா..
  நேற்றையான்
  மீன்குழம்பு மண்சட்டியில சுடவைச்சு , பதமா முறுகின சுடு பாணோட..
  நோட்டீஸ் ஒண்டும் விடாமல் ஒன் த ஸ்பொட்டில காதல் கான்சல்..
  ”போடி நீயும் உன்ட மினுக்கியும் நமக்கு பாண்தான் முக்கியம்”


  (மீதிக்கதை இன்னும் சுவாரசியம் பிறகொரு பதிவில சொல்லுறன்)


  இப்பிடி பலகளம் கண்டு வந்த என் காதலுக்கான தேடல் இன்னும் ஒரு கொஸ்யன்
  மாக்கோடதான் நிக்குது.. தற்போதைக்கு என் விடை..


  ஒரு அவசர வேலையாக மனைவியுடன் பஸ்ஸில் நெடுந்தூரம் பயணிக்கிறீர்கள்.. சுற்றிவர
  சனநெருக்கம் புரியாத மொழி தெரியாத மனிதர்கள்.. மனைவிக்கு சாடையாக தலையிடி முகத்தில தெரிகிறது ஆனால் அவள் சொல்லவில்லை.. உங்கள் தோளில் மெதுவாக சாய்ந்து இன்னும் கனதூரமா என்று அவள் கண்ணுயர்த்தி
  கேட்கும்போது கூந்தலை தடவியபடி தலைமேல தலை சாய்க்கும் போது அடிமனதில் ஒரு
  கனமான உணர்ச்சி எழுமல்லவா உனக்கு நானிருக்கேன் என்று அதுதான் காதல்..

  அடுத்து காசு..
  உலக வாழக்கைய ரசிக்க காசு தேவை.. ஆனால் அந்த காசு உழைத்து பெற்றதாக இரக்கவேண்டும்..

  சீதனமாக பெற்று அதை என்ஜோய் பண்ண வெளிக்கிட்டால் பிறகு பஸ்ஸில
  போகும்போது பப்ளிக்கில பேன் தான் பார்க்கவேண்டிவரும் மனுசிண்ட தலையில..
  ”எருமை மாடு என்ற அப்பற்ற காசில ஆடம்மட்டும் ஆடிட்டு இப்ப என்னை பஸ்ஸில கூட்டிட்டு
  போ! சே..”
  காசு செய்யும் வேலையை பார்க்க பின்வரும் படத்தை பார்க்கவும் "
  before the devil knows you are dead"


  அடுத்து கடவுள்..
  கடவுள் ஆண்டு 1 படிக்கும்போது ஹீரோ.. ஆண்டு 10 இல ப்ரெண்ட்.. இப்ப ஒரு அநாநி..

  இந்த பிரபஞ்சத்துக்கு விடை கிடைக்கும் வரை விஞ்ஞானம் எவ்வளவுதான் ஆட்டினாலும்
  அவர் சீட்டு கொஞ்சம் பேம் ஆகத்தான் இருக்கும்..

  ஆனால் சமயப்புத்தகத்தில 11 ம் ஆண்டு வரைக்கும் படிச்ச கதையெல்லாம் புருடா.. அது
  மட்டும் உண்மை..

  கடைசியாக
  அழகு :
  எந்தப்பொருளும் கையில் கிடைக்கும் வரைக்கும் ஏதோ ஒரு கோணத்தில் அழகுதான் பெண்
  உட்பட..
  ஆகவே நானும் இப்போதைக்கு பலபேரு க்கு அழகு என்று இத்தால்
  அறியத்தருகிறேன்..


  என்னை இந்த தொடர்பதிவுக்கு அடைத்த அனைவருக்கும் நன்றி செலுத்தியவாறு அவசர
  அவசரமாக முடித்து கொள்கிறேன்.. நன்றி..

  26 Responses

  1. காதல் பற்றி கூறியதை வாசித்து ரொம்ப சிரித்தேன். அப்புறம் அந்த காதலலை கன்பேர்ம் பண்ண முயற்சிக்கலையா?

  2. அழகாக சொல்லி இருக்கீங்க நண்பா.. அருமை..

  3. //ஆனால் சமயப்புத்தகத்தில 11 ம் ஆண்டு வரைக்கும் படிச்ச கதையெல்லாம் புருடா.. அது மட்டும் உண்மை..//
   புருடா மட்டுமல்ல...திட்டமிட்ட சதி...

  4. உலக வாழக்கைய ரசிக்க காசு தேவை.. ஆனால் அந்த காசு உழைத்து பெற்றதாக இரக்கவேண்டும்..

   நல்ல .......

  5. பதிவிட அழைத்த நபரையுமா மறப்பீங்க..!
   அந்த பாவி நான் தான் ;)

  6. காதல் பற்றிய விடயங்கள் அழகு, கடைசிப் பந்தியில் டச்சிங்காக முடித்தது சொந்த அனுபமோ, காதலி மனைவியாக மாறிவிட்டார் அவ்வளவுதான்.

   //உலக வாழக்கைய ரசிக்க காசு தேவை.. ஆனால் அந்த காசு உழைத்து பெற்றதாக இரக்கவேண்டும்..//

   பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டிய வரிகள், அடடே பொன்னும் பணம் தானே.

   //சீதனமாக பெற்று அதை என்ஜோய் பண்ண வெளிக்கிட்டால் பிறகு பஸ்ஸில போகும்போது பப்ளிக்கில பேன் தான் பார்க்கவேண்டிவரும் மனுசிண்ட தலையில..//

   அப்போ 3 கோடி சீதனம் வாங்குபவர்கள் மனிசிக்கு பேன் பார்ப்பதுடன் அந்த பேன்களை மொத்த விலைக்கு விற்கவும் நேரிடும்.

   கடவுள் என்றைக்கும் கேள்விக்குரிய விடயம்.

   //ஆகவே நானும் இப்போதைக்கு பலபேரு க்கு அழகு என்று இத்தால் அறியத்தருகிறேன்..//

   ஓம் ஓம் சிலர் சொல்லக்கேள்விப் பட்டிருக்கின்றேன் நீங்கள் அழகு என.

  7. யோ வாய்ஸ் (யோகா)
   அப்புறம் அந்த காதலலை கன்பேர்ம் பண்ண முயற்சிக்கலையா? //

   அந்தநேரம் மறுபடி ஊர் திரும்பவேண்டி இருந்தது..அதனால கத்திரிக்காயை கான்சல் பண்ணிபுட்டேன்.. மறுபடி 4 வருசத்துக்கப்புறம் சுனாமி நேரம் அவளின் ஞாபகம் வந்தபோது போய்ப்பாத்தா அவள யாரோ வெளிநாட்டுக்காரன் கொத்திட்டு போயிட்டான்... வேற என்ன செய்ய ? துரோகி என்டு ஒரு கவிதைய எழுதி நானே பாடிட்டு எங்கட கம்பசில குடுத்து ப்பளிஸ் பண்ணிட்டு கொழும்பில வீடு இரக்கிற பெட்டையளா பாத்து சைட் அடிக்க ஆரம்பித்து விட்டேன்.. ஹிஹிஹி...

   உண்மைய சொலலப்போனால் இதுவரைக்கும் மனசை பாதிக்கும் அளவுக்கு யார்கிட்டயும் பழகேல்ல.. :)...

  8. கார்த்திகைப் பாண்டியன்
   அழகாக சொல்லி இருக்கீங்க நண்பா.. அருமை..//

   நன்றி சேர்... நீங்கள எழுதும் இடுகைகள் எல்லாம் வாசிக்க சுகம் தருபவை... நீங்கள் பின்னூட்டியது எனக்கு பெருமை... நன்றி

  9. யசோ...அன்பாய் உரிமையோடு கரன்
   காதல் - கடைசி para சூப்பர் //

   பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா.. உங்கள் பதிவு இரண்டும் அருமை.. தொடர்ந்து இடுகைகளை எதிர்பார்க்கிறேன்

  10. வாகீசன்
   புருடா மட்டுமல்ல...திட்டமிட்ட சதி..//

   ம்ம்

  11. பனையூரான்
   நல்ல .......//

   ஏதாவது கெட்வார்த்தையில வைதீங்களா? பரவால்ல நீங்கதானே சொல்லுங்க

  12. Mayooresan
   பதிவிட அழைத்த நபரையுமா மறப்பீங்க..!
   அந்த பாவி நான் தான் ;)//

   மன்னித்துகொள்ளுங்கள் நண்பரே.. பலர் அழைத்திருந்தார்கள்.. என்றாலும் உங்களுக்கு நன்றிகள்..

  13. வந்தியத்தேவன்

   காதல் பற்றிய விடயங்கள் அழகு, கடைசிப் பந்தியில் டச்சிங்காக முடித்தது சொந்த அனுபமோ, காதலி மனைவியாக மாறிவிட்டார் அவ்வளவுதான்.//
   கஜினி அசின் போல கனபேர் கதைகட்டிக்கொண்டு திரிகிறார்கள் .. கவனம்..

   //பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டிய வரிகள், அடடே பொன்னும் பணம் தானே. //
   ஓமோம் அதை பொறிப்பதற்கு இன்னும் 10 பவுண் கூடுதலாக வாங்கலாம்...

   //அப்போ 3 கோடி சீதனம் வாங்குபவர்கள் மனிசிக்கு பேன் பார்ப்பதுடன் அந்த பேன்களை மொத்த விலைக்கு விற்கவும் நேரிடும்.//
   அதுதான் நீங்கள் கொஞ்சமாவது குறைச்சு கேளுங்கோ...


   //ஓம் ஓம் சிலர் சொல்லக்கேள்விப் பட்டிருக்கின்றேன் நீங்கள் அழகு என.//

   கண்ணாடியை மாத்துங்கோ .. அழகான ஆக்கள மற்றவை சொல்லி தெரியவேண்டிய நிலை சில இடங்களில் பாதிக்கும்... ;-)

  14. உங்கள் பாணியில் மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்..... நன்றாக இருக்கிறது.
   வாழ்த்துகள்.

   //நோட்டீஸ் ஒண்டும் விடாமல் ஒன் த ஸ்பொட்டில காதல் கான்சல்..
   ”போடி நீயும் உன்ட மினுக்கியும் நமக்கு பாண்தான் முக்கியம்”//

   யார் என்ன சொன்னாலும் நீங்கள் பச்சை இலங்கைத் தமிழன் எண்டதை
   நிரூபிச்சிடியள் போங்கோ..........

  15. "//நோட்டீஸ் ஒண்டும் விடாமல் ஒன் த ஸ்பொட்டில காதல் கான்சல்..
   ”போடி நீயும் உன்ட மினுக்கியும் நமக்கு பாண்தான் முக்கியம்”//" Ha Ha Ha Ha Ha..சூப்பர்...


   "மனைவிக்கு சாடையாக தலையிடி முகத்தில தெரிகிறது ஆனால் அவள் சொல்லவில்லை.. உங்கள் தோளில் மெதுவாக சாய்ந்து இன்னும் கனதூரமா என்று அவள் கண்ணுயர்த்தி
   கேட்கும்போது கூந்தலை தடவியபடி தலைமேல தலை சாய்க்கும் போது அடிமனதில் ஒரு கனமான உணர்ச்சி எழுமல்லவா உனக்கு நானிருக்கேன் என்று அதுதான் காதல்.."

   நல்லாத்தான் அனுபவிச்சு எழுதியிருக்கிறியள்....

  16. //நோட்டீஸ் ஒண்டும் விடாமல் ஒன் த ஸ்பொட்டில காதல் கான்சல்..
   ”போடி நீயும் உன்ட மினுக்கியும் நமக்கு பாண்தான் முக்கியம்”(மீதிக்கதை இன்னும் சுவாரசியம் பிறகொரு பதிவில சொல்லுறன்) //

   தெய்வமே...
   நீங்க தானய்யா இப்பிடித் தெளிவா பதில் சொல்லுவீங்க...
   காதல் பற்றிய பந்தி நகைச்சுவையாகச் சென்று கடைசியில் முத்தாய்ப்பாய் சொன்னது எல்லாவற்றையும் விட கலக்கல் அண்ணா...

   உண்மையாகவே இரசித்தேன்...

   சீதனம் பற்றிச் சொன்னதும் அசத்தல்...

   ஆனா ஒரு சந்தேகம்...
   பேனுக்கு சம்பூ போட முடியாதா?

   //கடவுள் ஆண்டு 1 படிக்கும்போது ஹீரோ.. ஆண்டு 10 இல ப்ரெண்ட்.. இப்ப ஒரு அநாநி..

   இந்த பிரபஞ்சத்துக்கு விடை கிடைக்கும் வரை விஞ்ஞானம் எவ்வளவுதான் ஆட்டினாலும் அவர் சீட்டு கொஞ்சம் பேம் ஆகத்தான் இருக்கும்..

   ஆனால் சமயப்புத்தகத்தில 11 ம் ஆண்டு வரைக்கும் படிச்ச கதையெல்லாம் புருடா.. அது மட்டும் உண்மை.. //

   நிறையப் பதிவர்கள் கடவுள் பற்றி இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்... அதெப்படி?
   நானும் இப்படித் தான்...
   பிள்ளையார் டான்ஸ் ஆடி சந்திரன் தேய்ஞ்சது எண்டு விட்டாங் பாருங்கோ விடுவை... அந்தப் புத்தகத்தை எழுதினவன கொலைவெறியோட தேடிக் கொண்டிருக்கிறன்...

   அதுசரி,
   ஏன் தொடர்பதிவுகளை வெறுக்கிறீர்கள்?
   நீங்கள் தானே புதிய நட்பவட்டத்தை உருவாக்க விரும்புவதாக சொன்னீர்கள்? தொடர்பதிவுகளால் நட்புவட்டம் கூடும் தானே?

  17. //ஒரு அவசர வேலையாக மனைவியுடன் பஸ்ஸில் நெடுந்தூரம் பயணிக்கிறீர்கள்.. சுற்றிவர சனநெருக்கம் புரியாத மொழி தெரியாத மனிதர்கள்.. மனைவிக்கு சாடையாக தலையிடி முகத்தில தெரிகிறது ஆனால் அவள் சொல்லவில்லை.. உங்கள் தோளில் மெதுவாக சாய்ந்து இன்னும் கனதூரமா என்று அவள் கண்ணுயர்த்தி
   கேட்கும்போது கூந்தலை தடவியபடி தலைமேல தலை சாய்க்கும் போது அடிமனதில் ஒரு கனமான உணர்ச்சி எழுமல்லவா உனக்கு நானிருக்கேன் என்று அதுதான் காதல்..//

   வாவ் புல்லட்!!! மனதை தொடும் அற்புதமான வரிகள்.   நகைச்சுவையோடு சேர்த்து நல்ல பல ஆக்க பூர்வமான தகவல்களையும் தர உங்களால் மட்டும் தான் முடியும் புல்லட். வாழ்த்துக்க‌ள்!

  18. கிராமத்து பயல்
   யார் என்ன சொன்னாலும் நீங்கள் பச்சை இலங்கைத் தமிழன் எண்டதை
   நிரூபிச்சிடியள் போங்கோ.........//

   ஹிஹிஹி!

  19. குருபரன்
   நல்லாத்தான் அனுபவிச்சு எழுதியிருக்கிறியள்....//

   யோவ்! நான் எங்கயய்யா அனுபவிக்கிறது? வீட்டைதோலை உரிச்சு தொங்கப்போட்டிருக்குங்கள்.. எல்லாம் ஒரு கற்பனை பீலிங்சுதான்.. உதெல்லாம் இப்ப எங்க நடக்கிறது.. ?ஹ்ம்ம்ம்! அப்பிடியே தோளில சாயுறமாதிரி சாஞ்சு பொக்கட்டுக்க எவ்வளவு காசு இருக்கெண்டு பாப்பளவயள்..

  20. கனககோபி

   ஒரு சந்தேகம்...
   பேனுக்கு சம்பூ போட முடியாதா? //

   அதெல்லாம் நீங்கள் போட்டாலும் எங்காவது பக்கத்து வீட்டுக்காரியிடம் கடனாகவாவது கொஞ்சம் பேன்வாங்கிவந்து மண்டையில் போட்டு அடுத்த நாள் எடுக்க சொல்வார்கள்..


   நிறையப் பதிவர்கள் கடவுள் பற்றி இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்... அதெப்படி?
   நானும் இப்படித் தான்...
   பிள்ளையார் டான்ஸ் ஆடி சந்திரன் தேய்ஞ்சது எண்டு விட்டாங் பாருங்கோ விடுவை... அந்தப் புத்தகத்தை எழுதினவன கொலைவெறியோட தேடிக் கொண்டிருக்கிறன்... //

   ஆனால் எவனோ ஒருவன் உந்த தேவாரம் எல்லாம் தமிழில் பாடித்தனே இரக்கிறான்? அதுதான் சரியான குழப்பமாக இருக்கிறது.. ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்..

   அதுசரி,
   ஏன் தொடர்பதிவுகளை வெறுக்கிறீர்கள்?
   நீங்கள் தானே புதிய நட்பவட்டத்தை உருவாக்க விரும்புவதாக சொன்னீர்கள்? தொடர்பதிவுகளால் நட்புவட்டம் கூடும் தானே?//

   தொடர்பதிவு தெரிந்தவர்களுக்கு அழைத்துக்கொள்வது.. புதிதாய் தெரியாதவர் யாராவது அழைக்கப்பட்டால் நட்பு வட்டம் அதிகரிக்கும் சுத்திசுத்தி சுப்பற்ற கொல்லைக்குள் பதிவிட்டு கொண்டிருந்தால் வேறு யாரும் வரமாட்டார்கள்.. மற்றது வீணாக ஒரு கடமைதானே? ஆனால் நான் வெறுக்கிறேன் என்று சோல்லவில்லை.. சற்று குறைக்கலாம் என்று தான் கூறுகிறேன்.. அடுத்து பாடசாலைப்பதிவு போடவேண்டும்...

  21. யாழினி

   மனதை தொடும் அற்புதமான வரிகள்.//

   ம்ம் எல்லோரினதும் பின்னூட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது..தொட்டுத்தான் இருக்கிறது.. சில உணர்வுகளை வார்த்தைகளாக வடிப்பது கடினம்.. அதே வேளை வாசிப்பவன் கிரகிப்பிலும் இருக்கிறது.. நீங்கள் பலர் சிறந்த கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் இருப்பதால் மெசேஜ் கன்வேயல் இலகுவாக நடைபெற்று விடுகிறது..அவ்வளவுதான் நன்றி யாழினி பின்னூட்டத்துக்கு

  22. நல்லாச் சொன்னீங்க கடவுளைப்பற்றி..
   இதனால் தான் முன் யோசனையா எல்லாத்தையும் கடந்தவன் தான் கடவுள் என்றார்களோ.....

  23. புல்லட்டின் பாணியில் ஒரு சீரியஸ் பதிவு???
   காதல் டச்சிங் அண்ட் கிச்சிங்(சிரிப்பை சொன்னேன்).. அந்த அழகான பெண் தப்பித்தால்.. இல்லாவிட்டால் அப்பன் மூன்று கோடி அழுதிருப்பான்..

   கணவன் மனைவி கதைக்கும் சீதனக் கதைக்கும் லிங்க் இருக்கு போல.. ;)

   கடவுள் பற்றிய விஷயத்தைக் கொஞ்சம் மழுப்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்..
   பதிவில் அவசரம் தெரிகிறது.. இன்னும் கொஞ்சம் மினக்கேட்டிருந்தால் இன்னும் அசத்தியிருக்கலாம்.. இன்னும் கொஞ்சம் விஷயம் எங்களுக்கு வந்திருக்கும்

  24. good sense of humour.....

  25. //எந்தப்பொருளும் கையில் கிடைக்கும் வரைக்கும் ஏதோ ஒரு கோணத்தில் அழகுதான் பெண் உட்பட//

   உண்மை. அதனாலதான்........

   அழகுனு மனசுல பட்டத தள்ளி நின்னே ரசிச்சிக்குளாம்னு முடிவு பன்னிட்டேன்.

   உங்கள் அறிவுறைக்கு நன்றி (வருத்தத்துடன்....)