லீவு லெட்டர்..  நானும் ஒரு பதிவப் போட்டுடுவம் எண்டு நாய்படாப்பாடு படுறன்.. முடியுதில்ல.. என்னத்த செய்ய? இந்த ப்ளொக்கில எழுதுறதுக்கு சனி ஞாயிறு மட்டும்தான் ஒதுக்கியிருக்கு.. ஆனால் , எல்லாரும் புரட்டாதிச்சனிக்கு ஒரிஜினல் சனியன விட்டுட்டு எனக்கு எள்ளெண்ணெய் எரிக்கிறாங்கள்...
  ஸ்ஸ்ஸ்ஸப்பா..
  சனி ஞாயிறு காலை எழும்ப பகல் பத்து பன்ரெண்டு மணியாகுது ... வீடு திரும்ப எப்படியும் இரவு பத்து பன்ரெண்டு மணியாகுது.. .. இந்த வள்ளலில என்னத்த பண்ண?

  வாரநாட்களில வீடவர 7 மணியாகும்.. 7.30 க்கு அக்கம் பக்கத்திலுள்ள நண்டு சிண்டுகளெல்லாம் கணக்கில டவுட்டு கேட்க வருங்கள்.. இப்பல்லாம் ஏழாம் ஆண்டிலயே பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பயோ எண்டு பாடங்கள் இருக்கு தாம் ( இன்ட நசனல் ஸ்கூலாம் ). ஆனா கோதாரி அஞ்சாம் வாய்ப்பாடு தெரியாது ஒரு பரதேசிக்கும்.. என்னத்த படிப்பிக்கிறாங்களோ..!
  நாங்களெல்லாம் 3ம்வகுபபில 12ம் வாய்ப்பாடு தலைகீழாச் சொல்லுவம்.. இல்லாட்டி அப்பர் மண்டையில பணங்காப்பணியாரம் சுட்டுடுவார்.. ஹ்ம்ம்..

  ஆனால் வார நாட்களில 9- 11 ஒரு ஆங்கிலப்படம் ‌அல்லது டொக்கியுமென்ட்ரி பார்த்துவிடுவேன்.. இப்போது பிபிசியின் அமெரிக்கன் இன்டியன் ‌ ‌வோர் சீரிஸ் பார்த்துக்கொண்டுள்ளேன்.. கேபிளை கழட்டி சுற்றி வைச்சாச்சு.. (ஓவரா ‌ அடிக்டட் ஆகிவிட்டதா பீலிங்க்...) ஆகவே என்னுடைய ( சினிமா ) ப்ளொக்கில வேலை நடுவில் நேரம் கிடைக்கும் போது அப்டேற் பண்ணிக்கொண்டிருப்பேன்.. பார் ப்பதாயின் பாருங்கள்.. ஒரு டச்சில இருங்களன்.. எனக்கு சந்தோசமா இருக்கும்..

  வேற என்ன வாற 15ம் திகதி சனி ஞாயிறு பரச்சனை முடிவுக்கு வருமெண்டு நினைக்கிறன் அதுக்குப் பிறகு கலக்கலாம் என்ன?

  ஆ மறந்திட்டன்.. இருக்கிறம் பத்திரிகையின்ட அதிரடி ஒண்டு 2ம் திகதியாம்.. எல்லாரும் கலந்து கொள்ளுங்க.. நான் அதுக்கு முதல் வெள்ளி , யால காட்டுக்கு போவதால திங்கள் 3மணிக்கு முன்னம் வரமுடியுதோ தெரியேல்ல.. பாப்பம்..

  வேற என்ன? எல்லாரும் என்ட லீவு கிராண்ட் பண்ணிட்டீங்களெண்ட நம்பிக்கையில மீள 15ம் திகதி சந்திக்கிறன்.. அதுவரைக்கும் புல்லட் உங்கள் எல்லாரையு் வாசிச்சுக்கொண்டுதான் இருப்பான்.. ;-) பைபை!

  13 Responses

  1. அட சாய்... உள்ள ஒரு லெட்டரையும் காணம்.. என்வலப்பை மட்டும் தந்தால் சரியே...

  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  3. //நாங்களெல்லாம் 3ம்வகுபபில 12ம் வாய்ப்பாடு தலைகீழாச் சொல்லுவம்.//

   இதுல தலைகீழா என என்னத்த சொல்லுறீங்க

   ஓர் 12 144
   ஈர் 12 132
   மூ 12 120 என்றா?

  4. //ஆனா கோதாரி அஞ்சாம் வாய்ப்பாடு தெரியாது ஒரு பரதேசிக்கும்.. என்னத்த படிப்பிக்கிறாங்களோ..! //

   உங்கள் தமிழ் தான் அருமை அண்ணா...

   விடுப்பு தந்திற்றன்.... சென்று வாருங்கள்.... ;)

   ஆனா ஏன் யால காட்டுக்கு?
   நான் அண்டைக்கு சும்மா தான் உங்களப் பாத்து குரங்கு எண்டன் ... அதுக்குப் போய்...???!!!

  5. Hello Yoga...
   எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கள்... ஆத்தாடி...

   //ஆனா ஏன் யால காட்டுக்கு?
   நான் அண்டைக்கு சும்மா தான் உங்களப் பாத்து குரங்கு எண்டன் ... அதுக்குப் போய்...???!!!//
   ச்ச என்ன வடிவான அண்ணாவ குரங்கு என்டுறியள்... பாவம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ் (இந்த பிடாறி எதுக்கு அப்படி பீலிங் காட்டுறாள் என்டு சிவப்பு லைட் தலையில எரியோணுமே? am I right)

   அது தானே அண்டைக்கு அடிக்கடி கண்ணாடியப் பாத்துக்கொண்டிருந்தனி அண்ணா..

  6. என் புல்லட் நீங்கள் வடீவேளுக்கு ஐடியா குடுக்க போகலாமே உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நகைச்சுவை வெடிக்கிறது பதிவுலகின் சிறந்த நகைச்சுவை பதிவர் எண்டு நான் உங்களுக்கு விருது கொடுக்கலாம் எண்டு இருக்கிறேன் எப்பிடி ஏத்துபீங்க்களா ...?

  7. //7.30 க்கு அக்கம் பக்கத்திலுள்ள நண்டு சிண்டுகளெல்லாம் கணக்கில டவுட்டு கேட்க வருங்கள்.//நீங்க கணக்கில் புலியோ?!!!

  8. A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html

  9. உங்களை தொடர் பதிவொன்றிற்கு அன்புடன் அழைத்திருக்கிறேன்...
   வந்து கலக்குங்கள்...
   http://tamilgopi.blogspot.com/2009/11/4-38.html

  10. உங்களுடைய லீவு முடிந்து எட்டு நாட்கள் கடந்தவிட்டதை கண்டனத்துடன் அறியத் தருகிறோம்... உடனடியாக பதிவுகள் வராத பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எமது சங்கத்தால் மேற்கொள்ளப்படும்...

   - வேலை வெட்டி இன்றி கொமண்ட் போடுவோர் சங்கம்...

  11. விட்ட கப்பில என்ட ப்ளொக் அட்ரஸ் மறந்து போச்சப்பா ... அதுதான் கொஞ்சம் லேட்.. ஹிஹி ( எப்பிடியெல்லாம் றீசன் சொலலலாம் எண்துக்கு இது ஒரு எக்சாம்பிள் ;-) )