வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரண்டாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு
  மதுவின் கைவண்ணம்... நிறத்தை பாத்து அரசியல் கூட்டம் என்று எண்ணி அரைவாசிப்பேர் ஓட்டம்

  இன்று மாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகி சுமார் அறுபது பதிவர்களின் நேரடிச்சமூகத்துடனும் மேலும் 30 பேரினது இணைய த்தினூடான பார்வையிடலுடனும் மிக மிக வெற்றிகரமாக தேசிய கலைப்பேரவை மண்டபத்தில் நடை பெற்று முடிவடைந்தது இரண்டாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு..

  மது சகோதரர்கள் , கனககோபி , மு.மயுரன், கீர்த்தி , சுபாங்கன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இச்சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதும் தகவல் நிறைந்ததுமாக அமைந்தது அந்த மாலைப்பொழுதை மிகவும் மன மகிழ்சியாடும் பிரயோசனமாகவும் கழித்த உணர்வை ஏற்படுத்தியது. நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ...  கவிதையை ரசித்துப் படிக்கும்போது பாதியில் நித்திரையாகிவிட்ட கீர்த்தி

  கடந்த சந்திப்பு குறி்த்த ஒரு சுருக்கத்துடன் சுவையாக அமைந்த கீர்த்தி யின் வரவேற்புரையை தொடர்ந்து மதுவர்மன் பயனுறப்பதிவெழுதல் குறித்தான அறிமுகவுரையை தந்தார்.. அதைத்தொடர்ந்து அந்த தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. மு.மயூரன் , மேமன் கவி, லோசன் , சுபானு , மதுவர்மன் போன்றோர் அந்த கலந்துரையாடலில் மிக பிரயோசனமாக பல கருத்துக்களை கூறினர். டெம்லேட் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியான கலர்கள் , பந்திபிரிப்பு போன்ற பல கருத்துக்கள் சிலாகிக்கப்பட்டன.


  எங்கே இங்கேயும் கஞ்சிபாய் காமெடியை சொல்லிவிடுவாரோ என்ற கலக்கத்தில் நான்

  அதைதொடர்ந்து பெண்களும் பதிவுலகம் தொடர்பான தலைப்பில் உறுபசி நிலா சில மனத்தாங்கல்களை முன்வைத்தார். அதை தொடர்ந்து அது பெண்ணியம் தொடர்பான பாதையில் கலந்துரையாடலை இட்டுச்செல்லவே சுவாரசியமாக இருந்தாலும் கருத்தடுமாற்றம் இடம்பெறுவதாக கருதி சில கருத்துரைகளுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  பதிவைத்தான் விளங்க முடியல.. அட்லீஸ்ட் கதைக்கிறதாவது விளங்குதா பாப்பம் என்ற வைராக்கியத்தில் நான்

  ஊரோடி
  பகி டென்மார்க்கிலிருந்து வந்து உடுப்பு கூட மாற்றாமல் கலந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் பலராலும் பாராட்டப்பட்டன. தான் புதுச்சட்டை போட்டிருப்பதை ஓருவரும் கணக்கெடுக்காததால் கடுப்பான வந்தியத்தேவன் அவர்கள் நடுவில் எழும்பி தனது கடுஞ்சிவப்பு நிற புதுச்சேட்டை அனைவருக்கும் காண்பித்தபோது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  மண்டபத்தினுள் குளிரால் அவதிப்பட்ட ஊரோடி.. இன்றுடன் அனேகமாக ஊளரைவிட்டே ஓடியிருப்பார்


  ஸ்வைன் புளு வந்த பன்றிகளை கொல்ல இலகுவழி.. இவரை இப்படியே அவற்றின் ஊடே நடக்க விடுவதுதான்.. ராமராயன் தோத்தான்


  அதைத்தொடரந்து சிற்றுண்டி வழங்கல் நடைபெற்றது.. சமையல் கலையில் சிறப்பு தேர்ச்சி உள்ள மதுவர்மன் சுட்ட வடையும் கீர்த்தி புனைந்த ஏதோ ஒரு பணியாரமும் மு.மயுரன் கலக்கிய சன்குவிக்கும் சுவைபட பரிமாறப்பட்டன. ஆளாளுக்கு இரண்டாம் தடவையும் பணியாரங்களை வழங்க முற்பட்ட போதும் அனைவரும் அலறி ஓடி சபை மரியாதைக்காக பணியாரங்களை தவிர்த்துக்கொண்டனர்..

  தொடர்ந்து மதுவதனன் கூகிள் குழுமம் பற்றி மிக சிறப்பாக விளக்கமளித்தார். மிகவும் அற்புதமாக இருந்தது. சரளமாக தொழிநுட்பத்தை சிறு பிள்ளைக்கும் விளங்கும் பாணியில் அவர் கதைத்ததை அனைவரும் நன்றியுடன் நோக்கினர்.. இடையிடையே கனககோபி உள்ளே பெனியன் என்ன கலர் என்று கண்டுபிடிக்கக்கூடிய வகையில் வேர்த்து வழிய ஓடித்திருந்து தான் பதிவர் சந்திப்புக்காக பட்ட கஷ்டத்தை காட்டியமை யை அனைவரும் கவலையுடன் நினைவு கூர்ந்தனர். அதே வேளை இந்த விசேட நிகழ்வுகளை நிமலப்பிரகாசன் தன்னுடை பாரிய இயந்திரம் ஒன்றால் படமெடுத்துக்கொண்டிருந்தார்.

  குழுமக் கலந்தரையாடலை தொடரந்து பின்னூட்டப்பிச்சனை குறித்து கலந்துரையாடப்பட்டது.. அதில் மு.மயுரன் , நிமல் , ஹிசாம் , மன்னார் அமுதன் லோசன் வந்தியத்தேவன் சந்ரு சேது போன்றோர் தமது கருத்துக்களை காரசாரமாக பகிரந்து கொண்டனர்.

  விஜய் ஒரு சிற்ந்த நடிகர் என வாதிடும் மு.மயுரன்

  அதைத்தொடரந்து பேப்பர் கிழிக்கும் போட்டி ஒன்றும் ஏதோ கையை பிடிக்கும் போட்டி ஒன்றும் வைக்கப்பட்டது. அதில் நான் போட்டியிட்ட குழு மண்ணைக்கவ்வினாலும் போட்டி சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் இருந்தது. பே்பரை மெலிதாக வெட்டுமாறு ஆதிரை பணித்தாலும் நான் கிழிந்து விடும் பயம் கருதி அதை ‌ தடிப்பமாகவே வெட்டினேன்.. ஏனெனில் எமது குழுவில் அசோக்ப ரன் லோசன் இருவரும் இருந்தர்கள்.. விலைவு மீசை இல்லாதபடியால் தான் மண் ஒட்டவில்லை.  மூளையை சோதித்தாலும் பரவால்லை.. இவங்கள் கல்லீரல் குடல் எல்லாத்தையுமல்லோ சோதிக்கிறாங்கள்..  கள்ள வடுவாக்கள்.. உங்களில் எவன்டா சொப்ட்வெயர் கம்பனில ஆணிபுடுங்கிறது?


  பின்பு கொஞ்சநேரம் எல்லாரையும் கண்டு கைகுலுக்கி விட்டு விடைபெற்றோம்..

  மதியம் நண்பர்களுடன் கனமான உணவு சாப்பிட்டதில் தூக்கம் கண்களை சுழற்றியது. ஆகவே நான் எனக்கு தூக்கம் வரும்போதெல்லாம் மைக்கை பிடிங்கி பேசினேன். வழமை போல தூக்கம் வருபவர்களுக்காக என்று தலைப்பிட்டு பேசினாலும் அனைவரது பேச்சுக்களும் நகைச்சுவை நயம் மிக்கதாயும் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்தது மறுக்க முடியாதது. என்னைத்தவிர அனைவரும் படுவிழிப்பாக இருந்து பார்த்த ஒரே கூட்டம் என்றால் இதுதான்.. உதற்காகவே வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும் ஏற்பாட்டுக்ககுழுவினருக்கு.


  நான் தூங்கி வழியவில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

  கூட்டத்தில் பேசியவர்களுக்கும் நேரடியாகவும் இணையமூடாகவும் கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தவாறு இன்னொரு சந்திப்பில் உங்களனைவரையும் சந்திக்கு உறுதியளித்து முடிக்கிறேன். நன்றி.

  51 Responses

  1. சந்திப்பு இனிதே நடந்ததில் மகி்ழ்ச்சி அண்ணா...
   சந்திப்புக்கு வரமுடியாதது வருத்தமளித்தாலும் நேரடியாகப்பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,

   உங்களின் நகைச்சுவைகளை பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்..ஹிஹி

   உடனடியாக நிகழ்வு சந்திப்பில் நடந்தவை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி..(என்ன ஒரு வேகம்)..:)

  2. ம்....நல்லது...உங்கள் நட்பு சந்திப்புக்கள் தொடரட்டும் (உங்களுக்கு அடி கிடி ஒன்னும் விழலையோ....? :-)

  3. தமிழிஷ் ல இணைச்சு விடுங்கோ..
   எப்படியோ நாங்களும் ஒரு மாதிரியா பார்த்தோம்
   பிடிச்ச போட்டோ களையும் போடுங்கோவன்..

  4. Bavan

   இணையமூடாக நீ பார்வையிட்டதை பார்த்தேன்.. சந்தோசம்.. :-)

  5. ’டொன்’ லீ
   ம்....நல்லது...உங்கள் நட்பு சந்திப்புக்கள் தொடரட்டும் (உங்களுக்கு அடி கிடி ஒன்னும் விழலையோ....? :-)//

   ரத்தக்காயம்தான்..மொக்கை மொக்கை எண் சொல்லி புளிச்ச அம்மன் கோயில் புக்கை மாதிரி ஆக்கிப்போட்டாங்கள் என்னைய.. ஹிஹி

   நன்றி டொன்லி..

  6. theruvilakku

   தமிழிஷ் ல இணைச்சு விடுங்கோ..
   எப்படியோ நாங்களும் ஒரு மாதிரியா பார்த்தோம்
   பிடிச்ச போட்டோ களையும் போடுங்கோவன்..//

   ஏன் தமிழிசில இணைச்சுதானே இருக்கு? பத்துபேர் ஓட்டும் போட்டுட்டாங்க .. (நானுட்பட)
   நீங்களும் பாத்தீங்களா.. சந்தோசம்..
   படங்கள் பிலிக்கரில் இணைக்கிறார்களாம்.. வந்தவுடன் லிங்க் தருகிறேன்.. என்வசம் ஒரு படமும் இல்லை.. :-(

  7. ஆகா...என்ன வேகம் அப்பா! ஓ டுமீல் தானே..அப்படித்தான் இருக்கும்..
   சிறப்பாக நடந்தேறிய பதிவர் சந்திப்பு நிகழ்வை ஒழுங்குபடுத்திய மற்றும் சிறப்புப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

  8. அதுக்குள்ளேவா... அசுர வேக பதிவு.
   நேரலையில் இணைந்து இருந்து பார்த்து ரசித்தேன். சந்தோசம்.நான் நேரடியா இல்லையே என்ட கவலை உண்டு. பதிவில தான் கலக்கல் எண்டு பாத்தால் பதிபவர் சந்திப்பிலும் டுமீல் தான்..
   தி கிரேட் புல்லெட்..
   நேரடியாக பாத்துக்கொண்டு அரட்டை அடிக்கும் போது, வீடியோவில் உங்களை காட்டினால் சிலர் ஆவேசப்பட்டு குய்யோ முறையோ எண்டு கத்தினார்கள், திட்டினார்கள் (போட்டு குடு) ஐ திங் மலேசியா எதிரியா இருக்கும்..

  9. தான் புதுச்சட்டை போட்டிருப்பதை ஓருவரும் கணக்கெடுக்காததால் கடுப்பான வந்தியத்தேவன் அவர்கள் நடுவில் எழும்பி தனது கடுஞ்சிவப்பு நிற புதுச்சேட்டை அனைவருக்கும் காண்பித்தபோது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

   என்னடா புல்லட் அண்ணா ஒழுங்கா பதிவு பதிவொண்ணு அமைதியா போட்டிருக்கார் என்று பாரத்தா வந்தியாண்ணாவின் காலை வாரிவிட்டீரகளே தாங்குமா அந்த பிஞ்சு மனசு

  10. பதிவுக்கு நன்றி அண்ணா, புகைப்படங்கள் சுடச்சுட இங்கே

  11. வழக்கம் போல் புல்லட் பதிவுகளில் மட்டுமல்ல சந்திப்புகளிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிருபித்துவிட்டார். அவரின் மொக்கைப் பதிவுகளுக்கு ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்க்கு வந்தவர்கள் எல்லோரும் புல்லட்டை புகழ்ந்துதள்ளிவிட்டார்கள்.

   சூட்டோடு சூடாக பதிவும் போட்டு தன்னுடைய உயிர் நண்பர்களை கடித்தும் இருக்கின்றார்.

   ஒரு சின்ன சந்தேகம் பதிவர் சந்திப்பில் ஏன் அடிக்கடி மலேசியா என்ற வார்த்தை பாவித்தார்கள்?

   நல்ல பதிவு புல்லட்.

  12. //ஸ்வைன் புளு வந்த பன்றிகளை கொல்ல இலகுவழி.. இவரை இப்படியே அவற்றின் முன்னால் நடக்க விடுவதுதான்.. ராமராயன் தோத்தான்//

   அடப்பாவி ஏன் இந்தக் கொலைவெறி. அடுத்த சந்திப்புக்கு வரும் போது பால் கறக்க பாத்திரமும் கொண்டுவருகின்றேன். மாட்டைக் கொண்டு வரும் பொறுப்பு புல்லட்டிடம்.

  13. புல்லட் வேகம் இதுதானோ?

  14. ஹா ஹா, படங்களுக்கான கொமென்ட்ஸ் கலக்கல்.

   //மூளையை சோதித்தாலும் பரவால்லை.. இவங்கள் கல்லீரல் குடல் எல்லாத்தையுமல்லோ சோதிக்கிறாங்கள்..
   //

   எதைச் சோதிச்சாலும் போட்டி போட்டிதான். தோத்துட்டுக் காரணம் சொல்லக்கூடாது :P

  15. அடப் பாவி.. என்ன வேகம்.. அதுக்குள்ளே பதினோரு வோட்டு வேற.. இதோ என் பங்குக்கு நானும் ஒன்று..

   தகவல்களோடு கலக்கல் கமெண்டுகள்.. ;)

   வந்தி போட்டிருந்த கலர் சட்டையிலேயே காதுக்குள்ளாளையும் எதோ வருதாம்.. இந்தப் பதிவுக்குப் பிறகு..
   ராமராஜனுக்கு கடும் வாந்தி பேத்தியாம்..

   பி.கு - நாளை என் பதிவைப் போடலாம் எண்டு பார்த்தால் பல வசனம் இங்கே சுட சுட சூப்பராக் கிடக்கே.. மாத்திட வேண்டியது தான்..

  16. //ஒரு சின்ன சந்தேகம் பதிவர் சந்திப்பில் ஏன் அடிக்கடி மலேசியா என்ற வார்த்தை பாவித்தார்கள்?//

   சின்ன இல்லை.. பெரிய சந்தேகம் தான்... ஏன்டா மலேசியாவை இழுத்தனியள்.. மரியாதையா பதில் சொல்லவும்...

   Btw, தாடி தான் உங்களுக்கு நல்லா இருக்கு மந்திண்ணா...

   இளந்தி ஒருத்தர் தான் புல்லட்டின்ட பக்கம்.. மற்றவங்கள் என்ட பக்கம் தான் நின்டவை தெரியுமே.. அருமையான பெடியள்.. அக்கா அக்கா என்டு பாச மழை பொழிந்துட்டாங்கள்.

  17. அரட்டை அடிக்கேக்க மலேசியா பொண்ணு உங்களை போட்டு தாக்கு தாக்கேண்டு தாக்கிச்சு. ஏன் உந்த கொலைவெறியோ தெரியல. அதுக்கு சப்போர்ட்டா சில பெடியள் வேற. பாசமலர் படமே போட்டு காட்டி கடுப்பெத்திட்டாங்க... நான் தனிய நின்னு எதிர்த்து போராடினடில காதுகள் ரெண்டிலயும் புகை வந்தது தான் மிச்சம்.
   சந்திப்புக்கு வந்தவைல சில புஜபலசாலிகள் அங்கயும் இங்கயும் எண்டு திரிஞ்சவை. எதுக்கு அவையல புகழ்ந்து ஒரு பதிவு போடுங்க. அப்போ நமக்கு இருக்ற பலத்தை இன்னும் அளவிலையும் அதிகரிக்கலாம்.

  18. //தான் புதுச்சட்டை போட்டிருப்பதை ஓருவரும் கணக்கெடுக்காததால் கடுப்பான வந்தியத்தேவன் அவர்கள் நடுவில் எழும்பி தனது கடுஞ்சிவப்பு நிற புதுச்சேட்டை அனைவருக்கும் காண்பித்தபோது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்//

   அது சரி இந்த சீரியஸ் பதிவிலயும் அந்தாள கடிக்கனுமோ?

  19. நானும் ஒரு பதிவு போட்டேன். பிழைகள் இருப்பின்(இருக்கும்) சுட்டிக் காட்டவும்.
   வலை உலகுக்கு நான் பழசு எண்டாலும் பதிவதில் சிறிசு புதிசு..

  20. புளுகா... இந்த இளந்தியும் முதலில பாசமலர் சென்டிமன்ட் காட்டினவன்.. பிறகு பல்டி அடிக்கிறான்... லோஷண்ணா வந்திண்ணா, சந்ருண்ணா மற்றும் பலர் எங்களிட்ட இருக்கினம். முடிஞ்சால் பாருங்கோவன்.. வவ்வவ்வா...

  21. இடுகையும், படங்களும் கருத்துக்களும் எப்பவும் போலவே இன்றும் கலக்குது. அதுசரி என் சந்திப்புக்கு வந்தவுடனே நீங்கள் எல்லா பக்கமும் சுற்றிப் பார்த்திங்கள் மலேசியாவில் இருந்து யாரும் வந்திருக்கிறார்கள் என்றா?

   உங்களை யாரும் உருட்டி, புரட்டி போட்டுத்தாக்கி விடுவார்களோ என்று பயத்தோடு வந்திருப்பது புரிந்தது. முதலாவது சந்திப்பிலே இருந்த உங்களின் அட்டகாசமான கடிகளை இங்கே காணவில்லை.

  22. அப்பா...
   என்னே வேகம்...

   இதுதான் வேணகம்....

   படங்களும் கருத்துக்களும் அருமை, அதிலும் வழமையைப் போல வந்தியண்ணாவை வாரியது அருமையோ அருமை....

  23. தகவலுக்கு நன்றி சந்ருண்ணா. உங்கள காட்டச் சொல்லி கேக்க இந்த லோஷண்ணா படம் போடுவன் என்றார்.. போடவே இல்லை.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

   எங்கள் கட்சி உறுப்பினரைப் பாக்கவேணும் என்ட அவா தான் :)

  24. கலக்கல் புல்லட், நான் நேரடி ஒளிபரப்பில் அரட்டையில் கேட்டவர்களுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில் அநேகமானோர் உங்களை பற்றிதான் கேட்டார்கள்,

   மேலதிக தகவல் - முகிலினிக்கு சந்திப்புக்கு வர டிக்கட் அனுப்பாத உங்களை கஞ்சன் என உங்களது மலேசிய சகோதரி பகிரங்கமாக விளித்திருந்தார்..

   மிகவும் சிறப்பாக இருந்தது சந்திப்பு , மேலும் சராசரியாக 20 பேர் இணையத்திலும் எம்மை பார்த்து எமது சந்திப்பை விவாதித்திருந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது...

  25. யோகா அடிக்கடி மலேசியா கதை கதைத்து புல்லட் அண்ணாவை பயமுறுத்த வேண்டாம் மலேசியா என்றாலே ஓடிப்போய் பற்றைக்குள் ஒழித்துக் கொள்கிறாராம். பற்றைக்குள் இருப்பது எலி என்று ஆதிரை புல்லட்டுக்கு நேற்றிரவு அடித்துவிட்டாராம்.

  26. றமேஸ்-Ramesh

   ஆகா...என்ன வேகம் அப்பா! ஓ டுமீல் தானே..அப்படித்தான் இருக்கும்..
   சிறப்பாக நடந்தேறிய பதிவர் சந்திப்பு நிகழ்வை ஒழுங்குபடுத்திய மற்றும் சிறப்புப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. //

   வாழ்த்துக்கள் போய்ச்சேர்ந்திருக்கும் ..
   மறக்க முன்னம் பதிவிட்டுவிடும் ஒரே நோக்கம்தான்

  27. அருமை உங்கள் பாணியிலேயே நல்ல நகைச்சுவையுடன்
   இதுவரை பின்னூட்டமிட்டதில்லை எனினும் உங்கள் ரசிகன் நான் வருத்தம்தான் உங்களை எல்லாம் பார்க்க வரமுடியவில்லை என்பதில்

  28. இளந்தி...

   அதுக்குள்ளேவா... அசுர வேக பதிவு.
   நேரலையில் இணைந்து இருந்து பார்த்து ரசித்தேன். சந்தோசம்.நான் நேரடியா இல்லையே என்ட கவலை உண்டு. பதிவில தான் கலக்கல் எண்டு பாத்தால் பதிபவர் சந்திப்பிலும் டுமீல் தான்..
   தி கிரேட் புல்லெட்.. //
   நன்றி நன்றி

   நேரடியாக பாத்துக்கொண்டு அரட்டை அடிக்கும் போது, வீடியோவில் உங்களை காட்டினால் சிலர் ஆவேசப்பட்டு குய்யோ முறையோ எண்டு கத்தினார்கள், திட்டினார்கள் (போட்டு குடு) ஐ திங் மலேசியா எதிரியா இருக்கும்.. //
   நட்டுக்கேசுகள் அதுகளை கணக்கெடுக்காதையுங்கொ.. நமக்கெத்தின சோலி கிடக்கு??

   அது சரி இந்த சீரியஸ் பதிவிலயும் அந்தாள கடிக்கனுமோ? //

   அந்தாள கடிக்காட்டி எனக்கு நித்திர வராது

   நானும் ஒரு பதிவு போட்டேன். பிழைகள் இருப்பின்(இருக்கும்) சுட்டிக் காட்டவும்.
   வலை உலகுக்கு நான் பழசு எண்டாலும் பதிவதில் சிறிசு புதிசு..//

   கட்டாயம் வாசிக்கிறன்..

  29. Balavasakan
   என்னடா புல்லட் அண்ணா ஒழுங்கா பதிவு பதிவொண்ணு அமைதியா போட்டிருக்கார் என்று பாரத்தா வந்தியாண்ணாவின் காலை வாரிவிட்டீரகளே தாங்குமா அந்த பிஞ்சு மனசு//
   எல்லாம் ஒரு அன்புதான்.. he is a gem

  30. வந்தியத்தேவன்

   வழக்கம் போல் புல்லட் பதிவுகளில் மட்டுமல்ல சந்திப்புகளிலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிருபித்துவிட்டார். அவரின் மொக்கைப் பதிவுகளுக்கு ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்க்கு வந்தவர்கள் எல்லோரும் புல்லட்டை புகழ்ந்துதள்ளிவிட்டார்கள். //
   இது கொஞ்சம் ஓவராயில்ல? இதுக்காக உங்களை கடிக்காமல் விடமாட்டேன் எண்டு மட்டும் நினைக்காதீங்க

   சூட்டோடு சூடாக பதிவும் போட்டு தன்னுடைய உயிர் நண்பர்களை கடித்தும் இருக்கின்றார் //ஹிஹி உண்மைதன்

   ஒரு சின்ன சந்தேகம் பதிவர் சந்திப்பில் ஏன் அடிக்கடி மலேசியா என்ற வார்த்தை பாவித்தார்கள்? //இனி மலேசியாக்காமெடிகள் வசைகள் என் பதிவுகளில் வராது..உங்கள் அனைவரதும் ஆலோசனைகளுக்கு நன்றி..

   நல்ல பதிவு புல்லட். //நன்றி

  31. வந்தியத்தேவன்

   அடப்பாவி ஏன் இந்தக் கொலைவெறி. அடுத்த சந்திப்புக்கு வரும் போது பால் கறக்க பாத்திரமும் கொண்டுவருகின்றேன். மாட்டைக் கொண்டு வரும் பொறுப்பு புல்லட்டிடம். //

   ஹாஹாஹா! செம கவுண்டர்

  32. Hisham Mohamed - هشام
   புல்லட் வேகம் இதுதானோ? //
   அட அட..

  33. Subankan
   ஹா ஹா, படங்களுக்கான கொமென்ட்ஸ் கலக்கல்// தாங்ஸ்டா தம்பி!

   எதைச் சோதிச்சாலும் போட்டி போட்டிதான். தோத்துட்டுக் காரணம் சொல்லக்கூடாது :P// நாங்களெல்லாம் அளாப்பி அளாப்பியே பைனல் வரைக்கும் வந்தாக்கள்.. எங்கிளட்ட உது செல்லாது..

  34. LOSHAN
   அடப் பாவி.. என்ன வேகம்.. அதுக்குள்ளே பதினோரு வோட்டு வேற.. இதோ என் பங்குக்கு நானும் ஒன்று.. //

   ஓ நன்றி நன்றி

   தகவல்களோடு கலக்கல் கமெண்டுகள்.. ;) // ஹிஹி

   வந்தி போட்டிருந்த கலர் சட்டையிலேயே காதுக்குள்ளாளையும் எதோ வருதாம்.. இந்தப் பதிவுக்குப் பிறகு..
   ராமராஜனுக்கு கடும் வாந்தி பேத்தியாம்.. //
   நீங்களும் உங்கட பங்குக்கு தாக்குங்கோ

   பி.கு - நாளை என் பதிவைப் போடலாம் எண்டு பார்த்தால் பல வசனம் இங்கே சுட சுட சூப்பராக் கிடக்கே.. மாத்திட வேண்டியது தான்..//

   சுப்பர் எதிர்பாபக்கிறம்..

  35. This comment has been removed by the author.
  36. சந்ரு
   அதுசரி என் சந்திப்புக்கு வந்தவுடனே நீங்கள் எல்லா பக்கமும் சுற்றிப் பார்த்திங்கள் மலேசியாவில் இருந்து யாரும் வந்திருக்கிறார்கள் என்றா?உங்களை யாரும் உருட்டி, புரட்டி போட்டுத்தாக்கி விடுவார்களோ என்று பயத்தோடு வந்திருப்பது புரிந்தது. முதலாவது சந்திப்பிலே இருந்த உங்களின் அட்டகாசமான கடிகளை இங்கே காணவில்லை. //

   அடே வாளிப்பயலே.. பல்லி மாதிரி இருந்து கொண்டு பகிடியா விடுகிறாய்? இரு உன்னை..

  37. கனககோபி
   அப்பா...
   என்னே வேகம்...

   இதுதான் வேணகம்....

   படங்களும் கருத்துக்களும் அருமை, அதிலும் வழமையைப் போல வந்தியண்ணாவை வாரியது அருமையோ அருமை....//

   நீ குளிப்பதற்கு விம் சோப் வாங்கிக்கொண்டு வந்ததை சொல்லவில்லை என்ற சந்தொசத்தில்தாுனே புளுகுகிறாய்.. இரு வருகிறேன்..

  38. யோ வொய்ஸ் (யோகா)

   கலக்கல் புல்லட், நான் நேரடி ஒளிபரப்பில் அரட்டையில் கேட்டவர்களுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில் அநேகமானோர் உங்களை பற்றிதான் கேட்டார்கள்,//
   அப்படியா ? நன்றி அன்பு நெஞ்சங்குளே..

   மேலதிக தகவல் - முகிலினிக்கு சந்திப்புக்கு வர டிக்கட் அனுப்பாத உங்களை கஞ்சன் என உங்களது மலேசிய சகோதரி பகிரங்கமாக விளித்திருந்தார்.. //அதற்கு என்னை திட்டுவதே முழுநேரத்தொழிலாகி விட்டது.. மிகவும் அவமானமாகிப்போய்விட்டது..

   மிகவும் சிறப்பாக இருந்தது சந்திப்பு , மேலும் சராசரியாக 20 பேர் இணையத்திலும் எம்மை பார்த்து எமது சந்திப்பை விவாதித்திருந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது... //
   உண்மைதன் மிகவும் மகிழ்ச்சி எனக்கு.. ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள்..

  39. //புல்லட்

   அடே வாளிப்பயலே.. பல்லி மாதிரி இருந்து கொண்டு பகிடியா விடுகிறாய்? இரு உன்னை..//

   அப்படி எல்லாம் சொன்னால் மலேசியாவுக்கு அழைப்பு விடுத்து அடியாட்களை இறக்குமதி செய்யப்படும். அடக்கி வாசியிங்கோ...

  40. சந்ரு

   அப்படி என்னதான் அவமானம்... மலேசியா மலேசியா என்று நேற்று எல்லோரும் சொல்லும்போது உங்கள் முகத்தில் ஒரு சந்தோசம் தெரிந்ததே //

   ஓம் தெரியும் தெரியும்..

   அப்படி எல்லாம் சொன்னால் மலேசியாவுக்கு அழைப்பு விடுத்து அடியாட்களை இறக்குமதி செய்யப்படும். அடக்கி வாசியிங்கோ..//

   போங்கடா நீங்களும் உங்கட மலேசியாவும்..

  41. //பதிவைத்தான் விளங்க முடியல.. அட்லீஸ்ட் கதைக்கிறதாவது விளங்குதா பாப்பம் என்ற வைராக்கியத்தில் நான்//

   அது சரி.... என்ன ஏதாவது விளங்கிச்சுதோ? சிரித்தேன் .....!
   என்னையும் கும்முராங்கப்பா.....!

   'அண்ணா அண்ணா' எண்டு சொல்ல வேண்டாமெண்டு சந்திப்பில கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால உந்த மரியாதைகளெல்லாம் (உங்களுக்கு மட்டும் ) இனிக் கிடையாது:)) ஹிஹி....

   நித்திரை கொண்டிருந்தாலும் உப்பிடி விஸ்தாரமான பதிவு போட்டிருக்கிறிங்கள் .... நல்லாயிருக்கு !

  42. tharshayene
   அது சரி.... என்ன ஏதாவது விளங்கிச்சுதோ? சிரித்தேன் .....!
   என்னையும் கும்முராங்கப்பா.....! //
   நல்லகாலம் பின்னவீனத்துவமா கதைக்கெல்ல.. பிடறியடிபட ஓடியிருப்பன்..

   'அண்ணா அண்ணா' எண்டு சொல்ல வேண்டாமெண்டு சந்திப்பில கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால உந்த மரியாதைகளெல்லாம் (உங்களுக்கு மட்டும் ) இனிக் கிடையாது:)) ஹிஹி.... //

   ஆஹா ஆஹா.. நன்றி நன்றி .. அதுக்காக அடேய் புடேய் எல்லாம் நாட் அக்செப்படட்.. ;-)

   நித்திரை கொண்டிருந்தாலும் உப்பிடி விஸ்தாரமான பதிவு போட்டிருக்கிறிங்கள் .... நல்லாயிருக்கு !//
   அது லெக்சர் ரூமில நித்திரை கொண்டாலும் எக்சாம் பாஸ் பண்ணுறதில்லையோ? அப்பிடித்தான்! ;-)

  43. //விஜய் ஒரு சிற்ந்த நடிகர் என வாதிடும் மு.மயுரன் //

   ஹா ஹா ஹா.......................................................

  44. கோபி ஹா ஹா ஹா என கத்துறாருப்பா, என்னமோ பிரச்சினை போல யாராவது அவரை போய் காப்பாத்துங்க.

  45. //கோபி ஹா ஹா ஹா என கத்துறாருப்பா, என்னமோ பிரச்சினை போல யாராவது அவரை போய் காப்பாத்துங்க. //

   பதிவர் சந்திப்புக்குப் பிந்தி வந்த யோ வொய்ஸ் இற்கு யாராவது நக்கல் போட மாட்டியளா?

  46. ஐயம் நல்லவன் வேண்டாம், பாவம்

  47. உங்களுடைய இந்தப்பதிவு
   மிகப்பெரிய இணைய சஞ்சிகையினால் மீழ் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
   சென்று பாருங்கள்
   நன்றி
   http://asfer-kalavai.blogspot.com/2009/12/blog-post_201.html

  48. இலங்கை தமிழ் பதிவர் இரண்டாவது சந்திப்பினையும் உங்கள் பாணியில் நகைச்சுவையான முறையில் தந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் புல்லட்! :)

  49. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
   வழக்கம்போல கமென்ட்டுகளில் தெறிக்கிறது புல்லட். :)

  50. நாங்க லேட் ஆய் வந்து கருத்து சொன்னாலும் லேட்டஸ்டாய் சொல்லுவம் என்று சொல்லிப்போட்டு வாழ்த்துக்கள் மட்டும் சொன்னால் போதாதுதான்... இருந்தாலும் வாழ்த்துக்கள்... அது எப்பிடி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது...???? அது சரி அந்த இலத்திரனியல் பதிவைப்பற்றி????

  51. புல்லட்டு நம்ம பக்கம் ஒரு ரவுண்டு வரது...?