யாவும் கற்பனை

  மு.கு: எல்லாரும் இருந்தாற்போல் காதலைப்பற்றி எழுதுவதால் எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று.. ஆனால் களம் மற்றும் அனுபவங்கள் இல்லையாதலால் அதை கற்பனையில் உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது.. ஆகவே பஞ்சி பார்க்காமல் சில பல சம்பவங்களை கற்பனை செய்து ஒரு வழியாக கோர்த்து படைத்து பார்க்க ஆசைப்பட்டேன்.. எப்படி வருகிறதோ தெரியவில்லை.. பிடித்திருந்தால் சொல்லுங்கள் இரண்டாம் பகுதியையும் தருகிறேன்.. அதன் ஓட்டம் மற்றும் நடை ஏற்கனவே மனதில் உருவாகிவிட்டதால் எழுதுவது மட்டும்தான் பாக்கி.. பார்க்கலாம்..

  அண்ணா = ஆப்பு!


  அவள் நிஜமாகவே ஒரு அழகான பெண்..

  இம்முறை விடுவதில்லை என திடம் பூண்டுகொண்டேன்
  என் உயிர் இனி அவள்தானென்றுறுதி செய்துகொண்டேன்..

  தூரத்தில் கண்டதும் அன்பாய் சிரித்தாள்..
  என்றும் போல் அன்றும் சொக்கிப்போனேன்..
  கலியாணம் கட்டியதும் டிவியில் விளம்பரத்துக்கு விடலாம்..
  துயிலில்லை அந்நாள்வரையென முடிவும் செய்து கொண்டேன்..

  எதிர்பாராதவிதமாய் அருகில் வந்தாள்..
  எடக்குமடக்காக வெட்கப்பட்டாள்
  ஆழ மூச்சிழுத்தேன்.. அவசரமாய் சொல்ல நினைத்தேன்..
  "அன்பே உன்னை நான்.."
  காற்று வார்த்தையாக குரல்நாணில் அதிர தொடங்க..

  "புல்லட் அண்ணா உங்கபுளொக்
  ஒவ்வொருநாளும் வாசிக்கிறனான்.."

  விழுந்த இடியில் கழன்று போனேன்..
  விளக்கிலடிபட்ட விட்டில் பூச்சியானேன்..

  அண்ணா என்ற வார்த்தை அருவருப்பாயிற்று ..
  அகிலத்தினின்றும் நீக்கப்பட வெண்டிய நீச வார்ததையாயிற்று...

  நாலுமாசம் ஜிம்முக்கு போனது கடவுளே!
  நாலு நிமிசத்தில வீணாப்போச்சு..
  ஏத்தி வச்ச பைசெப் மசிலெல்லாம்
  பக்கத்துவீட்டுக்கிழவியின் சொக்கு போல ஆடுது..

  முதலாம் தடவை என்றால் வெறொன்றை ட்ரை பண்ணலாம்..
  இரண்டாம் தடைவ என்றால் இன்னொன்றை ட்ரை பண்ணலாம்..
  இருபத்தைந்தாம் பெண்ணுக்கும் பாசக்கிளி பாட்டுப்பாட
  நானென்ன பட்டினத்தாரா?
  இல்லை எக்ஸ்போர்ட்டபிள் தோடம்பழமா?
  (இந்த வரி புரியுதா? ;) )

  அழகில்லாப் பெண்ணென்றால் பெருமையுடன் ஏற்றுக்கொள்வேன்..
  குணமில்லாப் பெண்ணென்றால் அடிக்கடி சொல்லிக்கொள்வேன்
  பணமில்லா பெண்ணென்றாலும் பப்ளிக்கில் சொல்லிவிடுவேன்
  வெளிநாட்டுப்பெண்ணென்றால் உடனடியாய் உறுதிசெய்வேன்;
  உனக்கு நான்தானடி உண்மையுள்ள அண்ணா என்று
  ஆனால் ..

  அத்தனையும் தாண்டி அழகாய் ஒன்றைக்கண்டால்
  அஞ்சடி தள்ளி நின்று அண்ணா என்கிறதே?
  கருணை பரிவு சற்றுமின்றி குத்திக்கிழிக்கிறதே?
  ஆரிடம் சொல்லியழ ? ஆறுதலை தேடியழ?
  முகாரி ராகம்தான் முழுநேரம் என் பண்பலையில்

  26 ஆவது அட்டெம்ப்டும் எசகுபிசகாய் பெயிலியர்..
  அண்ணா என்றழைத்து கையில் நூலும் கட்டிவிட்டாள்..
  இனிமேல் தாக்குப்பிடிப்பது எப்படியோ தெரியல்ல..
  வெம்பிய நெஞ்சு வேதனையில் துடித்தது..
  தனிமையில் துணைதேடி சீசன்கிடாய் போல் கேவியது..


  இரவு 3 மணிக்கு முழுசாய் நான் நித்திரையில்..
  தலைமாட்டில் செல்போன் மிஸ்ட் கோல் விடுகிறது..

  பக்கத்து பிளாட்டின் அபிராமி அக்கா..
  அபுதாபியில் புருசன் இருக்க இங்கே சிக்னல் எனக்கு வருது..
  தொடர்ந்து வந்த மசேஜில் கேரளத்து ஏ ஜோக்கு..

  கடவுளே என் கற்பை நீதான் காப்பாத்தணும்..
  காயமுற்ற என்மனதை கண்ட நாயெல்லாம் நக்கிடுமோ?
  கவலையில் கண்ணயர்ந்தேன்.. கனவில் கண்ணீர் விட்டேன்.
  அழுதவிழி துடைக்க கனவில் அவள் வந்தாள்..- அவளை
  இதுவரை கண்டதில்லை.. ஒப்பதொரு மலர் பூத்ததில்லை
  காற்றில் மிதந்து வர உயிர் சொக்கி நான்நின்றேன்..  அவள் வருவாள்...

  68 Responses

  1. ஆஹா புல்லட்டிற்க்கும் காதலா?
   கவிதை நடையில் காதலை அழகாக வடித்திருக்கின்றீர்கள்.
   அழகான பெண்கள் அண்ணா என்றால் ஹார்ட் அட்டாக் வருகின்றது.
   அனுபவம் இருக்கோ இல்லையோ அழகான நடையில் எழுதியிருக்கின்றீர்கள்.

   //இல்லை எக்ஸ்போர்ட்டபிள் தோடம்பழமா? (இந்த வரி புரியுதா? ;)//
   நான் ஒரு பச்சிளம் பாலகன் அதனால் இந்த வரி புரியவில்லை.

  2. யாரு புல்லட் அந்த பாப்பா? பாவம் ஒரு நல்ல மார்க்கச்சை வாங்கி தாப்பா..

  3. உங்களின் சொந்த அனுபவத்தை கூட கற்பனையாக எழுதும் திறன் சிறப்பானது...

  4. வந்தியத்தேவன் said... //
   நன்றியண்ணா பின்னூட்டத்துக்கு..:)

   ஆஹா புல்லட்டிற்க்கும் காதலா? //
   சீ போங்க ....

   அழகான பெண்கள் அண்ணா என்றால் ஹார்ட் அட்டாக் வருகின்றது.//

   ம்ம்.. அங்கிளெண்டால் இன்னும் என்னென்னல்லாம் வரும்.. ப்ச்.. :P

  5. அண்ணாமலையான் said...

   யாரு புல்லட் அந்த பாப்பா?
   பாவம் ஒரு நல்ல மார்க்கச்சை வாங்கி தாப்பா.. //
   ஐயோ.. இது என்ன சேர் வைக்கும் ஆப்பா?

   நான் அதை பார்க்கவே இல்லை.. முகத்தை மட்டும்தான் பார்த்தன்.. அழகாக இருந்தது .. போட்டுட்டன்..

  6. நிமல்-NiMaL said...

   உங்களின் சொந்த அனுபவத்தை கூட கற்பனையாக எழுதும் திறன் சிறப்பானது... //
   அடே ஆந்தைப்பயலே .. நள்ளிரவில் கொட்டக்கொட்ட விழித்திருந்து ஆப்பா வைக்கிறாய்? படுபாவி..

   மக்களே .. இவன் பொய் கூறுகிறான்..நம்பாதீர்கள்..
   :D

  7. கவிதை நல்லாத் தான் இருக்குது ))))

  8. உம் காதல்
   பொய்யும்யில்லை
   அண்ணா என்றது
   தப்பும்மில்லை..

   நன்றீ.....

  9. //என் உயிரினி //

   இந்தச் சொல் றைமிங்கில் எழுதியது போலுள்ளதே? இதற்குரிய உண்மையான சொல் (கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்பு) யாருக்காவது தெரியுமா?


   //என்றும் போல் அன்றும் சொக்கிப்போனேன்.. //

   உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு...


   //புல்லட் அண்ணா உங்கபுளொக்
   ஒவ்வொருநாளும் வாசிக்கிறனான்..//

   பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லுங்கோ.....
   அதில கனககோபி எண்டொருத்தனத் தெரியுமா எண்டு கேளுங்கோ....


   //நாலுமாசம் ஜிம்முக்கு போனது கடவுளே! //

   அதுவும் ஒருநாளைக்கு 2,3 மணித்தியாலங்கள் அல்லவா என?


   //இல்லை எக்ஸ்போர்ட்டபிள் தோடம்பழமா? (இந்த வரி புரியுதா? ;) )//

   எனக்கு உள்ளர்த்தம் உண்மையா விளங்கேல... :(


   //வெளிநாட்டுப்பெண்ணென்றால் உடனடியாய் உறுதிசெய்வேன்; //

   அப்ப 3 கோடி எல்லாம் தேவையில்லயா?


   //முகாரி ராகம்தான் //

   இங்கும் ஏதோ றைமிங் உள்குத்து இருப்பதாக உள்மனது சொல்கிறது... :P


   //தொடர்ந்து வந்த மசேஜில் கேரளத்து ஏ ஜோக்கு.. //

   என்னாமு மசாஜா?
   அப்ப க** போய்ட்டுதா? :P


   //கடவுளே என் கற்பை நீதான் காப்பாத்தணும்..//

   போனாப் போனது தான்....


   //அவள் வருவாள்...//

   வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.... (உங்களத்தான் அண்ணா எண்டிற்றாங்களே? பிறகென்ன? :P )

  10. சொல்ல மறந்திற்றன் அனுபவக் கவிதை அசத்தல்....
   பகுதி 2 அல்ல 5 ம் எழுதுங்கள்.... :)


   //தர்ஷாயணீ லோகநாதன். said...
   கவிதை நல்லாத் தான் இருக்குது ))))//

   அண்ணா சொல்லாததை கடுமையாக எதிர்க்கிறேன்.... :P

  11. புல்லட்... எங்கே யாழெப்பணத்தில் தானே கண்டீர்கள் உங்கள் தேவதையை..

   சில பல சம்பவங்களை கற்பனை செய்து

   ##இது விளங்கேல்ல உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கறபனை செயவதா ....இடிகுது ஞாபகப்படுத்தி எழுதினான எண்டு சொல்லுங்கோ,

   அவள் நிஜமாகவே ஒரு அழகான பெண்

   ##அது நாங்களும் பாத்தாத்தான் தெரியும் அவசரப்பட்டு முடிவெடுத்திற்றியள்

   புல்லட் அண்ணா உங்கபுளொக்
   ஒவ்வொருநாளும் வாசிக்கிறனான்.."

   ##இந்தவசனமே சொல்லுது எங்கயோ உண்மையா வாங்கியிருக்கிறீர்கள்...

   கலியாணம் கட்டியதும் டிவியில் விளம்பரத்துக்கு விடலாம்..

   ##இந்த வசனத்தை வாசிக்கும் பெண்கள் இனி உங்கள் பக்கம் திரும்பி பார்ப்பார்களா சொல்லுங்கள்..

   கவிதை சூப்பர் புல்லட்... கலக்குங்கள்

  12. தர்ஷாயணீ லோகநாதன்.
   கவிதை நல்லாத் தான் இருக்குது ))))//

   அம்மணி.. நான் ஒரு கட்டுரையாகத்தான் எழுதினேன்.. கவிதையாகிவிட்டதோ? என்னே கொடுமை... எல்லாம் சிலரது ஸ்டேட்டஸ் மசேஜ்களை பார்ப்பதன் விளைவு :P

  13. i assume its true, bullet brother:D

  14. நல்லாவே இல்லை... தயவு செய்து அடுத்த பதிவு வேண்டாம்...

  15. negamam

   உம் காதல்
   பொய்யும்யில்லை
   அண்ணா என்றது
   தப்பும்மில்லை..

   நன்றீ..... //

   அய்யோ பாஸ் சததியமா கற்பனைதான் பண்ணினேன்.. ! மேற்கூறியவற்றில் கிஞ்சித்தும் உண்மையில்லை.. சொன்னா நம்புங்க.. காதல் பண்ணுவதை குறித்து எனக்கு சந்தோசமான அபிப்பிராயம் இல்லை.. சும்மா வீண் தலையிடி..

  16. கனககோபி said...
   //என் உயிரினி
   இந்தச் சொல் றைமிங்கில் எழுதியது போலுள்ளதே? //
   கன'கபோதி' உனக்காகவே பிரித்து எழுதியுள்ளேன்.. முடியலடா சாமி.. சனியன தூக்கி சவக்காரம் போட்டு கழுவி உன்ட வாயிலதான் வைக்கணும்

   //உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு...//
   ஹிஹி நன்றி நன்றி.. நீயும் நேர்மையா ஒரு பதிவு போட்டிருந்தாயல்லவா?


   //அதில கனககோபி எண்டொருத்தனத் தெரியுமா எண்டு கேளுங்கோ....//
   உன்ட கும்மியால பழைய தமிழ்க்கும்மி பலருக்கு மறந்து போச்சு.. உன்னைத்தெரியாமலா? என்ன நான் அண்ணா நீ தம்பி.. அவ்ளோதான் வித்தியாசம்

   //(இந்த வரி புரியுதா? ;) )
   எனக்கு உள்ளர்த்தம் உண்மையா விளங்கேல... :( //
   தனியே சிந்துகபேயில் தோடம்பழம் சாப்பிட்டபடி பேசலாம்


   //வெளிநாட்டுப்பெண்ணென்றால் உடனடியாய் உறுதிசெய்வேன்; //
   அப்ப 3 கோடி எல்லாம் தேவையில்லயா?//

   அடே ஓழுங்கா வாசி.. மறுக்கப்படுபவைபற்றித்தான் அதில் எழுதியுள்ளேன்..


   //முகாரி ராகம்தான்
   இங்கும் ஏதோ றைமிங் உள்குத்து இருப்பதாக உள்மனது சொல்கிறது... :P //

   உன்ர றைமிங் சென்சை கொண்டுபோய் உடைப்பில போடு

   //அப்ப க** போய்ட்டுதா? :P //

   ஏன்டா மசேஜ் வாசிச்சால்லாம் கற்பு போகுமா? அப்போ இத்தரைக்கும் உனக்கு எயிட்சல்லோ வந்திருக்கணும்..


   //கடவுளே என் கற்பை நீதான் காப்பாத்தணும்..
   போனாப் போனது தான்....//

   ஓமோம்.. ஆனா போகல்லயே


   //வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.... (உங்களத்தான் அண்ணா எண்டிற்றாங்களே? பிறகென்ன? :P )//

   அடேய்.. அது கனவில் வந்தவளை பற்றி கூறினேன்.. அவள் என்ன செய்தாள் என்பதைத்தான் அடுத்த பாகத்தில் கூறுவதாயிருந்தேன்..

  17. Balavasakan said...
   புல்லட்... எங்கே யாழெப்பணத்தில் தானே கண்டீர்கள் உங்கள் தேவதையை.. //

   சும்மா வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க பாஸ்

   // ஞாபகப்படுத்தி எழுதினான எண்டு சொல்லுங்கோ,//

   சொன்னா நம்பு.. இது உண்மையில்லை..

   //அது நாங்களும் பாத்தாத்தான் தெரியும் அவசரப்பட்டு முடிவெடுத்திற்றியள்//

   ஓமடாப்பா.. மெடிக்கல் பக்கல்ட்றிதானே.. பாக்கத்தான் சொல்லும் :P

   //புல்லட் அண்ணா உங்கபுளொக்
   ஒவ்வொருநாளும் வாசிக்கிறனான்.."
   இந்தவசனமே சொல்லுது எங்கயோ உண்மையா வாங்கியிருக்கிறீர்கள்...//

   அண்ணா என்று சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை.. திடீரென யாராவது மனதை கவர்ந்த பெண் அப்படி சொல்லிவிட்டால் என்னவாகும் என்றுதான் கற்பனை செய்து பார்த்தேன்.. அவ்ளோதான்..

   //இந்த வசனத்தை வாசிக்கும் பெண்கள் இனி உங்கள் பக்கம் திரும்பி பார்ப்பார்களா சொல்லுங்கள்..//
   சும்மா நக்கலுக்குதான்..
   ஆனால் உண்மையில் அவர்களுக்கு டிவியில் வருவது பிடிக்குமாம்..

   //கவிதை சூப்பர் புல்லட்... கலக்குங்கள்//

   நன்றி

  18. //ஏன்டா மசேஜ் வாசிச்சால்லாம் கற்பு போகுமா? //

   அண்ணே... அது மெசேஜ்......
   நீங்கள் கதைச்சிருக்கிறது மசாஜ்.... அதைத்தான் மசேஜ் எண்டுருக்கிறியள்....

  19. deepthi said...
   i assume its true, bullet brother:D //

   சும்மா இருக்காமல் தான் சமீரா ரெட்டி போல் என்று புரளியை கிளப்பி விட்டுட்டு பிறகு பிரதர் என்பது எவ்வகையில் நியாயம்?

   சும்மாதான் பகிடிக்கு.. சூர்யா பாவம் பக்குபக்குன்று பதறிட்டிருப்பார்..
   நீங்கள்ளளாம் அண்ணா எண்டு கூப்பிடலாம்..சந்தோசம்தான்.. :P

  20. வாழ்த்துகள் அண்ணா, இன்றுபோல் என்றும் ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, கூலிங் கிளாசும் கண்ணும்போல வாழ வாழ்த்துகிறேன்.

   எல்லாரும் இப்படி ஆயிட்டா அப்ப நான் மட்டும்தானா மிச்சம்?

  21. Vishnu said...
   நல்லாவே இல்லை... தயவு செய்து அடுத்த பதிவு வேண்டாம்... //

   மற்றவங்களாவது பரவால்ல.. வயசு கூடினாக்கள அண்ணா எண்டுவாளயள்.. நீங்கள் ஒரு படி மேல போய் தம்பி எண்டல்லோ கூப்பிடுறனியள்.. :P என்ன மற்ற றெளண்ட் சண்டைக்கு ரெடி போல..

   பார்ப்பம் முதலாவது எதிர்ப்பு வந்திருக்கு.. மிகுதில்லாம் சப்போர்ட்டிவ்தானே? ஹிஹி..

  22. அண்ணே... அது மெசேஜ்......
   நீங்கள் கதைச்சிருக்கிறது மசாஜ்.... அதைத்தான் மசேஜ் எண்டுருக்கிறியள்....//

   உன் கறைப்படிந்த புத்தி.. ஏன் கெட்ட விதமாயே பார்க்கிறாய்? நல்ல முறையில் சிலவற்றை நோக்கக்கற்றுக்கொள்.. :P

  23. Subankan
   வாழ்த்துகள் அண்ணா, இன்றுபோல் என்றும் ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, கூலிங் கிளாசும் கண்ணும்போல வாழ வாழ்த்துகிறேன். //

   தம்பி கட்டுரை இன்னும் முடியல்ல.. அதுசரி எதோட வாழுறது எப்பிடி வாழுறது? ஏனிந்த அவசர முடிவுகள்.. அவை உடம்புக்காகாது :P

   //எல்லாரும் இப்படி ஆயிட்டா அப்ப நான் மட்டும்தானா மிச்சம்?//

   ம்ம்.. சந்தர்ப்பத்தை பாவிக்கிறார் பயபுள்ள. தம்பி பப்ளிக் இப்பெல்லாம் முன்னமாதிரியில்ல.. ரொம்ப உஷார்பா..:P

  24. //உன் கறைப்படிந்த புத்தி.. ஏன் கெட்ட விதமாயே பார்க்கிறாய்? நல்ல முறையில் சிலவற்றை நோக்கக்கற்றுக்கொள்.. :P //

   இதிலென்ன கறைபடிந்த புத்தி?
   இதில் என்ன பிழையாய் கதைத்தேன்?
   தயவுசெய்து உண்மையை ஒத்துக்கொண்டு சரணடையுமாறு அன்புடன் எச்சரிக்கிறோம்...

  25. // கனககோபி said...
   தயவுசெய்து உண்மையை ஒத்துக்கொண்டு சரணடையுமாறு அன்புடன் எச்சரிக்கிறோம்...//

   அடேய் மூண்டு கோடி பெறுமதியான பொருட்களுடன் விளையாடாதே. :P

  26. பட்டை... வசனங்களில் வைரமுத்து தெரிகிறார்

  27. //அனுபவங்கள் இல்லையாதலால்//

   நம்பிட்டம்

   //எடக்குமடக்காக வெட்கப்பட்டாள் //

   நீங்களா அவளா?..:p

   ///"புல்லட் அண்ணா உங்கபுளொக்
   ஒவ்வொருநாளும் வாசிக்கிறனான்///

   தப்பிச்சிட்டா அக்கா..:p

   //அகிலத்தினின்றும் நீக்கப்பட வெண்டிய நீச வார்ததையாயிற்று//

   ஓல் லாங்குவிச்ல உங்களுக்கு பிடிக்காத வார்த்தை அண்ணாவா?

   ***

   காதலில் விழுந்த புல்லட் அண்ணா தனக்குப்பொருத்தமான ரிவோல்வரைத்தேடுகிறார்..ஹீஹீ

   இது 100% அனுபவம் போல இருக்கு

  28. இவர் கற்பனை என்று சொன்னால் நாங்க நம்போணுமாக்கும் ;)

  29. "அண்ணா = ஆப்பு!"

   போட்டாளே போடு

   புல்லட் கற்பனையா ?

   நிஜம்போல் தெரிகிறதே.

   கவிதை எழுதவைத்தாள் அல்லவா

   இனி நன்றாய் கவிதை வரும்.

   வாழ்த்துக்கள்.

  30. //அண்ணா என்ற வார்த்தை அருவருப்பாயிற்று ..
   அகிலத்தினின்றும் நீக்கப்பட வெண்டிய நீச வார்ததையாயிற்று...//

   எல்லா வயது வந்த ஆண்களினதும் மனக்குறை தான்.

   //நாலுமாசம் ஜிம்முக்கு போனது கடவுளே!
   நாலு நிமிசத்தில வீணாப்போச்சு..
   ஏத்தி வச்ச பைசெப் மசிலெல்லாம்
   பக்கத்துவீட்டுக்கிழவியின் சொக்கு போல ஆடுது..//

   ஆ... கற்பனையின் உச்சகட்டம்.

   அது சரி அதுஎன்ன எல்லா பதிவர்களுக்கும் காதல் வருது புதுவருடத்தில.
   இந்த வருடம் காதல் வருடமா? விரோதி என்டெல்லோ சொன்னாங்கள்...

   ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.

  31. டேய் ஏன்டா கற்பனை என்டு பொய் சொல்லுறாய்... நீ தான் யாரோ "நீல சுடிதார்காரியை" றியோவில் கடலை போட்டனி என்டு கேள்விப்பட்டன்.. அதை உவன் கோபி "ஒழுஞ்சு இருந்து" படம் எடுத்தவன் என்டு சொன்னதாக கேள்வி.. படத்தை அப்டேட் பண்ணுறன் என்டு போட்டு இன்னும் பண்ணேல்லை அவன்..

   மற்றது, நான் சொன்னமாதிரி உன்ட கண்றாவி பிடிச்ச Aviator frame-ஐ கழற்று... உனக்கு "வாக்குக்கண்" என்டு பயப்படுவதாக ஒரு "ஹோம்சயின்ஸ்" படிச்ச அக்கா கூறினா.... ஹி ஹி ஹி.. நீ நற நற என்டு பல்லைக்கடிப்பது எனக்கு கேட்கிறது...

   பெண்களை மதிக்கக்கற்றுக்கொள்.. உயிரினி கிடைக்க சான்ஸ் கொஞ்சமாவது கிடைக்கும்..

   ஆனால் எல்லாப்பெண்களின் சாபத்தையும் வாங்கிய உனக்கு, குண்டா, கறுப்பா, மொக்கா, ஒரு பிடாறி தான் கிடைப்பாள். கிடைக்கக் கடவது.. ஹி ஹி...

   மற்றது.. இது கற்பனை இல்லை என்டு எல்லாருக்கும் தெரியும்.. பிறகு எதுக்கு வழியுறாய்.. போய் துடை.. எக்கச்சக்கமாக வழியுது.. அது என்ன தீப்தி அண்ணா என்டு கூப்பிட்டால் மட்டும் உனக்கு கசக்குது. இதோட இரண்டாவது தடவையாக நீ எரிச்சல் படுவதைப் பார்த்திருக்கிறன்... ஆனாலும் அந்த பிள்ளை புத்திசாலி என்னண்ணோய்..

   Buuuuuuuuaaaaaaaaaaaah!!!!!!!

  32. //குண்டா, கறுப்பா, மொக்கா, ஒரு பிடாறி தான் கிடைப்பாள். கிடைக்கக் கடவது.. //

   கு்ணடா இருக்கிறது பிழையா?
   கறுப்பா இருக்கிறது பிழையா?
   சமத்துவம் எங்கே போயிற்று?
   கடுமையாகச் சாடுகிறேன்....

  33. அவள் வருவாள்...

   இப்ப திருப்தி தானே...??? :P

  34. SIRUVAN said...
   பட்டை... வசனங்களில் வைரமுத்து தெரிகிறார் //
   நன்றி

   ஆனால் வைரமுத்து கட்டுரை எழுதுவதாக நானறியேன்.. ஏதாவது எழுதியுள்ளாரா? :-o

  35. Bavan said..

   நம்பிட்டம் //

   நம்பணும்டா நம்பணும்

   நீங்களா அவளா?..:p //
   உன் சந்தேகம் சரிதான் .. இங்கு யாராவது பெண்கள் வெட்படக்காண்பது அரிதுதான்..

   தப்பிச்சிட்டா அக்கா..:p //
   நீ ஏன் சந்தோசப்படுறாய்.. வளர்ந்த பிறகு நீயு்ம் எழுதுவாய்டி..

   ஓல் லாங்குவிச்ல உங்களுக்கு பிடிக்காத வார்த்தை அண்ணாவா? //

   இது ஏதோ ஆபாசமான கேள்வியா?

   காதலில் விழுந்த புல்லட் அண்ணா தனக்குப்பொருத்தமான ரிவோல்வரைத்தேடுகிறார்..ஹீஹீ //

   விழப்போகும் என்று வந்தால் சிலவேளை பொருந்தலாம்..நான் சொன்னது இலக்கண அமைப்பை..

   இது 100% அனுபவம் போல இருக்கு //

   ஓம் நிச்சயம் யாரோ ஒரு மனிதனுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க சாத்தியம் உண்டு.. எனகக்ில்லை என்றுதான் நானிங்கு இடித்துரைக்கிறேன்..

  36. Mayooresan said...

   இவர் கற்பனை என்று சொன்னால் நாங்க நம்போணுமாக்கும் ;) //


   என் பால்குடி மறவா முகத்தை பார்த்துமா இந்த சந்தேகம்.. பாதி முகத்தை கண்ணாடி மறைக்குது எண்டு கடுப்பேத்தப்படாது)

  37. மாதேவி said...

   "அண்ணா = ஆப்பு!"

   போட்டாளே போடு //

   நீங்களும் சிறுவயதில் எத்தனை பேருக்கு இந்த போட்டை போட்டிருப்பீர்கள் என புரிகிறது.. :P

   புல்லட் கற்பனையா ?

   நிஜம்போல் தெரிகிறதே. //

   அக்கா! ஜந்தேகப்படப்படாது.. எதிர்கால சீதைக்காய் காத்திருக்கும் ராமன் நான்.. :P

   கவிதை எழுதவைத்தாள் அல்லவா

   இனி நன்றாய் கவிதை வரும்.

   வாழ்த்துக்கள். //


   இப்பிடி ஒரு வாழ்த்து தேவையா? :P

  38. இலங்கன் said...
   ஆகா சுப்பர் ஓகோ சுப்பர். //

   இன்னும் திருந்தலையா நீயி?

  39. முகிலினி said...

   யாரோ "நீல சுடிதார்காரியை" றியோவில் கடலை போட்ட என்டு கேள்விப்பட்டன்.. //
   .
   வதந்திகளை நம்பப்படாது.. மக்களே நம்பி டவுரியை இறக்கிவிடாதீர்கள்.. :P

   மற்றது, நான் சொன்னமாதிரி உன்ட கண்றாவி பிடிச்ச Aviator frame-ஐ கழற்று... உனக்கு "வாக்குக்கண்" என்டு பயப்படுவதாக ஒரு "ஹோம்சயின்ஸ்" படிச்ச அக்கா கூறினா.... //


   ஏன் எல்லாப்பெண்களுக்கும் என் கண்ணாடி மீது பொறாமையோ தெரியல்ல ..


   பெண்களை மதிக்கக்கற்றுக்கொள்.. உயிரினி கிடைக்க சான்ஸ் கொஞ்சமாவது கிடைக்கும்.. //

   எனக்கு உயிரினியும் வேணாம் ஒரு புண்ணாக்கும் வேணாம்.. ஆத்தாடி.. அது சரி யாரந்த உயிரினி?

   ஆனால் எல்லாப்பெண்களின் சாபத்தையும் வாங்கிய உனக்கு, குண்டா, கறுப்பா, மொக்கா, ஒரு பிடாறி தான் கிடைப்பாள். கிடைக்கக் கடவது.. ஹி ஹி... //

   இது பின்னாளில் ஒரு பிரசார ஆயுதமாக பயன்படப்போவதை மேற்படி பெண் அறந்திருக்கவில்லை என்பது அனுதாபத்துக்குரியது..

   மற்றது.. இது கற்பனை இல்லை என்டு எல்லாருக்கும் தெரியும்.. //

   அப்படியா? என் வீட்டை சுற்றி செவைலன்ஸ் கமெரா பூட்டியிருக்கிறார்களோ?


   அது என்ன தீப்தி அண்ணா என்டு கூப்பிட்டால் மட்டும் உனக்கு கசக்குது. //

   அது அவாக்கு மட்டும்தான் தெரியும்..

   ஆனாலும் அந்த பிள்ளை புத்திசாலி என்னண்ணோய்..//

   அண்ணனை எந்த தங்கையும் விட்டுகொடுத்ததாயில்லை.. ஆனால் இங்கோ! ப்ச்..

  40. கனககோபி said...

   கு்ணடா இருக்கிறது பிழையா?
   கறுப்பா இருக்கிறது பிழையா?
   சமத்துவம் எங்கே போயிற்று?
   கடுமையாகச் சாடுகிறேன்.... //

   பேசனலா எடுத்துக்கொள்ளாதே.. பொதுவாச்சொல்லியிருப்பார் ;-)

  41. ஆதிரை said...

   அவள் வருவாள்...

   இப்ப திருப்தி தானே...??? :P //

   தீப்தியோ இல்லை திருப்தியோ ..
   அடுத்தபதிவு போடாட்டால் எனக்கு கலியாணமே நடக்காது போலிருக்கு.. முதல்ல அந்த வேலைய பார்ப்போம்..

  42. ஆகா.. புல்லட், நேற்றைய எங்கள் ஒரு மணி நேர உரையாடல் இருக்கிற உண்மையை எல்லாம் கவிதை வடிவில் கொட்டட வச்சிட்டுதே..
   ஆனாலும் 'அண்ணா' என்பதற்காக சலிக்காதே.. அது வெகு விரைவில் கண்ணா எனவும் மாற இடமுண்டு.. ;)
   மாமா என்றால் தான் சிக்கல்.. எங்கள் மஜாப் பதிவரிடம் கேட்டுப் பார்..

   எல்லாம் சரி அந்த தோடம்பழ விவகாரம் எனக்கும் புரியவில்லை..
   இன்னொரு முக்கிய கேள்வி.. சமூக சேவைக்காக.. நீர் இருக்ம் பிளாட் நம்பர் என்ன? ;)

   பக்தி இரண்டில் இன்னும் சில விஷயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்/./ ;)

   பி.கு - நேற்று நான் சொன்ன ஒரு 'ஈர்ப்பு' விஷயம் இப்ப தெளிவாகி விட்டது.. உனக்கு 3 கோடி நிச்சயமா இல்லை..

  43. //கு்ணடா இருக்கிறது பிழையா?
   கறுப்பா இருக்கிறது பிழையா?
   சமத்துவம் எங்கே போயிற்று?
   கடுமையாகச் சாடுகிறேன்.... //
   He told me that he wants a slim fair girl. So, opp. for slim is fat and dark for fair. That is what I meant. Why do u have to take it personal. I hate this attitude of bloggers

  44. No one got ur orange hint it seems. EXPLAIN.. And how come u missed the quoted word homescience.

   I heard that you bought that aviator frame in Nallur thiruvila. Get a good one. Scare crow-vukku potta mathiri irukku............. buuuuaaaaaaaaaaaah.....

  45. //He told me that he wants a slim fair girl. So, opp. for slim is fat and dark for fair. That is what I meant.

   Oh! :P

   //Why do u have to take it personal. //

   I didn't take it personally...
   Usually I hate these kind of talks, that's y...
   But it's my mistake.... Pardon me... :)

   // I hate this attitude of bloggers //

   lol.... No one r full-time bloggers here.... :)
   BTW, u r also a blogger, If I'm correct... lol.... ;)


   //No one got ur orange hint it seems. //

   I got it I got it..... :P

  46. அசத்தல் ஆனால் புல்லட்டுக்கு அனுபவம் இல்லையெண்டு சொல்றது கொஞ்சம் உறுத்தலாயிருக்கு .

  47. //Usually I hate these kind of talks, that's y...//
   Yea even I hate it. But, just said though I felt awkward when writing it.

   //BTW, u r also a blogger, If I'm correct... lol.... ;)//
   Not anymore men. I am sick of the politics here. May be I am too honest & ppl cant accept it :)

   //I got it I got it..... :P//
   Then Explain No... Even Loshanna didnt get it... Pls EXPLAINNNNNN (in high pitch)

  48. //Then Explain No... Even Loshanna didnt get it... Pls EXPLAINNNNNN (in high pitch) //

   Sorry.... Can't.... :(
   I didn't get it correctly... ;)
   Loshan anna knows the meaning now... (in a low pitch... bcz it's a secret..)

  49. //Sorry.... Can't.... :(
   I didn't get it correctly... ;)//

   oh Plzzzzzzzz.......

   So you did verify it with someone right.. he he..

   Dai Poondi ANNA,
   EXPLAIN.. I know u r up...

  50. //கனககோபி said...
   //தர்ஷாயணீ லோகநாதன். said...
   கவிதை நல்லாத் தான் இருக்குது ))))//

   அண்ணா சொல்லாததை கடுமையாக எதிர்க்கிறேன்.... :P//

   பாவம் வெந்த புண்ணில வேலைப் பாச்ச்க் கூடாது ......


   //அம்மணி.. நான் ஒரு கட்டுரையாகத்தான் எழுதினேன்.. கவிதையாகிவிட்டதோ? என்னே கொடுமை... எல்லாம் சிலரது ஸ்டேட்டஸ் மசேஜ்களை பார்ப்பதன் விளைவு :P //

   ஹ்ம்ம்ம்..... பரவாயில்லை நாங்களெல்லாம் பலருக்கு உதாரணமாய் இருக்கிறம் ...

   //கனககோபி said...

   கு்ணடா இருக்கிறது பிழையா?
   கறுப்பா இருக்கிறது பிழையா?
   சமத்துவம் எங்கே போயிற்று?
   கடுமையாகச் சாடுகிறேன்.... //

   பேசனலா எடுத்துக்கொள்ளாதே.. பொதுவாச்சொல்லியிருப்பார் ;-)//

   அதானே பெர்சனலா எடுக்கக் கூடாது ......

  51. //நேற்றைய எங்கள் ஒரு மணி நேர உரையாடல் இருக்கிற உண்மையை எல்லாம் கவிதை வடிவில் கொட்டட வச்சிட்டுதே...//
   உண்மையைச் சொல்லுங்கள் நேற்று நீங்கள் சொன்னவைகள் எல்லாம் உண்மைதானா?

   அப்ப, ஏன் "யாவும் கற்பனை" என்றொரு தலைப்பு?


   //எல்லாம் சரி அந்த தோடம்பழ விவகாரம் எனக்கும் புரியவில்லை..//
   புல்லட், எங்கிருந்தாலும் அரங்கத்திற்கு வருக...

   உந்த ஹோம்சயன்ஸ் கதை எப்படி உலகத்திற்கு பரவியது...?

  52. ஓக்கே ஓக்கே.. போண்டி அண்ணா அழுவுறான்... அதனால் அவனை விட்டுவிடுவம்...

   மற்றது ஆதிரை தாத்தா, ஹோம்சயின்ஸ் என்டால் என்ன கலர்.. சரி சரி விட்டுவிடுவம்.. பாவம் அவன்...

   Yet,கதை போவதை பாத்தால் உங்களுக்கு நிறய தெரியும் போல இருக்கு.. என்ட மெயில் தான் இருக்கே, ஒரு மெயில் அனுப்புவது.. முழு விபரத்துடன்.. :)

   I am WAITING (in high-excited pitch)

  53. //ஹோம்சயின்ஸ் என்டால் என்ன கலர்//
   நல்ல சிவலையாம்... தோடம்பழக்கலரில வதனமாம் - புல்லட் சொன்னது

   ///ஒரு மெயில் அனுப்புவது.. முழு விபரத்துடன்.. :)//
   ஏற்கனவே புல்லட் துரோகிப் பட்டம் சூட்டிவிட்டான். இது வேறயா...?

  54. //நல்ல சிவலையாம்... தோடம்பழக்கலரில வதனமாம் - புல்லட் சொன்னது//

   ஓ கதை அப்படி போகுதா... உவன் வேற என்னவோ அல்லவா சொன்னான்.. நான் சின்னப்பிள்ளையாம் அதல்லாம் சொல்ல முடியாது என்டு..

   //ஏற்கனவே புல்லட் துரோகிப் பட்டம் சூட்டிவிட்டான். இது வேறயா...?//

   அவன் கிடந்தான்..டோன்ட் வொறி.. நீங்கள் மெயில் அனுப்புங்கோ.. உங்களை எனக்குத் தெரியாது.. என்னை உங்களுக்குத் தெரியாது என்டு நடிப்பம்.. :)Pls Thatha.. இல்லாட்டி தலை வெடிக்கப்போகுது... if I die.. :-( ..உயிர் கொலை பஞ்சமாபாதகங்களில் ஒன்டு..

  55. //if I die..

   முன்னுக்குப் போனால், எனக்கொரு சீட் பிடிச்சு வையுங்கள். கட்டாயம் வருவேன். :P

  56. நான் சொர்க்கத்துக்கெல்லோ போவன்.. அங்க நீங்கள் கட்டாயம் வருவியள் என்டு என்ன நிச்சயம்... ஹி ஹி... அவனே வாய விட்டுப்போட்டு உங்களை துரோகி என்டுறானே.. சரியான மொக்கனாக இருக்கிறான்.. உண்மையா உவன் என்ஜினியரின் தான் படிச்சவனே...

  57. LOSHAN said...
   ஆகா.. புல்லட், நேற்றைய எங்கள் ஒரு மணி நேர உரையாடல் இருக்கிற உண்மையை எல்லாம் கவிதை வடிவில் கொட்டட வச்சிட்டுதே.. //

   அய்யோ ! நீஙக்ளுமா? உண்மையில்லை.. உண்மையாய் உண்மையில்லை..

   ஆனாலும் 'அண்ணா' என்பதற்காக சலிக்காதே.. அது வெகு விரைவில் கண்ணா எனவும் மாற இடமுண்டு.. ;)

   அப்படியா? சேசே! அப்படியெ்லாம் பயமுறுத்தப்படாது.. :P

   மாமா என்றால் தான் சிக்கல்.. எங்கள் மஜாப் பதிவரிடம் கேட்டுப் பார்.. //
   அப்படியா? அவரை வம்புக்கிழுக்காட்டா ஏன் உங்களுக்கு தூக்கம் வருவதில்லை ?

   எல்லாம் சரி அந்த தோடம்பழ விவகாரம் எனக்கும் புரியவில்லை.. //
   தற்போது புரிந்துவிட்டது எனக்கும் தெரியுமே!

   இன்னொரு முக்கிய கேள்வி.. சமூக சேவைக்காக.. நீர் இருக்ம் பிளாட் நம்பர் என்ன? ;) //

   அண்ணி என் பளொக் பார்ப்பதில்லையா? அண்ணி இங்க இவர் ஏதோ கேக்கிறார்.. குணா கமல் மாதிரி பாடுவார் பிறகு..

   பக்தி இரண்டில் இன்னும் சில விஷயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்/./ ;) //

   அடுத்தது கடுமையா யோசித்துதான் எழுதணும்..

   பி.கு - நேற்று நான் சொன்ன ஒரு 'ஈர்ப்பு' விஷயம் இப்ப தெளிவாகி விட்டது.. உனக்கு 3 கோடி நிச்சயமா இல்லை.. //

   அப்படீங்கறீங்க? அந்தப்பக்கம் இருந்தே வருவதால் நாங்கள் டிமாண்ட் பண்ணமுடியும்தானே? நிறைய இருக்காம்..

  58. PRAKASH said...

   அசத்தல் ஆனால் புல்லட்டுக்கு அனுபவம் இல்லையெண்டு சொல்றது கொஞ்சம் உறுத்தலாயிருக்கு . //

   நன்றி ..

   உறுத்தலா இருந்தால் ஊசி விட்டு நோண்டி வெளில எடுங்க.. உள்ள அழுக்குகள் இரக்கப்டாது.. :P

  59. தர்ஷாயணீ லோகநாதன். said...

   பாவம் வெந்த புண்ணில வேலைப் பாச்ச்க் கூடாது ...... //

   அது பிள்ளை


   ஹ்ம்ம்ம்..... பரவாயில்லை நாங்களெல்லாம் பலருக்கு உதாரணமாய் இருக்கிறம் ... //

   ம்ம் ...எல்லாம் கலிகாலம்


   அதானே பெர்சனலா எடுக்கக் கூடாது ...... //

   மறுபடியும் பார்ரா.. இது பிள்ளை

  60. கங்கோன் முகிலினி உரையாடியது..

   He told me that he wants a slim fair girl. //

   அய்யய்யோ.. நான் அப்படிச் சொல்லவேயில்லை.. பெரிய புரளிகளை கிளப்புகிறார்கள் .. நிறம் குறைந்த பெண்களில்தான் உண்மையான அழகு ஒளிந்திருக்கும்..குண்டுப்பெண்களை நிறை குறைக்க வைக்க எனக்கு டெக்னிக்குகள் தெரியுமகயால் நான் தற்போது அவர்களையும் குறைவாக பார்ப்பதில்லை.. இது நண்பர்களிடையே பூகம்பத்தை கிளப்பிவிடும் செயற்பாடு..

  61. ஆதிரையும் முகிலினியும் உரையாடியது..

   தோடம்பழக்கதையில் ஆதிரை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு்டுட்டார்.. நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன கதைக்கிறீர்கள்..

   அது சரி அதென்ன ஹோம் சயின்ஸ் கதை.. ? மற்றவன் புராணத்தை அறிவதில் அவனை விட மற்றவருக்குதான் ஆர்வம் அதிகமாயிருக்கிறது :-(

   3 கோடிக்கு முடிவுரை எழுதாமல் ஓமாட்டீர்களா நீங்கள்ளாம்?

  62. சாரி புல்லட் வாசிக்க பிந்திட்டுது ...
   பதிவு சூப்பர் , நிறைய பேர் நிறைய சொல்லிடினம் ....
   பாகம் 2 வரட்டும் ...
   அது சரி , நீங்க ரயில் திரட்டில ஏறமாட்டின்களோ ?

  63. Be careful Bullet.. Don't fall for women like Abirami.. I'm really worried about u! You seem to be very vulnerable..

   Anyway, you look good in that sun Glass. Don't worry about others' comments. :)

  64. VARO said...

   சாரி புல்லட் வாசிக்க பிந்திட்டுது ...
   பதிவு சூப்பர் , நிறைய பேர் நிறைய சொல்லிடினம் ....
   பாகம் 2 வரட்டும் ... //

   நன்றி வரோ..

   அது சரி , நீங்க ரயில் திரட்டில ஏறமாட்டின்களோ ? //

   ஏறோணும் டிக்கட் எடுக்க பஞ்சி..மற்றும்படி வேற ஒண்டுமில்ல..இப்ப இந்த கள்ள ணுட்டுப்பிரச்சனையையும் தீத்துட்டதங்கபோல.. கட்டாயம் இணைக்கவேணும்..

  65. Mathuri said...

   Be careful Bullet.. Don't fall for women like Abirami.. I'm really worried about u! You seem to be very vulnerable.. //

   Hey Pls believe me. It is not a true story. Ther is no one called Abiraami living closer to me.

   Thank you for your care and kindness.


   Anyway, you look good in that sun Glass. Don't worry about others' comments. :) //

   I feel shy. :P
   Thank you so much Mathuri.

  66. மாதுரி என்ட பெயரில் நீயே கொமன்ற் போட்டுள்ளாய் என்டு சொல்லினம்.. உண்மையா... அது சரி நேற்று "aviator screens" மற்றும் "சில", "பல" விடயங்களை கதைத்த பிறகு "அதே தொனியில்" ஒரு கொமன்ற் வந்திருப்பது தான் இடிக்குது. அதுவும் உன்னைப் போய் "vulnerable" என்டு சொன்னது எக்கசக்கமா இடிக்குதே... ஏன்டா இப்படி நீயே வாயக்குடுத்திட்டு நீயே கொமன்ற் போடுறாய்.. ஆனாலும் இது ரொம்ப ரொம்ப ஓவர்...

  67. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

   // முதலாம் தடவை என்றால் வெறொன்றை ட்ரை பண்ணலாம்..
   இரண்டாம் தடைவ என்றால் இன்னொன்றை ட்ரை பண்ணலாம்..
   இருபத்தைந்தாம் பெண்ணுக்கும் பாசக்கிளி பாட்டுப்பாட
   நானென்ன பட்டினத்தாரா?

   Better luck next time.
   முயற்சி உடையாற் இகழ்ச்சி அடையார் எண்டு பெரியவங்க சொன்னாங்கோ :P

  68. வாழ்த்துக்கள் புல்லட்

   தொடர்ந்து எழுதுங்கள்

   இவ்வாறு தொடர்வதைத் தான் "உரை நடை கவிதை" என்பார்கள். கதை நகரும் விதம் அருமை தொடர்ந்து வாசிக்க தூண்டியது.

   அது சரி இவ்வளவு நல்ல விதமா சொல்லிட்டேன் தானே அவள் வருவாளா என சொல்லிவிட்டு போங்கோ பிலீஸ்

   ம்ம் பொடி லோஷன் சாறி பேபி லோஷன் சொன்னது போல அண்ணா "கண்ணாவாக" மாறவும் சந்தர்ப்பம் உண்டு ஆனாலும் ஒரு சந்தேகம் பொடி லோஷன் பேபி லோஷனுக்கு இதில் அனுபவம் உண்டோ?