2012 - திகில்கதை

  2010 ம் ஆண்டு டிசெம்பர் 12 ஆம் திகதி..

  காலைச்சூரியன் பனிபுகார்களுடே தன்கதிர்களை நுழைக்க கடும் முயற்சி செய்து கொண்டிருந்தான்..  நான் ஒரு கையில் தேனீர்கோப்பையுடன் , குளித்து துடைத்தாலும் ஈரமாயிருந்த தோளில் துவாயுடனும் , ப்ளாட்டின் பின்னாலிருந்த சிறிய பல்கனியில் நின்று நீளமாக ஒரு கொட்டாவி விட்டேன்..

  சே .. உலகம் இன்னும் 2 வருடங்களில் அழியப்போகிறதென்று உறுதிப்படுத்திவிட்டார்கள்..
  என்ன கொடுமை.. ஒன்றையும் அனுபவிக்காமல் இளைமையிலேயே சாகப்போகிறேனே என்று கவலை கண்ணில் முட்டியது..
  உலக அழிவுக்கு முதல் 5 செக்கனில் என்ன யோசித்திக்கொண்டிருப்பேன் ? என்று கவலையுடன் சீரியசாக யோசித்தவாறே கொட்டாவியை எக்ஸ்டென்ட் பண்ணினேன் ..

  விட்ட கொட்டாவி பாதியிலே நிற்க என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன..
  காரணம் எதிர் ப்ளாட்டில் என் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் ஏதோ சன நடமாட்டம்..
  இத்தனை நாளாய் பூட்டிக்கிடந்த வீட்டில் பேச்சுச்சத்தம்..
  ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்த போது அந்த கதவு திறந்தது ..
  உள்ளிருந்து ஒரு சுமாரான பிகர் ஏதோ பாடிக்கொண்டே வெளியே வந்து என்னைப் பார்த்ததும் வெட்கப்பட்டு திருப்ப உள்ளே ஓடிவிட்டது..
  நானும் சிரித்துக்கொண்டே உள்ளே திரும்பினேன்..


  2011 ம் ஆண்டு டிசெம்பர் 12 ஆம் திகதி


  முன் வீட்டுப்பிகரை ஓரளவு மடக்கியாகிவிட்டது..

  சம்பளக்காசில் பாதியை அவளுக்கு பிரசன்டாக வாங்கி மாசாமாசம் அவள் வீட்டுக்குள் எறிவதும் , அதை அவள் தேப்பன் திருப்பி கீழ்வீட்டுக்காரனின் மனிசிக்கு எறிவதுமாக கடந்த ஒருவருடம் கழிந்து விட்டிருந்தது.. ஆனால் இன்று வாங்கி வந்திருந்ததை அவளுக்கு எப்படியாவது கையில் கொடுத்துவிடவேண்டும். ஏனெனில் அவள் ஒருநாளும் காலையில் நான் டீ குடிப்பதை புன்னகையுடன் தரிசிக்க தவறுவதில்லை.. இன்று பென்டோச் ஒன்று வாங்கி வந்துள்ளேன்.. எறிகிற எறியில் அவள் மண்டை உடைந்தாலும் பரவாயில்லை.. பறந்து போய் எதிர்வீட்டை அடையுமாறு பாரமான சாமானாக தேடி வந்துள்ளேன்.. உள்ளே என் லவ் லெட்டரும் சொருகியாகிவிட்டது..
  அதோ அவள் வருகிறாள்..
  ம்ம் புன்னகைக்கிறாள்..
  சரி எறியலாம் ” என்று எறியவெளிக்கிட்டவேளை ...
  அவளது பார்வை கீழ் ப்ளாட்டில் நிலைத்தது..

  ஒரு வெட்கப்புன்னகையும் அங்கே போயிற்று..
  அதிர்ச்சியடைந்த நான் விடுவிடு என்று கீழே எட்டிப்பார்த்தால் போனவாரம்தான் புதிதாய் குடிவந்த ஒரு குண்டுப்பையன் இவளுக்கு நூல் விட்டுக்கொண்டிருந்தான்.. இவளும் அவனுக்கு கொஞ்சம் பொறு என்று சைகை காட்டிவிட்டு உள்ளே போக , எனக்கு கபகப என்று கோபம் எரியாலாயிற்று…

  துரோகி சனியன் பிசாசு.. மீசை துடிக்க, ரத்தம் கொப்பளிக்க, திரைச்சீலை மறுபடியும் விலகுவதை கண்ட நான் கையிலிரந்த டோர்ச்சை ஆவேசமாக அவளை நோக்கி வீசினேன்..
  ஆனால் ..

  மடேர் என்ற சத்தத்தடன் கீழே அலறியபடி விழுந்தது அவளல்ல.. அது நானி கிழவி நானி..


  நாசமறுந்த கிழவி.. அதை எனக்கு கண்ணிலும் காட்டக்கூடாது.. பனடோலை பச்சையாக கடித்து சப்பிவிட்டு போறவாக்கில ராசா மோனே என்று பச்சக் என்று கிஸ் அடித்துவிடும் ..

  பிறகு அவருப்பில் வீடுவந்து ஹாப்பிக் போட்டுத்தான் கன்னத்தை கழுவுவேன்.. அந்தக்காலத்தில வேம்படி ஸ்போட்ஸ்காரியாம் என்று 90வயதாகியும் உயிருடன் இருக்கிறது.. எப்பவாவது பிகரை சந்திக்கப்போனால் முறாய்புடன் குறுக்கவந்து குழப்பிவிடும் .
  கிழடு இன்றைக்காவது என் புண்ணியத்தில் பொய்ச்சேரட்டும் என்று உள்ளே ஓடிவிட்டேன்..
  அத்தோட நாளைக்கு கீழ்வீட்டுக்குண்டனுக்கு வைக்கிறன்டா வெடி என்று மனது்க்குள் திட்டமும் தீட்டிக்கொண்டேன்..


  2012 மார்ச் முதலாம் திகதி..

  முன்னைய உற்சாகம் இல்லாவிட்டாலும் முன்வீட்டுப்பிகர் என்னை சைட் அடிக்கத்தான் செய்கிறது.. கிழவி நானி மண்டையைப்போமென்று பார்த்தால் , அது ஒரு மாதம் ஆஸ்பத்திரி கவனிப்பில நல்லா திண்டு தினவெடுத்து, இப்போ ஜிங்குஜிங்கு எண்டு குதித்துக்கொண் திரியுது.. கீழ்வீட்டுப்பெடியனுக்கு ஆள்வச்சு அடிச்சதில எங்க ஓடினானோ தெரியேல்ல..

  எல்லாம் ஒழுங்காயிருந்தும் எனக்கு ஒரே கவலை.. ”சே கலியாணம் கட்டாம சாகப்போறமே … என்ன கொடுமையிது.. ?  கொஞ்ச நேரம் சிந்தித்தவன் மளமளவென்று ஒரு மெயிலை திறந்து மஹிந்தமாமாவுக்கு ஒரு லெட்டர் எழுத ஆரம்பித்தேன்..

  மாமா எங்களைப்போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு ஒரு கலியாணம் கட்டி வையுங்கள் ப்ளீஸ்..”

  2012 ஜுன் முதலாம் திகதி..

  எனது கடிதத்தை படித்த ஜனாதிபதி உடனடியாக ஒரு ஏற்பாடு செய்திருந்தார்.. 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய திருமணம் செய்யவேண்டும்.. ஓகஸ்ட் முதலாம் திகதி எல்லாருக்கும் ஒரே நாளில் திருமணம்.. திறமையுடையவர்களுக்கு சிறந்த பெண்கள் கிடைக்குமடிப்படையில் , ஆண்களுக்கு ஓட்டப்போட்டி வைத்து , அவர்கள் ஓடிச்சென்று கைப்பிடிக்கும் பெண் அவர்களது மணப்பெண்ணாக அமையப்பெறும்.. ஆண்களையும் பெண்களையும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாரிய குழுமமாக நிறுத்தியிருப்பார்கள்.. தாரமிழந்தவர்கள் கணவனிழந்தவர்களும் பங்குபெற்றலாம்..


  அநிவித்தல் வெளியாகி நாலு மணித்தியாலத்தில் எல்லாப்பெடியங்களும் ஓடப்பழக ஆரம்பித்திருந்தார்கள்.. வழமைபோல , கடைசிநேரத்தில் எல்லாம் வெல்லலாம் என்று போட்டிக்கு பத்துநாட்களிருக்கும் போது நான் க்ரெண்ட்சுக்குபோனால் , அங்கே காட்டுக்குதிரைக்கு ஒரு ரௌண்ட் லீட்வைத்து ஓடிக்கொண்டிருந்தார்கள் அந்தக் கட்டையில போனவர்கள்.. எனக்கு காவாசி க்ரௌண்ட் ஓடவே கல்லீரல் கரைஞ்சு காதல வர ஆரம்பித்தது..

  என்னடா செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது , அன்றைய ப்ராக்டிசில் குதிரையை 3 க்ரௌண்ட் லீட்டில் வென்றவனை எல்லாரும் பாராட்டிக்கொண்டிருந்தார்கள்.. அவனை பார்த்த எனக்கு வாய் வயரிலடிப்பட்ட வவ்வால் போலாகிவிட்டது.. அவன் வேறுயாருமல்ல முன்னர் என்னால் அடித்து துரத்தப்பட்டஅந்த கீழ் வீட்டுக்குண்டன்..
  6 பக்சுடன் அருகில் வந்து கிசுகிசுத்து விட்டு சென்றான “டேய் மவனே அந்த பிகர் எனக்குத்தான்டா”;..


  2012 ஜுலை முதலாம் திகதி..


  “ ஜனாதிபதி அவர்களே.. ஆதிகாலத்திலருந்து பெண்களுக்காக ஆண்களையே போட்டி வைத்து பாடாய்படுத்துவது அபத்தமாகும்.. இந்த முறை பெண்களுக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள்..“ என்று உருக்கமாக மெயிலடித்துவிட்டு முதன்முறையாக , அவசரஅவசரமாக பதட்டத்துடன் ஏதிர்வீட்டுக்கு கோலெடுத்தேன்..


  போனையெடுத்து சொல்லுராசா என்ற நானிக்கிழவிக்கு ” அடப்பாடையில போறவளே...போனை அவளட்ட குடுக்கப்போறியா இல்லியா” என்று கத்திவிட்டு , பதறியடித்து போனில் வந்த பிகருக்கு விடுவிடு என்று திட்டத்தை விபரித்தேன்.. “இஞ்சபார் ! உன்னை நான் 3 மாசமும் கண்கலங்காம வைச்சு காப்பாத்துவன்.. என்னால இனி ஓடி அவனை வெல்லமுடியாது .. இவளவு காலமும் என்னைப்பாத்து சிரிச்சது உண்மையெண்டால் நீ இண்டையிலருந்து ஓடிப்பழகு”


  பிகர் ஓடிப்பழக ஆரம்பித்தது ..


  2012 ஆகஸ்ட் முதலாம் திகதி..

  விஞ்ஞானிகளின் கூற்று பிழைத்ததால் எக்கணமும் விண்கல் வந்து மோதலாம் என அறிவிக்கப்பட்டுவிட்டது.. அவசரஅவசரமாக சுயம்வர ஓட்டமும் அறிவிக்கப்பட்டது.. எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பெண்கள் பிரிவும் ஓடி மணாளனை கைப்பற்றலாம் என் 2 நாட்களுக்கு முன்னம்தான் அறிவித்தது.. ப்ராக்டிசில் மற்றப்பிள்ளைகளுக்கு 3 ரவுண்டு லீட் வைத்து ஓடியது எனடபிகர்.. என் பிளானின் படி தலையில் அவள் சாக்கைப்போட்டுக்கொண்டு ஓடிவந்து என்னைக் பிடிப்பதுதான் ப்ளான் .. வெறுமனே ஓடிவந்தால் குண்டன் பாதிவழியில் லபக்கென்று பிடித்துவிடுவானல்லவா?


  2012 ஆகஸ்ட் மூன்றாம் திகதி..:ஓட்டபந்தயத்திகதி


  ஜனாதிபதி வானத்தை நோக்கி சுட அனைவரும் ஓடலாயினர்.. அவள் தலையில் சாக்கைப்போட்டவாறு என்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள்.. நான் மகிழ்வாக பார்த்துக்கொண்டிருந்தேன்.. என்னோடு நின்றிருந்த எல்லாப்பையன்களும் அரைக்கிலோமீட்டர் ஓடிவட்டிருந்தார்கள்.. அதேவேளை அவளும் தனியாக அரைக்கிலோ மீட்டர்நடுப்பகுதியில் ஓடிவந்து கொண்டிருந்தாள் . எல்லாம் சக்சஸ் என்று சந்தோசமாக கையைதட்டியவாறு திரும்பிய எனக்கு பகீரென்றது.. பக்கத்தில் குண்டன் நரிச்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்..


  எனக்கு கணநேரத்தில் புரிந்து விட்டது.. எப்படியோ அவனுக்கு யாரோ சொல்லிவிட்டார்கள்.. அனேகமாய் அவளாய்த்தானிருக்கும் .. பகீரென்று நான் அவளை நோக்கி ஓட ஆரம்பிக்க அவனும் பறக்கலானான்..


  என் முழிபிதுங்கி பிரிமென்நகடு நசுங்கி பழைய ஆமட்கார்போல எலும்பெல்லாம் கடமுடகடமுடவென்று சத்தம் போடும் போது அவன் பிகரை நெருங்கிவிட்டான்.. ஏறத்தாழ தொட்டுவிட்டகணத்தில் அவள் கிளித்தட்டு போல அவனை உச்சி தப்பி என்னை நோக்கி ஓடிவர நானும் கடைசி மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு அவளை நோக்கி ஓடினேன்..

  கோபமடைந்த குண்டன் அவளை துரத்தி பிடிக்க முயன்றாலும் அவள் வெட்டி ஓடவே எனக்கும் அவளுக்கும் இப்போ இடைவெளி வெறும் 25 மீட்டர்தான்.. அந்தநேரத்தில் அவன் பாய்ந்து அவளை பிடிக்க முயற்பட , அவள் தலையை மூடியிருந்த சாக்கு அவன் கையில் மாட்டி கழன்று விட்டது.. தடுமாறிவிழுந்த அவள் எழும்பினால்..

  அது ..

  என்ட அம்மாடி ஐயோ .. அது அது.. அந்த நானிப்பாட்டி..

  கொஞ்ச நேரம் விக்கித்து நின்ற நான் நிலமை விளங்கியதும் என்ட ஐயையோ! என்று அழுது அலறியவாடி மறுபக்கம் திரும்பி ஓட ஆரம்பித்தேன்..  பின்னால் கண்ணா என்னை கட்டிக்கடா ராசா ” என்று கத்தியவாறு நானிப்பாட்டி நைட்டி பறக்க ஓடிவந்து கொண்டிருந்தாள்.. அந்த் பச்சக் வித் பனடோல் ஞாபகத்துக்கு வர , ”பிடித்தால் ? ஆத்தாடி!
  பின்விளைவுகளை எண்ணிப்பார்த்த நான் ஓடினேன் பாரு ஒரு ஓட்டம்..

  பின்னங்கால் பிடரியிலடிபட ஓடுதல் பழைய பாஷனாகையால் முன்னங்கால் மூக்கிலடிபட ஓடினேன்.. உயிர் கண்ட இடத்திலெல்லாம் ஊஞ்சலாடியது..

  இனிதாங்க முடியாது..
  கிழவி தொடப்போகிறாள்..
  ஐயோ இன்னும் 10 செக்கன் தூரம்தான்..
  இன்னும் 5 செக்கன் ..
  முடியப்போகுது என் கதை..


  அந்தக்கணம் அப்பர் கேட்ட அசரீரிபோல பொலீஸ்ஸ்டேசன் ஸபீ்க்கரில் ஏதோ கேட்டது..
  “ஐயோ மக்களே ! இன்னும் 5 விநாடிகளில் எம் பூமிசுக்குநூறாகப்போகிறது..”


  நெஞ்சில் யாரோ அஞ்சுலீட்டர் ஐஸ் பால்வார்த்தது போல இருந்தது..

  48 Responses

  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....................

   உங்களுக்கு கிழவி தான் மாட்டுது பாத்தீங்களா?
   ஐயோ ஐயோ....

   எழுதத் தெரியாது எழுதத் தெரியாதெண்டு சொல்லி வடிவாக் கதை எழுதியிருக்கிறியள்...

   வழமையான நகைச்சுவையை கதைக்குள் போட்டு அழகாக எழுதியிருக்கிறீங்கள்...

   (இவ்வளவு பெரிய பின்னூட்டத்துக்குக் காரணம் 'கதை அருமை... கலக்கீற்றீங்க பொங்க' பின்னூட்டம் இல்லை என்பதைக் காட்டத்தான்....)

  2. புல்லட் சும்மா பிச்சு கடாசீட்டீங்க......

  3. அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா... சுப்பர் 100% கலக்கல் பதிவு...

  4. ஹா..ஹா.. ஐயோ புல்லட்.. நானிப்பாடி கனவில வரப்போகுது தெரியாம படுக்கப்போகேக்க படிச்சுப்போட்டன்...

  5. அசத்தல் பாஸ். எனக்கும் இதே ஏக்கம் தான். உலகம் அழியும் முன் ஒருத்தியும் கிடைக்க மாட்டால எண்டு.

  6. கன்கொன் || Kangon said...

   ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..................... //

   என்னடா திகில் கதைக்கு சிரிக்கிறே?

   உங்களுக்கு கிழவி தான் மாட்டுது பாத்தீங்களா?
   ஐயோ ஐயோ.... //

   அதுதான் தப்பி ஓடிட்டமுல்ல..

   எழுதத் தெரியாது எழுதத் தெரியாதெண்டு சொல்லி வடிவாக் கதை எழுதியிருக்கிறியள்...
   வழமையான நகைச்சுவையை கதைக்குள் போட்டு அழகாக எழுதியிருக்கிறீங்கள்... //

   நன்றி சுவீட் ஹாட்.. :)

   (இவ்வளவு பெரிய பின்னூட்டத்துக்குக் காரணம் 'கதை அருமை... கலக்கீற்றீங்க பொங்க' பின்னூட்டம் இல்லை என்பதைக் காட்டத்தான்....)//

   மக்களே கவனிச்சுக்கொள்ளுங்க.. இவன் டெம்லேட் பின்னூட்டக்காரன்.. ஏதாவது பொட்டா நம்பாதீங்க

  7. அண்ணாமலையான் said...

   புல்லட் சும்மா பிச்சு கடாசீட்டீங்க......//

   யாரு கிழவியையா? சும்மா போங்க சேர்.. :Pமிக்க நன்றி பின்னூட்டத்துக்கு

  8. அனுதினன் said...

   அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா... சுப்பர் 100% கலக்கல் பதிவு...

   ரசித்தமைக்கு நன்றியப்பன் :-)

  9. //என்னடா திகில் கதைக்கு சிரிக்கிறே? //

   உதுக்குப் பேர் திகிலா?


   //அதுதான் தப்பி ஓடிட்டமுல்ல.. //
   ஆனா கிழவி உங்களுக்குப் பின்னுக்கு வந்ததால உங்கட உண்மையான வயசு உலகத்துக்கு தெரிய வந்திற்றுது...


   //நன்றி சுவீட் ஹாட்.. :) //

   கோவா படப் பாதிப்பு? :P


   //மக்களே கவனிச்சுக்கொள்ளுங்க.. இவன் டெம்லேட் பின்னூட்டக்காரன்.. ஏதாவது பொட்டா நம்பாதீங்க//

   அத வடிவாச் சொல்லோணும்....
   கதை, கவிதைக்குரிய ரெம்ப்ளற் பின்னூட்டம் தான் அது...
   மற்றதெல்லாத்தயும் வாசிச்சுத்தான் பின்னூட்டுவன்... ஹி ஹி... கதை கவிதை ரெண்டையும் வாசிக்க முயற்சிச்சுப் பாப்பன்... :)

  10. Balavasakan said...

   ஹா..ஹா.. ஐயோ புல்லட்.. நானிப்பாடி கனவில வரப்போகுது தெரியாம படுக்கப்போகேக்க படிச்சுப்போட்டன்...

   என்னாது கனவில நானியோட பாடி வருமா ? நல்ல டேஸ்டய்யா டாக்டரே!
   கவனம் டியர் பேசண்ட்ஸ்.. :P

  11. இளந்தி... said...

   அசத்தல் பாஸ். எனக்கும் இதே ஏக்கம் தான். உலகம் அழியும் முன் ஒருத்தியும் கிடைக்க மாட்டால எண்டு. //

   என்னாது உதே ஏக்கமா? யோவ்! எனக்கு அப்பிடில்லாம் ஒரு கம்மும் கிடையாது.. யாழ்தேவிப்பதிவுக்காக டக்குன்னு யோசிச்சு எழுதினேன்..விட்டா நம்மளயும் கூட்டணியில செர்த்திடுவாங்க பொலருக்கு..நாம எப்பவும் தனிக்கட்சி

   ஹிஹி.. கவலைப்படாதீங்க பாஸ்.. அப்பிடில்லாம் நடக்காது..நடந்தாலும் உங்களுக்கு கலியாணம் பண்ணிவைக்கவேண்டியது என் பொருப்பு..:P . நன்றி பின்னூட்டத்துக்கு ..

  12. நட்சத்திரப் பதிவர் ......வாழ்த்துக்கள்.

  13. கன்கொன் || Kangon said...

   //என்னடா திகில் கதைக்கு சிரிக்கிறே? //
   உதுக்குப் பேர் திகிலா?

   புல்லட் ! இந்த அவமானம் உனக்குத் தேவையா?

   //அதுதான் தப்பி ஓடிட்டமுல்ல.. //
   ஆனா கிழவி உங்களுக்குப் பின்னுக்கு வந்ததால உங்கட உண்மையான வயசு உலகத்துக்கு தெரிய வந்திற்றுது...

   எனக்காவது மனுச ஜென்மம்..உனக்கு பின்னால காரடி காட்டுப்பன்னி அப்பிடி ஏதாச்சும்தான் ஓடியாந்திருக்கும் .. :P

   //நன்றி சுவீட் ஹாட்.. :) //
   கோவா படப் பாதிப்பு? :P
   ஆத்தாக்டைசிக்கு அபண்டன்டா இருக்கிற ஒண்டை சாய்சா வச்சிக்குவோம்.. ;)

   //மக்களே கவனிச்சுக்கொள்ளுங்க.. இவன் டெம்லேட் பின்னூட்டக்காரன்.. ஏதாவது பொட்டா நம்பாதீங்க//
   அத வடிவாச் சொல்லோணும்....
   கதை, கவிதைக்குரிய ரெம்ப்ளற் பின்னூட்டம் தான் அது...
   மற்றதெல்லாத்தயும் வாசிச்சுத்தான் பின்னூட்டுவன்... ஹி ஹி... கதை கவிதை ரெண்டையும் வாசிக்க முயற்சிச்சுப் பாப்பன்... :)

   அப்ுபோ நானெழுதினது கதையில்ன்னு மறுபடியும் சொல்லுறியா?

   புல்லட் ! மறுபடியும் இந்த அவமானம் உனக்குத் தேவையா?

  14. archchana said...

   நட்சத்திரப் பதிவர் ......வாழ்த்துக்கள்.//

   இதென்னடா புது ட்ரெண்டாருக்கு? பரவால்ல நன்றி நன்றி..

   நம்ம திகில்கதையப்பற்றி ஒண்ணுமெ சொல்லாமப்போன என்ன அர்த்தம்? எழுதும்போதே வேர்த்துப்போச்சு அவ்ளோ திகில்..:P

  15. வாறே வாவ் ...
   புல்லட்டுக்கு இப்படி ஒரு கற்பனையா? 'காதல் மன்னன்' இளம்பெண்களுக்கு தான் என நினைத்தேன் , கிழவிகளுக்குமா?
   தள்ளாத வயதிலும் கிழவி புல்லட்டை பிடிக்க ஓடின ஓட்டம் ... எண்ட அம்மே !

  16. //”மாமா எங்களைப்போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு ஒரு கலியாணம் கட்டி வையுங்கள் ப்ளீஸ்..”//

   புல்லட்...போயும் போயும் உங்களுக்கு ஆள் கிடைக்காம போக்கத்த உந்த மாமாட்டையே கேட்டனீங்கள்.இப்போ மாமா வேலையும் சேர்த்தோ பாக்கிறாரம் அரசியலுக்க.அதான் கடைசில பாவமாப் போனீங்கள் !
   நல்லாத்தான் சிரிக்க வைக்கிறியள்.

  17. 'AuNtY' hErO??? :D

  18. //புல்லட் ! இந்த அவமானம் உனக்குத் தேவையா? //

   அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....


   //எனக்காவது மனுச ஜென்மம்..உனக்கு பின்னால காரடி காட்டுப்பன்னி அப்பிடி ஏதாச்சும்தான் ஓடியாந்திருக்கும் .. :P //

   சமாளிக்கப்படாது...
   நாங்களெல்லாம் றெமோ, மன்மதன் பரம்பரையாக்கும்... :P


   //ஆத்தாக்டைசிக்கு அபண்டன்டா இருக்கிற ஒண்டை சாய்சா வச்சிக்குவோம்.. ;) //
   :P
   நான் straight... :P


   //அப்ுபோ நானெழுதினது கதையில்ன்னு மறுபடியும் சொல்லுறியா?

   புல்லட் ! மறுபடியும் இந்த அவமானம் உனக்குத் தேவையா?//

   சீ சீ...
   எனக்கு விளங்கின கதை எண்டு சொல்ல வந்தன்...
   வழமையாக் கதை எழுதுறன் எண்டு சொல்லிப் போட்டு,
   'அணைந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அவள் கண்ணை வருடிக்கொண்டிருந்தது... தான் ஏன் வாழ்கிறேன் என்று தெரியாதவளாக அவள் 30 வருடங்கள் வாழ்ந்து முடித்துவிட்டாள்.. மணம்முடிக்க வந்தவர்களெல்லாம் அவளின் குறையைப் பார்த்தார்களேயொழிய அவளின் உண்மையான உள்ளத்தைப் புரிந்துகொள்ளவில்லை' எண்டு தானே எழுதுறவங்கள்.... :)

  19. << நானிப்பாட்டி நைட்டி பறக்க ஓடிவந்து கொண்டிருந்தாள்.. >>

   <>

   OMG! I can't stop laughing... OMG!

  20. திகில் கதை ...... நன்றாக இருக்கிறது.
   (எனக்கே சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் சிறந்த நகைச்சுவை கதை.)

  21. நல்ல கற்பனை.
   ps: ஜெமினிகணேசன் இதைப் பார்த்தால் ரொம்பவே பீல் பண்ணுவார்

  22. அண்ணே,

   வழக்கம்போல கலக்கல்,

   உண்மையிலயே திகில் கதைதான்,
   பூமி அழியிறதும் நல்லதுக்குத்தான் ஹீஹீ

   //”மாமா எங்களைப்போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு ஒரு கலியாணம் கட்டி வையுங்கள் ப்ளீஸ்..”//

   என்னாதுது? மாமாவா??

   //அவள் தலையை மூடியிருந்த சாக்கு அவன் கையில் மாட்டி கழன்று விட்டது.. தடுமாறிவிழுந்த அவள் எழும்பினால்//

   சாக்குக்குள் சதியா??..ஹிஹி

   //நெஞ்சில் யாரோ அஞ்சுலீட்டர் ஐஸ் பால்வார்த்தது போல இருந்தது..//

   ஹாஹா...

   மறுபடியும் கலக்கலுங்ணா....;)

   அந்த பிகரை கடைசில யாரு பிடிச்சது..:p

  23. VARO said...

   வாறே வாவ் ...
   புல்லட்டுக்கு இப்படி ஒரு கற்பனையா? 'காதல் மன்னன்' இளம்பெண்களுக்கு தான் என நினைத்தேன் , கிழவிகளுக்குமா?
   தள்ளாத வயதிலும் கிழவி புல்லட்டை பிடிக்க ஓடின ஓட்டம் ... எண்ட அம்மே ! //

   கடவுளே.. நீங்கள் காதல்மன்னன் எண்டு கதையைக்கட்டிவிட , அங்க உங்கட ப்ளொக்குக்குகீழ என்ன என்னைய பொம்பிளைப்பொறுக்கி எண்டு எல்லாம் எழுதுறாங்கள்.. அதுவும் பொம்பிளையள் எழுதுதுகள்.. .. தாய்குலம் வந்தா தள்ளி நிண்டு கதைக்கிற ஆள நான்.. என்னை இப்பிடியாக்கிட்டியளே? இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா? ஐயகோ!

   எல்லாம் பகிடிக்குத்தான் மக்காள் !
   சீரியசா எடுத்து சீதனத்தில கைய வச்சிடாதீங்க .. :P

  24. ஹேமா said...

   புல்லட்...போயும் போயும் உங்களுக்கு ஆள் கிடைக்காம போக்கத்த உந்த மாமாட்டையே கேட்டனீங்கள்.இப்போ மாமா வேலையும் சேர்த்தோ பாக்கிறாரம் அரசியலுக்க.அதான் கடைசில பாவமாப் போனீங்கள் !
   நல்லாத்தான் சிரிக்க வைக்கிறியள். //

   மேடம் ஹேமா..நோ பாட் டோக் எபௌட் அவர் மாமா. :P , பிறகு சுவிஸ்ல இருந்து எவன் கெட்டலும் விசாவை கவிட்டுத்தான் குத்துவம் சொல்லிக்கிடக்கு. :P

  25. deepthi said...

   'AuNtY' hErO??? :D //

   அதுக்கென்ன?

   சமீரா Aunty ஆனால் நான் எந்த ஹீரோவாகவும் ரெடி.. சமீரா ரெடியா? ;)

  26. கன்கொன் || Kangon said...

   நாங்களெல்லாம் றெமோ, மன்மதன் பரம்பரையாக்கும்... :P //

   றெமோ? மூறைமாறாட்டக்கேசோ? குட்குட்..
   மன்மதன்? பொம்பிளையளை கெடுத்து கொலையும் பண்ணுவியா? குட்குட்..


   நான் straight... :P //
   கோவா படம் 4 தரம் பாத்துமா?


   வழமையாக் கதை எழுதுறன் எண்டு சொல்லிப் போட்டு,
   'அணைந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அவள் கண்ணை வருடிக்கொண்டிருந்தது... தான் ஏன் வாழ்கிறேன் என்று தெரியாதவளாக அவள் 30 வருடங்கள் வாழ்ந்து முடித்துவிட்டாள்.. மணம்முடிக்க வந்தவர்களெல்லாம் அவளின் குறையைப் பார்த்தார்களேயொழிய அவளின் உண்மையான உள்ளத்தைப் புரிந்துகொள்ளவில்லை' எண்டு தானே எழுதுறவங்கள்.... :) //

   செத்தடா மவனே நீ.. அவனவன் எவ்வளவு கஸ்டப்பட்டு கதையெழுதிப்போட்டு இருக்காங்கள்.. உனக்கு நக்கலா?

  27. OMG! I can't stop laughing... OMG!

   அந்த வசனத்தில என்ன கிடக்கெண்டு இப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறியள்?

   அதுசரி அப்ப மிச்ச வசனம் ஒண்டும் பிடிக்கலியா? :(

  28. கடைசியாக அந்தப் பூங்குழலியையே கைப்பிடிப்பாய். நல்லதொரு விஜய்த்தனமான பதிவு என்று பின்னூட்டலாம் என்றால், நானி வந்து கெடுத்திட்டாளே...

   அதுசரி, சின்னமாமாவுக்கும் கடிதம் எழுதிறனீங்களோ..?

  29. archchana said...

   திகில் கதை ...... நன்றாக இருக்கிறது.
   (எனக்கே சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் சிறந்த நகைச்சுவை கதை.)

   சும்மாதான் கெட்டேன்... இது நகைச்சுவையாத்தன் போட்டுது.. நாம துச்சாதனனன் துகிலுரிந்த கதையக் கூட திகிலா எழுதுவது கஷ்டம்.. கடைசியா காமெடியாத்தான் முடியும்..

   அது சரி உங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமோ? ஹ்ம்ம்..

  30. //றெமோ? மூறைமாறாட்டக்கேசோ? குட்குட்..//
   சீ சீ...
   அந்த கதாபாத்திரம் மாதிரி ஒரு ஆணழகன் எண்டு சொல்ல வந்தன்...

   //மன்மதன்? பொம்பிளையளை கெடுத்து கொலையும் பண்ணுவியா? குட்குட்.. //

   இது சிம்புன்ர மன்மதன் இல்ல...
   இது ரதியின்ர புருசன் மன்மதன்...
   பழைய காலம்...
   நான் அந்தப் பரம்பரை...


   //கோவா படம் 4 தரம் பாத்துமா? //

   இன்னும் ஒருக்காலும் பாக்கேல...
   ஆறுதலாப் பாப்பம்...


   //செத்தடா மவனே நீ.. அவனவன் எவ்வளவு கஸ்டப்பட்டு கதையெழுதிப்போட்டு இருக்காங்கள்.. உனக்கு நக்கலா?//

   நான் என்ன நக்கலாச் சொன்னான்?
   நான் சொன்னதில உள்ள நக்கலைச் சொல்லவும்...

  31. //நானி வந்து கெடுத்திட்டாளே...//

   என்னாது?
   அப்ப புல்லட் அண்ணான்ர 3 கோடி சீதனத்துக்கு ஆப்பா? :P

  32. கல்பனா said...

   நல்ல கற்பனை.
   ps: ஜெமினிகணேசன் இதைப் பார்த்தால் ரொம்பவே பீல் பண்ணுவார் //

   காதலமன்னன் கிழவி என்னைத்துரத்தியதற்காக என்னத்தை பீல் பண்ணப்போகிறார்? வேணுமெண்டால் வாசிச்ச களைப்பில 2 தோடம்பழமத்தை பீல் பண்ணி சாப்பிடுவார்.. அவளோதான்..

  33. Bavan said...

   அண்ணே,

   வழக்கம்போல கலக்கல், //

   டேய் நீ டெம்லேட்டை கொபி கிட்டருந்த வாங்கிட்டியா? வடுவா..:P

   உண்மையிலயே திகில் கதைதான்,
   பூமி அழியிறதும் நல்லதுக்குத்தான் ஹீஹீ

   திகில் கதைன்னு ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.. நீதான் சாருநிவேதிதாவை பொம்பிளை என்று நினைத்து ஆன்டி என்றாளள்லோ? :P

   என்னாதுது? மாமாவா??

   இல்லை வேற எப்டி நெருக்கமா கூப்பிடுறது? ஒண்டுவிட்ட சித்தப்பா எண்டலாமோ?

   சாக்குக்குள் சதியா??..ஹிஹி

   சாக் மாநாட்டில் சதி நடநடதால்தான் சிக்கல்.. இதெல்லாம் ஜுுஜுபி

   மறுபடியும் கலக்கலுங்ணா....;)

   அது!

   அந்த பிகரை கடைசில யாரு பிடிச்சது..:p

   ஏதாவது விண்கல்லில தொங்கிட்டுவந்த வேற்றுக்கிரக ஜந்த தூக்கிட்டுப்போயிருக்கும்..
   ( எதையும் லெந்தா கொஞ்சம் லந்தா யோசிப்பான் இந்த புல்லட்.. :) )

  34. ஆதிரை said...

   கடைசியாக அந்தப் பூங்குழலியையே கைப்பிடிப்பாய். நல்லதொரு விஜய்த்தனமான பதிவு என்று பின்னூட்டலாம் என்றால், நானி வந்து கெடுத்திட்டாளே...//

   இன்னா ஒரு வில்லத்தனம்? ஹம்! ஆனால்பின்னூட்டம் ஆதிரைத்தனமாகவே அமைந்துவிட்டது சந்தொசம் .. :P ..

   அதுசரி, சின்னமாமாவுக்கும் கடிதம் எழுதிறனீங்களோ..?//

   எழுதி பிபிசியிடம் கொடுத்திருக்கிறேன்.. அடுத்த முறை இன்டவியு எடுக்கப்போகும்போது நேரில கொடப்பார்கள்.. :P

  35. This comment has been removed by the author.
  36. கன்கொன் || Kangon said...

   //நானி வந்து கெடுத்திட்டாளே...//

   என்னாது?
   அப்ப புல்லட் அண்ணான்ர 3 கோடி சீதனத்துக்கு ஆப்பா? :P //

   சீதனம் வாங்குவது எவ்வளவு கேவலமான விடயம் என்று உனக்குத்தெரியாது? ஏனிப்படி இளைய சமூகமும் நாறிப்போன கலாச்சாரங்களுக்குள்ளெயே ஊறிக்கிடக்கிறீர்கள்.. சே ுசே! கேவலம் கெவலம்.. உன்னை தம்பி என்று சொல்ல வெட்கப்படுகிறென்.. :( ( ;)இது எப்டி இருக்கு? )

  37. // ஏதாவது விண்கல்லில தொங்கிட்டுவந்த வேற்றுக்கிரக ஜந்த தூக்கிட்டுப்போயிருக்கும்..
   ( எதையும் லெந்தா கொஞ்சம் லந்தா யோசிப்பான் இந்த புல்லட்.. :) )

   asteroid இல எப்படி தொங்கிட்டு வரமுடியும்?
   - இடக்காக யோசிப்போர் சங்கம்

  38. கல்பனா said...

   asteroid இல எப்படி தொங்கிட்டு வரமுடியும்?
   - இடக்காக யோசிப்போர் சங்கம் //

   அப்போ குந்திக்கின்னா வரமுடியும்?


   அதுல ஏதாவது கல்லைப்பிடிச்சு தொங்கிட்டிரக்கும் அந்த ஜந்து .. அதோட 30000 டிகிரி செல்சிய்ஸ் வெப்பநிலையையும் தாங்கும்.. ஆகுவே பிரச்சனை கிடையாது..

   கல்பனாங்கிற பெயரை வச்சிருக்கிறதுக்காக விண்வெளிண்டவுடன உஜாராயிட்டீங்களே?

   அதுல்லாம் நம்ம கிட்ட நடவாது..


   இடக்காக கேள்விகேட்போருக்கு மடக்காக பதிலளிப்போர்சங்கம்..

  39. // கல்பனாங்கிற பெயரை வச்சிருக்கிறதுக்காக விண்வெளிண்டவுடன உஜாராயிட்டீங்களே?

   :)

  40. //சீதனம் வாங்குவது எவ்வளவு கேவலமான விடயம் என்று உனக்குத்தெரியாது? ஏனிப்படி இளைய சமூகமும் நாறிப்போன கலாச்சாரங்களுக்குள்ளெயே ஊறிக்கிடக்கிறீர்கள்.. சே ுசே! கேவலம் கெவலம்.. உன்னை தம்பி என்று சொல்ல வெட்கப்படுகிறென்.. :( ( ;)இது எப்டி இருக்கு? )//

   அன்பான மக்களே,
   இவர் நடிப்பதை உலகமறிய காட்ட விரும்புகிறேன்...
   இந்த 3 கோடிக் கதையை யார் தொடக்கியது, யாரின் கதை, யாரின் திட்டமது என்பதைப் பாருங்கள்...

   http://yfrog.com/jnsp32114g

  41. பாட்டிகளின் கனவுக் கண்ணா, நானிகளின் மன்னா அப்ப எல்லாரையும் 2012இல அனுப்பத்தான் போறீங்களோ?

  42. ஐயோ பாவம் நீங்களல்ல பாட்டி....

  43. மிஸ்டர் புல்லட்,
   உங்க கதையும் புல்லட் வேகத்தில் பயணித்தது. நல்ல கதை...

   நானும் இன்னிலருந்தே ஓட்டப்பந்தயம் பழகிக்கிறேன். புடிச்ச பிகரை ஓடிப்பிடிக்கவும் உதவும், பிடிக்காத பிகர் நம்மை துரத்தினால் தப்பித்து ஓடவும் உதவும்.

   அன்புடன்
   ஹரீஷ் நாராயண்

  44. //அது சரி உங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமோ? ஹ்ம்ம்..//

   ரொம்ப ஈசி ஆனால் ......... நான் சிரிப்பதா வேண்டாமா என்ற முடிவும் உங்கள் மாமாவிடமே கேட்கவேண்டும். கேட்டு சொல்ல முடியுமா?

  45. சீரியசா எடுத்து சீதனத்தில கைய வச்சிடாதீங்க .. ://

   நீரும் பொல்லை குடுத்து அடி வாங்கிற ஆளோ?
   நகைச்சுவை பதிவு எழுதுறதுக்கும் நகைச்சுவையாய் யோசிக்கிற திறமை வேணும். உம்மிடம் அது இருக்கு வாழ்த்துக்கள்.

  46. வாவ்....இவ்வளவு நல்லா எழுதுறிங்கள்....! உண்மையா கதை நல்லாயிருக்கு.
   ஆனா கடைசியில உலகம் அழியாம இருந்திருக்கக் கூடாதா...நானிப் பாட்டிய மிஸ் பண்ணிட்டிங்களே... ச்சே !!! கதையை வாசிச்சதிலயிருந்து, எங்க கிழவியலைக் கண்டாலும் ஒரே சிரிப்பா வரூது..... நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்கள் ...

  47. காதல் கனவொன்றை மசாலாப் படமாக கற்பனையாக தந்திருக்கிறீர்கள்.....

   ordovision,devonion, permion, trasic,carboniferose அழிவுகளுக்கு பிறகு மிகப்பெரிய அழிவொனறு உண்மையாக காத்திருக்கிதாம். அது தானாம் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டமும் அதிகமாய் கிடக்காம்...

  48. முதலில் நட்சத்திரப் பதிவர் வாழ்த்தைப் பிடித்துக் கொள்..

   உலகம் அழியிறது, மாமாவுக்குக் கடிதம் எழுதுவதெல்லாம் ஒரு பக்கம் கிடக்க, வந்தி வெளிநாடு போன இடைவெளி நிரப்ப யாரப்பா புல்லட்டை நியமித்தது?
   கொஞ்சக் காலமா ஒரே பிகர் கைப்பற்றலும், கலியாணக் கனவுக்களுமாக் கிடக்கு.. ;)

   அம்மாவைக் கண்டு பொடியன் பற்றி சொல்லத் தான் வேணும்,., இரவு எட்டு மணிக்குப் பிறகு சங்கம்,சைவ மங்கையர் கழகப் பக்கம் காணும்போதே நினைத்தேன்..
   ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

   ஆனால் அசத்தல் கதை.. உண்மையிலேயே 'திகில்' தான்.. ;)
   உலகம் அழிஞ்சிரா விட்டாலும் நானிக் கிழவியிடம் புல்லட் அகப்பட்டிருந்தால் புல்லட்டின் உலகம் அழிஞ்சிருக்கும் தான்.. ;?)

   அந்த குண்டன் கற்பனையில்லாவிட்டால், நமக்கு தெரிந்த ஒரு செல்லப் பதிவன் தானே? ;)