கொசுத்தொல்லை  தொடர்ந்து 3 ஹிட் கொடுப்பது தவறாகையால் இதோ ஒரு ப்ளாப்.. :P

  இன்று கணணி முன்னால்உட்கார்ந்ததும் ஒரே நுளம்பு.. சரியான எரிச்சல்.. ஆகுவே அந்த சனியனைப்பற்றியே எழுதுகிறேன்.. சும்மா வாசித்துப்பாருங்கள்..
  நேரே விடயத்துக்கு போக விரும்புபவர்கள் மண்ணிறத்திலுள்ள பகுதியை தவிர்க்கவும்.. ஓட்டு மற்றும் பின்னூட்டம் போட்டு அன்புகாட்டும் அனைவருக்கும் நன்றி.. :)

  நான் கம்பசில படிக்கிற காலத்தில நண்பர் ஒருவரோட சேர்ந்து சொய்சாபுரத்தில ஒரு ப்ளட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்தோம்.. ஆமிப்பயத்தால இரவில ஒரு அங்கிள் ( 65 வயசிருக்கும் ) வந்து படுக்கச்சொல்லி கேட்டிருந்தபடியால் , பாவம் மனுசன் இரவில சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு வந்து படுத்துட்டு காலை 6 மணிக் கெல்லாம் எழும்பி ஓடிடும்..
  அந்தாள் பாக்க வெள்ளைச் செந்தில் மாதிறி இருப்பார்.. கொஞ்சம் சின்னப்பிள்ளைமாதிரி பிகேவ் பண்ணும்.. பாத்ருமுக்க போய் கரப்பான கண்டால் ” ஐயோ வண்டு (ஏன் வண்டென்கிறார் என்று எனக்கு தெரியாது!)” எண்டு குழறி ஊரை யே கூப்பிடுறகேஸ் .. தேமஸூக்க சுடுதண்ணிய கொண்டு கரப்பானுக்கு பின்னால ஊத்தியபடி ஓடித்திரியும்..

  இரவில சம்மாடிகட்டிக்கொண்டு இருந்து டீவி பாப்பார்.. அப்பிடியே சம்மாடி கட்டினபடியே சொய்ங் எண்டு விழந்து நித்திரையாயிடுவர்.. எங்களுக்கும் ஜோக்காயிருந்தபடியால் பயங்கர அன்பு அவரில.. ஆனால் அந்தாள் ஒருநாள் வீட்டைவிட்டு துண்டைக்காணம் துணியக்காணம் எண்டு ஓடினது கடைசி வரைக்கும் திரும்பி வரவேயில்லை..

  எங்களுக்கெல்லாம் சரியான கவலை.. அவ்வளவு காலம் இருந்துட்டு அந்தாள் சொல்லாமக்கொள்ளாம ஓட காரணம் வே‌ற ஒண்டுமில்ல : எல்லாம் அந்த நாசமறுந்த நுளம்புகள்...

  ஒரு கால கட்டத்தில மொரட்டுவை புல்லா நுளம்பு பெருகி வாயத்திறந்தா நாலு நுளம்பு உள்ள போற நிலமையில பலபேர் டெங்கு வந்து செத்தும்போனாங்கள்.. நாங்களும் பயத்தில மோட்டீன் கொயில் , நிஞ்சா வேப்பரைசர் , டிஞ்சர் மட் அது இது எண்டு பலதை போட்டும் இரவெண்டால் அறையெல்லாம் ”ஙீஎண்ட சத்தம்தான்..

  அதிலும் இரவ கரண்ட நிப்பாட்டிவிட்டாங்களோ , பானுமிருக்காது ; வியர்த்து வழிஞ்சு முகமெல்லாம் எரியும் பொது , பெட்சீட்டை தள்ளி எறிஞ்சிட்டு இருக்கும்போது காதுக்க வந்து அதுகள் சத்தம்போடும் பாருங்கோ! அப்ப அனுபவிப்மே ஒரு உணர்வு , அதை வெண்ட சித்திரவதை சீனர் கூட கண்டுபிடிச்சிருக்கமாட்டாங்கள்..

  அப்பதான் ஒருக்கா உந்த சித்திரனெல்லா ஒயில் பற்றி அப்பா யாழ்ப்பாணத்திலருந்து சொன்னார்..


  சரியெண்டு
  அதில ரெண்டு பொத்தில வாங்கியந்து லைட்டா புசிட்டு படுக்க , கொஞ்ச நேரத்தி அந்த அங்கிள் மூக்குக்குள ஏதோ பூச்சி புகுந்துவிட்டது போல ”ங்க்சு.. ங்க்சு” எண்டு கொண்டு வந்தார்.. என்னப்பா தம்பி பிணநாத்தம் நாறுது ? எங்கயிருந்து வருது ? ” எண்டு விசாரிச்சவருக்கு எண்ணெயின் மகத்துவங்களை விளக்கி , அசந்த நேரம்பாத்து ஆளுக்கும் கொஞ்சம் பூசி அவரை படுக்கச்செய்தம்..


  அடுத்தநாள் ஆளுக்கு முகமெல்லாம் சிவந்து வீங் , கண்ணெல்லாம் பொருமி , வாந்திபேதியெல்லாம் புடுங்கி 2 நாள் ஆசுப்பதிரியில.. அதுக்குப்பிறகு ஒரு கிழமை கழிச்சு நாம கெஞ்சிக்கூத்தாடி , இனி அந்த எண்ணெய தொடமாட்டம் எண்டு உறுதிவாங்கிப்புறம் ஆள் திரும்ப வந்தார்..


  ஒழுங்கா ஒரு மாசம் போயிருக்கும்.. ஒருநாள் மறுபடியும் நுளம்பு தாங்காமல் ‌ எண்ணெய பூசுவமெண்டு போட்டு மெதுவா அங்கிள் நித்திரையோ எண்டு எட்டிப்பாத்தம்.. ஆள் சம்மாடி கட்டின படிக்கு நாலாஞ்சாமத்தில.. சரியெண்டு எண்ணெய எடுத்து மெதுவா பூசும்போது , சனியன் பிடிச்சது கைதட்ப்பட்டு அந்தப்போத்தில் கீழவிழுந்து உடைஞ்சு போய்ட்டு.. எண்ணெய் எல்லா இடமும் பரவி ஒரு 10 செக்கனில அடிச்சுது பாருங்கோ ஒரு மணம்.. என்னாலயே தாங்க முடியல.. என்னடா செயயுறது எண்டு பாத்துக்கொண்டிருக்க.. அறைக்க இருந்த அங்கிள் சேட்டும்போடாமல் பெட்சீட்டையும் போத்திக்கொண்டு ஓடினார் பாரு ஒரு ஓட்டம் ”ங்க்சு ங்க்சு” எண்டுகொண்டு .. அதுக்கு பிறகு அந்தாளை சொய்சாபுரப்பக்கம் காண‌வே கிடைக்கேல்ல.. பாவம்.. :(  இதை ஏன் சொல்லுறனெண்டால் இந்த நுளம்புத்தடுப்பு பற்றி கதைக்கத்தான்.. உங்களையெல்லாம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி சிரட்டைய கவிட்டுப்போடுங்கோ.. கோம்பையை கொத்திப்போடங்கோ எண்டு கேட்கப்போறேல்ல.. ஆனா நுளம்பு ஒழிப்பு தொடர்பா உலகத்தில என்னென்ன நடக்குது எண்டுதான் லைட்டா சொல்லப்போறன்..  முன்னல்லாம் மத்திய கோட்டை சுற்றி கொஞ்ச இடம்தான் நுளம்பு இருந்துது.. ஆனா இப்ப உலக வெப்பமாதலால பனியெல்லாம் உருகி ஆப்கான் வரையும் நுளம்பு கொடிகட்டிப்பறக்குது.. குளிர்நாடுகளிலயும் சமர் எண்டால் நுளம்புத்தாக்குதல்..


  மனிதனுடைய வாழ்க்கைய துன்பமாக்கிற தூக்கத்தை நரகமாக்கிற இந்த நாச ஜந்துவை உலகத்தை விட்டே ஒழிக்கவேண்டுமென்ற கருத்து எனக்கு மட்டுமல்ல உங்கள் எல்லாருக்கும் கூட இருக்கும் எண்டு எனக்குத்தெரியும்.. இந்த மலேரியா மட்டும் எத்தினைபெரை வன்னியில கொண்டிருக்கும்? அண்மையில கண்டெடுத்த பாரோ (எகிப்திய மன்னன்களை குறிபிடுவார்கள்) மம்மி ஒன்று கூட மலேரியாவாலதான் செத்ததெண்டு கண்டுபிடிச்சிருக்கினம்..


  இந்த நுளம்பு வெள்ளைக்காரனுக்கும் பிரச்சினை தருறபடியால் அவனும
  களத்தில இறங்கிவிட்டான்.. அதன் காரணமா நிறைய தயாரிப்புகள் , நிறைய கண்டபிடிப்புகள்..

  நுளம்பு மெழுகுதிரி .. நுளம்பை அருட்டும் அதிர்வலைகளை உருவாக்கும் இயந்திரம்.. வெளிச்சத்தால் கவர்ந்து மின்சாரத்தால் கொல்லும் பொறிகள் என்று ஏராளம் .. இப்ப நுளம்படிக்கிற றக்கட் எல்லாம் இலங்கையிலயே தயாரிக்கிறாங்கள்.. ( அதால சும்மா பிள்ளைகளுக்கு படக்கு படக்கு எண்: சத்தம் போட்டு வேடிக்க‌ை காட்டலாம் வேற புண்ணாக்கு ஒண்டுமில்ல அநியாயக்காசு.. ) ஆனால் அவையெல்லாவற்றாலும் கூட அந்த நாச ஜந்துவை முற்றாக அழிக்க முடியாது ..
  எனவே கண்டுபிடிப்புகள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறன..
  மைக்ரோசொப்ட் கூட தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை நுளம்படிப்பதற்கு ஓதுக்கி வைத்துள்ளது.. மைக்ரோ சொப்டில் ந்ல உயர்பதவியிலிருந்த ஒரு மென்பொருட்பொறியியலாளர் தன்பதவியை ராஜினாமாச்செய்து அந்த நுளம்படி நிறுவனத்தில இணைந்து ஆராய்ச்ிகளை மேற்கொண்டார்..
  அவருக்கு கிடைத்த ஐடியாப்படி ஒரு பழைய லேசர் பிரிண்டரை உடைத்து அதிலிருந்த உபகரணங்கள் மூலம் ரேடார் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நுளம்புகளை சுட்டுவிழத்தும் உபகரணத்தை கண்டுபிடித்தார்.. வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் வரும் இத்தகைய உபகரணங்களை வீட்டு வளவில் பூட்டிவிட்டால் கோடிக்கணக்கில நுளம்புகளை கொன்று குவிக்கலாமாம்..  எந்த பிராணியும் கொல்லப்படும்போது வேதனையாயிருக்கும்.. ஆனால் இந்த சனியங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதை பார்க்க எவ்வளவு சந்தொசமாயிருக்கிறது? நீங்களும்தான் பார்த்து ரசியுங்கள்.. நிச்சயமாக 2 தடவை பார்ப்பீர்கள்.. :)
  ஒரு கதையை சொல்லி இந்த வதைப்பதிவை
  முடிக்கிறென்..  சீனாவில் world war காலங்களின் பின் பட்டினி உருவானதாம்.. காரணம் சிட்டுக்குருவிகள் பெருகி அவர்கள் உற்பத்தி செய்த தானியங்களை தின்று தள்ளிக்கொண்டிருந்தன.. ஆகவே அவர்களது அரசாங்கம் ஒரே நாளில் ஒரு முடிவு எடுத்தது. மனிதனா குருவியா? யார் உயிர்வாழ்வது? மனிதன் தன் பக்கம் சாரந்துவிட ஒரே நாளில் பலகோடிக்கணக்கான குருவிக்கூடுகள் அழிக்கப்பட்டன.. எல்லாரும் ஒரு தேசிய நாள்போல குருவி அழிப்பு நாளை நிகழ்த்தினர்..

  தொடர்ந்து அடுத்த இவ்விருமாதங்களில் இந்த குருவி அழிப்புநாள் அமுல்படுத்தப்பட்டு சிட்டுக்குருவிகளே சீனாவில் இல்லாது போயின.. அதேபோல மாலைதீவில் காகங்கள்.. அவர்கள் தங்களது கூரையில்விழும் நீரையே சேர்த்து பயன்படுத்துவதால் காகங்களுக்கு அங்கு மரணகண்டம் ஆயிற்று..  இதே போன்ற ஒன்றை உலகமே நுளம்புக்காக நடத்தவேண்டும்.. நுளம்புகளை இந்த உலகத்தை விட்டே ஒழிக்கவேண்டும்...


  அப்போதான் ,
  ஒரு நிலாக்காயும் நாளில் ,
  முற்றத்து மாமரத்தினடியில் ,
  தென்றல் தாலாட்ட கண்மயங்கும்
  பேரனுடன் கொஞ்சிவிட்டு ,
  அப்படியே நித்திரையாய்ப்போய்விடமுடியும்..
  ;)

  ( பிகு: பீலிங்க்ஸ் பீலிசிவம் என்று பட்டம் தரநினைப்பவர்கள் மாலை 8 மணிக்கு பின்னர் டபிள்யு டபிள்யு டபிள்யு டாட் பிச்சுமணி ‌ டாட் கொம்முக்கு வரவும்)

  மேலதிக தகவல்கள்: http://intellectualventureslab.com/?p=653
  http://fatfinch.wordpress.com/2008/07/14/the-great-sparrow-wars/


  119 Responses

  1. தலைவரே என்ன சமுக சிந்தனை அதிகமாக இருக்கிறது???? ஆனாலும் நல்ல சிந்தனை.... நுளம்புகள் ஒழிக்கப்பட வேண்டியவை....

   உங்களுக்கு சரியாக பின்னுட்ட விடாமல்கூட தொல்லை தருகின்றது என்றால் பார்த்துக்குங்க.......

   நல்ல கருத்து பதிவு

  2. எல்லா நாடுகளும் சேர்ந்தே (எங்களை துரத்தி அழித்த மாதிரி )
   இந்த நுளம்பை அழிக்க முடியவில்லையே.
   எங்களிலும் பார்க்க அவற்றிக்கு அரசியல் கூட தெரியும் போல..

  3. இதுவும் சூப்பர் ஹிட் தான்.. டோன்ட் வொர்ரி.
   என்ன தான் டபுள் மெத்தை ட்ரிபிள் மெத்தைன்னு ஒய்யாரமா படுத்தாலும், கொசு, நுளம்பு போடும் அந்த இரைச்சலுடன் படுக்கும் சுகம் வருமோ பாஸ்?
   என்ன இப்போ எல்லாம் அடிக்கடி பேரப்பிள்ளைகள் பற்றி வருது.. கல்யாணம் செட் ஆயிடுச்சோ?

  4. தலைவா...

   நீங்க வெங்கட்பிரபு இல்ல...
   3ஆவதும் வெற்றி தான்...

   //ஓட்டு மற்றும் பின்னூட்டம் போட்டு அன்புகாட்டும் அனைவருக்கும் நன்றி.. :)//

   என்னப் போல 10, 14 பின்னூட்டங்கள் போட்டுக் கரச்சல் குடுக்கிறாக்களுக்கு நன்றியில்லயோ? :P


   //பாவம் மனுசன் இரவில சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு வந்து படுத்துட்டு காலை 6 மணிக் கெல்லாம் எழும்பி ஓடிடும்.. //

   நல்ல சிந்தனை...
   கரப்பானக் கண்டு ஓடுற மனுசன் ஆமியக் கண்டா பின்னங்கால் பிடரில அடிக்க ஓடியிருக்கும்.
   வந்து வாய்க்குது பாருங்கோ உங்களுக்கெண்டு...


   //சம்மாடி கட்டினபடியே//

   சம்மாடி எண்டா?
   எந்த ஊர் பாஷை?
   நானும் அரியாலை தானப்பா... எனக்குத் தெரியாம பதுசு புதுசா சொல் கண்டுபிடிக்கிறாங்கள...
   விளக்கம் தரவும்...


   //அறைக்க இருந்த அங்கிள் சேட்டும்போடாமல் பெட்சீட்டையும் போத்திக்கொண்டு ஓடினார் பாரு ஒரு ஓட்டம் ”ங்க்சு ங்க்சு” எண்டுகொண்டு ..//

   அவர் விட்டிற்றுப் போன சேட்டையும், பெட் சீற்றையும் இப்போதும் நீங்கள் பயன்படுத்துவதாகவும் ஒரு தகவல்..


   //இந்த நுளம்புத்தடுப்பு பற்றி கதைக்கத்தான்..//

   ஆமா பொஸ்...
   இதுகள ஏதாவது செய்தே ஆகோணும்...


   //நுளம்பு கொடிகட்டிப்பறக்குது.//
   நுளம்பில கட்டுற அளவுக்கு சின்னக் கொடி கண்டுபிடிச்சிருக்கிறாங்களா? :D


   //அண்மையில கண்டெடுத்த பாரோ (எகிப்திய மன்னன்களை குறிபிடுவார்கள்) மம்மி ஒன்று கூட மலேரியாவாலதான் செத்ததெண்டு கண்டுபிடிச்சிருக்கினம்.//

   ஐயோ பாவம்...
   வாழ வேண்டிய வயசு...


   //அதால சும்மா பிள்ளைகளுக்கு படக்கு படக்கு எண்: சத்தம் போட்டு வேடிக்க‌ை காட்டலாம் வேற புண்ணாக்கு ஒண்டுமில்ல அநியாயக்காசு..//

   முட்டையில மயிர் புடுங்கிற வேல அண்ணா...
   இரவில நித்திரை கொள்ளாம எழும்பி இருந்து ரெனிஸா விளையாடுறது?


   //ங்களும்தான் பார்த்து ரசியுங்கள்.. நிச்சயமாக 2 தடவை பார்ப்பீர்கள்.. :)//

   :)


   //அடுத்த இவ்விருமாதங்களில் இந்த குருவி அழிப்புநாள் அமுல்படுத்தப்பட்டு//

   மொக்கு சீனர்கள்...
   உணவுவலை பாதிக்கப்பட்டிருக்கும்...


   //அப்போதான் ,
   ஒரு நிலாக்காயும் நாளில் ,
   முற்றத்து மாமரத்தினடியில் ,
   தென்றல் தாலாட்ட கண்மயங்கும் பேரனுடன் கொஞ்சிவிட்டு ,
   அப்படியே நித்திரையாய்ப்போய்விடமுடியும்.. ;)//

   :)


   தல படத்துக்கு நல்ல ஓப்பினிங் இருக்கு...
   படம் வெற்றி தான்...

  5. அண்ண...
   பின்னூட்டிக் களைச்சிற்றன்...

   யாழ்ப்பாணத்தில நுளம்ப அடிச்சுக் கலைக்க புகை போடுறு பழக்கம் இருக்கண்ணே.
   100% வெற்றி தராட்டியும் பெரும்பாலும் கெரும்பான்மைய கலைச்சுப் போடும்.
   இயற்கையான வழிமுறை.
   வேப்ப மர இலை மற்றமு பற்றைகளில் வளரும் கஞ்சாங் கோரை எண்டொரு புல் இரண்டும் உதுக்கு நல்ல சாமான்கள் எண்டதயும் போட்டிருந்தா மைக்ரோசொப்ற் ஓட நாங்கள் போடடி் போட்டு ஆராய்ச்சி செய்யிற விசயம் உலகம் முழுக்கத் தெரிஞ்சிருக்கும்... :)

  6. அனுதினன் said...

   தலைவரே என்ன சமுக சிந்தனை அதிகமாக இருக்கிறது???? ஆனாலும் நல்ல சிந்தனை.... நுளம்புகள் ஒழிக்கப்பட வேண்டியவை....

   சமூக சிந்தனைல்லாம் இல்லப்பா! என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்தினேன்.. அவ்ளோதான்.. ஒவவொருநாளும் எழுதுறதுக்கு டொப்பிக்குக்கு நானெஙக போக அனு? :P

   உங்களுக்கு சரியாக பின்னுட்ட விடாமல்கூட தொல்லை தருகின்றது என்றால் பார்த்துக்குங்க.......

   கூட்டணி அமைச்சிட்டுதுகளோ? இண்டைக்கு என்னுடைய பதிவுக்கெதிரா நுளம்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம்..

   நல்ல கருத்து பதிவு

   ம் ம்! இனி மொக்கைதான்.. காபி வித் அனு எண்டு ஏதாவது செய்வமா? :P

  7. archchana said...

   எல்லா நாடுகளும் சேர்ந்தே (எங்களை துரத்தி அழித்த மாதிரி )
   இந்த நுளம்பை அழிக்க முடியவில்லையே.

   நுளம்புகளுக்கு புதிய தொழிநுட்பங்களை சமாளித்து புதிய இனங்களை உருவாக்கி இவோல்வ் ஆகிற தன்மை இருக்கு..survival of the fittestபற்றி கேட்டிருப்பீங்கள்.. இல்லாவிட்டா கராபபானாலும் நுளம்பாலும் டைனோசார் காலத்திலிருந்து எப்பிடித்தப்பிவாழ முடியும்.. எல்லாவற்றுக்கும்மேலாக நுளம்புகளுக்குள் எட்டப்பன்கள் இல்லை :P

   எங்களிலும் பார்க்க அவற்றிக்கு அரசியல் கூட தெரியும் போல..

   ம்ம்! கிடைச்சா ஒருக்கா அதுகளிண்ட பாளிமெண்ட் பக்கம் போவம்.. :P

   பின்னூட்டத்துக்கு நன்றி அர்்ச்சனா! :)

  8. இளந்தி... said...

   இதுவும் சூப்பர் ஹிட் தான்.. டோன்ட் வொர்ரி.

   ஓப்பினிங்க் நல்லாத்தானிருக்கு இளந்தி... பினினசிங்க எப்பிடியோ தெரியலையே? :P

   என்ன தான் டபுள் மெத்தை ட்ரிபிள் மெத்தைன்னு ஒய்யாரமா படுத்தாலும், கொசு, நுளம்பு போடும் அந்த இரைச்சலுடன் படுக்கும் சுகம் வருமோ பாஸ்?

   இலங்கையை ரொம்பவே மிஸ் பண்றீங்களோ? :P

   என்ன இப்போ எல்லாம் அடிக்கடி பேரப்பிள்ளைகள் பற்றி வருது.. கல்யாணம் செட் ஆயிடுச்சோ?

   ஹாஹாஹா! சும்மா அந்த வயசில எப்பிடியிருப்பன் எண்டு யோசிச்சு பாத்தன்..அதெல்லாம் ஒண்டும் செட்டாகேல்ல.. :P

  9. கன்கொன் || Kangon said...

   தலைவா...

   நீங்க வெங்கட்பிரபு இல்ல...
   3ஆவதும் வெற்றி தான்...

   ஹிஹி! பாப்பம்.. வெற்றியென்பது 20 தமிழிஸ் ஓட்டு அல்லது 15 பேரிடமிருந்து பின்னூட்டம் என்ற அடிப்படையிலேயே கணிக்கப்படுவது.. கவனிக்க 15 பேர் 15பின்னூட்டமல்ல :P

   என்னப் போல 10, 14 பின்னூட்டங்கள் போட்டுக் கரச்சல் குடுக்கிறாக்களுக்கு நன்றியில்லயோ? :P

   அவைக்கு கருணைமனு விண்ணப்பிச்சிருக்கம் .. :P

   நல்ல சிந்தனை...
   கரப்பானக் கண்டு ஓடுற மனுசன் ஆமியக் கண்டா பின்னங்கால் பிடரில அடிக்க ஓடியிருக்கும்.
   வந்து வாய்க்குது பாருங்கோ உங்களுக்கெண்டு...

   அந்த மனுசினிண்ட அப்பாவித்தனத்தை பாத்து ஆமிக்காரங்கள் ஒரு நாள் சேச் பண்ணாமலேுயே போட்டாங்க்கள்..


   சம்மாடி எண்டா?
   எந்த ஊர் பாஷை?
   நானும் அரியாலை தானப்பா... எனக்குத் தெரியாம பதுசு புதுசா சொல் கண்டுபிடிக்கிறாங்கள...
   விளக்கம் தரவும்...

   சப்பண க்கால் போடுதல் , பத்மாசனம்? எனக்கு சரியாத்தெரியேல்ல.. மக்கள்ஸ் உங்களுக்கும் தெரியாதா? யாராவது கேள்விப்பட்டவர்கள்?


   அவர் விட்டிற்றுப் போன சேட்டையும், பெட் சீற்றையும் இப்போதும் நீங்கள் பயன்படுத்துவதாகவும் ஒரு தகவல்..

   ஓமோம்.. fan கிளீன் பண்ண பாவிக்கிறனான்.. :P


   நுளம்பில கட்டுற அளவுக்கு சின்னக் கொடி கண்டுபிடிச்சிருக்கிறாங்களா? :D

   தமிழ வாசி ! நுளம்பில கொடிகட்டி பறக்கிற எண்டா எழுதிக்கிடக்கு? நுளம்பு கொடிகட்டி பறக்குது எண்டுதானே? ( நுளம்பு எப்பிடி கொடிகட்டும்னு பின்னூட்டினியோ சிந்து கபேயில விசத்தை கலத்திடுவன்.. )

   ஐயோ பாவம்...
   வாழ வேண்டிய வயசு...

   ஹாஹாஹா! இது சக்கை நக்கல்.. பரவால்ல .. கீப் இட் அப்.. :P

   முட்டையில மயிர் புடுங்கிற வேல அண்ணா...
   இரவில நித்திரை கொள்ளாம எழும்பி இருந்து ரெனிஸா விளையாடுறது?

   சும்மா .. படுக்கபோக முன்னம் அடிச்சிட்டு படுக்கலாமாம்..

   :)

   ஏனின்த வன்மச்சிரிப்பு..:P

   தல படத்துக்கு நல்ல ஓப்பினிங் இருக்கு...
   படம் வெற்றி தான்...

   என்னதான் இருந்லும் தியேட்டரில நாளைக்கு வரைக்கும்தானே இருக்கும்.. :P அதுக்குள்ள பாக்ஸ் ஆபிசை அடிக்ணுமே? ;)


   யாழ்ப்பாணத்தில நுளம்ப அடிச்சுக் கலைக்க புகை போடுறு பழக்கம் இருக்கண்ணே.
   100% வெற்றி தராட்டியும் பெரும்பாலும் கெரும்பான்மைய கலைச்சுப் போடும்.

   என்னது பெரும்பான்மையை கலைக்குமா? ஏன் சிங்களவர்களுக்கு புகை அலர்ஜியா?நீ ஏன் இவ்வளவு இனத்துவேசியாய் இருக்கிறாய்? :(

   இயற்கையான வழிமுறை.
   வேப்ப மர இலை மற்றமு பற்றைகளில் வளரும் கஞ்சாங் கோரை எண்டொரு புல் இரண்டும் உதுக்கு நல்ல சாமான்கள் எண்டதயும் போட்டிருந்தா மைக்ரோசொப்ற் ஓட நாங்கள் போடடி் போட்டு ஆராய்ச்சி செய்யிற விசயம் உலகம் முழுக்கத் தெரிஞ்சிருக்கும்... :)

   ம்ம் கஞ்சாங்கோரை வேப்பிலை போன்ற வற்றை போட்டு வளவுக்கு குப்பையை கொழுத்தினால் கொஞ்சம் நுளம்பு குறையும்.. சிலர் டயரை கொழுத்துவார்கள்.. கடைசியா மூக்கில காப்ன காபன் கொட்டுணும்..


   நன்றிடா பின்னூட்டத்க்கு;உண்மையா பதிவெண்டே சொல்லாலம்..:P

  10. நுளம்புக்கடிய விட இந்த புல்லட்டு கடி தாங்கல


   இந்த பதிவும் வெற்றி வேற உழைப்போம்


   லோசன் அண்ணாவின் ஒரு பெரிய!!!!!!!!!!!!!!பதிவையே வெற்றி பெற வச்சமில்ல

  11. நல்ல பதிவு...

   நுளம்பை ஒழிக்கிறதுக்கு முதல், கங்கோனை முடிக்கிற வழி பார்க்கணும். கொசுத்தொல்லை தாங்க முடியல...

  12. தல இந்த நுளம்பு பிரச்சினை எனக்கும் எங்கள் பகுதியில் டெங்கு வந்து பலர் செத்ததற்கு காரணம் இந்த நுளம்புதான்.

   இதுவும் ஹிட் பதிவுதான், கவலை வேண்டாம்.

  13. தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுக்கும் அண்னன் புல்லட் வாழ்க....

  14. ஆகா..

   வவுனியாவில தான் இப்ப நுளம்பு டாப்.
   இங்கயும் நுளம்பு காப்பு எண்டு ஒண்டு விக்குது 75 ருபா.
   சரத்குமார் கையில இருக்கிற மாதிரி ஒரு காப்பு அதில எல்லா எண்ணையும் இருக்கிறதால காப்பை அணிந்தால் மணம் தாங்காம நுளம்பு எம்மை அணுகாதாம்.

   வாங்கி அணிந்து பார்த்தேன் பெரிசா வேலையில்லை.....

   காரணம் நுளம்புகள் பெருக்கம் அதிகமாக இருக்கிறதால எல்லாம் இசைவாக்கம் அடைஞ்சிட்டுதுகள்......

   இதுவும் கலக்கல்.... அருமையான பதிவு...... கொஞ்சம் விழிப்புணர்வு பதிவு எண்டு தலைப்பிட்டிருக்கலாம்...

   //வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் வரும் இத்தகைய உபகரணங்களை//

   ஏது வெறும் ஐந்தாயிரமா...?

   ஆனா ஒன்று "எல்லா உயிர்களும் புவியில் வாழ சம உரித்துடையவை" என்கிற பிரகடனம் இருக்கு.....
   நுளம்பு விதிவிலக்கா.....
   ஹ...ஹி....ஹி...

   ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்....

   இன்னும் 2 வாரத்துக்கு நட்சத்திரமாக இருங்கோ தொடர்ந்து பதிவை எதிர்பார்க்கலாம்.

  15. யோசனைக்குரிய பதிவுதான்.இப்ப நுளம்புதான் பெரும் பிரச்சினையாக இருக்கு .யாழ்ப்பணத்தில இத்துண்ட தாக்கம் நல்ல கூடிடுது .கவனிகவேண்டியவங்க கவனிக்கவில்லை .

  16. நகைச்சுவை + தகவல் பதிவு! அருமை!
   நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

   ஆனாலும் “ஒரிஜினல்” புல்லட் இப்ப கொஞ்ச நாளா மிஸ்ஸிங்.... :-(

  17. 18 வாக்கு(என்னுடையதும் சேர்த்து) தமிளிஷில் பிரபலமாகவில்லை.. ஏதாவது உள்நாட்டு சதியோ?

   அவசரப் பதிவு எண்டு சொல்லிட்டு இப்படி அருமையான தகவல் தரும் வித்தைக்குப் பெயர் தான் டுமீலோ?

   எனக்கெண்டால் ரக்கெட் நல்லா வேலை செய்யுது..
   தகவல் அருமை.. இடையிடையே சிரிப்பும் தூவித் தரும் பதிவுகள் நல்லாப் போகுது புல்லட்.

   //ஒரு கதையை சொல்லி இந்த வதைப்பதிவை முடிக்கிறென்.//
   யாழ்தேவி உனக்குத் தரும் கௌரவ வதை புரிகிறது.. அனுபவியடா.. நாங்கள் ரசிக்கிறோம்.. பதிவுகளை

   கண்கோனின் பின்னூட்டப் பயங்கரத்தைப் பார்த்தாலே நுளம்பெல்லாம் பயத்திலேயே ஓடிப் போய் தெகிவளைக் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்திடும்.. ;)

  18. V.A.S.SANGAR said...

   நுளம்புக்கடிய விட இந்த புல்லட்டு கடி தாங்கல

   புல்லட்புறூவ்ப் வலையொண்டு வாங்கிபோட்டுக்கொள்ளுங்கோ! :P

   இந்த பதிவும் வெற்றி வேற உழைப்போம்

   புண்ணியமாபபோகும்..:P

   லோசன் அண்ணாவின் ஒரு பெரிய!!!!!!!!!!!!!!பதிவையே வெற்றி பெற வச்சமில்ல

   அந்தாள் வாழ்க்கையில இப்பிடியொரு அவமானத்தை சந்திச்சிரக்க்காது :D

  19. லோசன் அண்ணாவின் ஒரு பெரிய!!!!!!!!!!!!!!பதிவையே வெற்றி பெற வச்சமில்ல

   அந்தாள் வாழ்க்கையில இப்பிடியொரு அவமானத்தை சந்திச்சிரக்க்காது :D
   //

   பதிவுலக அரசியலில இதெல்லாம் சகஜமப்பா.. (மவனே சங்கர் இருடா.. பிறகு உன்னைக் கவனிக்கிறேன்)

  20. ஆதிரை said...

   நல்ல பதிவு...

   நுளம்பை ஒழிக்கிறதுக்கு முதல், கங்கோனை முடிக்கிற வழி பார்க்கணும். கொசுத்தொல்லை தாங்க முடியல...//

   நன்றி சீரியஸ் பதிவரே!

   கங்கேனில்லாவிஜட்டால்தான் தெரியும் அவன் அருமை.. பதிவுலகமே வெறிச்சொடிப்போய்விடும்..

   எல்லாரும் அன்பு செலுத்தும் ஒரே பதிவர் அவன்தானப்பா! அவனை கொசு என்பதை வன்மையா கண்டிக்கிறென்..

   ( இவ்ளொ புளுகியிருக்கன்..ஆகுவே மெகா பின்னூட்டங்களுக்கு பதிலிடச்சொல்லி துன்புறுத்தக்கூடாது என்ன ராசா!:P )

  21. யோ வொய்ஸ் (யோகா) said...

   தல எங்கள் பகுதியில் டெங்கு வந்து பலர் செத்ததற்கு காரணம் இந்த நுளம்புதான்.

   அப்போ மிச்ச எல்லா இடத்தயும் என்ன காக்காயோ பரப்புது?

   இதுவும் ஹிட் பதிவுதான், கவலை வேண்டாம்.

   இல்லப்பா.. தோல்வியை ஒத்துக்கணும்.. 18 ஹிட் வாங்கவே முக்குமுக்கெண்டு முக்குது பதிவு.. ஹிஹி.. எனிவே நான் ஹிட்டாகணும்னு எதிர்பார்க்கல..:)

  22. அண்ணாமலையான் said...

   தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுக்கும் அண்னன் புல்லட் வாழ்க.... //

   வாங்கய்யா பின்னூட்டதலை அண்ணாமலை! நன்றி நன்றி! எப்பிடி பதிவு போட்டவுடன பாஞ்சு வாறீங்க? நம்மால முடியல யே? :(

  23. //அவைக்கு கருணைமனு விண்ணப்பிச்சிருக்கம் .. :P//

   கருணை மனு பரிசீலிக்கப்படுகிறது...


   //சப்பண க்கால் போடுதல் , பத்மாசனம்? எனக்கு சரியாத்தெரியேல்ல.. மக்கள்ஸ் உங்களுக்கும் தெரியாதா? யாராவது கேள்விப்பட்டவர்கள்? //

   சப்பாணி கட்டி இருத்தல் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.


   //என்னது பெரும்பான்மையை கலைக்குமா? ஏன் சிங்களவர்களுக்கு புகை அலர்ஜியா?நீ ஏன் இவ்வளவு இனத்துவேசியாய் இருக்கிறாய்? :(
   //

   மஹிந்தருக்கும் எனக்கும் பிரச்சினையை ஏற்படுத்தப் பாக்கிறியள்.
   பெரும்பான்மை நுளம்புகளை... அதாவது பெரும்பான்மையான எண்ணிக்கையில் நுளம்புகளை...

   சபா...
   கோக் ஒண்டு...
   உங்களுக்கு விளக்கம் சொல்லியே என்ர வாழ்நாள் வீணாப் போயிடும் போல இருக்கே... :(

  24. //கண்கோனின் பின்னூட்டப் பயங்கரத்தைப் பார்த்தாலே நுளம்பெல்லாம் பயத்திலேயே ஓடிப் போய் தெகிவளைக் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்திடும்.. ;)//

   //நுளம்பை ஒழிக்கிறதுக்கு முதல், கங்கோனை முடிக்கிற வழி பார்க்கணும். கொசுத்தொல்லை தாங்க முடியல...//

   2 பேருக்கும் பொறாமை தங்களால இப்பிடி பின்னூட்ட முடியேலயே எண்டு...   //லோசன் அண்ணாவின் ஒரு பெரிய!!!!!!!!!!!!!!பதிவையே வெற்றி பெற வச்சமில்ல //

   இதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.
   இசையமைக்கிறது ஒருத்தன், பாராட்டு வாங்கிறது இன்னொருத்தனா?
   அந்தத் திட்டத்தை முன்மாழிந்தது சுபா அண்ணா, செயற்படுத்தியது நான்...
   வாக்குப் போடச் சொல்லி பேஸ்புக்கில் அனைவரிடமும் கெஞ்சி, பிறகு ஜமெயில் அரட்டையில 2 பேரப் பிடிச்சு வாக்கு போடப் பண்ணினது நான்... :P :D

  25. இலங்கன் said...

   ஆகா.. //

   நல்லகாலம் ஓஹோவை மறந்திட்டான்..


   அதில எல்லா எண்ணையும் இருக்கிறதால காப்பை அணிந்தால் மணம் தாங்காம நுளம்பு எம்மை அணுகாதாம்.//

   இதென்னடா புது காப்பா இரக்கு? மக்களே யாராவது உங்கள் மனுசிமார் கேட்டால் வாங்கிக்குடங்க.. எல்லாருக்கும் பாதுகாப்பு.. ஆள் வருதெண்டு தெரிஞ்ச உடன பாஞ்சு பதுங்கிரலாம்..:P

   வாங்கி அணிந்து பார்த்தேன் பெரிசா வேலையில்லை.....//
   ஒரு வேளை சிலம்பாட்டத்தில சந்தானம் வாங்கின காப்பாயிருக்கமோ? எதுக்கும் தனிய திரியாதயப்ப்ன்.. :P

   இதுவும் கலக்கல்.... அருமையான பதிவு...... கொஞ்சம் விழிப்புணர்வு பதிவு எண்டு தலைப்பிட்டிருக்கலாம்...//

   சும்மா கதை விடாத.. :D

   ஏது வெறும் ஐந்தாயிரமா...?//
   ஓம்.. பார்த்தாயா வரவர எல்லாம் மலியுது..! ஆனா இலங்கையில எல்லாரும் வாங்கிறாங்களெண்டு தெரிஞ்சா உடன அதுக்கு 300 வீதம் டக்ஸ் அடிப்பாங்கள்..:P

   ஆனா ஒன்று "எல்லா உயிர்களும் புவியில் வாழ சம உரித்துடையவை" என்கிற பிரகடனம் இருக்கு.....
   நுளம்பு விதிவிலக்கா.....//
   ஆஹா! இங்கயும் சமத்துவமா? முடியலடா!

   இன்னும் 2 வாரத்துக்கு நட்சத்திரமாக இருங்கோ தொடர்ந்து பதிவை எதிர்பார்க்கலாம்.//

   %^$^&^%$#$%$%^$ !

  26. aswamethan said...

   யோசனைக்குரிய பதிவுதான்.இப்ப நுளம்புதான் பெரும் பிரச்சினையாக இருக்கு .யாழ்ப்பணத்தில இத்துண்ட தாக்கம் நல்ல கூடிடுது .கவனிகவேண்டியவங்க கவனிக்கவில்லை . //

   கங்கோன் சொன்னாப்போல கஞ்சாங்கோரைய இடுப்பில கட்டிட்டு படுக்குவேண்டியதுதான்..:D

  27. என்.கே.அஷோக்பரன் said...

   நகைச்சுவை + தகவல் பதிவு! அருமை!
   நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

   ஆனாலும் “ஒரிஜினல்” புல்லட் இப்ப கொஞ்ச நாளா மிஸ்ஸிங்.... :-( //

   நன்றி !

   அது என்ன ஒரிஜினல் புல்லட் பதிவு? உதாரணமாக ஒன்றை காட் டுங்கள்! மக்கள என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.. :)

  28. எடுத்துக்காட்டு தானே... மிக இலகு... ஒரு 6 மாதத்திற்கு முந்திய உங்கள் பதிவுகளை வாசித்துப்பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் புரியும்!

  29. LOSHAN said...

   18 வாக்கு(என்னுடையதும் சேர்த்து) தமிளிஷில் பிரபலமாகவில்லை.. ஏதாவது உள்நாட்டு சதியோ? //

   கருணாநிதி ஏதாவது சொல்லியிருப்பார்.. என் அன்பு க்கும் மரியாதைக்குமுரிய தமிழிஸ்களே!ஐயகொஅவனுக்கு பப்ளிசிட்டி குடுக்காதீங்க எண்டு! :P..

   பதிவு நல்லா வரலன்னா! போடணும்கிறதுக்காக போட்டென்.. வாய்க்கல! :)


   அவசரப் பதிவு எண்டு சொல்லிட்டு இப்படி அருமையான தகவல் தரும் வித்தைக்குப் பெயர் தான் டுமீலோ?

   சும்மா தெரிஞ்ச விடயங்களை கோர்த்து எழுதுறேன்.. ஸ்பெசலா ஒண்டுமி ல்ல.. அப்படின்னு பாத்தா உங்கட விடியல் பீரங்கியல்லோ! :)

   எனக்கெண்டால் ரக்கெட் நல்லா வேலை செய்யுது..

   கவனம் குட்டியன் கைய வைச்சானெண்டால் படீர்தான்..!அண்ணி அடிச்சே கொண்டுபோடுவாங்க உங்கள!

   தகவல் அருமை.. இடையிடையே சிரிப்பும் தூவித் தரும் பதிவுகள் நல்லாப் போகுது புல்லட்.

   நன்றிங்ணோவ்!

   ழ்தேவி உனக்குத் தரும் கௌரவ வதை புரிகிறது.. அனுபவியடா.. நாங்கள் ரசிக்கிறோம்.. பதிவுகளை

   நறநற!

   கண்கோனின் பின்னூட்டப் பயங்கரத்தைப் பார்த்தாலே நுளம்பெல்லாம் பயத்திலேயே ஓடிப் போய் தெகிவளைக் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்திடும்.. ;)

   கெக்கே பிக்கே கெக்கே பிக்கே! :D

  30. என்.கே.அஷோக்பரன்
   February 19, 2010 2:07 PM

   எடுத்துக்காட்டு தானே... மிக இலகு... ஒரு 6 மாதத்திற்கு முந்திய உங்கள் பதிவுகளை வாசித்துப்பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் புரியும்!

   // நன்றி அசோ க்! ஆனால் உண்மையாக எனக்கு எதுவும் பிடிபடவில்லை.. சற்று வெளிப்படையாகுவே குறிப்பிட மடியுமா? ஏனெனில் நான் படிப்படியாக மாறிறியருக்கலாம்.. அதனால் மாற்றம் உறைக்காமலிரக்கலாம்.. சற்று அறுத்து உறுத்து வித்தியாசங்கள் சிலவ்றறை வரையறுங்களேன்?நன்றி அசோக்!

  31. ம்ம்... ஒரு வரியில் சொல்வதென்றால் மன்னைய பதிவுகளில் பகிடிக்குள் விஷயமிருக்கும் இப்போது விஷயங்களுக்குள் பகிடி வருகிறது.

   தனி நகைச்சுவைப் பாணியிலிருந்து மாறியது போன்ற உணர்வே உங்கள் புதிய பதிவுகளை வாசிக்கையில் எனக்குத் தோன்றுகிறது ஆகவே இப்போது உங்கள் வலைப்பதிவின் பழைய பதிவுகளைப் படிப்பதிலேயே மிகவும் குஷியாக இருக்கிறது.

  32. புல்லட் நல்லா யோசிச்சுப் பாத்தா.....ஒரு நுளம்புக்கு இந்தாப்பெ....ரிய பதிவு.அப்ப நுளம்போ நீங்களோ பெரிய ஆள். ?

   நகைச்சுவைக்குள்ளயும் நல்லதொரு நுளம்புப் பதிவு.

  33. //ஆமிப்பயத்தால இரவில ஒரு அங்கிள் ( 65 வயசிருக்கும் ) வந்து படுக்கச்சொல்லி கேட்டிருந்தபடியால் , //

   //அசந்த நேரம்பாத்து ஆளுக்கும் கொஞ்சம் பூசி அவரை படுக்கச்செய்தம்.. //

   கோவாக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம்,???

   கலக்கல் பதிவு.

   //ஹிஹி! பாப்பம்.. வெற்றியென்பது 20 தமிழிஸ் ஓட்டு அல்லது 15 பேரிடமிருந்து பின்னூட்டம் என்ற அடிப்படையிலேயே கணிக்கப்படுவது.. கவனிக்க 15 பேர் 15பின்னூட்டமல்ல :P //

   எனக்கு இதில் உடன்பாடு இல்லை, வாக்கு போடும் மனமும், பின்னூட்டமிடும் மனமும் எல்லோருக்கும் வருவதில்லை. நான் கூட ஒரு நாளில் எத்தனை பதிவுகள் வாசிக்கின்றேன், அதில் வாக்கு அல்லது பின்னூட்டம் ஏதாவது சில பதிவிற்குத் தான் இடுவேன்…

  34. சின்னதா ஒரு ஐடியா சொல்லட்டே புல்லட்டு. பேசாமல் ஒரு ஆப்பு (half) அடிச்சிட்டு படுக்க போங்களேன். நுளம்பென்ன உலக்கையால அடிச்சாலும் தெரியாது.( சத்தியமாய் ஐடியா என்னுடையதில்லை. ஒழுக்கமான நல்ல பொடியனை பழுதாக்கி விட்டுட்டன் எண்டு எனக்கு பேர் வரக்கூடாது.)

  35. புல்லட் ஏதோ கொசுவை விரட்ட மென்பொருள் இருக்கிறதாமே கேள்விபட்டிருக்கிறீர்களா?

  36. ஆஹா!! ஆஹா!!
   கொசுவையும் மதித்து பதிவு போட்ட எங்கள் இளஞ்சிங்கமே இன்று முதல் நீ "கொசுப்பாண்டி" என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்!

  37. //ஆஹா!! ஆஹா!!
   கொசுவையும் மதித்து பதிவு போட்ட எங்கள் இளஞ்சிங்கமே இன்று முதல் நீ "கொசுப்பாண்டி" என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்! //

   கொசுப்பாண்டி வாழ்க கொசுப்பாண்டி வாழ்க... !

  38. This comment has been removed by the author.
  39. அஷோக்பரன், முன்னர் உவன் நிறைய பெண்களைப்பற்றி தாறுமாறாக எழுதி அடிவாங்கினவன். இப்ப திருந்திட்டான்.. பாவம் விட்டுவிடுங்கள்.

   மற்றது எருமை சகோதரா,
   வன்னியில் நீ சொன்ன மாதிரி நிறைய பேர் மலேரியாவால் சாகவில்லை.. மலேரியா சதாரண காச்சல் மாதிரி ஆகிவிட்டது. 95 இறுதியில் / 96 ஆரம்பத்தில் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் சாவு நீங்கள் சொன்னது மாதிரி இல்லை.. YOU NEED TO GET UR FACTS "RIGHT"


   சும்மா எழுதுவதற்காக எழுத கூடாது. அது உண்மையில் எரிச்சலைத் தருகிறது. மொட்டையில் மயிர் பிடுங்கிறன் என்டு நினையாதே.. எழுதேக்க தவறாக எழுத கூடாது.


   ஏன் மற்ற இடங்களில் கொலரா (97 அல்லது 98 ஆம் ஆண்டு என்டு நினைக்கிறன்.) பயங்கரமாக பரவிய போது கூட வன்னியில் ஒன்டும் நடக்கேல்ல.. ஏன் என்டால் இயக்கம் வீடு வீடா போய் குளோரினை கிணத்துக்கும் ஏதோ தடுப்பு குளிசையை மக்களுக்கும் கொடுத்தது. எல்லாம் இலவசமாக தான்.


   மலேரியா ஒன்டும் சாகடிக்கும் வியாதி இல்லை..மற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது. வன்னியில் எங்களுக்கு அது சாதாரண காச்சல் மாதிரி தான். என்ன ஒருக்கா மலேரியா வந்தால் சாகும் வரை ஏதோ ஒரு கிருமி ஈரலை விட்டு போகாது. அதனால் நீங்கள் வீக்காக இருக்கும் போது எட்டிப்பார்க்கும் வாய்ப்பு இருக்கு. வெளி நாட்டுக்காரனுக்குத் தான் உது பெரிய விசயம். பட்டு அனுபவித்து சொல்லுகிறன்


   மலேரியா வந்த ஆக்கள் இரத்தம் குடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனாலும் பாதகமில்லை என்டு இரத்தம் எடுத்தார்கள். அவ்வளவுக்கு சாதாரணமாகி விட்டது. ஏன் இரத்தம் கொடுப்பதும் சாதாரணம் தான். இரண்டு மூன்டு நாளைக்கு களைப்பாக இருக்கும். மற்றப்படி 4 முட்டை அது இது என்டு முழுங்கத்தேவை இல்லை. அப்படி முழுங்குவதால் தான் இரத்தம் கொடுத்த பிறகு சிலர் குண்டாகுவார்கள். 3 மாதத்துக்கொரு தடவை தான் மலேரியா வரும் என்டு சொன்னது எல்லாம் புருடா. ஒவ்வொரு மாதம் கூட வரும்.. ஏன் மூளை மலேரியா கூட சாதாரணம் தான்.


   பிறகு ஏதோ ஒரு தடுப்பு குளிசை இருந்தது. அது ஒவ்வொரு கிழமையும் போட்டால் மலேரியா வராது என்டு சொல்லுவது எல்லாம் புருடா. ஒழுங்கா எடுத்தும் சில ஆக்களுக்கு மலேரியா வந்திருக்கு.

   2006 சண்டை தொடங்கின பிறகு கூட காயப்பட்டு தான் சனம் செத்தது தவிர தொற்று நோயால் அல்ல. வன்னி எவ்வளவோ முன்னேறியது அப்பு...


   70களில் (or late 60s. I think it was W.H.O) முற்றாக நுளம்பை ஒழித்ததுக்கு இலங்கைக்கு ஏதோ விருது குடுக்க வெளிக்கிட்டவை. ஆனால் துரதிஷ்டவசமாக மலத்தியோனுக்கு இசைவாக்கமடைந்த நுளம்புக்கூட்டம் பெருகத்தொடங்கியது.

   வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பாதி நுளம்புத் தொல்லையை குறைக்கலாம். அது உண்மையே. எங்கள் இடத்தில் வேம்பம் பழ விதையை எரித்து புகை போடுவார்கள். கொஞ்ச நேரம் காட்டினாலே நுளம்பு எல்லாம் ஓடிவிடும். நுளம்பு ஸ்பிரேகளை கேட்டின்களுக்கு நல்லா அடித்தாலே போதும் நுளம்பு வராது. இது நான் எங்கயோ வாசித்த பின் செய்து பார்த்தது. வேலை செய்தது.

   நுளம்புத்திரி பாவிக்காது விடுவது நல்லது. சுவாச நோய்கள் வரும். சுவாச நோய்கள் இருப்பவர்களுக்கு அதன் வீரியம் அதிகரிக்கும். அதனால் எலெக்ரிக் கொள்ளிகளை பாவிப்பது நல்லது. ஆனால் விடிய எழும்பின உடனேயே அதை துப்பரவாக்கி செத்த நுளம்புகளை அகற்றினால் போதும்.

   நுளம்பை துரத்த என்டு அம்மம்மா ஒரு சில்வர் தட்டு வைத்திருப்பா.. அதில் எண்ணையை பூசி விசிக்கிக்கொண்டு திரிவா. நுளம்பு எல்லாம் அதில் ஒட்டி செத்துவிடும்.

   கண்ட மலிவான ஒயில்களையோ கிறீம்களையோ பாவிக்காமல், கொஞ்சம் நல்லவற்றை கொஞ்சம் அதிக விலை குடுத்தாவது வாங்கி பூசுவது நல்லது. நம்பிக்கையான ஒன்று இது: http://www.mosquitocontrol.ca/products/Repellents/OFF-botanicals.html

   P.S: கோபி சொன்னமாதிரி உந்த புல் வகை வேலை செய்யும் என்றால் அதனை பரப்புவது நல்லதே. பின்னூட்டமாக போடாமல் ஒரு பதிவாக எழுதுவது நல்லது. அதுவும் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் எழுதுவது நல்லது

  40. தலைப்பைப் பாத்துட்டு ஒரு வெளிநாட்டுப் பெண் கொசுத்தொல்லை பற்றிய பதிவென்று நினைத்துவிட்டேன். இது வேற :P

   கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு ரத்ததானம் செய்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவற்றை இதுவரை இப்படி யாரும் பதிந்ததில்லை :)

  41. சுபாங்கன்,
   ஆழ்ந்த அனுதாபங்கள்...
   (வேறென்ன சொல்ல முடியும்?)

  42. //Subankan said...

   தலைப்பைப் பாத்துட்டு ஒரு வெளிநாட்டுப் பெண் கொசுத்தொல்லை பற்றிய பதிவென்று நினைத்துவிட்டேன். இது வேற :P //

   ஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!!!!!
   ஆர்வத்தில ஓடி வந்தனியளோ?
   என்ன இருந்தாலும் உங்களுக்கு முன்னுக்கு பின்னூட்டின ஒரு பின்னூட்டவாதியை கொசு என்று அழைப்பது நாகரிகமற்றது என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
   ஏன் சுபா அண்ணா ஏன்? :D


   // கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு ரத்ததானம் செய்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவற்றை இதுவரை இப்படி யாரும் பதிந்ததில்லை :) //

   நுளம்பு கடிச்சிருக்காட்டி மட்டும் நம்மட கன்கொன் மாதிரி மொத்தமாக வந்திருவியளோ?

  43. ////தலைப்பைப் பாத்துட்டு ஒரு வெளிநாட்டுப் பெண் கொசுத்தொல்லை பற்றிய பதிவென்று நினைத்துவிட்டேன். இது வேற :ப்//

   அட பாவி நீங்களே போட்டுக்குடுப்பியள் போல இருக்கு,,,, நுளம்ப அடிக்கிறதும் ஒன்டு தான் உந்த சுபாங்கனை அடிக்கிறதும் ஒன்டு தான்... யாராவது உந்த நுளம்பை ஒரு தட்டு தட்டுங்கோப்பா,,,

   //ஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!!!!!
   ஆர்வத்தில ஓடி வந்தனியளோ?
   என்ன இருந்தாலும் உங்களுக்கு முன்னுக்கு பின்னூட்டின ஒரு பின்னூட்டவாதியை கொசு என்று அழைப்பது நாகரிகமற்றது என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.//
   கோபி, நீ என்ன தான் சொன்னாலும் மனசாட்சி உள்ளவன்டா... கண்ணில தண்ணி வடியுது,, சொறி கண்ணீர்,,,


   // கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு ரத்ததானம் செய்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவற்றை இதுவரை இப்படி யாரும் பதிந்ததில்லை :) //

   நுளம்பு கடிச்சிருக்காட்டி மட்டும் நம்மட கன்கொன் மாதிரி மொத்தமாக வந்திருவியளோ?//

   என்னிலையாவது 4 கரண்டி தசை எடுக்கலாம்.. உவரில் ஒரு கரண்டியும் தேறாது.. உவரை எங்க நுளம்பு கடிச்சதாம்... ஒருக்கா கேட்டு சொல்லு கோபி..

   மற்றது,
   உவன் பூண்டி அண்ணாவை ஒழிச்சு இருந்து றியோவில் படம் எடுத்தது என்டு சொன்னியள்.. அதை ஒருக்கா அப்லோட் பண்ணவும்,,,

  44. எதுக்கு புல்லட் அந்த நாசமா போன நுளம்பை ஞாபகபடுதுகிரீர்கள். இந்தியாவில் இருந்து படித்த போது என்னுடைய A L பரீட்சயயே குண்டடிக பார்த்தனான் இந்த கொசு தொல்லயலே !!

   நல்லாத்தான் எழுதிறியல், திரும்ப திரும்ப சினிமா, கிரிக்கெட் (
   நான் யாரையும் குத்தவில்லை
   ) எண்டு எழுதாமல் கொஞ்சம் எல்லாத்தையும் யோசிகிறியல். வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதங்கள்.

  45. என்.கே.அஷோக்பரன் said...

   ம்ம்... ஒரு வரியில் சொல்வதென்றால் மன்னைய பதிவுகளில் பகிடிக்குள் விஷயமிருக்கும் இப்போது விஷயங்களுக்குள் பகிடி வருகிறது.

   தனி நகைச்சுவைப் பாணியிலிருந்து மாறியது போன்ற உணர்வே உங்கள் புதிய பதிவுகளை வாசிக்கையில் எனக்குத் தோன்றுகிறது ஆகவே இப்போது உங்கள் வலைப்பதிவின் பழைய பதிவுகளைப் படிப்பதிலேயே மிகவும் குஷியாக இருக்கிறது.

   உண்மைதான் அஷோக் வயசு போகுதுதானே? உப்பிடிதத்தான் எல்லாரும்..:-D

  46. ஹேமா said...

   புல்லட் நல்லா யோசிச்சுப் பாத்தா.....ஒரு நுளம்புக்கு இந்தாப்பெ....ரிய பதிவு.அப்ப நுளம்போ நீங்களோ பெரிய ஆள். ?

   நகைச்சுவைக்குள்ளயும் நல்லதொரு நுளம்புப் பதிவு.

   கொஞ்சம் குழப்பகரமான பின்னூட்டம் ? நுளம்பு நிறையக்கடிச்சிட்டு போல ராத்திரி? :P

  47. VARO said...

   கோவாக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம்,???
   யோவ்! நான் ஸ்ட்ரெய்ட் நான் ஸ்ட்ரெய்ட் நான் ஸ்ட்ரெய்ட்.. கலியாணத்துக்கு காட் அனுப்பிறன் வந்து பாரும் .. கடவுளே..

   கலக்கல் பதிவு.
   நன்றி :P

   எனக்கு இதில் உடன்பாடு இல்லை, வாக்கு போடும் மனமும், பின்னூட்டமிடும் மனமும் எல்லோருக்கும் வருவதில்லை.

   உண்மைதான் எல்லாருக்கும் அந்த பஞ்சி இருக்கு.. ஆனா அந்த எழுத்து அந்த பஞ்சியையும் உடைச்சு வொட் போடச்செயததெண்டாவ் அது ஹிட் :) சரிதானே வரோ என் வாதம்?

  48. //வாக்கு போடும் மனமும், பின்னூட்டமிடும் மனமும் எல்லோருக்கும் வருவதில்லை. //

   அப்ப எனக்குப் பெரிய மனமோ?
   விடையளிக்கவும்...

  49. PRAKASH said...

   சின்னதா ஒரு ஐடியா சொல்லட்டே புல்லட்டு. பேசாமல் ஒரு ஆப்பு (half) அடிச்சிட்டு படுக்க போங்களேன்.

   halfக்கு அவ்ளோ சக்தியிருக்கா? எனக்கு வேணாம்பா! இப்போதைக்கு நுளம்பு வலையே காணும்.. :)

  50. கன்கொன் || Kangon said...

   //வாக்கு போடும் மனமும், பின்னூட்டமிடும் மனமும் எல்லோருக்கும் வருவதில்லை. //

   அப்ப எனக்குப் பெரிய மனமோ?
   விடையளிக்கவும்... //

   அது உன்ட பேஸ்புக்கில போட்ட நிழலைப்பாத்தே கண்டுபிடிச்சிடலாம் எந்தப்பெருசெண்டு.. :P

  51. //அது உன்ட பேஸ்புக்கில போட்ட நிழலைப்பாத்தே கண்டுபிடிச்சிடலாம் எந்தப்பெருசெண்டு.. :P //

   என்ன சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை...

   நிழலா?
   எனக்கு அதற்குரிய சுட்டியைத் தரவும்...

  52. தர்ஷன் said...

   புல்லட் ஏதோ கொசுவை விரட்ட மென்பொருள் இருக்கிறதாமே கேள்விபட்டிருக்கிறீர்களா? //

   ஓமோம்!அது ரண் பண்ண வின்டொஸ் விஸ்டா genuine version வேணும்.. 2GB RAM , Core i7 processorவேணும்.. கம்ப்யுட்டரில இன்ஸ்டோல் பண்ணி ரண் பண்ணினால் ”get out you stupid mosquito”எண்டு சத்தம் போடும்.. அதை கேட்டு அவமானப்பட்டு நுளம்பு வெளில போயிடும்..

  53. Sanjai said...

   ஆஹா!! ஆஹா!!
   கொசுவையும் மதித்து பதிவு போட்ட எங்கள் இளஞ்சிங்கமே இன்று முதல் நீ "கொசுப்பாண்டி" என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்! //

   எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாயங்களோ? ஸ்ஸபா!

  54. முகிலினி said...

   அஷோக்பரன், முன்னர் உவன் நிறைய பெண்களைப்பற்றி தாறுமாறாக எழுதி அடிவாங்கினவன். இப்ப திருந்திட்டான்.. பாவம் விட்டுவிடுங்கள் //
   அப்பிடியெல்லாம் இல்லை.. யார் அடிவாங்கினது? பாவம் சமஉரிமை சமஉரிமை எண்டு விழுந்து குழறி அழுதுதுகள் .. அதுதான் சரி பிழைச்சிப்போங்க என்று பேசாம விட்டு்க்கிடக்கு.. :P

   இலங்கையை பொறுத்தவரை மலேரியாப்பாதிப்பு கூடிய இடம் வன்னியாக இருந்தது.. அதால் செத்த இராணுவத்தினரே பலர் என எங்கேயோ வாசித்திருக்கிறேன்.. சரி நமக்கெதுக்கு வம்பு..

   பின்னூட்டத்துக்கு நன்றி..


   அண்ணாவை ஒழிச்சு இருந்து றியோவில் படம் எடுத்தது என்டு சொன்னியள்.. அதை ஒருக்கா அப்லோட் பண்ணவும்,,,

   கங்கொன் .. நீ செய்யிற வேலை கடவுளே..

  55. சூர்யகதிர் said...

   எதுக்கு புல்லட் அந்த நாசமா போன நுளம்பை ஞாபகபடுதுகிரீர்கள். இந்தியாவில் இருந்து படித்த போது என்னுடைய A L பரீட்சயயே குண்டடிக பார்த்தனான் இந்த கொசு தொல்லயலே !!

   நல்ல காலம் நுளம்பால எங்கட கம்பசில ஒருத்த னுக்கு பெயரே டெங்குஜனா எண்டு வந்திட்டு.. வருத்தம் வந்து பச் மிஸ் பண்ணினவன்..

   நல்லாத்தான் எழுதிறியல், திரும்ப திரும்ப சினிமா, கிரிக்கெட் (
   நான் யாரையும் குத்தவில்லை
   ) எண்டு எழுதாமல் கொஞ்சம் எல்லாத்தையும் யோசிகிறியல். வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதங்கள்

   நன்றி நன்றி.. :P

  56. Subankan said...

   தலைப்பைப் பாத்துட்டு ஒரு வெளிநாட்டுப் பெண் கொசுத்தொல்லை பற்றிய பதிவென்று நினைத்துவிட்டேன். இது வேற :P

   ஹாஹாஹாஹா! ஹோஹோஹோ! என்னே மகிழ்ச்சி என்னே மகிழ்ச்சி.. அது கொசுவல்ல.. அதைவிட Baயங்கரமான சாமான்.. :P உங்கள் துணிச்சலான பின்னுர்ட்டம் புல்லரிக்க வைக்கிறது..

   கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு ரத்ததானம் செய்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவற்றை இதுவரை இப்படி யாரும் பதிந்ததில்லை :)

   அப்படியா? கவனம் டெங்கு வந்திடும்..

  57. //அப்பிடியெல்லாம் இல்லை.. யார் அடிவாங்கினது? பாவம் சமஉரிமை சமஉரிமை எண்டு விழுந்து குழறி அழுதுதுகள் .. அதுதான் சரி பிழைச்சிப்போங்க என்று பேசாம விட்டு்க்கிடக்கு.. //

   ஏய்ய்ய்ய்ய்ய் பரதேசி, கண்டிப்பாக உனக்கு கலியாணம் நடக்காது.. நடந்தாலும் ஒரு பிடாறி தான் வாய்க்கக் கடவது..

   //இலங்கையை பொறுத்தவரை மலேரியாப்பாதிப்பு கூடிய இடம் வன்னியாக இருந்தது.. அதால் செத்த இராணுவத்தினரே பலர் என எங்கேயோ வாசித்திருக்கிறேன்.. //
   அப்படி சொன்னால் தான, சனத்தை ஏமாத்தலாம்...

   //சரி நமக்கெதுக்கு வம்பு..//
   அப்படி வா வழிக்கு...

  58. ஸ்ஸப்பா! மலேரியாக்கொசுவைவிட இந்த மலேசியாக்கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை.. :P (

   நன்றி: கருத்துதவி பிரபல மூன்றெழுத்துப்பதிவர் )

  59. //லோசன் அண்ணாவின் ஒரு பெரிய!!!!!!!!!!!!!!பதிவையே வெற்றி பெற வச்சமில்ல //

   இதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.
   இசையமைக்கிறது ஒருத்தன், பாராட்டு வாங்கிறது இன்னொருத்தனா?
   அந்தத் திட்டத்தை முன்மாழிந்தது சுபா அண்ணா, செயற்படுத்தியது நான்...
   வாக்குப் போடச் சொல்லி பேஸ்புக்கில் அனைவரிடமும் கெஞ்சி, பிறகு ஜமெயில் அரட்டையில 2 பேரப் பிடிச்சு வாக்கு போடப் பண்ணினது நான்... :P :D
   //

   அடப் பாவாத்மாக்களே.. நீங்க தான் அந்தப் பாதாள உலகப் பரமாத்மாக்களா? சும்மா போட்ட ஒரு வெத்து வேட்டை ஹிட் பதிவாக்கி என்னை சந்தி சிரிக்க செய்த செயலுக்கு நான் எம்.பியான பிறகு அனுபவிப்பியல்..

  60. //நான் எம்.பியான பிறகு அனுபவிப்பியல்.. //

   MP லோஷனின் அட்டூழியம்... அப்பாவி இளைஞனுக்கு திரட்டல்...
   உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்...

   (செய்தி எப்பிடியிருக்கு? :P)

  61. //நான் எம்.பியான பிறகு அனுபவிப்பியல்.. //

   அப்ப ஆசை இருக்கோ? உது தெரியாம மஞ்சள், மாலை எண்டெல்லாம் கதைச்சுப்போட்டன். வரோ, ஐ ஆம் சாரி

  62. அப்படின்னு பாத்தா உங்கட விடியல் பீரங்கியல்லோ! :)
   //
   பழைய காலம் என்று உந்தக் குத்தல் குடைசல் எல்லாம் சரிவராது தம்பி.. ;)

   கவனம் குட்டியன் கைய வைச்சானெண்டால் படீர்தான்..!அண்ணி அடிச்சே கொண்டுபோடுவாங்க உங்கள!//

   ஐடியாவெல்லாம் எண்டா குடுக்கிறாய்?

  63. புல்லட் said...
   ஸ்ஸப்பா! மலேரியாக்கொசுவைவிட இந்த மலேசியாக்கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை.. :P (

   நன்றி: கருத்துதவி பிரபல மூன்றெழுத்துப்பதிவர் )
   //

   லண்டன் போயும் மனுஷன் திருந்தேல்லையோ? ;)

  64. ஓ மறந்தே போனேன்.. எங்கள் சிங்கம் கொசுப்பாண்டி வாழ்க.. கொசுப்பாண்டி வாழ்க..

  65. //லண்டன் போயும் மனுஷன் திருந்தேல்லையோ? ;) //

   தெய்வமே....

   அண்ணா...
   பொறுத்தது போதும் கட்சியைத் தொடங்குங்கள்...
   உங்கள் அரசியல் சாமர்த்தியம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

  66. // LOSHAN said...

   ஓ மறந்தே போனேன்.. எங்கள் சிங்கம் கொசுப்பாண்டி வாழ்க.. கொசுப்பாண்டி வாழ்க..//

   ஓமோம், அரசியலுக்கு வர வாழ்க கோசம் போடுறதுதான் அடிப்படைத்தகுதாயாம்

  67. முன்னால் கிரிக்கட் வீரர்களும் இந்நாள் அமைச்சர்களுமான சனத்தும் முரளியும் வெளி விவகார அமைச்சரான லோஷனுடன் இலங்கையில் பதிவுகளை தடை செய்வது பற்றி தீவிர மந்திராலோசனை

   எதிர்கால பத்திரிகை தலைப்பு

  68. //முன்னால் கிரிக்கட் வீரர்களும் இந்நாள் அமைச்சர்களுமான சனத்தும் முரளியும் வெளி விவகார அமைச்சரான லோஷனுடன் இலங்கையில் பதிவுகளை தடை செய்வது பற்றி தீவிர மந்திராலோசனை //

   சின்னத் திருத்தம்...

   முன்னால் கிரிக்கட் வீரர்களும் இந்நாள் அமைச்சர்களுமான சனத்தும் முரளியும் ஊடகத்துறை அமைச்சரான லோஷனுடன் இலங்கையில் பதிவுகளை தடை செய்வது பற்றி தீவிர மந்திராலோசனை

  69. கங்கோன், நீர் இலங்கையில் இருக்கிறீர்.. எனது அரசியல் ஆசான், டாக்டர் மேர்வின்.. ;) இனியும் ஏதாவது செய்தி,கிய்தி சொல்லுவீர்?
   சுபாங்கன், ஆசை யாரை விட்டுது? இலகு தொழில், பெரிய லாபம்.. இறங்குவோம்..

  70. // எனது அரசியல் ஆசான், டாக்டர் மேர்வின்.. ;) //

   அப்ப கஞ்சா கிஞ்சா விற்பனையெல்லாம் தெரியுமோ?
   இல்லாட்டி பழக்கமுமோ? :P

  71. //முன்னால் கிரிக்கட் வீரர்களும் இந்நாள் அமைச்சர்களுமான சனத்தும் முரளியும் வெளி விவகார அமைச்சரான லோஷனுடன் இலங்கையில் பதிவுகளை தடை செய்வது பற்றி தீவிர மந்திராலோசனை//

   எடுத்துக்குடுக்காதைங்கோப்பா, ஏற்கனவே எங்களுக்கு சீனாக்காரங்களோட உறவு.

  72. கன்கொன் || Kangon said...

   MP லோஷனின் அட்டூழியம்... அப்பாவி இளைஞனுக்கு திரட்டல்...
   உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்...//

   என்னாது லோசன் ஏதோ செய்ததில அப்பாவி இளைஞனுக்கு திரண்டுட்டுதோ? டேய் கோவாவை இறக்கினவனை அடிச்சுக்கொல்லுங்கடா!

   (செய்தி எப்பிடியிருக்கு? :P)
   பயங்கரமா இருககு!

  73. தொண்டர்களே.. மன்னிக்கவும்... நண்பர்களே.. எனக்கு தேவை சிக்கலில் மாட்டும் ஊடகத்துறையல்ல..
   புனர்வாழ்வு, புனரமைப்பு, கப்பல் கட்டிறது, மீள் குடியேற்றம்.. அப்பிடி இப்பிடி ஏதாவது கிடைக்குமா பார்க்கிறேன்..
   அது சரி விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கும் வீணாய்ப் போன பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம்?
   எதுவானாலும் என் இணைப்பதிகாரி வரோவுடன் பேசவும்..

  74. ஊடகத்துறை அமைச்சர் கிடைக்கனும் என்டால் அதற்கு லோஷன் தாத்தாவாகிய பின் தான் முடியும். அதுதான் அவருக்கு “வெளி“ விவகார அமைச்சு கொடுத்தேன்

  75. LOSHAN said...

   லண்டன் போயும் மனுஷன் திருந்தேல்லையோ? ;) //

   இரண்டே வரியில் அரசியல் சாணக்கியமும் ஆப்பின் இலக்கணமும் விளங்கப்பத்தப்பட்டுள்ளது அருமை!

  76. அடப் பாவி கங்கோன்.. எழுத்தை மாற்றி என்னை கோவா லெவலுக்கு இறக்கிட்டிஎடா..
   டேய் கொசுபாண்டி எடுடா அந்தக் கொடுவாக் கத்தியை.. ;)

  77. யோ, ஓ அது 'வெளி' விவகாரமா? நன்றி..

   நூறு பின்னூட்டம் காணப் போகும் என் அரசியல் இளவல் தானை சிங்கம் கொசுபாண்டிக்கு வாழ்த்துக்கள்..

   ஒரு எழுத்து மாறினால் நாறிடும்.. ;)

  78. புனர்வாழ்வு, புனரமைப்பு, கப்பல் கட்டிறது, மீள் குடியேற்றம்

   கடைசி வரைக்கும் உதில ஒண்டு கூட இனி சிறுபான்மைக்கு வராது.. இந்து கலாச்சாரம் வரலாம்

  79. //கடைசி வரைக்கும் உதில ஒண்டு கூட இனி சிறுபான்மைக்கு வராது.. இந்து கலாச்சாரம் வரலாம் //

   லோஷன் அண்ணாவைப்பாத்து சிறுபாண்மை எண்ட முதல் ஆள் நீர்தானையா

  80. யோ, ஓ அது 'வெளி' விவகாரமா? நன்றி..

   நூறு பின்னூட்டம் காணப் போகும் என் அரசியல் இளவல் தானை சிங்கம் கொசுபாண்டிக்கு வாழ்த்துக்கள்..

   ஒரு எழுத்து மாறினால் நாறிடும்.. ;) //

   பதிவர் குசும்பனுக்கு போட்டியா இறங்கவேண்டியதுதான் :P

  81. 12.20 இற்கு ஒருத்தன் கணனியப் பாத்து கெக்கே பிக்கே எண்டு சிரிச்சுக் கொண்டிருந்தா அவன அடுத்த நாள் அங்கொடைக்கு அனுப்பீருவாங்கய்யா....

   முடியல....

  82. லோஷன் அண்ணாவைப்பாத்து சிறுபாண்மை எண்ட முதல் ஆள் நீர்தானையா //

   நாங்கள் இங்கு சிறு பானை பெரும்பானை பற்றி கதைக்கவில்லை.. பான்மை.. பெரும்பான்மை சிறுபான்மை பற்றி கதைக்கிறோம்

  83. // நாங்கள் இங்கு சிறு பானை பெரும்பானை பற்றி கதைக்கவில்லை.. பான்மை.. பெரும்பான்மை சிறுபான்மை பற்றி கதைக்கிறோம் //

   ஐயோ...
   அம்மா பொடியனுக்கு பேய் பிடிச்சிற்று எண்டு பி.கே. சாமி ற்ற இழுத்துக் கொண்டு போகப் போறா....

   முடியல...

  84. எடுத்துக் கொடுப்பான் ஒருத்தன் ஏத்தி விட்டு ஏறி மிதிப்பான் இன்னொருத்தன்.. ;)
   இப்ப மலேரியாக் கொசுவெல்லாம் வராதோ?

   அது சரி புல்லட் உங்க வீட்டுக்கு வரும் பாதையில் கண்ணிவெடி தாக்கிறான்கள் போலக் கிடக்கு.. ;)

  85. கண்கோனைக் கண்டதும் பீ.கே.சாமி பரலோஹ்கம் போகப் போறார்.. சாமியைக் காப்பாத்துங்கோ.. ;)

  86. லோஷன் கவலைப்படதேவையில்லை, அவர் அரசியலுக்கு வருவாராக இருந்தால் ஏதாவது ஒரு அபிவிருத்தி அமைச்சு உருவாக்கி தரப்படலாம், குறைந்தது கொசு அழிப்பு அபிவிருத்தி அமைச்சு

  87. //ஐயோ...
   அம்மா பொடியனுக்கு பேய் பிடிச்சிற்று எண்டு பி.கே. சாமி ற்ற இழுத்துக் கொண்டு போகப் போறா....

   முடியல...//

   இதெல்லாமென்ன புதுசா கோபி? எல்லாம் ஒரு மோதிரம் போட்டாச் சரியாப்போகிடும்

  88. நான் பி.கே.சாமிற்ற போயிருக்கிறன்... :P

   'தம்பிக்கு 18 வயசில காதல் பிரச்சினை ஏதோ வந்திருக்கு' எண்டு அப்பாட்ட போட்டுக் குடுக்கப் பாத்தார்...

   நான் புத்திசாலித்தனமா அது பொய்... எனக்கு 17 இல தான் எண்டிற்றன்... :P :D

  89. //'தம்பிக்கு 18 வயசில காதல் பிரச்சினை ஏதோ வந்திருக்கு' எண்டு அப்பாட்ட போட்டுக் குடுக்கப் பாத்தார்...//

   நொட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர்

  90. // இதெல்லாமென்ன புதுசா கோபி? எல்லாம் ஒரு மோதிரம் போட்டாச் சரியாப்போகிடும் //

   வீட்ட ஒண்டு கிடக்குது...
   பச்சக் கல்லு சிங்குச்சா... :D

  91. ஓமோம்.. ஏதோ கொத்துறாங்கள்.. நான் நினைச்சன் அமைச்சர் லோசனிண்ட வீட்டுக்கு சுரங்கம் கிண்டுறாங்களெண்டு..

   அது யார் பிக்கே சாமி?? நல்லா வைக்கிறாங்கய்யா பெயர் கெக்கே சாமி பிக்கே சாமியெண்டு..

  92. P.K. சாமி நுவரெலியாவில தொழில தொடங்கி கொழும்புல பிரபல சாமியாகிட்டார். அவரது மகன் சக்தி சூரியனில் ஞாதகம் சொல்கிறார். கோபியின் எதிர்காலம் பற்றி பார்க்க முன்னர் லோஷனின் அரசியல் எதிர்காலம் பற்றி பார்க்க வேண்டும்

  93. கன்கொன் || Kangon said...

   நான் பி.கே.சாமிற்ற போயிருக்கிறன்... :P

   நான் புத்திசாலித்தனமா அது பொய்... எனக்கு 17 இல தான் எண்டிற்றன்... :P :D //

   உனக்கு எதிர்காலத்தில சிறந்த அரசியல் வாதியாகுவதற்குரிய சகல திநமைகளும் காணப்படுகிறன...

  94. இரவில தூங்கவும் விடுறாங்கள் இல்லை..
   பிக்கே சாமி? மனுஷன் கேட்டால் தேடி வந்து சூனியம் வைக்கும்.. ;)

   இண்டைக்கு நான் தான் கிடைத்தேனா?

  95. Hey Dog,
   Am not malaysia nulambu... Did manthi anna say tat,,, he is DEAD!!!!!

  96. // பிக்கே சாமி? மனுஷன் கேட்டால் தேடி வந்து சூனியம் வைக்கும்.. ;) //

   அந்தாள் ஒரு டம்மி பீஸ்...

   நான் அந்தாள 3 தரம் போய்ப் பாத்திருக்கிறன்...

   :)

  97. ஆகா, பத்தவச்சுட்டியே பரட்டை

  98. தலையின் ஆரம்ப அரசியல் அட்டகாச வெற்றி வெடியக்கொழுத்தி யாற்றயாவது பெற்றோல் டாங்குக்க போடங்கடா!

  99. சரி... இனி இங்கு நடப்பவற்றை நான் ஓரமாகவிருந்து வாய் பார்க்கிறேன்...

   உங்கே ஆரம்பிக்கட்டும்...

   ம்... தார தப்பட்டைகள், சங்கு எல்லாம் ஒலிக்கட்டும்...

  100. வந்தி.. யார் பெத்த பிள்ளையோ! :(

  101. வந்திட்டா என் தங்கை.. வா கொசுப்பாண்டி.. இனி நீ தொலைந்தாய் மவனே.. வந்தியுடன் கூட்டு சேர்ந்து இந்த மலேசிய மங்கையை நோகடித்தாயா? ;)

  102. ye.. 101, 102.. Kosuppaandi vaazhga

  103. LOSHAN said...

   வந்திட்டா என் தங்கை.. வா கொசுப்பாண்டி.. இனி நீ தொலைந்தாய் மவனே.. வந்தியுடன் கூட்டு சேர்ந்து இந்த மலேசிய மங்கையை நோகடித்தாயா? ;) //

   சுபாங்கி!

   எடுறா அந்த கூகிள் சட் லிங்கை.. குடுறா அவர் கையில சங்கை!

  104. 103 பின்னூட்டங்களைப் பெற்று சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணல் கொசுப்பாண்டிக்கு வாழ்த்துக்கள்...

   கொசுப்பாண்டி வாழ்க...

  105. // LOSHAN said...

   ye.. 101, 102.. Kosuppaandi vaazhga//

   கொசுப்பாண்டி வாழ்க, தொடக்கிவைத்த வருங்கால அமரிக்க ஜனாதிபதி லோஷன் வாழ்க

  106. அடப்பாவிகளா! ஒரு பத்து பதினஞ்சு பினு்னூட்டம்தானே கேட்டேன்.. அதுக்காக இபிபடியா?

  107. // தொடக்கிவைத்த வருங்கால அமரிக்க ஜனாதிபதி லோஷன் வாழ்க //

   லோஷன் அண்ணா!
   இந்தத் திட்டமிருந்தா தயவசெய்து அத மறந்திடுங்கோ...
   எனக்குப் போட்டியா யாரும் வளர்றத (ஹி ஹி.. அரசியல் வளர்ச்சியச் சொன்னன்) நான் விரும்பமாட்டன்... :(

  108. ஆகா . மீண்டும் பப்பால எத்துரான்களே.. சரி நண்பர்களே எனக்கு அடுத்த கூட்டத்துக்கு நேரமாவதால் இத்துடன் கலந்துக்கிறேன்.. நன்றி வணக்கம்..
   இன்றைய நாள் இனிதாக அமைந்தது.. நன்றி..

   என் அருமை நண்பர் வந்தியின் ஆத்மா அமைதி பெறுவதாக..

  109. //இன்றைய நாள் இனிதாக அமைந்தது.. நன்றி.//

   நாள் இப்ப தானே தொடங்கியிருக்கு?
   அதுக்குள்ள எப்பிடி? :P :D

  110. சரி, நானும் விடைபெறுகிறேன். புல்லட் அண்ணா, அடுத்த பதிவு எப்போ?

  111. சுபாங்கன் லோஷனை அமெரிக்க ஜனாதிபதி என சிறிய கூட்டுக்குள் அடைக்க வேண்டாம், வேண்டுமானால் எதிர்கால ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பதவி கொடுக்கலாம்

  112. நானும் கும்ியிலிருந்து விடைபெறுகிறேன்.. நீண்ட நாட்களின் பின் அமோக கும்மி என் கொசுப்பதிவின் கீழ் இடம்பெற்றதை வரவேற்கிறேன்..

   இந்த பதிவில் தொடரும் பின்னூட்டங்களை மெயிலாக அனுப்பும் ஒப்சனை கிளிக் பண்ணியவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக!

  113. அடுத்தபதிவு நட்சத்திர வாரத்துக்கான கடைசபபதிவு நாளை இரவு வரும்..

  114. கும்மியில் களைத்து அனைவரும் விடை பெற்றதால் நானும் தூங்கலாம் என நினைக்கிறேன், இனிய இரவு வந்தனங்கள். கர்ண கடூரணமாய் கனவு வர வாழ்த்துகிறேன்

  115. கொழும்புமாவட்டத்தில் ஹர்ஷு வேட்புமனுத்தாக்கல்...

  116. வந்தி....
   உசார்... உசார்...

   அரசியலுக்கு வருவதற்கு முதலே உம்மிலேதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாங்கள்.

   போறபோக்கைப்பார்த்தால் உம்மட மனைவிதான் அழுது கொண்டு பேட்டி கொடுக்கும்.

  117. //போறபோக்கைப்பார்த்தால் உம்மட மனைவிதான் அழுது கொண்டு பேட்டி கொடுக்கும். //

   என்ன்ன்ன்ன்னானானாது பச்சிளம் பாலகர் குழாமில இருந்து விலகீற்றாரா?

  118. //Loshan said...
   எதுவானாலும் என் இணைப்பதிகாரி வரோவுடன் பேசவும்..//

   அட! அட! அட!... பதவிக்கு நன்றி,
   அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே!
   இணுவை மைந்தன், வெள்ளவத்தை சூறாவளி, ஹம்டன் லேன் வேங்கை எனும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் எங்கள் அன்புக்குரிய அண்ணன் லோஷனின் தேர்தல் பற்றிய விபரங்கள், எமது கட்சியின் பொதுக்குழு கூடியபின்னர் அறிவிக்கப்படும். எனவே பொறுமை காக்க…

  119. நுளம்பு ஒழிப்பு தொடர்பான உபகரணத் தகவல்கள் நன்று.