அடிக்கடி ஒரு ஜீவன் : இன்று Weasel


  "OH MY SAMPALEEEEEEEE!"

  ராசம்மா கத்திய கத்தலில் காக்காய் ஒண்டுக்கு ஹாட் அட்டாக் வந்துவிட்டது. மரத்திலிருந்த 50க்கு மேற்பட்ட காக்காய்களும் கத்தியவாறே படபடவென்று அலமலக்கப்பட்டன..
  ஓடிவந்த ராசம்மா வாயைப்பொத்தியவாறு மண்டியிட்டாள்..
  அவள் முன்னால் சாம்பலி செத்துக்கிடந்தாள்..
  தொண்டை குதறப்பட்டிருந்தது..


  சாம்பலி ஒரு ஊர்க்கோழி.. நேற்றுத்தான் தனது 3வது முட்டையை இட்டிருந்தாள்.. இரவு கோழிக்கூட்டினை அடைக்கும் போது ,கோழிகளை எண்ணி சரிபார்க்க மறந்து விட்ட ராசம்மா , இப்போது அநியாயமாக கொல்லப்பட்ட சாம்பலியை சடலமாக பார்த்து அழுது கொண்டிருந்தாள்.. எப்போதும் தன் காலைச்சுற்றிவரும் சாம்பலி செத்த கோபத்தில் திடீரெண்டு கத்தினாள் ....

  “நாசமாப்போன சனியனேஏஏஏஏ! உன்னை பிடிச்சு உரிக்காம விடமாட்டன் ”

  மறுபடியும் ஒரு காக்காய்க்கு ஹாட் அட்டாக் வந்து விட்டிருந்தது..


  அதேவேளை அந்த சனியன் , அதுதாங்க நம்ம வில்லனுக்கு ராசம்மா வைச்ச பெயர், பழைய தபால் பெட்டியொன்றுக்குள் குஜாலாக இருந்தார்..
  அவர் ஒரு மரநாய்..
  ஆங்கிலத்தில் weasel என அழைப்பார்கள்…


  ICE WEASEL

  Mr.சனியனுக்கு இப்போ சாப்பாடு சரியா கிடைப்பதில்லை.. அவர் வழமையாக சாப்பிடும் எலி ஓணான்கள் அவரது ஏரியாவில் அருகிவிட்டன.. அதிஸ்டவசமாக நேற்று மாமரத்தடியில் சென்று கொண்டிருந்தவேளை , சாம்பலி தூங்கிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டுவிட்டது.. நைசாக ஏறி கழுத்தை கடித்து சூடான ரத்தத்தை குடித்துவிட்டு உடம்பை மறைவிடத்துக்கு இழுத்துச்செல்லும் வேளை ராசம்மாவின் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே பாதியில் ஓடவேண்டியதாகிவிட்டது..


  இப்போ ராசம்மாவின் சபதம் , Mr.சனியனை பிடிக்கும் அவளது பழைய பல சபதங்கள் போல காற்றில் வந்து அந்த மரநாயை கடந்து போனது…  மரநாய்கள் Mustelidae குடும்பததை சேர்ந்தவை..அந்த குடும்பத்தில் உதாரணங்களாக martens, badgers, river otters, ferrets, skunks போன்ற விலங்குகளை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்..
  MARTEN  BADGERS

  RIVER OTTERS

  வளர்ந்த மரநாய்கள ஒரு அடியிலிருந்து இரண்டு அடிவரை வளர்க்கூடியவை.. பெரும்பாலும் வளைகளில் வசித்தாலும் பெட்டிகளிலோ மரப்பொந்துகளிலோ அடர்ந்த பற்றைகளிலோ கூட வசிக்கக்கூடியவை.. சிறுசிறு பிராணிகளை உணவாகக்கொள்ளும் இவை சிலவேளைகளில் பறவைகளையும் அவற்றின் முட்டைகளையும் உணவாகக்கொள்கிறன.. poultry farm வைத்திருப்பவர்களின் பிரதான எதிரியியாகிய இது ஒரே தடவையில் பல இலக்குகளை கொன்று அவற்றின் உடலங்களை பிற்கால தேவைகருதி சேகரிக்க முயலும்.. தலையில் அல்லது கழுத்தில் தாக்கி இரையின் சூடான குருதியை குடித்தபின்னர் தன் மறைவிடத்துக்கு இழுத்துச்செல்ல முயலும்…

  தினமும் 25 மிலீ அளவிலான நீர்த்தேவை இவற்றுக்கு உண்டு.. ஆகவே அருகாமையில் நீர்வசதி உள்ள இடமாவே தமது கூட்டை அமைத்துக்கொள்ளும்.. தமது மேய்ச்சல் அல்லது வேட்டைப்பகுதியாக தம் வளையிலிருந்து 40 ஏக்கர் பரப்பளவை வரையறுத்துக்கொள்ளும்.. பெண் மரநாய்கள் 9மாத கர்ப்பத்திற்கு பின்னர் 6 தொடக்கம் 9 குட்டிகளை ஈனும்.. அவை வெறும் 4 மாதங்களில் வேட்டைக்குத்தயாராகி பின்னர் ஓரிருமாதங்களில் இனவிருத்திக்கும் தயாராகிவிடும்..

  இவை ஏதாவது பிராணிகளால் தாக்குதலுக்குள்ளாகும் போது ஓரு தாங்கமுடியா நாற்றத்தை வெளிவிடும்.. அதுவும் இவையது சகோதராமான ஸ்கங்க் தன்னுடைய காசை அடித்தால் நாற்றம் தாங்க முடியாமல் மனிதர்களே மூர்ச்சை போட்டுவிடுவார்கள்.. சக்கை நாற்றம் பிடித்த பிராணிகள் இவை.. ( இதே டெக்னிக்கைதான் கழுதைப்புலிகளும் கையாளும்.. சிங்கம் கூட முருகா என்று கத்திக்கொண்டு மூக்கைச்சீறியபடி ஓடும்.. )

  SKUNKS

  இவற்றுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.. ஏதாவது மூக்கில்லாத பாம்புகள் பிடித்து விழுங்கினாலொழிய மற்றும்படி இவை உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருக்கிறன.. இது எல்லாம் அந்த Mr.சனியனுக்கு தெரிந்திருந்ததால் சாவகாசமாக அன்று இரவும் வேட்டைக்கு புறப்பட்டது..


  மரநாய்கள் வேட்டைக்கு ஒருநாள் சென்ற இடத்துக்கு அடுத்த நாள் செல்வதில்லை.. ஆகவெ Mr.சனியன் பாத்ரூம் பக்கமாகபோய் நெல்லு மூட்டை அடுக்கிவைக்கப்படும் இடமாக சென்றது.. எங்கோ எலிவாசம் அடிப்பதை அதன் மூக்கு உணர்ந்ததும் விறுவிறுவென்று அந்தப்பக்கமாகச்சென்று ஒரு குறுகிய நுழைவாயிலூடே ஒரு பெட்டிக்குள் புகுந்தது.. அங்கே ஒரு எலியொன்று கட்டிப்போடப்பட்டிருந்தது..பாய்ந்து எலியை கவ்வியகணத்தில் வந்த வாயிலிலின் முன்னே படீரெண்டு ஏதோ விழுந்து அடைக்க ராசம்மாவின் மகன்மார் செய்து வைத்த பொறிக்குள் அகப்ட்டுக்கொண்டதை உணர்த்து சீறியபடி சுற்றிசுற்றி Mr.சனியன் ஓடலானது..
  கடைசியாக ராசம்மாவின் சபதம் நிறைவேறும் வேளை நெருங்கியருந்தது.. ஆனால் ராசம்மா தன் மூக்கை முருகப்பெருமானுக்கு நேர்ந்து வைத்துவிட்டு சபதகாரிய்ஙகளில் இறங்கிருப்பாள் என நம்புவோமாக..

  மரநாய்கள் துணிச்சல் மற்றும் ஆர்வமுடையவை.. அதைவைத்துத்தான் அவற்றை பொறிவைத்து பிடிப்பார்கள்.. மேலேயுள்ள படங்களை பார்த்துவிட்டு ஆஹா பிடித்தால் கொண்டுபோய் வீட்டில் வடிவுக்கு வைக்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு செய்தி..

  மேலே காட்டப்பட்டவை வெளிநாட்டு PR உள்ள மரநாய்கள் ...
  நம்ம லோக்கல் மரநாய்கள் இப்பிடித்தான் இருக்கும்.. வளர்ப்பமா? :P


  I
  I
  I
  I
  I
  ஆங்?


  Similar Earlier Posts
  *********************************

  30 Responses

  1. its funny and interesting keep up de good work again & again

   Mustelidae nu yaarai solringa :)
   Marvelous.. wealthy information.. Thanks

   :) :) :)

  2. Funny and Informative, keep rocking.

  3. Buuaaaaaaah.. Your writing is getting worse........ Dont ask me why... I felt it... Ok bye in the airport now :)

  4. அண்ணே,
   தெரியாத விசயங்களை நகைச்சுவையோட கலந்து அழகா எழுதியிருக்கிறியள்...

   எந்த விசயத்தையும் இலகுவான மொழியில எழுதிறதில உங்களுக்கு நீங்கள் தான் நிகர்.

   எண்டாலும் உங்கட அண்மைக்கால மாற்றம் பதிவிலும் தெரிகிறது. :P
   பீற்றர் விடுறீங்கள்....

   சில பெயர்களுக்கு தமிழ அடைப்புக்குறிக்குள்ள போடுங்கோ....

   marten என்பதற்கு தமிழ் எனக்கும் தெரியாது. அறியவும் முடியேல. ஒருவகை கீரியினம் எண்டுதான் தர்றாங்கள்.

   badger எண்டா வளைக்கரடி எண்டு நினைக்கிறன்.

   otter எண்டா நீர்நாய். river otter எண்டா ஆற்று நீர்நாய் அப்பிடி ஏதும் வருமோ?

   ferret உக்கும் மரநாய் வகைய எண்டு தான் அர்த்தம் கிடைக்குது.

   skunk எண்டாலும் ஒருவகைக் கீரியினம் எண்டு தான் அர்த்தம் கிடைக்குது...

   அடைப்புக்குறிக்குள்ள போடுங்கோ.... :)

  5. i dnt undrstand wt ua tryng to say these days bullet BROTHER....

  6. படங்களும் தகவல்களும் சுவாரஸ்யத்துடன் நன்றாக இருக்கிறது.

  7. டிஸ்கவரி தமிழ் சேனல் பாத்தா மாதிரியே இருந்தது,, காமெடியோட...வாழ்த்துக்கள்...

  8. கொமேடி டிஸ்கவரி சனல்

  9. ஜோ.சம்யுக்தா கீர்த்தி

   its funny and interesting keep up de good work again & again

   Mustelidae nu yaarai solringa :)
   Marvelous.. wealthy information.. Thanks

   :) :) :) //


   Thanks a lot dear :-)

   Mustelidae ஐ மூதேவி எண்டு வாசிச்சிட்டீகளோ? :P

  10. - இரவீ - said...
   Funny and Informative, keep rocking.

   Thank you இரவீ.. :-)

  11. முகிலினி said...
   Buuaaaaaaah.. Your writing is getting worse........ Dont ask me why... I felt it... Ok bye in the airport now :) //

   ok

  12. கன்கொன் || Kangon said...
   அண்ணே,
   தெரியாத விசயங்களை நகைச்சுவையோட கலந்து அழகா எழுதியிருக்கிறியள்...

   எந்த விசயத்தையும் இலகுவான மொழியில எழுதிறதில உங்களுக்கு நீங்கள் தான் நிகர்.

   எண்டாலும் உங்கட அண்மைக்கால மாற்றம் பதிவிலும் தெரிகிறது. :P
   பீற்றர் விடுறீங்கள்....

   சில பெயர்களுக்கு தமிழ அடைப்புக்குறிக்குள்ள போடுங்கோ....

   marten என்பதற்கு தமிழ் எனக்கும் தெரியாது. அறியவும் முடியேல. ஒருவகை கீரியினம் எண்டுதான் தர்றாங்கள்.

   badger எண்டா வளைக்கரடி எண்டு நினைக்கிறன்.

   otter எண்டா நீர்நாய். river otter எண்டா ஆற்று நீர்நாய் அப்பிடி ஏதும் வருமோ?

   ferret உக்கும் மரநாய் வகைய எண்டு தான் அர்த்தம் கிடைக்குது.

   skunk எண்டாலும் ஒருவகைக் கீரியினம் எண்டு தான் அர்த்தம் கிடைக்குது...
   //

   நன்றியப்பன்..

   ஹாஹா.. நான் பீட்டர் விடவில்லை.. அந்த மிருகங்களுக்கு தமிழ்ப்பெயர்கிடையாது.. காரணம் அவை தமிழர் பிரதேசங்களில் இல்லை.. கீரி போன் ஒரு மிருகம் என கூறுவதுலும் பார்க்க அதை பார்த்தாலே தெரியகிறதல்லவா.. ஆங்கிலத்திலேயே பெயரை ஞாபகப்படுத்திக்கொள்வது நலம்.. :-)

  13. deepthi said...
   i dnt undrstand wt ua tryng to say these days bullet BROTHER....//

   ok

  14. மாதேவி said...
   படங்களும் தகவல்களும் சுவாரஸ்யத்துடன் நன்றாக இருக்கிறது //

   மிக்க நன்றி அக்கா :-)

  15. அண்ணாமலையான் said...
   டிஸ்கவரி தமிழ் சேனல் பாத்தா மாதிரியே இருந்தது,, காமெடியோட...வாழ்த்துக்கள்.. //

   மிக்க நன்றி Sir...

  16. V.A.S.SANGAR said...
   கொமேடி டிஸ்கவரி சன//

   ஹாஹா.. உண்மையா அப்பிடி ஒன்று இருந்தால் நான் கட்டாயம் வேலைக்கு அப்ளை பண்ணுவேன்.. அல்லது வசதியிருந்தால் ஆரம்பிப்பேன்.. :-)

  17. யோ வொய்ஸ் (யோகா) said...
   nice

   thanks :)

  18. சின்ன வயதில் கோகுலத்தில் இவ்வாறன தகவல்களை கதை போல சொல்லும் பாணியிலான எழுத்துக்களை படித்தது ஞாபகத்திற்கு வந்தது. அருமை அவ்வப்போது இன்னும் நிறைய அறிமுகம் செய்யுங்கள் வழமையான நகைச்சுவையும் கலந்து.

  19. இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.. கலக்கல்..
   தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. :)

   இடையிடையே புல்லட் கடிகள் ரசித்தேன்.. :)

  20. தர்ஷன் said...

   சின்ன வயதில் கோகுலத்தில் இவ்வாறன தகவல்களை கதை போல சொல்லும் பாணியிலான எழுத்துக்களை படித்தது ஞாபகத்திற்கு வந்தது. அருமை அவ்வப்போது இன்னும் நிறைய அறிமுகம் செய்யுங்கள் வழமையான நகைச்சுவையும் கலந்து. //

   தாங்களும் கோகுலம் ரசிகரா? நானும்தான்.. வீட்டில் மாதாமாதம் வாங்கித்தருவார்கள்.. 15ரூபாயிலிருந்து 75 ரூபாய் படிப்படியாக அதிகரித்ததை நான் அதிசயத்துடன் நோக்கியருக்கிறேன்..

   அதில் இப்படியான கட்டுரைகளை எழுதுபவரின் புனைபெயர் ரேவதி.. அவை மிகவும் பிடிக்கும் எனக்கு.. ஒரே ஆர்ட்டிக்கலை பல தடவை வாசிப்பேன்.. திருப்ப திருப்ப.. அவர் பல புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.. அவயும் இருந்தன என்னிடம்.. அவர்ஒரு நீலன் என்கிற காட்டுவாசிப்பபையனை வைத்து சில கதைகள் எழுதுவார் அருமையாக இருக்கும்.. எல்லாம் கனாக்காலம் .. என்னைப்போல் இன்டினாருவரை கண்டதில் சந்தோசம்.. :-)

  21. LOSHAN said...

   இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.. கலக்கல்..
   தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. :)

   இடையிடையே புல்லட் கடிகள் ரசித்தேன்.. :) //

   நன்றி அண்ணன்.. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கமையத்தான் மறுபடி சற்று பிரயோசனமாயும் எழுததொடங்குகிறன்.. :P..

   உங்கள் பின்னூட்டம் ஒரு எக்ஸ்ட்ரா உற்சாகத்தை தருகிறது .. :-)

  22. வணக்கம் புல்லட்! என்ன கன நாளாகக் காணேல்லை என்று யோசிக்கிறீங்களோ?? உங்களோடை கதைக்க வேணும்.... எனக்கு மெயில் பண்ண முடியுமோ?? இல்லை என்றால் என் மெயிலிற்கு உங்கள் ஸ்கைப் முகவரியைத் தர முடியுமா???

  23. This comment has been removed by a blog administrator.
  24. அருமையான தகவல் அண்ணா...

   நிச்சயமாக பள்ளிகளிலும் கற்பித்தல் முறைக்கு உங்கள் பாணி பின்பற்றப் பட்டால் எப்புடியிருக்கும். உயிரியல் 100 க்கு 100 தான்.

   மற்றது நீங்கள் சொன்னது போல் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ்படுத்த முயற்சிக்காமல் அப்படியே கொள்வது நலம். இல்லாவிட்டால் சைக்கிள்திருத்தும் ;கடைக்கு ''ஒட்டகம்'' என வைத்ததாகி விடும்.

  25. Cute animals, specially that ICE weasel.

   Anyway,good Article. Keep it up. :)

  26. கலக்கல் புல்லட் தெரியாத ஒரு சாமான பத்தி எழுதாம எங்களூரில அடிக்கடி திட்டு வாங்குற ஒரு ஜீவனை ப்பறி எழுதி இருக்கிறியள் நன்றி..

  27. நன்றாக இருக்கிறது.
   ராசம்மா தனக்கு தீமை செய்ததை பொறி வைத்து பிடித்த மாதிரி நாங்கள் எங்களுக்கு தீமை செய்தாக்களை பிடிக்கலாமா?

  28. நகைச்சுவையுடன் பிரியோசனமான தகவல்.