கடுப்பைக் கிளப்பும் பெண்கள் :- பார்ட் 1


  ம்ம்….. இது நல்ல இண்ட்ரஸ்டிங்கான டொப்பிக்தான் , என்ன?
  எல்லார் வாழ்க்கையிலும் பெண்கள் இருப்பார்கள். நக்கலும் நையாண்டியும் நிறைந்த புல்லட் பாண்டி வாழ்க்கையென்ன விதிவிலக்கா?
  அங்கும் வந்தார்கள்.. சிரித்தார்கள்…கொஞ்சநாள் கழிய …முறைத்தார்கள்… பின் சென்று கொண்டே இருந்தார்கள்.

  அப்போது நான் மூன்றாம் ஆண்டு. (8வயது). ஒரு நாள் பாடசாலை விட்டு பின்னேரம் 3 மணிக்கு என்னை ஏற்றிச்செல்வதற்காக அப்பா ஸ்கூலுக்கு வந்தார்.
  “எங்கடா இவன்? வழமையா அப்பா எண்டு ஓடிவந்து சைக்கிள் கரியரில ஏறுறவன்.. இண்டைக்கு காணமே” எண்டு உள்ளே தேடிவந்த அப்பா,
  மூஞ்சை முழுவதம் சோகம் அப்பிக்கிடக்க, சுற்றிவர யாருமில்லாமல் ஊஞ்சலில்; தனியே ஆடிக்கொண்டிருந்த என்னை கண்டதும் …
  ”என்னப்பன் என்ன நடந்தது” என்று பயந்துபோய் கேட்டபோது
  பதில் சொல்லாமல் விறுவிறு என்று நடந்துபோய் சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.
  காரணம்… அன்று ஜெயசிங்கம் மிஸ்க்கு கலியாணம் எண்டு ஸ்கூலில அறிவிச்சிருந்தவை.
  ஒவ்வொரு கணக்கையும் விறுவிறுண்டு செய்து போட்டு குடுகுடெண்டு சின்னக்காலால ஓடிப்போய் காட்டேக்க,
  “கெட்டிக்காரன்” எண்டு சொல்லி மிஸ் கன்னத்தில கிள்ளின நினைவெல்லாம் “மலையோரம் வீசும் காற்று” பாட்டு பக்ரௌண்ட் மியூசிக்கா ஓட,
  ப்ளாஸ்பாக்கா வந்து வந்து குமுறி அழவைச்சுக்கொண்டிருந்தது.
  அந்த நேரம் என்னிடம் இருந்த ஒரே கேள்வி…..
  “என்னிடம் இல்லாத என்னத்தை, புதுச்சா ஒருத்தனிடம் கண்டிட்டாள்? துரோகி!”


  காயங்கள் ஆறி ஆறாம் ஆண்டுக்கு வந்தபோது அப்பா கொண்டுபோய் பாட்டுக்கிளாசில சேர்த்துவிட்டார். கிருஷ்ணவேணி மிஸ் எண்ட பாட்டுகிளாசெண்டால் யாழ்ப்பாணத்தில பேமஸ்.. கன இடத்திலருந்தெல்லாம் சுப்பர் குட்டியள் கத்துறதுக்கு வரும்…. அப்பிடித்தான் எண்ட வகுப்பிலயும் ஒரு தேவதை வந்திருந்தாள். அவளும் ஆறாம் ஆண்டுதான். அவள மடக்கிறதுக்கு சைக்கிளில சேர்கஸ் எல்லாம் செய்து கொண்டிரந்தாங்கள் எங்கட வகுப்பில படிக்க வந்த வயது மூத்த (7,8ம் ஆண்டு) அண்ணமார். ஆனா பாவம், எனக்கு சைக்கிள உருட்டக்கூடத்தெரியாது. கண்ணு முன்னால பழம் கை நழுவிப்போற கொடுமைய பார்த்து ரத்தக்கண்ணீர் வடிச்சுக்கொண்டிருந்த போதுதான் அவள் ஒருநாள் என்னட்ட வந்து எண்ட கொப்பிய வாங்கி பாத்துட்டு உங்கட எழுத்து நல்ல வடிவு நான் எழுதிட்டு நாளைக்கு கொண்டு வந்து தாறன் எண்டு வாங்கிட்டுபோனாள். அன்று என் உணர்ச்சிகளை விபரிக்க வார்த்தையே போதாது. அன்றிலிருந்து வகுப்பு வந்ததும் அவள் என்னைதேடுவதும் பார்த்து சிரிபபதும் வாடிக்கையாகிவிட்டது. எப்படா சனி வரும் என்று காத்துக்கிடப்பதே வாரநாட்களில் வேலையாகிவிட்டது. இப்படியாக பாட்டுகிளாசும் பல்லிளிப்பும் சந்தோசமாக போய்க்கோண்டிருந்தபோதுதான் அதற்கும் ஆப்பு வந்தது…....ஒரு அட்டை வடிவில.


  அன்று சுருதிபெட்டி வாசிப்பது என் முறை..
  ஜண்டை வரிசையுடன் சண்டை பிடித்துக்கொண்டிருந்தது வகுப்பு.
  என்னுடைய தேவதையின் முறை வந்ததும் கண்ணை மூடி மாயமாளவகௌளையினை ரசிக்கத்தயாரானேன்.
  ஆகா என்ன இனிமை என்ன இனிமை…
  ஸஸ ரிரி கக மம… என்;னுடைய தலை தன் பாட்டிற்கு ஆடியது.
  ரிரி கக மம பப…. சுருதி சுத்தம். ஆககா!
  கக மம பப..பாய்யோ. அய்யய்யோ……………! “ம்? என்ன இழவு இது? மாயாமாளவகௌளையில் அந்நியஸ்வரம் ஏது?” திடுக்கிட்டு முழித்த நான்… கண்ணுற்றகாட்சி….
  பாயிலிருந்த பாடிக்கொண்டிருந்த தேவதையின் இடத்திலிருந்து ஒரு சிவப்பு நிற அட்டை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
  பாவம் அட்டையைக்கண்டு அவள் அருவருத்து ஓடியிருக்கவேண்டும். வாயைப்பொத்தியபடி தேவதை மூலையில் நின்று என்னை பரிதாபமாகப் பார்த்தது.
  வந்ததே கோபம். கையில் கிடந்த சுருதிக்பெட்டியால் அட்டையை விளாசுவிளாசென்று விளாசிவிட்டேன்..
  டீச்சர் முதல் மாணவர் வரை எல்லாரும் விக்கித்துப்போய் நின்றிருந்தாரகள்.
  கிட்டடியில் கிபிரடியில் அகப்பட்ட மாடுபோல் சின்னாபின்னமாகி கிடந்தது அட்டை………
  ……கூடவே சுருதிப்பெட்டியும்தான்.

  அப்பா போட்ட பூசையில் கிட்டத்தட்ட முக்கால் மண்pநெரம் முகாரியில் ஆலாபனை செய்த நான் அத்துடன் பாட்டுவகுப்புக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டேன்….
  பிறகு 95 இடப்பெயர்வெல்லாம் முடிந்து மூன்று வருடங்களின் பின்பு ஒரு கோயில் திருவிழாவில் அவளை சந்தித்தபோது … கடவுளே…. என்ன கொடுமை இது?
  ஊதிப் பொலிவிழந்து அழுகின பப்பாளிப்பழம் போலிருந்தாள் என் முன்னாள் தேவதை.
  என்னை அடையாளம் கண்டு ஒரு நண்பியுடன் அருகில் வந்து “ என்னத் தெரியுதா? ” என்று வெட்கத்துடன் கேட்டாள்.

  தெரியேல்லை! என்ற ஒரே வார்த்தையுடன்.. திரும்பிக்கூடப்பார்க்காமல் வந்தவிட்டேன். அப்படிக்கூறியதற்கு காரணம் புரியவில்லை, அவள் அழகில்லாமல் போனது காரணமாக இருக்கலாம். பத்தவருடங்களாகி விட்டது. இன்னும் மறுதடவை காணவில்லை. கண்டால் மன்னிப்பு கேட்பதுடன் அழைத்து ஒரு விருந்தும் கொடுப்பதாக உள்ளேன்.

  தொடரும்…..

  ************************************
  இந்த பகுதி சுயபுராணமாக அமைந்து விட்டது. அடுத்த பகுதி நிச்சயமாக பயனுள்ள அலசலாக இருக்கும்…. நன்றி.

  17 Responses

  1. புல்லட் என்ன என் கதை போல் இருக்கு...கொப்பி & பேஸ்டோ...? :-)))

   அல்லது எல்லாரும் என்னை மாதிரித் தானோ...?

   கிட்டடியில் கிபிரடியில் அகப்பட்ட மாடுபோல் சின்னாபின்னமாகி கிடந்தது அட்டை………
   ……கூடவே சுருதிப்பெட்டியும்தான்.


   ஆகா....:-))))

   //அவள் அழகில்லாமல் போனது காரணமாக இருக்கலாம். பத்தவருடங்களாகி விட்டது. இன்னும் மறுதடவை காணவில்லை. கண்டால் மன்னிப்பு கேட்பதுடன் அழைத்து ஒரு விருந்தும் கொடுப்பதாக உள்ளேன்.//

   :-)))

  2. புல்லட் ஏன் தமிழ் மணத்தில் இணைப்பு கொடுப்பதில்லை....? பட்டையை இணைக்கலாமே..?

  3. //புல்லட் என்ன என் கதை போல் இருக்கு...கொப்பி & பேஸ்டோ...? :-)))//

   என்ன டொன்லீ இது? எல்லாரும் பெடியங்கள்தானே? எல்லாருக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். உங்கட பதிவுகளை பிந்தியதிலிருந்துதான் படிச்சுக்கொண்டு வாறன். "அறியா வயசில அறிஞ்சு பண்ணினது" ஐ உண்மையா இப்பதான் வாசிச்சனான். அது மிகவும் நல்லாயிருக்கு. (உங்கட பதிவர் சந்திப்பு விபரணையளோட ஆஸ்தான ரசிகன் நான். )

   பின்னூட்டலுக்கு மிக்க நன்றி டான்லீ.

  4. //’டொன்’ லீ சொன்னது…

   புல்லட் ஏன் தமிழ் மணத்தில் இணைப்பு கொடுப்பதில்லை....? பட்டையை இணைக்கலாமே..?//

   அது ஒரு அசிங்கப்பட்டை. மேல ஒரு பிஞ்சு போன கிடுகு மாதிரி தொங்கிக்கொண்டு... ச்சீக்... முந்தி இணைச்சிருந்தனான் தான். இப்ப நீக்கிப்போட்டன். அறிவுரைக்கு மிக்க நன்றி டான்லீ.

  5. I have read Dr.Shalini's articles. Its just the same... she keeps repeating the same thing and i gave up reading it. i love reading from comics to galaxies.

   I asked my bro and few guys about their school love. unfortunately ellame saamiyaaraga irunthu irukkiraangal... Ketta, we were busy studying and fighting with you endu build up vera.. sorry i have mixed tamil n english.

  6. //Triumph சொன்னது…
   I asked my bro and few guys about their school love. unfortunately ellame saamiyaaraga irunthu irukkiraangal... Ketta, we were busy studying and fighting with you endu build up vera..//

   அடக்கடவுளே... இதெல்லாம் லவ்வில்லையம்மா! அதெப்பிடி இருக்குமெண்டும் தெரியாது... இது சும்மா ஒரு நகைச்சசுவைக்காக சில மனதில மீந்திருக்கிற சம்பவங்களை மீட்டு எழுதி இருக்கிறன். அவ்வளவுதான். படிக்கிற காலத்தில ஒரு பிள்ளை வடிவாயிருந்தால அது கூட கதைக்கவேணும்... அது என்கூட மட்டும்தான் கதைக்கவேணும் எண்டு நினைக்கிறது வயசுக்கோளாறு. அதுவே கொஞ்சம் ஓவராப்போனா கிர ஷ் எண்டு சொல்லுவினம். லவ்வெல்லாம் 25 வயதுக்கு பிறகுதான் வரும்.

   உங்கட அண்ணன்மார் நல்லா காதில பூச்சுத்தி இருக்கிறாங்கள். கிக்கி..........

  7. அடுத்தது உயர்தரத்தில் அனுபவம் தானே அண்ணே??இல்லாட்டி அதுக்கு முதல்லேயும் ஏதாவது இருந்ததா?? pre A/L post A/L எண்டு எல்லாத்தையும் எழுதித்தள்ளுங்கோ..எனக்கு மட்டும் தான் extra large ஆப்பு வீழ்ந்ததா,இல்லாட்டி உங்களுக்கும் தானா என்று பாப்பம்..ஹிஹிஹி..ஒருத்தனுண்ட சோக கதைய கை கொட்டி கேக்குறதுல எவ்வளவு சந்தோசம் பாருங்கோ...ஹிஹிஹி...

  8. வாங்க தியயாகி.. கனநாளாக் காணேல்ல எண்டு பாத்தன். சில நிகழ்ச்சிகள் நடந்ததுதான் ஆனால் சுவாரசியமா எழுதுறளவுக்கு எதுவும் ஞாபகமில்லாமல் கிடக்கு. வருகைக்கு நன்றி.

  9. புல்லட் பாண்டி அண்ணே,

   //இதெல்லாம் லவ்வில்லையம்மா! அதெப்பிடி இருக்குமெண்டும் தெரியாது.//

   கொஞ்சம் decent-ana வார்த்தை உபயோகிக்கப்பார்த்தன்..வயசுக்கோளாறு என்டு சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கது என்டு தான்.

   அனுவம் இல்லையா? u too anna.... Engineers are boring endu proof panuriyale...

   // லவ்வெல்லாம் 25 வயதுக்கு பிறகுதான் வரும்//

   இப்ப உங்களுக்கு 25 வயசு ஆகவில்லை என்டு சொல்றியளே...

   சிலருக்கு 19 / 21 வயசிலேயே பக்குவம் வருகிறதே....

   //உங்கட அண்ணன்மார் நல்லா காதில பூச்சுத்தி இருக்கிறாங்கள்//

   என்ட அண்ணாமாரும் (cousin bros) தம்பியும் சரியான waste... நானே பிள்ளைய பார்த்து குடுத்தாலும் sight அடிக்கிறாங்கள் இல்லை...

   நான் சொல்லுறன். இவங்கள கட்டுற் பிள்ளையள் பாவம். ஏதோ their destiny to discover something in engineering field மாதிரி படிக்கிறாங்கள் / ஆராய்ச்சி செய்யுறாங்கள். Shame for Engineers again...

  10. Post the rest soon annai.... :-)

  11. //புல்லட் பாண்டி அண்ணே,//

   தங்காய் ட்ரையாம்பு! பாசமலரே!

   //இப்ப உங்களுக்கு 25 வயசு ஆகவில்லை என்டு சொல்றியளே...//


   ஏனப்பன் என்னைக்கிழவனாக்க ஆசைப்படுறீங்கள்? எழுத்து ஒரு மாதிரி இருந்தாலும் இளைஞன்தான்.

   //சிலருக்கு 19 / 21 வயசிலேயே பக்குவம் வருகிறதே....//

   ஓகோ உங்களுக்கு பக்குவம் வந்திட்டுப்போல கிடக்கு! நடக்கட்டும் நடக்கட்டும் :D

   //Post the rest soon annai.... :-)//

   கட்டாயம் செய்யுறன் கொஞ்ச நாள் பொறம்மா!

  12. புல்லட் நினைவு மீட்டல்களும் அதனைப் பதிவாக்கிய முறையும் அருமை. எனக்கொரு சந்தேகம்?? நாங்கள் இந்தப் பொட்டை 'சொறி' இந்தக் குட்டி நல்லாயிருக்கு என்று சொல்லி அசடு வழியிற மாதிரி பொட்டையளும் எங்களைப் பார்த்து அசடு வழிவாளுங்கள் தானே?? அதை ஏன் அவளுங்கள் வெளிக்காட்டுவதில்லை???

  13. This comment has been removed by a blog administrator.
  14. //கமல் சொன்னது…
   புல்லட் நினைவு மீட்டல்களும் அதனைப் பதிவாக்கிய முறையும் அருமை. //

   நன்றி கமல்... :)

   //அதை ஏன் அவளுங்கள் வெளிக்காட்டுவதில்லை???//

   எனக்கு அடி வாங்கித்தாறதில உங்களக்கு ஏனிப்படி ஒரு குரூர திருப்தி? ;)

   அண்ணன் கமல்... நிங்கள் தவறுதலா இங்காணும் குட்டியெண்டு பறைஞ்சிட்டல்லோ... ஒரு குட்டிக்கு நிசமாயே ப்ராந்து புடிச்சுப்போயி.... கன்னா பின்னான்னு வைஞ்சுட்டா.....
   மலையாளத்திலே குட்டின்னா தமிழிலே பொம்மனாட்டின்னு அவளுக்கு மரிச்சுப்போயி...

   தவறாக எடுத்துக்காதீங்க கமல்.... :)

  15. @ Triumph

   அது உங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்குமானால் அவர்சார்பில் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்....
   மேலதிகமாக அவரைத்திட்வேண்டுமாயின் அவரது மின்னஞசல் முகவரி அவருடைய புறொபைலில் கா+து.. அதனூடாக அடிபடுங்கள்... நானிங்கு நழுவல்...அதாவது நடுநிலை....

  16. //அதை ஏன் அவளுங்கள் வெளிக்காட்டுவதில்லை???//

   our expectations are really high. and i dont think so we will fall for guys that soon... avalavu alppam illai naangal.. he he...

  17. sir ungaloda blog super.
   by muthu