வில்லு பாக்க போய் பல்லு போக பார்த்த கதை!


    கில்லிக்கு பிறகு விஜயின் ஒவ்வோரு படத்தையும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் பார்க்க பர்ஸ்ட் சோ செல்வதும் பின்பு ஒரு மாதிரி படத்தை பார்த்துவிட்டு "போனது போகட்டும்! இனிமேல் இந்த விசரனின படத்தை பார்ப்பதில்லை" என அசையா உறுதியுடன்னும் அறுந்த செருப்புடன்னும் அலங்கோலமாக மீள்வதும் கடந்த 5 வருடங்களாக நடைபெறும் சோகக்கதை. ஆதியில் அவிந்து போனாலும் குருவிய குதறப்பட்டிருந்தாலும் மீண்டும் தளரா நம்பிக்கையுடன் விக்கிரமாதித்தன் வில்லு பார்க்க போனான். வழமையாக கொன்கோட்டில் முதல் சோ பார்க்க நான் செய்யும் உத்தி மெச்சத்தக்கது. அங்கு ஊரிலிருக்கும் வெட்டி எல்லாம் ஏதோ உலக சாதனை செய்யப்போவது போல் பிலிம் காட்டுவதும் கத்தி கலாட்டா செய்வதும், இங்கிலிஸ் சண்டைப்பட ரேஞ்சுக்கு "கம்பிய பிடி மச்சான் தள்ளடா கஸ்மாலம்" எண்டு சவுண்டு குடுப்பதும் படு சுவாரசியமான காட்சிகள். நான் அமைதியாக ஒரு ஓரமாக நின்றபடி எனது தருணத்திற்காக காத்திருப்பேன். டிக்கட் கொடுக்க தொடங்கியதும் கியூவில்? கரையில் குழுமி இருப்பவர்கள் ஒரு மைய‌‌நோக்கு விசையைப் பிரயோகிப்பார்கள். அப்போது நடுவில் இருப்பவன் நிலமை முல்‌லத்தீவு அகதிய விட மோசமாயிருக்கும். சட்டை செருப்பேல்லாம் பிய்ந்து எலும்‌பெல்லாம் நொருங்கி பொறுமையின் எல்லைக்கு செல்லும்போது நான் களத்தில் இறங்குவேன். கரையில் நின்று
    ஒரு முரட்டு விசையை பிரயோகித்தவண்ணம் அருகில் நிற்பவர்களுக்கும் அவ்வாறே செய்யுமாறு அட்வைஸ் ‌செய்வேன். ஆவலும் ஆசையும் உந்தித்தள்ள இவர்களும் தள்ளும் போது மையத்தில் மறுதாக்கம் தொடங்கும். அதன் பலத்தை கைகளில் அளந்தவாறு அந்த கணத்திற்காக காத்திருப்பேன். கணம் கனிந்தவுடன் சட்டென்று பின்வாங்க கூடத்தள்ளியரகளும் என்ன‌வோ ‌ஏதோடவென்னு விலகி ஓட ஆதாரமிழந்த கும்பல் பொல பொல வென சரியும். இரை ‌நாக்கிய வேங்கை போல் வீழ்ந்தவர்மேலால் பாய்ந்து நொய்ந்து போய் எங்சி நின்றவர்களையும் இழுத்து விழுத்தி கம்பிக்குள் புகுந்து விடுவேன். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி சிவாஜிஇ தசாவதாரம் கூட பரள்ட் சோ பார்த்துள்ளேன் என்றால் பாருங்களென் எத்தனை நம்பகமான டெக்னிக்கென.

    ‌ஆக‌வே கையில் டெக்னிக் சகிதம் காலை கொன்கோட்டை அடைந்த போது காலை எட்டு மணி. வழமைக்கு சற்று அதிகமாகவே கத்தல்களும் மொத்தல்களும் இடமபெற்றுக்கொண்டிருந்தன. காரணத்தை ஆராயந்தபோது வந்ததே ‌‌கடுப்பு. இந்த குரங்குகளின் சேட்டையை பக்கத்து ப்ளாட்டு மொட்டை மாடியிலிருந்து சில குமரிகள் ரசித்து கொண்டிருந்தார்கள். கட்டயில போக! இன்று பளான் வர்க்ஔட் ஆகுமா? பார்ப்போம்! என சிந்தித்தவாறு இருக்கையில் சிலரை உள்ளே விட ஆரம்பித்தார்கள். ஆகா என்ளு நான் நடவடிக்கைக்குத்தயாரானுனபாது அவர்கள் மீணடும் கதவை அடைத்துவிட்டார்கள். இதென்னடா புது விலங்கம் என்று பார்க்க, உள்ளே சென்ற பன்னிகள் ஆளாளுக்கு இருபது முப்பது என்று டிக்கட்டை வாங்கி கம்பிகளுடாக றோட்டில் நின்றவர்களுக்கெல்லாம் குடுத்தனுப்பி விட்ார்கள். இதனால் நான் திகைத்து நிற்க, கோபமடைந்த இடியர்கள் பின்னால் இருந்து டிக்கட் வாங்கியவர்களை முன்வராமல் தடுக்க ,முன்னரறங்கில் நின்ற எனக்கு நிலமையின் விபரீதம் புரியலானது. காலை ஆறு மணிக்கே வந்து காத்திருந்தவர்களின் கடுப்பு கொன்கோட் கூரைத்தகடுகுளையும் பல்புகளையும் பதம் பார்க்கத் தொடங்கியது. அதற்குள் எவனோ ஒருவன் சரவெடிக்கோர்வையை கொளுத்தி கூட்டதின் நடுவில் போட்டுவிட மும்பாய் கலவரம் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது கொன்கோட். இது போதாதென்று அரைவாசிடிக்கட் காரர் வெளியில்நிற்க நேரமாகிவிட்டதென்று படத்தை தொடங்கிவிட்டார்கள். வெறியில் நின்றவர்கள் குய்யோ முறையோ என்று குதிக்கத்தொடங்கினார்கள். எவனோ ஒரு அறிவு கெட்ட முண்டம் காரில் வந்து பாக் பண்ணிவிட்டு ‌உள்ளே சலுகை டிக்கட்டில் பட்ம பார்த்துக்கொண்டிருந்தான். இங்கு அது காயலாங்கடை க்கு தயாரதகிக்கொண்டிருந்தது. என்னடா கடவுளே வெளி‌ய எப்படி போவது என்று தவித்தபோது வந்தது விபரீதம். ‌நிலமையை கையில் கொண்டுவர பிரவேசித்தது விசேட ‌அதிரடிப்படை. கையில் பொல்லுடன் வந்த ஸ்பெசல் டாஸ்க் போஸ் ,மைய நோக்கு போசை நம்பிவந்த எனக்கு அழுகையை வரவழைத்தது. கூட்டம் பயத்தில் அங்குமிங்கும் ஓட ஆரம்பிக்க பயந்து போன நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாசலை நோக்கி ஓட ஆரம்பித்தேன். எதிரே வந்தவல்ளை எல்லாம் இடித்து தள்ளியவாறு ஒரு மாதிரியாக வாசலை அடைந்தபோது யாழ்ப்பாணம் போயடைந்தது போல திருப்தி அடைந்தேன். வாயிலில் ஒ‌ருவனும் இல்லை. எல்லோரும் ஓடிவிட்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்டவர்களுக்கு செம பூசை. தப்பித்த மகிழ்ச்சியுடன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு தற்செயலாக மேலே பார்த்தேன். அந்த குமரிகள் விழுந்து விழுந்து சிரித்தவாறு வடிவேலுக்களின் வில்லு பர்ஸ்ட் ‌சோவையும் அம்மா ஊட்டும் உணவையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு அ.ப.வீரர் என்னை நோக்கி ‌வேகமாக வரவதை கண்டதும் பாய்ந்தடித்து றோட்டை கடந்து, ஓடும் பஸ்ஸினை துரத்தி ஏறி ஆசுவாசப்படுத்த கண்டக்கடர்வந்து ”கொய்த?” என்றான் பாவி. ஒன்றும் சொல்லாமல் இருபது ருபாயை தூக்கி‌காடுக்க ”பொரளைத?” ஓம் என்று மண்டய ஆட்டிவிட்டு சமந்தாவில் இறங்கி ”அபியும் நானும்” தனியே இருந்து பாரத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

    14 Responses

    1. வலைப்பூ ஆரம்பித்தமையையிட்டுவாழ்த்துக்கள் !
      இனிவரும் காலங்களிலும் இதே வேகத்துடனும் , எழுத்துநடையுடனும் எழுதுங்கள்

      வாழ்த்துக்களுடன்
      மாயா

    2. நன்றிகள் நண்பரே மாயா

    3. அப்பா... முடியலை...

      மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????

      கடவுளே... எனக்கு இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..

    4. நீங்கள் சொல்வதை பார்த்தால் உங்கள் உடம்பும் வில்லாக வளைந்திருக்குமே ? இனிமேலாவது செருப்பை பார்த்து கொள்ளுங்கள் ....அன்புடன் கிருக்குபையன்

    5. நீங்க வேற! 3 நாட்களாகியும் என்னால் டிக்கட் எடுக்க முடியவில்ல. பொங்கலன்று ஸ்பெசல் சோ வென்று சொல்லி படித்தவர்களுக்கும் பெண்களுக்கும் அதிக விலைக்கு வீடு வந்தெல்லாம் டிக்கட் விற்றார்கள். நானும் நோகாமல் பிள்ளைப்பெற எண்ணி புதுச்செருப்புக் காசையும் சேர்த்து டிக்கட்டை வாங்கிட்டேன். பொங்கலன்று...... நினைக்கவே கண்ணீர் வருது. வில்லு என்ற கொடுமைய பார்த்து துன்பபட்டதோடல்லாமல் தியேட்டரை முக்காவாசி நிறைத்திருந்த பெண்களின் ஆக்கினையையும் தாங்கியதில பெண்டு கழண்டுபோச்சு. கடைசியில இடம் பிடிச்சு நல்ல சீட்ல இருக்க பிள்ளையள் ஒரு கும்பலா வந்து "அண்ணா ப்ரணட்ஸ் எல்லாம் ஒண்டா இருக்கலாம் நீங்க அங்க போனிங்கன்னா" என்று வழிவார்கள். இப்படியே மாறிமாறி ஏறத்தாழ முன்வரிக்கே வந்து கொண்டு விட்டாளயள். நாசமாப்போவாளயள். பிறகு வளையாம என்ன செய்றது?

    6. //கில்லிக்கு பிறகு விஜயின் ஒவ்வோரு படத்தையும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் பார்க்க பர்ஸ்ட் சோ செல்வதும் பின்பு ஒரு மாதிரி படத்தை பார்த்துவிட்டு "போனது போகட்டும்! இனிமேல் இந்த விசரனின படத்தை பார்ப்பதில்லை" என அசையா உறுதியுடன்னும் அறுந்த செருப்புடன்னும் அலங்கோலமாக மீள்வதும் கடந்த 5 வருடங்களாக நடைபெறும் சோகக்கதை.//

      வில்லு விமர்சனம் ஒன்றை எதிர்ப்பார்த்தே வந்தேன்..வலைப்பூக்கள் எங்கும் வில்லை ஏற்கனவே நாரடித்ததால் இது ஒரு welcome change.hehehehe.இதே பாணியில் விஜய் படங்களுக்கு விமர்சனம் ஏதும் எழுதி தொலைத்து விடாதீர்கள்.விஜய் சினிமா துறையிலிருந்தே retire ஆகிருவார்.

    7. vijay retire analum avaruku politics iruku !!!!!anaaa padam parkira namaluku ??? yosinga makale...

    8. அருமையா எழுதியிருக்கீங்க.

    9. ஸ்பெசல் டாஸ்க் போஸ்? ha ha haaaaaa

    10. கொடுமை கொடுமை...

    11. பொங்கலன்று special show போட்டு உங்கள அடி இடி வாங்காம உள்ள போக விட்டா.... நீங்க உள்ள போய் நல்ல விளையாட்டு காட்டியிருக்கீங்க என்று விளங்குது...

    12. Sorry Bullet Pandi... unfortunately we did not that this film is going be such when we agreed and paid for the show.

      Don't worry you must be proud as your contribution is going help many people in a rural area to fulfil their needs (may be a water pump). Discussions are on the progress. If you have better ideas for doing service we welcome them...

    13. dont waste ur time writing about that idiot

    14. நீங்க கொன்சம் மனிரத்தினம் ஸார் பற்றி எழுதலாமே?