கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும்

    பனங்காயை விட கொலை கொள்ளைகள் மலிந்துவிட்ட யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவமொன்றை கருவாகக் கொண்டு இப்பதிவு எழுதப்படுகிறது! நேரம் இன்மை காரணமாக ஒரு தொடராக எழுதினாலும் சில பதிவுகளில் முடிக்கப்பார்க்கிறேன்.

    பாத்திரங்கள் பற்றிய சிறு முன்னோட்டம்.
    கந்தப்பு: புலத்திற்கு பிள்ளைகளை எல்லாம் அனுப்பிவிட்டு உண்டியலை நம்பிவாழும் சராசரி அரைவழுக்கை ஈழக்கிழவன். கமிட்டியிலிருந்துகொண்டு ஊருக்கு நடாத்துவதிலும், மனைவி பாக்கியத்துடன் தர்க்கப்படுவதிலும், கோவில் அந்திப்பூசைகளில் கலந்து சிறப்பிப்பதிலும் வாழ்நாளைக்கட்த்திக்கொண்டிருந்தார். இனி கதைக்கு வருவோம்.......

    கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும்

    கண்டாமணிக்குப் போட்டியாக தன் சேமக்கலத்தை அடித்து கோயிலுக்கு வந்திருந்த கிழவிகளுக்கெல்லாம் தன் புஜபல பராக்கிரமத்தை புறூவ் பண்ணிய கந்தப்பு பஞ்சாமிருதச்சட்டியை தூக்கிக்கொண்டு ஓட பின்னால் கிழவிகளும் கிக்கி பிக்கி என்று சவுண்டு விட்டவாறு ஓட அங்கே ஏறத்தாழ சிலம்பாட்டம் சீன்தான்;. பிரசாதப்பங்கீட்டின் பின் ,வஞ்சமில்லாமல் எல்லாக் கிழவிக்கும் ஒவ்வொரு ஜோக்கடித்து, சிரித்து கைகாட்டி, காதில் பெரிய பூவுடனும் பாக்கில் எஞ்சிய பஞ்சாமிருதத்துடனும் தன் லேடிஸ் பைக்கில் கந்தப்பு ஆரோகண்pத்தபோது போது சரியாக மாலை 6:30. வீடு வந்து பாக்கியத்தின் புட்டை முட்டையுடன் முழுங்கியபின் ஜன்னலருகில் சாய்மனையைபோட்டவர் , அவ்வளவுதான், ஏதோ சாரத்தை பிடித்து இழுப்பதை உணர்ந்து திடுக்;குற்று எழும்பியபோது எல்லாமே கும்மிருட்hக இருந்தது. நேரம் முன்னிரவு 1 மணியைத்தாண்டியிருக்குமென ஊகித்தவருக்கு ஜன்னலுக்கு வெளியில் ஆள் நடமாட்டத்தை உணரந்ததும், யூரின் டாங்கு முட்டிவிட்டதாகவும் செப்டிக் டாங்கு பிய்யப்போவதாகவும் மூளை அறிவித்தது.

    அவர்களின் கையில் கத்தி , துப்பாக்கி , அலவாங்கு , பொல்லு , அடிமட்டம் , கவராயம் என்று கனவகை ஆயுதங்கள்! பின்னால் ஏதாவது மல்டி பரல், ஆட்டிலறி களும் நிற்கிறதா என ஆராயந்த கந்தப்பு இல்லையென்று உறுதி செய்து கொண்டு நிலமைய எதிர்கொள்ளத்தயாரானபோது அவர்களில் ஒருவன் கந்தப்புவை நோக்கி ஜன்னலருகில் வந்தான்.

    கந்தப்பு :::: (கிடுகிடு) அடேய் யார்ரா நீ?

    திருடன்1 :::: ஆங்? யசூசி அக்காசி! யப்பானிலிருந்து வந்திருக்கேன்! கதவை திறக்கிறீங்களா பாஸ்?

    கந்தப்பு :::: (கிடுகிடு!) என்னது யசூசி அக்காசியா?

    திருடன்1 :::: ஆமா! எங்க ஊர்ல இருந்த கரப்பான் வண்டு பல்லி எல்லாத்தையும் திண்டு முடிச்சிட்டோம். அதான் உங்க ஊர்ல பிடிக்கிறதுக்காக ஒரு பேச்சுவார்த்த செய்யலாம்னு! அடிக்கடி வழக்கமா வந்து போறனான்தானே, தெரியாதா? வெளில குளுருது, கதவைத் திற நைனா!


    கந்தப்பு :::: (கிடுகிடு!) டேய் ஜோக்கா விடுறே? அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன் (வெடவெட)! கத்தி ஊரக்கூப்பிட்டுருவேன்! கள்ளன்தானே நீ?

    திருடன்1 :::: அட கிழட்டுக் கஸ்மாலமே! கேவ்பியூ நேரம் , இவ்வளவு ஆயுதம் , வெள்ளக்கலர் வான் வேற! இந்த நேரத்துல அன்னை தெரேசான்ட அப்பனா வருவான்? கள்ளன் தாண்டா நான் ! எங்க கள்ளன் கள்ளன் எண்டு கத்து பாப்பம்? கிக்கிகி! பேசாம கதவ தொறடா பேமானி!

    கந்தப்பு :::: ஆஆஆஆஆஆஆஆஆஆ! கருங்கொரங்கு! கருங்கொரங்கு!

    திருடன்1 :::: என்னது கருங்குரங்கா?

    கந்தப்பு :::: ஆமா! கள்ளன்னு சொன்னா எவன் வருவான்? கருங்குரங்குன்னு கத்துனா சும்மா விடுப்பு பாக்கலாம்னு சனம் வருமே! நம்மாக்கள பத்தி எனக்கா தெரியாது! ஆஆஆஆ ஈஈஈஈஈஈஈஈஈஈ ஐஐஐஐஐஐஐஐ ஓஓஓஓஓஓஓஓஓ கருங்கொரங்கூஊஊஊஊஊஊ!

    திருடன்1 :::: அடேய் நரிக்கிழவா! சுட்டுருவேன்! வாய மூடு ! நீ கருணாநிதிய விடப் பொல்லாத கிழவனாருக்கியே! சரி நாம ஒரு டீலுக்கு வருவோம். ஒனக்கு நாலு ஒப்சன் தாரேன்! நீ ஒண்ண செலக்ட் பண்ணிக்க! சரியா? ஒப்சன் ஏ: பேசாம கதவ திறந்துவிடு. ஆக்கள ஒண்ணும் பண்ணமாட்டேன்.
    ஒப்சன் பி: நான் கதவை உடைச்சு உள்ள வாரேன். சப்ளிமண்டா ஒன்ட காலயும் ஒடைப்பேன்
    ஒப்சன் சி: கதவை உடைக்கமுடியல. கூரைய பிரிச்சு வாறேன். காம்ப்ளிமெண்டா ஒருத்தன்ட கதைய முடிப்பேன் இல்லாட்டி மினிமம் ஒரு கற்பழிப்பு
    ஒப்சன் டி: உள்ளயே வர முடியல! உன் வளவில எங்கயாவது ஒரு குண்டை தாட்டிட்டு போறவழில போலிசுக்கு போன் பண்ணிருவேன். ஏ பி சி எல்லாம் நாங்க செய்யமாட்டம்! ஆனா நடக்கும். எப்பிடி வசதி? ம்! சீக்கிரம் சொல்லு! டைம் போகுது!

    கந்தப்பு :::: ம்ம்ம்! (டென்சன்) ம்மம்ம்! வந்து… ஒரு போன் பண்ணிக்கலாமா?

    திருடன்1 :::: டேய் கிழவா! இங்க என்ன கோன் பனேகா குரோர்பதி சோவா காட்டுராய்ங்க? எல்லாம் உந்த ”சி;லம் டோக்”; படத்தால வந்த வினை. உங்கள எல்லாம் நிக்க வச்சு வில்லு போடவேணும்.(நறநற) சரி போன் பண்ணித்தொலை.

    அவசரமாக உள்ளே ஓடிச்சென்று டயல்செய்கிறார்.

    கந்தப்பு :::: சார்!சார்! போலீஸ் ஸ்டேசன்?

    போலீஸ் :::: ஆமா, என்னய்யா விசயம்? (ஆவ்வ்!-கொட்டாவி)

    கந்தப்பு :::: சார்ர்ர்! (வெடவெட) கள்ளன் வீட்ட வந்திட்டான் சார்! கள்ளன் வீட்ட வந்திட்டான்!

    போலீஸ் :::: யோவ்! விடை ஒப்சன் ஏ! எத்தனை பேர்தான் போன் பண்ணுவீங்க ஒரே நாளில! சேய்! நிம்மதியா தூங்கவிடுறாங்களா.. ஆஆவ்வ்…சடக் (முனை துண்டிக்கப்பட்டது)







    ;) புராணம் தொடரும்……



    (போரடித்தால் பின்னூட்டலில் தெரிவியுங்கள். நிறுத்திவிடுகிறேன். நோ ப்ரோப்லம் :) )

    கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும் - பகுதி இரண்டு

    10 Responses

    1. நல்லாதான் இருக்கு.யாழ்ப்பாணத்துல திருட்டு அதிகமா? ஏன் வறுமையா?

    2. வறுமையும் கிடையாது! ஒரு புண்ணாக்கும் கிடையாது! யாழப்பாணத்துல ஒரு பிச்சைக்காரன் கூட இல்ல. இது பேராசையால வாறவினை! யார் நம்மள என்ன செய்ய முடியும் எண்ட கொழுப்பு! எல்லாருக்கும் தெரியும் யாரிதெல்லாம் செய்யிறதெண்டு , ஆனா வெளில சொன்னா அவளோதான். பிறகு பேசாம ஒரு கிடங்க வெட்டி கிடுகிடுன்னு இறங்கி படுத்துக்கவேண்டியதுதான். :D

    3. நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்.. உள்ள கஷ்டங்களை கூட சிரிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள்.. மனதுக்கு சங்கடமாக உள்ளது..

    4. //நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்.. உள்ள கஷ்டங்களை கூட சிரிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள்.. மனதுக்கு சங்கடமாக உள்ளது..//
      சங்கடமெல்லாம் படாதீங்க கார்த்தி. நமக்கு உதெல்லாம் ஜூஜூபி. சிரிங்க சந்தோசமா இருங்க. நல்ல நிலமை வரும்போது யாழ்ப்பாணம் வாங்க. பதிவர் சந்திப்பில கலக்கிருவோம். :)

    5. சைட் gap ல் யசூசி அக்காஸி, கருணாநிதி என்று எல்லார் காலையும் வாரிவிட்டீர்கள்..:-)

    6. //’டொன்’ லீ சொன்னது…

      சைட் gap ல் யசூசி அக்காஸி, கருணாநிதி என்று எல்லார் காலையும் வாரிவிட்டீர்கள்..:-)//

      உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! சத்தம் போட்டு காரியத்தை கெடுத்துராதீங்கப்பா! அதைதான் தீமா வைச்சு இன்னும் எழுதுவோமேண்டு நினைச்சனான். சரியா ரீச்சாகல. கமண்ட்ஸ் பாத்தீங்களா? வெறும் 5 தான். கந்தப்பு கைய கடிச்சுட்டான். அதான் காணும் எண்டு விட்டுட்டன்.

      பின்னூட்டலிற்கு நன்றி டான்லீ

    7. பின்னூட்டங்களை நம்ப வேண்டாம் தோழர்.. நாங்கல்லாம் யாரும் படிக்கலன்னாலும் எழுதுறோமல.. நீங்க எப்பெவும் தோணுறத எழுதுங்க..

    8. //கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

      பின்னூட்டங்களை நம்ப வேண்டாம் தோழர்.. நாங்கல்லாம் யாரும் படிக்கலன்னாலும் எழுதுறோமல.. நீங்க எப்பெவும் தோணுறத எழுதுங்க..//


      சேர் என்ன கதையிது? நாமென்ன டி.ராஜேந்தர் அங்கிளா நாங்க மட்டும் பாக்கிறதுக்கு படம் எடுக்க? பலபேர் பாத்து நல்லாருக்குபா எண்டு சொன்னா எழுதலாம். இல்லாட்டி கவனிக்க நிறைய பிசினஸ் இருக்கமுல. எண்டாலும் உங்கட வார்த்தைய மதிச்சு கந்தப்புராணம் பார்ட் 2 விரைவில எழுதுவன். மிக்க நன்றி சேர். அடிக்கடி வாங்கோ என்ன

    9. நல்லாக் கலாய்க்கிறீங்கள் புல்லட்...தொடருங்கோ.....

    10. //கமல் சொன்னது…

      நல்லாக் கலாய்க்கிறீங்கள் புல்லட்...தொடருங்கோ.....//

      ஓமோம் நீங்கள் நல்லா உசுப்பேத்தி விடுங்கோ... நானிப்ப கலாயக்க பிறகு வெள்ளை வான் என்ன விட்டுக் கலைக்கும்.

      நன்றி கமல் :)