மரண வாசல்

    2000 ஆம் ஆண்டு மேமாதம் 18ஆம் திகதி காலை 8 மணி. வீட்டு முற்றத்தில் நின்று ஏதோ சிந்தனையில் ஈடுபட்டிருந்தேன். ”தம்பி படடா” எண்டு அப்பா கத்தியது மூளைக்கு உறைக்கமுன்பு பளீரென்ற வெளிச்சமும் ”க்கும்” என்று அடிக்காதில் ஒரு அமுக்க ஒலியும் கேட்டபோதே விளங்கிவிட்டது. ஷெல் ஒன்று மிக அருகில் வீழ்ந்து வெடித்து விட்டிருந்தது. காலம் தாமதித்து தரையில் விழுந்து உருண்ட நான் காயம் ஏதும் இல்லை‌யென்று உறுதிப்படுத்திய பின் அப்பாவின் கத்தலையும் பொருட்படுத்தாது ஆச்சரியத்துடன் சூழ்நிலைய ஆராய முற்பட்டேன். செல் கிணற்றடியில் வீழந்திருந்தது. நான் சிறுவயது முதல் குளித்து விளையாடிய பித்தளைக்கிடாரம் பாளை போல பிளந்து கிடந்தது. வெறும் 10 மீட்டர் தொலைவில் வீழ்ந்த ஷெல்லிடம் இருந்து என்னைக்காப்பாற்றிய கிணற்றடி மதிலும் வக்குத்தொட்டியும் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்தன. காதில் இன்னும் ரீங்காரம் மறையவில்லை . மறுபடியும் அப்பாவின் கடுமையும் பயமும் கலந்த குரல்கேட்டு வீட்டினுள் ஓடினேன்.

    யுத்தம் அவ்வளகவு வேகமாக எம்மூரை நெருங்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல்நாள் தபால்கட்டைச்சந்தியில் விழுந்த செல்லில் மூவர் கொல்லப்பட்டதும் ஊரிலிருந்த அனேகம் பேர் அகப்பட்டதை ‌தூக்கிக்கொண்டு ஓடி விட்டார்கள். எமது தெருவில் நாமும் இன்னொருவரும்தான் எஞ்சி இருந்தோம். ‌ அந்த வருடம் நான் சாதாரண தரப்பரீட்சை எடுப்பதற்காக வாங்கிய புத்தகங்கள் , 4 வருட காலமாக குருவி போல வாங்கிச்சேகரித்த பொருட்கள் அனைவற்றையும் விட்டுவிட்டு ஓட மனமில்லாமல், அடுத்த நாள் டராக்டர் ஒன்றை பிடித்து மொத்தமாக நகர திட்ட மிட்டிருந்த தந்தையின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டிருந்ததது அந்த கிணற்றடியில் வீழ்ந்த குண்டு. போட்டது போட்டபடி அனைத்னதயும் விட்டுவிட்டு கையிலகப்பட்டவற்றை இழுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தோம். கல்வியங்காட்டில் தந்தையின் நண்பர் ஒருவரின் வீட்டில் அன்று தங்கிய நாங்கள் , இரத்தஅழுத்தம் அதிகமாகி அவதிப்பட்ட எமது தந்தையை தேற்றியவாறு பயந்துகொண்டே இருந்தோம். யாழ்ப்பாணத்துக்கு அன்றுதான் வந்திருந்த மல்டிபரல் ராக்கட் லோஞ்சர்களின் விசித்திர ஒலியுடன் அன்றிரவு நரகமாய் கழிந்தது.

    இரண்டு மூன்று நாட்களில் யுத்தத்தின் போக்கு மாறத்தொடங்கியது. ஆனாலும் பாதுகாப்பாக எல்லாரும் இணுவிலில் இருந்த நண்பர் வீட்டிற்கு இடம்பெயர்வதென தீர்மானிக்கப்பட்டது. தந்தையின் உடல் நிலையும் மெல்லத்தேற ஆரம்பித்திருந்தது. அவ்வேளையில் எம்மூர்ப்பகுதிக்கு மக்கள் சென்று ‌உடைமைகளை எடுத்துவரத் தொடங்கியிருந்தார்கள். தந்தையின் அனுமதி கடைசி வரையும் கிடைக்காதென்னு தெரிந்துவிட்ட அம்மா தம்பியைக்(அந்நேரத்தில் சிறுவன்) கூட்டிக்கோண்டு தெரிந்த சில ஊராருடன் என் புத்தகஙகளை எடுத்து வரச் சென்று விட்டார். நானும் எம்தெருவைச்சேரந்த அண்ணா ஒருவரும் ஒரு மரத்தடியில் கதைத்தவாறு திரும்புவர்களை எதிர்பார்த்துக்காத்திருந்தொம். அவருடைய தாயாரும் அந்த வருடம் உயர்தர தேர்வுக்கு அமரவிருந்த அவரின் புத்தகங்களை மீட்கச்சென்றிருந்தார்.

    மாலையாகிவிட்டது. சென்றவர்கள் இன்னும் திருும்பவி‌ல்லை. தெருவால் அவ்வப்போது வந்து கொண்டிருந்தவர்களையும் காணோம். தெருவே மயான அமைதியாக கிடந்தது. எனக்கு கிலிபிடித்துக்கொண்டது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என எனக்கு உதறத்தொடங்கியத. வீட்டில் போய் என்னத்தை சொல்வது? அப்பா செத்துப்போவார் அல்லது என்னைக் கொன்று விடுவார். வருவது வரட்டும் என்று இருவரும் சைக்கிளை மிதித்துக்கொண்டு அந்த மயான வீதிகளுடாக ‌எம்தெருவை நோக்கிச்சென்றோம். ‌ஈ காக்கா கூட தென்படாத அந்த பாதைகள் வழியே ஒருவாறு புங்கன் குளம் வீதியை அடைந்துவிட்‌டோம். அப்பாடி இன்னும் ஒரு கிலோமீட்டர்தான் , போய்சேர்ந்து விடலாம் என்று ஒருவரை ஒருவர் பாரத்து ஆறுதலாக புன்னகைத்த போதுதான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.

    செவிப்பறை பிய்ந்தாற்போல படீர் என்று ‌கேட்ட அந்த துப்பாக்கி சத்தத்தினால் நிலைகுலைந்துபோய் கீழே இறங்கி நின்றதுதான் தாமதம் எங்கிருந்தோ திமுதிமுவென்று வந்த இராணுவத்தினரின் உதையில் சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். தலையில் ‌ஏதோ அழுத்துவதை உணர்ந்த நான் அது சப்பாத்துக்கால் என் விளங்கியபோது ஒரு துப்பாக்கி முனை என் காதினுள் திணிக்கப்பட்டது. அந்த கணம் நான் அனுபவித்த உணர்ச்சிகளைச் சொல்ல என்னால் ஒருபோதும் முடியாது.

    மரணம் இதோ எக்கணத்திலும் என்று சிந்திக்காமல் முன்னே நசுிக்கபட்டுக்கொண்டிருந்த அந்த அண்ணாவைப்பார்த்து பரிதாபப்ட்டுக்கொண்டிருந்தது எனக்கு இந்நாளில் யோசித்தாலும் விசித்திரமாக இருக்கிறது. அவர்கள் கத்திய சிங்களம் எதுவும் புரியாமல் காதுகளில் கரகரத்த அந்த காய்ந்த பூவரசம் இலைகளின் நொருங்கும் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. அந்த நேரம்தான் யாரோ ஒரு பெண் மன்றாடும் குரல் சன்னமாக கேட்டது. மெல்ல கண்களைத்திறந்த பார்ததபோது.. அது.. மாசிலாமணி.

    எமது ஊரில் 40 வயதாகியும் திருமணமாகாத தன் பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஊரெல்லாம் வலம்வரும் கிழவிதான் அது. சனமெல்லாம் அதுக்கு கொள்ளிப்பார்வையென்று சொல்லி விசேஷங்களுக்ககே கூப்பிடுவதில்லை. சிறுவயதில் தெருவில் நாம் நிற்கும்போது பேரன் இல்லை என்ற ஆசையில் அது கொஞ்சிவிட்டுப்போனால் வீட்டில் எங்களுக்கு நாவுறு சற்றிப்போட்டபின் பூசையும் கிடைக்கும். இதனால் அந்த மனுசி கூப்பிடக் கூப்பிட நாங்கள் ஓடி ஒளித்ததும் உண்டு. இப்போது இந்த மாசிலாமணி எங்களுக்காக அங்கு அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தது. அவர்கள் மிரட்டியும் அது அகலவில்லை. கடைசியாக எங்களை ஏதோ சிங்களத்தில் கடுமையாக எச்சரித்து விட்டு போய்விட்டார்கள் . எழும்பி சைக்கிளை சரிசெய்துவிட்டு பார்த்தபோது கிழவிநின்று அன்பாக தலையை தடவிவிட்டபடி ஏதோ கனக்க சொன்னது. ‌எதுவும் நினைவில்லை. கையெடுத்து கும்பிட்டு விட்டு இருவரும் நொண்டி நொண்டி செல்வதை வெகுதூரம் வரை நின்று பார்த்தக் கொண்டே இருந்தது அந்த மனுசி.

    பி.கு: பெற்றொர் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டார்கள். சென்ற லான்ட் மாஸ்டர் பழுதாகிவிட்டதாம்.
    அந்த அண்ணா 3ஏ எடுத்து இஞ்சினியராகி இப்பொ சிங்கப்பூரில் வெலை செய்கிறார்.
    நானும் சாதாரண தரத்தில் 10டி எடுத்துவிட்‌‌டேன்.
    அந்த மனுசி மாசிலாமணி தான் எங்கோயோ தெரியல! ஆனா சாகும் வரைக்கும் மறக்கமாட்டன்.

    வாழ்க்கை சில பாடங்களை கற்று தரும்போது தவறுகளை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களை தர மறுத்துவிடுகிறது.

    நன்றி.

    13 Responses

    1. //தந்தையின் அனுமதி கடைசி வரையும் கிடைக்காதென்னு தெரிந்துவிட்ட அம்மா தம்பியைக்(அந்நெரத்தில் சிறுவன்) கூட்டிக்கோண்டு தெரிந்த சில ஊராருடன் என் புத்தகஙகளை எடுத்து வரச் சென்று விட்டார். நானும் எம்தெருவைச்சேரந்த அண்ணா ஒருவரும் ஒரு மரத்தடியில் கதைத்தவாறு திரும்புவர்களை எதிர்பார்த்துக்காத்திருந்தொம். அவருடைய தாயாரும் அந்த வருடம் உயர்தர தேர்வுக்கு அமரவிருந்த அவரின் புத்தகங்களை மீட்கச்சென்றிருந்தார்.
      எந்த இடர்வரினும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக எதையும் இழக்கத்துணிந்தவர்கள் தான் எங்களின் அம்மாக்களும் அப்பாக்களும் என என்னுடைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்ததை இங்கும் இரை மீட்கின்றேன்.
      இப்பதிவு 2000ம் ஆண்டையும் பல்குழலின் தாண்டவத்தையும் நினைவுக்கு கொண்டுவந்தது. நேற்றைய சம்பவங்கள் தான் இன்றைய வரலாறுகின்றன.

    2. உண்மைதான் ஆதிரை. யாழ்ப்பாணத்தமிழனுக்கு கல்விதான் சொத்து என்ற வழக்கு ஏன் வந்தது என்று பலருக்கு புரியவில்லை. நாமும் எமது எஞ்சும் பரம்பரைக்கு அதை தவறாமல் வழங்கவேண்டும்.

      பின்னூட்டலிற்கு நன்றிகள் ஆதிரை.

    3. உண்மைதான் ஆதிரை. யாழ்ப்பாணத்தமிழனுக்கு கல்விதான் சொத்து என்ற வழக்கு ஏன் வந்தது என்று பலருக்கு புரியவில்லை. நாமும் எமது எஞ்சும் பரம்பரைக்கு அதை தவறாமல் வழங்கவேண்டும்.

      //

      கல்வி அறிவின் மூலமே எவரும் வெற்றி பெற முடியும்.ஊரெல்லாம் உதை வாங்கிய யூத இனம்.

    4. //வருங்கால முதல்வர் சொன்னது…
      கல்வி அறிவின் மூலமே எவரும் வெற்றி பெற முடியும்.ஊரெல்லாம் உதை வாங்கிய யூத இனம்.

      என்ன முடிக்க முன்னம் ஓடிட்டீங்க? சொல்ல வந்தது விளங்குது.
      பின்னூட்டலிற்கு நன்றிகள் :)

    5. அடடா....2000 ம் ஆண்டு சம்பவமா...:((((((

      இப்படி நம்மவர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் தடைக்கற்கள் இருந்தாலும் நாம் வெற்றிபெற நம் அறிவை பாவிக்கவேண்டும்

    6. கடவுளே எல்லாரும் சீரியஸ் பீலு குடுக்குறாங்கள் ! இனிக்காணும்! டொன்லி கூட செண்டிமன்ட புழியுது. தாங்கமுடியல! எவனாவது சூடு வைச்சு மீட்டர ஓடவிடுங்க பாஸ். ஆ! மறந்து போனன் டாங்சு டொன்லி. :)

    7. 2000 ஆம் ஆண்டு சம்பவம்

      நேற்றும்

      இன்றும்

      இப்பொழுதும் இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது

    8. ஏன்யா.. இவ்வளவு சீரியஸ் விஷயத்த பத்தி நாங்களும் சீரியஸாதான்யா சொல்ல முடியும்.. போரின் கரங்கள் கொடுமையானவை..

    9. நட்புடன் ஜமால் சொன்னது…
      2000 ஆம் ஆண்டு சம்பவம்
      நேற்றும்
      இன்றும்
      இப்பொழுதும் இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது//

      வருகைக்கு நன்றி நட்புடன் ஜமால். கருத்து சரிதான். ஆனால் வலிமையானது மட்டும் வாழும் என்பது உலக நியதி. செய்வதற்கொன்றுமில்லை.

      //கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

      ஏன்யா.. இவ்வளவு சீரியஸ் விஷயத்த பத்தி நாங்களும் சீரியஸாதான்யா சொல்ல முடியும்.. போரின் கரங்கள் கொடுமையானவை..//
      கிக்கி! தமிழனாப்பிறந்தாக்கள் எதையும் சீரியசா எடுக்கபடாது பாண்டியன் சேர். பின்னால சுட்டாலும் சிரிச்சுக்கொண்டுதான் தடவவேணும். வருகைக்கு நன்றி சேர்.

    10. ஏன்டா இந்த ஆக்கத்தை வாசித்தேன் என்டு இருக்கு. மனதை எதோ பாரமாக அழுத்துகிற‌து. யாழ் இடப்பெயர்வு இப்ப நடந்த மாதிரி இருகிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நிறைய வாசிப்பதால் ஒரு பெரிய அறை முழுவதும் புத்தகங்கள் இருக்கும். செத்தாலும் பாரவாயில்லை அந்த புத்தகங்களை எடுக்காமல் அரக்க மாட்டம் என்டு அம்மாட்ட சொன்னனாங்கள். கஷ்டப்பட்டு ஒரு மாதிரி சாவகச்சேரிக்கு கொண்டு வந்தம். பிறகு வட்டகச்சி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்டு அம்மா கஷ்டப்பட்டு கொண்டு திரியிறா. கேட்டால் "என்ட பிள்ளையள் புத்தகங்களை தவிர வேற என்ன ஆசை பட்டதுகள்" என்ட‌ கதை வேற...

      இப்ப அப்பவும் இல்லை ஏன் அம்மா கஷ்டப்படுறியள் என்டாலும் கேட்கிறா இல்லை. இந்த அம்மாமாரே இப்படித்தான்... அடுத்த பிறப்பில் (அப்படி ஒன்று இருந்தால்) நாம் அவர்களின் பெற்றோர்களாக பிறந்து கடனை கொஞ்சமாவது அடைக்க வேண்டும்... எப்ப படிப்பு முடிந்து, பாதை திறந்து, வீட்ட போவோம் என்டு இருக்கு.

      பி.கு:‍ எது சரியானது. "என்டு" / "எண்டு" ? மன்னிக்கவும். தமிழை மாதிரி கஷ்டமான பாடம் எதுவும் இல்லை. நல்ல ஆசிரியர்களால் ஏதோ கொஞ்சம் அறிவும் "D"யும் கிடைத்தது.
      Didnt get to talk to Sri Lankan Tamils after I came abroad for studies. Very much used to Indian slang and feel like I forgot our slang.

      Now made a point of talking to them in English. Cant give a damn to others comments "only Tamils will speak to each other in English whereas Chinese speak in Chinese & Russians speak in Russian...

      I cant mess up my slang anymore. that's the only unique thing we got for us.

      Dont know how to thank you guys. (As) At least I got to associate with Sri Lankan Tamils here :D

      I am so addicted to check few of your blogs. No regret...

    11. //Triumph சொன்னது…
      Didnt get to talk to Sri Lankan Tamils after I came abroad for studies. Very much used to Indian slang and feel like I forgot our slang.//

      Ya ... Lankan tamil slang... that's one of our identification. It is our responsibility to save our parlance. I'm really happy hear that you , one our generation student, has a desire to keep it up. Your visits and comments always instigate me to write more. Hope your dreams would become true in near future. Thank you so much for expressing your thoughts above.

    12. That's nice of you :-) Finally I managed to post an article in Tamil. I was not interested in blogging as I was/am busy with students association work and studies. Na ...Still I have little bit of time but, I spend them to watch cartoons. I can still smile on those silly old cartoons.

      I must thank you all as I started reading again. I simply forgot whats going around the world as cartoons took my time. In a way it was good as staying away from family for studies was/is hard for me.

      How many days I can run away from the truth. Must face it no. So yea, reduced watching cartoons. Cant stop completely. Started reading :-)

    13. Cartoon? Hmmm! Thats funny and.... odd as well. Anyways... glad that you found your way to "blogging in tamil". Hope you'll find it more interesting than cartoon network or Nick. ( ;) once i was addicted to these pokemon,pingu stuff..too. Now abstained.. :))
      Read your article... Nice beginning...
      Good luck triump....