கெமிஸ்றி நாகரட்ணம் சேரெண்டால் யாழப்பாணத்தில காலில விழுந்து கும்பிடுவாங்கள். அந்தளவு பெருமை வாய்ஞ்ச மனுசன். இரசாயனவில் அறிவு எக்கச்சக்கம். ஆள் கருகரு. தலை வெள்ளை வெளேர். அன்பான மனுசன் ஆனா கோவம் வந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. கழுசான கழட்டிக் காஞ்ச மிளகாய் தடவிரும். நானும் கெமிஸ்ரி படிக்க அவற்ற வீட்ட நடக்கிற குறூப்கிளாசுக்குப்போனன்.
நானொண்டும் இரசாயனவியல் படிச்சு ஏ எடுக்கோணுமெண்டு போகேல்ல. அங்க நல்ல வடிவடிவான பயோ படிக்கிற பெட்டயள் வாறதாமெண்டு கேள்விப்பட்டுதான் போனனான். போனாப்பிறகுதான் விளங்கிச்சு அங்க நமக்கு சங்குதாணெண்டு. அப்பாவை அவருக்கு தெரியுமாம். ஒழுங்காப்படிக்கோணும் கேள்விகேட்டாச் சொல்லோணும் எண்டு உத்தரவு வேற.
அடக்கடவுளே! அந்தாளுக்கு பொதறிவுப்பனி. இங்கிலீசுப்பைத்தியம். அடிக்கடி முதல்நாள் வாசிச்ச இங்கிலிசுப்பேப்பரிலருந்து கேள்விகேட்டு தன்ட இங்கிலிசுப்புலமைய காட்டுவார்.ஆப்பில எறி இருந்திட்மே எண்ட வேதினையோட மாசங்கள் ஓடிச்சு. பெரிசா வாயக்குடுக்கம என்ட வாலை ஒடுக்கி வைச்சு எப்பிடியோ சமாளிச்சுட்டன்.அப்பதான் ஒருநாள் வந்நது விலங்கம்.
"தம்பி யாரிங்க பயோ படிக்கிது?" நக்கல் சிரிப்புடன் ஒருகேள்வி. விளங்கிவிட்டது ஏதோ கேக்கப்போகுது சிங்கம்.
"நான் நேற்று பேப்பரில ஒரு விசயம் படிச்சனான் ஓமோனுகளப்பற்றி. இந்த றிபுரடக்சன் றிலேட்டட் ஓமோன்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமே? "
பெண்டுகள் எல்லாம் வெக்கப்பட பெடியங்களுக்கு ஒரே கிளுகிளுப்பு.
"ஒரு அறுவது வயசு மனுசி பிள்ளைப்பெத்திருக்காம். மனுசனுக்கு 70 வயசாம். அமெரிக்காவில நடந்ததாம். ஏதேதோ ஓமோன் கிலான்ஸ் றிபிளாண்டெசன் நடந்ததாம். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?"
ஓவராப்படிச்ச பெண்டுகள் ஏதோ ஒக்ஸிடோசின் ஈஸ்டோசின் எண்டு கெட்டவாரத்தையால வைய , நாகரட்னத்தார் இல்லை இல்லை எண்டு மண்டைய ஆட்ட எனக்கு விசரே பிடித்து விட்டது.
அடச்சே ஒரு கிளுகிளு மாட்டர இப்பிடி சப்பேன்று முடித்துவிட்டாரே என்று.
ஆனால் கொள்ளிக்கண் மனுசன் நான்ஏதோ புறுபுறுப்பதை கண்டுவிட்டது.
தம்பி! என்ன சொன்னனீர்.........!
இல்ல செர் ஒண்டுமில்ல.......!
பரவாயில்ல சொல்லும்.....நீர் சொன்னது சரி.!
இல்ல சேர்... வந்து...!
சொல்லடா கெரியன......!
இல்ல சேர்... உதுக்கெல்லாம் எதுக்கு ஓமோனும் கீமோனும்....விடா முயற்சி வெற்றி தரும் !
என்னது? விக்கித்து நின்ற மனுசன் அருகிலிருந்த டஸ்டரை தூக்கி என்மீது நக்கல் சிரிப்புடன் எறிய நான் லாவகமாகத்தப்பி ஓட பெட்டைபெடியேல்லாம் விழுந்து விழுந்த சிரிக்க... நான் முழிந்து கொண்டு நிற்க...
சேர் சிரித்துக்கொண்டுசொன்னார் "வந்து இரடாப்பா!"...
அன்றிலிருந்து புல்லட்டின் காமெடியில் வகுப்பு கலகலத்தக்கொண்டேயிருந்தது...
தொடரும்....
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
சிதறிய சிரிப்புக்கள்
-
▼
2009
(65)
-
▼
January
(15)
- ஏனப்பா துப்பினாய் முத்துக்குமாரா?
- நானும் நாகரட்ணம் சேரும்.
- கடுப்பைக் கிளப்பும் பெண்கள்
- கடுப்பைக் கிளப்பும் பெண்கள் :- பார்ட் 1
- கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும் - பகுதி இரண்டு
- மீளுமா என் யாழ்ப்பாணம்?
- மரண வாசல்
- கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும்
- "புஷ்" க்கு மட்டுமா எறிந்தார்கள்?
- மச்சான் மச்சான்….
- காவியநாயகர்களைக் களங்கம் செய்யாதீர் : விஷமிகளுக்கு...
- கொள்ளிப் பானை
- புதிதாய் பொங்கிடுவோம்-கொஞ்சம் சீரியசாய்
- போர்த்தேங்காய்
- வில்லு பாக்க போய் பல்லு போக பார்த்த கதை!
-
▼
January
(15)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
17 Responses
//நாகரட்ணம் சேரெண்டால் யாழப்பாணத்தில காலில விழுந்து கும்பிடுவாங்கள். அந்தளவு பெருமை வாய்ஞ்ச மனுசன். இரசாயனவில் அறிவு எக்கச்சக்கம்
//
ஓமோம். யாழ் தந்த ஆசான்களில் ஒருவர்..இவரின் நண்பர் சத்தீஸ்வரனிடம் தான் நான் இரசாயனம் படிச்சனான். அவரும் இவர் ஒருத்தர் தான் தான் மதிக்கிற சக இரசாயன ஆசிரியர் என்று சொன்னவர்..:-)
//நானொண்டும் இரசாயனவியல் படிச்சு ஏ எடுக்கோணுமெண்டு போகேல்ல. அங்க நல்ல வடிவடிவான பயோ படிக்கிற பெட்டயள் வாறதாமெண்டு கேள்விப்பட்டுதான் போனனான்.
//
அப்ப நீர் நம்ம கட்சி...:-)
கொழும்பில தில்லைநாதனிட்ட தான் மகளிர் அணி செல்வது..கூடவே ராஜதுரை இல்லாவிட்டால் Fahumudin...:-)
//"நான் நேற்று பேப்பரில ஒரு விசயம் படிச்சனான் ஓமோனுகளப்பற்றி. இந்த றிபுரடக்சன் றிலேட்டட் ஓமோன்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமே? "//
அடடா..நாகா சேரும் நம்ம கட்சி போல கிடக்கே :-)
//இந்த றிபுரடக்சன் றிலேட்டட் ஓமோன்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமே?
எனக்கும் தெரியவில்லை. அப்படியென்றால் என்ன பாண்டி?
நானும் கன நாளா என்ட உயிரியல் ஸர்ர பட்டி எழுதோணும் எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தனான்..நிறம்ப எழுத இருக்கு எண்டதால எழுத மனசு வருதில்ல..இப்ப உங்கண்ட பதிவ பாத்தா பிறகு கட்டாயம் எழுதித்தல்லோனும் எண்டு யோசிச்சிருக்கிறன்.நாங்க படிக்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு செஞ்ச கூத்து இருக்கே..அம்மாடி..ஒரு புத்தகமே எழுதலாம்..மனுசென் வீட்டுலயும் வகுப்பு எடுத்தனால இன்னும் பெரிய தலையிடி..ஹிஹிஹி..ஞாபகங்களை மீண்டும் தூசு தட்டி மீட்க வைக்கும் பதிவு புல்லெட் அண்ணே..
@ டான்லீ: கெமிஸ்ரி என்றாலே அலர்ஜியாயிருந்த என்னை அகில இலங்கையிலயே அதிக புள்ளி எடுக்க வச்ச மனுசன் அந்தாள். எங்கட வகுப்பில படிச்ச அத்தனை பேரும்இப்ப டொக்டரும் இஞ்சினியரும். அதுக்கு அந்தாளண்ட நட்பு ரீதியான படிப்பித்தலும் தொழில் சார் ஞானமும்தான் காரணம். நான் வாழ்க்கையில மிகவும் நேசிச்ச ஆசிரியர்கள் எண்டால் அஞ்சாம் ஆண்டில கதை சொல்லிசொல்லி படிப்பிச்ச ரகுநாதன் சேர். இங்கிலிசெண்டாலே இழுப்புவாற எனக்கு அத இனிப்பாப் படிப்பிச்ச சோமசுந்தரம் சேர். கடைசியா இவன் எப்பிடிடா இந்த அடிஅடிச்சான் என்று எல்லாரையும் வியக்கவைத்த என் அன்பின் நாகர் சேர். இவையெல்லாரும் எண்ட வாழ்க்கையில வந்ததக்கு நான் அடிக்கடி கடவுளட்ட நன்றி சொல்றனான். வருகைக்கு நன்றி டான்லீ.! :)
//ஆதிரை சொன்னது…
//இந்த றிபுரடக்சன் றிலேட்டட் ஓமோன்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமே?
எனக்கும் தெரியவில்லை. அப்படியென்றால் என்ன பாண்டி?//
க ஷ்டம்! கலியாணம் கட்டுற ஐடியா இருக்கோ? தயவுசெய்து செய்து போடாதீங்கோ! பெண்பாவம் பொல்லாதது!
வருகைக்கும் குசும்புக்கும் நன்றி! :)
//தியாகி சொன்னது…
நானும் கன நாளா என்ட உயிரியல் ஸர்ர பட்டி எழுதோணும் எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தனான்..நிறம்ப எழுத இருக்கு எண்டதால எழுத மனசு வருதில்ல..இப்ப உங்கண்ட பதிவ பாத்தா பிறகு கட்டாயம் எழுதித்தல்லோனும் எண்டு யோசிச்சிருக்கிறன்.நாங்க படிக்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு செஞ்ச கூத்து இருக்கே..அம்மாடி..ஒரு புத்தகமே எழுதலாம்..மனுசென் வீட்டுலயும் வகுப்பு எடுத்தனால இன்னும் பெரிய தலையிடி..ஹிஹிஹி..ஞாபகங்களை மீண்டும் தூசு தட்டி மீட்க வைக்கும் பதிவு புல்லெட் அண்ணே..//
எழுதப்பன்.... உதுகளை மறக்க முன்ன உடன எழுதிவைச்சுப்போடோணும். கனகாலத்துக்குப்பிறகு.... தனிமை வரும்பாது வாசிக்கேக்க நல்லாருக்கும்..... நானும் தம்பின்ற சேட்டையளை வாசிக்க ஆர்வமாயிருக்கிறன். வருகைக்கும் பின்னூட்லிற்கும் நன்றி தியாகி!
(ட்ரையம்பக்கா உங்கட ஏரியாவுக்குயும் பூந்து விளையாடிட்டுது போல.. படமெல்லாம் மாத்தி... நல்ல சேஞ்ச் ;) )
//(ட்ரையம்பக்கா உங்கட ஏரியாவுக்குயும் பூந்து விளையாடிட்டுது போல.. படமெல்லாம் மாத்தி... நல்ல சேஞ்ச் ;) )//
ஓமண்ணே...மாத்திப்போட்டன்.. ;)
இல்ல சேர்... உதுக்கெல்லாம் எதுக்கு ஓமோனும் கீமோனும்....விடா முயற்சி வெற்றி தரும் ..!//
ஐயோ புல்லட்! எப்பிடீங்க உங்களாலை மட்டும் இதெல்லாம் முடியுது? நீங்கள் அவரிட்டைக் கிளாசில தான் படிச்சனீங்க்ள்?? எங்கட பள்ளிக் கூடத்திலை வைஸ் பிறின்சியே அவர் தானே?? ம்..நல்ல மனுசன்... எனக்கு ஆங்கிலத்தில பேச எழுதித் தாறதிலை இருந்து உந்த உச்சரிப்புக்கள் எல்லாம் திருத்தி அப்பப்ப மேடையளிலை ஆங்கில வித்தை காட்டுறதுக்கும் நாகரட்ணம் சேர் துணை புரிஞ்சிருக்கிறார்.
அதோடை அவரின்ர கிளாசிலை படிக்கும் போது ஒரே பயம் தான்...
புல்லட் நீங்கள் யாரென்று நான் கண்டு பிடிச்சிட்டன்??? என்ன யோசிக்கிறீங்களா?
அகில இலங்கையிலை கெமிஸ்ரியில அதிக புள்ளி எடுத்த புல்லட் ??? யாருங்க அது? அது நீங்களா?? வாழ்க...வாழ்க..!
சிரிப்புத் தாங்க முடியேல்லை....சிரியுங்கோ...
//ஒருத்தர் நல்லது சொன்னால் அதைக் கேட்பது புத்திசாலித்தனம். தியாகி புத்திசாலி.//
ஐயோ..ஓவரா புகழாதீங்கோ அக்கா..வெக்கமா இருக்கு..
அவரிட்ட நானும் போனனான். அவர் விடுகின்ற நகைச்சுவைகள் நச்சென்று இருக்கும்.
//Triumph சொன்னது…
Ada pavingala,
I didnt notice this comment till now..ஒருத்தர் நல்லது சொன்னால் அதைக் கேட்பது புத்திசாலித்தனம். தியாகி புத்திசாலி. Its not a hormone problem :-) //
//தியாகி சொன்னது…
ஐயோ..ஓவரா புகழாதீங்கோ அக்கா..வெக்கமா இருக்கு..//
அவா அட்வைஸ் சொல்றாவாம்.... இவர் வெக்கப்படுறாராம்...
கேட்டா எங்கப்பன் குதிருக்க இல்லங்கிற மாதிரி "ஓமோனில்ல ஓமோனில்ல"யாம்...
யாருகிட்ட வுடுறீங்க உடான்சு? ;)(சும்மா நக்கலுக்கு சொன்னேன்.)
// கார்த்தி சொன்னது…
அவரிட்ட நானும் போனனான். அவர் விடுகின்ற நகைச்சுவைகள் நச்சென்று இருக்கும்...//
வருகைக்கு நன்றி... எங்க இன்டரடக்சனோட நிக்குது? மாசம் மூண்டெண்டீங்க.. இன்டையோட மாசம் முடியுது போல கிடக்கு? :) எழுதுங்க... என்ன?
//கமல் சொன்னது…
ஐயோ புல்லட்! எப்பிடீங்க உங்களாலை மட்டும் இதெல்லாம் முடியுது?//
அதிருக்கட்டும் நீங்க யாருகிட்ட ஞானப்பால் குடிச்சீங்க? அத முதல் சொல்லுங்க...
இந்த வயதில தேவாரம் எல்லாம் எழுதிறீங்க... கேட்டா வருத்தம் காயச்சல் எண்டு கனக்க கதைக்கிறிங்க... ( அது விருத்தமோ? சொறி ;) )
//யாருங்க அது? அது நீங்களா?? வாழ்க...வாழ்க..!//
:)
//சிரிப்புத் தாங்க முடியேல்லை....சிரியுங்கோ...//
நீங்க சிரிக்கிறது சரி... என்ன ஏன் சிரிக்கசசொல்லுறீங்கள்? ஆமா என்ன விட வயசு குறைவோ உங்களுக்கு? சும்மா கேட்டனான்.... உங்கட பேர சென்ட்ரல்போனகமல் எண்டு வைச்சுக்கொள்ளுங்க்ளன். நல்லாருக்கும்? (சும்மா பகிடிக்குதானே? கோவிக்கப்படாது என்ன? ;) )
வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள் கமல்... அடுத்தமுறை பின்னூட்டலை ஒரு தேவாரமாயே பாடி விடுங்களன்.. எனக்கு கொஞ்சம் பெருமையாயிருக்கும்... கனபேருக்கு காட்டுவன் நான்)
Post a Comment