அடுத்த பதிவெழுத நேரமாகுமாகையால் வருபவர்கள் சும்மா வாசிக்க ஒரு கட்டுரை...
இது சில வருடங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் வெளியிடப்பட்டது...
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு புது தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதி தருமாறு கேட்கப்பட்டபோது இதை எழுதப்பட்டது... சொப்ட் கொப்பி இது ம்டும்தான் இருப்பதால் தருகிறேன்... நேரமிருந்தால் வாசிக்கவும்... அடுத்த பதிவு பெப் 21 வெளியிடப்படும்...
வருகை மற்றும் பின்னூட்டம் தரும் அனைவஐக்கும் நன்றிகள்...
GPS
------
மாணிக்கத்தாரின் சைக்கிள் கடை வாசலில் போட்ப்பட்டிருந்த பெஞ்சில் கூலாக அமர்ந்திருந்து ஏதோ பேப்பரை படித்துக் கொண்டிருந்தார் கனகலிங்கம் அண்ணை. அவரின் வாயோ அந்த பேப்பர் துண்டில் சுற்றி வந்த புஸ்பன் கடை அப்பத்தை அரைத்துக் கொண்டிருந்தது. அதன் சுவையிலும் பேப்பரில் கிடந்த விசயத்திலும் மூழ்கிக்கிடந்தவரை குழப்பியது தம்பரின் குரல்.
என்னண்ணை காலங்காத்தால பேப்பரும் கையுமா இருக்கிறியள்... ம்…வந்து ஏதாவது நமீதா இண்ட போட்டோ அப்பிடி இப்பிடியான மாட்டரெண்டால் எனக்கும் கொஞ்சம் காட்டுங்கோவன். காலமை சூடா ஒரு TEA அடிச்சமாதிரி இருக்கும்!
அய்யோ காலங்காத்தால கழுத்தறுக்க வந்திட்டியோ..! இத்தினை வயசாகியும்…! உனக்கு உன்ட மனிசி போடுற பூசை காணாதுதான் போல கிடக்கு! என்னைக் கொஞ்சம் சும்மா விடுறியாடாப்பா..!
ஏன் கனகண்ணை காலங்காத்தால அந்தப்பிடாரியை ஞாபகப்படுத்துறியள்! பின்ன என்னத்தை அவ்வளவு ஆர்வமா வாசிக்கிறியள்…? ஏதாவது நாட்டுப்பிரச்சினைக்கு தீர்வு கீர்வு கண்டுட்டாங்களோ..ஹா?
கிழிஞ்சுது போ..! உனக்கும் நினைப்புதான்! இது ஏதோ GPS ஆம்! விஷயம் புதுசாயும் சுவாரஸ்யமாயும் இருந்துது! ஆனா அரைவாசியைக் காணயில்ல! அது ஆரிண்ட அப்பத்தோட போச்சுதோ..! ஹ்ம்…!
அதென்னண்ணை GPS..? புதுசாக்கிடக்குது! ஏதாவது புது நிவாரணம் கிவாரணம் குடுக்கிறாங்களோ...? அப்பிடி ஏதாவது எண்டால் கெதியன சொல்லுங்கண்ணை! இப்பவே ஓடி போய்க் கியூவில நிப்பம்! அப்பத்தான் வேளைக்கு எடுத்துப் போடலாம்..!
விளங்கினமாதிரித்தான்..! அடேய் வெங்காயம்! GPS எண்டால் ஏதோ வழி காட்டுற சிஸ்டமாமடாப்பா! இஞ்ச பார்..! ஏதோ குட்டி ரேடியோ மாதிரி ஒண்ட கையில வைச்சிருக்கிறான் பார்! அது நீ உலகத்தில எவடத்தில நிண்டாலும் அது பற்றின தகவல்களை காட்டுமாமடாப்பா! அத்தோட அந்த இடத்தை அதுல SAVE பண்ணி வைச்சு பிறகொருக்கா அதே இடத்துக்கு போறதெண்டால் அதுல பாத்து பாத்து சரியாயும் அலைச்சலில்லாமலும் கெதியனப்போய்ச் சேர்ந்திடலாமாம்.
அம்மாடியோவ்! இஞ்சரண்ணை…! உந்த பிரளுவாளிண்ட மாட்டை மேய்க்கப் போகேக்க, அது, என்னை ஏதாவது காடுகள் பத்தையள் வழிய இழுத்துக்கொண்டு போய் விட்டுட்டு ஓடிவந்துடுது! வழி தெரியாம, உள்ள பத்தைகித்தையெல்லாம் விழுந்தெழும்பி திரும்பி வாறதுக்கிடையில சீவன் போயிடுது! பிறகு சமைக்க லேட்டாப் போச்சுதெண்டு அதுக்கொரு தனிப்பூசை! இதுக்குப் பேசாம அந்த மிசினொண்டு வாங்கிப்போடலாம் போல கிடக்குது, நீங்கள் என்னண்ணை சொல்லுறியள்?!
சுத்தம்.…! உன்ட மனிசி ஏன் உன்னை கிடத்தி வைச்சு வாசிக்கிறவள் எண்டு எனக்கு இப்பதான் விளங்குது! வடிவேலு மாதிரி வாங்கிக்கட்டியும்
தெளியேல்ல பாரன்! அட உஞ்சற்றா! உந்த ***** கம்பஸில படிக்கிற தவத்தாற்ற பொடியும் இன்னொருத்தனும் சைக்கிள உருட்டிக் கொண்டு இங்கதான் வாறாங்கள்! அவங்களுக்கு உது பற்றி நிச்சயம் தெரிஞ்சிருக்கும். வரட்டும் வடிவாக்கேட்டுப்பாப்பம்.
சைக்கிளை மாணிக்கத்தாரிடம் கொடுத்து ஏதோ கூறிவிட்டு கனகத்தாருக்கும் தம்பருக்கும் முன்னால் இருந்த குந்தில் அமர்ந்தவாறு பேச்சு கொடுக்கிறார்கள் ஆனந்தும் ரூபனும்.
கணகண்ணை! தம்பண்ணை ! எப்பிடி இருக்கிறியள் எல்லாரும்…? சைக்கிள் முள்ளுக்க ஏறி ஒட்டாகிப் போச்சுது, அதுதான்…! வேறென்னமாதிரி ஊரில விசேசங்களெல்லாம்?
இருக்கிறம் தம்பி! ஊரென்ன.. அப்பிடியேதான் கிடக்குது! லீவில வந்திருக்கிறியள் போல கிடக்குது! வேறென்ன கொழும்பெல்லாம் எப்பிடி கிடக்குது!
எட பொடியள்! உங்கட கம்பஸில படிக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் எப்பிடி வடிவானவளையளோ? அந்தக்காலத்திலயே தட்டினா ரத்தம் பறக்கிற ரேஞ்சில சும்மா தளதளவெண்டு தக்காளிப்பழம் கணக்கில திரிவாளயள். இப்ப நிலமைய கேக்கவும் வேணுமே! உண்மைதானேயடா தம்பி..? அங்காலுப் பக்கம் வந்தால் கம்பஸ_க்கும் வாறன்! அவளயளிட்டை என்னை INTRODUCE பண்ணி வைப்பீங்கதானேயடா! ****** சிங்கமல்லோ இந்த தம்பன்! நான் விசிட் பண்ணினா உங்கட கம்பஸ_க்குதானே பெருமை! என்ன கனகண்ணை நான் சொல்லுறது?
அடேய் இழவெடுத்தவனே! அவங்களை ஒரேயடியா எழும்பியோட வைச்சுப்போடுவாய் போல கிடக்குது! இனிமேல்ப் பட்டு உன்ட வாயத் திறந்தியோ கல்லெடுத்தடிப்பன,; சொல்லிக்கிடக்குது. அந்த விசரனிண்ட கதைய விடுங்க தம்பி! இதில ஏதொ GPS எண்டதைப் பற்றி எழுதியிருக்கிறான் தம்பி! ஆனால் முழுக்கட்டுரையும் கிடைக்கயில்ல தம்பி! உங்களுக்கு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் சொல்லுங்களன் தம்பி! கேப்பம்!
அதுக்கென்னண்ணை... கேட்டது வலு சந்தோசம்! GPS அதாவது குளோபல் POSITIONING SYSTEM எண்டது NAVIGATION மற்றும் POSITIONING TECHNOLOGY இல அண்மையில ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அண்ணே! பழைய காலத்துல NAVIGATION கு நட்சத்திரங்களை பயன்படுத்தினாங்கள்! ஆனா இந்த காலத்தில ACCURACY சரியாக தேவைப்படுது! அந்த தேவையைதான் இந்த GPS செய்யுது! இது எப்பிடி வேலை செய்யுது எண்டால், இந்த GPS சிஸ்டத்துக்காண்டி அமெரிக்காக்காரங்கள் நிறைய செய்மதியளை ஏவி விட்டிருக்கிறாங்கள். அதுகள் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை எண்ட கணக்கில பூமியை சுத்திக் கொண்டிருக்கும். அப்பிடியே அதுகள் SIGNAL ஒண்டை அனுப்பிக் கொண்டிருக்குங்கள். அதை எங்களட்ட இருக்கிற RECIEVER, அதுதான் அந்த ரேடியோப் பெட்டி மாதிரியான கருவி RECIEVE பண்ணும். இப்பிடி இன்னும் கொஞ்ச செய்மதியளிட்ட இருந்தான சிக்னல் ஐ வைச்சுக் கொண்டு அந்தக் கருவி நாங்கள் இருக்கிற இடத்திண்ட அகலாங்கு,நெட்டாங்கு,குத்துயரங்களை கண்டுபிடிக்கும்! இதுதான் டெக்னிக்கு!
அட அநியாயமே! அண்ணை…. கேட்டியளோ! அது ஏதோ அலவாங்கு பொல்லாங்கட்டை எல்லாத்தையும் கண்டுபிடிக்குதாம். இதென்னண்ண…. அவங்கள்தான் பகிடி விடுறாங்கள் எண்டால் நீங்களும் இளிச்ச மேனிக்கு இருந்து கேக்கிறியள்!
பன்னாடை! சும்மா இரடா! தம்பி…! அந்த சிக்னல் ஐ வைச்சு எப்பிடி தம்பி அது கண்டு பிடிக்குது?
அப்பிடிக் கேளுங்கண்ணை! அந்தச் செய்மதியளிலை அடோமிக் CLOCK எண்டு சொல்லி வலு துல்லியாயமான ஆன கடிகாரம் ஒண்டு இருக்குது! அந்த CLOCK இல காட்டுற நேரத்தையும் தன்ட செய்மதி ID யையும் தான் SIGNAL இல அனுப்பிக் கொண்டிருக்கும். அப்பிடியே எங்கட RECIEVER இலயும் ஒரு மணிக்கூடொண்டு இருக்குது! எங்கட RECIEVER செய்மதியில இருந்து வந்த சிக்னல் இல இருக்கிற நேரத்தையும் தன்ட மணிக்கூடு காட்டுற நேரத்தையும் ஒப்பிட்டு பாத்து அந்த வித்தியாசத்தில இருந்து அந்த குறித்த செய்மதியில இருந்து தான் இருக்கிற தூரத்தை கண்டுபிடிச்சுக் கொள்ளும். இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு செய்மதியளிட்ட இருந்து சிக்னலை வாங்கி அந்த செய்மதிகளிலிருந்தான தூரத்தையும் கண்டுபிடிச்சுதெண்டால் பிறகு அது தன்ட POSITION ஐ கண்டு பிடிக்கிறது லேசுதானே!
அது எப்பிடி தம்பி ஈசி எண்டுறியள்?
இந்த RECIEVER களில் SOFTWARE ஒண்டு INSTALL செய்திருக்கும். அதில ATLEAST எதாவது 4 GPS SATELLITE இல் இருந்தான தூரம் தெரியுமெண்டால் அதை வைச்சுக் கொண்டு பூகோளத்தில RECIEVER இண்ட POSITION ஐ கண்டு பிடிக்கிற சிஸ்டம் இருக்குது! உதாரணத்துக்கு, கண்டுபிடிச்ச தூரத்தை வைச்சுக்கொண்டு RECIEVER ஆனது செய்மதியை மையமாயும் அந்த தூரத்தை ஆரையாயும் கொண்ட கோளத்திண்ட மேற்பரப்பிலதான் இருக்குதெண்ட முடிவுக்கு வரலாம். இப்பிடி இன்னும் இரண்டு மூன்று செய்மதியளிட்ட இருந்து வருகிற சிக்னல் ஐ வைச்சுக்கொண்டு இன்னும் கோளங்களை கீறினால் அந்த கோளங்கள் இடைவெட்டுற புள்ளியிலதான் RECIEVER இருக்கும். இப்பிடியான ALGORITHM கள் அந்த RECIEVER சாப்ட்வேர் இல இருக்கும். இப்ப விளங்கிட்டுதோ..?
சுப்பர் தம்பி..! அப்பிடி எண்டால் ஆக குறைந்தது மூண்டு நாலு செய்மதியளிட்ட இருந்து சிக்னல் கிடைக்கவேணும் என்ன?
ஓமண்ணை! இந்த சிக்னல்கள் நேர்கோட்டிலதான் செல்லும். ஏண்டபடியால் பூமியிண்ட எந்த ஒரு இடத்தையும் ஒரே நேரத்தில நாலிலும் கூடின செய்மதியள் நேரடியா பாக்கக்கூடினமாதிரிதான் செய்மதியளிண்ட ஒழுக்கு செட் பண்ணி இருக்குது!
ஏட பெடியள்! அதுகள் என்ன மண்ணெண்ணயிலயே ஓடுது? பெரிய பெரிய கூத்தெல்லாம் அடிக்குதுகள்! ஒரு நாளிலயே பூமிய ரெண்டுதரம் சுத்துதெண்டுறிள். போதாக்குறைக்கு சிக்னலு பல்லுப்பொடி எண்டெல்லாம் அனுப்புதெண்டுறியள். ஏனக்கெண்டால் உதெல்லாம் டவுட்டாத்தான் கிடக்குது! என்ன மாணிக்கமண்ணை நான் சொல்லுறது!
ஹாஹா! ஐயோ கந்தையா அண்ணை! அதுகள் சூரிய சக்தியில வேலை செய்யுதுகள்! அதுக்காக அதுகளில பெரிய பெரிய SOLAR PANELகள் பூட்டியிருக்குது! சூரிய ஒளி கிடைக்காத நேரத்தில அதுகளில இருக்கிற BATTERY ஐ பாவிச்சு வேல செய்யும்.
அடடே… அதுவும் அப்பிடியே பொடியள்! ஆதெல்லாம் இருக்கட்டும்! உதால ஏதாலும் பெரிய பிரயோசனம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்ல. பேந்தேன் உதைப்பற்றி இப்பிடி கொட்டை எழுத்தில பேப்பரில போட்டிருக்கிறான்?
ஏன்னண்ணை இப்பிடிக் கேட்டுப் போட்டியள்! அதெண்ட பிரயோசனங்களை ஒண்டொண்டா அடுக்கிறன் கேளுங்கோ!
விமானங்களை பொறுத்தவரையில் GPS ஆனது ஏற்கனவே உள்ள NAVIGATION TECHNIQUE களுக்கு ஒரு செலவு குறைந்த நம்பகமான பிரதியீடாக விளங்குகிறது. GPS உதவியுடன் ஒரு விமானத்தின் COMPUTERகள் விமானத்தை இலக்கை நோக்கி நேரடிப்பாதையில் செலுத்துவதற்கு PROGRAM பண்ணப்படுகிறது. இதன்; காரணமாக எரிபொருளிலும் நேரத்திலும் ஏற்படுத்தப்படும் சேமிப்பு கணிசமானது. மேலும் GPS ஆனது விமானங்களின் தரையிறக்க முறைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலகுவாக்கவும் செய்கிறது. விசேடமாக குழப்பமான காலநிலை நிலவும் போது இவற்றின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. இதே போல கப்பல் துறையில் கூட இதன் பயன்பாடு அளப்பரியது.
FORESTRY , MINERAL EXPLORATION , WILD LIFE HABITANT MANAGEMENT போன்றவற்றில் GPS இன் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. பெமதியான வளங்களின் இருப்பிடத் ஐ நுட்பமாக வரையறுப்பதற்கு GPS பெரிதும் உதவுகிறது,
GPS RECIEVERகளை தோட்ட உபகரணங்களுடன் இணைப்பதன் மூலம் உரப்பாவனைகள் மற்றும் அறுவடையினை மிகச்சரியாக மேற்கொள்வதில் உழவர்கள் அனுகூலங்களை அடைகிறனர்.
SURVEYORS மற்றும்MAP MAKERS நுட்பமான POSITIONING க்காக GPS இனைப் பயன்படுத்துகிறார்கள். TELEPHONE POLES , SEWER(நிலத்தடி கால்வாய்) LINES , FIRE HYDRANTS போன்றவற்றை MAP இல் பதிவு செய்வதற்காக GPS பயன்படுகிறது.
மேலும் GPS மிகச்சரியான நேர அளவீட்டுடன் தொடர்புடையதால் இந்த சிஸ்டம் ஆனது TIME KEEPING க்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. GPS RECIEVER 150 பில்லியனில் ஒரு பங்கு நேரத்தைக் கூட சரியாக காட்ட முடியும்.
இபபிடி GPS இண்ட பிரயோசனத்தை சொல்லிக் கொண்டே போகலாம் அண்ணை! இன்னொண்டு சொல்லுறதெண்டால், உந்த செல்லடியளால பொதுமக்களுக்கும் பொது உடமையளுக்கும்தான் பெரும் சேதம் விளையுது! ஏனெண்டால் இலக்கு சரியாக வைக்கப் படுறதில்லை. ஆனால் இப்ப சண்டை பிடிக்கிறவை எல்லாரும் GPS இணைக்கப்பட்ட தளபாடங்களை உபயோகிக்கிறதால தென்னமரங்களும் தேங்காமட்டையளும் இனி வருங்காலங்களிலயாவது தப்பும் எண்டு நம்புவம். ஏன்ன கனகண்ணை நான் சொல்லுறது?
ஓம் தம்பி. நீங்கள் சொன்னா சரிதான். உங்கட சைக்கிளும் ஒட்டியாச்சு போல கிடக்குது. எல்லாருக்கும் வேற நேரமாப் போச்சுது! மெத்தப் பெரிய உபகாரம் தம்பி. ஏன்ன தம்பர்? இண்டைக்கு பொழுதை பிரயோசனமா செலவிட்டுட்டாய் போல கிடக்குது!
அண்ணை…! கம்பஸில படிச்சவள் எண்டு சொல்லி அந்தப் பிடாரியைக் கட்டினன். அவள் எனக்கு ஒண்டும் தெரியாது தெரியாது எண்டு சொல்லிச்சொல்லி பண்ணுற அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்ல. இண்டைக்கு இந்த விசயமெல்லாத்தையும் அவளுக்குச் சொல்ல அவள் ஒரேயடியா வாயப் பிளக்கப் போறாள். …….ஆனால் தம்பி கடைசியா எனக்கு ஒரேஒரு டவுட். உந்த UPS ஐ வைச்சு அலவாங்க கண்டு பிடிக்கலாம் எண்டு நீங்க சொன்னது உண்மையோ தம்பி…?
?????!!!!!???????
முற்றும்.
வசீகரன்.
NAVIGATION :(விரும்பிய இலக்குகளுக்கு வாகனங்களை செலுத்துதல்)
POSITIONING:(குறிப்பிட்ட இடத்தின் ஸ்தானத்தை உலக வரை படத்தில் அறிதல்;)
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
33 Responses
ஹஹஹா....
தொழில் நுட்பம் பற்றிய தகவல் பதிவில் உமது பாணியில் நக்கல்/பகிடி இணைந்து கலந்து கலங்கடிச்சு விட்டிருக்கீறீர் ...:-))
//எட பொடியள்! உங்கட கம்பஸில படிக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் எப்பிடி வடிவானவளையளோ? அந்தக்காலத்திலயே தட்டினா ரத்தம் பறக்கிற ரேஞ்சில சும்மா தளதளவெண்டு தக்காளிப்பழம் கணக்கில திரிவாளயள். இப்ப நிலமைய கேக்கவும் வேணுமே! உண்மைதானேயடா தம்பி..? //
ஆகா...உந்த வழியை யாரேலும் இன ஓற்றுமைக்கு பயன் படுத்துங்கோவனப்பா,.....
பின்னூட்டப்புயல் டான்லீ வாழ்க...
நீங்கள் ஏதாவது மிசின் கண்டு பிடிச்சு வச்சிருக்கிறீங்களோஇ யாராவது பதிவு போட்டால கத்தி ஊரைக்கூட்டுறமாதிரி...
நன்றி நன்றி... :D
புல்லட் என்ன நடக்குது? அப்பிடியே பழசையெல்லாம் தூசு தட்டிப் போட்டுத் தாக்குறீர்....கலக்கல் தான்.. ஏன் உங்கை கம்பஸிலை பொட்டையளைப் பார்த்த அனுபவமோ??? ம்...எல்லா அனுபவமும் கதையிலை தெரியுது... நல்ல பதிவு...ஒரே கல்லிலை இரண்டு மாங்காய் அடிச்சிருக்கிறியள்.
கலக்கல் பாஸ்...எங்கால பாஸ் உங்களுக்கு இந்த creativity யும் sense of humor உம்? நானும் எவ்வளவோ try பண்ணி பாத்து போட்டன்..ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ம்..சரி வருதே இல்ல...எதுலயோ என்னத்தையோ நச்சென்டு ஏத்துற மாரி வடிவா விளங்கப்படுத்தி இருக்குறியள்.
அதில்ல பாஸ்...வேல இருக்கு, economic crisis, recession, இனி கொஞ்ச நாளெக்கு பதிவு போட மாட்டன் அடியடா பிடியடா என்டு சொல்லிப்போட்டு என்ன இன்னும் உதுக்குள்ளேயே சுத்திக் கொண்டு திரிரியள்?
An informative yet entertaining piece of writing. Good one.
So Ungada name Vaseekaran?
"உந்த UPS ஐ வைச்சு அலவாங்க கண்டு பிடிக்கலாம் எண்டு நீங்க சொன்னது உண்மையோ தம்பி…?"
வீட்டில நிறைய பழசுகள் இருக்குதுகளோ......?
ஊசி தொலைந்து போனா கண்டு பிடிக்கலாம் எண்டு சொல்லும் புல்லட்..
புல்லட் பாண்டி சொன்னது…
//புல்லட் என்ன நடக்குது? அப்பிடியே பழசையெல்லாம் தூசு தட்டிப் போட்டுத் தாக்குறீர்....கலக்கல் தான்.. ஏன் உங்கை கம்பஸிலை பொட்டையளைப் பார்த்த அனுபவமோ??? ம்...எல்லா அனுபவமும் கதையிலை தெரியுது... நல்ல பதிவு...ஒரே கல்லிலை இரண்டு மாங்காய் அடிச்சிருக்கிறியள்.//
நான் என்னமுற்றும் துறந்த முனிவர் எண்டு நினைச்சிட்டீங்களோ? சிங்களப் பிள்ளையளைப்பாக்காம ஒரு தமிழ்ப்பெடியனோ? என்ன கதையிது?
சிங்களப்பிள்ளையள் எனக்கு நிறையப்பேர் ப்ரெண்ட்ஸ்..
காரணம்... அதுகள் ப்ராங்காப் பழகுங்கள்... மற்றப்பிள்ளையளோட கதைக்கிறதப்பற்றி அதுகளுக்கு பிரச்சனையில்ல... மற்றப்பிள்ளையளப்பற்றி கோள் மூட்டாதுகள்...
மற்றவளோட சிரிச்சுக்கதைச்சதுக்காண்டி மூஞ்சைய நீட்டிபப்ளிக்கில அவமானப்படுத்தாதுகள்...இழவு இரவு மூண்டு மணிக்கெல்லாம் மிஸ்கோல் அடிச்சிட்டு அடுத்தனாள்நான் மிஸ்கோல் திருப்பி அடிக்காததுக்காக ஈகோ பொங்கி கதைக்காம விடாதுகள்..
ஆகவே தமிழப்பெடியங்ளுக்கெல்லாம் சிங்களப்பிள்ளையளைக் கண்டால் பாசம் பொங்கிவழியும்... :)
//தியாகி சொன்னது…
கலக்கல் பாஸ்...எங்கால பாஸ் உங்களுக்கு இந்த creativity யும் sense of humor உம்? நானும் எவ்வளவோ try பண்ணி பாத்து போட்டன்..ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ம்..சரி வருதே இல்ல...எதுலயோ என்னத்தையோ நச்சென்டு ஏத்துற மாரி வடிவா விளங்கப்படுத்தி இருக்குறியள்.//
நன்றி தியாகி... பாசமா பாஸ் எண்டு கூப்பிடேக்க கண்ணில கண்ணீர் வருது.. :)
நகைச்சுவை எல்லாம் கம்ப சூத்திரமில்ல... அதோட நானெழுதுறதநல்லாருக்கெணடு நீங்க கொஞ்சப்பேர்தான் தான் சொல்லுறிங்க... :)
நீங்க எழுதுறது மிக நல்லா ரசிக்கும் படியாதானே இருக்கு பேந்தேன் கவலைப்படுறீங்க..
// அதில்ல பாஸ்...வேல இருக்கு, economic crisis, recession, இனி கொஞ்ச நாளெக்கு பதிவு போட மாட்டன் அடியடா பிடியடா என்டு சொல்லிப்போட்டு என்ன இன்னும் உதுக்குள்ளேயே சுத்திக் கொண்டு திரிரியள்?//
பழைய ஆக்கமப்பன் இது... கொப்பி பேஸ்ட“ பண்ண காமணித்தியாலம் கூட ஆகாது... சனிஞாயிறு ப்ரீதானே.. :)
//Mathu சொன்னது…
An informative yet entertaining piece of writing. Good one.
So Ungada name Vaseekaran?
February 15, 2009 7:29 AM
Triumph சொன்னது…
Vaseekaran? Nalla peyar.//
நன்றி...
வசீகரன் என்பது எனதுஇயற்பெயரல்ல... புனைபெயர் /pseudonym /pen name... :) அந்தப் பெயரில்தான் 96 இலிருந்து ஆக்கங்கள் எழுதி வருகிறன்.எனது முதல் முதல் ஆக்கம் 96ம் ஆண்டு உதயன் சங்சீவியில் வெளிவந்த ”வீரப்பரம்பரை”...சின்னப்பையனாக இருந்தாலும் ஒரு நப்பாசையில் எழுதி அனுப்பினேன்.. வந்தபோது மகிழ்சி இருக்கிறதே ... சொல்லி மாளாது...
//மைந்தன் சொன்னது…
வீட்டில நிறைய பழசுகள் இருக்குதுகளோ......?
ஊசி தொலைந்து போனா கண்டு பிடிக்கலாம் எண்டு சொல்லும் புல்லட்..//
இருந்ததுகள்...
ஆனா அப்ப அருமை புரியேல்ல...
GPS பற்றிய தகவல்களையும் நகைச்சுவையோடே தந்துள்ளீர்கள். அறிவுபூர்வமான பதிவு, தொடர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு... என்ஜினியரும் வடிவேலுவும் சேந்து வந்து இருக்கினம்...... நக்கல் நையாண்டி சூப்பர் அண்ணே......அதே நேரத்தில் தகவலும் சூப்பர்... இலங்கையில் GPSக்கு தடை இருக்கு என்று எப்பவோ கேள்வி பட்டேன்..உண்மையோ???
பாருங்கோ அண்ணே, உங்க ரியல் பெயரை கண்டு பிடிக்க எவ்வளவு பேருக்கு ஆசை (எனக்கு மட்டும் இல்லை, கனக்க பேருக்கு இருக்கு என்று இப்பயாவது தெரியுதா)
சாரகீதா
//யாழினி சொன்னது…
GPS பற்றிய தகவல்களையும் நகைச்சுவையோடே தந்துள்ளீர்கள். அறிவுபூர்வமான பதிவு, தொடர வாழ்த்துக்கள்.//
நன்றி யாழினி...
//Saraketha சொன்னது…
அருமையான பதிவு... என்ஜினியரும் வடிவேலுவும் சேந்து வந்து இருக்கினம்...... நக்கல் நையாண்டி சூப்பர் அண்ணே......அதே நேரத்தில் தகவலும் சூப்பர்... //
நன்றி சாரகீதா... :)
//இலங்கையில் GPSக்கு தடை இருக்கு என்று எப்பவோ கேள்வி பட்டேன்..உண்மையோ???//
வினைத்திறன் கூடிய அத்தகைய கருவிகளை இறன்னுமதி செய்யவோ தனியார் பயன்படுத்தவோ அனுமதிப்பத்திரம் றெவேண்டும்...
இப்போதெல்லாம் காரகளில் இத்தகைய உபரணங்கள் பொருத்தப்பட்டு வருகிறன..
நான் முன்பு டயலொக் இல் வேலை செய்த காலத்தில் உந்தக்கருவியோடுதான் இலங்கையை வலம் வந்துள்ளேன்..
தடை இருப்பதாக நான் அறியவில்லை..
// பாருங்கோ அண்ணே, உங்க ரியல் பெயரை கண்டு பிடிக்க எவ்வளவு பேருக்கு ஆசை (எனக்கு மட்டும் இல்லை, கனக்க பேருக்கு இருக்கு என்று இப்பயாவது தெரியுதா)//
சாரகீதா//
உதைக்கண்டு பிடிச்சு என்னப்பன் செய்யப்போறீங்கள்..சும்மா விடுங்க..
வெளிநாட்டில இருந்தால் தைரியமா வெளியிடலாம்...இங்க பயமாயல்லோ கிடக்கு..
அது சரி உதென்ன பெயர் சாரக்கீதா? பயங்கரமாக்கிடக்கு? ;) பெண்நண்பியிண்ட பெயர் கீதாவோ? நீங்கள் சாரங்கனோ?
அப்பு ராசா! எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?? நீரும் எங்களை மாதிரிப் பழசுகளை விடுறேல்லை எண்டு தான் இருக்கிறீர்?? உண்மையா இப்பத்தான் மோனை எனக்கும் உந்த நப்பிக் கேஸ் ஐ ப் பற்றி விளங்கியிருக்கு, நல்லா நக்கல் மட்டும் விடுறீர்?
//தடை இருப்பதாக நான் அறியவில்லை.
தடை தான்.. 2007 இல் வர்த்தகமானியில் அறிவித்திருக்கிறார்கள்...
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இது சம்பந்தமான Projects செய்ய அனுமதிக்கப்படவில்லை.. அனுமதி பெற்றும் GPS பாவிக்கலாம் என்று கூட இல்லை.. வேறு சிலவற்றிற்கு(eg: Thermal Image Devices) அனுமதி பெற்று பாவிக்கலாம்..
இந்த வர்த்தகமானி அறிவித்தல் கிடைக்க முதல் அல்லது அறியாமல் செய்த எம் சிங்கள seniors & நிர்வாகம் பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டடிருந்தார்கள்.. இந்த விசாரணையால் அனுமதி பெற்று பாவிக்க கூடியவற்றை நாம் பாவிக்க விரும்பியபோதும் அதை தவிர்க்க வேண்டப்பட்டோம்.. :(
இந்த வர்த்தகமானி அறிவித்தல் கிடைக்க முதல் அல்லது அறியாமல் GPS பாவித்து Project செய்த......... *
hi anna,
how did i know about the GPS??? one of my friend is a software developer.. in his job, he got a project from America, to implement some extra functialities 2to blackberry phone...on that case, their firm tried to buy a blackberry from Dialog fot testing purposes..Dialog said they cant faclilate GPS..bz they r restricted by some regulations...(u worked in Dialog no... dnt u know this??)..but they suggested to buy a high valued Blackberry, if they want GPS..dat high valued blackberry has an inbuilt chip(or a equipment), that can communicate directly with the satelites..so watever i know, is v can commnicate directly to satelite, but can't communicate through the networks(i thk sri lankan government does nt know yet how to restrict the direct signals...)
anna, it s ur blog, i cant tell my story.but i want to tell onethg. my real name is fully differnt, my family members only know "I am saraketha"...friends dnt knw..there are reasons for all(including da name)..annee i like to chat with u...r u ok to gv ur gtalk id???(just asked, if u hv any problem ..... no problem)
TC
//சக்(ங்)கடத்தார் சொன்னது…
அப்பு ராசா! எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?? நீரும் எங்களை மாதிரிப் பழசுகளை விடுறேல்லை எண்டு தான் இருக்கிறீர்?? உண்மையா இப்பத்தான் மோனை எனக்கும் உந்த நப்பிக் கேஸ் ஐ ப் பற்றி விளங்கியிருக்கு, நல்லா நக்கல் மட்டும் விடுறீர்? //
வந்ததுககு நன்றி சங்குத்தாத்தா... :)
எனக்கென்ன குறைச்சல் நல்லாத்தன் இருக்கிறன்...
நக்கல் விடுறனோ? உங்களை விடவோ... :)
வொய்ஸ் பதிவெல்லாம் விடுறியள் ... அமர்க்களப்படுத்துங்கோ... :)
//Vishnu சொன்னது…
தடை தான்.. 2007 இல் வர்த்தகமானியில் அறிவித்திருக்கிறார்கள்...//
தகவலுக்கு நன்றி... நான் அறிந்திருக்கவில்லை.. நான் அதை பயன் படுத்தியது 2006 செப்டம்பர் முதல் 2007 பெப்ரவரிவரை... வழியெல்லாம் செக் பண்ணுவார்கள்... கடைசியாக தன்னுடைய டயலொக் கனக்சனில் ஏதோ கோளாறென்று முறையிட்டுவிட்டுமரியாதையுடன் அனுப்பிவிடுவார்கள்.. பற்றி கேட்டதேயில்லை..
// பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இது சம்பந்தமான Projects செய்ய அனுமதிக்கப்படவில்லை.. அனுமதி பெற்றும் GPS பாவிக்கலாம் என்று கூட இல்லை.. வேறு சிலவற்றிற்கு(eg: Thermal Image Devices) அனுமதி பெற்று பாவிக்கலாம்..//
எமது பல்கலையில் பலர் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப்ப யன்படுத்தி Project செய்தார்கள்... எமது லாப்பிற்கு ஆமிக்காரங்களும் வருவார்கள்... உதைப்பற்றி எதுவித பிரச்சனையும் எடுப்பதில்லை.. நானே தடைசெய்யப்பட்ட 250மீட்டர் RF module ஐ களவாக இறக்குமதி செய்து பயன் படுத்தினேன்.. எமது பல்கலையில் இராணுவ ஆயுத ஆராய்ச்சிகள் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டல்கள் இடம் பெறுவதால் விதிவிலக்குபோலும்..
// இந்த வர்த்தகமானி அறிவித்தல் கிடைக்க முதல் அல்லது அறியாமல் செய்த எம் சிங்கள seniors & நிர்வாகம் பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டடிருந்தார்கள்.. இந்த விசாரணையால் அனுமதி பெற்று பாவிக்க கூடியவற்றை நாம் பாவிக்க விரும்பியபோதும் அதை தவிர்க்க வேண்டப்பட்டோம்.. :(//
உங்கட சீனியர்கள் 2007 இல் படித்தாரகளா? அப்படியானால் எந்த நம்பிக்கையில் என்னை தம்பி எண்டு அழைத்தீங்கள்? பாத்தா நீங்கள் எனக்கு தங்கச்சி போல கிடக்கு.. :) படிப்பு முடிங்சுதா? என்னைத்தெரியுமா? :) தெரிந்தால்இங்குஎனக்கு போட்டு வெளுத்த மாட்டரை வெளியில் சொல்லி விடாதீர்கள்.. பிறகுஅம்மாவே வீட்டுக்குள் விடமாட்டார்கள்..
//Saraketha சொன்னது…
hi anna,
how did i know about the GPS??? one of my friend is a software developer.. in his job, he got a project from America, to implement some extra functialities 2to blackberry phone...on that case, their firm tried to buy a blackberry from Dialog fot testing purposes..Dialog said they cant faclilate GPS..bz they r restricted by some regulations...(u worked in Dialog no... dnt u know this??)..but they suggested to buy a high valued Blackberry, if they want GPS..dat high valued blackberry has an inbuilt chip(or a equipment), that can communicate directly with the satelites..so watever i know, is v can commnicate directly to satelite, but can't communicate through the networks(i thk sri lankan government does nt know yet how to restrict the direct signals...)
anna, it s ur blog, i cant tell my story.but i want to tell onethg. my real name is fully differnt, my family members only know "I am saraketha"...friends dnt knw..there are reasons for all(including da name)..annee i like to chat with u...r u ok to gv ur gtalk id???(just asked, if u hv any problem ..... no problem)
TC
//
ப்ளாக் பெரியில் பில்ட் இன் செய்யப்பட்டிருக்கும ஜிபிஎஸ் மொடியூல்கள் சாதாரண ஜிபிஎஸ் போன்று இயங்கக்கூடியவை.. அதை தடுக்க வேண்டுமாயின் ஜாமிங் எனும் செயற்பாடு மூலம் முடியும்.. ஆனால் அது அரச இராணுவ செயஙபாடுகளுக்கும் தடையாக அடைந்துவிடும்.. ஆகவே அதை தவிர்க்க தொழிநுடபங்கள் இலங்கையில் இருக்கா தெரியாது..
மொபைல் நெட்வேக் ஊடாக பெறவேண்டுமாயின் அதற்குதொடர்பாடல் சேவையை வழங்குபவரின் வாஸ் டிவிசனில் ஜிபிஎஸ் தொடர்பான சேர்வர் இருக்கவேண்டும். டயலொக்கில் அது இல்லை.. ஏனென்று தெரியாது.. ஆனால் ஜிபிஎஸ் இல்லாமல் மொபைல் சேவிஸ் புரொவைடர்கள் சீவிக்க முடியாது.. நீங்கள் யாரும் கோல் தெளிவாயில்லை எண்டு கஸடமர் கெயாரை கோல் பண்ணி திட்டினால் அந்த மனேச்சர் நெட்வேக் ப்ளானிங்காரனை எடுத்து திட்டுவான்.. அவன் உந்த ஜிபிஎஸ், ஒரு லப்டொப் , ஒரு பழைய எரிக்சன் பொனை துர்க்கிக்கொண்டு தெ ருத்தெருவாச்சுத்தி அங்கத்தைய சிக்னலையும் ஆள்கூற்றையும் லப்டொப்பிலுள்ள சொப்ட்வெயரில் பதந்து கொண்டு வந்து நெட்வேக் ஆபரேசன் காரனைத்திட்டுவான்.. இது அப்பிடியே போய கடைசில ஒரு மாதிரிநெட்வக் சரிப்படுத்தப்படும்.. ஆருக்கும் விருப்பமிருந்தால் டயலொக்கினுள் நடப்பதென்ன எண்டுஒரு பதிவேபோட ரெடி நான்.. :)
விரைவில ஸ்கைப் ஐடியே தர நான் ரெடி.. :)
புல்லட் ஒரு சின்ன வேண்டுகோள்! தாங்கள் என்னுடன் சாட் பண்ண வர முடியுமா???? இது எனது மெயில் ஐடி: melbkamal@gmail.com
//உங்கட சீனியர்கள் 2007 இல் படித்தாரகளா? அப்படியானால் எந்த நம்பிக்கையில் என்னை தம்பி எண்டு அழைத்தீங்கள்? பாத்தா நீங்கள் எனக்கு தங்கச்சி போல கிடக்கு.. :) படிப்பு முடிங்சுதா? என்னைத்தெரியுமா? :)//
தம்பி என்று சொல்லும் போது சண்டை போடுவதற்கு ஒருவித உரிமை வந்து விடுகிறது.. ;;) ஒரு வித மரியாதையும் சில இடங்களில் கிடைக்கும்.. :) அதோட எனக்கு யாரையும் அண்ணா என்று அழைப்பது பிடிக்கவே பிடிக்காது.. மாறாக தம்பி என அழைக்க பிடிக்கும் வயதில் மூத்தவராயினும்..
இல்லை.. இது இறுதியாண்டு.. எனக்கு உங்களை தெரியாது.. தெரிஞ்சால் கூட, சில பல காரணங்களால் இந்த விஸ்ணு அவதாரம் என்னைத் தவிர எவருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கிறதால வெளியில சொல்ல முடியாது.. :(
புல்லட் பாண்டி said...
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தார் சங்கடத்தார்... கிக்கி...
நானும் ஏதோ பெரிய மனுசன் ஒராள்தான் எழுதுதெண்டு பாத்தால் இது மறுபடியும் ஏதோ கமல் மற்றும் கவின் கூட்டணி விளையாட்டு எண்டு விளங்குது...
ஏனப்பு ஏன்?
பரவாயில்லை நல்லாத்தான் கிடக்குது...
தொடருங்கோ...
சின்னப்பு... ( பேசாம பிஞ்சில பழுத்தது எண்டு பேரை வச்சிருக்கலாம் நல்லாருக்கும்... :) )//
புல்லட் இது அப்பட்டமான பொய்...எங்களுக்கு எங்கள் வலைப்பதிவில் ஒரு பதிவு போடவே நேரம் இல்லாமல் இருக்கிறோம்..அதற்குள் இது வேறையா?? புல்லட் நானே இந்தச் சக்கடத்தார் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறன்?? அதுக்கை நீங்கள் வேறையா?
உங்கள் றக்கரில் பார்த்தால் கமல் எங்கு இருந்து வருகிறார்? சக்கடத்தார் எங்கை இருந்து வருகிறார் என்பது புரியும்??
நான் சொன்ன குரல் அப்புக்குட்டியுன் குரல்? நான் அந்தப் பின்னூட்டத்தில் கவினைப் பற்றிக் கூறவேயில்லை?? அப்புக் குட்டி தான் சக்கடத்தாருடன் சேர்ந்து என்னைக் கவிழ்க்கப் பிளான் என்று சொன்னேன்??? அடுத்த விடயம்?? அப்புக்குட்டி என்னோடு வானொலி நிகழ்ச்சி செய்கிறவர்??
நல்ல கண்டு பிடிப்பு?? ஆனால் சரியான ஆளைக் கண்டு பிடிக்கவேயில்லை? இதுக்குச் சக்கடத்தார் தான் விளக்கம் சொல்ல வேண்டும்?
:) Ok OK cool kamal Cool!
Great informative post and you gotta nice humor sense..
I have a clear guess about your true identity, but not supposed to reveal anyone :)
Keep posting good articles anna..!
//Ramanan Satha சொன்னது…
Great informative post and you gotta nice humor sense..
I have a clear guess about your true identity, but not supposed to reveal anyone :)
Keep posting good articles anna..!//
Thank you brother!
I'll write something from my field...
//Triumph சொன்னது…
pls anna,,,,,, write something really funny... i know its hard on every one but you can do it..you are doing amazing job: making us laugh...we are proud of you
- Pasamalar
//
நன்றி ட்ரையாமபு....
நானென்ன நாகே ஷா? ஏதோ என்னால முடிஞ்சத எழுதறன்... சுப்பர் ஹிட் ஆவதெல்லாம் சந்தர்ப்பங்களை பொறுத்தது...
ஆடத்த போஸ்ட் கொஞ்சம் சீரியஸ் அடுத்ததுபம்பல... என்ன சரிதானே?
அண்ணன் the கோவில்
Post a Comment