பொச்சுமட்டை

    இடம் : பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம்…..

    பார்வையாளர்களின் ஆச்சரியக் கூச்சல்களுக்கும்
    விளக்கம் அளிப்பவர்களின் விசித்திர ஒலிகளுக்கும
    தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சி திணறிக்கொண்டிருந்தது…


    ------ பல்கலைக்கழகத்துக்குத்துக்கு பொறுப்பாக வந்திருந்த டொக்டர் பிஸ்தாவின் கண்களில் ஓர் வெற்றிக்களிப்பு…
    அவரது மாணவர்கள் வைத்திருந்த நான்கு கண்டுபிடிப்புகள்
    பார்வையாளர்களின்; பாராட்டை அள்ளிச்சென்றதோடு மட்டுமல்லாது
    அன்றைய தினத்தில் வழங்கப்படவிருந்த உதவி நிதி அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என்று
    கற்றோர் பலராலும் மொழியப்பெற்றன…

    சோமசேகரவும் டிலானும் வைத்திருந்த மூளையின் சிந்தனை அலைவுகளை கைப்பற்றும் பொறி பல
    மனநோயியல் வைத்தியர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது…
    அமெரிக்காவின் தொழிநுட்பத்தை குறைந்தசெலவில் செய்தமையை பலரும் வியந்து மெச்சினர்…

    அடுத்ததாக இலத்திரனியல் வாக்கிடும் அமைப்பு…
    இரண்டு தமிழர்கள் வைத்திருந்த அந்த பொறி நிச்சயம் அமுல்பத்தப்படுமெனவும்…
    நாலுமணிக்கு வாக்கு பதிவு முடிந்தால் நாலு பத்திற்கு முடிவு தெரிந்து கொள்ளமுடியுமெனவும்
    கூற மக்களால் வியந்து பாரக்கப்பட்டது…

    அடுத்ததாக தானாக யோசித்து , நிலைமையை அவதானித்து , தன்னுடையபாட்டிற்கு பொருட்களை நகரத்தக்கூடிய போக் லிப்டுகள்…
    மேலிருந்து எடுக்கப்படும் பல படங்களை ஒருங்கணைத்து … அவற்றிலிருந்து போக்குவரத்தை உணர்ந்து…
    மாதிரி லிப்ட்டுகள் இயங்கியது…
    அவை துறைமுகங்களில் பெரிதும் உதவும் என மாணவர்கள் கூறியதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது…

    கடைசியாக இலத்திரனியல் சக்கர நாற்காலி;….
    வெறும் கார் பட்டரிகளில் இயங்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த இலகு விலை நாற்காலி ஊனமுற்றோருக்கு ஒரு விடிவென அனைவரும் வியந்தனர்…

    அப்படியே அங்கால் பல கிராமத்தார்களும் பள்ளி மாணவர்களும் சிறுசிறு படைப்புகளை வைத்திருந்தனர்…

    எல்லாரும் புகழந்து தள்ளினாலும் பிஸ்தாவின் கண்களின் ஓரமாய் ஒரு பதட்டம்…
    காரணம்….

    ஆ..அதோ வந்து விட்டார்…
    வாசலில் பறையும் சங்கும் முழங்கியது…
    ------ அமைச்சர் வந்துவிட்டார்…
    அவர் ரெக்கமண்டேசனில்தான் உதவிநிதி தங்கியுள்ளது…
    எப்படியாவது நன்கு விளங்கப்படுத்தி ஆளை கன்வின்ஸ் பண்ணிவிட வேண்டும்…


    அப்போது….
    விடுவிடு மற்றவர்களை தள்ளிக்கொண்டு வந்த டிப்டொப்பான சிலர் மாணவர்களை அணுகி…
    யாரும் அமைச்சருடன் ஆங்கிலத்தில் கதைக்கக்கூடாதெனவும்
    அவர் ஏதாவது கேட்டால் மட்டும் சிங்களத்தில் பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்….
    திருவாருர்த்தேர் போல் வெள்ளை ஜிப்பா துள்ளித்துடிக்க
    விழுந்தாலும் பிடிக்கவென புடைசூழ்ந்த பரிவாரங்களுடன் வந்தார்
    அமைச்சர் குண்டுலதுங்கா…
    பத்து பூசணிக்காய்களை முழுங்கிய நீர்யானையொன்று
    “சிங்கமொன்று புறப்பட்டதே” பாட்டுக்கு ஸ்லோ மோசனில
    கட் வாக் செய்வது போலிருந்தது அவர் நடை.

    முதலாவதாக அந்த மூளைப்பொறி….

    சடீரெண்று ப்ரேக்கடித்து பலன்ஸ் பண்ணி
    வாயெல்லாம் பல்லாக போட்டோக்கு போஸ் குடுத்தபடி எட்டிப்பாரத்தவர்
    சட்டென்று ஒரு ஜர்க் அடித்தார்…

    நிறைய வயர்களையும் ஏதோ ஒரு பெட்டியையும் பார்த்தவர்
    ஏது ஏது இது ஏதோ கிளைமோர்; மர்ட்டர் போலும் என்று நினைத்தாராக்கும்
    ஒரு பயத்துடன்
    பக்கத்தில் நின்றவனிடம் குசுகுசுத்தபடி
    தந்திரோபாயமாக பக்கத்து பந்தலுக்கு தாவினார்…

    அடுத்தது தானியங்கும் லிப்டுகள்…
    சிறிது நேரம் அந்த பொறிகளைப்பார்த்து அலுப்புடன் கொட்டாவிவிட்டவர்…
    பிறகு அந்த கமராவால் தானும் படம்பிக்கப்படுவதை கண்டு
    அதில்
    தன் பிதுங்கிய வயிற்;றைப் பிரிந்து வெளிப்படுத்திய பட்டன்களை கண்டு
    திருத்தியவாறு மற்ற பந்தலுக்கு நகர்ந்தார்

    அடுத்தது சக்கர நாற்றாலி….
    ஒரு மாணவன் அதில் ஏறி இருந்து ஓடிக்காட்டியதைக்கண்ட
    குண்டலதுங்காவின் கண்களில் ஓர் குதூகலம்…
    நன்றாக இருப்பதாயும்
    அதில் தானும் ஏறி இருக்கப்போவதாயும் அடம்பிடித்தார்…
    பயந்து போன மாணவர்கள் அது 75 கிலோவுக்குட்பட்வர்களை தாங்குமாறு மட்டுமே தயாரக்கப்பட்டுள்ளதாக உதவியாளரின் காதில் கிசுகிசுத்தனர்…
    ஆனால்
    உதவியாளர் கையை விரித்துவிட…
    கண்டம் ஆரம்பமானது…
    சின்ன வாய்ப்பானைக்குள் ஒரு பெரிய துணியை அடைவது போல்
    அந்த கதிரையுள் முக்கிமுனகி ஒருவாறு புகுந்துவிட்டார்…
    மாணவர்கள் பயத்துடன் பார்த்துக்கொண்டிலுக்க
    வெற்றிக்களிப்புடன் பட்டனைத்தட்டினார் அமைச்சர்…

    படீர்…
    பல்லுகள் எல்லாம் சில்லாகித்தெறிக்க
    உருகிப்போன பாட்டரி வயர்களின் நாற்றத்தோடு
    கடைசி மூச்சை விட்டது இயந்திரம்.

    கத்திக்குழறிய அமைச்சரிலிருந்து படாதபாடு பட்டு
    நாற்காலியைக்கழற்றிய மாணவர்கள்
    எஞ்சிய பீசுகளுடன்
    துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று ஓடி விட்டார்கள்…

    அடுத்ததாக இலத்திரனியல் சந்தப்பெட்டி….
    அதாவது தமிழில் ஓட்டுப்பெட்டி…
    நடந்த கூத்துகளைக்கண்டு கலங்கிப்போயிருந்த
    அந்த தமிழ் மாணவர்கள் வருவது வரட்டும் என்று முன்னரங்குகளைப் பலப்டுத்தினார்கள்..
    ஒருவித பயத்துடனே அணுகிய குண்டலதுங்கா.. மே… மொகத மே? (என்ன இழவு இது?) என்றார்..
    மாணவர்கள் விளக்கினார்கள்…
    இம்முறை ஒரு விஞ்ஞானப்பார்வையுடன் ஓட்டுப்பெட்டியை அணுகிய எங்கட துங்கா
    அங்கிருந்த ஒரு பட்டனை அழுத்தினார்…
    கீக் என்ற ஒலியுடன் ஒரு பச்சை பல்பு பெட்டியின் ஒரு மூலையில் எரிந்தது…
    வாயில் ஒரு புன்னiயுடன் மறுபடிம் ஒரு பட்டனை அழுத்தினார்..
    பீக் என்ற ஒலியுடன் இன்னொரு சிவப்பு பல்பு எரிந்தது…
    “அய்”; என்று குதூகலித்த குண்டலதுங்கா
    பெரிய சந்தோசத்துடன் எல்லாரையும் தள்ளிவிட்டு
    ஏதோ பியானோ வாசிப்பது கணக்கில் கிடந்த பட்டன் எல்லாத்தையும் கிடுகிடு எண்டு கிண்டித்தள்ளினார்….

    சிஸ்டம் கிர்புர் என்று ஏதோ பிள்ளைப் பெறுபவள் போல் பீரிட்டது
    சற்றுத்தள்ளியிருறந்த கட்டுப்பாட்டுக் கம்ப்யுட்டர் சுற்றியிருந்த எல்லாரையும் கெட்டவாரத்தையில் வைதது
    இவர் இதையெல்லாம் சற்றும் கவனிக்காது ஆசைதீர விளையாடிவிட்டு களைத்துப்போய் நிமிர்ந்து
    ஒரு விஞ்ஞானவியல் சீர்திருத்தத்தை முன்வைத்தார்…

    அதாவது அந்த பல்புகளை தனியே சிவப்பு பச்சையில் வைக்காமல்
    பல வண்ணங்களில் வைக்குமாறும்
    மூலையில் மட்டும் வைக்காது அப்படியே சுற்றிவரவும் வேண்டுமானால் நடுவிலும் வைக்குமாறும்
    வேண்டிக் கொண்டார்….
    இந்த சிஸ்டத்தில் கள்ள ஓட்டுப்போட முடியாதாம் என்று யாரோ அதற்குள் தெரிவித்தவுடன் அதிர்ச்pயடைந்த அவர்..
    கடுமையாக திட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தார்…


    அடுத்த பந்தல் ஒரு கிராமத்தானுடையது..
    அவன் ஏதொ ஒரு வகைக்கத்தி செய்து வைத்திருந்தான்…
    அதன் மூலம் விரைவாகத்தேங்காயுரிக்கலாமாம்….
    அவன் செய்து காட்டியதும் சந்தோசமடைறந்த அவர் மேலும் பல தேங்காய்களை தானே ஓடிச்சென்று
    எடுத்து வந்து உரித்துக்காட்டுமாறு வேண்டிக்கொண்டார்…
    அவனைப்பலவாறு மெச்சி கண்ணீர்விட்வாறு கட்டிப்பிடித்த அவர்
    கடைசியாக அவனுடைய நினைவாக ஒரு பொச்சுமட்டையில் ஓட்டோ கிராபும் வாங்கி மடியில் பத்திரமாக கட்டி வைத்துக்கொண்டார்…

    அழுவதற்கு தயாராக இருந்த மாணவர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிஸ்தா…
    “பொச்சுமட்டை உரிப்பதன் மூலம் ஒரு பொன்னான எதிர்காலத்தை அமைப்போம்” என்று அங்கே மேடையில் குண்டலதுங்கா முழங்கிய போது
    குழறி அழுததை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை…


    பிகு: உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது…

    32 Responses

    1. //அமைச்சர் குண்டுலதுங்கா…
      பத்து பூசணிக்காய்களை முழுங்கிய நீர்யானையொன்று
      “சிங்கமொன்று புறப்பட்டதே” பாட்டுக்கு ஸ்லோ மோசனில
      கட் வாக் செய்வது போலிருந்தது அவர் நடை.
      //

      யாரப்பு உந்த ஆளு...?

    2. //இந்த சிஸ்டத்தில் கள்ள ஓட்டுப்போட முடியாதாம் என்று யாரோ அதற்குள் தெரிவித்தவுடன் அதிர்ச்pயடைந்த அவர்..
      கடுமையாக திட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தார்…//

      ஹஹாஹாஅ

    3. புல்லட்.........கலக்கல்? என்ன கள்ள மெயில் ஐடியைத் தந்திட்டு ஆள் எஸ்கேப் ஆகிட்டீங்கள்?? என்ன நியாயம் இது?? மிகுதிப் பின்னூட்டங்கள் பிறகு?

    4. அப்ப எப்ப தேங்காய், தென்னந் தும்பு, பாளையள், பன்னாடை எல்லாம் வருவீனம்?

    5. அட...இதென்ன ஆச்சரியமா கிடக்கு.. உண்மையிலேயே இலங்கைல தான் இருக்குறீங்களா? இலங்கைல தான் பிறந்தீங்களா பாஸ்? சொன்ன நாள்ல சொன்ன நேரத்துக்கு நச்சென்டு பதிவு வந்துட்டு?.

      அதில்ல பாஸ், நீங்களும் உங்கட குசும்பு மூளைக்கு ஏதாவது கண்டு பிடிச்சு stall வச்சிருக்கலாமே? குண்டலதுங்க 'ஜனரன்ஜன' பட்டமே குடுத்திருப்பார்.

    6. அடுத்ததாக இலத்திரனியல் வாக்கிடும் அமைப்பு…
      இரண்டு தமிழர்கள் வைத்திருந்த அந்த பொறி நிச்சயம் அமுல்பத்தப்படுமெனவும்…
      நாலுமணிக்கு வாக்கு பதிவு முடிந்தால் நாலு பத்திற்கு முடிவு தெரிந்து கொள்ளமுடியுமெனவும்
      கூற மக்களால் வி??யந்து பாரக்கப்பட்டது…//

      என்ன மனுசன் ஐயா நீர்

    7. பத்து பூசணிக்காய்களை முழுங்கிய நீர்யானையொன்று
      “சிங்கமொன்று புறப்பட்டதே” பாட்டுக்கு ஸ்லோ மோசனில
      கட் வாக் செய்வது போலிருந்தது அவர் நடை.//

      கவனம் வெள்ளை வான் பின்னாலை நிற்கும்???

    8. திருவாருர்த்தேர் போல் வெள்ளை ஜிப்பா துள்ளித்துடிக்க
      விழுந்தாலும் பிடிக்கவென புடைசூழ்ந்த //

      ஏன் மேலை சால்வை இல்லையோ???

    9. கலக்கல் சகலை
      ஹாஹாஹா

    10. நிறைய வயர்களையும் ஏதோ ஒரு பெட்டியையும் பார்த்தவர்
      ஏது ஏது இது ஏதோ கிளைமோர்; மர்ட்டர் போலும் என்று நினைத்தாராக்கும்
      ஒரு பயத்துடன்
      பக்கத்தில் நின்றவனிடம் குசுகுசுத்தபடி
      தந்திரோபாயமாக பக்கத்து பந்தலுக்கு தாவினார்
      *************8
      ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

    11. “பொச்சுமட்டை உரிப்பதன் மூலம் ஒரு பொன்னான எதிர்காலத்தை அமைப்போம்”
      சூப்பரு...

    12. ஒயாட்ட பல பதிவுகள் மம படிச்சு இருக்கிறது தானே ஆனால் மே பதிவு சொல்லி வெடக் நா....

    13. //’டொன்’ லீ சொன்னது…

      யாரப்பு உந்த ஆளு...?//

      யாரோ குண்டாக நிமல் பாலடி சைசில் ஒவர் வந்திருந்தார்...யாரன்று சரியாகத் தெரியவில்லை்...
      தெரிந்தலும் சொல்வதாயில்லை் ஹிஹி

      // ஹஹாஹாஅ //

      வந்தமைக்கும் சிரித்தமைக்கும் பின்னூட்டியமைக்கும்
      ”டக்குின்னு கமண்ட் போடும்” டான்லீக்கு நன்றிகள்...

      பேசாம உங்கட பெயரை டக்குவார் டான்லீன்னு வச்சுக்குங்களேன் நல்லாருககும் :)

    14. //கமல் சொன்னது…

      அப்ப எப்ப தேங்காய், தென்னந் தும்பு, பாளையள், பன்னாடை எல்லாம் வருவீனம்? //

      கமல் உண்மையச் சொல்லங்கோ...
      விஜய் படங்களுக்கு பெயர் எடுத்துக் குடுக்கிற படுபாவி நீங்கதானே? :)

      //என்ன மனுசன் ஐயா நீர்?//

      நான் ஹோமோசேப்பியன்...
      நீங்கள் என்ன மாதிரி?..... நியண்டதாலோ?

      //கவனம் வெள்ளை வான் பின்னாலை நிற்கும்???//

      எதையும் கலர் கொம்பினேசனாத்தான் செய்வாங்க எங்கட ஆக்கள் ...
      பாருங்க...எல்லாம் வெள்ளை...

      //ஏன் மேலை சால்வை இல்லையோ???//

      அது இப்ப ஒரு ஆள் மாத்திரம் தான் போடலாம்...
      பேட்டன்ட் எடுத்தாச்சு..
      கொப்பிரைட் குடுத்தாச்சு

    15. //கவின் சொன்னது…

      கலக்கல் சகலை
      ஹாஹாஹா

      ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
      சூப்பரு...

      //

      ரொம்ப தாங்க்ஜஜூபா!
      ஆமா... உங்கள நான் எப்டி கூப்டுறது? )

    16. //சாத்திரி சொன்னது…

      ஒயாட்ட பல பதிவுகள் மம படிச்சு இருக்கிறது தானே ஆனால் மே பதிவு சொல்லி வெடக் நா....//

      ஏமத? போம ஸ்துதி மாத்தயோ! ஒயா எனகொட அ நிவாரேம கமண்ட் எக்கக் தான்டகோ... மட போம சந்தோசவெனவா... ஹமதாம எண்டகோ! பை :)

    17. //தியாகி சொன்னது…

      அட...இதென்ன ஆச்சரியமா கிடக்கு.. உண்மையிலேயே இலங்கைல தான் இருக்குறீங்களா? இலங்கைல தான் பிறந்தீங்களா பாஸ்? சொன்ன நாள்ல சொன்ன நேரத்துக்கு நச்சென்டு பதிவு வந்துட்டு?.//

      ஏதோ ஜீன் இல பிழை எனக்கு... கெரியில சரி பண்ணிடலாமாம்... பாப்பம்...

      // அதில்ல பாஸ், நீங்களும் உங்கட குசும்பு மூளைக்கு ஏதாவது கண்டு பிடிச்சு stall வச்சிருக்கலாமே? குண்டலதுங்க 'ஜனரன்ஜன' பட்டமே குடுத்திருப்பார்.//
      சத்தமா சொல்லாதீங்கோ...
      எண்ட மூளை கேள்விப்பட்டா கவலைப்படும்... அதுக்கு தான் ஏதோ ஜன்ஸ்டீனெண்ட ப்ரெய்ன் எண்ட நினைப்பு... நீஙகள் ஏதோகுசும்பு கிசும்பு எண்டு பகிடி விட அது கோவப் பட்டு ஸ்ட்ரைக் கிரைக் பண்ணிடப்போகுது.... ;)

    18. //இவர் இதையெல்லாம் சற்றும் கவனிக்காது ஆசைதீர விளையாடிவிட்டு களைத்துப்போய் நிமிர்ந்து
      ஒரு விஞ்ஞானவியல் சீர்திருத்தத்தை முன்வைத்தார்…

      அதாவது அந்த பல்புகளை தனியே சிவப்பு பச்சையில் வைக்காமல்
      பல வண்ணங்களில் வைக்குமாறும்
      மூலையில் மட்டும் வைக்காது அப்படியே சுற்றிவரவும் வேண்டுமானால் நடுவிலும் வைக்குமாறும்
      வேண்டிக் கொண்டார்….//

      //“பொச்சுமட்டை உரிப்பதன் மூலம் ஒரு பொன்னான எதிர்காலத்தை அமைப்போம்” என்று அங்கே மேடையில் குண்டலதுங்கா முழங்கிய போது
      குழறி அழுததை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை…//

      பாத்து "கருத்து கந்தசாமி" விவேக் தன்ட நகைச்சுவைக்காட்சிகளுக்கு கதை எழுத ஆள் இல்லாம உங்கள கூப்பிட்றபோறார்.

      விய‌ந்து போனேன் எங்களது அரசியல் த‌லைவ‌ர்க‌ளின் அறிவைப்பார்த்து. சிரிக்க‌ ம‌ட்டும‌ல்ல‌ சிந்திக்க‌வும் வைக்கிறீர்கள் புல்லட்! வாழ்த்துக்கள்.

    19. Konjam funnya irunthichchu.

    20. பொச்சு மட்டையை இவ்வளவுக்கு கேவலப் படுத்தி இருக்கக் கூடாது.

    21. Another nice article
      Keep rocking
      TC

    22. This comment has been removed by a blog administrator.
    23. நாங்களும் June term க்காக campusல செய்த ஒரு அயிட்டத்த கொண்டு போனவங்கள் ( எங்கள விட்டுட்டு ) அப்புறம் என்ன ஆச்சு எண்டே தெரியல.

    24. பொச்சு மட்டைல எரிச்ச சாராயம் கெடக்குமா ஊருல

    25. //Mathu சொன்னது…

      Konjam funnya irunthichchu.
      //

      நன்றி மது... பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிட தாமதமாகியமைக்கு மன்னிக்கவும்...

    26. //pukalini சொன்னது…

      பொச்சு மட்டையை இவ்வளவுக்கு கேவலப் படுத்தி இருக்கக் கூடாது.
      //
      இதென்ன கொடுமை... இவளவு நாளும் பொம்பளய பற்றிக்குறைவாக்கதச்சுதுக்குதான் பூசை புனஸ்காரம் எல்லாம் நடந்தது...
      இப்ப பொச்சுமட்டைக்காக வாதாடவும் ஒருத்தர் வந்துட்டரு... சுத்தம்..

      சும்மாச் சொன்னேன்.. :)

      அடிக்கடி வாங்க் புகழ்... :)

    27. //Saraketha சொன்னது…

      Another nice article
      Keep rocking
      TC//]
      தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி சாரகீதா! விரைவில் அடுத்த பதிவு இடுவேன்...

    28. //Subankan சொன்னது…

      நாங்களும் June term க்காக campusல செய்த ஒரு அயிட்டத்த கொண்டு போனவங்கள் ( எங்கள விட்டுட்டு ) அப்புறம் என்ன ஆச்சு எண்டே தெரியல.//

      என்ன ஏதாவது பனங்காப்பணியாரம் செய்தீங்களா? அப்பிடியெ ண்டால் கட்டாயம் பரிசு கிடைச்சிருக்கும்...

      அயிட்டம் எண்டு சொல்லுறீங்கள்? கம்பஸ் வட்டாரத்தில அந்த வழக்கு பேமஸதான்... கவனம் ... ;)

    29. //குடுகுடுப்பை சொன்னது…

      பொச்சு மட்டைல எரிச்ச சாராயம் கெடக்குமா ஊருல//

      இல்லை ஆனா...
      பொச்சு மட்டையில பொரிச்ச வாத்து, முயல் எல்லாம் இருக்கு..
      ;)

      என்ன கடைசில கோழி வாங்கிட்டீங்களா குடுகுடுகுடுப்பை சார்?

    30. //யாழினி சொன்னது…

      அடடே யாழினியை மறந்து போனன்.. பாத்தீங்களோ? :)

      // பாத்து "கருத்து கந்தசாமி" விவேக் தன்ட நகைச்சுவைக்காட்சிகளுக்கு கதை எழுத ஆள் இல்லாம உங்கள கூப்பிட்றபோறார்.//

      இதுக்கு செருப்பைக்கழட்டி ரெண்டுதரம் இழுத்திருக்கலாம் :)

      // வியந்து போனேன் எங்களது அரசியல் தலைவர்களின் அறிவைப்பார்த்து. //

      மேர்வின் சில்வா எண்டு ஒருத்தரைத் தெரியுமோ?இலங்கையண்ட ஒரு ஒப்பற்ற அரசியல்வாதி.மூதறிஞர். ஒபாமா பிச்சையெடுக்கோணும் அந்தாளட்ட... அவர் அந்த பங்சனுக்கு வரேல்ல எண்டு கல்விமான்களுக்கு சரியான கவலை... :(


      //சிரிக்க ம‌ட்டும‌ல்ல‌ சிந்திக்க‌வும் வைக்கிறீர்கள் புல்லட்! வாழ்த்துக்கள்.//

      நன்றி யாழினி!

    31. நண்பர்களே....! சில தனிப்பட்ட காரணங்களால் பதிவிட தாமதமாகிறது... தயவுசெய்து பொறுத்தருளுவீர்...

      நாளை சமகால யாழ் நிலையை (வன்னியில்லை) வைத்து சற்று சீரியசான பதிவொன்று வரைவாதாக உள்ளேன்... வருகை தரவும் வந்து பின்னூட்டிப்பிரித்து மெயவும்... ஓட்டுகளை குத்திக்குதறவும்...
      நன்றி வணக்கம்...

    32. அது தானே பாத்தன்!