எல்லாரும் என்னை நகைச்சுவையாக எழுதுமாறு கோருகிறார்கள்… எனக்கும் ஆசைதான்…. ஆனால் ஏனோ அந்த மூட் வருகுதில்லை… ஏதோ ஒரு வருத்தம் மனதின் ஓரமாய் சப்பாத்தில் ஒட்டிய சுவிங்கமாய் அகல மறுக்கிறது…. காரணத்தை ஆராய வெளிக்கிட்டால் அநாவசியமாய் மூட் மேலும் பாதிப்படைய வாய்ப்புண்டு என்று நினைத்திருந்தாலும் ஏதோ எழுதி என் கவலையை வெளியிடுவதும் ஒரு றிலாக்ஸ் ஆக அமையும் என எதிர்பார்க்கிறேன்….
மார்ச் மாத முடிவில் ஏ-9 திறக்கப்படப் போகிறதாம்… திறந்து விடுவார்கள்… எத்தனையோ பேரின் குருதி சிந்திய அந்தப்பாதையில் நாமும் , அசோக் லேலாண்ட் பஸ்களின் டப்பா ஸ்பீக்கர்களில் “ காதல் காயங்களே ” பாட்டைக் கேட்டவாறு , ஆயிரத்தெட்டு பாஸ் நடைமுறைகளுக்கிடையில் பயணிக்கத்தான் போகிறோம்… எத்தனையோ ஆயிரம் மக்கள் எவ்வளவோ சொத்துக்கள் அரிய கலாச்சாரம் எல்லாம் அழிந்த பின்னர் எமக்கு இப்போது எஞ்சப்போவது என்ன? :(
விடை மெதுமெதுவாக கிளம்புகிறது…
புலத்தில் “பாக்கி” என்ற பெயரால் அவமானப்படுத்தப்படும் இலங்கைத்தமிழர்கள் சொந்த நாட்டிலும் அதே நிலைக்குத் தள்ளப்படும்; காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டின. வேலை இடங்களில் தமிழர்களின் திறமைகளைக்கண்டு பொறாமைப்படும் பேரினத்தார்க்கு இந்த யுத்தத்தில் இறந்த பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரும் சிங்களப் பொதுமக்களும் ஒரு சிறந்த மூலதனமாகத்தான் அமையப்போகிறனர்… இப்போதே சில “வெற்றிச்”; செய்திகளை வாசித்து விட்டு சும்மா இருக்கும் எங்களை என்ன முகம் வாடுது என்று நக்கலாக கேட்கும் சிங்களர்கக்கு என்ன பதில் சொல்வது? அவர்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எப்படி ஊகிப்பது… ஆனால் அவர்களையும் பிழை கூற முடியாது ஏனெனில் அவர்களிடத்தில் நாமிருந்தால் நம்மவர்கள் இதை விட மோசமாகச் செய்திருப்பார்கள்… ஆகவே இதயிட்டு கவலைப்படுவதை தவிர வேறு வழியில்லை…
அடுத்தது… எமது கலாச்சாரம்…
இந்தியத்தமிழர்கள் எம்மை புகழ்கிறார்கள்… சிறந்த விரந்தோம்பலாம் .. நல்ல தமிழாம்… சீரிய ஆடை வழக்குகளாம்… ஆனால் இந்த புகழுக்கு உரியவர்களா நாம்? அல்லாமல் அய்யோ மற்றவர்கள் புகழ்கிறார்களே என்பதற்காக அதைப்பாதுகாப்பதற்காக நாம் முக்கி முனகுகிறோமோ? இங்கு பதிவிட்டதில் பெண்களின் எண்ணப்போக்கு தொடர்பாக எனக்கு கிடைத்த அனுபவம் கசப்பானதுதான்… கலாச்சார சின்னமாக பெண்களையே ஒரு சமூகம் பார்க்கும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்….அப்படியெனில் ஆண்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்….சிதைந்து சின்னா பின்னமாகிகொண்டிருக்கிறார்கள்…
95ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த சுத்தமான தமிழ் இப்போது யாழில் இல்லை… காரணம் தென்னிந்திய சினிமாக்கள்…. ஸ்டைல் என்ற பெயரில் மோட்டுத்தனமாக சினிமா ஹீரோக்களை கொப்பியடித்து குழுமோதல்களில் ஈடுபட்டதும் ஊர்வழிய ரவுடித்தனத்திலும் ஈடுபட்டதும் 95களின் பின்னர் உருவானதொன்று… தீனா குறூப் என்ற ஒன்று நல்லூரில் செய்து கொண்டு திரிந்த அட்டகாசம் எல்லாருக்கும் தெரிந்ததே… சமாதான காலத்தில் அப்படியானவர்கள் எல்லாருக்கும் சிறப்பான மரியாதை செய்யப்ட்டதும் எல்லாம் அடங்கியிருந்தாலும் மீள அவை கிளம்புவதை தடுக்க முடியாது… காரணம் ஒரு சிறப்பான போலிஸ் செவை யாழில் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு அறவேயில்லை…
மேலும் கல்வித்தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது….. கோட்டா முறையை எதிர்த்து மோதிய நாங்கள் இப்போது கோட்டாவைக்கூட்டு கூட்டு என்று சூடுசுரணையில்லாமல் கத்துகிறோம்… இந்த நிலை வரக்காரணம் என்ன? லாம்பு விளக்கில் படித்து சாதனை படைத்த எம் அண்ணாக்களுக்கு கவனக்கலைப்பான்களாக சந்திரன் பலான சினிமாவும் வெளிநாட்டு இலகு பணமும் அதில் வாங்கப்படும் பல்சார்களும் இருந்திருக்கவில்லை. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதையும் வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்வதையும் கல்வி கற்பதையும் இனிமையான பொழுது போக்குகளாய் கருதியிருந்தவர்களுக்கு பதிலாக பலான படம் பார்ப்பவர்களும் நண்பர்களுடன் போய் காதலிக்க மறுத்த பெண்ணின் தகப்பனின் மண்டையை உடைப்பவர்களும் பிரதியீடு செயயப்டும் போது பெறப்படும் விடை மனதுக்கினியதாகவா இருக்கும்? பாதை திறப்புடன் பல வியாபாரிகளும் பல்சார்களும் பலான அய்ட்டங்களும் பத்தாததுக்கு கஞ்சா அபின்களும் வரும்போது எப்படிக் காப்பாற்றப்போகிறோம் வரும் சமுதாயத்தை?
சரி சட்டம் ஒழுங்கு வரும் என்று எதிர் பார்த்தாலும் அடுத்த தேர்தலில் யாழில் வெல்லப்போவபர்கள் மீது எனக்கு துளியேனும் நம்பிக்கையில்லை… அவர்களின் வெப்சைட்டுகளும் அவர்களும் பயப்படுவது போலவே காட்டுகிறன…
மேலும் திருட்டுகளும் கற்பழிப்புகளும் மீண்டும் தலைதூக்கும்…. உண்மையாக நேசிப்பவனை நாகரிகமான நல்ல தொழில் செய்யும் பையனை கண்டுகொள்ள மறுத்து பிகு பண்ணும் பெண்கள்; இரவில் வரும் ஒரு ஆயுததாரிக் களவாணி கையில் அசிங்கப்பட்டுப் போனால் அவள் என்னவாகிறாளோ தெரியாது… ஆனால் அவள் பெற்றோரினதும் அந்தப் பையனினதும் நிலை எப்படியிருக்கும் என்பது நான் கண்கூடாகக்கண்ட கொடுமை ஒன்று…
ஆனால் எல்லாவற்றையும் மாற்ற ஒரு சமுதாயத்தால் முடியும்… இப்போதைய பெற்றோர்கள் உரிய கண்டிப்புடன் இல்லை… என்னுடைய அப்பப்பா தும்மினால் அப்பா நடுக்கத்தில் கையிலிருந்ததை போட்டுவிடுவார்… சின்ன வயதிலிருந்த பயபக்தி அவர் சாகும் வரை தொடர்ந்தது.. அது அந்தக்காலம்…. அதனால்தான் பல்கலைகளில் 90-95 வீதம் தமிழ்கள் படித்தார்கள்… ஆனால் இப்போது அப்படியில்லை… கொஞ்சம்தான் பயம்… ஆகவேதான் இந்த தெருப்பொறுக்கித்தனம் காவாலித்தனம் எல்லாம்… இதை மாற்றவேண்டும்….
குப்பைகளையும் நல்லவற்றையும் பிரித்து வாழச்செய்வதன் மூலமும்; இதை மாற்றலாம்… யுத்தம் காரணமாக பல பிரதேச மக்கள் மாறிமாறி குடியிருக்கிறார்கள்… அதனால் குப்பையும் குண்டுமணியும் கலந்து சீரழிகிறன… தட்டிக்கெட்கவும் வழியில்லை… கேட்டால் மோதல்கள் வந்து விடும்… ஆனால் புலங்களுக்கு சென்ற மக்கள் தம் சொத்துகளை மீள உரிமை கோரும்போது அல்லது மீள குடியேறும் போது நிலைமை பழைமைக்கு மீளும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது… பழைய சுற்றங்கள் ஒன்றாகும் போது குடும்ப முன்னேற்ற அடிப்படையில் பொறாமை தலைதூக்க , போட்டி கிளம்ப மறுபடியும் தமிழினத்தின் கல்வி சூடுபிடித்துவிடும்…போட்டியும் பொறாமையும் தானே தமிழனின் இயக்கு விசைகள் .. என்ன உண்மைதானே நான் சொல்வது? ;)
ஆனால் புலம் பெயர்ந்தோர் இவ்வளவு காலமுமாக செய்த ஆர்ப்பாட்டங்கள் எத்தனை பேரின் கடுப்புகளை கிளப்பியிருக்கும் என்று நான் சொல்லத்தேவையில்லை… இப்பவே நல்லா குளிரில் நின்று வேலை செய்து நிறையச் சேமியுங்கள்… கன இடங்களில் கொடுக்க வேண்டியிருக்கும்…. :D
அவ்வாறே ஏதாவது ஒரு அரசியற்கட்சி பொதுமக்களை திருட்டு கற்பழிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாப்போம் என்று உறுதியளித்தால் பழதை போட்டு குழப்பாமல் அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அளித்து பாக்கவேண்டும்…. வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடுவபர்கள் இனியும் வேண்டாம் என்பது என் கருத்து… 30 வருடமாக சீரழிந்த சமூகத்தை கட்டியெழுப்ப பாத்தியதை உடைய கட்சியை கண்டுபிடிக்க வேண்டியது எம் பொறுப்பு…
ஆகவே...
சிந்திப்போம் .... செயற்படுவோம்.........
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
62 Responses
கண்டிப்பாக என்னால் இன்னும் முழுவதுமாக ஈழத்தமிழினம் பற்றி புரிந்து கொள்ளமுடியவில்லை. எப்படியோ சண்டையில்லாமல் நல்ல படியாக ஈழத்தமிழினம் வாழ வாழ்த்துகிறேன். எனது தாய் வழி உறவினர்கள் பதுலையில் இன்னும் உள்ளனர் ஆனால் அவர்கள் மலையகத்தமிழர்கள்.
ஆக எங்களுக்கு தருவதாக சொன்ன நாளைக்கான உங்களின் சிந்தனைகள் இவை.
ஆனால், என் சிந்தனையில் எழுகின்ற நாளைகளும் பல அவலம் சுமந்த கேள்விகளையே விட்டுச் செல்லப் போகின்றது. அந்த நாளை எப்படி இருப்பினும் சில காட்சிகள் தவிர்க்க முடியாதவையாகின்றன.
இரு காலுமின்றி ஒரு சிறுவன் வீதியில் தவழப் போகின்றான். கையிழந்த தங்கை தோளில் உடன் பிறப்பை சுமந்தவாறு ஏக்கத்துடன் இருப்பாள். தலைவனின்றி குடும்பங்கள். தாயின்றி பிஞ்சுகள்....
இவர்கள் யாருமல்ல. எங்கள் பட்டு வேட்டிக் கனவுகளுக்காக வேள்வி நடத்தியவர்கள்.
தயவு செய்து அநாதைகளாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் இணையங்களில் தேடும் சிலவற்றுக்காகத்தான் அவர்கள் வெந்து கொண்டிருக்கின்றார்கள். உயிரைக் கொடுத்தேனும் அந்த உறவுகளின் வாழ்வுக்கும் வழி சமையுங்கள்.
//குடுகுடுப்பை சொன்னது…
கண்டிப்பாக என்னால் இன்னும் முழுவதுமாக ஈழத்தமிழினம் பற்றி புரிந்து கொள்ளமுடியவில்லை. எப்படியோ சண்டையில்லாமல் நல்ல படியாக ஈழத்தமிழினம் வாழ வாழ்த்துகிறேன். எனது தாய் வழி உறவினர்கள் பதுலையில் இன்னும் உள்ளனர் ஆனால் அவர்கள் மலையகத்தமிழர்கள்.//
உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கத்தான் எல்லாரும் பிாரார்த்திக்கிறார்ள்...
நன்றி...
பல சிக்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளான ஒரு இனம் ஒரு விளங்கமுடியாப்புதிராக உருவாகுவது அதிசயமில்லை குடுகுடுப்பை...
பல சிக்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளான ஒரு இனம் ஒரு விளங்கமுடியாப்புதிராக உருவாகுவது அதிசயமில்லை குடுகுடுப்பை...//
அதன் வலி எனக்கு புரிகிறது, நான் பல நாட்களாக தூக்கங்கள் இழந்துள்ளேன்.ஏன் இவ்வளவு ஒற்றுமையின்மை?ஆனால் தீர்வு எப்படி,யார் கையில் இவ்வளவு உயிர்ப்பலியை கொடுத்த இனம் சீறி எழும்போது உதவுவது யார்?பரமசிவன் கழுத்து பாம்பு போல ஈழத்தமிழர்களுக்கு ஒரு பரமசிவன் தேவை யார் அந்த பரமசிவம்?
உங்கள் நம்பிக்கை வீண் போகாது நண்பரே.மதியால் உலகை வெல்லுங்கள்
கண்டிப்பாக ஒருநாள் தமிழினம்
தலை நிமிர்ந்து ஈழத்தில் வாழும்
ஆதிரை சொன்னது…
ஆக எங்களுக்கு தருவதாக சொன்ன நாளைக்கான உங்களின் சிந்தனைகள் இவை. //
இன்னுமொருதடவை எமக்கான நாளையை அமைப்பதற்கான சிந்தனைகள் உங்களிடமிருந்தால் இப்பொழுதே அவற்றை குழிதோண்டிப்புதைத்துவிடுங்கள்... மனிதாபிமானம் பொங்கி வழியும் வல்லரசுகள் தமக்குள் அடிபட்டுச்செத்தலொழிய மற்றும் படி எமக்கான நாளையை நசுக்குவதில் அவை ஏதொ இன்பம் காணபதால் ... சாத்தியமற்றவற்றை விட்டுவிடுவோம்...
// ஆனால், என் சிந்தனையில் எழுகின்ற நாளைகளும் பல அவலம் சுமந்த கேள்விகளையே விட்டுச் செல்லப் போகின்றது. அந்த நாளை எப்படி இருப்பினும் சில காட்சிகள் தவிர்க்க முடியாதவையாகின்றன.//
உண்மைதான்...
// இரு காலுமின்றி ஒரு சிறுவன் வீதியில் தவழப் போகின்றான். கையிழந்த தங்கை தோளில் உடன் பிறப்பை சுமந்தவாறு ஏக்கத்துடன் இருப்பாள். தலைவனின்றி குடும்பங்கள். தாயின்றி பிஞ்சுகள்....
இவர்கள் யாருமல்ல. எங்கள் பட்டு வேட்டிக் கனவுகளுக்காக வேள்வி நடத்தியவர்கள்.//
ஓடுகிற ரயிலில் பாய்ந்தேறும் பொது ரிஸ்க்தான்... பல வேளைகளில் இடம் கிடைத்துவிடுவதுண்டு....ஆனால் வீழுந்துசக்கரங்களுக்குிடையில் மாட்டிவிட்டா ல்?
துரதிஸடமாக மாட்டிவிட்டோம்... என்ன செய்வது? விதி!
// தயவு செய்து அநாதைகளாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் இணையங்களில் தேடும் சிலவற்றுக்காகத்தான் அவர்கள் வெந்து கொண்டிருக்கின்றார்கள். உயிரைக் கொடுத்தேனும் அந்த உறவுகளின் வாழ்வுக்கும் வழி சமையுங்கள்.//
இதை நானும் யோசித்தேன்... ஆனால் இதை ஒழுங்கமைக்க யாரும் முன் வரும் போது அவர்களுக்கு சில கழகங்களுக்கு குத்தப்பட்ட முத்திரை குத்தப்படுமாயின் அதைவிட வேறு விபரீதம் இல்லை... எல்லாம் இறைவன் கையில்...
//இன்னுமொருதடவை எமக்கான நாளையை அமைப்பதற்கான சிந்தனைகள் உங்களிடமிருந்தால் இப்பொழுதே அவற்றை குழிதோண்டிப்புதைத்துவிடுங்கள். மனிதாபிமானம் பொங்கி வழியும் வல்லரசுகள் தமக்குள் அடிபட்டுச்செத்தலொழிய மற்றும் படி எமக்கான நாளையை நசுக்குவதில் அவை ஏதொ இன்பம் காணபதால் ... சாத்தியமற்றவற்றை விட்டுவிடுவோம்//
இந்த இடத்தில் நான் 'பஞ்ச்' வசனம் பேசுவது உடல் ஆரோக்கியத்திற்கு அழகன்று. ஆனாலும், எமக்கான நாட்கள் எங்களுக்குரியன. வல்லரசுகள் தங்கள் பிராந்திய நலனுக்காக என்னத்தையும் செய்யலாம். அவர்கள் தங்கத் தட்டில் எதையோ தருவார்கள் என்று காத்திருப்பது மடமைத்தனம். ஆனாலும், உலக ஒழுங்கை புறந்தள்ளி விட்டு ஓடவும் முடியாத நிலை.
கிலாரியும், ஒபாமாவும் அமெரிக்கர்கள் தான். கருணாநிதி இந்தியர்தான். தமிழக மக்கள் தமிழர்கள் தான். இவைகள் தான் இன்றுள்ள யதார்த்தம்.
//காரணம் தென்னிந்திய சினிமாக்கள்…. ஸ்டைல் என்ற பெயரில் மோட்டுத்தனமாக சினிமா ஹீரோக்களை கொப்பியடித்து குழுமோதல்களில் ஈடுபட்டதும் ஊர்வழிய ரவுடித்தனத்திலும் ஈடுபட்டதும் 95களின் பின்னர் உருவானதொன்று… தீனா குறூப் என்ற ஒன்று நல்லூரில் செய்து கொண்டு திரிந்த அட்டகாசம் எல்லாருக்கும் தெரிந்ததே… சமாதான காலத்தில் அப்படியானவர்கள் எல்லாருக்கும் சிறப்பான மரியாதை செய்யப்ட்டதும் எல்லாம் அடங்கியிருந்தாலும் மீள அவை கிளம்புவதை தடுக்க முடியாது… காரணம் ஒரு சிறப்பான போலிஸ் செவை யாழில் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு அறவேயில்லை…//
உது பற்றி நானும் கேள்விப்பட்டனான்..ஆனால் சமாதான காலத்தில் அவையளுக்கு சரியான பூசை கொடுக்கப்படவில்லை என்றே அறிந்தேன்
நியாயமான ஆதங்கங்கள் தான் புல்லட்...என்ன செய்வது இது கூட ஒருவகையான ஆக்கிரமிப்பு...
அழித்தல் பலவகை..எல்லாவகையும் நமக்கெதிராத் தான் நிக்குது :-(
//ஏதோ ஒரு வருத்தம் மனதின் ஓரமாய் சப்பாத்தில் ஒட்டிய சுவிங்கமாய் அகல மறுக்கிறது…. //
ஹ்ம்ம்...உண்மை தான்..ஒரு சில மாதங்களாகவே மனத்தில சஞ்சலம், ஒரு restlessness, தலயில இடி விழுந்த மாரி..போன வருஷம், அதுக்கு முதல் வருஷம் இருந்த அந்த confidence, அந்த ஆணவம், அந்த enthusiasm, ஆர்வம் இப்ப துளியளவும் இல்ல..எல்லாத்துக்கும் ஒரே காரணம் தான்... :(
//புலத்தில் “பாக்கி” என்ற பெயரால் அவமானப்படுத்தப்படும் இலங்கைத்தமிழர்கள்//
இந்த விஷயம் இன்டேக்கு தான் கேள்வி பட்டனான்..என்னத்த சொல்ல..ச்சீ..கவலையா இருக்கு..
எல்லாத்தையும் யோசிச்சு பாக்கேக்க, ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.. :(
மார்ச் மாத முடிவில் ஏ-9 திறக்கப்படப் போகிறதாம்… திறந்து விடுவார்கள்… எத்தனையோ பேரின் குருதி சிந்திய அந்தப்பாதையில் நாமும் , அசோக் லேலாண்ட் பஸ்களின் டப்பா ஸ்பீக்கர்களில் “ காதல் காயங்களே ” பாட்டைக் கேட்டவாறு , ஆயிரத்தெட்டு பாஸ் நடைமுறைகளுக்கிடையில் பயணிக்கத்தான் போகிறோம்… எத்தனையோ ஆயிரம் மக்கள் எவ்வளவோ சொத்துக்கள் அரிய கலாச்சாரம் எல்லாம் அழிந்த பின்னர் எமக்கு இப்போது எஞ்சப்போவது என்ன? :(//
யதார்த்தம்............
மேலும் திருட்டுகளும் கற்பழிப்புகளும் மீண்டும் தலைதூக்கும்…. உண்மையாக நேசிப்பவனை நாகரிகமான நல்ல தொழில் செய்யும் பையனை கண்டுகொள்ள மறுத்து பிகு பண்ணும் பெண்கள்; இரவில் வரும் ஒரு ஆயுததாரிக் களவாணி கையில் அசிங்கப்பட்டுப் போனால் அவள் என்னவாகிறாளோ தெரியாது… ஆனால் அவள் பெற்றோரினதும் அந்தப் பையனினதும் நிலை எப்படியிருக்கும் என்பது நான் கண்கூடாகக்கண்ட கொடுமை ஒன்று//
புல்லட் என்ன தான் இருந்தாலும் எங்கோ ஓர் மூலையில் இருந்து மீண்டும் சங்கிலியனும், எல்லாளனும், குளக்கோட்டனும் இவற்றுக்கெதிராக மானமுள்ள உள்ள தமிழனின் மூச்சுக் காற்றிலிருந்து பிறப்பார்கள் என்பது யதார்த்தம்...
இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.
//குடுகுடுப்பை சொன்னது…
உங்கள் நம்பிக்கை வீண் போகாது நண்பரே.மதியால் உலகை வெல்லுங்கள்
கண்டிப்பாக ஒருநாள் தமிழினம்
தலை நிமிர்ந்து ஈழத்தில் வாழும்//
நன்றி தமிழரே...
உங்கள் உண ர்வைப்பாராட்டகிறேன்...
// ஆதிரை சொன்னது…
இந்த இடத்தில் நான் 'பஞ்ச்' வசனம் பேசுவது உடல் ஆரோக்கியத்திற்கு அழகன்று. ஆனாலும், எமக்கான நாட்கள் எங்களுக்குரியன. வல்லரசுகள் தங்கள் பிராந்திய நலனுக்காக என்னத்தையும் செய்யலாம். அவர்கள் தங்கத் தட்டில் எதையோ தருவார்கள் என்று காத்திருப்பது மடமைத்தனம். ஆனாலும், உலக ஒழுங்கை புறந்தள்ளி விட்டு ஓடவும் முடியாத நிலை.
கிலாரியும், ஒபாமாவும் அமெரிக்கர்கள் தான். கருணாநிதி இந்தியர்தான். தமிழக மக்கள் தமிழர்கள் தான். இவைகள் தான் இன்றுள்ள யதார்த்தம் //
சத்தியமான வார்த்தைகள்... :(
//Triumph சொன்னது…
தங்கையார் கோபமாக நிறைய முழங்கியிருக்கறார்...
//
தங்கை உங்கள் கோபம் தெரிகிறது... நான் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை...
பலமாதங்களுக்கு முன்கொஞ்சம் சீரியசான பதிவொன்று வைத்திருந்து நண்பர்களின்வேண்டுகோளுக்குிணங்க அழித்துவிட்டேன்...
அதில் ஒரு பதிவில் இனி என்ன என்ற தலைப்பில் நடக்கப்போவபற்றை ஆரூடமாக கூறியிருந்தேன்... அதில் கூறியவை சற்றேனும் பிசகாமல் நடந்துவருவது எனக்கே ஆச்சரியத்தை வரவழைக்கிறது.. அதை ஆதிரை வாசித்து கமண்டும் இட்டிருந்தார்...அந்த அடிப்படையில் தான் நான் இந்த பதிவை வரைந்தேன்...
இனியும் வெறுமேன முழங்கிக்கொண்டிருந்து பிரயோசனமில்லை.. லண்டனிலிருந்து இதயச்சந்திரனும் வேல்சிலிருந்து அரூசும் எங்கேயோ ஒரு பத்தையிலிருந்து சுபத்திராவும்என்று பலர் அளவுக்கு மீறி புளுகி வந்ததால்தான் இவ்வளவு ஏமாற்றம் இவ்வளவு விரக்தி.. அது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்னமும் அவர்களுக்கு விளங்கியதோ தெரியாது..
சமயோசிதமாக சிந்திப்போமானால்
எஞ்சியவற்றை நாய்களிடமி ருந்தும் நரிகளிடமிருந்தும் பாதுகாக்க செய்யவேண்டியவந்நைத்தான் நான் வரைந்துள்ளேன்...
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்...
//’டொன்’ லீ சொன்னது…
நியாயமான ஆதங்கங்கள் தான் புல்லட்...என்ன செய்வது இது கூட ஒருவகையான ஆக்கிரமிப்பு...
அழித்தல் பலவகை..எல்லாவகையும் நமக்கெதிராத் தான் நிக்குது :-(
//
வருகை தந்தமைக்கும் கருத்து வெளியிட்டமைக்கும் நன்றிகள் டான்லீ..
நீங்கள் சிட்டிசன் சிப் எடுத்திட்டீங்கதான? இல்லாட்டா கெதியன எடுத்துபோடுங்கோ..இல்லாட்டால் இங்க வந்தா திரும்பி போகலாமோ தெரியாது.. :)
// தியாகி சொன்னது…
எல்லாத்தையும் யோசிச்சு பாக்கேக்க, ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.. :( //
அது சரிதான்... :)
// கமல் சொன்னது…
புல்லட் என்ன தான் இருந்தாலும் எங்கோ ஓர் மூலையில் இருந்து மீண்டும் சங்கிலியனும், எல்லாளனும், குளக்கோட்டனும் இவற்றுக்கெதிராக மானமுள்ள உள்ள தமிழனின் மூச்சுக் காற்றிலிருந்து பிறப்பார்கள் என்பது யதார்த்தம்...
இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.//
விளங்காமலில்லை... ஆனால் மீண்டும் தோறறுவிப்பதற்கு யாரிடம் சக்தியுள்ளது? எல்லாரும் கிளைமாக்ஸ் படக்காட்சி முடிந்துபுறப்படுவபர்கள் போல் துண்டைத்தட்டி தோளில் பொட்டுக்கொண்டு போய்விடுவார்கள்..
அதன்பிறகு சில விமர்சனங்கள் வரும்.. சில நாட்களில் தமிழி னத்தோடு சேர்ந்து அதுவும் காணாமல் போய்விடும்...
Triumph சொன்னது…
குடுகுடுப்பை சொன்னது…
//இவ்வளவு உயிர்ப்பலியை கொடுத்த இனம் சீறி எழும்போது உதவுவது யார்?பரமசிவன் கழுத்து பாம்பு போல ஈழத்தமிழர்களுக்கு ஒரு பரமசிவன் தேவை யார் அந்த பரமசிவம்?//
We have the Paramasivan already. Everyone knows his name dude.. No offense... What on the earth you are asking who is that...
//உங்கள் நம்பிக்கை வீண் போகாது நண்பரே.மதியால் உலகை வெல்லுங்கள்//
Are you trying to say that we have wasted all these 30 years as stupids.
//கண்டிப்பாக ஒருநாள் தமிழினம்//
Who told you that தமிழினம் has died... We all alive. People dying everyday. But, there are people still alive...
I dont know what was you intention .But dont give such silly comments pls... Ventha punnil vel paichuvathu mathiri irukku...
Trust you understand
//
நான் பரமசிவன் என்று சொன்னது யூதனுக்கு எப்படி அமெரிக்காவோ, அது போல தமிழனுக்கு ஒரு வல்லரசின் துணை. இது இன்றைய உலக சூழ்நிலையை மனதில் வைத்து சொன்னது.தமிழினத்தை அழிக்க முடியாது தலைநிமிர்ந்து வாழும் என்றுதான் கூறுகிறேன் நண்பரே.
எனது கருத்தில் தவறுகள் இருக்கலாம்.அப்படி இருந்தால் மன்னிக்கவும்.
எங்களது அலுவலகத்தில் உள்ள தொலைகாட்சிப் பெட்டி ஒன்றில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் உள்ள பாடசாலையின் மீது வான் படையினர் நடத்திய தாக்குதல்களினால் அப்பாவி மாணவர்கள் பலர் உயிரிழந்த செய்தி படம் பிடித்து காடடப் பட்டுக் கொண்டிருந்தத்து, அதில் உயிரிழந்த அனைவரும் பயங்கர வாதிகள் என்று அரச ஊடகம் ஒன்று அலறி அடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் அதனை பார்த்து கொண்டிருந்த வேளை எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் சகோதர மொழி பேசும் நண்பி ஒருவர் கூறினார் "5 என்றால் என்ன 500 என்றால் என்ன சாவது எல்லாமே தமிழ் கூட்டம் தானே" என்று, அன்று அதனை கேட்ட போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்றும் கூட என்னால் அந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. யுத்தம் என்பது அரசியலாக இருந்தாலும் எங்களுடன் வேலை செய்பவர்கள் கூடி...???
ஏன் இப்படி................? பாரிய யுத்தம், வெற்றி இவற்றிற்கு முன்னாலே இவ்வாறெண்டால், இனி வரும் ஆண்டுகள்.........?
சிந்திக்க வேண்டிய பதிவு... (!)
முருகண்டிப் பிள்ளையார் கூட சிறுத்துப்போய் தெரியுறார்.. வாகனம் வளைவாய் போட்ட ரோட்டில போகுமோ.. இல்ல நேராய்ப் போகுமோ...
தீனாக் குறூப்காரர்தான் பிறகு இரு வர்ணக் கொடிகளையும் நட்டுக்கொண்டிருந்ததெண்டு ஒரு கதை உண்மையோ.. பாண்டி
//வருகை தந்தமைக்கும் கருத்து வெளியிட்டமைக்கும் நன்றிகள் டான்லீ..
நீங்கள் சிட்டிசன் சிப் எடுத்திட்டீங்கதான? இல்லாட்டா கெதியன எடுத்துபோடுங்கோ..இல்லாட்டால் இங்க வந்தா திரும்பி போகலாமோ தெரியாது.. :)
//
:-)))
//ஏன் இப்படி................? பாரிய யுத்தம், வெற்றி இவற்றிற்கு முன்னாலே இவ்வாறெண்டால், இனி வரும் ஆண்டுகள்.........?//
உங்களுக்கு இன்னும் அரசியர் தீர்வு ஒன்று வரும் என்ற நம்பிக்கை இருக்கா யாழினி?
இப்போ தமிழர்கள் பிச்சை வேணாம நாயைப்பிடி என்ற நிலைக்கு ஆளாகி விட்டார்கள்...
அரசியல் தீர்வு என்று ஒப்புக்கு பாடும் சர்வதேசத்துக்கு அளிக்கப்படப்போகும் பதில்..
ஏன் அவர்களுக்கு என்ன குறை.. நல்லாத்தானே இருக்குpறார்கள்... ஒண்டும் தேவையில்லை.. மற்றவைண்ட விசயத்துக்கு மூக்க நீட்டாம உங்கட அலுவல பாத்துக்கொண்டு போங்கோ...
பேருல மட்டுமில்லை பாண்டி.. புல்லட்பாண்டி.. எழுத்திலேயும் தான்
//கவின் சொன்னது…
சிந்திக்க வேண்டிய பதிவு... (!)//
:)
//த.அகிலன் சொன்னது…
முருகண்டிப் பிள்ளையார் கூட சிறுத்துப்போய் தெரியுறார்.. வாகனம் வளைவாய் போட்ட ரோட்டில போகுமோ.. இல்ல நேராய்ப் போகுமோ...
தீனாக் குறூப்காரர்தான் பிறகு இரு வர்ணக் கொடிகளையும் நட்டுக்கொண்டிருந்ததெண்டு ஒரு கதை உண்மையோ.. பாண்டி//
முறிகண்டிப்புத்தர் கேள்விப்பட்டனீங்களோ? அப்படி ஒண்டு பல நூற்றாண்டுகாலமா இருந்ததாம்... இப்பதான் கிண்டி எடுத்தவங்களாம்... அந்த வழியாத்தான் இனிப்போவாங்களாம்...
அது ஒரு கசப்பான உண்மைதான்... அவர்கள்தான் பின்பு தண்டனைகளிலிருந்து தப்ப கிரனேட் எறிந்து திரிந்தவர்கள்... இப்ப எல்லாரும் முடிஞ்சுது...
// ’டொன்’ லீ சொன்னது…
:-))) //
இது சிரிப்பதற்காக வில்லை... சீரியசாகத்தான் சொல்கிறேன்... அங்கத்தைய பாஸ்போட் இல்லாதாக்கள் மறந்தும் திரும்பி வந்துடாதீங்கோ
// நசரேயன் சொன்னது…
பேருல மட்டுமில்லை பாண்டி.. புல்லட்பாண்டி.. எழுத்திலேயும் தான் //
எனக்கு நல்லா அவையடங்கோணும் எண்டு விளங்குது... ஆனா எப்படின்னுதான் தெரியேல்ல... ;)
புகழ்ச்சிக்கு நன்றி நசரேயன்..
Triumph இன் பதில் வாசிக்க ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இதெல்லாம் நடந்து விடாதா என்ற ஏக்கத்தையும் கொடுக்குது.. ஆனால் யதார்த்தம் வேறே.. :(
எத்தனையோ இழப்புக்கள், வேதனைகள் வந்த பின்பும் கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு உண்மையான பக்தன் நம்புவதில்லையா? அது போல் தான் இதுவும், இத்தனை வருட போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இல்லாமல் போய் விடும் என்கிறீர்களா புல்லட்...?
அப்போ நீதி, நியாயம், சத்யம், உண்மை எல்லாம்.......?
//அரசியல் தீர்வு என்று ஒப்புக்கு பாடும் சர்வதேசத்துக்கு அளிக்கப்படப்போகும் பதில்..//
//ஏன் அவர்களுக்கு என்ன குறை.. நல்லாத்தானே இருக்குறார்கள்... ஒண்டும் தேவையில்லை.. மற்றவைண்ட விசயத்துக்கு மூக்க நீட்டாம உங்கட அலுவல பாத்துக்கொண்டு போங்கோ...//
சரியாக சொன்னீர்கள் புல்லட். ஆனால் எடுத்துக்காட்டுகள் கூட உறைக்கவில்லையா அவர்களுக்கு...?
/*பழைய சுற்றங்கள் ஒன்றாகும் போது குடும்ப முன்னேற்ற அடிப்படையில் பொறாமை தலைதூக்க , போட்டி கிளம்ப மறுபடியும் தமிழினத்தின் கல்வி சூடுபிடித்துவிடும்…போட்டியும் பொறாமையும் தானே தமிழனின் இயக்கு விசைகள் .. என்ன உண்மைதானே நான் சொல்வது? ;)*/
நல்ல கருத்து.
முகுதிக் கருத்துக்கள் ஏற்க முடியலை.
ஆனால் இது விரக்கிதியில் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை போல புதிய கட்சி தேடி சிங்களவனுக்கு கீழ ஆட்சியமைக்க யோசனை சொல்லுற புல்லட்டை ஒரு புல்லட் தாக்கியிருக்க வேணும். ... தங்கை இல்லை ஒரு பொண்ணு நல்ல சொல்லியிருக்கு. இங்க இருக்கிறவையை விட புலத்தில இருகிறவை தான் தனித்துவம , பெரு விருட்சமா,
ஈழ நாட்டை இப்பவும் இவ்வளவு காலமும் ஆண்ட எங்கள் தியாக வீரர்களின் கையப் பலப் படுத்தவேணும். அது மட்டும் செய்தால் எங்கட இந்த பாண்டிண்ட புலம்பலில் எந்த அர்த்தமும் இல்லை. அவை எல்லாத்தையும் பாப்பினம்.
தங்கை உங்கள் கோபம் தெரிகிறது... நான் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை...
பலமாதங்களுக்கு முன்கொஞ்சம் சீரியசான பதிவொன்று வைத்திருந்து நண்பர்களின்வேண்டுகோளுக்குிணங்க அழித்துவிட்டேன்...
அதில் ஒரு பதிவில் இனி என்ன என்ற தலைப்பில் நடக்கப்போவபற்றை ஆரூடமாக கூறியிருந்தேன்... அதில் கூறியவை சற்றேனும் பிசகாமல் நடந்துவருவது எனக்கே ஆச்சரியத்தை வரவழைக்கிறது.. அதை ஆதிரை வாசித்து கமண்டும் இட்டிருந்தார்...அந்த அடிப்படையில் தான் நான் இந்த பதிவை வரைந்தேன்...//
புல்லட் முடிந்தால் அதனை எனக்கு மின்னஞ்சலில் அனுப்ப முடியுமா? நானும் அதனைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்??
தங்களின் ரகசியம் பேணப்படும்??
புல்லட் பாண்டி சொன்னது…
//த.அகிலன் சொன்னது…
முருகண்டிப் பிள்ளையார் கூட சிறுத்துப்போய் தெரியுறார்.. வாகனம் வளைவாய் போட்ட ரோட்டில போகுமோ.. இல்ல நேராய்ப் போகுமோ...
தீனாக் குறூப்காரர்தான் பிறகு இரு வர்ணக் கொடிகளையும் நட்டுக்கொண்டிருந்ததெண்டு ஒரு கதை உண்மையோ.. பாண்டி//
முறிகண்டிப்புத்தர் கேள்விப்பட்டனீங்களோ? அப்படி ஒண்டு பல நூற்றாண்டுகாலமா இருந்ததாம்... இப்பதான் கிண்டி எடுத்தவங்களாம்... அந்த வழியாத்தான் இனிப்போவாங்களாம்...//
ஐயோ புல்லட் நாங்கள் இனி என்ன செய்வம்??? இனி எல்லா வெள்ளரசுக்குக் கீழை இருந்தும் வெடுக்கெண்டு சிலை தான் முளைக்கும்??
அப்பு ராசா உது நடக்கிற காரியமோ????
சும்மா இருமன் அப்பு...உப்பிடி ஏதும் நடந்தால் நீர் பேரையும் மாத்தி, உம்மடை தோற்றத்தையும் மாத்திப் பிறகு பிந்தனைக் காட்டுக்கை தான் போய் இருக்கோனும்?
வெள்ளவத்தை எல்லாம் இருக்கிற சொத்துகள் பூராவும் பிறகு எங்கடை நல்ல மாத்தே ஆக்களுக்குப் போயிடும்??>
/*தீனாக் குறூப்காரர்தான் பிறகு இரு வர்ணக் கொடிகளையும் நட்டுக்கொண்டிருந்ததெண்டு ஒரு கதை உண்மையோ.. */
/*அது ஒரு கசப்பான உண்மைதான்... அவர்கள்தான் பின்பு தண்டனைகளிலிருந்து தப்ப கிரனேட் எறிந்து திரிந்தவர்கள்... இப்ப எல்லாரும் முடிஞ்சுது..*/
முதல்லேயே தீர்கதரிசனமா சில வேலைகளுக்கு என்று சில ஒதுக்கீடுகள் இருக்கலாம். அதை எப்படி நடை முறை படுத்துவது என்று உங்களை மாதிரி சின்ன புத்தி கொண்டவைக்கு தெரியாது. முழுசா எல்லாத்துக்கு விளக்கமும் வெளிப்படையா சொல்ல முடியாது. முடிஞ்சா பின்வரும் வரிகளில் இருந்து புரிஞ்சு கொள்ளுங்கோ.
அரசு என்பது சும்மா புரசல் கதைகளை கேட்டு நடத்திற ஒன்றல்ல.
தங்கள் உயிரை கூட - மண்ணுக்காக கொடுக்கவென்று புறப்பட்ட புனிதர்கள் சில சந்தோசங்களை அனுபவித்ததில் தப்பு இல்லை. நான் சொல்லுறது புனிதர் பற்றி, தீனர் பற்றி அல்ல.
உங்கள் தங்கையில் கை வைக்கவில்லை தன் வாயில் தான் நெருப்பு வைத்திருந்திச்சினம். காரணம் தன்னை வருத்தியாவது எதிரியிடம் நல்ல பேர் (எங்கள் எதிரி யாழில நாங்கள் புகைத்தா சந்தோசப் பட்டு முதுகில தட்டி தருவான் - அந்த நேரம் பாத்து அவனின் கலை வாரி விட்டா வேற ஒருத்தனையும் எதிரி கெடுக்க மாட்டான் ) வாங்கி அவனையே உளவு பார்த்து அவனை அழித்து தன்னுயிரையும் கொடுத்து தன் மக்களை நல்லா வாழவைக்கொனும் என்று நடக்கிற சில நிகழ்ச்சியும் இருக்கு.
சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பழி மட்டும் சொல்லுங்கோ... ஒன்றும் செய்து போடதீங்கோ....
/* ஹ்ம்ம்...உண்மை தான்..ஒரு சில மாதங்களாகவே மனத்தில சஞ்சலம், ஒரு restlessness, தலயில இடி விழுந்த மாரி..போன வருஷம், அதுக்கு முதல் வருஷம் இருந்த அந்த confidence, அந்த ஆணவம், அந்த enthusiasm, ஆர்வம் இப்ப துளியளவும் இல்ல..எல்லாத்துக்கும் ஒரே காரணம் தான்... :( */
எல்லாம் யதார்த்தம் என்று ஒவ்வொருவரும் முழங்குகிறது கேக்குது....
நானும் தங்கை த்ரயும்ப் மாதிரி இனிமேல் வாசிக்க வரேல்ல.
யாதர்த்தம் உங்கள் கைகளால் படைக்கப் படுகிறது என்ற யதார்த்தத்தை மறந்திட்ட பதார்த்தங்களின் எண்ணத் தெறிப்பு எங்கள் வேள்வி தீயை அணைத்து விடாது.
எல்லாம் காதுக்கு நல்ல செய்தி வரவேணும் என்றால், முதலில் அதற்க்கு நீங்க என்ன பண்ணினீங்க என்று யோசியுங்கோ. இல்லைடி சும்மா நான் தீர்கதரிசி என்று கொக்கரிக்காமல் அடங்குங்க, மற்றவை பாத்து கொள்ளுவினம்.
// கமல் சொன்னது…
புல்லட் என்ன தான் இருந்தாலும் எங்கோ ஓர் மூலையில் இருந்து மீண்டும் சங்கிலியனும், எல்லாளனும், குளக்கோட்டனும் இவற்றுக்கெதிராக மானமுள்ள உள்ள தமிழனின் மூச்சுக் காற்றிலிருந்து பிறப்பார்கள் என்பது யதார்த்தம்...
இதன் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.//
விளங்காமலில்லை... ஆனால் மீண்டும் தோறறுவிப்பதற்கு யாரிடம் சக்தியுள்ளது? எல்லாரும் கிளைமாக்ஸ் படக்காட்சி முடிந்துபுறப்படுவபர்கள் போல் துண்டைத்தட்டி தோளில் பொட்டுக்கொண்டு போய்விடுவார்கள்..
அதன்பிறகு சில விமர்சனங்கள் வரும்.. சில நாட்களில் தமிழி னத்தோடு சேர்ந்து அதுவும் காணாமல் போய்விடும்...//
??????????
சங்கிலியன் இல்லை, கடாரம் வென்ற சோழனுக்கே நிகரான தலைவன் எங்கள் முன்னே இருக்கார். உங்கள் இருப்புக்கு உத்தரவாதம் கிடைச்சு கொண்ண்டு இருக்கிறதே தலைவனால் தான். அதே சம காலத்தில் வாழும் போது உங்களுக்கு ஏற்க்க முடியவில்லை, நீங்கள் தான் எதோ மூளை உள்ளவை மாதிரி பழைய வரலாறு கதைகிறீங்கள். இப்ப நடக்கிற வரலாறு அதை விட எத்தனையோ மடங்கு வலிமை உடையது...
அல்லது விளங்கியும் ஏதும் செய்ய விருப்பமில்லாமல் சும்மா புலம்புரீன்களோ...
@யாழினி..
நீங்கள் தான் பிறந்ததிலிருந்து ஒரே கேள்வியோடு திரிகிறீர்கள்? நீங்கள்தான் சொல்லவேண்டும் ..என்னவாகும் யாழினி (யாழ் + இனி)?
@கமல்….
அதில் விசேடமாக எதுவுமில்லை… இதுவரை நடந்ததை சிறுபிசகில்லாமல் எதிர்வு கூறியிருந்தேன்…
2009 ஓகஸ்ட் மாதம் வரை என்ன நடக்குமென்பதும் அதில் இருந்தது
டைனோசர் போல தமிழினத்தையும் எவனாவது அகழ்வாராச்சியில் கண்டு பிடிப்பான்… அதுவரையும் பொறுப்பம்..
@ட்ரையம்பு , சக்கடத்தார், மற்றும் தங்கம்….
நீங்கள் பன்னாடை பரதேசி எனறு எப்படித்தான் என்னைத்திட்டினாலும் பேசினாலும் ஒரு புன்சிரிப்புதான் என் பதில்….காரணம் உங்கள் வாதங்களும் கேள்விகளும் நியாயமானவை… அதற்காக எல்லோரும் இப்பவும் சில வருடங்களுக்கு முன்பிருந்த உற்சாகத்தோடுதான் இருக்கிறார்கள் என்று , மனதை தொட்டுச்சொல்லுங்கள் பார்ப்போம்? நீங்கள் என்னத்தை புடுங்கினீர்கள் என்று கேட்டால் அது மடத்தனம்… சும்மா கதைக்கவேண்டுமென்பதற்காக கதைப்பது… நிலமையை ஒரு உதாரணமாக சொல்லப்போனால் தங்கம் என்பது யார் என்று தேட இப்போதே சிலர் ஆரம்பித்திருப்பார்கள்…
ஆனாலும் என்னைத்துரோகி என்றழைப்பது கடுமையாக காயப்படுத்துகிறது.
எரிகிற தன் வீட்டிலேயே பிடுங்குபவனையும் ,
நம்பி வந்தவளை களங்கப்படுத்துவபனையும் ,
கூட இருந்து குழிபறித்தவனையும் ,
கூடத்திரிந்தவனை கண்டம் துண்டமாக வெட்டி காட்சிப்படுத்துவபனையும்,
கருணையைப் பெயரில் வைத்துக்கொண்டு பிச்சை போட்டவனின் கச்சையை மணந்துவிட்டு ஆகா சுகந்தமென்று கமண்ட் அடிப்பவனையும்
அழைக்கப்பயன்படுத்தும் வாக்கியம் அது…
ஆனால் ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் நிம்மதியாக வாழவேண்டுமென்று சிந்திக்கும் என்னையும் துரோகி என்றா கூறுகிறீர்கள்?
என்னுடைய நிலையை நான் தெளிவாக விளக்கிவிடுகிறேன்…
சில ஒப்பற்ற தலைமைகளின் நடவடிக்கைகள் எம் சிந்தனை வரம்பிற்கு அப்பாற்பட்டவை… அவர்களை பற்றி கதைக்க கடுகேனும் அருகதையற்றவர்களுள் நானும் ஒருவன்… என் ஆக்கத்திலும் நான் எவரையும் பற்றி கடிந்து கதைக்கவில்லை…
நீங்கள் ஒப்சன் ஏ ஐ பற்றி கதைக்கிறீர்கள்…. நான் ஒப்சன் ஏ பிழைத்தால் ஒப்சன் பி என்ன என்பது பற்றிக்கதைத்தேன்… சில கிரிக்கட் மச் எப்படி முடியும் என்று எம்மால் கடைசி பந்து வரை தீர்மானிக்கமுடிவதில்லை…. இதில் எங்ஙனம் ஒப்சன் ஏ நிச்சயமாக சாத்தியமாகும் என்று அடித்துக்கூறுவது? கடைசிப்பந்து வரை காத்திராமல் அதற்குமுன்பே ஒப்சன் பி ஐ பற்றியும் சிந்தித்து வைப்பதில் தவறேதுமில்லையே?
வடபகுதியில் இருப்பவர்களுக்கும் புலத்தில் இருப்பவர்களுக்கும் பல தெரிவுகள் உண்டு…. அவர்களின் தற்போதைய முடிவுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு சிறு பெறுமானமாவது இருக்கும்… ஆனால் இலங்கையின் தென்பகுதியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்யமுடியும்? வாயத்திறந்தால் கோவிந்தா! வெறுமனே நெட்டில் நியூசை அதையும் ஏதாவது ரகசியமான முறையில் வாசித்து புழுங்கிக்கொண்டிருக்கவேண்டியதுதான்… ஆனால் அவர்கள் ஒப்சன் பி ஐ பற்றி சிந்திக்கமுடியும்… கைகாவலாக அவசரத்துக்கு ஒரு தீர்வு வேண்டாமா? சித்திரம் வரைகிறோம் வரைகிறோம் என்று கூவிக்கொண்டிருப்பது சரிதான். ஆனால் உங்கள் கனவு பலிக்காவிடின் உடையும் சுவரை எப்படி தரையோடு மட்டமாகாமல் பாதுகாப்பது?
எம் சமகால இளைஞர் சமுதாயத்தில் எவ்வளவு வீதம் குறைந்துவிட்டது தெரியுமா? நல்லூர்திருவிழாவில் சாமிதூக்க ஆளில்லை…. வன்னியில் காயப்பட்டவனை தூக்க ஆளில்லை… இப்போது விளங்கியிருக்கும் இதுதான் கடைசிப்பந்து என்று… விக்கட்டும்; விழலாம் சிக்ஸரும் பறக்கலாம்… நீங்கள் சிக்சரைப்பற்றிக்கதைக்கிறீர்கள் பறந்தால் கரகோசம் செய்ய பலர் தயார்… ஆனால் விக்கட் விழுந்தால்? சுவரை மட்டமாக இடித்துவிட முயலும் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொளவது எப்படி? அதைப்பற்றித்தான் நான் கதைத்திருந்தேன்…
என்னால் அதை மட்டும்தான் செய்யமுடியும்….. வலிமையுள்ளவர்கள் , உயிரை துச்சமாக மதிப்பவர்கள் , உசார் உள்ளவர்கள் எதையாவது செய்யும்போது குறுக்கே வரமாட்டேன்… அதையும் என்னால் செய்யமுடியும்…
பிகு: பலகாலத்துக்கு முன் எழுதிய அந்த பதிவின் முடிவு என்னவோ தங்கம் , ட்ரையம்பு போன்றவர்கள் விரும்பியது போல அமைந்திருந்தாலும் , அதற்கான சாத்தியக்கூறுகள் சந்தோசப்படக்கூடிய அளவில் இருக்கவில்லை என்றும் விளித்திருந்தேன்… என்றாலும் இன்னும் கடைசி விக்கட் விழவில்லை என்பதையும் கடைசிப்பந்து இன்னும் வீசப்படவில்லை என்பதையும் விளக்கும் விதமாக ஒரு உண்மைச் சம்பவத்தை குறியீட்டுப் பதிவாக வரும் செவ்வாய்க்கிழமை தந்துவிட்டு அரசியல் தொடர்பான என் ஆக்கங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறேன்…
//யதார்த்தத்தை மறந்திட்ட பதார்த்தங்களின் எண்ணத் தெறிப்பு எங்கள் வேள்வி தீயை அணைத்து விடாது.
எல்லாம் காதுக்கு நல்ல செய்தி வரவேணும் என்றால், முதலில் அதற்க்கு நீங்க என்ன பண்ணினீங்க என்று யோசியுங்கோ.//
உதென்ன தங்கம் அண்ண உது...யதார்த்தத்த சோன்னா பதார்த்தம் பன்னாட என்டு கொண்டு... நாங்கள் எல்லாம் என்ன கொழுப்பு கூடியோ வேல, வெட்டி, படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு அந்த ஒரு செய்தி வராதா என்டு Internet ல குந்திக் கொண்டு இருக்குறம்? என்ன என்ன செஞ்சம் என்டு பட்டியல் போட சொல்லுவீங்க போல இருக்கே?
OK! lets stop this..... we all should take a break...
But, When people talk in a polite way , they expect the same from others... but I dont find that manner among few bloggers... It should change...
Anyways, I'll write something interesting after few days...
//நீங்கள் தான் பிறந்ததிலிருந்து ஒரே கேள்வியோடு திரிகிறீர்கள்? நீங்கள்தான் சொல்லவேண்டும் ..என்னவாகும் யாழினி (யாழ் + இனி)?//
உங்கள் கேள்வி புரிகிறது, ஆனால் பதில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிர்ச்சிகளும் நிகழலாம், சில ஆச்சரியங்களும் ஏற்படக்கூடும்...
// இப்போது விளங்கியிருக்கும் இதுதான் கடைசிப்பந்து என்று… விக்கட்டும்; விழலாம் சிக்ஸரும் பறக்கலாம்… நீங்கள் சிக்சரைப்பற்றிக்கதைக்கிறீர்கள் பறந்தால் கரகோசம் செய்ய பலர் தயார்… ஆனால் விக்கட் விழுந்தால்? சுவரை மட்டமாக இடித்துவிட முயலும் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொளவது எப்படி? அதைப்பற்றித்தான் நான் கதைத்திருந்தேன்… //
I hope that u don't know the past history(specially the last 30 years) of Tamils and their guards well. before write anything think twice^1000 time, whether do u have enough depth knowledge on it? This is not the cricket game. This is History.
"எனவே புலிகள் இயக்கம் மீண்டும் இந்திய இராணுவ நெருக்கடிகால நிலைமைக்கு ஒத்ததான ஒரு போரியல் சூழலை நோக்கி பின்நோக்கிச் சென்றிருக்கின்றது. இது மீண்டுமொருமுறை டார்வினின் பரிணாமவாத படிநிலைகளான இயற்கைத்தேர்வு, தக்கன பிழைத்தல் என்பவற்றினை சந்தித்து வளமான எச்சங்களை தோற்றுவிக்கத்தான் போகிறது."
This is the History and its prediction. Don't try to spoil others hopes by creating a image of u. If u can't do anything, 1st understand the history and find out why there was no option B until today? Why those option Bs disappeared?(Don't do silly reasoning - If its black and sad there should be a strong reason which can be understandable by a longtime predictor only - obviously u can't).
Please don't mislead others for any options like option B. I can help u to understand any point where the same mislead was done by some other Tamil brains.
to thiyaki,
internetla news paarkkiratha neenga seithathu? mattavai enna seiyinam enru kuripu edukireengala? I'm sorry if u r in SL still. but still u can participate.
//internetla news paarkkiratha neenga seithathu? mattavai enna seiyinam enru kuripu edukireengala?I'm sorry if u r in SL still.//
ஹாஹாஹா...நீங்க சொல்றது தான் சரி என்ட பிறகு நான் என்னத்த சொல்ல..??
And btw, you don't have to feel sorry for me sir.Thank you very much for the concern shown.
You apparently did not get my point, when I asked you whether we would have to list out and prove all what we've done to strengthen the cause.
//but still u can participate.//
Yes I know that I can 'participate' and that's what I've been doing for most of my short life.எல்லாரும் தங்களால முடிஞ்சளவு செய்யினம்..நானும் கூட..அப்பிடி இருக்கேக்க நான் சொன்ன கருத்த வச்சு என்ன 'பதார்த்தம்' என்டேக்க வருத்தமா இருக்கு அண்ண..இலங்கையிலோ, இப்ப இங்கயோ, சிங்கள நண்பர்களுடன் ஏச்சுப் பட்டது, அடிபிடி பட்டது, என்ட இந்த point of view இனால பிரச்சினைல மாட்டிக் கொண்டதுக்கேல்லாம் அர்த்தமில்லாமப் போன மாரி...ச்சீ..
புல்லெட் பாஸ்..
நான் இனி இந்த அரசியல் விளையாட்டுக்கு வரேல்லப்பா...ஆள விடுங்கோ..ஒத்துப்போனாலும் ஏசினம், எதிர்த்தாலும் ஏசினம்..இதுக்கு பேசாம நமீதாவின்ட 'பெருமாள்' படத்த பாத்துட்டு தூங்கியிருக்கலாம்..நல்ல கனவு வந்திருக்கும்..
பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.
http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html
wow..i like
AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,a片,AV女優,聊天室,情色,性愛
Post a Comment