யாரினி?



    இண்டைக்கு 3.8 பில்லியன் (3,800,000,000) வருடங்களுக்கு முன்னம் ஒரு பெரிய கல்லு விண்வெளில இருந்து வந்து பூமில மோதிச்சு… அந்த நேரம் இங்க ஒரு புல்லு பூண்டு கூட இல்ல… வெறும் கல்லும் மண்ணும் உப்புத்தண்ணியும்தான் பூமி முழுக்க… வந்த கல்லும் ஏண்டா சும்மா திரும்பிபோவானெண்டுட்டு ஒரு கசமுசாவை கிளப்பி விட்டுட்டுது… விளைவு அமினோஅமிலங்கள்… கடலுக்கும் அந்த கல்லுக்கும் இடையில நடந்த காதலில உருவான அமினொஅமிலங்களிலருந்து புரதம் எண்டு ஒரு சாமான் உருவாகிச்சு… பிறகு கொஞ்சக்காலத்தில நல்ல கிளைமேட் நல்ல சூழல் எல்லாத்தையும் பாத்த மின்காந்த சக்தி என்ற இன்னொருத்தருக்கு பலான மூடு வந்ததில புஸ்க் எண்டு அந்த புரதத்தை கட்டிப்பிடிக்க உலகில எங்கட முதலாவது மூதாதையர் வந்து பிறந்தார்… அவர் கடலுக்க வாழந்திட்டிருந்த ஒரு கல உயிரினம்… அவர் அப்பிடியே டெவலப்பாகி புல்லாகி பூடாகி பல்மிருகமாகி பல்லியாகி பாம்பாகி குரங்காகி கடைசியா பேயா மாறீட்டார்(மனுசனைத்தான் சொல்றன்)…




    இந்த மாற்றததினை பற்றிய படிப்பிலதான் டார்வின் எண்டவர் வாறார்…. இவரால அதிகமா அடிவாங்கினது கிறிஸ்தவ சமயம்… ஆனாலும் இங்க அது சம்பந்தப்படாததால அதைப்பற்றி வேற ஒரு பதிவில கதைப்பம்..

    எப்பிடிடா மனுசன் வந்தான்? டைனொசர் எண்டு பெரிய பல்லிகளிண்ட எலும்பெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க… அது எல்லாம் எங்க போச்சு? என் சில உயிரினம் அழிஞ்சு போச்சு? இது பல பேற்ற கேள்வியாக கனகாலமா இருந்திச்சு… வெள்ளைக்காரன் எல்லாரும் இதுகுறித்து மூளையக்குடைஞ்சிட்டிருந்தாங்க… (அந்த நேரமெல்லாம் நம்மாளுங்க பனைமரத்தக்கு கீழேருந்து காதைக்குடைஞ்சிட்டு இருந்தாங்க…) அப்பதான் டார்வின் தண்ட கொள்கையச் சொன்னார் .. தம்பி கூர்ப்புடா கூர்ப்பு…. கூர்ப்புதாண்டா கீ பரிணாமம்தான் பாத் எண்டு… அது பலபேருக்கு பல கேள்விகளுக்கு நல்ல விளக்கங்கள சொல்லிச்சு… தக்கன பிழைக்கும்… வலிமையானவை வளமான எச்சங்களை தோற்றுவிக்கும்… இப்பிடி கன பிரசங்கங்கள்….


    உண்மைதான்…. தக்கன பிழைத்தன… நலிந்தவை அழிந்தன… அழிகிறன…..


    ஒரு மிருகம் அழிகிறதுக்கு பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்… காரணங்கள் பலப்பல இருக்கும் உதாரணமா சைபர் டூத் எண்ட ஓரு வகை புலிய எடுத்தீங்கன்னா… அது மனுசன் தோன்றினாப்புறம் அழிஞ்ச இனம் ஒண்டு… சைவர் ரூத்து எண்டால் பல்லு கிடையாது போல அதான் செத்போச்சு என்னு நெச்சுராதீங்க அல்லது மனிசன் கொன்னு தின்னுட்டான் என்டு நெக்காதீங்க … காரணம் வேற…





    அது சாப்பிடுற மெயின் அய்ட்டத்தை (அதுதான் பயங்கர பெரிய சைஸ் மாடுகள்…) உலகம் தன்ட மெனுவிலருந்து தூக்கிட்டுது… கிடைச்து மான் மரை முயல் போல சின்ன சின்ன ஜட்டங்கள்… பாவம் அந்த புலிங்களால விரைவா ஓடுற மான் மரையளை தங்கட சொத்திப்பல்லையும் பீப்பா ஒடம்பையும் தூக்கிக்கிட்டு துரத்த முடியல… கொஞ்ச நாள் துரத்திப்பாத்துச்சு ஏலாது.. ஓகே கேம் ஓவர் எண்டு ஒரு அறிக்கைய விட்டுட்டு ஆட்சியை , அந்த நேரம் சின்னப்பசங்களா இருந்த, சிங்கம் சிறுத்தை கிட்டல்லாம் குடுத்திட்டு மியுசியம் வழிய போய் படுத்திட்டுது பாவப்பட்ட சைவர் ரூத்துகள்..…


    இப்பிடி கன கதையள்… எல்லாத்தையும் பொதுபடையா ஆராஞ்சா ஆட்சியில இருக்கிற ஒரு இனம் அழிய காரணம் என்ன? அடுத்ததா ஆட்சிக்கு வாறாளுக்கு என்ன தகுதி இருக்கு? எண்ட பல கேள்வியளுக்கு விடை கிடைக்கும்…பூமில தரையில முதல்ல தாவரங்கள் தான் இருந்து ஆட்சி செஞ்சுது… பிறகு 6 மீட்டர்கரப்பான் அரைக்கிலோ தும்பின்னு பூச்சிங்கல்லாம் செங்கோலாச்சிச்சுது… பிறகு ஊர்வன…. அதுல மெயினா பல்லிங்க… ஊருற பல்லி உருமுற பல்லி உருப்படியான பல்லி பறக்கிற பல்லி எண்டு பலப்பல வகையறா…. பிறகுதான் பாலூட்டிங்க வந்துச்சு… ஒவ்வொரு வகைப்பிராணிகளும் பல மில்லியன் வருடங்கள் பூமியை ஆண்டாலும் அங்கயும் பரிணாம வளர்ச்சியால சில இனங்கள் மற்ற இனங்களை விட சிறப்பா டொமினேட் பண்ணி வாழந்திச்சு…. உதாரணத்துக்கு இப்ப மனுசன் இருக்கிற மாதிரி…. ஆனா இந்த ஆட்சி மாற்றங்கள் நடைபெற காரணம் என்ன?


    டொமினேட் பண்ணி வாழுற ஒரு உயிரினம் அழிய பட்டினி தவிர பல காரணம் இருக்கு… உதாரணத்தக்கு டைனோசர் பல்லிங்க எப்பிடி அழிஞ்சுது? ஒரு பெரிய கல்லு மறுபடியும் வந்து பூமில மோத , சமநிலை குழம்ப , மோதலினால ஏற்பட்ட விளைவுகளோட எரிமலைங்களும் சேர்ந்து எல்லாப்பக்கத்தாலயும் கக்க, நிலமை தலைகீழா மாறீட்டுது… அந்த நேரம் டைனோசருகளுக்கு பயந்து பொந்துக்கயும் நிலத்தக்கு கீழேயும் இருந்த பாலூட்டியள் ஒரு மாதிரி தப்பி வெளில வந்து இப்ப உலகத்தை ஆளுது…அது பரவாயில்ல , சுருங்கிப்போய் சுவரில தொங்கிற பல்லிங்க தங்க மேல விழுந்தா அதை வச்சு சாத்திரம் பாக்குது….இதையெல்லாம் கேள்விப்பட்டா டைனோசரெல்லாம் கேவிக் கேவி அழும்….




    சரி…விசயத்துக்கு வருவம்…. ஒரு டொமினேட் பண்ணுற இனம் அழியும் போது அந்த நேரத்தில சின்னனா இருக்கிற சிந்திக்கும் ஆற்றல் கூடிய இனங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதெண்டு மேற்சொன்ன புலி,டைனோசர் உதாரணங்களிலருந்து விளங்கும்… அது ஆராய்ச்சிகளால நிருபிக்கப்பட்ட உண்மை…. அப்படீன்னா இப்ப மனுசங்க ஆடசி செய்றாங்க… அடுத்தது யாரு?


    மனுசங்க அழிய இன்னும் ஒரு மில்லியன் வருசம் ஆகலாம்…. ஏனெண்டா ஒரு விண்கல்லும் இங்காலுப்பக்கமா பெற்றோல் போட வாற ஐடியாவில இப்போதைக்கு இல்லைன்னு விஞ்ஞானிங்க சொல்லிக்கிராங்க… அத்தோட வைரசுங்களையும் கிருமிங்களையும் போட்டுத்தள்ளுறதுக்கு தினம் தினம் புதுசா ஏதாவது கண்டு பிடிக்கிறாங்க… கரப்பான் பொரியல் எலிக்குருமா எண்டு கண்டதையெல்லாம் திண்டு பழகிக்கிறாங்க… கிட்டடியில யாரோ அடம்பன் இலைகளை கூட வறுத்துண்டதாக கேள்வி…எங்கேயோ வன்னியிலயாம்…. ஆகவே உணவுப்பற்றாக்குறை இப்போதைக்கு இல்லை… ஒட்சிசன் முடிஞ்சாலும் மரங்களெல்லாம் ஓவர் டைம் பண்ணுறதால இப்பொதைக்கு ஒட்சிசன் கிறைசிஸ் வராது….. ஆனா இதெல்லாம் ஒருநாள் வரும்… மனித இனம் பூமிலருந்து அழியும் அப்ப வேறு ஒரு இனம் ஆட்சிய எடுத்துக்கொள்ளும்.. அது என்ன இனம் அது?





    ஓ… சின்ன சைசா இருக்கிறதுதான் பிழைக்கும் எண்டதால நுள்ளான்,பிள்ளையான் எண்டு எதையாவது கேனத்தனமா சொல்ல வாறானோ எண்டு நெக்காதீங்க.... நானிங்க சீரியசா கதைச்சுக் கொண்டிருக்கிறன்…



    யுத்தங்களாலயோ, எரிகல் மோதியோ ஒட்சிசன்,வெளிச்சம்,குடிநீர் எண்டு எதுவும் இல்லாமப்போய் வாழ உகந்த சூழ்நிலையில்லாத போது பூமிய ஆட்சிசெய்ய போவது யார்? வேறு யாருமில்ல…



    ரோபோக்கள்…

    விஞ்ஞான வளர்ச்சி ஒரு மில்லியன் வருடங்களில் எப்படியிருக்கும் எண்டு நான் சொல்லத்தெவையில்லை… அப்போது மனிதனை விட பலமடங்கு உடலாலும் சிந்தனையாலும் சக்திவாய்ந்த ரோபொட்கள் உருவாக்கப்பட்டிருக்கும்…




    அப்போது போர்களில் இயந்திரங்களால் விதவைகளாக்கப்படும் இளம் பெண்கள் மனித உரிமை ஆணையகத்தில் தலைமையதிகாரியாக இருக்கும் ரோபோட்டிடம் மகஜர் சமர்ப்பிப்பார்கள்… அது அதை வாசித்த விட்டு மகஜர் சமர்ப்பித்தவர்களை காணாமல் போகச்செய்யுமாறு வெள்ளை வானுக்கு உத்தரவிடும்…அந்த நேரத்தில் ஏதாவது அணுகுண்டு வெடித்து மனிதரெல்லாம் செத்துவிட்டால் “மனித இனம் அழிந்தது” என்று ஒரு தலைப்பில் ப்ளொக்கில் ஒரு பதிவை இட்டு விட்டு கீழே மற்ற ரோபோட்டுகள் அடிக்கும் கமண்டுகளை வாசித்து சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ரோபோ...


    அதில் வரக்கூடிய ஒரு கமண்ட் ...

    “தரமான ஆக்கம்…. சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ஆனால்; உதென்ன பெயர் “புல்லட் பாண்டி” “கில்லட் பாண்டி” எண்டு ஆ?“

    பிந்திக்க் கிடைக்கவுள்ள தகவல்படி ....

    ோபோட் பதிலடிக்கிறது…..

    //“தரமான ஆக்கம்…. சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ஆனால்; உதென்ன பெயர்புல்லட் பாண்டி” “கில்லட் பாண்டிஎண்டு ?“ ....//

    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி ! அது என்னை உருவாக்கியவரின் மூதாதையரின் பதிவுலகப்பெயர்…

    ( micro processing technolgy வளர்ச்சி குறித்து அதிக தகவல் தேவைப்படுபவர்கள் 32nm process technologyகுறித்து வாசித்து பார்க்கவும் )

    26 Responses

    1. அப்பு ராசா! வணக்கம் மோனை?/? எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே??

      நான் கொஞ்ச நாளா ஆசுப்பத்திரியிலை இருந்ததாலை தாமதமாகிப் போட்டுது??

      என்ன ஆய்வெல்லாம் எழுதுறீர்?? அப்ப இனி உம்மடை ஜோசியமும் பலிக்கும் போல?????

    2. அண்ணே நல்ல சுவாரஸியமான பதிவுண்ணே

    3. எப்பிடிடா மனுசன் வந்தான்? டைனொசர் எண்டு பெரிய பல்லிகளிண்ட எலும்பெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க… அது எல்லாம் எங்க போச்சு? என் சில உயிரினம் அழிஞ்சு போச்சு? இது பல பேற்ற கேள்வியாக கனகாலமா இருந்திச்சு… வெள்ளைக்காரன் எல்லாரும் இதுகுறித்து மூளையக்குடைஞ்சிட்டிருந்தாங்க… (அந்த நேரமெல்லாம் தமிழங்க பனைமரத்தக்கு கீழேருந்து காதைக்குடைஞ்சிட்டு பனங்கொட்டையை சூப்பிட்டிருந்தாங்க…)//

      அப்பு இது கொஞ்சம் ஓவர்??
      எங்களை மாதிரிப் பழசுகளுக்கு இந்த வரி பிடிக்காது மோனை???

    4. உண்மைதான்…. தக்கன பிழைத்தன… நலிந்தவை அழிந்தன… அழிகிறன…..//

      ம்.....எதை எழுதினாலும் அரசியலாவே எழுதுறீங்களே??

    5. ஒவ்வொரு வகைப்பிராணிகளும் பல மில்லியன் வருடங்கள் பூமியை ஆண்டாலும் அங்கயும் பரிணாம வளர்ச்சியால சில இனங்கள் மற்ற இனங்களை விட சிறப்பா டொமினேட் பண்ணி வாழந்திச்சு…. உதாரணத்துக்கு இப்ப மனுசன் இருக்கிற மாதிரி…. ஆனா இந்த ஆட்சி மாற்றங்கள் நடைபெற காரணம் என்ன?//

      புல்லட் நீங்கள் எதை எழுதினாலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீங்களே???

    6. ஓ… சின்ன சைசா இருக்கிறதுதான் பிழைக்கும் எண்டதால நுள்ளான்,பிள்ளையான் எண்டு எதையாவது கேனத்தனமா சொல்ல வாறானோ எண்டு நெக்காதீங்க.... நானிங்க சீரியசா கதைச்சுக் கொண்டிருக்கிறன்…//

      சிரிப்பை அடக்க முடியலை சாமியோ????

    7. விஞ்ஞான வளர்ச்சி ஒரு மில்லியன் வருடங்களில் எப்படியிருக்கும் எண்டு நான் சொல்லத்தெவையில்லை… அப்போது மனிதனை விட பலமடங்கு உடலாலும் சிந்தனையாலும் சக்திவாய்ந்த ரோபொட்கள் உருவாக்கப்பட்டிருக்கும்…//

      புல்லட் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது??
      காரணம்? உலகம் அழியும் போது ரோபோக்களை இயக்குவதற்கு ஏற்ற மூலோபாயங்கள் அனைத்தும் அழிந்து விடும்??

      அத்தோடு ரோபோக்களை இயங்க வைக்கக் கூடிய அனைத்து சக்தி வளங்களும் இல்லாது போய் விடும்??? அதன் பிறகு எப்படி இவை சாத்தியமாகும்?? முடிந்தால் மேலதி விளக்கம் தரவும்.

    8. என்ன கற்பனை கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ....

      புல்லட் எங்கே போனார்...?

    9. அருமை.. நல்லா இருக்கு

    10. // சக்(ங்)கடத்தார் சொன்னது…

      அப்பு ராசா! வணக்கம் மோனை?/? எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?? //

      எனக்கென்ன குறைச்சல் ! கையும் வாயும் அடக்கிவாசிக்கும் வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சனையும் வராது... ;)

      // நான் கொஞ்ச நாளா ஆசுப்பத்திரியிலை இருந்ததாலை தாமதமாகிப் போட்டுது?? //

      கேள்விப்பட்டனான்... நலமாக திரும்பி வந்ததுக்கு வாழ்ததுக்கள்...
      :P

      // என்ன ஆய்வெல்லாம் எழுதுறீர்?? அப்ப இனி உம்மடை ஜோசியமும் பலிக்கும் போல?????

      தாத்திகாரு! உம்மட இடுகையளுக்கு பின்னூட்டவே எனக்கு பயம்... இந்த வள்ளலில நான் எதுக்கு அரசியல் ஆய்வெல்லாம் எழுதப்போறன்? நான் வலு பயந்த கேசு... நீங்களா டபுள் மீனிங்கில எடுத்தா நானென்ன செய்றது?
      ;)

      //
      எங்களை மாதிரிப் பழசுகளுக்கு இந்த வரி பிடிக்காது மோனை???//

      அது உண்மைதான்... ஆகுவே அந்த வரிய நீக்கிட்டன் ... சரிதானே? :)

    11. // நான் ஆதவன் சொன்னது…

      அண்ணே நல்ல சுவாரஸியமான பதிவுண்ணே //

      நன்றி நீங்க ஆதவன்...

    12. // கமல் சொன்னது…

      ம்.....எதை எழுதினாலும் அரசியலாவே எழுதுறீங்களே?? //

      அரசியலா? அப்படீன்னா என்ன கமல்?

      // சிரிப்பை அடக்க முடியலை சாமியோ???? //

      சீரியசா எழுதுறேன்...அதுக்கும் சிரிச்சா எப்பிடி கமல்?

      //புல்லட் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது??
      காரணம்? உலகம் அழியும் போது ரோபோக்களை இயக்குவதற்கு ஏற்ற மூலோபாயங்கள் அனைத்தும் அழிந்து விடும்?? //

      // அத்தோடு ரோபோக்களை இயங்க வைக்கக் கூடிய அனைத்து சக்தி வளங்களும் இல்லாது போய் விடும்??? அதன் பிறகு எப்படி இவை சாத்தியமாகும்?? முடிந்தால் மேலதி விளக்கம் தரவும். //
      இப்பவே நீங்கஎப்பிடி யோசிக்கிறீங்க... 1 மில்லியன் வருடத்தக்கப்புறம் வாற மனுன் அத யோசிக்காமலா இருப்பான் ?

      பூமிக்கு சக்தி எப்பவும் கிடைச்சுக்கொண்டுதான் இருக்கும்... அதுல எந்த பிரச்சனையும் வராது... இப்ப ரோபோக்கள் புதன் செவ்வாய்கிரகங்களில சுயமா இயங்கிற மாதிரி அந்த நேரம் பூமிலயும் இயங்கக் கூடிய ரோபோக்கள் இருக்கும்..

      உதை வச்சு நிறையஇங்கிலீஸ் படங்பள் வந்திருக்கு...
      eg: A.I , Wall-E , I-Robot , Transformers etc...

    13. //’டொன்’ லீ சொன்னது…

      என்ன கற்பனை கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ....

      புல்லட் எங்கே போனார்...?//

      ஓவராப்போனான்ன ஒதுக்குப்புறமாப்போனாலென்ன? கற்பனைதானே ... அதுபாட்டுக்கு பொகட்டும் விடுங்க டான்லீ..

      புல்லட் எங்க போனாரெண்டா? இதென்ன கேள்வி இது? இப்பவே எனக்கு மேல போற ஐடியா வந்தட்டுது...ஒரு அம்பத்தஞ்சு வயசுக்குள்ள ஒரு சைலண்ட் ஹாட் அட்டாக்கில போய்ச் சேந்திட்ால் புண்ணியம்... அதுக்கு மேல கிடந்து உத்தரிக்கேலாது.. இந்த வள்ளலில 1 மில்லிய்ன வருசமா எப்பிடி இருக்கிறது?

    14. // நசரேயன் சொன்னது…

      அருமை.. நல்லா இருக்கு//

      நன்றி நசரேயன்.. உங்கட இடுகையளை தவறாம வாசிக்கிறனான்... ஆனா பின்னூட்டிறேல்ல... காரணம் உங்களுக்கு ஏற்கனவே 100அல்லது 150 கமண்ட் வந்திருக்கும்... பிறகு எதுக்கு நான் தேவையில்லாம மூக்க நீட்டுவானெண்ட ஒரு நோக்கம்தான்..உங்கட ஆக்கங்கள்எல்லாமே ரசிக்க்கூடியவை... கடசியா எழுதின பேய்க்கதை யும் தான்... ்)

    15. அதானே பாத்தேன்...இவர் என்னடா எங்கட ஏரியாவுக்க வந்து பதிவு போட்டிருக்கார் என்டு...கடைசில காட்டிட்டீங்களே திறமைய...robots, micro processing என்டு..உதெல்லாம் நாகநாதன் ஐயாவிட்ட 'உயிர்ப்பல்வகைமை' க்கு படிச்சது...கூர்ப்பு, இன அழிவு என்டெல்லாம் ஏகப்பட்டது கிடக்கு...பாரிய இன அழிவு சம்பவங்கள் 6 நடந்ததாம்..அதுல 65 மில்லியன் வருடத்துக்கு முதல்ல Cretaceous யுகத்தில நடந்த இன அழிவுல தான் (Mass extinction) dinosaurs அழிஞ்சதாம்... :)

    16. @தியாகி
      அடடே! பயோலஜில உதெல்லாம் படிப்பிப்பாங்களா? நல்லாருக்கே? நான் உது டிவி பாத்து அறிஞ்சு கொண்டேன்.. உந்த டைனோசர்கள் தொடர்பாக பிபிசி "walking with..."எண்ட டைட்டிலில நிறைய சீரீசுகள் விட்டவங்கள்... நான் எல்லா த்தையும் சேர்த்து வைச்சிருக்கன்.. ரப்பிட் செயாரில எகௌண்ட் வாங்கி இறக்கினனான்... அவளவு வெறி எனக்கு உந்த pre historic life பற்றி தெரிந்து கொள்ள...

      உங்கட தகவல்களுக்கு மிக்க நன்றி தியாகி..

      ஏனிப்ப பதிவுகள் இடுறேல்ல?

    17. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, மிகச்சுவராஸ்யமான அறிவியல்/அரசியல் பதிவு.

    18. அடப்பாவி...Template சூப்பர்..அதிரடி அண்ண...

      //பயோலஜில உதெல்லாம் படிப்பிப்பாங்களா? நல்லாருக்கே?//

      எனக்கு பிடிக்காத section என்டா அது உந்த Biodiversity தான்..ஏகப்பட்ட history கிடக்கு..

      //அவளவு வெறி எனக்கு உந்த pre historic life பற்றி தெரிந்து கொள்ள... //

      ஒஹ்ஹ்...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு preference இருக்கு என்டினமே..அது இது தானோ..??

      //ஏனிப்ப பதிவுகள் இடுறேல்ல?//

      கிகிகி...நான் எழுத நினைக்கிற நிறைய விஷயங்கள பட்டி ஏற்கனவே பலர் வாட்டி எடுத்துட்டீனம் அண்ண...இதுக்க நான் எதுக்கு?

    19. This comment has been removed by the author.
    20. //குடுகுடுப்பை சொன்னது...

      ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, மிகச்சுவராஸ்யமான அறிவியல்/அரசியல் பதிவு.//

      மிக்க நன்றி அண்ணோய்...
      ஆனா நாமெல்லாம் உங்களுக்கு கீழதான் ..

      பிகு: ஆனா அரசியல் எல்லாம் நான் எழுதுறேல்ல... ;)

    21. //@ தியாகி

      கிகிகி...நான் எழுத நினைக்கிற நிறைய விஷயங்கள பட்டி ஏற்கனவே பலர் வாட்டி எடுத்துட்டீனம் அண்ண...இதுக்க நான் எதுக்கு?//

      உப்பிடி கி்கி பிக்கி எண்டு சிரிச்சு சமாளிக்கேலாது... விளங்குதோ? மற்றவ செய்யின எண்டதுக்காண்டி நீங்க செய்யாம இருக்கிறதோ? என்ன கதை இது? ஆ? உந்த சாக்கு போக்கு களை சொல்லாம ஸ்காட்லாந்தும் ஸ்பெசாலிட்டியும் எண்ட தலைப்பில அடுத்த பதிவு விரைவில வரோணும்...

      பிச்சு புடுவேன் பிச்சு.. ஆமா!

    22. @Triumph

      என்ன கனநாளா காணேல்ல ஆளை இந்தப்பக்கம்.. பாசமலர் ப்பபா மலர் எண்டு விட்டதெல்லாம் சும்மா உடான்சோ?

      //
      Varre vaa... Awesome writing... //
      Anyways, nice to read again, especially in tamil...//

      நன்றி தங்காய் நன்றி..( அது தேங்காயில்ல தங்காய்)

      // Kan kuusuthu annai............. //
      எனக்காக சன் கிளாஸ் போட்டுக்கொண்டு படியப்பன்... அச்சாப்பிள்ளையல்லோ? என்ன?

    23. இந்த டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.. முதல் முறையா உங்ககிட்ட இருந்து ஒரு வித்தியாசமான பதிவும் கூட..கடைசியில உங்க கிண்டல் பாணி நல்லா வெளிப்பட்டிருக்கு... வாழ்த்துக்கள்..

    24. வணக்க‌ம் புல்ல‌ட்,

      தாம‌த‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும். மிக‌ அருமையாக‌ உள்ள‌து உங்க‌ள் ப‌திவு. Engineering (ல்) Degree தான் செய்துள்ளீர்க‌ள். ந‌கைச்சுவையில‌ PHD யே செய்துள்ளீர்க‌ள் போல‌. என்ன‌ தான் நீங்க‌ சீரிய‌ஸாக‌ எழுதுற‌ன் என்டு சொன்னாலும் என‌க்கு சிரிப்பு தான் வ‌ருகிற‌து. வாழ்த்துக்க‌ள்!

    25. @ கார்த்திகைப் பாண்டியன்

      // இந்த டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.. முதல் முறையா உங்ககிட்ட இருந்து ஒரு வித்தியாசமான பதிவும் கூட..கடைசியில உங்க கிண்டல் பாணி நல்லா வெளிப்பட்டிருக்கு... வாழ்த்துக்கள்..//

      டெம்ப்லேட் தொடர்பான வாழ்த்துக்கள் எனக்குரியவையல்ல... என்றாலும் நன்றிகள்...வந்தமைக்கும் பின்னூட்டியமைக்கும் மேலதிக நன்றிகள்...

    26. @ யாழினி

      // வணக்கம் புல்லட்,

      தாமதத்திற்கு மன்னிக்கவும். //

      இதைத்தான் பின்னூட்ட காவாலித்தனம் என்பார்கள்... இதற்கெல்லாம் கடுமையான தண்டனையுண்டு...

      //மிக அருமையாக உள்ளது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்! //

      நன்றி... நீங்க கதை‌யெழுதுவ‌தைப் பாத்து எனக்கும் க‌தை‌யெழுத ஆ‌சை வந்துட்டுது... வி‌ரைவில உங்களுக்கு ‌போட்டியா நானும் க‌தை‌யெழுதவன்.. ;)

      // என்ன‌ தான் நீங்க‌ சீரிய‌ஸாக‌ எழுதுற‌ன் என்டு சொன்னாலும் என‌க்கு சிரிப்பு தான் வ‌ருகிற‌து. //

      அவமானம் அக்‌செப்ட்டட்...
      இதுக்கு ‌மேல வாணாம்... :(