“ கெதியன பந்தை எடுறா…. அரக்கிறாய் எருமை மாடு மாதிரி?! “
மெதுவாக பந்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்த சித்தன் கோபம் கொப்பளிக்க வெடுக்கென்று திரும்பி எரிப்பது போல் பார்த்தான்…
காரணம்… கத்திய பொன்னானின் மகன் சுள்ளானுக்கு 10 வயசு …. திட்டுவாங்கிய சித்தனுக்கோ 17 வயசு …
சுள்ளானால் தொடர்ச்சியாக போடப்பட்ட ஐந்தாவது நோ போலுக்கும் கமிலேஸ் சிக்சர் விளாசிவிட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டிப்போய் பற்றையொன்றினுள் புகுந்துவிட்டது…
சித்தனின் சைட்டில் எல்லாரும் நம்பிக்கையிழந்து விட்டிருந்தார்கள்… விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த மச்… இப்ப இந்த சனியனிட்ட பந்தைக்குடுத்து…. சே!
”என்னடா முறைக்கிறா? அந்த பத்தைக்கதான் போனது போய் கெதியன எடுத்தெறி… போ!”
சித்தனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது…
ஆனால் மற்றவர்கள் பிரச்சனை வேண்டாம் அடங்கிப்போகுமாறு பரிதாபமாய் சாடை காட்ட மனதுள் கறுவியபடி பற்றைக்குள் கைவிட்டான்…
என்ன நடக்குது? எங்க நடக்குது? ஏன் 10 வயது பெடியன் பேசுறதை கேட்டுக்கொண்டு எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்கள்? குழப்பமாயிருக்கா?
சொல்லுறன் சொல்லுறன்…
1999 ஆம் ஆண்டு…. யாழ்ப்பாணம்
படுகொலைகள் புதைகுழிகள் கண்ணிவெடிகள் எல்லாம் குறைந்து போய் புதிதாக தமிழினத்து சமூக விரோதிகள் பரிணமிக்கத்தொடங்கியிருந்த காலம்…
வன்னிப்பகுதியில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இங்கு இளைஞர்கள் கூத்தடிக்கத் தொடங்கியிருந்தார்கள்… இருந்தாலும் ஆரோக்கியமாக ஆங்காங்கே விளையாட்டுக்கழகங்களும் சனசமூக நிலையங்களும் தோன்றத்தொடங்கின… சில வேளைகளில் கிராமங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்க கழகங்களால் வைக்கப்படும் போட்டிகள் விபரீதமாக வெட்டுக்குத்தில் முடிந்ததும் நடந்தன…
இக்காலப்பகுதியில் எம்மூர் மைதானமும் அதனுடன் இணைந்த கழக கட்டடமும் இராணுவ முகாமாகவிருந்தது….. அத்துடன் இருந்த இளைஞர்களெல்லாம் இராணுவத்தின் உதவியுடன் செம்மணி புதைகுழிகளுள் நிலத்தை வளமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.. எஞ்சியவர்கள் வெளியில் தலைகாட்டப்பயந்துபோய் தாயின் சீலைத்தலைப்புக்குள் ஒளிந்திருந்தார்கள்..
இதனால் எமது கிராமம் மீசை அரும்பும் பதின்ம வயதுகாரரின் கொடியின்கீழ் ஆட்சி செய்யப்பட்டுக்கொண்டிருந்தது… இந்த நேரத்தில்தான் மற்ற கிராமங்களுக்கு போட்டியாக நாங்களும் ஒரு விளையாட்டுக்கிளப்பை தொடங்கி ஏதாவது த்ரில்லாக செய்ய எண்ணினோம்…
தேவைப்பட்டது ஒரு வெறும்காணி… மற்றது பட் விக்கட் வாங்க கொஞ்சம் பணம்… பணம் பிரச்சனையில்லை… காரணம் கமிலேசின் மாமா லண்டனில் குளிரில் நடுங்கி நடுங்கி பெற்றொலடிக்கிறார்…. ஆக காசு மரமே இருக்கு…நோ ப்ராப்ளம்! ஆனால் விளையாட இடம்?
தரிசுக்காணியக்கூட ஒருவனும் தரமாட்டனெண்டுட்டான்… பெடியங்கள் விளையாடினா காணி இறுகிப்போகுமாம் பிறகு பயிர் பச்சை ஒண்டுமே விளையாதாம்…
கருத்தரித்த எம் எண்ணங்கள் கருவிலேயே கலைக்கப்படும் அபாயங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்திலதான் கடவுள் போல வந்தான் பொன்னான்…
முந்தி பெரிசா வசதியல்லாதவன்… ஆனா கதை சொல்லப்படும் நேரத்தில அவன் ஒரு கோடீஸ்வரன் .. எப்பிடி?
95 இல அவன் வச்சிருந்தது ஒரே ஒரு ட்ரக்டர்… இடம்பெயர்வுக்காலங்களில அத வச்சு அறாக்காசுக்கு ஹயர் ஓடி அவன் உழைஉழைண்டு உழைச்சிட்டான்.. அதோட இயலுமானவரை கைவிட்ட வீடுகளை உடைச்சு சாமானுகளை அள்ளி கொடிகாமம் பக்கங்களில வித்து கண்ட மேனிக்கு காசு பாத்துட்டான்… இருந்தாலும் அதிஸ்ட தேவதை அவன விடுறதாயில்ல… யாழ்ப்பாணம் வந்தப்பிறகு அவனுக்கு அடுத்த தொழில் வந்திச்சுது… கள்ள மணல் அள்ளுற தொழில்… அள்ளி அள்ளி ஊருக்கு நடுவில பெரிய கடலையே கொண்டந்துட்டான பென்னான்… மண்ணுக்கு பேர் போன பூமி நாசமாப்போச்சுது அவனால..
இப்ப அவனட்ட ஏழோ எட்டு ட்ராக்டர அதோட அவனுக்கொரு அடியாள் (மணலள்ளுற) கும்பல் வேற…. யாரெவற்ற காணியெண்டில்ல சகட்டுமேனிக்கு அள்ளினான்..
அள்ளுற மணலை விக்கிறதுக்கு முன்னாடி ஒரு காணியில போட்டு சேத்து வப்பான்…
அப்பிடியே அந்த மணல நாய் மற்றும் மனுசங்க கிட்ட இருந்து பாதுகாக்க ஒருவழிய அவன் தேடிக்கிட்டிருந்த போதுதான் கதைல நாங்க வாறோம்….
ஒரு கண்டிசனோட காணியில விளையாட அனுமதி கிடைத்தது… காணிக்க நாய் வராம பாத்துக்கணும்.. அதோட தன் மகன் சுள்ளானையும் ஆட்டத்தில சேத்து அவனோட பிரச்சனைப்படாம விளையாடோணும்…
அவ்வளவுதானே ஓகே எண்டு சந்தொசத்துடன் கழகம் ஆரம்பிக்கப்ட்டது…. ஆனாலும் அபசகுனங்கள் பல தெரிவதாக ஆரம்பத்திலேயே பலர் பயப்படுத்தினார்கள்.. அவர்களின் எச்சரிக்கை பொறாமை எனும் முத்திரையிடப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டது…
கடும் சிரமதானத்தின் பின் காணியை செப்பனாக்கி , ஜகர்நாட் ஜகுவார்ஸ் (juggernaut jaguars) என்று பேரும் வைத்து, ராம் பெயிண்டர்ஸில ஒரு போர்டும் எழுதி , லண்டன் மாமாவின் பணத்தில் ஆளாளுக்கு ஒரு கார்டும் (gaurd) வாங்கி (விளையாடினது என்னவோ சாப்ட் போலில) தடல்புடலா கழகம் ஆரம்பிக்கப்ட்டது…
முதல் நாள்….
போமாலிட்டிக்கு நம்ம கன்னி க்ரௌண்டில பக்கத்து ஊர் பொடிப்பசங்களோட ஒரு சின்ன மாட்ச்….
டொஸ்போடுறதுக்கு கப்டின் ரெண்டு பேரும் போகணும்…. நம்ம சைடிலருந்து சித்தன் வெளிக்கிட ஒரு வொய்ஸ் வந்துச்சு…
”எங்கடல நாந்தான் கப்டின்….”
????
”உங்களுக்கு அதில ஏதாவது பிரச்சனைன்னா நீங்க க்ரௌண்டிலருந்து வெளில போகலாம்….”
சொன்னது பொன்னான் மகன் சுள்ளான்
அப்பதான் விளங்கிச்சு கணக்கா ஆப்பில குந்திட்டமே எண்டு…
ஆரம்பத்தில் சின்ன பெடியன்தானே மெவாக சமாளிப்பம் என்று எண்ணி அப்பன் ராசா இது சரிவராது என்று விளக்கவுரை நடத்த அவன் தன் கொள்ளையில் சற்றும் தளராமல் தனிக்கட்டையாக தாறுமாறான வார்த்தைப் பிரயோகங்களுடன் சற்றேனும் மரியாதையின்றி எடுத்தெறிங்து பேச நிலமை சிக்கலாயிற்று…
வாக்குவாதத்தில அந்தப்பக்கமாக கிணத்தில தண்ணி குடிக்க வந்த பொன்னானின் கையாள் ஒருவன் சித்தனுக்கு அடித்துவிட நிலமை நாறிவிட்டது… கடும் கோபத்துடன் வெளியேற வெளிக்கிட்ட எங்களை கட்டாயமாக சுள்ளானின் தலைமையில் விளையாடவிட்டு ஒரு கண்கொள்ளாக்காட்சிய அரங்கெற்றினான் அந்த அடியாள்…
விளையாடிய 5 ஓவரும் அவன்தான் போல் போட்டான்… அதுவும் எல்லாம் நோபோலும் வைட் போலும்… அம்பயர்(எதிர் டீம் பெடியன்) சுள்ளாண்ட தூசணத்துக்கு பயந்துபோய் அதுகளை நல்ல போல் எண்டு அறிவித்தாலும் ஒரு மணிநேரமாக வீசப்பட்ட அந்த 5 ஓவர்களின் முடிவில் எதிரணி 150 ரண்களை பெற்றிருந்தது… சொன்னா அழுகை வரும்.. அவங்க கொஞ்சங்கூட ஒரு ஈவிரக்கமில்லாம அடிச்ச அடியில பந்தெல்லாம் சும்மா சந்திரமண்டலம் இந்திரமண்டலமெல்லாம் போய் வந்திச்சு… ஓடி ஓடி அத பொறுக்கி எங்களுக்கெல்லாம் கேணியா சிம்ப்டம்ஸ் வேற தெரியத்தொடங்கிட்டுது…
கருமாரி அம்மன் கருணையில ஒருமாதிரி பீல்டிங் முடிஞ்சுது… அடுத்து பாட்டிங்…
ஓபனிங்காக இறங்கிய சுள்ளான் முதலாவது போலிலேயே அவுட்டாகிவிட , போலரினை கதாநாயகனாக உருவகித்து ஒரு காமசூத்திராவையே கதாகாலேட்சபமாக செய்தான் சுள்ளான்… அந்த சிறு வயதில் அவனது பாலியல் அறிவை கண்டு வியப்புற்ற அனைவரும் வாய் பிளந்து நின்றனர்…
அவ்வளவுதான்….. அத்தோடு பின்னங்கால் பிடரியிலடிபட ஓடிய எதிரணியினர் , பின்னர் வெளியில் செய்த சதிநடவடிக்கைகளால் எமது ஜக்குவார் டீம் டங்குவார் அறுந்து போய் சொதி டீம் எனப் பெயர் பெறலாயிற்று… வளவும் சொதி வளவு என பிரபலமாயிற்று..
சாகசங்கள் தொடரும்… :)" சுச்சா பையங்களின் கிரிக்கட் "என்று கூகிளில் தேடிய போது கிடைத்த இமேஜ் இல் மேலே உள்ளதும் ஒன்று.... இதையொட்டி நான் கூகிளை வன்மையாக கண்டிக்கிறேன்... :@
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்9 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
44 Responses
சரியான நகைச்சுவை நண்பா.. உங்க டீமுக்கு ரொம்ப வளமான எதிர்காலம் இருந்து இருக்கும் போல தெரியுதே.. தொடருங்கள்..
அண்ணா, அப்படியே யாழ்ப்பாணத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டியள். எங்க ஊருக் கிரிக்கெட் ஒரு தினுசுதான் இல்லையா? பொடிப் பசங்களைப் பற்றி தப்பா பேசக் கூடாது. கடைசியில மேச்சக் காப்பாத்துறது அவங்கதான்.
தேவைப்பட்டது ஒரு வெறும்காணி… மற்றது பட் விக்கட் வாங்க கொஞ்சம் பணம்… பணம் பிரச்சனையில்லை… காரணம் கமிலேசின் மாமா லண்டனில் குளிரில் நடுங்கி நடுங்கி பெற்றொலடிக்கிறார்…. ஆக காசு மரமே இருக்கு…நோ ப்ராப்ளம்! ஆனால் விளையாட இடம்?
தரிசுக்காணியக்கூட ஒருவனும் தரமாட்டனெண்டுட்டான்… பெடியங்கள் விளையாடினா காணி இறுகிப்போகுமாம் பிறகு பயிர் பச்சை ஒண்டுமே விளையாதாம்…//
ம்...இந்த அனுபவம் எங்கடை ரீமுக்கும் நடந்திச்சு.....
// Triumph
I feel itched to say that they have to improve their bowling... but then kept shut...
றையம் சொல்லிச் சொல்லியே சலிக்கப் பண்ணுறா?? ஆனால் ஏதாவது ஒன்றும் பிரயோசனமா நடக்கிறதாக் காணேல்லையே???
அவ்வளவுதான்….. அத்தோடு பின்னங்கால் பிடரியிலடிபட ஓடிய எதிரணியினர் , பின்னர் வெளியில் செய்த சதிநடவடிக்கைகளால் எமது ஜக்குவார் டீம் டங்குவார் அறுந்து போய் சொதி டீம் எனப் பெயர் பெறலாயிற்று… வளவும் சொதி வளவு என பிரபலமாயிற்று..//
படத்தில் துடுப்பு மட்டையுடன் உள்ள பொடிப் பயல் தாங்கள் என்று கேள்வி? உண்மையாவோ????
என்ன இரட்டை அர்த்தத்திலை எதையோ எல்லாம் புரியாமல் புரிய வைக்கிறீங்களே???
புல்லட் நீங்கள் பட்டாலை பந்துக்கு அடிப்பீங்களோ? பந்தாலை பட்டுக்கு அடிப்பீங்களோ?
//றையம் சொல்லிச் சொல்லியே சலிக்கப் பண்ணுறா?? ஆனால் ஏதாவது ஒன்றும் பிரயோசனமா நடக்கிறதாக் காணேல்லையே??? //
What you mean :@
// கார்த்திகைப் பாண்டியன்
சரியான நகைச்சுவை நண்பா.. //
நன்றி பாண்டியன் சேர்..
//உங்க டீமுக்கு ரொம்ப வளமான எதிர்காலம் இருந்து இருக்கும் போல தெரியுதே.. தொடருங்கள்.. //
கிழிஞ்சுது போங்கொ! அதுபற்றி இன்னொரு பதிவில போடுறன்... :)
// Subankan
அண்ணா, அப்படியே யாழ்ப்பாணத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டியள். //
ஓமோம் தம்பி... வேற ஆக்களுக்கும் வேணுமெண்டா சொல்லுங்கொ! வன் வே ட்ரிப் பத்தாயிரம் ருபா மட்டும்தான்... ஏ 9 ஆல பத்திரமாக் கொண்டுபோய் விடுவன்... இது வடக்கின் வசந்தத்திண்ட அறிகுறிதானே?
// எங்க ஊருக் கிரிக்கெட் ஒரு தினுசுதான் இல்லையா? //
உங்கட எப்பிடியோ தெரியாது... எங்கட ஊர்ப்பெடிசுகள் அந்தக்காலத்திலயே பவர்பிளேயில விளையாடினாக்கள்... அலாப்பி அடிபட்டு மச் நடுவில நிண்டுட்டுதெண்டால் டக்வத்லூயில் முறையில வெற்றிதோல்வி கணிச்சாக்கள்... அவங்க ரேஞ்சே வேற...
// பொடிப் பசங்களைப் பற்றி தப்பா பேசக் கூடாது. கடைசியில மேச்சக் காப்பாத்துறது அவங்கதான்.//
அதென்னவோ உண்மைதான்.. நொட்டிப்போட்டு ஓடியே 100 ரண் எடுப்பாங்கள் நாசமாப்போவார்.. :(
// Triumph
Bullet Pandi is BACK!!!!!!!!!!!!//
என்னது புல்லட் பாண்டி இஸ் Back ஆ? இங்கென்ன பில்லா பிலிமா காட்டுறாங்க? ;)
// Nalla irukku anna... //
நன்றி தங்கையாரே!
// Why? is that your team's pic... Where was this place... //
ஐயொ அதில ஆர் நிக்குறதெண்டு பாத்தீங்களா? எங்கட மாண்பு மிகு சனாதிபதி... நிஜம்மாலுமே நான் பய பக்தியொடதான் சொல்லுறென்..
//btw, I remember the vattakkachchi tuition center ground... I swear, those guys who played cricket in that ground, acted like world class players.. but every bowler would put wide at least twice in every over...I feel itched to say that they have to improve their bowling... but then kept shut... //
அப்பிடி ஏதாவது பொய் நடத்தியிருந்தீங்கன்னா அடுத்த போல் உங்கட மண்டையிலதான் விழுந்திருக்கும்... நல்ல காலம் தப்பிச்சிட்டீங்க... :)
// ada pavingala... Softball ikku guard ah? nallathu nallathu... //
இதென்ன கேள்வியிது? ஹ்ம்... நம்மட வீக் பாயிண்டுகளை வெளில சொல்லப்படாது எண்ட கொள்கையால நான் இப்ப அமைதி காக்கப்பொறன்...
// juggernaut jaguars? who recommended this name... //
கிட்டடியில ஒரு கிழவன் இருந்தவன்... அவன் இங்கிலீசு புத்தகம் எல்லாம் வாசிப்பான்... அவனட்ட போய் கேட்டம் ஒரு பேர் வச்சு தாங்கன்னு... பேர் சும்மா தூள் தூளாக்ிறமாதிரி அக்சனா இருக்கணுமெண்டு... அவனம் தந்தான்...
ஆனா உந்தப்போர் வாய்க்க பூராம கனகாலமா பேப்பரல தமிழில எழுதி வைச்சுக்கொண்டு திரிஞ்சனாங்கள்... அது ஒரு பெரிய கொடுமை
// கமல்
ம்...இந்த அனுபவம் எங்கடை ரீமுக்கும் நடந்திச்சு.....//
அப்பிடியெ? அப்ப உங்கட ஊர்ச்சுள்ளான் நீஙகதானெண்டுங்கொ? ;)
// படத்தில் துடுப்பு மட்டையுடன் உள்ள பொடிப் பயல் தாங்கள் என்று கேள்வி? உண்மையாவோ???? //
அய்யோ அது நெட்டில சுட்டது.. :)
//என்ன இரட்டை அர்த்தத்திலை எதையோ எல்லாம் புரியாமல் புரிய வைக்கிறீங்களே???//
அய்யய்யொ! நான் அப்பிடி எதுவுமே சொல்ல வரேல்ல ராசா...மருண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பிசாசுஅதோட நான் ஒரு பாப்பா... எனக்கு டபுள் மீனிங்கெல்லாம் தெரியாது
// புல்லட் நீங்கள் பட்டாலை பந்துக்கு அடிப்பீங்களோ? பந்தாலை பட்டுக்கு அடிப்பீங்களோ?//
தெரியாமத்தான் கேக்கிறன்... உங்களுக்கு ஏனிந்தக் கொல வெறி?
அப்பு..சூப்பரப்பு,.
போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறியள்..
மென்பந்துக்கே போல்கார்ட் வாங்கினா...சென் ஜோன்செல்லாம் ஏன் கேவலமா பிக் மட்சில் தோக்காது
உமக்கு கூகிள் இப்படி எல்லாம் சதி செய்யுதோ...நான் நினைச்சன் எனக்கு மட்டும் தான் என்று..:-)
உந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி பட்டும்படாமல் எழுதுங்கோ....:-))
அப்பு ராசா! உங்கை என்ன நடக்குது? நீர் எப்பிடி மோனை இருக்கிறீர்?
புது டெம்பிளேட்..புதுப் பேர் என்று ஒரே கலக்கல் வேறை? என்ன மெய்யாத்தான் கேக்கிறன் மோனை உமக்கு கிறிக்கட் என்றால் என்ன எண்டு தெரியுமோ?
நீர் கிறிக்கட் எண்டு சொல்லுறது உந்தக் கிளித் தட்டைத் தானே?
பதிவு பஞ்சாமிர்தம் ராசா....
நல்லா இருக்கு பாண்டி, ஈழத்தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது.
அப்புரம் கடைசி போட்டோல ஒருத்தருக்கு தொப்பை இல்லையே அது ஏன்?
என்ன புல்லட் ஒரு வரலாற்று பதிவை பதிஞ்சிட்டியள்...
சும்மா துடுபாட்டத்திலை ஆரம்பிச்சி யாழ்பாணத்தான் அவலங்களையும் சொல்லிட்டாய் கலக்கல்!
||||||||||||||||||||||
நாங்களும் உப்பிடி ஒரு ரீம் வைச்சிருந்தனாங்கள் (யூத் கிளப்), எங்க கதையை சொன்ன மாதிரி யிருந்த்து... நம்ம கப்டன் யாரு தெரியுமா????
பதிவர் கமல் தான். ரீம் பேரு என்னவோ யூத் கிளப் தான் ஆனா பாருங்க கப்டீனா ஒரு வயாசான அங்கிளையே போடவேண்டியதா போச்சு விதி!
கவின்
March 12, 2009 10:16 PM என்ன புல்லட் ஒரு வரலாற்று பதிவை பதிஞ்சிட்டியள்...
சும்மா துடுபாட்டத்திலை ஆரம்பிச்சி யாழ்பாணத்தான் அவலங்களையும் சொல்லிட்டாய் கலக்கல்!
||||||||||||||||||||||
நாங்களும் உப்பிடி ஒரு ரீம் வைச்சிருந்தனாங்கள் (யூத் கிளப்), எங்க கதையை சொன்ன மாதிரி யிருந்த்து... நம்ம கப்டன் யாரு தெரியுமா????
பதிவர் கமல் தான். ரீம் பேரு என்னவோ யூத் கிளப் தான் ஆனா பாருங்க கப்டீனா ஒரு வயாசான அங்கிளையே போடவேண்டியதா போச்சு விதி!//
இது என் இளமைக்கு விடுக்கப்பட்ட சவால்... இதை முன்னை நாள் அணித் தலைவரும் இந் நாள் ஓய்வு பெற்ற கிறிக்கட் வீரர் என்ற ரீதியிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.... நாம எல்லாம் அந்தக் காலத்திலை நோ போலுக்கே சிக்ஸர் அடிச்சு....வைட் போலுக்க்கு பவுண்டரி அடிச்சு ஆடின ஆட்கள்..
இது மட்டுமோ?? ஓடி வந்து சிலோவாக நின்று போல் போட்ட ஆட்கள்??
its VERY GOOD
MANO
//@ ’டொன்’ லீ
அப்பு..சூப்பரப்பு,.
போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறியள்.. //
டாங்சு டான்லீ
//மென்பந்துக்கே போல்கார்ட் வாங்கினா...சென் ஜோன்செல்லாம் ஏன் கேவலமா பிக் மட்சில் தோக்காது//
சேப்டி பர்ஸ்ட் என்ற உயரிய கொள்கைதான் :)
//உமக்கு கூகிள் இப்படி எல்லாம் சதி செய்யுதோ...நான் நினைச்சன் எனக்கு மட்டும் தான் என்று..:-)//
அவங்கள் ரூம் போட்டு யோசிக்கிறாங்கள் எண்டு நெக்கிறன்.. :(
//உந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி பட்டும்படாமல் எழுதுங்கோ....:-))//
பதுங்கிப்படுக்குதாம் பெருமாள் அதை பப்ளிசிட்டி பண்ணிச்சாம் அனுமார்...
நாமே பயந்து பயந்து எழுதுறம்.. ஏம்பா நமக்கிந்த வேண்டாத வேலை??
@ சக்(ங்)கடத்தார்
// அப்பு ராசா! உங்கை என்ன நடக்குது? நீர் எப்பிடி மோனை இருக்கிறீர்?
புது டெம்பிளேட்..புதுப் பேர் என்று ஒரே கலக்கல் வேறை? //
அவை 25வது பதிவையொட்டிய சிறப்பு நிகழ்ச்சிகள்....
//என்ன மெய்யாத்தான் கேக்கிறன் மோனை உமக்கு கிறிக்கட் என்றால் என்ன எண்டு தெரியுமோ?
நீர் கிறிக்கட் எண்டு சொல்லுறது உந்தக் கிளித் தட்டைத் தானே?//
நீங்கள் என்னபறங்கி கோட்டைக்கு போகேக்க கூடப்போனாக்களொ? சரியான பழசா இருக்கிறிங்கள்?
//பதிவு பஞ்சாமிர்தம் ராசா....//
நன்றி தாத்திகாரு.. :)
@ குடுகுடுப்பை
// நல்லா இருக்கு பாண்டி, ஈழத்தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. //
என்னய்யா இது? எங்களட்ட கேளுங்க! சென்னை சேரித்தமிழ்ழயே கதைச்சு கலாய்ச்சி புடுவொம் நைனா! அம்புட்டு பாஸ்ட்டு நாங்க..
// அப்புரம் கடைசி போட்டோல ஒருத்தருக்கு தொப்பை இல்லையே அது ஏன்? //
வாழ்க்கைன்னா சில விதிவிலக்குகள் இருக்கத்தானே செய்யும் :)
@ கவின்
// என்ன புல்லட் ஒரு வரலாற்று பதிவை பதிஞ்சிட்டியள்...
சும்மா துடுபாட்டத்திலை ஆரம்பிச்சி யாழ்பாணத்தான் அவலங்களையும் சொல்லிட்டாய் கலக்கல்! //
நன்றி கவின்
//நாங்களும் உப்பிடி ஒரு ரீம் வைச்சிருந்தனாங்கள் (யூத் கிளப்), எங்க கதையை சொன்ன மாதிரி யிருந்த்து... நம்ம கப்டன் யாரு தெரியுமா????
பதிவர் கமல் தான். ரீம் பேரு என்னவோ யூத் கிளப் தான் ஆனா பாருங்க கப்டீனா ஒரு வயாசான அங்கிளையே போடவேண்டியதா போச்சு விதி! //
ஹாஹாஹாஹ!
@ MANO
// its VERY GOOD //
thank you so much MANO! :)
ஓகோ! இது தான் உங்கட சொதி வளவின்ட ரகசியமோஓ..?
Very Funny புல்லட்
நல்ல நடை நன்றாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் தொடரட்டும்....
//காணிக்க நாய் வராம பாத்துக்கணும்.. அதோட தன் மகன் சுள்ளானையும் ஆட்டத்தில சேத்து அவனோட பிரச்சனைப்படாம விளையாடோணும்…//
//சொன்னா அழுகை வரும்.. அவங்க கொஞ்சங்கூட ஒரு ஈவிரக்கமில்லாம அடிச்ச அடியில பந்தெல்லாம் சும்மா சந்திரமண்டலம் இந்திரமண்டலமெல்லாம் போய் வந்திச்சு… ஓடி ஓடி அத பொறுக்கி எங்களுக்கெல்லாம் கேணியா சிம்ப்டம்ஸ் வேற தெரியத்தொடங்கிட்டுது…//
அச்சச்சோ...பாவம் புல்லட் நீங்க சரியா கஷ்டப் பட்டு போனிங்க!
கடைசியா கூகிள்லை கண்டிச்சது வரவேற்கத் தக்கது.... real yappane story...
அட...எங்கட பாஸ்சுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்டெல்லே நினைச்சன்...Club கிரிக்கெட் விளையாடி இருக்குறியல்?? சூப்பர் சூப்பர்...Guard ஓட சேத்து gloves, pads எல்லாம் வாங்கிப் போட்டு விளையாடி இருந்தா Division I விளையாடி இருக்கலாம்..மிஸ் ஆகிட்டுது..அடுத்த முறை கிரிக்கெட் விளையாடேக்க சொல்லுங்கோ..நானும் வாறன்..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
புல்லட்,
நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். எனது பதிவினை பார்க்கவும். உங்களை கவர்ந்தவர்கள் யார் என்று கண்டு பிடிப்பதே இப் பதிவின் நோக்கம். (அய்! மாட்டி விட்டாச்சு) விதிமுறைப் படி நீங்கள் குறைந்தது 2 பேரையாவது அழைக்க வேண்டும் மன்னிக்கனும் மாட்டி விட்ரனும்.
நன்றி
@ யாழினி
// ஓகோ! இது தான் உங்கட சொதி வளவின்ட ரகசியமோஓ..? //
ஹிஹி
பொம்பளப்பிள்ளைங்களுக்கு வீட்டுக்குள்ள ஸகிப்பிங் றோப்பும் அம்மாண்ட குடுமியும்தான் வாழ்க்கை.. நமக்கெல்லாம் அப்பிடியா? அப்பா எப்பிடித்தான் அடிச்சாலும் பின்னேரங்கள் ஒரு சொர்க்க காலங்கள்...
//Very Funny புல்லட்
நல்ல நடை நன்றாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் தொடரட்டும்....//
நன்றி..
// அச்சச்சோ...பாவம் புல்லட் நீங்க சரியா கஷ்டப் பட்டு போனிங்க! //
ஆமா! :(
// புல்லட்,
நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். எனது பதிவினை பார்க்கவும். உங்களை கவர்ந்தவர்கள் யார் என்று கண்டு பிடிப்பதே இப் பதிவின் நோக்கம். (அய்! மாட்டி விட்டாச்சு) விதிமுறைப் படி நீங்கள் குறைந்தது 2 பேரையாவது அழைக்க வேண்டும் மன்னிக்கனும் மாட்டி விட்ரனும்.
நன்றி //
இந்தப்பாவத்தை நீங்க எத்தனை ஜென்ம்ம் எடுத்தாலும் கழுவமுடியாது... நறநற...
ஐயகோ நான் யாரைப்பற்றி எழுதுவேன்? எதைப்பற்றி எழுதுவேன்... யாரை கோத்துவிடுவேன் எதுவுமே புரியலயெ? BooHoo! :'(
@ பிளாட்டினம்
கடைசியா கூகிள்லை கண்டிச்சது வரவேற்கத் தக்கது.... real yappane story...//
நன்றி !
எனக்கொரு ரகசியம் சொல்லுவீங்களே? பழைய தங்கத்தை பிளாட்டினமா மாத்துறது எப்பிடி? ;)
// @ தியாகி
அட...எங்கட பாஸ்சுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்டெல்லே நினைச்சன்...Club கிரிக்கெட் விளையாடி இருக்குறியல்?? //
முந்தி விளாட பயங்கர விருப்பம்.. பிறகு பிறகு இல்லாமப்போச்சு...
//சூப்பர் சூப்பர்...Guard ஓட சேத்து gloves, pads எல்லாம் வாங்கிப் போட்டு விளையாடி இருந்தா Division I விளையாடி இருக்கலாம்..மிஸ் ஆகிட்டுது..அடுத்த முறை கிரிக்கெட் விளையாடேக்க சொல்லுங்கோ..நானும் வாறன்.. //
கட்டாயம் சொல்லுறன்... :) ஆனா என்னோட விளையாடினால் பிறகு என்னை விட மோசமா நீங்க கிரிக்கட்ட எதிர்க்க ஆரம்பிச்சிடுவியள்..
@ Triumph
aiyada... Sinna maama class mudiyum varaikum kaaval kaathu elle kuttikkondu poonavar... apdi ellam yarukkum seiya thairiyam vanthirukkathu.. he he..
ok thangachi show us endu kettu iruppinam.. hak hak..//
:)...மிக்க நல்லம் :)
// entha school aiya neengal... St.Johns endu mattum solla vendam... naangal avayinda "sorority" aakkum //
ஓ.. நீங்கள் சுண்டுக்குளியா? கிழிஞ்சுது போ! :)
நங்க அப்டி பந்தா விடேல்ல... உங்கட ஸ்கூலிண்ட பீட்டர்தான் தாங்க முடியாது... நான் அங்க அடிக்கடி வாறனான்... பிறிபெக்டா இருந்ததால அடிக்கடி ஏதாவது ப்ரோகிராமுக்கு வந்த நல்லா மூக்குப்பிடிக்க விளாசுறனான்... உங்களுக்கு சிலவேளை ஞாபனமிருக்கலாம்... உங்கட தமிழ்விழாவில வந்து இசையருவி ப்ரோகிராமில ஒரு குண்டுப் பொண்ணு இப்போது இசை மழையில் நீங்கள் நனையலாம் எண்ட பொது பட்டென்று குடைபிடிச்ச குரங்குகளில நானும் ஒருத்தன்... :)
நான் சஞ்சீவி (உதயன்) இலதான் எழுதினனான்... :)
என்ன கொடுமையிது? என்ன குரங்கு குரங்குன்னு திட்டிப்போட்டு கதைன்னா எப்பிடி கதைக்கிறது? நான் கோவம். :@
அடக்கடவுளே அந்தாள் நம்ம பக்கத்து வீடுதான்.. ஆனா நான் இதுவரையும் கதைச்சதில்ல... காரணம் ஆள் உள்ள போட்டு வந்தாப்புறம் எனக்கு பய்ங்கர பயம்! அததோட அவர டிஸ்டேப் பண்ணவும் விரப்பமில்லை.. அவங்களோ வைப்சில வேளை ரோட்டில பாப்பாவ வச்சுட்டு நிப்பாங்க.. நான் என்பாட்டுக்கு போயிடுவேன்.. இருந்தாலும் இப்ப நான் அவருக்கு வெடிய வச்சா பின் னொரு காலத்தில எனக்கொருத்தன் வெடிய வைக்காமலா விடுவான் ???
நானும், ஐயோ எங்கட சொதிவளவை யாரோ பிடிச்சுட்டாங்கள் எண்டு அரக்கப்பரக்க ஓடியந்தா, இந்தக் கிறிக்கட்டும் நல்லாத்தான் இருக்குது. அதுசரி, அதுக்குப்பிறகு ரின்போல் எல்லாம் ”பட்” பண்ணி விளையாடினியளோ இல்லையோ?
கடைசியா ஒரு வேண்டுகோள், இறுதியா நீங்க போட்ட படத்தில உள்ள அணியோட ஒரு மச் கொழுவித்தாறியளோ???
Post a Comment