எனக்கு பிடித்தவர்கள்.

    முன் குறிப்பு: எனக்கு பிடித்தவர்கள் பற்றி யாழினி எழுதுமாறு கேட்டிருந்தார்... யாரைப்பற்றி எழுதவது என் சித்திக்கிறேன்... எதுவும் வருவதாயில்லை... ”மகாத்மா காந்தி எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.அவர் கிபி 1869 இல் பிறந்தார் ” என்று நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடில்லை... ஆகவே நல்ல ஐடியா வரும் வரைக்கும் அனைவரும் பொறுத்தருளவும்... இடைப்பட்ட நேரத்தில் இதைப்படிக்குவும்.. :) இதையும் ஒரு சங்கிலியாக விளையாட அன்பு நெஞ்சங்கள் அனைவரையும் அழைக்கிறேன்..





    எனக்கு
    கடித்தவர்கள்...


    பூனை

    அப்போ எனக்கு பத்து வயசு..
    பக்கத்து கோவிலில் ஒரு கறுத்தப்பூனை இருந்துச்சு...
    அது அங்கிட்டு இங்கிட்டு திரிஞ்சு கோவிலுக்கு வாற போற ஆக்களிண்ட காலில உராஞ்சுக்கிட்டு திரிஞ்சுது...
    இருந்தாப்போல ஆது ஒரு நாள் எங்கட வீட்டு பழையதுணிக்கூடைக்க மூணோ நாலு குட்டிங்களப் போட்டுட்டுது ...
    எனக்கும் தமபிக்கும் இருப்புக்கொள்‌ளேல்ல..
    ஒரு குட்டியபபிடிச்சு தாங்க எண்டு அப்பாவக்கேட்டம்.
    அப்பா கடுமையாக எச்சரித்து அந்த அறைக்கதவையும் பூட்டிட்டு போட்டார்..
    நாங்க கள்ள சாவிபோட்டு கஷ்டப்ட்டு உள்ள பூந்து நிலமைய ஒரு நோட்டம் விட்டம்... தாய்ப்பூனயக் காணேல்ல ... தம்பி எச்சரிக்கைக்காக ஒரு சவுண்டு விட்டு பாத்தான்..
    றிப்ளை மயான அமைதி...

    ஆகா இதுதான் சமயம்..




    அறை புள்ளா செம நாத்தம்... கும்மிருட்டு வேற..
    தடவித்தடவி கூடயக்கண்டு பிடிச்சு உள்ள டோச் அடிச்சுப்பாத்தம்..
    மூணு குட்டிங்க நொளுநொளுண்ணு கிடந்துது...
    தம்பி மெதுவா கைய உள்ள விட்டான்...
    நான் சுுற்றுபுற சூழலை அவதானத்தோட ‌கவனித்துக்கொண்டிருந்தேன்...

    தம்பி ஒரு உருப்படியை வெளிய எடுத்து டோச் அடித்துபாத்ததுதான் தாமதம் வீல் எண்டு கத்தினபடிக்கு அத மறுபடியும் கூடைக்க பொதக் கென்று போட்டு விட்டான்..
    நான் பதறியடித்து எண்ணடா என்னாச்சென்றேன்..
    வெடவெடவென நடுங்கியவாறு சொன்னான்...

    அண்ணா ...அதுக்கு .. ... ... கண்ணைக்காணேல்ல..
    அது ஏதோ பேய்க்குட்டி போல கிடக்குது ...”

    எனக்கும் உதற ஆரம்பித்துவிட்டது...

    அந்த நேரம் ஹிஸ் ஹிஸ் எண்டு ஏதோ சீறும் சத்தம்...
    இதயம் வெளியில் வந்து நின்று டமார் டமார் எண்று அடிக்க மெதுவாக டோர்ச்சை சத்தம் வந்த திசையை நோக்கி திருப்பினேன்.. அங்கே...

    உர்ர்ர் ஸ்ஸ்ஸ்ஸியாஔவ்.........

    பச்சைக்கண்கள் பளபளக்க முதுகுமயிர் சிலிர்க்க அந்தக்கரும் பூனை என்மீது பாய்ந்த்தது... அலறியப‌டி வீழ்ந்த என்னை தொடையில் கடித்து வைத்துவிட்டு தமபிக்கும் சிறு கீறலை பரிசளித்து விட்டு மறுபடியும் தாக்குதல் நிலைக்கு தயாரானது..
    இரண்டுபேரும் அந்த இருட்டுக்கு தட்டித்தடவி விழுந்துருண்டு வெளியில் அழுதபடி வர..

    அங்கு அப்பா நின்றிருந்தார் கண்கள் சிவக்க....

    பிறகு குழறக்குழற இரண்டு பேருக்கும் ஸ்பிரிட் தடவப்பட்டு ஹாஸ்பிட்டலில் ஏற்பூசியும் போடப்பட்டது ...
    அப்போது அந்தப்பூனையே பரவாயில்லை என இருவரும் குசுகுசுத்துக்கொண்டோம்.. ...


    புலி முகச் சிலந்தி

    டைகர் பேஸ் ஸ்பைடர் என குழந்தைகளால் அழைக்கப்படும் இந்த டரஞ்சுலா .... எமது ஊர் பூவரசுகளின் பொந்துகளில் வாசம் செய்யும் பயங்கரவாதி ஒன்று...

    அது கடித்தால் பௌர்ணமியில் நரி வெருட்டும் என்பது ஒரு வழக்கு...
    அந்த பிராணியிடமிருந்து என் தந்தையார் எம்மை மிகவும் கவனமாகவே காத்துவந்தார்...
    அப்பா புலிமுகச்சிலந்தி அடிக்கிறார் எண்டால் எங்களுக்கு பெரும் சந்தோசம்...
    ஸ்பிரேயரில் மண்ணெண்ணெய் விட்டு இலக்குபாத்து ஒரே அடியில் வீழ்த்தி விழுந்த கண்ணிமைக்கும் ‌நேரத்தில் நெருப்பும் வைத்துவிடுவார் அப்பா...

    அது அவ்வாறிருக்க தந்தையார் வீட்டில் நித்திரையாயிருக்கும் போது சமயங்களில் நானும் தம்பியும் நிறைய விஞ்ஞான ஆராய்சிசகள் செய்வதண்டு...
    உதாரணத்துக்கு ...
    இறந்து போய் தாட்ட கோழிக்குஞ்சை மூக்கைப்பொத்தியபடி கிண்டிப்பாப்பது...
    மஞ்சமுண்ணா மரத்திலிருக்கும் முசுறு கூட்டுக்கு கல்லாலெறிந்து முட்டைகள் பொலபொலவென கொட்டுவதை பாத்து கரகோசம் செயவது...
    உக்கிப்போன தென்னமரத்துள் இருக்கும் ‌பெரிய வெள்ளைப்புழுக்களை சிரச்சேதம் செய்வது என அந்த சிறு வயதில் நாம் செய்த அரியண்டங்களுக்கு அளவேயில்லை... :)

    அப்படித்தான் ஒருநாள்....

    மாமரத்தில் நாத்தியிருந்த கருக்கு மட்டைகள் (பனையோலையின் காம்பு) நடுவே ஒரு பெரிய தத்துவெட்டி மறைவதைப்பாத்து விட்டொம்...
    உடனே தம்பி சொன்னான்..

    அண்ணா ஒப்பரேசன் எறும்புபிக்கேசன் செய்வமோ ?”...

    அப்பிடி யெண்டால் ஏதாவது பூச்சிய க்கொன்று எறும்புக்கு உணவாய்போடுவது... அவை அதை பாட் பாட்டாக வெட்‌டி ஊர்வலமாக கொண்டு போவதைப்பாத்து கொமன்ட்றி செய்வது... அதைத்தான் கோட்வேடாக அப்படி அழைப்போம்...

    மளமளடவெண்டு கருக்குமடடைகளை இழுத்து தள்ளியபடி தம்பி முன்னெறினான்...
    மட்டைகள் எல்லாதிசைகளிலும் பரவலாக விழுந்தன...
    நான் வெளிவரப்போகும் பூச்சியைப் போட்டுத்தள்ள உகந்த கொ‌லைக்கருவியைத்தேடிக்கொண்டிருந்தேன்...
    அப்போதுதான் அது நடந்தது...

    சட்டெனறு ஒரு மட்டை என் கால்பகுதியில் வந்து வீழ அதில் ஒரு பாரிய உருப்படி அசைவதைக்கணடேன்.. அது என்ன ஏது என்று மூளை அறிந்து சுதாரிப்பதற்குள் அது தன் கொடூர கைவரிசையை காட்டிவிட்டது...

    அம்மாஆஆஆஆஆஆ!.......

    ..அது ஒரு பெரிய மனிதனின் உள்ளங்கை சைசுடைய புருமச்சிலந்தி...
    வீழ்ந்த வேகத்தில் தன் மஞ்சள் நிறக்கால்களையும் கருத்த உடம்பையும் தூக்கி என் கால்விரலைப் பற்றி கடித்துவிட்டது...
    கடித்தது நோகவில்லை ஆனால்
    பயம் மற்றும் அதிர்ச்சி என்னை மயங்குநிலைக்கு இட்டுச்சென்று விட்டது...
    பேச்சு மூச்சற்று நிலத்தில் வீழ்ந்த போது
    தம்பியின் வீரிடலும் அம்மா ஒடிவருவதும் அப்பா வெளியில் வந்துவிட்டு உள்ளே ஓடுவதும் மங்கலாய் தெரிந்தது...
    பிறகு மறுபடியும் சுயநிலைக்கு வந்தபோது அப்பா தன் கோபம் முழுவதையும் என் கால் பெருவிரலில் காட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது...
    அப்போது என் மண்டை உச்சி நொந்தது... கம்பியொன்றை கட்‌‌டி காலை ப்ளேட்டால் வெட்டி நசுக்கி நசுக்கி அந்த நீலநிற ரத்தததை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார்..
    கூடவே திட்டல் வேறு...
    எனக்கு வலித்த வலியில் அப்பாவைப்பாத்த போது ஒரு பெரிய புருமச்சிலந்தி போலத்தெரிந்தார்.. :(

    இன்னும் எத்தனையோ என்னைப்பதம் பார்த்துள்ளன... நாய் , சுண்டெலி , அணில் , எறும்பு மயிர்க்கொட்டி மற்றும் பக்கத்துவீட்டுப்பெட்டை ( ;o) சும்மா ‌ ).... இவை அவற்றுளடங்கும் .. இவற்றிலிருந்தெல்லாம் உலகமகா குழப்படிகளான என்னையும் தம்பியையும் பாதுகாக்க எம் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது... அவற்றை இப்போது நினைத்துப்பார்க்க ஏதோ ஒரு வறண்ட உணர்வுதான் வருகிறது...


    சரிசரி இப்பிடி தொடர்நது அலுப்படிக்க எனக்கு விருப்பமில்லை... கமண்டுகளின் முடிவில் இருவரை விளையாட அழைப்பேன்... கட்டாயம் அவர்கள் தங்களுக்கு கடித்தவர்களை பற்றி எழுதவேண்டும்... என்ன நான் சொல்லுறது, சரிதானே?

    22 Responses

    1. I am the First!

      பொறுங்கோ, வாசிச்சிற்று வந்து Comment போடுறன்.

    2. haha....

      நல்லா வாங்கிக் கட்டியிருக்கிறியள்...

      பாம்பிட்ட மாட்டுப் படவில்லையோ....?

    3. ஆனால், நீங்கள் கடித்த சமாச்சாரங்கள் பற்றி மூச்சுவிட இல்லையே...

    4. //கட்டாயம் அவர்கள் தங்களுக்கு கடித்தவர்களை பற்றி எழுதவேண்டும்... என்ன நான் சொல்லுறது, சரிதானே? //

      ஆமா..ஆமா

    5. புல்லட் பாண்டி
      March 16, 2009 1:04 PM @ பிளாட்டினம்

      கடைசியா கூகிள்லை கண்டிச்சது வரவேற்கத் தக்கது.... real yappane story...//

      நன்றி !

      எனக்கொரு ரகசியம் சொல்லுவீங்களே? பழைய தங்கத்தை பிளாட்டினமா மாத்துறது எப்பிடி? ;)//


      ஆ.........புல்லட் ...இதென்ன வேலை...ஜயோ தாங்க முடியவில்லை....

    6. உங்களைக் கடிச்சது எல்லாம் சரி நண்பா.. நீங்க எங்கள அதுக்காக இப்படி போட்டு கடிக்கனுமா... இதுல சங்கிலித் தொடர் வேறவா.. அவ்வவ்...முடியல..

    7. // @ யாழினி


      I am the First!

      பொறுங்கோ, வாசிச்சிற்று வந்து Comment போடுறன். //

      என்னால வேற என்ன செய்யமுடியும்... அமைச்சர் பெ.இராதாகிருஷணனிடம் முறையிட்டிருக்கிறன்.. வாறன் எண்டுட்டு போனவ ஆளக்காணேல்ல நீங்கதான் பிடிச்சுத்தரோணும்... எண்டு

      பாப்பம் ஏதாவது பலன் இருக்குதோ எண்டு.. :(

    8. @ ’டொன்’ லீ

      haha....

      நல்லா வாங்கிக் கட்டியிருக்கிறியள்...

      பாம்பிட்ட மாட்டுப் படவில்லையோ....? //


      நம்மட ஊரில சாரைப்பாம்புதான்... அது நாங்க வாலைப்பிடிச்சு கடிச்சாலும் திரும்பி ஒரு ஸ்மைல் பண்ணிட்டு பத்திரமாப்போயிடும்... :)

    9. @ஆதிரை
      ஆனால், நீங்கள் கடித்த சமாச்சாரங்கள் பற்றி மூச்சுவிட இல்லையே...//

      அதுகளை பப்ளிக்கல சொல்லமுடியுமா ஆதிர? ;)

    10. @ நசரேயன்

      //கட்டாயம் அவர்கள் தங்களுக்கு கடித்தவர்களை பற்றி எழுதவேண்டும்... என்ன நான் சொல்லுறது, சரிதானே? //

      ஆமா..ஆமா //

      சவுண்டு வாற ஸ்பீடைப்பாத்தா கன பேரு கடிச்சுக் குதறியிருக்காங்க போல? ஆ? :D

    11. @ கமல் //

      ஏம்பா வாங்கினது காணாதா? தங்கத்தோட உரசுனக்கே பன்னாடை கட்டி வடிச்சுட்டாய்ங்க..
      பிளாட்டினம் கூட நுள்ளுப்பட்டா என்னாகுமோ? :)

    12. @ கார்த்திகைப் பாண்டியன்

      உங்களைக் கடிச்சது எல்லாம் சரி நண்பா.. நீங்க எங்கள அதுக்காக இப்படி போட்டு கடிக்கனுமா... இதுல சங்கிலித் தொடர் வேறவா.. அவ்வவ்...முடியல..//

      ஆமால்ல? இம்முறை பதிவு கொஞ்சம் சொதப்பிடிச்சு... பரவாயில்லை.. அடுத்தமுறை கொஞ்சம் ஆறுதலாநேரமெடுத்து எழுதுறேன்! :) நமக்கு குறளிப்புத்தி நாம என்ன செய்யுறது?பிடிச்சவங்கன்னா கடிச்சவங்கன்னு யோசிக்க தோணுது.. :)

      அடுத்ததா கட்டாயம் நல்ல பதிவா பொடுறன் தலைவா! :)

    13. ///@ ’டொன்’ லீ

      haha....

      நல்லா வாங்கிக் கட்டியிருக்கிறியள்...

      பாம்பிட்ட மாட்டுப் படவில்லையோ....? //


      நம்மட ஊரில சாரைப்பாம்புதான்... அது நாங்க வாலைப்பிடிச்சு கடிச்சாலும் திரும்பி ஒரு ஸ்மைல் பண்ணிட்டு பத்திரமாப்போயிடும்... :)///

      உம்மையெல்லாம் மந்துவில் பக்கம் கொண்டு போய் விடோனும்.....:-))

    14. பிடித்தவர்களை எழுதச் சொன்னால் கடித்தவர்களை எழுதியதில் பலர் சூடாகி விட்டார்கள்... :D

      அதை தணிவிக்கும் முகமாக இந்த அறிவித்தல்... வரும் மாதம் நிச்சயம் எழதுகிறேன்... அதற்குள் இன்னும் ஓரிரு நண்பர்களை பிடிக்க வேண்டிய கட்டாயம் !

      என்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஓல்ரெடி அந்த சங்கிலியில்இணைந்து விட்டார்கள்... யாரை இணைப்பது என்று தெரியவில்லை.. பதிவுலகில் இணைந்துஇரு மாதங்கள் தான் ஆகிறது... அதற்குள் இப்படியான சங்கிலிகளில் இணைக்கப்பட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான்...


      ஆகவே பதிவர் யாழினி நிலமையை புரிந்து மன்னித்தருள்வாராக.. :)

      வணக்கம்

    15. //என்னால வேற என்ன செய்யமுடியும்... அமைச்சர் பெ.இராதாகிருஷணனிடம் முறையிட்டிருக்கிறன்.. வாறன் எண்டுட்டு போனவ ஆளக்காணேல்ல நீங்கதான் பிடிச்சுத்தரோணும்... எண்டு //

      ஹீ...ஹீ.....



      //அப்பிடி யெண்டால் ஏதாவது பூச்சிய க்கொன்று எறும்புக்கு உணவாய்போடுவது... அவை அதை பாட் பாட்டாக வெட்‌டி ஊர்வலமாக கொண்டு போவதைப்பாத்து கொமன்ட்றி செய்வது... அதைத்தான் கோட்வேடாக அப்படி அழைப்போம்...//

      அடக் கடவுளே...!


      ஆனால் தங்களது எழுத்து நடை, இடையிடையே காணப்படும் நகைச்சுவைச் செருகல்கள் என்று பதிவு நன்றாகவே உள்ளது.

    16. @ ’டொன்’ லீ
      உம்மையெல்லாம் மந்துவில் பக்கம் கொண்டு போய் விடோனும்.....:-)) //

      நீங்கெல்லாம் சிங்கப்பூரிலயே ஆம புடிச்சாக்களில்லயோ? செங்சாலும் செயவீங்க கவனமாயிருக்கோணும்...
      :)

    17. @ யாழினி

      ஆனால் தங்களது எழுத்து நடை, இடையிடையே காணப்படும் நகைச்சுவைச் செருகல்கள் என்று பதிவு நன்றாகவே உள்ளத //

      ஹவ் சுவீட்! :) தாங்க்யூயூயூயூ!

    18. எனக்கு வலித்த வலியில் அப்பாவைப்பாத்த போது ஒரு பெரிய புருமச்சிலந்தி போலத்தெரிந்தார்.. //


      ஸப்பா...வேலைப் பளு... இப்போது தான் வாசித்து முடித்தேன்....

      என்ன கடியப்பா....ஆராய்ச்சி செய்கிறதுக்கு அளவேயில்லையே???

      இப்ப அரசாங்கமும் தமிழ் மக்கள் மீது ஏதோ ஆராய்ச்சி செய்வதாகக் கேள்வி...உண்மையாமோ??



      ஏன் புல்லட் பாம்பைப் பிடிச்சும் ஏதாச்சும் செய்திருக்கலாம் தானே?

      எங்களோடை ஒரு கூட்டாளி நின்றவர்...அவர் பாம்பைக் கண்டால் கலைச்சுப் பிடிச்சுக் வாலைப் பிடிச்சு ஒரு சுத்துச் சுத்திப் போட்டு ஒரே அமுக்கா அமுக்கிப் போட்டுக் கறி வைச்சுச் சாப்பிடுவார்....அவரோடை சேர்ந்து வேறு சில ஆட்களும் பங்கு போடுவீனை....ஆனால் என்ன எனக்குப் பார்க்க அருவருக்கும்???

      நான் உதெல்லாம் சாப்பிட்டதே இல்லை....

    19. அடப்பாவிகளா...கடி மன்னன் புல்லட்டையே கடித்த ஜெகஜ்ஜாலக் கில்லாடிக் கடியன்களா இவை?
      அது சரி எப்பிடி கடிச்ச உடனேயே படம் எடுத்து வச்சனீங்கள்? நீங்கள் கெட்டிக் காரன் தான்..;)

      இன்னுமொரு விஷயம்.. எங்கள் முன் வீட்டு நாயார் தன் படம் என் போடவில்லை என்று உங்களிடம் கேட்க சொன்னார்..

      இந்தப் பதிவில் நான் ரசித்த இன்னும் இரு விஷயங்கள்..

      உங்கள் sound குறிப்புகள்..
      //உர்ர்ர் ஸ்ஸ்ஸ்ஸியாஔவ்.........
      அம்மாஆஆஆஆஆஆ!.......
      &
      //” அண்ணா ஒப்பரேசன் எறும்புபிக்கேசன் செய்வமோ ?”...

      அப்பிடி யெண்டால் ஏதாவது பூச்சிய க்கொன்று எறும்புக்கு உணவாய்போடுவது... அவை அதை பாட் பாட்டாக வெட்‌டி ஊர்வலமாக கொண்டு போவதைப்பாத்து கொமன்ட்றி செய்வது... அதைத்தான் கோட்வேடாக அப்படி அழைப்போம்...
      //

      அது சரி அப்பர் பதிவு வாசிச்சவரே?

      //எனக்கு வலித்த வலியில் அப்பாவைப்பாத்த போது ஒரு பெரிய புருமச்சிலந்தி போலத்தெரிந்தார்.. :(

      இன்னும் எத்தனையோ என்னைப்பதம் பார்த்துள்ளன... நாய் , சுண்டெலி , அணில் , எறும்பு மயிர்க்கொட்டி மற்றும் பக்கத்துவீட்டுப்பெட்டை ( ;o) சும்மா ‌ )....//

    20. @ loshan:
      அட நீங்களும் கடிக்கிறீங்க :) நல்லம் நல்லம்!

      //இன்னுமொரு விஷயம்.. எங்கள் முன் வீட்டு நாயார் தன் படம் என் போடவில்லை என்று உங்களிடம் கேட்க சொன்னார். //

      அது என்ன கடிக்கா விட்டாலும, ஒருநாள் இல்ல ஒருநாள் , கட்டாயம் உங்கட முன்வீட்டு பாடகர கடிச்சு குதறாம விடாது! நானே ஒரு நாள் டைம் பாத்துக்கிட்டிருக்கன்..! ஆனா உங்கட குட்டிப் பெடியன்முந்திடுறானோ தெரியாது! :)

      //அது சரி அப்பர் பதிவு வாசிச்சவரே//

      ஹிஹி! இப்பதான் நம்ம காலில நாம நிக்கிறமே! இனிநோ பயம் ;)

      பின்னூட்டங்களுக்கு நன்றி லோசன் பையா! (ஹிந்திப்பா ஹிந்தி ;))

    21. லோசன் பையா/

      ??

      ஹிந்திப்பா ஹிந்தி ;))/

      சரிதான்..

      :))

    22. புல்லட், உங்களை இவளவு ஜந்துகள் கடிச்சது இருக்கட்டும்....
      உங்க உந்த பீப்பில்ஸ் பாக் பிளேகிறவுண்டில ஒவ்வொரு சனிக்கிழமை எண்டு நினைக்கிறன் உந்த லோஷன் பைய்யன் ரன்னுக் (cricket run) காக போடுற சண்டையை நீங்கள் பாக்கவேணும்.... பயல் அளாப்பி அளாப்பி ஒருமாதிரி வெண்டிடுவான் :)