இந்த தலைப்பில் எழுதுமாறு சக பதிவர் ஒருவர் வேண்டிய போது ஒரு சிரிப்பு என்னிடம் இருந்து வெளிப்பட்டது... காரணம் என்னவென்று கேட்டால் .... அதுக்கென்று ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது...
200x ம் ஆண்டு நல்லூர் கோவில் குட்டிச் சுவரில் தனியே இருந்து கவலையாக யோசித்து கொண்டிருந்தான் புல்லட்டு ....
பக்கத்தில் மூன்று நாளான் கள்ளை குடித்த முனியாண்டி போல விழுந்து கிடந்தது அவன் சைக்கிள்...
அவனுக்கு வீட்டுக்கு போக பயமாக கிடந்தது...
ஏனெனில் அன்றுதான் அவனது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வந்திருந்தன ....
மூன்று பாடங்களும் "A"...
அகில இலங்கையில் 11வது....
அற்புதமான பெறுபேறுதான்...
இந்த குழப்படிகாரனுக்கு அப்படி ஒரு பெறுபேறு கிடைககுமென யாரும் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்... ஏன் அவனே அப்படி வருமென நினைக்கவில்லை...
அப்புறம் எனனப்பா கவலை....?
நாசமறுந்த நொன் கிறடிற் பாடம் இங்கிலீசு... "S"
அப்பர் இண்டைக்கு கொல்லப்போறார்...
என்ட மானத்தை வாங்க வந்து பிறந்தியா எண்டு குதிக்கப்போறார்...
உன்ன இவளவு காசு கட்டி பெரிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதெதுக்கு எண்டு கத்தப்போறார்..
சேய்.... குறளிவேல காட்டாம ஒழுங்காஎழுதியிருக்கலாம்...
இப்ப அப்பர் றிகரக்சன் போடச்சொன்னா கட்டாயம் பெயில் பொட்டு அனுப்புவாங்கள்..
உள்ளத சொல்லவும் ஏலாது...
அட அப்பிடி என்னதான் செய்தனிடா குரங்குப்பயலே , கேவலம் S வாறமாதிரி..?
வேற ஒண்ணுமில்லீங்க...
அங்கயும் உதே தலைப்பிலதான் ஒரு கட்டுரை எழுதச்சொல்லிவந்தது...
"உங்களை கவர்ந்த நபரை பற்றி ஒரு கட்டுரை வரைக"...
கடைசி பாடம் ...
நொன் கிறடிற் வேற...
வயசுக் கோளாறு...
எக்ஸாம் முடிஞ்சதும் நிறைய குரங்குச்சேட்டையளுக்கு அடுக்கு பண்ணியிருந்தனாங்கள்...
எல்லாம் சேர்ந்து சூடாக்க ...
புல்லட் எழுதினது அவற்ற எக்சாம் ஹோல் சுப்பவைசர பற்றி...
அவருக்கு சனத் ஜெயசூரியா எண்டு பட்டம்... அவருக்கு அப்பிடி ஒரு தலை...
புல்லட் டும் எல்லாத்தையும் கலந்து அவற்ற மொட்டத்தலையத்தான் அவரிலயே மிகவும் பிடிக்கும் எண்டெல்லாம் எழுதி ஒரு காமெடிக்கட்டுரை ஒண்டை கொம்போஸ் பண்ணி அனுப்பி விட்டுட்டான்...
சும்மா பொய்க்கு சொல்லலீங்கொ... கடவுள் சத்தியமா அப்பிடித்தான் செஞ்சேன்..
விளைவு ”S”..
பெயில்தான் முதல்ல போட்டிருப்பாங்க ... பிறகு முன்னால நல்லமாக்ஸ் எடுத்த படியால பாவம் பிழச்சு போகட்டும்னு விட்டிருப்பாங்க... ம்ம்...
இப்பிடியெல்லாம் பட்டு தெளிஞ்சிருக்கம்.... அதுதான் யாழினியோட றிக் வெஸ்ட பாத்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனோம்...
ஆகவே இப்ப சீரியசாவே பதிவ போட்டுருவோம்... :)
Bear krylls

யாருலே இதுன்னு பாக்கிறீங்களா? இவரு என்னோட அபிமான சின்னத்திரை நட்சத்திரங்களில ஒருத்தர்... சும்மா வந்தமா ஆய் ஊய் எண்டு கத்தினமா இல்லாட்டி அரை மணித்தியாலமா நான்ஸ்டாப்பா அழுதமான்னு புரோக்ராம் செய்யுற நம்மட டமிழ் சின்னத்திரைகள பாத்து பழகின நம்மட சனத்துக்கு இவற்ற ப்ரோக்ராம பாக்க அலுப்படிக்கும் என்பது உண்மை...
இவர் செய்யுறது டிஸ்கவரி சனலில " man vs wild " எங்கிற ஒரு ப்ரோகிராம்... மனிதனால வெற்றி கொள்ளப்படாத கடுமையான இயற்கை ப்பிரமேசங்களில நீங்க தனிய மாட்டிக்கிட்டீங்கன்னா எப்பிடி தப்பிச்சு வரமுடியும்ன்னு செஞ்சு காட்டுற ஒரு பிரயோசனமான ப்ரொகிராம்தான் இது...
மனிதனோட அடிப்படைத் தேவைங்களான உணவு உடை உறையுள தப்பிக்கும் வரைக்கும் தேடுறது எப்பிடி...அப்பிடியே தப்பிக்கறதுக்கு சுருக்கமா வழி எதுன்னு சொல்லித்தார ப்ரோக்ராம்தான் இது...
சில வேளைகளில அருவருப்பா இருந்தாலும் தான் எடுத்துக்கிட்ட ஒரு தொழிலுக்காக இவளளவு தியாகத்தை செய்யக்கூடிய ஒராளை பாத்திக்கிட்டிருக்கிறதுல எனக்கொரு சந்தோசம்...
ஆளைப்பாத்ததில்லைன்னா கீழ காணொளில பாருங்க...
Genilia De Soysa
http://en.wikipedia.org/wiki/Genelia_D'Souzaஇவங்கள தெரியாதுன்னு யாரும் சொல்லமுடியாது... போய்ஸ் பாத்தப்ப பெரிசா பிடிக்கல... முகம் ரொம்ப அழகா இருந்துச்சு.. பிறகு சச்சின் பாத்தேன் ... அப்பவும் பெரிசா பிடிக்கல .... தொப்பையெல்லாம் வச்சு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு பாப்பா...
பிறகு அந்த பரத்து பயல்கூட என்னமோ ஒரு விசர்ப்படத்துல நடிச்சிருந்திச்சு... அதுக்கு பிறகு அவள மறந்தே போய்ட்டேன்..
அப்பதான் வந்துச்சு சந்தோஷ் சுப்பரமணியம்... ஆடிப்போய்ட்டேன்...
என்னமோ தெரியல... சொன்னா நம்ப மாட்டிங்க... ஒரு ௨0 தடவை டிவிடி பியயும் வரையும் பாத்துட்டேன்... தியேட்டரில மூணு தடவை....
நடிப்பின்ட ஒரு புது பரிமாணம்னெல்லாம் கனவில புசத்தினதா ப்ரெண்டஸ் சொல்வாங்க..
ஆள் உடம்பில் கவர்ச்சியில்ல... ஆனா முகம் ஒரு குதூகல குடம்.... அத பாத்தா ஒரு பரவசம்...
கம்ப்யுூட்டர் ஹாட்டிஸ“கில பாதி அவள் தொடர்பான சமாச்சாரங்கதான்... வேற ஒண்ணும் இல்லீங்க போட்டோசும் படமும் மட்டும்தான்... நினப்பபாரு...:) )
முத்திப்போய்.... ஒரு அரசியல் வாதி மகன் கூட அவள் டூ விட்டப்ப ப்ரெண்ட்சுக்கு பாட்டியெல்லாம் வச்சேன்... ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோசம்....
இப்ப அந்த க்ரேஸ் குறைஞ்சுட்டாாலும் அவள் நடிச்ச எல்லாப்படமும் பாத்துட்டேன்...
தெலுங்கில வந்த ஹப்பி எங்கிற படம் சூப்பர்... அதைதான் அழகிய தீயேன்னு நம்மடல சுட்டிருந்தாய்ங்க.... :)
இரண்டு பேரும் காணுமெண்டு நெக்கிறன்...
மேலதிகமா இப்ப என்ட மனதில வாற நண்பன் ஒருவன்...
நண்பன் சுகந்தன்....
அவன் ஒரு விடா முயற்சியின்ட சின்னம் எண்டு சொல்வன்... எடிற்றிங் டைரக்சன் தொடர்பா அவனுக்கிருக்கிற இயற்கையான சினிமா ஆற்றல் நான் எங்கும் காணாதது...
அதோட ஒரு முடிவு எடுத்தானெண்டால் பிறகு மாற மாட்டான்...
அவனது இரண்டாவது குறும் படம் பல்கலை பாதுகாவலர்களால் தடைப்படுத்தப்பட்டது...
வெறும் கத்தியை கொண்டு சென்றாலே கைது செய்யும் இந்த காலத்தில ஒரு பொம்மை துப்பாக்கியோட சூட்டிங் செய்யுற தைரியம் அவனுக்கு மட்டும்தான் இருக்கும் என்பது என் கருத்து...
எங்கயெங்கயெல்லாம் தன்ட கணணிய தூக்கிக்கொண்டு திரிந்தான்...
நாசமாப்போன நாட்டு நிலமையால அவன்ட கனவு தடைப்பட்டு போச்சு...
ஆனா அவன் தன்ட குறும் படத்தில சில பகுதியள குவாலிட்டிய குறைச்சு யூடியுப்பில போட்டிருக்கான்...
அதை இங்க போடுவதன் மூலம் அவனுக்கு ஒரு மரியாத செய்வதா நெக்கிறன்...
நீங்களும் கட்டாயம் அதை பாத்து பின்னூட்டி ஓட்டைக்குத்தி பலரை சென்றடைய செய்யுங்க... நன்றி...
41 Responses
யோ.....நன்றிகள்.......பதிவைப் படிச்ச பிறகு தான் மிச்சம் சொல்ல முடியும்??
கடைசியில் புல்லட் எழுதி விட்டார்.. முதல் தேர்வு வித்தியாசம்மட்டும் அல்ல அருமையும் நண்பா.. நல்ல நிகழ்ச்சிகளை தேடிப்பார்க்கிறீர்கள்.. குட்..
ம்......கெமிஸ்ரியிலை முதலாமிடமோ?? அப்ப நீங்களும் ஒரு காலத்திலை கலக்கின ஆட்கள் தான்???
எல்லாப் பதிவும் மாதிரி இதுலயும் கிண்டல் எல்லாம் நல்லா இருக்கு.. ஜெனிலியா எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
Are you trying to say that you are 200X batch person.... U kidding me right... Unganda writing style paatha oru 30 - 35 + elle pooda solluthu... annai.. poi sollathane... typing error endu solli mariyathaya mathungo 199X endu.. sariya.. naano illai matta aakalo kandu kolla maattam..
ஆள் உடம்பில் கவர்ச்சியில்ல... ஆனா முகம் ஒரு குதூகல குடம்.... அத பாத்தா ஒரு பரவசம்...//
ஸப்ப்பா....முடியல்லை......கவிதை எல்லாம் எழுதுறீங்கள் பாஸ்
Genilia did ok in sachine and she didnt have tummy... i dont know why ppl keep saying tat... i script was written for Jo... buaaaaaah.. I cant believe you wrote abt her.. yea she did really well in santhos subramaniam... i dont understand how ppl like her but when they see someone in real they tend to call her as something else.. is not tat unfair...
Triumph
March 20, 2009 4:04 PM Are you trying to say that you are 200X batch person.... U kidding me right... Unganda writing style paatha oru 30 - 35 + elle pooda solluthu... annai.. poi sollathane... typing error endu solli mariyathaya mathungo 199X endu.. sariya.. naano illai matta aakalo kandu kolla maattam..//
புல்லட்டின்ரை வயசை கூட்டுறதிலை சந்தோசத்தைப் பாருங்கோவன்??
சுகந்தன் நன்றாகத் தான் கலக்கியிருக்கிறார் புல்லட்...காட்சி அமைப்புக்கள் பிரமாதம்....
தொடரட்டும் சுகந்தன் பணி...சுகந்தனை எங்களுக்குக் காட்டிய புல்லட்டிற்கு நன்றிகள்.
புல்லட் கெட்டிக்காரப் பயல் போலத்தான் கிடக்கு..செஞ்சோன்சுல படிச்சு 3 A எடுத்தது எண்டா அதுவும் 2000 க்கு பிறகு...என்றால் சாதனை தான் பாருங்கோ...ஆனாலும் இங்கிலிசில் கோட்டை விட்டு...மானத்தை வாங்கிட்டார்.
ஹரிணியை எனக்கு பாய்ஸ் ஸிடில்ஸ் பார்க்கும் போதே பிடித்திருந்தது, அப்பவே நினைச்சனான்..உந்தப் பெட்டை நல்லா வரும் என்று...:-))))
டிஸ்கவரி, ஜியோகிராபி என்றெல்லாம் பார்க்கிறியள் நல்லது...இப்ப நான் டீவிக்கு முன் இருந்தால் இவை மட்டுமே பார்ப்பது....:-))
//மூன்று நாளான் கள்ளை குடித்த முனியாண்டி போல விழுந்து கிடந்தது அவன் சைக்கிள்//
ஏன் நீங்க குடிச்ச கள்ளு கூடிப்போய் சைக்கிள் டயருக்குள்ளயும் போயிட்டுதோ...?
கார்த்திகைப் பாண்டியன்
கடைசியில் புல்லட் எழுதி விட்டார்.. முதல் தேர்வு வித்தியாசம்மட்டும் அல்ல அருமையும் நண்பா.. நல்ல நிகழ்ச்சிகளை தேடிப்பார்க்கிறீர்கள்.. குட்..
எல்லாப் பதிவும் மாதிரி இதுலயும் கிண்டல் எல்லாம் நல்லா இருக்கு.. ஜெனிலியா எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
//
ரொம்ப நன்றி நவம்பர் பாண்டி சார்... உங்களுக்கும் ஜெனிலியாவ பிடிக்குமா? அப்புறம் எனக்கு போட்டியா வாற ப்ளான் ஏதாச்சும் இரக்கா? :)
ம்......கெமிஸ்ரியிலை முதலாமிடமோ?? அப்ப நீங்களும் ஒரு காலத்திலை கலக்கின ஆட்கள் தான்??? //
படிக்கறதெல்லாம் கலக்கிறதெண்டு சொல்லமுடியாது... அனா கலக்கினாங்கள்... ப்ரெண்டோட லவ்வருக்கு தூதுபோய் வட்டுக்கோட்டை அவளண்ட தேப்பன் காரன் பிடிக்க வர பஸ்ஸிலருந்து குதிச்சோடின கதையெல்லாம் கிடக்கு
ஸப்ப்பா....முடியல்லை......கவிதை எல்லாம் எழுதுறீங்கள் பாஸ்//
அதெல்லாம் கவிதையா? என்ன கொடுமை கமல் இது?
புல்லட்டின்ரை வயசை கூட்டுறதிலை சந்தோசத்தைப் பாருங்கோவன்??//
அண்ணா எண்டு கூப்பிட்டு அலுத்துப்போச்சாம்... மாமா எண்டு கூப்பிடப்போகுதாம் பிள்ளை... விடுங்களன் கமல் நம்மட ட்ரையம்தானே?
தொடரட்டும் சுகந்தன் பணி...சுகந்தனை எங்களுக்குக் காட்டிய புல்லட்டிற்கு நன்றிகள்.//
நிச்சயம் அவரை வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துவேன்...
Are you trying to say that you are 200X batch person.... U kidding me right... Unganda writing style paatha oru 30 - 35 + elle pooda solluthu... இதுக்கு பேசாம மூண்டு தரம் நல்லா காறி என் மூஞ்சில துப்பியிருக்கலாம்.. :)
annai.. poi sollathane... typing error endu solli mariyathaya mathungo 199X endu.. sariya.. naano illai matta aakalo kandu kolla maattam..
ஹிஹி
enilia did ok in sachine and she didnt have tummy... i dont know why ppl keep saying tat... i script was written for Jo... buaaaaaah..
அப்ப இருந்திச்சு இப்ப இல்ல...
:)
I cant believe you wrote abt her..
ஏம்மா நீயும் அவளை டாவடிக்கிறியா ? இல்லைதானே?
yea she did really well in santhos subramaniam... i dont understand how ppl like her but when they see someone in real they tend to call her as something else.. is not tat unfair...
அது உண்மைதான் லூசுங்க பாக்கதான் நல்லாருக்கும் கட்டிக்கல்லாம் சரிப்படாது...
பாவம் ட்ரையம்பு ப்ச் .... ( ஹேஹே கோவப்படாதேம்மா... சும்மா நக்கல் பண்ணேன்... :) )
புல்லட் கெட்டிக்காரப் பயல் போலத்தான் கிடக்கு..செஞ்சோன்சுல படிச்சு 3 A எடுத்தது எண்டா அதுவும் 2000 க்கு பிறகு...என்றால் சாதனை தான் பாருங்கோ...ஆனாலும் இங்கிலிசில் கோட்டை விட்டு...மானத்தை வாங்கிட்டார். //
செஞ்ஜோன்சுதானே செஞ்சோலயில்லதானே... அப்ப முடியும்
இங்கிலிசு கோட்டை கட்டுறது வழமைதானே...
//ஹரிணியை எனக்கு பாய்ஸ் ஸிடில்ஸ் பார்க்கும் போதே பிடித்திருந்தது, அப்பவே நினைச்சனான்..உந்தப் பெட்டை நல்லா வரும் என்று...:-))))//
நான் நல்லா வருவானே...
//டிஸ்கவரி, ஜியோகிராபி என்றெல்லாம் பார்க்கிறியள் நல்லது...இப்ப நான் டீவிக்கு முன் இருந்தால் இவை மட்டுமே பார்ப்பது....:-))//
சும்மா வுடாதீங்க.. அதில நார்மல் பறவைங்க மாத்திரம்தானே காட்டுவாங்க?நீங்கதானே பாரிய அபூர்வ பறவை ரசிகராச்சே?
//ஏன் நீங்க குடிச்ச கள்ளு கூடிப்போய் சைக்கிள் டயருக்குள்ளயும் போயிட்டுதோ...?//
நல்லா யோசிக்கிறாய்ங்கப்பா? நிங்கப்பூர்ல ரூம் வாடகை குறைவோ?
புல்லட் ரெம்ப விவகாரமான ஆளுதான்.. நல்லா இருக்கு.. பதிவுகளை வரும் நக்கல் அருமை
//இவர் செய்யுறது டிஸ்கவரி சனலில " man vs wild " எங்கிற ஒரு ப்ரோகிராம்...
அடப்பாவி.... அந்த வாயில்லாச்சீவன்கள் உன்னைக் கடித்ததற்காக இப்படியொரு பழிவாங்கல் பதிவா?
அது சரி, உங்கள் அறையில் நுளம்பு தொட்டு எந்தவொரு பறப்பன, ஊர்வன ஒன்றும் இல்லையாமே...
ஆஹா... கிழக்கில நாங்கள் செய்த கூத்தெல்லாம் நீங்கள் வடக்கிலையும் செய்திருக்கிறீன்களோ? எப்பவாவது ஒரு காகத்தை பிடிச்சு உங்க கட்சி கொடியை கட்டிவிட நினைச்சதில்லையா? வவ்வாள் பிடிச்சதில்லையோ? எங்க areavila கல்லுடைக்கிறதும் இருக்குது. அங்க தான் நான் விதம் விதமா ஜந்துகளைப் பார்க்கிறது... அந்த discoveryla அவரு திங்கிற ஜந்தை பிடிச்சு கோழிக்கேல்லோ நாங்க போடுறனாங்கள்???
// நசரேயன்
புல்லட் ரெம்ப விவகாரமான ஆளுதான்.. //
அய்யய்யோ ... நாமெல்லாம் ரொம்ப நல்ல பசங்க ஐயர்வாள்...
//நல்லா இருக்கு.. பதிவுகளை வரும் நக்கல் அருமை //
நீங்க உங்க ஏரியாவில பண்ற குசும்ப விடவா... அங்கிட்டு பின்னி பெடலெடுக்கிறீங்களே?
ஆளாலும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்... :)
// ஆதிரை
அது சரி, உங்கள் அறையில் நுளம்பு தொட்டு எந்தவொரு பறப்பன, ஊர்வன ஒன்றும் இல்லையாமே... //
சண்டைக்குபோக முன்னம் நமக்குள் இருக்கும் புல்லுருவிகளை ஒழிக்கவேண்டும்...
பல்லி பாம்புகளை போட்டுதள்ள முன்னம் உங்களுக்கு இன்பமேசன் தந்த ஐந்தாம் படையை போடாதது என்தப்பு...
;) சும்மாச் சொன்னேன்....
நான் அவற்றை கொல்வதுண்டு ஆனால் உண்பதில்லை பக்கத்து வீட்டில் பட்டினியால் தவிக்கும் எறும்புகளுக்கு போடுவதுண்டு... என்ன ஒரு இரக்க சிந்தை பார்த்தீர்களா?
//@ பிளாட்டினம்
ஆஹா... கிழக்கில நாங்கள் செய்த கூத்தெல்லாம் நீங்கள் வடக்கிலையும் செய்திருக்கிறீன்களோ? //
என்னப்பா இது யாழ்ப்பாணீ என்ன யப்பானிலருந்தா வந்தவன்? நாமளும் தமிழங்கதான்பா... நீங்கல்லாம் தேனீ.கொம் வாசிச்சு அதிலும் முக்கியமா அந்த முஸலிம்களெண்ட கட்டுரைய வாசிச்சு கெட்டுபொய்ட்டீங்க... இருந்து பாருங்க அந்த யஹியா வாஸித் எண்டவனுக்கு இருக்கு ஒருநாள்...
//எப்பவாவது ஒரு காகத்தை பிடிச்சு உங்க கட்சி கொடியை கட்டிவிட நினைச்சதில்லையா? //
எங்களுக்கெல்லாம் உவளவு விஞ்ஞானகரமான மூளை இல்லப்பா.. :(
// வவ்வாள் பிடிச்சதில்லையோ? //
எங்களுக்கு வாளக்கண்டாலே வயத்த கலக்கும் அதில எங்கேங்க உங்கட வவ்வாளப்பிடிக்கிறது...
//எங்க areavila கல்லுடைக்கிறதும் இருக்குது. அங்க தான் நான் விதம் விதமா ஜந்துகளைப் பார்க்கிறது... அந்த discoveryla அவரு திங்கிற ஜந்தை பிடிச்சு கோழிக்கேல்லோ நாங்க போடுறனாங்கள்???//
நீங்க புழுவத்திங்கிற கோழியத்திங்கிறீங்க... அவரு நேரடியா புழுவையே திங்கிஙாரு... பாக்கப்போனா அவருதான் புத்திசாலி... வன்னில அந்த புழு கூட இல்லியாம் ப்ச்... :(
:) thanks for the comments
// Triumph
March 20, 2009 4:04 PM Are you trying to say that you are 200X batch person.... U kidding me right... Unganda writing style paatha oru 30 - 35 + elle pooda solluthu... annai.. poi sollathane... typing error endu solli mariyathaya mathungo 199X endu.. sariya.. naano illai matta aakalo kandu kolla maattam..//
Triumph நீங்கள் அப்படியோ நினைத்தனீங்கள் நான் நினைச்சன் பிள்ளையட வாயில இருந்து இன்னும் சூப்பிப் போத்தலே வெளியால எடுக்கல எண்டல்லோ (LOL)
பதிவு அருமை அட்டகாசம்...
சுகத்தன் போன்றவர்களினது திறமைகளினை வெளிக்கொண்டுவரும் புல்லட்டுக்கு ஒரு ஜே!
யாழினி
Triumph நீங்கள் அப்படியோ நினைத்தனீங்கள் நான் நினைச்சன் பிள்ளையட வாயில இருந்து இன்னும் சூப்பிப் போத்தலே வெளியால எடுக்கல எண்டல்லோ (LOL)//
க்கும்... இதுக்கு ட்ரையம்பே பரவாயில்ல... :(
// பதிவு அருமை அட்டகாசம்...//
//சுகத்தன் போன்றவர்களினது திறமைகளினை வெளிக்கொண்டுவரும் புல்லட்டுக்கு ஒரு ஜே!//
நன்றி யாழினி... But , வரவர லேட்டா வாறீங்கள்... பிறகு பூசை பலமாயிருக்கும் :)
உவா் சுகந்தனைப்பற்றி முதலும் மாயா எழுதியிருந்தார்.
தமிழனாய் பிறந்தால் எல்லாவிதத்திலையும் கஷ்டம் தான்.
இது பற்றி மேலும்:- http://arangkam.blogspot.com/2008/07/blog-post.html
நல்ல தொகுப்பு டிஸ்கவரியில் இதை நான் பார்க்கவில்லை!!
ஹரிணி பிரமாத அழகியல்லவெனினும் அவர் நடிப்பு அருமை!
புல்லட் பாண்டி said...
ஐயே! புல்லட்டோட குரல் இப்பிடியா இருக்கும்.... இது தெரிஞ்சிருந்தா அவன் பேட்டியே குடுத்துருக்க மாட்டானே... கொஞ்சம் நீண்டுதான் போச்சு... அடுத்தமுறை கொஞ்சம் சோட் அண்ட் சுவீட்டா செய்யலாம்... என்ன கமல்?
யாழினி டான்லீ உங்களுக்கெல்லாம் ஒரு நக்கல' வேண்டிக்கிடக்கோ? பொறுங்க வாரன்...
அப்புகுட்டிதான் ஹீரோ... சுப்பரா செஞ்சிருக்கார்...//
அண்ணை உதென்ன வேலை?? நான் ஹீரோவோ??? என்னைப் போயி...???
என்ன தான் சொன்னாலும் நீங்கள் தான் இந்தக் குரல் பதிவோடை சூப்பர் டூப்பர் ஹீரோ.... கதையை விட்டிட்டுக் கையைக் குடுங்கோ.....
உங்கடை நகைச்சுவைக்கு முன்னுக்கு நாங்கள் எல்லாம் தூசு.....
Annooooooooooooooooooooooooooooi, R u alive... Come on post article every day. at least every other day... You are not posting any so I tried checking other blogs and one fella has posted pic of Ramarajan & Someone with comments.. Athellam paarthu ekka sakka tension and tears... Pesama neengale niraya ezhuthungo sariya.. :D
adappavingala... I didnt follow up the comments for sometime. must read...... will get back to you guys soon.. Have to run for class... Night 11 pm varai class.. Kodumai da..
@ Darmaraj(A) Darma//
உவா் சுகந்தனைப்பற்றி முதலும் மாயா எழுதியிருந்தார்.
இது பற்றி மேலும்:- http://arangkam.blogspot.com/2008/07/blog-post.html//
அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் :)
தமிழனாய் பிறந்தால் எல்லாவிதத்திலையும் கஷ்டம் தான்.//
அது வெளிப்படை உண்மையாச்சே... :)
@ thevanmayam
நல்ல தொகுப்பு டிஸ்கவரியில் இதை நான் பார்க்கவில்லை!! //
செவ்வாய் வெள்ளி சனிகளில் இரவு 9 மணிக்கு
ஹரிணி பிரமாத அழகியல்லவெனினும் அவர் நடிப்பு அருமை!//
லைப்பில எந்த பொண்ணும் அவளளவுக்கு குழப்பினதில்ல என்ன... :) அவளோட முகபாவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. சின்ன பிள்ள மாதிரி...ஹ்ம்.. :)
@ அப்புக்குட்டி
அண்ணை உதென்ன வேலை?? நான் ஹீரோவோ??? என்னைப் போயி...???
என்ன தான் சொன்னாலும் நீங்கள் தான் இந்தக் குரல் பதிவோடை சூப்பர் டூப்பர் ஹீரோ.... கதையை விட்டிட்டுக் கையைக் குடுங்கோ.....
உங்கடை நகைச்சுவைக்கு முன்னுக்கு நாங்கள் எல்லாம் தூசு.....//
அவையடங்குறியள்... ஆனா உங்கள அடிக்க யாராலும் ஏலாது கண்டியளோ? நீங்கள் மீள யாழ் வந்து இங்குள்ள ரேடியோ வழிய களைகட்டொணும்மெண்பது என் வீருப்பம்.. பாப்பம்.. :(
@ Triumph
Annooooooooooooooooooooooooooooi, R u alive...
ஏனிந்த சந்தேகம் பாசமலரே ?:)
Come on post article every day. at least every other day...
கிழிஞ்சுது போ ! பிறகு ரோட்டில நிண் பிச்சைதான் எடுக்கோணும்...
You are not posting any so I tried checking other blogs and one fella has posted pic of Ramarajan & Someone with comments.. Athellam paarthu ekka sakka tension and tears...
அடடே நல்லாருக்கும் போல கிடக்கு லிங்க எனக்கும் அனுப்பிவிடன் பிள்ள :)
Pesama neengale niraya ezhuthungo sariya.. :D
புல்லட் இந்த அவமானம் உனக்குத் தேவையா?
adappavingala... I didnt follow up the comments for sometime. must read...... will get back to you guys soon.. Have to run for class... Night 11 pm varai class.. Kodumai da..
இரவிரவா வகுப்பா? இதென்னது எங்கட ஓர் பிரசங்கத்த விடமோச மாக்கிடக்கு..:) இல்லாட்டி ஏதாவது நைட் கிளப்பதான் கிளாஸ் எண்டு கோட்வேடா சொல்லுறனீங்களோ? :) (jst kidin)
//செஞ்ஜோன்சுதானே செஞ்சோலயில்லதானே//
இப்ப எதுக்கு செஞ்சோலையை இங்க இழுக்குறியள்... அந்த பிள்ளையள் நல்லா தான் படிக்குங்கள். அவயின்ட இங்கிலிஷ் ஸ்டான்டட் எங்கன்டய விட நல்லது.
//ஏம்மா நீயும் அவளை டாவடிக்கிறியா ? இல்லைதானே? //
என்ன நக்கலா... வேண்டாம்.. என்ட "friend" இட்ட சொல்லுவன்.. ஹாஹா..
//அது உண்மைதான் லூசுங்க பாக்கதான் நல்லாருக்கும் கட்டிக்கல்லாம் சரிப்படாது...//
வவ்வ..வவ்வ வவ்வ வவ்வ
ஒரு கேனை "அண்ணா" என்டு கிடைச்ச மாதிரி ஒரு கேனை பாட்னர் கிடைக்காமலா இருக்கும்... யூ டோன் வொரி அண்ணாய்... (Was thinking so much to type keenai.. Just joking)
/புல்லட் இந்த அவமானம் உனக்குத் தேவையா?//
ஐய்யோ அண்ணாய், சும்மா சொன்னான்... ஹிஹிஹிஹிஹிஹி...
//இரவிரவா வகுப்பா? இதென்னது எங்கட ஓர் பிரசங்கத்த விடமோச மாக்கிடக்கு..:) இல்லாட்டி ஏதாவது நைட் கிளப்பதான் கிளாஸ் எண்டு கோட்வேடா சொல்லுறனீங்களோ? //
புரொப்பசர் 2 கிழமை கட் அடிச்சதால் இன்டைக்கு இரவு 12 மணிக வரை கொடுமை செய்து போட்டார்.. அருமையான புரொப்பசர் பாடம் நடத்தும் அழகே தனி... என்க்கு என்ட அப்பா படிப்பிக்கிற மாதிரி இருக்கும்... அவ்வளவு சுவாரசியமாக நடத்துவார்.. .. 5 தொடக்கம் 7 வழமையாக வகுப்பு...
பிறகு அண்ணோய்,நைட் கிளப் 11 மணிக்கு தான் ஆரம்பிப்பதே... இவ்வளவு அப்பக்கோப்பையாக இருக்குறியளே... ஹாஹா.... இது எப்படி...
ட்ரையம் என்ன கொக்கா... ஹா ஹா ஹா.. வயிறு வலிக்குது.... ஹை ஹை.. வழியுது.. அசடு.. நல்லா துடையுங்கோ....
யாழினி:
//Triumph நீங்கள் அப்படியோ நினைத்தனீங்கள் நான் நினைச்சன் பிள்ளையட வாயில இருந்து இன்னும் சூப்பிப் போத்தலே வெளியால எடுக்கல எண்டல்லோ (lol)//
என்ன யாழினி, இவ்வளவு வாய் நீளம் பால் குடியளுக்கு இருக்கா... ஆனாலும் நீங்கள் இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கக் கூடாதப்பா...
நல்லா காமெடி கலந்து எழுதுறீங்க ...யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் அழகு
நான் தான் இந்த "எனக்கு புடிச்சவங்க" தொடரை பிள்ளையார் சுழி போட்டு சுளிச்சு வச்சேன்...எங்க எல்லாம் போகுதுன்னு பார்க்கும் பொது சந்தோஷமா தன் இருக்கு...
@ Triumph //
இப்ப எதுக்கு செஞ்சோலையை இங்க இழுக்குறியள்... அந்த பிள்ளையள் நல்லா தான் படிக்குங்கள். அவயின்ட இங்கிலிஷ் ஸ்டான்டட் எங்கன்டய விட நல்லது.//
அய்யோ அந்த பிள்ளையளிண்ட வசதி வாய்ப்பு குறைவெண்டு எங்கள விட சொல்ல வந்தன்... :(
//பிறகு அண்ணோய்,நைட் கிளப் 11 மணிக்கு தான் ஆரம்பிப்பதே... இவ்வளவு அப்பக்கோப்பையாக இருக்குறியளே... ஹாஹா.... இது எப்படி...//
என்னது அப்பக்கோப்பையா? உதென்ன புது உருவகமாக்கிடக்கு..
எனக்கென்னண்டப்பன் தெரியும் நைட் கிளப்பபற்றி... நைட் எண்டால் இரவு 8 மணிக்கு பிறகு என்பது என் கருத்து..
உதுக்கெல்லாம் போற ஐடியாவில இல்லை.. சும்மா கிடக்கிற சங்க ஏன் ஊளதுவான் ? :)
//ட்ரையம் என்ன கொக்கா... ஹா ஹா ஹா.. வயிறு வலிக்குது.... ஹை ஹை.. வழியுது.. அசடு.. நல்லா துடையுங்கோ....//
ஓகே ஓுகே அவமானம் accepted... காணும் சிரிச்சது.. :@
@ நிலாவும் அம்மாவும்
நல்லா காமெடி கலந்து எழுதுறீங்க ...யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் அழகு//
நன்றி நன்றி :)
//நான் தான் இந்த "எனக்கு புடிச்சவங்க" தொடரை பிள்ளையார் சுழி போட்டு சுளிச்சு வச்சேன்...எங்க எல்லாம் போகுதுன்னு பார்க்கும் பொது சந்தோஷமா தன் இருக்கு...//
ஓஓஓ.... அது நீங்களா? உங்கள ஒருக்கா போட்டுத்தள்ளோணும்! எப்ப அப்பாய்ன்மெண்ட் எடுக்கலாம் ? :@
கடவுளே.. சங்கிலில கோக்கிறதுக்கு ஆளில்லாம நான் பட்ட பாடு?
ஒரு அஞ்சாறு பேரோட சிவனே எண்டிருந்த என்னை தெருத்டிதருவா பதிவங்கள தேடி ஓட விட்டுட்டுது யாழினி எண்ட பிள்ளை... இப்ப ஆட்சேர்ப்பு முயற்சியில ஈடுபட்டிருக்கன் அடத்த சங்கிலியிலயாவது கேவலப்படாம இருக்க :)
oh shoot... sorry.... abt cencholai.. :-( really am sorry... I was wondering how you are talking abt them..
//என்னது அப்பக்கோப்பையா? உதென்ன புது உருவகமாக்கிடக்கு.. // dont you know tat word "அப்பக்கோப்பை" its like pannaadai... he he...
//எனக்கென்னண்டப்பன் தெரியும் நைட் கிளப்பபற்றி... நைட் எண்டால் இரவு 8 மணிக்கு பிறகு என்பது என் கருத்து..
உதுக்கெல்லாம் போற ஐடியாவில இல்லை.. சும்மா கிடக்கிற சங்க ஏன் ஊளதுவான் ? :)//
Nambittan... he he... you know if i believed it or not..
//:@//
:D :D :D :D
உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்
உங்கள் வலைதளத்தை தரவரிசைப்படுத்த (page-rank)
tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி
செம கலக்கல் புல்லட்..
நீங்கள் எஸ் எடுத்ததுக்கு நான் உண்மையிலேயே கவலைப்பட்டேன்..
குறும்புகளுக்கு அளவே இல்லையா?
எனது நண்பர் ஒருவர் உங்களைப் பார்த்தால் டிஸ்கவரி பார்ப்பவர் போலவே இருக்கென்று சொன்னது இப்போ ஞாபகம் வந்தது.. ;)
ஜெநீளியாவிற்கு என்னையும்.. சரி.. ஜெனீலியாவை எனக்கும் பிடிக்கும்.. ;)
//ஜெநீளியாவிற்கு என்னையும்.. சரி.. ஜெனீலியாவை எனக்கும் பிடிக்கும்.. ;)//
Does anni know abt it loshan anna?
Post a Comment