அடிக்கடி ஒரு ஜீவன் : இன்று லயர் பேட்

    1932 ஆம் ஆண்டு.... விக்கியம்மா வீட்டுக்கு பின்னா‌டி ஒரு கோஷ்டி கான சபா... முக்கா மணியாகியும் சளைக்காம ஒருத்தர் பாட்டுபாடி டான்சு பண்ணிக்கிட்டிருந்தார்.... கூடவே பார்வையாளர்களிண்ட பரவசம் வேற...

    ப்ச்.. இதில என்னப்பா இன்டரஸ்ட்டு எண்டு கேக்கிறிங்களா?

    ஹிஹி... நிஜத்தில பாடிக்கிட்டிருந்தது ஒரு பறவை... கீழ இரக்காரு பாருங்க அவருதான்...


    ஆடிக்கிட்டிருந்ததும் அதே பறவைதான்...

    ஆனா...
    பார்வையாளர்களா களேபரம் பண்ணணிக்கிட்டிருந்த அணில் , சிட்டுக்குருவி , அந்த குருவி , இந்த குருவி மற்றும் , நடுவில வேற யாரோ போட்டோ கூட எடுத்துகிட்டிருந்தாங்களே? எங்கேங்க அவங்கெல்லாம்? யாரையும் காணமே? நாம வந்ததும் ஓடிட்டாங்களா?

    அடடே குழம்பாதீங்க நண்பா...
    அப்பிடி பலபேரில பப்ளிசிட்டி பண்ணிகிட்டிருந்ததும் அதே மல்டிபிள் பேசனாலிட்டி பறவைதானுங்கோ!

    இதென்னடா இது... நம்ம பதிவுக்கு தாமே இன்னொரு ‌ பேரில கமண்டெழுதி ஓட்டுப்போடுற பதிவர் கேசுகளிண்ட கதை மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?

    அப்பிடி எல்லாம் இல்லீங்க...
    அந்த பறவையோட பேரு Lyrebird ... அதாவது யாழ்ப் பறவை...

    அடஅட அவசரப்படாதீங்க... அதுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல... அது இருக்கறது நம்மட மெல்போன்கமல் வீட்டுப்பக்கமா... அது அவுஜ்திரேலியாவில வாழிற ஒரு வகைப்பறவை கண்டியளோ! ஓரு மயில் சைஸ் வரக்கூடிய ஆண்பறவையோட வால் வந்து இசைக்கருவி யாழ் ஷேப்பில இருக்கும்... அதுதான் அப்பிடி ஒரு பெயர்... (Lyre என்டா யாழ் )

    ஆனா அந்த பறவை மச்சானில ஒரு விசே ஷம் என்ன கண்டியளோ? அவர் நல்லா மிமிக்ரி செய்வார்...
    எந்த சத்த‌த்தை கேட்டாலும் அத காப்பியடிச்சு ஒரு ரிப்பீட்டு போட்டிருவார்... இதால காட்டில இருக்கிற ஒரிஜினல் சவுண்டு மேக்கருகளுக்கு கடும் கடுப்பு... ஏன் இவர் நம்மை காப்பியடிக்கிறார் எண்டு விசாரிக்கபோனா...

    பாவம் அவர் ... தான் சைட் அடிக்கிற பொம்பிளையை மடக்க வேணுமெண்டால் , அவாவுக்கு புல்லரிக்கும் வரைக்கும் பலவிதமான சங்கீத ஆலாபனை செய்து கடுமையான கமகங்களோட பல பண் , சுருதியோட பாடி ஆடவேணும்... இல்லாட்டி அவளவுதான் .. பக்கத்து பத்தை குப்பன் தோசைய வாத்திடுவான்.. இப்பிடி உயிர் போற பிரச்சனை அவருக்கு.. :)

    அதுக்காகத்தான் தலைவர் தான் கேக்கிற சவுண்டெல்லாத்தையும் அப்பிடிுயே ரெக்காட் பண்ணி , இப்பத்தைய ரேடியோக்கள் மாதிரி ஒரு கர்ணகரடூரமா மிக்ஸ் பண்ணி , தன் சுயம்வரத்தில் அரங்கேற்றுவார்...
    பாவம் அப்பிடி செய்தாத்தான் கடைசி காலத்தில அவருக்கு கொள்ளி வைக்க ஒரு பையன் கிடைப்பான்... ப்ச்.... :(
    (எவ்ளோ கொடுமை... ஆண்கள் எங்கயுமே பரிதாபத்துக்குரியவங்கதான்...)



    கீழ பாருங்க ஆள் எப்படி எப்டி ‌ கலபுல்லாயிருக்குன்னு...... இருந்தும் எவ்ளோ பிரச்சனை :(




    ”அடடே அழகாயிருக்கே! ஒண்ண பிடிச்சு கொணடு வந்தா பிலிம் காட்டி பக்கத்து வீட்டு பிகர மடக்கலாமே.....” அப்பிடீன்னு யோசிக்கிறீங்களா? கவனம் பாஸ்
    ...காட்டு வாழ்பிராணி. .. கொத்திக் குடல் குந்தாணியையெல்லாம் புடுங்கிரும் ...
    அப்புறம்.....
    முக்கியமா உந்த கலைஞர் டிவிக்கு சொல்லிடாதீங்க.. கலக்க போவதுயாருக்கு போட்டியா ப்ரோக்ராம் பண்றேன் பேர்வழின்னு உந்தக்கோழியப்பிடிச்சு சாம்பியனாக்கிடுவாங்க.. கிக்கி... :)

    பதிவ வாசிச்சமா படத்த பாத்தமா பத்து பேருக்கு சொன்னமான்னு மாட்டர விட்டுரணும்... என்ன நான் சொல்லுறது? :)

    ச‌ரி... நம்மட பிபிசி புகழ் அட்டன்ப்ரோ (David Attenborough
    ) தயாரிச்ச கிளிப்பொண்டு யு டியுப்பில அகப்பிட்டுது பாத்து ரசிங்க...
    டிஜிட்டல் கமெரா அனொலக் கமெரா மரமரியுற சத்தம் எண்டு தான் கேட்ட சத்தமெல்லாம் போட்டு ச்சும்மா ரணகளப்படுத்துது பறவை...



    தொடர்ந்து விலங்குகளை பற்றி எழுதுற ஐடியா இருக்கு.. உங்கட அறிவுரையள பின்னூட்டா எதிர்பாக்கிறன்... முடிஞ்சா ஓட்ட குத்தி பலர் பாக்கிறாப்பல செய்ங்க.. :)












    31 Responses

    1. அருமையான ஆய்வுக் கட்டுரை..அதை நக்கல் நளினத்துடன் சொன்ன விதம்....இன்னும் அழகு...

      பறவைகள் உண்மையில் அழகு தான்...அவைகளில் ஆண்கள் இப்படி மனிதனுக்கு விதி விலக்காக இருக்கினம்...(அழகாக...)

    2. அருமை :)

    3. பெரிய விலையாட்டுக்காரர் போல என்னமா சவுன்வுடுறாரு!

      நல்ல தகவல். தொடர்ந்து தாங்க. டிஸ்கவரியில் தான் பாக்கமாட்டோம் இங்காவது பாக்கலாமே!

    4. தேடிப் பிடிச்சு எழுதி இருக்கேங்க.. நல்லா இருக்கு புல்லட்..

    5. நல்ல முயற்சி புல்லட் தொடருங்கள்

    6. ada.. nanna irukku... go ahead :-)

    7. கண்டேயளா/////

      கண்டுகிட்டோம்ல..

      நல்லா இருக்குங்க.....நம்ம யாழ் பறவை பேரைப் போலவே அழகாவும் இருக்கு ..

      எழுதுங்க..படிக்கத் தானே நீங்க இருக்கோம்

    8. //தொடர்ந்து விலங்குகளை பற்றி எழுதுற ஐடியா இருக்கு//
      ஆமா என்னப்பத்தி நல்லா எழுதுங்க

    9. @ ’டொன்’ லீ
      அருமையான ஆய்வுக் கட்டுரை..அதை நக்கல் நளினத்துடன் சொன்ன விதம்....இன்னும் அழகு...//

      நன்றிகள் முன்னூட்ட புகழ் டான்லீ :)

      பறவைகள் உண்மையில் அழகு தான்...அவைகளில் ஆண்கள் இப்படி மனிதனுக்கு விதி விலக்காக இருக்கினம்...(அழகாக...)//

      அடடா! யாரப்பா சொன்னது... ஓரினத்து ஆம்பிளைங்களுங்கு அதுங்க இனத்து பொம்பள வடிவாத்தெரியும்... அது கடவுள் செஞ்ச சதி.. இல்லேன்னா எவன் குட்டி போடறத பற்றி சிந்திப்பான்.. ஆ அது ரொம்ப கஷ்டம்பா ஏலுமென்னா பக்கத்து வீட்டு காரன கேட்டுபாரேன்னுட்டு வீடியோ கேம் விளாண்டுக்கிடடிருப்பான்..

      இதையே வேற இனம் உதாரணத்துக்கு ஒரு யானை மனுசன பாத்துச்சுதென்டா பொம்பளயப்பாத்து வாந்தி எடுக்கும்... நாம சேவல் அழகு கோழி அசிங்கம்னு சொல்றதில்லயா?நல்ல காலம் அதுங்களு்கு மேக்கப் போடத்தெரியாது.... :)

      ஆகவே தலை நிழிருங்க பாஸ்... :)

    10. @ ♥ தூயா ♥ Thooya ♥

      அருமை :) //
      நன்றி அடிக்கடி வாங்க.. :)

    11. ___//பார்வையாளர்களா களேபரம் பண்ணணிக்கிட்டிருந்த அணில் , சிட்டுக்குருவி , அந்த குருவி , இந்த குருவி மற்றும் //___

      மறுபடியும் நம்ம இளைய (?) தளபதியோட
      குருவியோன்னு பயந்துட்டேன்
      ஹி ஹி ஹி

      நல்ல முயற்சி...
      கலக்குங்க பாண்டி ...
      (எதுக்கு டம்ளர்-லாம் எடுத்து வெக்குறீங்க ?
      நான் கலக்குங்க-ன்னு சொன்னது
      மேற்கொண்டு பதிவு எழுதி...)

    12. @ கலை - இராகலை

      பெரிய விலையாட்டுக்காரர் போல என்னமா சவுன்வுடுறாரு! //

      அப்பாடி! பெரிய மிமிக்ரி புயல் பாருங்கோ! தமிழ் கதைக்க விட்டா எங்கட ஜனாதிபதி தோத்துபபோவார் :)

      நல்ல தகவல். தொடர்ந்து தாங்க. டிஸ்கவரியில் தான் பாக்கமாட்டோம் இங்காவது பாக்கலாமே!//

      கட்டாயம் தாரன்..
      ஊளக்கமளிக்கும் பின்னாட்டத்துக்கு நன்றிகள்... :)

    13. @ கார்த்திகைப் பாண்டியன்

      தேடிப் பிடிச்சு எழுதி இருக்கேங்க.. நல்லா இருக்கு புல்லட்..//

      நன்றி சேர்..

      தேடிப்பிடிக்க வேண்டிய தேவையிருக்கேல்ல . சின்ன வயதிலயே உந்த பறவைய பற்றி தெரியும்... ஏதோ ஒரு TinTin புத்தகத்தில captain Haddock ஐ உந்த பறவை துவக்குச்சத்தம் போட்டு ஏமாத்துறமாதிரி வருகுது... அப்ப அப்பாட்ட கேட்டபோது உதை அறிமுகப்படுத்தினவர்.. :)

    14. @ குடுகுடுப்பை

      நல்ல முயற்சி புல்லட் தொடருங்கள் //

      நன்றி குடுகுடுப்பை சார்...

    15. @ நிலாவும் அம்மாவும்

      கண்டுகிட்டோம்ல..//
      கண்டுட்டீங்களா...சந்தோசம் ..
      ஆமா உங்கள நான் கண்டதேயில்லயே? இவளவு நல்லா எழுதுறீங்க?
      எங்கேங்க ஒளிச்சிருந்தீங்க... நிலா ரொம்ப அழகாயிக்கு சுத்தி போடுங்க.. :)

      நல்லா இருக்குங்க.....//

      நிரம்ப நன்றி :)

      நம்ம யாழ் பறவை பேரைப் போலவே அழகாவும் இருக்கு ..//

      யாழ் அழகாயிருக்கா ? யார் சொன்னது? :)

      எழுதுங்க..படிக்கத் தானே நீங்க இருக்கோம்//

      அப்படியா... அப்புறம் என்ன எழுதிடுவோம்.. :)

    16. @ நசரேயன்

      ஆமா என்னப்பத்தி நல்லா எழுதுங்க //

      அடடே என்ன ஒரு ஆழ்ந்த அறிவு..
      மனிதனும் ஒரு விலங்குங்கிறதைசொல்லாம சொல்லிட்டீங்களே? உங்களுக்கு என்ன தரலாம்?
      ம்ம்... சரி ஒரு நொபலுக்கு சிபாரிசு செய்யுறன்.. :)

    17. @ R.kajendra

      well....
      cary on //
      நன்றி ...

      தொடர்வேன் :)

    18. @ மோனி

      ___//பார்வையாளர்களா களேபரம் பண்ணணிக்கிட்டிருந்த அணில் , சிட்டுக்குருவி , அந்த குருவி , இந்த குருவி மற்றும் //___

      மறுபடியும் நம்ம இளைய (?) தளபதியோட
      குருவியோன்னு பயந்துட்டேன்
      ஹி ஹி ஹி //

      அந்தநாசமாப்போன குருவி வந்திருந்தா அது மட்டும்தான் கத்திக்கிட்டிருந்திருக்கும்..
      மிச்சப்பறவைங்கெல்லாம் ஆசுப்பத்திரல அட்மிட் ஆயிருக்கும் :)


      நல்ல முயற்சி...
      கலக்குங்க பாண்டி .. //

      பண்ணிட்டாப் போச்சு... நன்றிங்க.. :)

      //(எதுக்கு டம்ளர்-லாம் எடுத்து வெக்குறீங்க ?
      நான் கலக்குங்க-ன்னு சொன்னது
      மேற்கொண்டு பதிவு எழுதி...) //

      அது டம்ளர் இல்லீங்க... வாளி...
      நீங்க கலக்குங்க ன்னு சொன்னத நம்ம வயிறு தனக்குதான்னு நெனச்சுக்கிட்டுது.. :(

    19. @ Triumph

      ada.. nanna irukku... go ahead :-) //
      :0 அப்பிடியா?! தாங்யூ! :)
      யூ ஆர் ச்சோ ச்சவீட் ! :)

    20. ஆஹா... பதிவு அருமை!

      ஆனால் ஏன் தங்களுடைய Comment Reply(Ash Colour Pages) என்னுடைய கணணியில் தெரியமாட்டென்குது?

    21. இதென்னடா இது... நம்ம பதிவுக்கு தாமே இன்னொரு ‌ பேரில கமண்டெழுதி ஓட்டுப்போடுற பதிவர் கேசுகளிண்ட கதை மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?//



      யோ எங்கை போனாலும் இதுகளை விடமாட்டீங்களே??? எப்பிடி பாஸ்?? இப்பத்தான் நான் இந்தப் பக்கம் வந்திருக்கிறன்??ம்

    22. அடஅட அவசரப்படாதீங்க... அதுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல... அது இருக்கறது நம்மட மெல்போன்கமல் வீட்டுப்பக்கமா... அது அவுஜ்திரேலியாவில வாழிற ஒரு வகைப்பறவை கண்டியளோ! //


      என்னத்தைக் கண்டியளோ?? நானே இங்கை கங்காருவுக்குச் சாப்பாடு போட ஏலாமல் பரிதவிக்கிறன்? அதுக்கை வேறை பறவையளோ??


      புல்லட் நீங்களே முந்திச் சஞ்சீவியிலை ‘அங்கிகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று எழிதினீங்கள்??? வெட்கத்தை விட்டுச் சொல்லுங்கோ??

    23. தொடர்ந்து விலங்குகளை பற்றி எழுதுற ஐடியா இருக்கு.. உங்கட அறிவுரையள பின்னூட்டா எதிர்பாக்கிறன்... முடிஞ்சா ஓட்ட குத்தி பலர் பாக்கிறாப்பல செய்ங்க.. :)//


      நல்ல முயற்சி புல்லட்...தொடர்ந்தும் ஆக்கபூர்வமான நல்லபல அறிவியற் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்... இஞ்சை உப்பிடி நிறைய அயிட்டங்கள் இருக்கு? ஒரு 110 டொலர் குடுத்து சவுத் ஒஸ்ரேலியாவுக்குப் போய்க் கக்கடு பாக்கிலை இறங்கினால் நிறைய வித்தையள் பார்த்துக் கொண்டு வரலாம்? ஆனால் ஒன்றுக்கும் நேரம் இல்லை?? என்ன செய்ய??


      உங்களாலை தான் இப்பிடி ஒரு விசயம் இருக்கே என்று நானே அறிஞ்சு கொண்டேன்... நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்....தொடர்ந்தும் வீறு நடை, வெற்றி நடை போடுங்கோ!

    24. பெண்களைக் கவர இப்பிடியெல்லாம் கஸ்ரப்படவேண்டியிருக்கு. ஆனாலும், மற்றப் பறவைகளைப் போல மிமிக்ரி பண்ணுறதில அந்தப் பறவையோட துணையும் இவர்கிட்ட வர சான்ஸ் இருக்கில்ல? ம்.. கொடுத்துவச்ச பறவை..

    25. ஐயோ ராசா...என்ன நடக்குது இஞ்சை?? மோனை என்ன நக்கல் நளினம், கடுப்பைக் கிளப்பல் எல்லாம் போய் இப்ப பிராணிகளோடை கொஞ்கிக் குலவுறீர்?? நக்கலுக்குக் குறைவில்லை???

      தொடர்ந்தும் எழுதும்?? அப்புறம் ராசா இப்ப பிணந்தின்னும் விலங்கும் மனித உருவத்திலை நடமாடுதாம் உண்மையோ?? முடிஞ்சால் அது பற்றியும் ஏதாவது சொல்லுமன் அப்பு??

    26. யாழினி
      ஆஹா... பதிவு அருமை! //

      நன்றி யாழினி... ஏன் இப்போதெல்லாம் வர லேட்டாகிறது? பதிவுகளையும் காணோம்?

      //ஆனால் ஏன் தங்களுடைய Comment Reply(Ash Colour Pages) என்னுடைய கணணியில் தெரியமாட்டென்குது?//

      சில ப்ளாக் டெம்ப்லேட்டுகள் ப்ளாட்போம் டிப்பெண்டட் ஆனவை.. உங்களுடையது விண்டாஸ் XP 2002 வேசன் சேவிஸ் பக் வன்னிற்கு முந்தயதாக இருக்கலாம்.. விண்டோசை அப்டேற் செய்துவிடுங்கள்... ஏனெனில் சிறிதுகாலத்தில விண்டோஜ் திருட்டு சிடிக்களை பெறுவது மிகவும் கடினமாக மாறிவிடும்... :)‌

    27. கமல்

      என்னத்தைக் கண்டியளோ?? நானே இங்கை கங்காருவுக்குச் சாப்பாடு போட ஏலாமல் பரிதவிக்கிறன்? அதுக்கை வேறை பறவையளோ?? //

      அடடே! இது நல்லாயிருக்கே... அப்ப இனி கடுக்கண் கமலெண்டுறதுக்கு பதிலா கங்காரு கமல் எண்டழைக்கலாம்..


      //புல்லட் நீங்களே முந்திச் சஞ்சீவியிலை ‘அங்கிகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று எழிதினீங்கள்??? வெட்கத்தை விட்டுச் சொல்லுங்கோ??//

      இதென்ன அநியாயம்... இதை நான் வன்மையா கண்டிக்கிறன்.. :)

      //நல்ல முயற்சி புல்லட்...தொடர்ந்தும் ஆக்கபூர்வமான நல்லபல அறிவியற் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்... //

      நன்றி கங்காரு கமல்!

      //இஞ்சை உப்பிடி நிறைய அயிட்டங்கள் இருக்கு? ஒரு 110 டொலர் குடுத்து சவுத் ஒஸ்ரேலியாவுக்குப் போய்க் கக்கடு பாக்கிலை இறங்கினால் நிறைய வித்தையள் பார்த்துக் கொண்டு வரலாம்? ஆனால் ஒன்றுக்கும் நேரம் இல்லை?? என்ன செய்ய??//

      இஞ்சை சிங்கராசவனத்துககே .. ஏன் அவளத்துக்கு போவான்... பக்கத்தில இருக்கிற பத்தைய எட்டிப்பாக்வே பயமாக்கிடக்கு.. அதுக்குள்ள நீங்க கக்கடு பாக்கு கொட்டைப்பாக்கேண்டு எண்ட வயித்தெரிச்சலை கிளப்புங்கோ

      //உங்களாலை தான் இப்பிடி ஒரு விசயம் இருக்கே என்று நானே அறிஞ்சு கொண்டேன்... நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்....தொடர்ந்தும் வீறு நடை, வெற்றி நடை போடுங்கோ!//

      மறுபடியும் நன்றிகள் கங்காரு கமல்

    28. // கிருஷ்ணா

      பெண்களைக் கவர இப்பிடியெல்லாம் கஸ்ரப்படவேண்டியிருக்கு. ஆனாலும், மற்றப் பறவைகளைப் போல மிமிக்ரி பண்ணுறதில அந்தப் பறவையோட துணையும் இவர்கிட்ட வர சான்ஸ் இருக்கில்ல? ம்.. கொடுத்துவச்ச பறவை..//

      ஆககா! தேடித்தான் வச்சிருக்கு தேப்பன் பெயர் கிருஷ்ணாவெண்டு... :) அளப்பரிய சிந்தனை..

      இப்பத்தான் ஞாபகம் வருது.. உப்பிடித்தான் சிங்கமும் புலியும் குழும்பினதில பிறந்தாள் இப்ப பீதிய கிளப்பிறார்... அந்த இனத்தை ”லைகர்” (LIGER) எண்டு அழைப்பினம்... எருமை சைசில ஒரு உருப்படியப்பா.. உதே டெக்னிக்க பறவையளும் கையாண்டுதெண்டால் என்னென்ன வருமோ?

    29. சக்(ங்)கடத்தார்
      ஐயோ ராசா...என்ன நடக்குது இஞ்சை?? மோனை என்ன நக்கல் நளினம், கடுப்பைக் கிளப்பல் எல்லாம் போய் இப்ப பிராணிகளோடை கொஞ்கிக் குலவுறீர்?? நக்கலுக்குக் குறைவில்லை??? //

      மாற்றம் வேணும்தானே தாத்தா! ;)

      //தொடர்ந்தும் எழுதும்?? அப்புறம் ராசா இப்ப பிணந்தின்னும் விலங்கும் மனித உருவத்திலை நடமாடுதாம் உண்மையோ?? முடிஞ்சால் அது பற்றியும் ஏதாவது சொல்லுமன் அப்பு??//

      கதைக்கலாம் தாத்தா! ஆனா உடன சாக்காட்டினா பரவாயில்லை...ஒரு கிழமை வச்சு சித்திரவதை செய்தல்லோ முடிக்கிறாங்களாம்... அதாலதான் நான் கப்சிப்... குறை நெச்சுக்கொள்ளாதீங்கோ! :(

    30. நம்ம பதிவுக்கு தாமே இன்னொரு ‌ பேரில கமண்டெழுதி ஓட்டுப்போடுற பதிவர் கேசுகளிண்ட கதை மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?//

      அட...இப்பிடி வேற நடக்குதா??

      பாவம் அவர் ... தான் சைட் அடிக்கிற பொம்பிளையை மடக்க வேணுமெண்டால் , அவாவுக்கு புல்லரிக்கும் வரைக்கும் பலவிதமான சங்கீத ஆலாபனை செய்து கடுமையான கமகங்களோட பல பண் , சுருதியோட பாடி ஆடவேணும்...

      அடடா...இத ஒரு ஒரு மாசத்துக்கு முதல்ல சொல்லக் கூடாதா பாஸ்?மிஸ் பண்ணிட்டனே...என்னவோ எல்லாம் செஞ்சு பாத்தன்..மிமிக்ரி செய்ய வேணும் எண்டு யாரும் சொல்ல இல்லையே... :(

      டிஜிட்டல் கமெரா அனொலக் கமெரா மரமரியுற சத்தம் எண்டு தான் கேட்ட சத்தமெல்லாம் போட்டு ச்சும்மா ரணகளப்படுத்துது பறவை...

      சூப்பர் பாஸ்...Shutter சத்தம் எல்லாம் நம்மலாலையே செய்ய முடியாது... :) எழுதுங்கோ எழுதுங்கோ..நல்லா இருக்கு..