காட்டுவாசியாக மனிதன் இருந்த போதே தொடங்கி விட்டது எஞ்சினீரிங்… அதனுடன் சேர்ந்து சேர்ந்து வளரத்தொடங்கியதுதான் மனித நாகரிகம்… ஆரம்ப காலங்களில் சிவில் எஞ்சினீரிங்தான் எல்லாம்… ஏழு அதிசயமும் அதனோட குட்டிங்கதான்… அப்பிடியே பாலங்கள் , உயரமான கட்டடங்கள் , சுரங்கப்பாதைகள் , கால்வாய்கள் எண்டு அந்த எஞ்சினீரிங் எண்ட ஆதிக்கம் வளர்ந்துக்கிட்டுதான்; இருக்கு.. கிட்டடியில துபாயில மண்ணை கடல்ல இருந்து உறிஞ்சி கொட்டி பனை மரத்தீவு , உலகத்தீவுகள் எண்டு செயற்கையான தீவுகளெல்லாம் மனிதன் உருவாக்கி இருப்பதை கேள்விப்பட்டிருக்கலாம்…
அடுத்ததாக மெக்கானிக்கல் எஞ்சினிரிங் தொழிற்புரட்சி காலங்களில சூடு பிடிக்கத் தொடங்கியது… அப்பிடி கெமிக்கல் எஞ்சினீரிங் பெற்றோலியத்தின் பயன்பாட்டுடன் எரியத்தொடங்கி தொடங்கிவிட்டது.. பிறகு மின்விளக்குடன் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்…மின்சாரத்தின் பயன்பாட்டால் புதிய திசையில் உலகம் பரபரப்புடன் சென்று பின்னர் ஆறுதலாக சாய்மனையிலமர்நது அதன் விளைச்சல்களை அனுபவிக்கத் தொடங்கியிருந்த வேளை அங்கும் மனிதனின் மூளை ஓய்வெடுக்கவில்லை.. விளைவு :-> டையோட்டுகளும் ட்ரான்சிஸ்டர்களும்… ட்ரான்சிஸ்டரின்
(கவலைப்பட வேண்டாம்… இது பற்றி பின்னர் கூறுகிறேன்) கண்டுபிடிப்புடன் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது… அப்போது மீண்டும் உலகம் கொதிக்க ஆரம்பித்தது… அப்போதுதான் எலக்ராளிக் எஞ்சினீரிங் ஆட்சியைக் கைப்பற்றியது… காலமும் தன் பெயரை இலத்திரனியல் யுகம் என மாற்றிக் கொண்டது…
(அதன் ஒரு பகுதியான கம்ப்யுட்டர் ஏஞ்சினிரிங் தற்போது தளம்பல் நிலையலிருந்தாலும் எலக்ரானிக் எஞ்சினீரிங் இன்னும் உறுதியானவே இருக்கிறது… )
எலக்ரானிக் எஞ்சினீரிங்கைப் பொறுத்த வரையில் அது தற்போது இரு பெரும் பிரிவுகளாக முழங்குகிறது.. ஒன்று நெட்வேர்க்கிங்… அதாவது தொலைபேசி , இணையம் , வானொலி , தொலைக்காட்சி போன்ற சேவைகள்… சாதாரணமாக இரு கணனிகளை கேபிளால் இணைப்பதிலிருந்து பல மைல்கள் தொலைவிலிருப்பவர்களை வயரில்லாமல் பேசவைப்பது முதல் எல்லாமே அதனுள் அடங்கும்… இந்த பகுதியுள் நுழைபவர்கள் என்னென்ன தெரிந்திருப்பார்கள் என்று பின்னர் கூறுகிறேன்…
இரண்டாவது VLSI … ( மறுபடியும் கவலப்படாதீங்க.. இதப்பற்றியும் பிறகு சொல்லுறன்) இது சின்ன IC இலருந்து பெரிய கணனி ப்ரொசசர் வரைக்கும் டிசைன் பண்ணி மனுபக்சர் பண்ணுறதெல்லாம்; செய்யுற ஏரியா… உண்மைய சொல்ல போனா முதலாவது பிரிவில எஞ்சினியர் பயன்படுத்துறது தொடர்பு சாதனங்கள் எல்லாமே இவங்களோட உழைப்புதான்… இவங்களுக்கு ஆழந்த எலக்ரானிக் அறிவு மட்டுமல்லாது வெரிலொக் , சி , ஸகிரிப்டிங் போன்ற ப்ரோக்ராமிங்க் லாங்குவேஜுகளும் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்… இவ்வளவு பீத்திக்கிறதிலிருந்தே புரியுஞ்சிருக்கும் நான் இங்கிட்டுதான் குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன்னு.. ஆமாங்க நான் வேலை செய்வது VLSI பீல்டில்.. (முன்னர் டெலிகொமியூனிகேசனிலயும் வேர்க் பண்ணியிருக்கன்…) நம்மட பீல்ட பற்றி மற்றவங்களுக்கு சொல்ல பதிவுலகத்துல யாரையும் காணோம் .. அதுதான் நானே கிளம்பிட்டேன்…
தொடர்ந்து இந்த சீரீசில் வரவிருக்கும் பதிவுகளில்…
அலைவுகளும் அதிர்வுகளும் (இது கட்டாயம் தேவை)
GSM
CDMA
3G
4G
ப்ரோட்பான்ட் கனெக்சன்கள் (Broadband connections)
வானொலி
டிஜிட்டல் ப்ரோட்காஸ்ட்டிங் (Digital TV eg: Dialog TV)
IP TV
போன்றவை வழக்குத்தமிழில் , தொழிநுட்பத்துறையில் இல்லாதவர்களுக்காக , வழங்கப்படும்..
எனது VLSI துறையானது ஆனது வேறு துறையை சார்ந்தவர்களுக்கு விளக்குவதற்கு மிகவும் கடினமானதாயினும் மிக மிக இண்டரஸ்டிங் பீல்டாகும்.. இந்த தொடரின் முடிவில் அதைப்பற்றி சிறிது அறிமுகப்படுத்துவேன்...
அடுத்த பதிவு: அடிக்கடி ஒரு ஜீவன் தொடரில் ஒரு பகுதி நாளை மறுதினம் எதிர் பாருங்கள்..
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
62 Responses
பாஸ்.! உங்களுக்குத் தெரிஞ்ச எஞ்சினியறிங் வித்தைகளை வைச்சுப் பூந்து விளையாடுறீங்கள்?? நல்ல பயனுள்ள பல விடயங்கள் சொல்லியிருக்கிறீங்கள்?
தொடர்ந்தும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்..தொடருங்கள்.....
அதெப்படி எல்லா விஞ்ஞானப் பேருகளும் மண்டையிக்கை நிக்குது??
///தொடர்ந்து இந்த சீரீசில் வரவிருக்கும் பதிவுகளில்…
அலைவுகளும் அதிர்வுகளும் (இது கட்டாயம் தேவை)
GSM
CDMA
3G
4G
ப்ரோட்பான்ட் கனெக்சன்கள் (Broadband connections)
வானொலி
டிஜிட்டல் ப்ரோட்காஸ்ட்டிங் (Digital TV eg: Dialog TV)
IP TV///
எப்ப வரும்? வெய்டிங்...
//ஆமாங்க நான் வேலை செய்வது VLSI பீல்டில்.. (முன்னர் டெலிகொமியூனிகேசனிலயும் வேர்க் பண்ணியிருக்கன்…) நம்மட பீல்ட பற்றி மற்றவங்களுக்கு சொல்ல பதிவுலகத்துல யாரையும் காணோம் .. அதுதான் நானே கிளம்பிட்டேன்…
//
அட...IC design.. உதெல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே...பரவாயில்லை...
உந்த துறை நல்லம் தான்..நல்ல வேலை வாய்ப்புகள் உண்டு...எனக்கு IC Design ஆ இல்லை Info comm ஆ என்ற நிலை வந்த போது புத்திசாலித்தனமாக (..?) தேர்ந்தெடுத்தது Info comm.. Electronics துறை பொருளாதாரம் நன்றாக இருக்கும் போதே அடிக்கடி அடி வாங்குவது..ஆதலால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை..:-)))
good attempt, keep mixing with animals, jaffna life, mokkai,tech and your creativity. A good mix in topics will be good.
sorry for english.
அட...IC design.. எல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே..???
நல்ல பதிவு........
அடேங்கப்பா.. புல்லட் கிட்ட இருந்து டெக்னிகல் பதிவு.. கலக்குங்க.. நீங்க எழுதி இருக்கறதப் பார்த்தா பொறியியல் படிச்சவர் மாதிரி தெரியுதே? VLSI - என்ன துறைல இருக்கேங்க நண்பா..?
@ kamal
பாஸ்.! உங்களுக்குத் தெரிஞ்ச எஞ்சினியறிங் வித்தைகளை வைச்சுப் பூந்து விளையாடுறீங்கள்?? நல்ல பயனுள்ள பல விடயங்கள் சொல்லியிருக்கிறீங்கள்?
தொடர்ந்தும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்..தொடருங்கள். //
நன்றி கமல்
அதெப்படி எல்லா விஞ்ஞானப் பேருகளும் மண்டையிக்கை நிக்குது?? //
உங்கட தமிழறிவ கண்டு எனக்கு சரியான பொறாமை.. நீங்க அதெப்பிடியெண்டு முதல்ல சொல்லுங்கோ ! :)
கலை - இராகலை
எப்ப வரும்? வெய்டிங்.. //
விரைவில அடுத்தடுத்து...
டொன்’ லீ
அட...IC design.. உதெல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே...பரவாயில்லை... //
என்ன கொடுமையிது?அது படிப்பிக்காம ஒரு கம்பசோ?
//Electronics துறை பொருளாதாரம் நன்றாக இருக்கும் போதே அடிக்கடி அடி வாங்குவது..ஆதலால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை..:-)))//
ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் நமக்கு ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி...
அதில்லாட்டி வாழ்க்க வெறும சப்பெண்டாயிடும்... :)
குடுகுடுப்பை
good attempt, keep mixing with animals, jaffna life, mokkai,tech and your creativity. A good mix in topics will be good//
Thanks alot for your suggestion! Will keep it n mind :)
Triumph
அட...IC design.. எல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே..??? //
ஏன் உங்கட பல்லுகளும் சில்லுகளும் கூட படிப்பிப்பினம்.. மெக்கானிக்கல் லாப்பில பொல்லாத சாமான்க ளெல்லாம் கிடக்கு.. மல்டிபரல் ரொக்கட்லோஞ்சர் கொன்பிகரேசன் மெயின்டனன்ஸ் ரிபயர் எல்லாம் நம்மட யுனிவெசிட்டிதான் :)
செந்தழல் ரவி
நல்ல பதிவு.......//
புதிய வரவு.. மகிழ்சிச... நன்றி :)
கார்த்திகைப் பாண்டியன்
அடேங்கப்பா.. புல்லட் கிட்ட இருந்து டெக்னிகல் பதிவு.. கலக்குங்க.//
Thanks ypu Sir!
//நீங்க எழுதி இருக்கறதப் பார்த்தா பொறியியல் படிச்சவர் மாதிரி தெரியுதே? VLSI - என்ன துறைல இருக்கேங்க நண்பா. //
ஓம் சேர்... FPGA field (tools )
ஆஹா இதல்லவா நமக்கு பிடிச்ச விஷயம்...
அறிவியல்..
கலக்கல்...
வரப்போறது என்டு சொன்னதுல சிலதுகள் தெரியும்..
சிலதுகள் தெரியாது...
எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்...
இந்த இடுகை நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...
ஓட்டு போட்டாச்சு...
தொடருங்கோ...
ஆஹா...புல்லட்டுல இருந்து டுமீல் டுமீல்னு ஏதோ வேடிச்சுருக்கும்னு வந்து பார்த்தா
ஒரே ஆனோடும் டயோடுமாள்ள இருக்கு ..
நல்ல இருக்கு...தொடருங்க தொடருங்க
ஆஹா... புல்லட் கிளம்பிடாரய்யா கிளம்பிற்றாரு!
//’டொன்’ லீ :
அட...IC design.. உதெல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே...பரவாயில்லை...
Triumph
March 30, 2009 4:53 PM அட...IC design.. எல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே..???//
நற... நற... என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் "அப்பே லங்கா" வைப் பற்றி?
புல்லட் இதை நிட்சயமாக உங்களிடம் சொல்லியே ஆகனும்
புல்லட், நீங்கள் ஒவ்வொரு விடயத்தை பற்றியும் இங்கே விளங்கப்படுத்தும் அழகே தனி.
ஒரு சிறு குழந்தைக்கு அன்பா அழகா பாடத்தை விளங்கப்படுத்துவது போன்று அழகாக சுவராசியமாக விளங்கப் படுத்துகிறீர்கள்.உங்களது இந்த பதிவுகளை வாசிக்கும் பொழுது மிகுந்த ஆவலாக இருக்கும் .ஒரு சிறு குழந்தைக்கு அப்பா எப்படி சொல்லிக்கொடுப்பாங்களோ அது போல உள்ளது. அதற்கு காரணம் நீங்கள் மொழியை கையாளும் விதம் என்றே நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்!
மேலும் நான் பாவிப்பது Windows XP
முன்னர் Windows Vista
அப்போது தெரிந்தது இப்போது தெரிய மாட்டென்குது.
இன்று தான் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கடத்த பதிவிற்கான Replyயை படித்தேன்.
அப்போ நாங்கள் இனி ;
GSM
CDMA
3G
4G
ப்ரோட்பான்ட் கனெக்சன்கள் (Broadband connections)
வானொலி
டிஜிட்டல் ப்ரோட்காஸ்ட்டிங் (Digital TV eg: Dialog TV)
IP TV
போன்ற விடயங்கள் பற்றி தங்களிடம் கேட்டு படிக்கப் போறமா
ஜ Interesting!
பரீட்சை வர இருப்பதால் அடிக்கடி பதிவிட முடியவில்லை.
ஐயோ..இத வாசிக்க திரும்ப திரும்ப A/L physics உம் n-p-n, p-n-p transistor களும் தான் ஞாபகத்துக்கு வருது...முகத்த சுளிச்சுக் கொண்டு வாசிக்க வேண்டியதா போயிட்டுது :( ஏனோ தெரியேல்ல, electronics க்கும் எனக்கும் நிறம்ப தூரம் தல..நீங்க என்ன தான் anode, diode எண்டாலும் உயிரியல அடிக்கேலாது பாருங்கோ... :P
//ஏன் உங்கட பல்லுகளும் சில்லுகளும் கூட படிப்பிப்பினம்.. மெக்கானிக்கல் லாப்பில பொல்லாத சாமான்க ளெல்லாம் கிடக்கு.. மல்டிபரல் ரொக்கட்லோஞ்சர் கொன்பிகரேசன் மெயின்டனன்ஸ் ரிபயர் எல்லாம் நம்மட யுனிவெசிட்டிதான் :)//
oh...I have two cousins who did electronics. I hate that subject so I stopped talking to them as they dont know anything than electronics. i was not ready to have intellectual conversation over electronics with them... sariya bore...so have no idea what they teach there..
I had been to pera uni labs. Saw coat(s) of dust on equipments. So, thought they dont use it.
I know a smarty in electronics but he went for some training in Arthur C Clarke's some institute. So, I know our standards are high..just was pulling ur leg...
I have no idea abt universities there. I didnt want to go to a local uni though I would have got entrance if I applied. Raging and the attitude of people stopped me from applying to a local uni. Even mom was not happy to send me to a local uni as she was scared of police probs. i would have had awful time as guys wud have had some attitude (like bullet anna had / has) over gals.. :P:P:P
no regrets for not studying there anyways. coz no ragging here... also diverged culture... learnt to do my work myself. got to know good ppl. back home, i always felt that i got those ppl around me only coz of dad... here no one knows my dad or mom. so i got ppl only for me being myself.. not for being someones daughter or grand daughter.
I am a mechanical person. though i am doing some electronics modules. i hate them. but doing as we need to have some electronics knowledge as well...
i wish i took some modules so i could have made someone do the projects form while i slp in my room.. paravayillai.. pilachuppoongoo..
check the sothivalavu comments annoi....... i gave you some assignments.. hak hak...
Yalini //நற... நற... என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் "அப்பே லங்கா" வைப் பற்றி?
புல்லட் இதை நிட்சயமாக உங்களிடம் சொல்லியே ஆகனும்
புல்லட், நீங்கள் ஒவ்வொரு விடயத்தை பற்றியும் இங்கே விளங்கப்படுத்தும் அழகே தனி.
ஒரு சிறு குழந்தைக்கு அன்பா அழகா பாடத்தை விளங்கப்படுத்துவது போன்று அழகாக சுவராசியமாக விளங்கப் படுத்துகிறீர்கள்.உங்களது இந்த பதிவுகளை வாசிக்கும் பொழுது மிகுந்த ஆவலாக இருக்கும் .ஒரு சிறு குழந்தைக்கு அப்பா எப்படி சொல்லிக்கொடுப்பாங்களோ அது போல உள்ளது. அதற்கு காரணம் நீங்கள் மொழியை கையாளும் விதம் என்றே நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்!//
Aiyo.. I was pulling bullet anna;s leg.. athu summa oru paasamalarin kurumbu.. hak hak...
yea thats true... explaining things in a very simple way is an art... he has it.. enda anna alla.. oko k being serious.. yea... his writing style is good.. also he still have kurangu gene... athanala nagaichuvai thaana varuthu..
i still wonder if he is from 200X batch.. enakku ennovo ivar poi solluraar endu irukku.. enda spy i vittu orukka check pannavenum...
annoooooooooi,
enga veelai seyuriyal... konjam unmaiya sollappu.. he he..
lastly, antha pallu sillukku oru per irukku.. "GEARS" cha ippadiya engalai insult seiyurathu... naangal illamal ondum asaiyathappu... akhum...
i remember some transistor shit... we always thought that the center pin is gonna be the base... whatever transistors i used for my projects had the centre pins as base..so i dint even bother to check the datasheet for the pins... we soldered all well and checked the cct it didnt work... we spent almost 2 weeks to find out what was the error.. then suddenly we noticed that the centre pin of that particular transistor was not base... tat was so embarrassing... if iam not mistaken it should be TIP 122/5 or something... sariyana avamaanam.. athuvum sight adicha lecturerukku munnala.. :-( ippa ninachalum alugai alugaiya varuthu... cha.......
//naangal illamal ondum asaiyathappu//
அய்யே....நீங்க என்ன தான் அசைஞ்சாலும் உயிரியல் இல்லாட்டி உங்களுக்கு மருந்து மாத்திர இல்ல அக்கோய்...
ஏன் உங்கட பல்லுகளும் சில்லுகளும் கூட படிப்பிப்பினம்.. மெக்கானிக்கல் லாப்பில பொல்லாத சாமான்க ளெல்லாம் கிடக்கு.. மல்டிபரல் ரொக்கட்லோஞ்சர் கொன்பிகரேசன் மெயின்டனன்ஸ் ரிபயர் எல்லாம் நம்மட யுனிவெசிட்டிதான் :)
I know about sri lanka and their university standard, and the help given by them to the defense. but I don't know why lot of Tamils are wondering about ur studies and ur or sri lankan's university. I want to say them that in the meantime when these profs doing maintenance of mechanical and elctronical equipments, in my place they have assembled(some kind of inventions too)and using it.
who ever asked like this அட...IC design.. எல்லாம் இலங்கையில் படிப்பிக்கினமே..??? should aware about the same is thought at Eelam with the more creative manner.
thirumph, don't reasoning ur abroad uni life- diaspora + Eelam genius made our place to the same standard - if u ask somebody from vanni tech u can realize it.
Hellooooooooo Platinum... I am from Vanni... I lived my entire life in eelam.. So, I know abt Vanni better than you and the rest... I didnt want to study in SL uni though I got the results to get entry for 2 reasons. 1 - Ragging.. I would whack the person to death if they try to mess up with me. 2 - The ppl's attitude... I am very clear abt myself and my roots. Yet, I dont want to spend my time with narrow minded ppl.
I explained the situation abroad. I didnt say thats the best life cos my mom is still in vanni and we die every sec thinking nothing should happen to her...
Summa "VIYAKIYAANAM" saiyaatheengo... Did you live in vanni..R u from vanni.. if not, then you should stop showing off like patriot. R u planning to go to vanni and help people when they road open... if you dont, then you have no rights to comment abt my opinion... Ellarum vaaisol veerar.. naanum paakathaan pooran.. how many of you going to help those ppl there....
You should NOT be such a "JERK". even after seeing me mentioning twice tat i was pulling bullet anna's leg...
mm... you are going to do.. going to... good... i'm very proud about u thankaichchi...
நீங்கள் வெளிநாட்டில படிக்க முடியும்... ஆனால் வன்னி நிலத்தில இல்லை ஈழ நிலத்தில இருக்கிற எல்லாக் குடும்பத்தாருக்கும் அது முடியாது... உங்கட செயலுக்கு நான் எதிர் இல்லை... பட் ரொம்பவும் பீத்தி எங்கள் மாணவர்கள் கண்ணில் இருக்கும் அறிவு ஏக்கத்துக்கு முற்று புள்ளி வைத்து விடாதீர்கள்.. உங்களை மாதிரி ஆக்கள் தான் ஒரு தலை முறை மூத்தவை ஏற்படுத்தி தந்த வன்னி டெக் நீங்க அங்க படிக்கிற படிப்பை, ஸ்ரீலங்கவில மற்ற universityla படிப்பிக்கிறதை, அதை விட மேலாகவும் தெளிவாகவும் என் குழந்தைகளுக்கு சொல்லி குடுத்துகொண்டிருந்தது... இனிமேலும் இருக்கும்... உங்கட உதவி கட்டாயம் தேவை..
you r going to do...
but நான் ஒரு பச்சை துரோகி... செய்யவும் இல்லை.. செய்து கொண்டிருக்கவும் இல்லை... செய்யப் போறதும் இல்லை...
மன்னிச்சு கொள்ளுங்கோ....
என் தம்பியை ஆகுதியாக்கி.... தந்தையை பறிகொடுத்து நிக்கிறான் என்று நான் புலம்ப மாட்டன்... ஏனென்றால் நான் ஒரு சுயநலவாதி.. நான் மட்டும் வாழ்ந்தால் போதும்...
இவ்வளவும் போதுமா? போதுமா?
குரைக்கிற நாய் கடிக்காது... செய்யிறதெல்லாம் சொல்லேலாது...செய்யப் போவன் என்றும் சொல்லேலாது செய்து கட்டும் மட்டும்.. பட் சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்ன தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்த திரித்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதேரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்...
வெளிநாட்டு படிப்புக்கு நீங்க சொன்ன நியாயம் இங்கு படிக்கும் என் தம்பி தங்கையின் கண்களில் நீரை வரவைச்சு போடக்கூடதுங்கோ.... நீங்க படியுங்கோ... உங்கட உதவி என்றைக்கும் வேணும்... என் நாழ் வாழ்த்துக்கள் உங்களுக்கு... நீங்க உதவி செய்யும் போதும் நான் கதைச்சு கொண்டு தான் இருப்பன்... நான் செய்ய மாட்டன்.. ஆனால் சரி பிழை சொல்லுவான்...
I hate the people who tries to mislead others.... thats all pilloyyy...
வேத்தியன்
ஆஹா இதல்லவா நமக்கு பிடிச்ச விஷயம்...
அறிவியல்..
கலக்கல்...
வரப்போறது என்டு சொன்னதுல சிலதுகள் தெரியும்..
சிலதுகள் தெரியாது...
எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்...
இந்த இடுகை நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...//
மிகவும் நன்றி
ஓட்டு போட்டாச்சு...
தொடருங்கோ...//
மறுபடியும் நன்றிகள்.. :)
நிலாவும் அம்மாவும்
ஆஹா...புல்லட்டுல இருந்து டுமீல் டுமீல்னு ஏதோ வேடிச்சுருக்கும்னு வந்து பார்த்தா
ஒரே ஆனோடும் டயோடுமாள்ள இருக்கு ..
நல்ல இருக்கு...தொடருங்க தொடருங்//
ஹிஹி! நக்கலு ? பரவால்ல... நம்மட நிலான்ட அம்மாத்தானே! :)
நன்றி ்)
யாழினி
//நற... நற... என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் "அப்பே லங்கா" வைப் பற்றி?//
அதானே?
//புல்லட் இதை நிட்சயமாக உங்களிடம் சொல்லியே ஆகனும்
புல்லட், நீங்கள் ஒவ்வொரு விடயத்தை பற்றியும் இங்கே விளங்கப்படுத்தும் அழகே தனி.
ஒரு சிறு குழந்தைக்கு அன்பா அழகா பாடத்தை விளங்கப்படுத்துவது போன்று அழகாக சுவராசியமாக விளங்கப் படுத்துகிறீர்கள்.உங்களது இந்த பதிவுகளை வாசிக்கும் பொழுது மிகுந்த ஆவலாக இருக்கும் .ஒரு சிறு குழந்தைக்கு அப்பா எப்படி சொல்லிக்கொடுப்பாங்களோ அது போல உள்ளது. அதற்கு காரணம் நீங்கள் மொழியை கையாளும் விதம் என்றே நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்!//
அய்யோ சரியா குளுருது ஹி ஹிஹி! ஆனா ஒரு சைடால பாத்தா என்னய்யா எழுத்து சின்ப்புள்ளைத்தனமா இருக்கு” எண்டு சொல்ற மாதிரியும் இருக்கு.. :) எது உண்மை ஹிஹிஹி!
//மேலும் நான் பாவிப்பது Windows XP
முன்னர் Windows Vista
அப்போது தெரிந்தது இப்போது தெரிய மாட்டென்குது.
இன்று தான் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கடத்த பதிவிற்கான Replyயை படித்தேன்.//
சரி சரி யாருகிட்டயாவது சேவிஸ் பக் 2 இருந்தால் வாங்கி அப் டேற் செய்ங்க.. உங்களுக்கு மெயிலில போடத்தான் நெச்சேன் பிறகு பாத்தா அங்க உங்கட ப்ளாக் கன்டாக்ட் ஒண்டயும் காணேல்ல பிறகு விட்டுட்டேன்.. :)
//போன்ற விடயங்கள் பற்றி தங்களிடம் கேட்டு படிக்கப் போறமா
ஜ Interesting!//
ம்ம் :)
//பரீட்சை வர இருப்பதால் அடிக்கடி பதிவிட முடியவில்லை//
ஓகே படிப்பு தான் முக்கியம்... எக்சாமை நல்லா செய்ங்க.. வாழ்த்துக்கள்.. :)
தியாகி
ஐயோ..இத வாசிக்க திரும்ப திரும்ப A/L physics உம் n-p-n, p-n-p transistor களும் தான் ஞாபகத்துக்கு வருது...முகத்த சுளிச்சுக் கொண்டு வாசிக்க வேண்டியதா போயிட்டுது :( ஏனோ தெரியேல்ல, electronics க்கும் எனக்கும் நிறம்ப தூரம் தல..நீங்க என்ன தான் anode, diode எண்டாலும் உயிரியல அடிக்கேலாது பாருங்கோ... :P //
ஓமோம் உதை எண்ட தம்பிட்ட கேளுங்க.. ஆஸ்பத்தரில அவன் படுறபாடு கடவுளுக்கும் எங்களுக்கும்தான் தெரியும்... எல்லாம் உந்த வைத்திய துறைய தெரிந்ததால வந்த வினை.. அப்பவே சொன்னனான் டேய் வேண்டாண்டா உத்தரிப்பாய் எண்டு .. இப்ப சொல்லுறார் மூத்தோர் வார்த்தை அமுதமாம்தான் அப்ப அதை மறந்துட்டாராம் :)
நசரேயன்
நல்ல பதிவு//
நன்றி நசரேயன்
@ triumph
Aiyo.. I was pulling bullet anna;s leg.. athu summa oru paasamalarin kurumbu.. hak hak...//
ம்ம்! எல்லாத் தங்கைகளும் உப்பிடித்தான் கடைசியா அண்ணன்மாற்ற கால வாரி விட்டுடுவாளயள் :)
//yea thats true... explaining things in a very simple way is an art... he has it.. enda anna alla.. oko k being serious.. yea... his writing style is good.. also he still have kurangu gene... athanala nagaichuvai thaana varuthu..//
ம்ம்! எப்பிடியும் படிப்பு முடிய இங்காலுப்பக்கம் வரத்தானே வேணும்! அப்ப பாத்துக்கொள்ளுறன்.. :)
//i still wonder if he is from 200X batch.. enakku ennovo ivar poi solluraar endu irukku.. enda spy i vittu orukka check pannavenum...//
என்ன கொடுமை இது? சரி! எனக்கு வயசு 34 இரண்டு பிள்ளையள் இருக்கிறாங்கள்!இப்பிடி சொன்னா நம்புவியளோ?!
கடவுளே! நானென்ன செய்ய?
//annoooooooooi,
enga veelai seyuriyal... konjam unmaiya sollappu.. he he..//
இலங்கையிலதானம்மா! ஏனிந்த சந்தேகம்?
@ platinum: thanks for the comment. I like few of your attitides and opinions:"நீங்கள் வெளிநாட்டில படிக்க முடியும்... ஆனால் வன்னி நிலத்தில இல்லை ஈழ நிலத்தில இருக்கிற எல்லாக் குடும்பத்தாருக்கும் அது முடியாது...வெளிநாட்டு படிப்புக்கு நீங்க சொன்ன நியாயம் இங்கு படிக்கும் என் தம்பி தங்கையின் கண்களில் நீரை வரவைச்சு போடக்கூடதுங்கோ..."... Hmm! Thats true :)
But triump said , she mentioned that just to have fun with me.. Trfore I hope we all have no hard feelings.. :) Cool :)
[[[எப்பிடி கூலா தொடங்கினாலும் கடைசில அடிதடிலதான் முடியுது ...? என்ட ராசி அப்பிடியோ?]]]]
Can You Favour Me Bullet...?
உங்களால் முடிந்தால் உங்களது Replyக்கான Ash Colour Back Round ஜ மாற்ற முடியுமா? உங்களது பதில்கள் எனது கணணியில் தெரியும் வண்ணமும். இல்லாவிடில் எனக்கு மிகுந்த கஷ்டமாகி விடும் உங்களது பதில்களை பார்ப்பது. இதுவரைக்கும் நீங்கள் என்ன பதில் அளித்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியவே தெரியாது.
பி.கு: மற்றவர்களுடைய பின்னூட்டங்களைப் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. நான் நினைக்கிறேன் இந்த Back Round Colour தான் ஏதோ சதி செய்கின்றது என்று.
I"m sorry to get angry in ur cool article. of course u r a good writer. சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்னா தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்தா திருத்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதெரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்... உண்மையையும் தீர்க்கதரிசனத்தையும் நியாயப் படுத்த நான் போதிய அறிவும் ஆதாரமும் தெரிஞ்சு வைச்சிருக்கன்.... அது தான் யாரவது பிழையான வழி நடத்தலுக்கு போகும் போது உணர்ச்சி வசப் படுறன்.... உங்கட அந்த நேர்காணல் ரொம்பவே பிழையான முடிவு... தயவு செய்து உதவாட்டிலும் ... உபத்திரவம் செய்யாதீங்க... டோர்ச் மூடி என் தெரிவு இல்லை... என் இனத்தின் தெரிவு...
in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and the people who r misleading them like u.. but the true is the 2nd 40% are deciding the majority of an opinion...
please lead in a correct way pullet...
I can understand ur proud in ur field... but anraikkum inraikkum enraikkum en field thaan kaikudukkum...:)
என்ன கொடுமை இது? சரி! எனக்கு வயசு 34 இரண்டு பிள்ளையள் இருக்கிறாங்கள்!இப்பிடி சொன்னா நம்புவியளோ?!
ஐயோ ஐயோ ஐயோ... கடசியாக எனதெருமை புல்லட் அண்ணா உண்மைய சொல்லிப்போட்டான்... அது சரி.. எங்க அண்ணிய ஒழிச்சு வயச்சு இருக்கிறியள்....
ஹா ஹா ஹா
எனதருமை யாழினி,
நானும் வின்டோஸ் "XP" தான் பாவிக்கிறன். எனக்கு அந்த சாம்பல் நிற background உம் வெள்ளை "font" உம் தெரியுது... ஆதலால் "XP" பற்றி கவலை வேண்டாம்... இந்த புல்லட் அண்ணா "Electronics" ஆள்.. அவனுக்கு கொம்பியூட்டர் பற்றி ஒன்டும் தெரியாது.. "Ithu suuuuuuuuuma... ha ha"
//பட் ரொம்பவும் பீத்தி எங்கள் மாணவர்கள் கண்ணில் இருக்கும் அறிவு ஏக்கத்துக்கு முற்று புள்ளி வைத்து விடாதீர்கள்.. //
I didnt boast abt the life here. I said no regrets for not going to local uni. The standard is high there yet I didnt go.. on the other hand im not regretting for it. So get the fact right before you write here. wash you eyes or where specs and read "PROPERLY" before talking or commenting..
மூன்று தலைமுறைக்கு ஒரே பெண் வாரிசு என்டதால் எக்கச் சக்க கவனம். என்ட கராத்தே மாஸ்டரில் இருந்து வயலின் மாஸ்டர் வரை வீடு வந்து தான் சொல்லி தந்தார்கள்.. ஆதலால் எனக்கு வெளி உலகம் பற்றி புத்தகங்களாலும் செய்தி தாள்காளாலும் தான் தெரிய வந்தது... கடைக்குப் போய் பழக்கம் இல்லை..உயர்தரம் வரை அம்மா சாப்பாடு தீத்தித் தான் பழக்கம்.. ஒரே பெண், பயிற்றங்காய் மாதிடி இருந்ததால் அதிகமாகவே பொத்தி பொத்தி வளத்து விட்டார்கள்... நானாக என்ட உடுப்பு தோய்கவோ, கடைக்குப்போய் சாமான் வாங்கியோ, என்ட பாத்ரூம் ஐ கழுவவோ, ஏன் காசு கணக்கு பார்த்து செலவளிக்கவோ இங்கு வந்ததால் தான் முடிந்தது.
ஒரு இடத்திலும் படிப்பு தரம் பற்றி நான் கதைக்கவில்லை.. என்னில் வந்த மாற்றங்கள் பற்றி தான் கதைச்சனான்,,,, அதை ஒன்டும் விளங்காமல் விசர் மாதிரி பரஞ்சால், உங்களை மனநல மருத்துவரிடம் தான் காட்ட வேணும்.... or மப்பா? மப்பில் ஏதாவது உளருவதை நிறுத்தினால் நல்லம்..
//வெளிநாட்டு படிப்புக்கு நீங்க சொன்ன நியாயம் இங்கு படிக்கும் என் தம்பி தங்கையின் கண்களில் நீரை வரவைச்சு போடக்கூடதுங்கோ..."//
ஆடு நனையுது என்டு ஓநாய் அழுத கதைதான் ஞாபகம் வருது....
ஏன் bullet அண்ணா நீங்களும் கண்ணாடி இல்லாமல் என்ட பதில வாசிச்சனீங்களே... இல்லாட்டி மப்போ?
யாரோ ஒழுங்காக வாசிக்காமல் விசர் கதை பரஞ்சால் நீங்களும் தல ஆட்டுவியலோ.. ச்ச..................
பெடியலின் "attitude" இக்கு எனக்கும் அவங்களுக்கும் எப்ப பாத்தாலும் பிரச்சினையாகத் தான் இருந்து இருக்கும் நான் எங்கன்ட பல்கலைக்கழகம் போயிருந்தால்..
அத விளங்காம ஒருத்தன் அலம்பினா நீ என்னதுக்கு அண்ணா சப்போட் செய்யிற? உங்களின் நல்ல காலம் புல்லட் அண்ணா நான் மொறட்டுவ வரேல்ல... அத கொண்டாடுவியா இல்லாட்டி இப்படி பிழையாக விளங்கி வில்லங்கம் தேடுவியாடா அண்ணா... ?
[[[எப்பிடி கூலா தொடங்கினாலும் கடைசில அடிதடிலதான் முடியுது ...? என்ட ராசி அப்பிடியோ?]]]]
awwwwww... hugs.... dont you worry anna........
மன்னிச்சு கொள்ளுங்கோ அம்மா... ஆடு நனையுதென்று ஓநாய் அழேள்ள... என் சொந்த கதை அம்மா அது... கொஞ்ச காலம் களம் எப்பிடி என்று பாத்த கதை... உங்களுக்கு புரியும் என்றே ஒரு பதிவு போட்டிருக்கன்... பாருங்கோ தங்கை... என்னை தங்கம் என்றவளும் அறிவியலோடு விளையாடியவள் தான்...
நீங்க மீண்டும் திரும்பி வரோணும் அறிவியலின் உதவியோடு என வாழ்த்துகிறேன்..
@ யாழினி:
அது வடிவாக் கிடந்ததெண்டுதான் அட் பண்ணினான்... ம்ம் உங்களுக்காண்டி அழிச்சாச்சு :) இப்ப தெரியதுதானே? :)
@ Triump and Platinum :நீங்க கும்மியடியுங்கோ பரவாயில்ல..ஆனா நான் நடுவுக்க வரேல்ல ஹிஹி! எனக்கு சீரியஸ் விசயங்கள் வேண்டாம் :) எஸ்கேப் :)
நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்லிப் போட்டினம்.. ;) நானும் அப்படியே..
உண்மையில இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.. கலக்கல்..
ஒரு கொஞ்சம் விளங்கிச்சு.. (நான் காலத்திலை இருந்து இப்படித்தான்..)
மீதியை எதிர்பார்க்கிறோம்..
(உங்கட பதிவுல கும்மி களை கட்டுது போல?? நடக்கட்டும்.. நடக்கட்டும்.. )
எல்லாரையும் தங்கச்சி ஆக்காதேங்கோ.. சீதனம் குடுக்க வேண்டி வரும்.. ;)
ஆஹா தங்கச்சி என்டு கவுத்துட்டியளே.. ஒரு நல்ல சண்டை பிடிச்சு எவ்வளவு நாள். "Sob sob"
நான் தனிய சமாளிக்கப் பழகியது இங்க வந்ததால தான் என்டு சொல்ல, நீங்கள் வேற எதையோ சொல்ல, நான் உங்களுக்கு என்ன மப்பா என்டு கேட்கிற அளவுக்கு டென்சன் ஆகிட்டன். நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு கதைச்சதற்காக உங்களுக்கு மப்பா என்டு கேட்டது கொஞ்சம் ஓவர் தான்.. Am sorry :-(.
யாருக்கும், அனாவசியமாக குற்றம் சாட்டினால் எரிச்சல் வரும் தானே... ஆனாலும் மப்பு என்டு சொன்னதை ஞாயப் படுத்தகூடாது.. ஆகவே... lets forget it. :-)
Now I got two bloggers brothers.. என்னா ஆளுக்கு ஒரு 50 லட்சம் சீதனமாக குடுக்க தருவியளே....
Now 3 blogger bros.. Bullet (most fav anna, and now Platinum and Loshan) so 150 laks சீதனம்.. எவனுக்கு குடுத்து வச்சு இருக்கோ?
//(உங்கட பதிவுல கும்மி களை கட்டுது போல?? நடக்கட்டும்.. நடக்கட்டும்.. )
எல்லாரையும் தங்கச்சி ஆக்காதேங்கோ.. சீதனம் குடுக்க வேண்டி வரும்.. ;)//
எந்தா லோசன்.. நீங்கள் என்ன தான் என்ட புல்லட் அண்ணரை மயக்கப் பாத்தாலும் அவன் மயங்க மாட்டான்.. . போனாப் போகுது என்டு நீங்கள் தங்கச்சி என்டு கூப்பிட்டதால் புல்லட் அண்ணா உங்களைப் பற்றி உங்களி வய்ப்பிட்ட சொல்ல மாட்டான்...
ஆக்கள் அடிபடுவதைப் பாக்க என்டு எத்தனை பேர் கிளம்பிட்டியள்... பிச்சுப்புடுவன் பிச்சு...
//ஆனா நான் நடுவுக்க வரேல்ல ஹிஹி!//
தேவை இல்லாமல் வக்காலத்து வாங்கிப்போட்டு பின் வாங்குறியலே... பிளட்டினம் அண்ணா, சண்டை பிடிக்கும் எங்கள மாதிரியான ஆட்களை நம்பலாம்.. இந்த புல்லட் பாண்டி, லோசன் மாதிரியான் ஆட்களை நம்பவே கூடாது.. கவனம்..
LOSHAN
நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்லிப் போட்டினம்.. ;) நானும் அப்படியே.. //
ம்ம்! வராதவங்க வந்திருக்கீங்க! என்ன சாப்பிடுறீங்க ? ;)
//உண்மையில இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.. கலக்கல்..//
சும்மா ஒரு ஒப்புக்கு சப்பாதானே! :) உண்மையிலேயே நன்றி! பெரிய பதிவங்க வாக்கு குட்டி பதிவங்களுக்கு தெய்வவாக்கு மாதிரி ;)
//ஒரு கொஞ்சம் விளங்கிச்சு.. (நான் காலத்திலை இருந்து இப்படித்தான்..)//
ம்ம்! என்ன செய்யிறது வேளககு கலியாணம் கட்டினது உங்கட பிழை :( ப்ச்
//மீதியை எதிர்பார்க்கிறோம்..//
நிச்சயமாக :)
//(உங்கட பதிவுல கும்மி களை கட்டுது போல?? நடக்கட்டும்.. நடக்கட்டும்.. )
எல்லாரையும் தங்கச்சி ஆக்காதேங்கோ.. சீதனம் குடுக்க வேண்டி வரும்.. ;)//
புலி வாலப்பிடிக்கிறதுன்னா என்னெண்டு பல காலமா எனக்கு டவுட்... ஆனா இப்பிடி பிராக்டிகல் எக்பீரியன்செல்லாம் கிடைக்குமெண்டு கனவிலயும் காணேல்ல :) ஹிஹி!
@ triumph!
:(
.....................
.................
..........
......
உண்மயா என்னால முடியல! :(
உனக்கு கோடி புண்ணியம் தாயே ! என்கூட சண்ட பிடிக்காத ப்ளீஸ்... அந்த பளாட்டினம் கூடவோ அல்லது உந்த லோசனண்ணா கூடவோ இல்லாட்டி உவர் கடுக்கன் கமல் கூடவோ போய் சண்ட பிடியப்பன்...என்ன ஆள விடு! :(
சுண்டெலிய பிடிச்சு சங்க நெரிக்கிறாங்கப்பா! அவளவள் பிற்காலத்துல புருசன் சோலிய முடிக்கிறதுக்கு நம்மில ட்ரெயினிங் எடுகிறாளுவ! உது நடக்காது! :@
@ தங்கை triumph!
Thanks for accepting my தங்கை request.... ஆளுக்கு ஒரு 50 லட்சம் சீதனமாக குடுக்க தருவியளே....? If Its the necessary case, I'll do for u sister.
பிளட்டினம் அண்ணா
எல்லாரும் Triumph தங்கச்சி தங்கச்சி 50 லட்சம் 60 லட்சம் எண்டு செல்லம் குடுத்தா, தம்பி நான் எங்க போறது?
//உண்மயா என்னால முடியல! :(//
என்ன தான் இருந்தாலும் புல்லட் அண்ணாதான் முதல் blogகெர் அண்ணா... உங்கள நிறய கஷ்டப்படுத்த மாட்டன்.. கொஞ்சமாகத் தான் டென்சன் செயவன்.. ஓகே ஓகே.. நோ டென்சன்...
எனக்கென்னவோ, உங்களுக்கு சரியான வயசாச்சுது போல ஒரு பீலிங்.. பேசாம கலியாணம் ஒன்டு கட்டுங்கோவன்.. நான் உங்களை தலய பிக்கவச்சு வச்சு பாதி மொட்டையாம் என்டு கேள்வி.. உண்மையே அண்ணா?
what to do.. if I dont bug someone then i cant slp :-( he he...
//சுண்டெலிய பிடிச்சு சங்க நெரிக்கிறாங்கப்பா! அவளவள் பிற்காலத்துல புருசன் சோலிய முடிக்கிறதுக்கு நம்மில ட்ரெயினிங் எடுகிறாளுவ! உது நடக்காது! :@//
ச்ச ச்ச.. அந்த அப்பாவி என்னை கட்டுவதே பெரிய விசயம்... அதுக்கு மேல எதுக்கு அவன கஷ்டப் படுத்தோணும்.. விட்டுடுவன்...
நான் நல்ல பிள்ளை ஆக்கும்... எல்லாரும் என்ன கட்டுறவன் அதிஷ்டசாலி என்டு எல்லே சொல்லுறவ... உங்களுக்கு அது தெரியாதே? நீங்கள் எல்லாம் ஒரு அண்ணரே...
நன்றி பிளட்டினம் அண்ணா...
//எல்லாரும் Triumph தங்கச்சி தங்கச்சி 50 லட்சம் 60 லட்சம் எண்டு செல்லம் குடுத்தா, தம்பி நான் எங்க போறது?//
இதை தான் பொல்லு குடுத்து அடி வாங்கிறது என்டு சொல்லுறது.. சின்ன பொடி என்டதால, ஒரு 25 லட்சம் குடன் தம்பி... ஹி ஹி...
//அது வடிவாக் கிடந்ததெண்டுதான் அட் பண்ணினான்... ம்ம் உங்களுக்காண்டி அழிச்சாச்சு :) இப்ப தெரியதுதானே? :)//
Thank You for Changing the Back Round. Thank You Very Much புல்லட் பாண்டி!
ம்ம்.. இப்ப நன்றாகவே தெரியுது.
//அய்யோ சரியா குளுருது ஹி ஹிஹி//
அது நீங்கள் AC(க்க) வேலை பாக்கிறதாலயாக்கும்!
நான் உண்மைய தானப்பா சொன்னன்.You R a Good Writer.
புல்லட் பாண்டி //
......
உண்மயா என்னால முடியல! :(
உனக்கு கோடி புண்ணியம் தாயே ! என்கூட சண்ட பிடிக்காத ப்ளீஸ்... அந்த பளாட்டினம் கூடவோ அல்லது உந்த லோசனண்ணா கூடவோ இல்லாட்டி உவர் கடுக்கன் கமல் கூடவோ போய் சண்ட பிடியப்பன்...என்ன ஆள விடு! :(
சுண்டெலிய பிடிச்சு சங்க நெரிக்கிறாங்கப்பா! அவளவள் பிற்காலத்துல புருசன் சோலிய முடிக்கிறதுக்கு நம்மில ட்ரெயினிங் எடுகிறாளுவ! உது நடக்காது! :@//
என்ன உந்தக் காத்துகளை என்ரை பக்கம் திசை திருப்பலாம் என்று ஆசையோ?/ வேண்டாம் சாமியோவ்!
ஆஹா ...
எலக்ட்ரானிக்ஸ் மட்டுமில்ல அதுக்கு முன்னேயிருந்த சிவில் மெக்கானிக்கல் டச்சிலும் சூப்பரான விளக்கம் கொடுத்துருக்கீங்க பாஸ்...!
பின்ன எலக்ட்ரிகல் விளக்கமும் டூ குட்...!
Post a Comment