நான் பங்குபற்றிய , சிங்களவருடன் மோதி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கணத்தில , சிறந்த வீரன் ஒருவனால் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வியந்த ஒரு யுத்தம் பற்றிய கதைதான் இது...
இது நடந்தது கிபி2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம்... எங்கட கொம்ப்யூட்டர் லாப் இல... :)
கோபப்படாதீங்க... ஒரு உண்மைச்சம்பவத்த அடிப்படயா வச்சு சாத்தியமான ஒரு முடிவத்தான் சொல்லவாறன்... அதுக்காக இத வாசிச்சு ஓவரா எதிர்பார்ப்ப கிறியேட் பண்ணிடாதீங்க...
எங்கும் மரண ஓலம்.... வெட்ட ப்பட்டு வீழந்த தலைகள் குதிரைகளின் குளம்புகளில் அகப்பட்டு நொருங்கும் ஓசையும் கேடயங்களில் வாள்கள்மோதித்தெறிக்கும் ஓசையும் கலந்து நாலாபக்கமும் எதிரொலித்துக்கொண்டிருந்தது... விழ விழ அலை அலையென வந்து கொண்டிருந்த குதிரைப்படைகள் எதிரி மாற்று நுட்பங்களை பயன்படுத்ததொடங்கிவிட்டிருந்ததை சொல்லாமல் சொல்லிற்று... வழமையாக ஒரு பெரிய அடி விழுந்ததும் வெள்ளைக்கொடியுடன் ஓய்வெடுக்கச்செல்லும் எதிரி இப்போது எத்தனை அடி விழுந்தாலும் பின்வாங்காது பயங்கர ஆக்ரோஷத்துடன் பாய்ந்து கொண்டிருந்தான்... இது யுத்த நுணுக்கங்கள் அறிந்திருந்த எல்லாளனின் படை க்கு திகிலை ஏற்படுத்தியது.... தொடர்ச்சியான வெற்றியால் உற்சாகமடைந்த துட்டகெமுனுவின் படை எல்லாளனின் உத்திகளையும் இடைக்கிடை பயன்படுத்தியவாறு தமிழர் சேனையின் கட்டடைப்புகளை சிதைத்தவாறு முன்னேறியது... அழிக்கமுடியாது எனக்கூறப்பட்ட எல்லாளனின் படைக்கு சிக்கலான நிலைமை... சற்று சுதாரித்து படை முன்னேறும் காட்டுவழிகளை அடைத்து படைகளை நிறுத்தி வைத்திருக்க மறிப்புச்சமரிலும் பலரை இழக்க வேண்டியேற்பட்டது...
ஒரு நேசப்படை யுத்தத்திலிருந்து விலகி துரோகியாக மாறிவிட வலிமையற்ற இன்னொரு நேசப்படை படைக்கல வழங்கலை சிறப்பாக மேற்கொள்வதில் சிரமப்பட எல்லாளனின் இந்த இக்கட்டான நிலையை விளங்கிவிட்ட எதிரி தன் நெசப்படைகளுடன் யுத்தத்தை தீவிரப்படுத்தியிருந்தான்...
இந்தா முடிந்துவிட்தென்று எதிரி கொகக்ரித்துக்கொண்டிருக்கும் போது எல்லாளன் தன் யுத்த
நடவடிக்கைளில் பெருமளவு மாற்றத்தைச் செய்கது கொண்டுவிட்டது எதிரிக்கு தெரிந்திருக்க வில்லை...
மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது AGE OF EMPIRES எனப்படும் கணணி விளையாட்டில்…. REAL TIME STRATEGY GAMES எனப்படும் விளையாட்டு வகையில் பிரபல்யமானது இந்த மைக்ரோ சொப்ட் நிறுவனம் உருவாக்கிய விளையாட்டு… அது பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம்….
இந்த விளையாட்டில் உங்கள் ராச்சியங்களை நீங்கள் எதிரியிடமிருந்து பாதுகாப்பதான் முக்கிய வேலை…முடிந்தால் அவன் மீது படையெடுத்து அவன் இராச்சியத்தை அழித்துவிட்டால் உங்களுக்கு வெற்றி…. உங்களுக்கு நேச நாடுகளும் எதிரி நாடுகளும் இருக்கும்… உங்கள் தேசத்தின் அடிப்படைக்கட்டுமானத்தையும் (உணவுற்பத்தி , கல்வி , தொழிநுட்பம் , சமயம் , வர்த்தகம் போன்றவை) அதே நேரத்தில் போரிடும் ஆற்றலையம் வளர்த்துக்கொள்வதே விளையாட்டின் பிரதான அம்சம்… நேச நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் படையுதவி , நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்… அதிருப்தி ஏற்பட்டால் கட்சிமாறவும் முடியும்…. அந்த விளையாட்டில்தான் எல்லாளனாக விளையாடிய றஜீக்கு இப்போது இந்த நிலமை…
அவனது தந்திரங்களும் தாக்குதல் உத்திகளும் கம்பஸில் யுழுநு சமூகத்தில் பேர்போனவை… வெல்ல முடியாது என்று நினைத்திருந்தவனை 3.5 மணித்தியாலமாக சமாளித்ததோடல்லாமல் கடுமையான இழப்பையேற்படுத்தியிருந்தான் துட்டகைமுனுவாக விளையாடிய லசியா… லசியா ஒன்றும் கல்லுளிமங்கனல்ல.. கடும் நரியன்… இவ்வளவு காலமும் றஜீ விளையாடிய விளையாட்டுகளை றெக்கோட் பண்ணி தீருப்பி திருப்பி போட்டுப்பாத்து ஒரு ப்ளான் ஒன்றுடன்தான் இறங்கியிருந்தான்….
அதுதான் இப்போ றஜீக்கு வேர்க்க வைத்துவிட்டது…
வழமையாக ஒரு அணியை மோதலுக்கு அனுப்பிவிட்டு உட்கட்டுமானத்தை சீரமைப்பதில் நேரத்தை செலவிடும் லசியா இம்முறை ஒட்டுமொத்தமாக நிதி மற்றும் படைக்கல உதவிக்கு நேச நாடுகளை கோரிவிட்டு எல்லாளன் சிறிதும் ஓய்வெடுக்க விடாதவாறு சாரிசாரியாக அணிகளை அனுப்பிக்கொண்டிருந்தான்… சென்ற அணிதிரும்பி வந்ததா என்று அவன் கவலைப்படவில்லை… விளைவு அவனுக்கு சாதகமாக அமைந்திருந்தது… எல்லாளனின் நேசப்படையாக விளையாடிய சுகந்தன் நேரம் போய்விட்டது என்று சொல்லி விளையாட்டிலிருந்து விலகியதோடு மட்டுமில்லாது எங்கெங்கு எல்லாளன் படைகளை நிறுத்தியிருக்கிறான் என்று போகும்போது லசியாவுக்கு சொல்லிவிட்டு போய்விட்டான்… மற்ற நேசப்படையாக விளையாடிய புல்லட்டும் சோர்ந்துபோய் எல்லாளன் மீது நம்பிக்கை இழந்து எல்லாளனுக்கு வளங்கிய உதவிகளை மட்டுப்படுத்தி தான் மோதலை முன்னெடுக்கலானான்… ஆனால் அனுபவம் குறைந்த அவனாலும் எதிரிப்படைகளை சமாளிக்க முடியவில்லை…. அடிக்க அடிக்க அலைஅலையாய் வந்துகொண்டிருந்தன எதிரிப்படைகளும் பீரங்கிகளும்….
எல்லயோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலணிகள் சிதைக்கப்பட்டு நகரங்களுள்ளும் புகுந்துவிட்டது எதிரிப்படை… அமெச்சூர் புல்லட்டைக்கணக்கிலெடுக்காவிட்டால் , மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எல்லாளன் மோதிக்கொண்டிருந்தான்… சிறிது நேரம் நின்று அடிபடுவதும் பின்பு பின்வாங்குவதுமாக செல்ல ஒரு குறுகிய பிரதேசமே எல்லாளனின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்தது… ஆங்காங்கே விறகுவெட்டிக்கொண்டிருந்த இ விவசாயம் செய்து கொண்டிருந்த எல்லாளனின் மக்கள் பலியெடுக்கப்ட்டார்கள்… கும்பல் கும்பலாக அவர்கள் செத்தபோது லசியாவின் சப்போட்டர்கள் கரகோசம் செய்து மகிழ்ந்தனர்… இது எல்லாளனது முதலாவது தோல்வியென பார்வையாளர்களால் எதிர்வு கூறப்பட்டது…
இந்நேரம் இந்த விளையாட்டைப்ற்றி ஒன்று கூறவேண்டும்… அதில் பொதுமக்களோ படையினரோ மொத்தமாக 200 பேர்தான் ஒரு நேரத்தில் இருக்கமுடியும்… ஆனால் சாக சாக 200 வரும்வரை உருவாக்கிக்கொள்வதில் தடையேதுமில்லை.. அதற்குரிய நிதி மற்றும் வளங்கள் இருந்தால் சரி… லசியா தன் மக்களில் 100 படையினர் , 100 பொதுமக்கள் வைத்திருந்தான்… எல்லாளன் பற்றி தெரியவில்லை…
ஏதோ அவனது பொதுமக்கள் செத்தக்கொண்டிருந்தனர்… நேரம் நன்றாகப்போய்விட்டது… சரியாக இருண்டுவிட்டதால் பார்வையாளர்கள் மெதுமெதுவாக விலக ஆரம்பித்தனர்….
ஆனால் இன்னும் யுத்தம் முடிந்தபாடில்லை… இன்னொரு அரை மணிநேரம் போக களத்தில் ஒரு முன்னேற்றமும் காணப்படாமல் விட விசனமடைந்த லசியாவின் நேசப்படைகள் இரண்டும் விளையாட்டிலிருந்து விலகி போய்விட்டன.. அப்பொதுதான் அதிசயம் நிகழந்தது…
எங்கிருந்தோ சாரைசாரையாக வந்த எல்லாளனின் படைகள் அடிக்கத்தொடங்கின.. அடியென்றால் சும்மா அடியில்லை மரண அடி.. உள்நுழைந்த லசியாவின் படைகள் சின்னாபின்னமாக தொடங்கின…. என்ன ஏது சுதாரிக்க முடியவில்லை… பிரித்து நொருக்கியவாறு எல்லாளனின் படைகள் முன்னேறின.. என்னடாவென்று பாரத்தால் எல்லாளனிடம் ஒரு பொதுமகனும் இருக்கவில்லை…200பேரும் படையினர்.. பொதுமக்களை லசியா கொன்றபோது எல்லாளனின் மக்கள் அனைவரும் படையினராவர் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை…. விளைவு லசியாவை மீண்டும் தன் பழைய இடங்களுக்கு பேரிழப்புடன் திரும்பிச்செல்ல வைத்தது… அங்கு அவன் உட்கட்டுமானங்களை கவனிக்கத்தவறியிருந்தமையால் மறுபடி போர்செய்யம் ஆற்றலை இழந்திருந்தான்… மேலும் சண்டையிட்டு தோற்க விரும்பாமல் மரியாதையாக நேரம் போய்விட்டதென்று கூறி ரிசைன் செய்துவிட்டு சென்றுவிட்டான்… 6 மணித்தியாலங்களாக நீடித்த சண்டைக்கு இப்படி ஒரு திடீர் முடிவு… கூட விளையாடிய புல்லட்டே இப்படியாகும் என எதிர்பார்க்கவில்லை… ஆனால் ஏல்லாளன் வெற்றிபெற்றதும் அவனது வெற்றியில் தனக்கும் அரைப்பங்கென்று கூவிக்கொண்டுதிரிந்ததாக கேள்வியாம்;…
இதை வைத்து ஒன்றும் அதீதமாக கற்பனை செய்துகொள்ளவேண்டாம்… நிஜ சம்பவங்களுடன் ஒப்பிட்டுப்பாரப்வர்களுக்கு ஒரு விடயம்…. நான் ஒரு அவதானியே தவிர யாரினதும் ஆதரவாளன் இல்லை …. அத்தோடு கம்ப்யூட்டரில் விளையாடுபவர்களுக்கு வலி , வெயில் , மழை , நோய் எதுவும் தெரிவதில்லை…
“எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்…. “ என்று நம்புவோம்….
ஆனால் வந்த எல்லோரும் பின்வரும் ஒளிப்பதிவை முடியும் வரை பாத்துவிட்டுச்செல்லவும்….
இங்கு இந்த எருமைக்குட்டியை இலங்கைத்தமிழனாயும் தாய்மாடுகளை இந்தியத்தமிழர்களாயும் பார்த்தால்….
உங்கள் எண்ணக்கருத்துக்களை நாகரிகமான முறையில் வெளியிடுங்கள் என்று நயந்து கேட்கிறேன்..
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
21 Responses
வீடியோ எடுத்தவன் வாகனத்தில் ஐ.நா. கொடி இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும், இந்த வீடியோ மிருகவதைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படும் என்பதால் நீக்கிவிடவும். :(
//ஆனாலும், இந்த வீடியோ மிருகவதைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படும் என்பதால் நீக்கிவிடவும்//பிரச்சனையில்லை...இந்த வீடியோவை வைத்து National Geographic channel இல் நேற்று அரைமணிநேரம் ஒரு புறோக்ராம் செய்தார்கள்... உலகத்திலேயே அதிசிறந்த வனவியல் படப்பிடிப்புகளில் இதுவும் ஒன்றாம்... சிங்கங்களால் குதறப்பட்டு முதலயால் பிய்க்கப்பட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்றிருந்த கணத்தில் ஏற்பட்ட திடீர்த்திருப்பம் எத்தனையோ கோடிப்பேரை மெய்சிலிர்க்க வைத்திருப்பது youtube commentகளிலிருந்து தெரிகிறது...
ஆஹா...சூப்பர் சூப்பர்..இத்தன நாளும் கற்பனைல இருந்த காட்சிக்கு உருவம் குடுத்திருக்கீங்க..Thumbs up!
Computer Lab என்பதால் முதலே Age of Empires என்று தெரிந்து விட்டது.. எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.. ஆனால் network இல் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை இதுவரை.. :(
6 மணித்தியாலம் = 6 வருஷம்???
//நான் ஒரு அவதானியே தவிர யாரினதும் ஆதரவாளன் இல்லை ….
ரொம்ப முக்கியம் :P
//அத்தோடு கம்ப்யூட்டரில் விளையாடுபவர்களுக்கு வலி , வெயில் , மழை , நோய் எதுவும் தெரிவதில்லை…
ம்.. ம்.. :(
தெரியாத முடிவு தவிர மற்றயவை அச்சொட்டாகவே இருக்கு...
ஹாஹா...
புல்லட்...அட்டகாசம்..
ரசித்தேன்...மகிழ்ந்தேன்...எதிர்பார்க்கிறேன்....:-)
மறுபடியும் ஒரு பாராட்டுக்கள் :-)
//தியாகி சொன்னது…
ஆஹா...சூப்பர் சூப்பர்..இத்தன நாளும் கற்பனைல இருந்த காட்சிக்கு உருவம் குடுத்திருக்கீங்க..Thumbs up!//
நன்றி தியாகி... :)
//Vishnu சொன்னது…
Computer Lab என்பதால் முதலே Age of Empires என்று தெரிந்து விட்டது.. எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.. ஆனால் network இல் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை இதுவரை.. :( //
உங்க ளிடம் ADSL கனக்சன் இருந்தால் மல்டிப்ளேயர் விளையாடமுடியும்.. ரௌட்டரில்சில போட்களை (6200-6230 என்று நினைக்கிறேன்..)திறந்துவிடவேண்டும்... பின்பு gamespy arcade எனும் சொபட்வெயாரை இன்ஸ்டோல் செய்வதன் மூலம்இன்டநசனல் பிளேயர்களுடன் இணைந்துகொள்ள முடியும்.. வயர்லெஸ் ப்ரோட்பான்ட் பற்றி தெரியவில்லை.. ஸ்டபிள் பாண்ட்விட்த் கிடைக்காத காரணத்தால் விளையாட்டிலிருந்து நடுவில்டிஸ்கனக்ட் ஆக வாய்ப்புண்டு.. ஆனால் வெளிநாட்டுக்காரங்கள் உதோடதான் நாள்முழுக்க கிடக்ிறவங்கள்... பிரிச்சு மேஞ்சுருவாங்க கவனம்...
//நான் ஒரு அவதானியே தவிர யாரினதும் ஆதரவாளன் இல்லை ….
ரொம்ப முக்கியம் :P //
:P ....... :D
// தெரியாத முடிவு தவிர மற்றயவை அச்சொட்டாகவே இருக்கு... //
:D
//டொன்’ லீ சொன்னது…
ஹாஹா...
புல்லட்...அட்டகாசம்..
ரசித்தேன்...மகிழ்ந்தேன்...எதிர்பார்க்கிறேன்....:-)
மறுபடியும் ஒரு பாராட்டுக்கள் :-)//
மிக்க நன்றி டான்லீ :)
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.
பாராட்டுக்கள்.
வாழ்க தமிழினம்.
அருமையான பதிவு... இன்னும் முன்னேற்றமா பல வழிகளில் முறியடிப்பு பற்றி யோசிச்சு எழுதினா நல்ல இருக்கும்... ஆஹா ஓஹோ என்று புளுக முடியவில்லை, ஏனென்றால் இதுமட்டும் தான் வழி என்ற மாதிரி முடிசிட்டீங்கள். ரஜிட்ட கேட்டு வேற உபாயம் இருந்தால் அதையும் எழுதலாமே...
அண்ணா சூப்பர் பதிவு.... எனக்கு அரசியல் விளங்கவில்லை என்றதால், அந்த பக்கம் நான் எதுவும் சொல்ல விரும்பல....அரசியல விட்டு வாசித்தால் அருமையான விவரணம்.....
இப்பதான் ஆபீஸில் இருக்கும் மூணு சீனியர் நாய்கள் என்னை குதறி அனுபிச்சுதுகள்.....சோ அப்செடை இல்லாமல் ஆக்க உங்க ப்லோக் வாசிக்கலாம் என்று வந்தேன்.....சிரிச்சேன் ....
//புல்லட் பாண்டி சொன்னது…
//**கூட விளையாடிய புல்லட்டே இப்படியாகும் என எதிர்பார்க்கவில்லை… ஆனால் ஏல்லாளன் வெற்றிபெற்றதும் அவனது வெற்றியில் தனக்கும் அரைப்பங்கென்று கூவிக்கொண்டுதிரிந்ததாக கேள்வியாம்;…**//
இங்கேதான் கூட சிரிச்சேன் ....நன்றி அண்ணா ....
ம்....உங்கை என்ன நடக்குது?? இப்பவே அருஸுக்கும், சபேசனுக்கும், விதுரருக்கும் புல்லட் மேலை ஆத்திரம் வந்திருக்கும்???
புல்லட் அடுத்த தனது ஆய்விலை அருஸ் இப்பிடி எழுதப் போறதாகக் கேள்வி...
‘தனது ஆய்வு நுட்பங்களைத் திருடிய புல்லட்’
இதனால் தாக்குதல் நுட்பங்கள் சீர் குலைந்து விட்டன...
இப்படியும் இனி ஆய்வு வரும்???
நான் கொஞ்சம் பிசி..தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...நிலமையைப் புரிந்து கொள்க....
நல்லதொரு பதிவு...
பதிவு யதார்த்தம் கலந்த எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்...தொடருங்கோ...
அப்ப குரல் பதிவு எப்ப வரும்?>>>
//குடுகுடுப்பை சொன்னது…
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.
பாராட்டுக்கள்.
வாழ்க தமிழினம்//
நன்றி நன்றி!
//வானம்பாடி சொன்னது…
அருமையான பதிவு... இன்னும் முன்னேற்றமா பல வழிகளில் முறியடிப்பு பற்றி யோசிச்சு எழுதினா நல்ல இருக்கும்... ஆஹா ஓஹோ என்று புளுக முடியவில்லை, ஏனென்றால் இதுமட்டும் தான் வழி என்ற மாதிரி முடிசிட்டீங்கள். ரஜிட்ட கேட்டு வேற உபாயம் இருந்தால் அதையும் எழுதலாமே...//
கிழிஞ்சுது!போட்டுத்தள்ளுறதெண்ட ஒரே முடிவோட வந்திருக்குறீங்க போல கிடக்கு..
இரண்டு முடிவு சொல்லியிருக்கிறன்...
இரண்டாவதுதான் அந்த காணொளி... சிம்பாலிக்கா சொன்னா புரிஞ்சுக்கணும்..
;)
// Saraketha சொன்னது…
அண்ணா சூப்பர் பதிவு.... எனக்கு அரசியல் விளங்கவில்லை என்றதால், அந்த பக்கம் நான் எதுவும் சொல்ல விரும்பல....அரசியல விட்டு வாசித்தால் அருமையான விவரணம்..... //
தெரிஞ்சாலும் புரிஞ்சாலும் அடக்கி வாசிக்கிறதுதான் உடம்புக்கு நல்லது
;)
// இப்பதான் ஆபீஸில் இருக்கும் மூணு சீனியர் நாய்கள் என்னை குதறி அனுபிச்சுதுகள்.....சோ அப்செடை இல்லாமல் ஆக்க உங்க ப்லோக் வாசிக்கலாம் என்று வந்தேன்.....சிரிச்சேன் ....
அடப்பாவி இது சிரிக்கிறதுக்காக எழுதலப்பா! சிந்திக்கிறதுக்காக எழுதினேன்..
நான் சீரியசா எழுதினாலும் சிரிக்காய்ங்களே நான் என்னத்த செய்ய ?
// கமல் சொன்னது…
நான் கொஞ்சம் பிசி..தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...நிலமையைப் புரிந்து கொள்க.... //
அதானே பாத்தன்... பின்னூட்டசூறாவளியைக்காணேல்ல எண்டு...
சரிசரி வேலைதான் முக்கியம்... இதெல்லாம் பேந்து... அம்மம்மாவ கேட்டதா சொல்லுங்க.. கவினுகக்கு என் வருத்தங்கள தெரிவியுங்கோ..
// நல்லதொரு பதிவு...
பதிவு யதார்த்தம் கலந்த எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்...தொடருங்கோ...//
நன்றி கமல்... நல்லா ஊக்குவிக்குிற சிறந்த பதிவர் நீங்க..
// அப்ப குரல் பதிவு எப்ப வரும்?>>> //
பேசாம உங்கட பேர விடாக்கண்டன் எண்டு வச்சுக்கொள்ளுங்களன் நல்லாருக்கும்.
;)
இது ஏதோ...................................?
Well Done Bullet! நான் இந்த விளையாட்டு பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் தாங்கள் கூறும் விளையாட்டு நன்றாகவே புரிகிறது.
நானும் அதே தான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்
வாழ்க எங்கள் தமிழ் இனம்,
வளர்க எங்கள் தமிழ் மொழி.
வீர முழக்கமே எங்கள் வெற்றி முழக்கமாகட்டும்!
நள்றி யாழினி!
இந்தப் பதிவும் காட்சியும் ஒரேமாதிரியான செய்தியைத்தான் சொல்லுது. ம்... பாக்கலாம்..
Post a Comment