இண்டரஸ்டிங்காக கொஞ்சம் எலக்ரானிக்ஸ் : வேவ்ஸ் அன்ட் வைப்ரேசன்ஸ்

    பகுதி 1 : இண்டரஸ்டிங்காக கொஞ்சம் எலக்ரானிக்ஸ் :அறிமுகம்


    இண்டைக்கு நாங்க பாக்கப்போறது அலைவுகள் மற்றும் அதிர்வுகளப்பற்றி வானொலி , டிவி , போன் போன்றவை ஊடாக நடைபெறுற கமியூனிகேசன் பற்றி தெரிஞசுக்கிறதுக்கு , உந்த இழவு ஏன் தேவைன்னு கேட்டீங்களெண்டா , பதில் இதுதான்.. waves உம் vibration உம் தாங்க இன்னிக்கு நீங்க ஒரு வெப்சைட்டுடாக இலங்கையில வீட்டிலருந்து நான் அப்டேற் செய்த இந்த பதிவ படிக்கிறதுக்கு காரணம்புரியலயா? கவலப்படாதீங்க.. மெதுமெதுவா சொல்லறன்





    கடவுள் உலகத்த படைச்சப்போ கூடவே சக்தியையும் (அதாவது energy யையும் ) படைச்சார்…. உலகம் மண்டையப்போடாம இயங்குறதுக்கு அந்த சக்தி பூமிண்ட எல்லா ப்பகுதிக்கும் தேவைப்பட்டது அந்த சக்தி சூரியனிலருந்து உருவாகி நெடுந்தூரம் பயணப்பட வேண்டியிருந்திச்சுபூமிய அடைஞ்சாப்புறமும் பூமிக்கயே நிறயத்தூரம் போக வேண்டியிருந்திச்சு ஆனா பாவம் அந்த சக்திக்குதான் கைகால் இல்லையே அதால எப்பிடி எல்லா இடமும் போகமுடியும்? , (நம்மூரிலதான் சக்தி ரவுடி மினிஸ் டர்ஸ் கூட சண்டைல்லாம் பிடிக்கும் , கண்டுக்கப்படாது ;) )

    இப்ப என்னடா செய்யலாம் எண்டு யோசிச்சிகிட்டிருக்கும் போதுதான் கடவுள் ஆதாமுக்கு ஆப்பு வைச்ச பாம்பை பாத்திருப்பார் பொலபாம்பு கைகாலில்லாம எப்பிடி மூவ் பண்ணுதோ அத மாதிரி சக்தியையும் நெளிஞ்சு நெளிஞ்சு மூவ் பண்றாபபல பண்ண வைக்க யோசிச்சார்செஞ்சும் விட்டார் ..

    அதாவது சக்தி மூவ் பண்ணும் போதுஅலைமாதிரிதான் போகும்

    இப்பதான் பரீக்குவென்சியெங்கிறத பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறன்.



    அலைகளென்றால் அவற்றுக்கு அதிர்வெண் அதாவது ப்ரீக்குவென்சி என்று ஒரு பண்பு இருக்கும்.. அதாவது ஒரு செக்கனுக்கு அது எத்தன தடவ பாம்பு மாதிரி நெளியுது எங்கிறததான் ப்ரீக்குவென்சி என்பாங்க…. ஆகவே சிலது செக்கனுக்கு 1 தடவை நெளியலாம் அல்லது 1000000தடவை நெளியலாம்இல்லாட்டி 17 செக்கனுக்கு ஒருக்கா கூட நெளியலாம். அதிலருந்து ப்ரீக்குவென்சிய கல்குலேட் பண்ணிக் கொள்ளலாம்உதாரணத்துக்கு மெலே கூறப்பட்ட அலைகளென்ட பரீக்குவென்சிகள் முறையே 1Hz , 10MHz மற்றும் 0.006Hz.( 1/17 Hz) ஆக வரும்...


    விளங்காட்டியும் பரவாயில்ல ஆனா அலை எண்டால் அதுக்கு ப்ரீக்குவென்சி எண்டொரு பண்பு .இருக்குமெண்டு ஞாபகம் வச்சுக் கொள்ளுங்க

    அப்பத்தான் கடவுள் சக்தி (energy) யை கூப்பிட்டார.. அதுவும ஒரு கும்பலா வந்து நிண்டுச்சுஅதுல கொஞ்சத்தை தூக்கி பிள்ளையள் நீங்க 1 Hz பண்புடைய அலை வடிவில போங்க.. இன்னும் கொஞ்சப்போர் 10 Hz இல போங்க எண்டு பஸ்ஸில ஏத்தி அனுப்பி விடுற கணக்கா ஏத்தி அனுப்பிவிட்டார்





    ஆமாங்க
    உலகத்தில இப்ப எல்லா ப்ரீக்குவென்சிலயும் சக்தி , நாம பஸ்ஸில காரில போறாப்பல உலவிக்கிட்டிருக்குஇதில என்ன சிறப்பெண்டால் சில பஸ்ஸில போற சக்திய எம்மால கேட்க முடியும்.. சில பஸ்சில போகிற ஆக்களை நம்மால பார்க்க முடியும்.. அதுகளத்தான் நாம ஒலி ஒளிண்டெல்லாம் அழைப்போம்அப்பிடியே கடவுள் அந்த சக்திய றிசிவ் பண்ண இயற்கையான சில றிசீவர்களையும் படைச்சு விட்டார்…20Hz to 20000Hz எங்கிற பஸ்ஸில வாற ஒலிய றிசீவ் பண்ண காதையும் ஒளியை றிசீவ் பண்ண கண்ணையும் அதற்கு உதாரணங்களா கூறலாம்சில ப்ரிக்குவென்சி அலைகள சூரியன் உருவாக்க மிகுதிகள் பூமிலயே உருவாக்கப்டுறமாதிரி சில சிஸ்டங்கள (ட்ரான்ஸ்மிட்டர்கள்) பூமில அறிமுகப்படுத்தினார்அதில ஒண்ணுதாங்க நம்ம தொண்டை




    [ சத்தியமா மேல இருக்கிறது தொண்டை தாங்க...... விகிபிடியாவில சுட்டேன் ]



    பிறகாலத்துல மனுசன் வெவவேறு ப்ரீக்குவென்சில வாற அலையள கண்டு பிடிச்சு அதுக்கு UV , infrared , UHF ,VHF எண்டெல்லாம் பெயரிட்டான்.. பிறகு ஏன் கடவுள் மட்டும்தான் றிசீவர , ட்ரான்ஸ்மிட்டர படைக்கோணுமோ தான் உருவாக்கினா என்னண்டு கேட்டு மைக் ஒலிபெருக்கி போன்றதுகள படைச்சான்.. மின் விளக்குகள படைச்சான்

    இப்பிடியே முன்னேறிக்கிட்டு போகும் போதுதான் அவனுக்கு ஒரு டவுட்டு வந்துதுநாம் என்னத்ததான் ஒலிய ஒளிய படைச்சாலும் அதுகளெல்லாம் கடவுள் சொன்ன பஸ்ஸிலதான ஏறிப்போகுதுகள் (அதுதாங்க ப்ரீக்குவென்சிய சொன்னேன்…) ? அத ஏன் மாத்தேலாது?

    டேய் ஒலி ! நீ இனி மின்காந்த அலையின்ட பஸ்ஸிலதான் ஏறிப்போகணும்.. அதாவது அதோட பரீக்குவென்சிலதான் போகணும்அப்படின்னு ஒலிய பிடிச்சு வெருட்ட அதும்ஹூம் ! மாட்டேன் மாட்டேன்னு அடம் பிடிச்சுது

    அட இப்ப என்னடா செய்யுறதுன்னு நம்மாளு யோசிச்சிக்கிட்டிருக்கிறப்பதான்மொடுலேசன்என்ற பிரம்பு கடைப்பக்கமா விற்பனைக்கு வந்திச்சு (modulation technology யதாங்க அப்பிடி சொல்றேன்) … அதால ரெண்டு பூசை போட அம்மா ஆத்தேன்னு ஓடிப்போய் மின்காந்த அலையோட பஸ்ஸில ஏறி இருந்திட்டார் நம்ம ஒலிஅதுக்கப்புறம்தாங்க ரெடியோ உருவாகிச்சு


    மொடுலேசன் எங்கிறத பற்றி இப்ப அதிகமா வொறி பண்ணிக்காதீங்கபிறகு பாத்துக்கலாம்ஜஸ்ட்டு அது மூலமா ஒலிய மின்னாந்த அலையோட பரீக்குவென்சிக்கு சிப்ட் பண்ணலாம்னு ஞாபகம் வச்சுட்டாலே போதும்இந்த பதிவோட நோக்கமே உங்களுக்கு மொடுலேசன் பற்றி அறிமுகப்படுத்துறதுதாங்க.. ஏன்னா டிவி ரெடியோ பற்றி பாக்க கட்டாயம் அது தேவைஅடுத்த பதிவில எப்.எம் ரேடியோ பற்ற விரிவா பாப்போமுங்க..

    26 Responses

    1. ////அடுத்த பதிவில எப்.எம் ரேடியோ பற்ற விரிவா பாப்போமுங்க..///

      அப்பாடா கிலாஸ் முடிந்தது!

      தேங்கியு சேர். சி யு லேட்டர்.

    2. அட...விசயம் இப்பிடியோ போகுது? நான் பிசிக்ஸிலை உந்த வேவ்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்

    3. ///இதில என்ன சிறப்பெண்டால் சில பஸ்ஸில போற சக்திய எம்மால கேட்க முடியும்.. சிலதில போறாக்கள நம்மால பார்க்க முடியும்///

      "போறாக்கள" என்றால் என்ன? விளங்கவில்லை. திட்டிறாதிங்க!

    4. Thank you kalai!

      உண்மையா இது தொழிநுட்பம் சற்றேனும் சாராதவர்களுக்காக எழுதப்பட்டது.. சும்மா என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்குவமே எண்டு ஒரு பத்து நிமிசம் மட்டும் ஒதுக்குறாக்களுக்குரியது.. ஆகவே சாதாரண வரைவிலக்கண முறைகளிலிலருந்து விலகி என்ட பாட்டுக்கு விளையாடியிருக்கிறன்.. இதை பாடமாக்கி இப்பிடித்தான் எண்டு நெச்சுக்காதீங்க... இத தெரிஞ்சு கொண்டீங்களெண்டால் மேலதிகமா புத்தகத்த வாசிச்சு அறிஞ்சு கொள்ளலாம்... அல்லது என்னட்ட கேட்கலாம்... உண்மையா ஒரு தொழிநுட்ப மாணவனுக்கு இத பாத்தா சிரிப்பா இருக்கும்... :)

    5. புல்லரிக்க வச்சிடீங்க புல்லட்!
      நீங்க பேசமா வாத்தியார் வேலைக்கு போயிடுங்களேன் எல்லோருக்குமே 3A' s தான்.
      எங்கட வாத்தி கூட இவ்வளவு அழகா Science சொல்லித் தந்து நான் பாக்கேல்ல!

    6. Thanks kamal!

      @ Kalai! போறாக்கள என்றால் போகும் ஆட்களை என்று யாழில் அழைப்போம்

    7. யாழினி மறுபடியுமா! ஹிஹி! நன்றி நன்றி :)

    8. நான் உந்த அலைகளைப் பற்றி O/L இலை படிச்சது பாலா சேரிட்டைத் தான்?? மனுசன் எப்பிடி விளங்கப்படுத்தும் தெரியுமோ? சென்றல் கொலிஜ் பொடியளுக்கு வேம்படிப் பொட்டையள் மீதும் சுண்டுக்குளிப் பொட்டையளுக்கு சென் ஜோன்ஸ் பொடியள் மேலையும் உள்ளது தான் ஈர்ப்பு, அது தாக் அலைகளுக்கும் உள்ளது என்று விளக்கம் கொடுப்பார்?? அது ஒரு காலம் புல்லட்???

    9. புல்லட் கையைக் குடுங்கோ??? உங்காலை வெள்ளவத்தைப் பக்கம் பாட் ரைமாக மணித்தியாலத்துக்கு நாநூறு ரூபா படி சயன்ஸ் வகுப்பு எடுக்கலாமே? பிசிக்ஸும் படிப்பிக்கலாமே பொஸ்?? மெய்யாத்தான் சொல்லுறன்?? அறிவியல் பதிவிலையும் அசத்துறீங்கள்? விளக்கம் எல்லாம் இலகு நடையிலை இருக்கு?? தொடருங்கோ....

    10. அட்டகாசமாத்தான் இருக்கு புல்லட். நாங்கள், மொத்தச் சொத்து சமன் மொத்தப் பொறுப்பெண்டு காலத்தை ஓட்டினபடியால் இந்த விவரமெல்லாம் இல்லாமப்போச்சு. கொஞ்ச விசயம் எங்களுக்கு ரெயினிங் எண்டு குடுத்த சில பொறியிலாளர்கள் சொன்னவைதான். ஆனா சிங்களத்தில சொன்னபடியா, எதோ விளங்கிச்செண்டு மண்டய மண்டய ஆட்டிப்போட்டு விட்டுட்டன். இப்ப அறிஞ்சுகொள்ளுற ஆர்வம் வந்திருக்கு. கூடவே கொஞ்ச டவுட்டும் இருக்கு. அதை, நீங்கள் எப்.எம் ரேடியோவப்பற்றி வகுப்பு நடத்தினபிறகு கேக்கிறன்...

    11. கடவுள்...இதை தவிர்த்திருக்கலாம்....சக்தியின் தோற்றப்பாடுகளை விபரிக்கேக்க கடவுள் கொள்கை தேவையில்லை...புல்லட்...கடவுள் தான் சக்தியின் தோற்றுவாய் என்பது தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கிறேன்..

      எனிவே...நல்ல ஆக்கம்...இயல்பு தமிழில் அழகாக இருக்கு. தொடருங்கோ..

    12. புல்லட், கலக்குறேள் போங்கோ...

      மொடுலேஷன் டெக்னாலஜி பத்தி தெரியாதவங்க இதப் படிச்சதும் மொடுலேஷன் பத்தி கொஞ்சமாவது விளங்காம இருக்க முடியாதுங்கிற அளவுக்கு எழுதியிருக்கீங்க...
      நல்ல விஷயம்...
      இது தொடர்பாக அடுத்த பதிவை விரைவில எழுதுங்கோ...

      வாழ்த்துகள்...

    13. மற்றது அன்டைக்கு வந்து பாத்துட்டு எங்க வேலை செய்யுற என்டு கேட்டீங்க...
      நான் மாணவன் தான்..
      இப்ப தான் உயர்தரம் முடித்தேன்...
      :-)

      கறுப்பு விளக்கு (black light) பத்தி ஒரு பதிவு போடுறேன் இன்டைக்கு..
      முடிஞ்சா வந்து பாருங்க...
      :-)

    14. தொடர்ந்து எழுதுங்கள்..

      வாழ்த்துக்கள்...

    15. இன்னும் சொல்லுங்க,படிக்க ஆவலாய் இருக்கேன்.
      நன்றி.

    16. அறிவியல் அறிவை வளர்க்கும் தங்கள் முயற்சிக்கு நன்றி. இன்னும் சொல்லுங்க,படிக்க ஆவலாய் இருக்கேன்.இன்னம் உங்களிடம் நிறைய எதிர் பார்கிறேன்.
      நன்றி.

    17. மறக்க நினைக்கிறதெல்லாம் திரும்ப திரும்ப தட்டி எழுப்பி விட்டுர்றீங்க பாஸ்...ஹிஹிஹி..ஆனா என்ன ஒண்டு, இத எல்லாம் வாசிக்கேக்க பழசெல்லாம் பட பட எண்டு ஞாபகம் வருது...Thank you! நல்லா இருக்கு..

      (பாஸ், உங்களுக்கு நான் ஒரு ஈ மெயில் அனுப்பின்னான்.......................)

    18. இந்த அலை எல்லாத்தையும் உருவாக்கிறது போட்டன் என்னும் குட்டி குட்டி குட்டி (கண்ணுக்கு தெரியா என்றதால 3 தரம் குட்டி போட்டன் ) துணிக்கை என்றும், இப்படி மனித வாழ்க்கையில் குட்டி குட்டி குட்டி துணிக்கையின் மாயா ஜாலம் பற்றியும் விளக்கி சொல்லுங்கோவன்.... லொள்... என்ன தன் பிச்சு பிடுங்கினாலும் விஷயம் தெரியாதவனுக்கு நல்ல முறைல விளங்கப் படுத்திற திறமை மேச்க தக்கது.. தயவு செய்து இதை பிழையா உங்கட சொந்த கருத்துக்களை மற்றவர் மனதில விதைக்க பயன்படுத்தாதியுங்கோ...

    19. The article is good. But, I was wondering why you have given some statement under some pic for sometimes. Now only it strikes me. Annaalum this is too too much annaaai... Didnt u get any other pic. The guy next to me was grinning when I was reading ur article... eeeeewwwwwwwwww... :@:@:@

      I had to read twice as your writing (slang) changed completely. So, it was quite difficult. Anyways, its good as usual. Do write more. Increase the content. :-)

      The old link you asked once. http://nanaadhavan.blogspot.com/2009/03/18.html

    20. @ கமல்

      நான் உந்த அலைகளைப் பற்றி O/L இலை படிச்சது பாலா சேரிட்டைத் தான்?? மனுசன் எப்பிடி விளங்கப்படுத்தும் தெரியுமோ? சென்றல் கொலிஜ் பொடியளுக்கு வேம்படிப் பொட்டையள் மீதும் சுண்டுக்குளிப் பொட்டையளுக்கு சென் ஜோன்ஸ் பொடியள் மேலையும் உள்ளது தான் ஈர்ப்பு, அது தாக் அலைகளுக்கும் உள்ளது என்று விளக்கம் கொடுப்பார்?? அது ஒரு காலம் புல்லட்??? //

      ம்ம்! அதோட வெறுத்திருக்கும் பெடியங்களுக்கு பெட்டையள் சகவாசம் :)! சுண்டுகுளிப்பெட்டையள் எங்க ஈர்ப்பா இருந்தவளயள்? தலையில ஈர் பேனோடதான் இருந்தவளயள்.. படுபாவியள் ஒரு ஓரக்கண்ணாலயாவது பாக்கப்படாதா?

      //புல்லட் கையைக் குடுங்கோ??? உங்காலை வெள்ளவத்தைப் பக்கம் பாட் ரைமாக மணித்தியாலத்துக்கு நாநூறு ரூபா படி சயன்ஸ் வகுப்பு எடுக்கலாமே? பிசிக்ஸும் படிப்பிக்கலாமே பொஸ்?? மெய்யாத்தான் சொல்லுறன்?? அறிவியல் பதிவிலையும் அசத்துறீங்கள்? விளக்கம் எல்லாம் இலகு நடையிலை இருக்கு?? தொடருங்கோ.... //


      ஓமோம் குடுத்தனான்... அவள் நீங்க நல்லா விளங்க படுத்திறியள் எண்டு சிரிச்சாள்.. பிறகு கணக்கு வேணாம் கொஞசம் கதைப்பம் எண்டாள்.. கொஞச நாளால ஏதோ விலங்கச்சிரிப்பொண்டு சிரிச்சாள்... அவளவுதான் பிறகு தேப்பன் போன் பண்ணி சொல்லிச்சுது தம்பி நீங்க இனி வரவேணாமெண்டு ்)

    21. @ கிருஷ்ணா, வேத்தியன், வடுவூர் குமார், அறிவே தெய்வம் மற்றும் aru

      மிக்க நன்றி தோழர்களே! மிக்க நன்றி :)

    22. @தியாகி...

      உங்களத்தான் பயோ டெக் குறி த்து எழுதச் சொல்லிக் கேட்டன்.. ஆளயும் காணேல்ல ஒண்டயும் கா ணேல்ல...! :)

    23. @ பிளாட்டின

      நன்றி பிளாட்டினம்... :)

    24. @ Triump :

      eeeeewwwwwwwwww... :@:@:@//

      அதேதான் :)

      The guy next to me was grinning //

      ம்ம்! யாரவன் உங்களோட நல்ல பல்பெல்லாம் படிக்குதோ? சட்டெண்டு பத்துது?

      I had to read twice as your writing (slang) changed completely. So, it was quite difficult. Anyways, its good as usual. Do write more. Increase the content. :- //

      கொஞ்சம் டிபரெண்ட்டொப்பிக்தானே? எழுத சரியா கஷ் டப்பட்டுட்டன.. அதுதான் வித்தியாசமா கிடக்கு.. :)

    25. //சுண்டுகுளிப்பெட்டையள் எங்க ஈர்ப்பா இருந்தவளயள்? தலையில ஈர் பேனோடதான் இருந்தவளயள்.. படுபாவியள் ஒரு ஓரக்கண்ணாலயாவது பாக்கப்படாதா?//

      Veendam... I am holding my patience... Grrrrrrrr........

      //ஓமோம் குடுத்தனான்... அவள் நீங்க நல்லா விளங்க படுத்திறியள் எண்டு சிரிச்சாள்.. பிறகு கணக்கு வேணாம் கொஞசம் கதைப்பம் எண்டாள்.. கொஞச நாளால ஏதோ விலங்கச்சிரிப்பொண்டு சிரிச்சாள்... அவளவுதான் பிறகு தேப்பன் போன் பண்ணி சொல்லிச்சுது தம்பி நீங்க இனி வரவேணாமெண்டு ்)//

      haaa haaaa haaa

      //ம்ம்! யாரவன் உங்களோட நல்ல பல்பெல்லாம் படிக்குதோ? சட்டெண்டு பத்துது?//
      Oru veenaappoona idiot... Just like someone you know very well... That idiot was jollufying when I was in computer lab. That dog would have thought that I am some **** or something... eeeeeewwwww.. Still he grins at me whenever he passes me... Pavi anna... unnala enda maanam mariyathai ellam poottu... I really dont care what he thinks abt me. but I am sick of seeing him with some weird grin...

      I hate you now... Grrrrrrrr...... argh........