அருந்த தீயும் அறுந்த ரொக்சியும்



    வில்லுக்கு பின்னர் தியேட்டருக்கு படம் பார்க்கப் பொவதில்லை என்ற வைராக்கியத்துடனிருந்தேன் நான்... ஆனால் நேற்று தங்கையின் GCE O/L றிசல்டுடன் குசியாகி படம் பார்க்க முடிவெடுத்தேன்.. கொன்கோட்டில் அயன் ஓடியது.. ஆனால் விமர்சனங்கள் காறித்துப்பியதால் அருந்ததி பார்க்கலாமென்று முடிவெடுத்தேன்... எல்லாரும் புழுகி அடித்திருந்தார்கள் அந்த படத்தைப்பற்றி...…



    வெள்ளவத்தையின் பிரதான போறணை ரொக்சியில் அருந்ததி கடைசி ஷோ நேற்று… ரொலக்சில் மதியம் சாப்பிட்டுவிட்டு 1.30 ஷோவுக்கு போனால் என்னதான் படம் சொதப்பினாலும் பின்னேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டால் மறுபடியும் இரவு ப்ரெஷ்ஷாகி விடலாம் என்ற நம்பிக்கையோடு 1.25 க்கு ODC டிக்கட் எடுத்து ரொக்சியின் உள்ளே நுழைந்து விட்டேன்… (தனியத்தான்...)

    ஆனால் கடவுளே...! எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது எனக்கு புரிவதேயில்லை.

    உங்களுக்கு தெரியுமா நான் படம் முடிந்து வெளியில் வரும்போது இரவு 7 மணி… கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம் இந்த போறணைக்குள் கிடந்து பொசுங்கி விட்டேன்...

    நடந்தது இதுதான்... :(


    ஒரு இருபத்தைந்து முப்பது பார்வையாளர்கள்தான்.. அதிலும் ஒரு பத்து பதினைந்து பேர்தான் இளம்பெடியள்.. மிகுதி குடும்பங்கள்.. குட்டிக்குழவி முதல் கிழவி வரை கும்பலாக வந்திருந்தன...

    சரியாக 1:30க்கு அருந்ததியும் தொடங்கிற்று...




    படம் ஏதோ பூச்சாண்டி காட்டுறேன் பேர்வழி என்று சீனத்து சினிமாக்களிலிருந்து சுட்ட பகுதிகளுடன் கோமாளித்தனமாக நகர்ந்து கொண்டிருந்தது… நான் இதுவரை பார்த்து பயந்த பேய்ப்படங்கள் என்றால் சின்ன வயதில் 13ம் நம்பர் வீடு.. பின்பு கம்பஸ் படிக்கும் போது “THE RING”…

    நம்ம படமோ... தொடங்கி முதல் 1 மணித்தியாலமத்திலே நான் விட்ட கொட்டாவிகளில் முன்னாலிருந்தவன் காது ஈரமாகி கசியத்தொடங்கியிருந்தது…


    பின் சீட்டிலிருந்த நடுத்தர வயதுப்பெண் பேய் போட்டிருந்த லிப்ஸ்டிக்கை பற்றி கூடவந்தவளுடன் அளவளாவி விசரைக்கிளப்பிக் கொண்டிருந்தாள்… அரைவாசிப்பேர் நன்கு தூங்கிவிட்டிருந்தார்கள்... குழந்தைகள் தங்களுக்குள் மாறிமாறி கிள்ளி விளையாடிக்கொண்டிருந்தன... என்ன கொடுமையிது ...சரி இடைவேளையுடன் எழும்பிப்போவோம் என்று நினைத்த போதுதான்…. சட்டென்று எல்லாம் நின்றது…



    கரண்ட் போட்டுது… வந்திருந்த பெடியங்களெல்லாம் “என் தீராத பசியை உன்மீது தீர்க்கப்போறன் பொம்மாயி ” என்று கத்த மூலையிலிருந்த கிழவி ஒன்று சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டது… தொடர்ந்து படத்தில் ஊளையிட்ட நரி தொடக்கம் “அடியேய் அருந்ததீ” என்று ஊளையிட்ட அந்த மனிசன் வரைக்கும் எல்லாவற்றையும் செய்துகாட்டிய நம்நாட்டின் எதிர்காலங்கள் தியேட்டரை ஒரு பத்து நிமிடங்கள் கலகலப்பாகவே வைத்திருந்தன… ஆனால் ரொக்சிக்காரரோ மறுபடியும் படத்தைப்போடுவதாயில்லை…


    பிளேன் வருதாமெண்டு பகலிலயும் கரண்ட நிப்பாட்ட கூடியாக்கள்தானே நம்ம டிபென்ஸ் முன்னணி என்று சற்று நேரம் பொறுத்தேன் படம் நிறுத்தப்பட்டு 30 நிமிடத்துக்கு மேலாகவே வெளியில் சென்று என்னவாம் என்று மெதுவாக விசாரத்தேன்..


    மெயின் கரண்டயும் ஜெனரேட்டரயும் சுவிச் செய்யும்போது சின்னதாய் ஏதோ பழுதாகி விட்டதாம்… 5 நிமிடம் பொறுக்க சொன்னார்கள்..


    ஆனால் நேரமானதே தவிர படம் போடுறமாதிரி இல்லை… மெதுவாக ப்ரொஜெக்டர் உள்ள அறைக்கு ஏறிச்சென்றேன்… அதில் NO ADMISION என்று போடப்பட்டிருந்தது… அதை சட்டைசெய்யாது உள்ளே எட்டிப்பார்த்தால் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஏதோ பெட்டி போன்ற ஒன்று மேஜையில் குபு குபுவென்று புகைந்து கொண்டிருந்தது… அதை பேயறைந்த முகத்துடன் ஒப்பரேட்டரும் மனேஜரும் மாறி மாறி அடுப்பூதுவது போல் ஊதிக்கொண்டிருந்தனர்… எனக்கு புரிந்துவிட்டது… இண்டைக்கு ஷோ இல்லை.. ஆககா குடுத்த காச புடுங்க முடிந்தால் லாபம்டா சாமி… ஆனால் கேட்பது எப்பிடி?

    தியேட்டரை நடத்துவபர்கள் எல்லாரும் பெரும்பான்மை… அதோடு எல்லாரும் பயங்கர உருப்படி… நான் வேற தனிய வந்திருக்கன்… தனிய மாட்டுப்பட்டா நாறவைச்சுப் போடுவாங்கள்…
    கீழிறங்கி வந்து , பெரிதாக சத்தமிட்டு கலாட்டா பண்ணிக்கொண்டிருந்த ஒரு டீசன்ட் குழுவிடம் மெதுவாக அணுகினேன்…


    ”அண்ணே ! மேலே ஏதோ அம்ப் எரிஞசு போச்சு போல ! இண்டைக்கு படம் போடாங்கள் ! நாங்கள் அலுத்து போய் போகும் வரைக்கும் பேக்காட்டப் போறாங்கள்… ”

    ”அதுக்கு?”


    ”நான் தனியத்தான் வந்தனான்! நீங்கள் என்னோட ஒரு சப்போட்டுக்கு வந்தீங்களெண்டால் நான் கதைச்சு காச திருப்பி வாங்கித்தாறன்…! ”


    முதலில் திகைத்துப்போய் நெளிந்தவர்கள் “அது தரமாட்டாங்கள்… ஏன் நீர் தனியப் போய் கேளுமன்… எங்களுக்கு பிரச்சனையில்லை நாங்கள் நிண்டு போவோம்…”
    என்று மறுபடியும் தங்களுக்குள் கதைத்து சிரிக்க ஆரம்பித்தார்கள்… எனக்கு கோபம் வந்துவிட்டது..


    விசிலடிக்கவும் தூசணம் கத்தவும்தான் நீங்க லாயக்கு என்று வாய்வரை வந்தாலும் அடக்கியபடி நின்றபோது ஒரு நாகரிகமாக உடுத்திய நடுத்தரவயதுப் பெண்மணி மனேச்சரை அணுகி தான் 6 பெண்களுடன் வந்திருப்பதாயும் தனது டிக்கட் பணத்தை திருப்பி தருமாறும் தயங்கி தயங்கி கேட்டார்…

    இதுதான் சந்தர்ப்பமென்று நானும் சப்போட்டிற்கு பாய்ந்து மிகவும் கோபமாக கேட்டேன்… எனது அரிய ஞாயிற்றுக்கிழமையை வீணாக்குவதாக கடும் கோபம் தெரிவித்தேன்… கூடவே இன்னும் சிலர் இணைந்து கொண்டனர்… பயந்து போன மனேச்சர் உண்மையைச் சொன்னார்… ஏதோ எரிந்து போய் விட்டதாயும் சினிசிட்டியிலிருந்து (மருதானை) மாற்று ஈடு ஒன்று கொண்டுவருவதாயும் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டாமென மேலிடம் உத்தரவிட்டுள்ளதாயும் தெரிவித்தார்… அந்தாளைப்பார்க்க பாவமாய் கிடந்தது.. சரி போகட்டும் சனியன் என்று நான் ஒதுங்கி ஒரு கரையாக நிற்க அந்த அன்டி மெதுவாக என்னிடம் வந்து பேச்சு கொடுத்தார்..


    ”நீங்க ஆம்பிளையள் எண்டு சும்மா சொல்லுங்கோ … நாங்கதான் எதுவும் செய்ய வேண்டிக்கிடக்கு…. முதல்ல போய் கதைச்சிருக்கலாம்தானே!”


    எனக்கு உண்மையாகவே ஒரு டவுட்டு வந்தவிட்டது… எண்ட மூஞ்சைல ஏதாவது எழுதி ஒட்டிக்கிடக்கோ?
    இவ்வளவு பேர் நிக்க என்னோட வந்தேன் சொறியுது? மறுபடியும் கடுப்பைக்கிளப்பும பெண்களா? என்று பதறிப்போய் மெதுவாக ஜகா வாங்க யோசிக்க அந்த அன்டியின் மீதி டிக்கட்டுகளும் என்னை சூழ்ந்து கொண்டன….

    பரவாயில்ல முகம் சேப்பில்லாட்டாலும் எல்லாம் கட்டான வெள்ளைப்பிள்ளைகள்… “ஒரு டிக்கட்டுகாகவா இவ்வளவு நேரமா நிக்கிறியள்?” “பெடியங்கள் தனியவும் படம் பாக்கவும் வாறதே?” “நாங்கள் இப்ப மோதரை , நீங்க யாழ்ப்பாணம் எவடம்?” “ஏன் உதில குறுக்க நெடுக்க இவளவு நேரம் நடந்தனியள்?” அன்னும் பலப்பல எரிச்சலூட்டும் கேள்விகள்… எப்படி வெட்டி ஓடுவது யோசித்த போதுதான் முதலில் நான் சப்போட்டுக்கு அணுகிய வெட்டி விசில் கும்பல் என்னை பம்மியபடி அணுகி “என்னவாம்?” என்று சாட்டுக்கு கேட்டவாறு அன்டியிம் மெதுவாக கடலை போடத்தொடங்கின… இதுதான் சாக்கென்று நான் உள்ளே ஓடிவிட்டேன்…

    அன்டியும் பிள்ளைகளும் கூட பல்கனிக்கு ஏறி ஓடிவிட்டன.. நோண்டியாகிப்போய் திரும்பி வந்த குழு என்னைக்கண்டு , அந்த அன்டியுடன் என்னை சேர்த்து ஏதோ பலான ஜோக்கடித்து விட்டு தமக்குதானே பெரிதாக சிரித்து கொண்டது…


    வெளியில் கடும் மழையாகையால் மேலும் முக்கால் மணித்தியாலமாக உள்ளே வெயிட் பண்ண வேண்டியிருந்தது… அதற்குள் பழுதாகிய உபகரணத்தை பிரதியீடு செய்து மறுபடியும் படத்தை போட்டு கொஞ்ச நேரம் ஓட்டினார்கள்… ஏமேத கடமைக்கு பார்த்துவிட்டு வெளியில் வர மழையும் குறைந்து விட்டிருந்தது…

    வீடுவந்து விண்விண்ணென்று தெறித்த மண்டையில் சில்லென்று தண்ணீர் வார்த்து பானின் முன்னால் அரை மணிநேரம் துவட்டிவிட்டு கணனியை கிளறினேன்… "YES MAN" என்ற ஒரு படம் எங்கேயோ கிடந்தது…. பார்த்தேன்… ம்ம்… மிகவும் நல்ல படம்…


    மூடு ஓரளவு சரியானதும் டைப் பண்ண தொடங்கினேன்…


    ப்ச்…. 4.30 க்கு வீட்டை வந்து தூங்கிய பின் கொஞ்சம் படிக்கலாமென்று யோசித்திருந்தேன்… எல்லாம் நாசமாப் போச்சு...


    சே … முடிவு பண்ணியாச்சு … இனி செத்தாலும் தியேட்டர் பக்கம் போவதில்லை





    படம்
    பற்றி:

    படத்த காட்டி சின்ன பிள்ளைகளுக்கு வெருட்டலாம்….
    சீன சண்டைப்படம் (ஹௌஸ் ஒப் ப்ல்யிங் Daggers) ஒன்றில் வரும் ட்ரம் சண்டை வெட்கமின்றி சுடப்பட்டுள்ளது…






















    இந்திரனின் வஜ்ராயுத கதை புராணங்களையுமா காப்பியடிப்பது என்று கேள்வியெழுப்புகிறது..
    ஜக்கம்மா பயங்கர உயரம்… 30 வயது மதிக்கும் தோற்றம்.. ஆடல் பாடல் வாயக்கவில்லை..
    தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் பேயோட்டி வருகிறார்…
    பைனல் டெசினேசன் சாயல் கொலைகள்…
    படம் முழுக்க ஒரு மாளிகையை 3டி மக்சில் டிசைன் செய்து பேய்க்காட்டுகிறார்கள்..
    பின்னணியிசை பரவாயில்லை… ஜக்கம்மா ஜக்கம்மா தீம் நன்றாக இருக்கிறது
    மற்றும்படி இராமநாராயணனின் அம்மன் படக்கதைதகளின் சாரம்தான்…

    என்னைப் பொறுத்தவரையில்....
    அருந்ததீ ஆங்கில பட விரும்பிகளுக்கு அவிந்த தீ…

    42 Responses

    1. //பிளேன் வருதாமெண்டு பகலிலயும் கரண்ட நிப்பாட்ட கூடியாக்கள்தானே நம்ம டிபென்ஸ் முன்னணி
      //

      haahaa :-))

    2. புல்லட் படத்துக்கு போனமா அனுஷ்காவை பார்த்தமா என்று இருக்கோனும்..அத விட்டுட்டு...:-))))

    3. அப்பாடா... தலை தப்பினான் தம்பிரான் புண்ணியம். :D

    4. ”நீங்க ஆம்பிளையள் எண்டு சும்மா சொல்லுங்கோ … நாங்கதான் எதுவும் செய்ய வேண்டிக்கிடக்கு…. முதல்ல போய் கதைச்சிருக்கலாம்தானே!”

      He he.. Is not tat true..


      //எனக்கு உண்மையாகவே ஒரு டவுட்டு வந்தவிட்டது… எண்ட மூஞ்சைல ஏதாவது எழுதி ஒட்டிக்கிடக்கோ?//

      Dun you see ur face in the mirror... Perisa ezhuthi otti irukkappu.. I could see it from here even.. aaaaawwwww..

      //இவ்வளவு பேர் நிக்க என்னோட வந்தேன் சொறியுது? மறுபடியும் கடுப்பைக்கிளப்பும பெண்களா?//

      You were wrong and you are putting the blames on girls... very bad.. .cha.... ;-)

      //“ஒரு டிக்கட்டுகாகவா இவ்வளவு நேரமா நிக்கிறியள்?” //
      hehe
      //“பெடியங்கள் தனியவும் படம் பாக்கவும் வாறதே?” //
      Cha what is this bullet anna.. ozhunga naangal sonnatha kettu irunthaal you would have found a gf.. he he... listen to your sisters annaaaaaaaai...

    5. //இனி செத்தாலும் தியேட்டர் பக்கம் போவதில்லை//
      GOOD

    6. படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

      குகு

    7. ஏன் புல்லட் ஏன்.. ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நல்ல வேளை நான் படம் பார்க்கவில்லை.. டிரைலர் போட்ட போதே படத்தில் இருந்து சுட்டிருப்பது தெரிந்தது.. நான் கடைசியாக ராம. நாராயணின் ருத்ரநாகம் பார்த்த பின்பு அவரது டப்பிங் படங்களுக்கு கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்..

    8. //தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் பேயோட்டி வருகிறார்…//
      ஏற்கனவே முனி படத்தில் ஒரு முஸ்லிம் பாய் பேய் ஓட்டுவார் நண்பா..

    9. //அருந்ததீ ஆங்கில பட விரும்பிகளுக்கு அவிந்த தீ…//
      ----புல்லட்டின் டுமீல்----

    10. அட அந்த யூடிப் வீடியோ சூப்பரோ சூப்பர். உங்களுக்கு மட்டும் எப்படிதான் கிடைக்குதோ தெரியல!

      /////இனி செத்தாலும் தியேட்டர் பக்கம் போவதில்லை//

      மெய்லாலுமா?

    11. பாஸ்..அயன் நல்லா இருக்கெண்டு சொல்றாங்களே?? நீங்க என்ன குண்ட தூக்கி போட்றீங்க?

    12. முதலில் உங்களது தங்கச்சிக்கு எங்களது வாழ்த்துக்கள்!

    13. நாங்கள் பரீட்சைக்கு படித்தாலும் அப்பப்ப பதிவுகளும் எழுதுவோமையா...

    14. இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில் புல்லட் பாண்டி பாதி சூர்யாவும் பாதி டோனியும் கலந்த கலவை மாதிரி இருப்பதால் புல்லட்டின் பின்னால் பெண்கள் கூட்டம் ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளுகின்றதாம்! (LOL)

    15. நானும் "அயன்" பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருப்பதாகவே படித்தேன். ஏன் புல்லட்...?

    16. ஹா..ஹா..இந்த படத்துக்கு ஒரு எதிர்மறை விமர்சணம் இப்பதான் பார்க்கிறேன். இனிமே சினிமாவுக்கு போகனும்னா ப்ளாக்கர்ல இருக்குற விமர்சனத்தையெல்லாம் படிச்சுட்டு போகாதீங்க

    17. //என்னைப் பொறுத்தவரையில்....
      அருந்ததீ ஆங்கில பட விரும்பிகளுக்கு அவிந்த தீ…//

      அட இது புல்லட் பஞ்ச்!

    18. படம் சொதப்பினாலும் பின்னேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டால் மறுபடியும் இரவு ப்ரெஷ்ஷாகி விடலாம் என்ற நம்பிக்கையோடு//

      அட...உங்களுக்கும் மத்தியானம் சாப்பிட்டுட்டு நித்திர கொள்ளுற பழக்கம் இருக்கோ? எண்ட அந்த நித்திர தான் பின்னேரம், இரவு எண்டத எல்லாம் தாண்டி இப்ப நடுச்சாமம் வரைக்கும் நீண்டு கொண்டு போகுது... :(

    19. ம்ம்ம்... பார்பதில்லை பார்பதில்லை என்று சொல்லி சொல்லியே படம் பாகிறீங்க!
      அயன் பார்கலையா

    20. விமர்சனம் அருமையாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்??

      இஞ்சை கொஞ்சம் காதைக் கிட்டக் கொண்டு வாங்கோவன்?? அடுத்த ஞாயிற்றுக் கிழமைப் படத்துக்கு நானும் நீங்களும் போவமோ?? ஏதோ புதுசா நச்சு வாயுப் படம் போடீனமாம்? உண்மையோ??

    21. This comment has been removed by the author.
    22. வில்லுக்கு பின்னர் தியேட்டருக்கு படம் பார்க்கப் பொவதில்லை என்ற வைராக்கியத்துடனிருந்தேன் நான்...
      //////////////
      குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

    23. நான் விட்ட கொட்டாவிகளில் முன்னாலிருந்தவன் காது ஈரமாகி கசியத்தொடங்கியிருந்தது…////

      அது எப்படி?

    24. லீ!

      அந்த ஒட்டக சிவிங்கியப்பாத்த என்னப்பா பண்ணுறது? காலப்பாத்துட்டு மேல பாக்கிறதுக்கு (தலையச் சொன்னன் ) காமணித்தியாலம் ஆகுது..

      நீங்களும் உங்கட டேஸ்டும்... இந்த சப்பை மூக்குகளை பாத்து சரியா கெட்டுப்போனீங்க :)

    25. @ ஆதிரை!

      உடுக்கை இழந்தவன் கையை தட்டிவிட்டுருவிக் கொண்டோடுவதாம் நட்பு... ;)

      ----புல்லட் ----

    26. @ Triump:

      //Cha what is this bullet anna.. ozhunga naangal sonnatha kettu irunthaal you would have found a gf.. he he... listen to your sisters annaaaaaaaai... //

      உண்மையா நான் தேடிக் கொண்டுதான் திரியுறன்.. ஒண்டும் அம்பிடுதில்ல... உங்களுக் தெரிஞ்சாக்கள் யாருமிருந்தால் சொல்லுங்கொ! சீரியசாத்தான்... :) சீதனம் கொஞ்சம்தான் 2 கோடி.. உங்களுக்காண்டி ஸ்பெசல் ப்றைஸ்... :)

    27. @ வருங்கால முதல்வர்

      படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். '//

      புல்லட்டுக்கு பழைய செருப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது... :(

    28. @ கார்த்திகைப் பாண்டியன்
      ஏற்கனவே முனி படத்தில் ஒரு முஸ்லிம் பாய் பேய் ஓட்டுவார் நண்பா.. //

      அதை வேற பாத்தீங்களா? நீங்களெல்லாம் பயங்கராக்களப்பா! :)

    29. இளமாயா .

      வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள்...
      சாடையான குறும்பி போலதான் தென்படுகுது... பாப்பம்..
      :)

    30. கலை - இராகலை ,

      அடயப்பா! நான் இதுவரை எத்தனயோ படங்கள் பாத்திட்டன்... அதில சில படங்கள் நல்லா ஞாபகம் இருக்கும்... House of flying daggersஎண்டுறது மிகவும் சிறந்த சண்டைப்படம்... ஆகையால ஞாபகம் இஐந்தது... தேட யுடியுப்பல கிடந்தது... :)

    31. யாழினி ,


      முதலில் உங்களது தங்கச்சிக்கு எங்களது வாழ்த்துக்கள்! //

      கன்வே செய்து விடுகிறேன்... நன்றி.. :)

      //நானும் "அயன்" பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருப்பதாகவே படித்தேன். ஏன் புல்லட்...?//

      ஆமாங்க எல்லாம் பாழாப்போன பஸ்ட் சோ பரதேசிகளின் வேலை :(

      //இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில் புல்லட் பாண்டி பாதி சூர்யாவும் பாதி டோனியும் கலந்த கலவை மாதிரி இருப்பதால் புல்லட்டின் பின்னால் பெண்கள் கூட்டம் ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளுகின்றதாம்! (LOL)//

      அட நீங்க வேற ... ஒரு கிழவி கூடப் பாக்குதில்ல.. இந்த கன்டிசனில”பெண்கள் கூட்டம் ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளுகின்றதாம் !” ஏன் தாயே ஏன்? :(

      //அட இது புல்லட் பஞ்ச்!//

      நானே பிஞ்சு போயிருக்கிறன் இதுக்க ஒரு பஞ்சு தேவையா ? :(

    32. @ நான் ஆதவன் :
      இனிமே சினிமாவுக்கு போகனும்னா ப்ளாக்கர்ல இருக்குற விமர்சனத்தையெல்லாம் படிச்சுட்டு போகாதீங் //

      நாசமாப்போக இத கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்க படாதா? :(

    33. தியாகி

      அட...உங்களுக்கும் மத்தியானம் சாப்பிட்டுட்டு நித்திர கொள்ளுற பழக்கம் இருக்கோ? //
      அத பழக்கமா வச்சுக் கொள்ளுறதில்ல... இரவு கன நேரம் விழித்திருக்க வேணுமெண்டால் அப்படி செய்வதுண்டு... ஆனாலும் சாப்பிட்டவுடனல்ல.. ஒரு 5 இலிருந்த 6.30 வரை...

      பாவிக்கு பகல் நித்திரை ஆவிக்கு மோசம் என்பது பழமொழி... :

    34. கவின் ,

      //ம்ம்ம்... பார்பதில்லை பார்பதில்லை என்று சொல்லி சொல்லியே படம் பாகிறீங்க!//
      அதுவே பொழப்பாப் போச்சு ... :)
      //அயன் பார்கலையா//
      சேட்டை அயன் பண்ணவே நேரமில்லாம கிடக்கு இதுக்க அயன எங்க பாக்கிறது ...

    35. கமல் ,
      இந்த உரையாடலை கவனியுங்கள்...

      இடம் திரைப்படக் கூட்டுதாபனம்...

      அதிகாரி : என்ன படத்துக்கு பெமிசன் வேணும்?

      தியேட்டர் மனேச்சர்: அருந்ததீ...

      அதிகாரி : படத்தில பயங்கரவா திக்கு சப்போட் இருக்கா?

      மனேச்சர்: இல்ல மாத்தயா! ஒரு பேய்ப்படம்

      அதிகாரி : அப்ப எங்கட ஜனாதிபதி, மற்றும் சமோதரர்களை நக்கலடிச்சு ஷ எடுத்த படமா?

      மனேச்சர்: இல்ல மாத்தயா! அது கொஞசம் நல்ல பேய்ப்படம்

      அதிகாரி : குட்... யார் டைரக்டர்?

      மனேச்சர்: யாரோ தெலுங்கு காரன் சேர்

      அதிகாரி : கொண்டா ! சைன் வைக்கிறன்... (சைன் வைத்தபடி) ... யார் ப்ரொடியுசர்...?

      மனேச்சர் : ”கோடி ராமகிருஸ்ணா ” சேர்!

      அதிகாரி : ( துள்ளியெழுந்து ) என்னது ”கொட்டி ராமகிருஷ்ணாவாாாாாா....?!!!!!!!!
      கோல் 119 ! அரெஸ்ட் திஸ் பாஸ்டாட்..

      மனேச்சர் : ஐயோ ஆது அதில்ல ! ஐயோ ஆது அதில்ல!

      அதிகாரி : டேய் கொட்டி ஏத்த படத்த போட்டு என்னட்டயே அனுமதி கேக்கிறியா நாயே?

      தொடரும்....

    36. @ நிலாவும் அம்மாவும்

      நான் விட்ட கொட்டாவிகளில் முன்னாலிருந்தவன் காது ஈரமாகி கசியத்தொடங்கியிருந்தது…////

      அது எப்படி? //

      நல்லா கேக்கிறாங்கய்யா விஞ்ஞான விளக்கம்... உருப்ட்டாப்போலதான் ஹிஹி! :)

    37. ஏன் உங்களுக்கு மட்டும் எல்லாம் இப்படி நடக்குதோ.... லொள்ளு அண்ணா நேத்து நான் அயன் படம் பாத்தேன்....படம் போறதே தெரியாம இண்டேரேச்டிங்க போச்சு.......நானே இப்படி ஒரு நல்ல படம் பார்த்து நாள் ஆச்சு என்று பீல் பண்ணினான்.......அதோடு அருந்ததி பத்தி இப்ப தன் நெகடிவ் ஆக வாசிக்கிறேன்....ஆச்சரியம் ......

    38. ஹா ஹா ஹா.. உங்க பதிவு நல்லதொரு நகைச்சுவைப் படம் பார்த்த உணர்வு.. எனக்கும் அருந்ததியை (அனுஷ்காவையல்ல) பிடிக்கவில்லை.. என்னுடன் படம் பார்க்க வந்த ரெண்டு தடியங்களும் ரசிச்சு,பயந்து பார்த்தாங்கள்.. எனக்கெண்டா கொடுமை.. ;)

      உண்மையில் நானே சில நேரம் எண்டு கத்தவும் யோசிச்சேன்..

      தங்கைக்கு வாழ்த்துக்களை சொல்லி விடவும்..

      எங்களை அறுப்ப தற்கெல்லாம் சேர்த்து உங்களை அருந்ததி அறுத்தது ரொம்பவே சந்தோசம்..

      //தனியத்தான்..//
      ??? உண்மையா?

      //வந்திருந்த பெடியங்களெல்லாம் “என் தீராத பசியை உன்மீது தீர்க்கப்போறன் பொம்மாயி ” என்று கத்த மூலையிலிருந்த கிழவி ஒன்று சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டது… // &

      //பரவாயில்ல முகம் சேப்பில்லாட்டாலும் எல்லாம் கட்டான வெள்ளைப்பிள்ளைகள்… //
      &

      // அந்த அன்டியுடன் என்னை சேர்த்து ஏதோ பலான ஜோக்கடித்து விட்டு தமக்குதானே பெரிதாக சிரித்து கொண்டது…//

      சீசீ..

      கணம் மக்களே.. இவர் ஆங்கிலப் படங்கள்,சீனப் படங்கள் பார்க்கிறவர் எண்டு காட்டவே இந்தப் பீட்டர் பதிவு போட்டுள்ளார்..

      இந்த நுண்ணரசியல் எனக்குப் புரிஞ்சு போச்சு..

    39. Saraketha,

      ஏன் உங்களுக்கு மட்டும் எல்லாம் இப்படி நடக்குதோ.... //

      அது ஆருக்கப்பா தெரியும்?

      // லொள்ளு அண்ணா நேத்து நான் அயன் படம் பாத்தேன்....படம் போறதே தெரியாம இண்டேரேச்டிங்க போச்சு.......நானே இப்படி ஒரு நல்ல படம் பார்த்து நாள் ஆச்சு என்று பீல் பண்ணினான்.......//

      இண்டைக்கு நைட் ஷோ போறேன் :) சபதம் பணால் :)

      //அதோடு அருந்ததி பத்தி இப்ப தன் நெகடிவ் ஆக வாசிக்கிறேன்....ஆச்சரியம் ......//

      நானும்தான் :)


      கனகாலமா ஆளக்காணேல்ல... மறுபடியும் வந்தமைக்கு நன்றி :)

    40. LOSHAN ,

      //கணம் மக்களே.. இவர் ஆங்கிலப் படங்கள்,சீனப் படங்கள் பார்க்கிறவர் எண்டு காட்டவே இந்தப் பீட்டர் பதிவு போட்டுள்ளார்..

      இந்த நுண்ணரசியல் எனக்குப் புரிஞ்சு போச்சு..//

      அடிச்சாங்கையா அல்டிமேட் ஆப்பொண்டு... ஏன் ஏன்.. இப்பிடி பப்ளிக்கிலயா பாவாடைய உருவுறது?பாருங்க எல்லாரும் சிரிக்கிறாங்க... :(
      எனிவே அத பாக்கிற படியாதானே எங்கட சினிமா ஓட்டையளெல்லாம் பளிச்சசெண்டு தெரியுது :)


      // ஹா ஹா ஹா.. உங்க பதிவு நல்லதொரு நகைச்சுவைப் படம் பார்த்த உணர்வு.. //

      ம்ம்ம்! இருக்கும் இருக்கும்... பொறுங்க வச்சிக்கறேன் :|

      // எனக்கும் அருந்ததியை (அனுஷ்காவையல்ல) பிடிக்கவில்லை.. என்னுடன் படம் பார்க்க வந்த ரெண்டு தடியங்களும் ரசிச்சு,பயந்து பார்த்தாங்கள்.. எனக்கெண்டா கொடுமை.. ;)//

      இன்னும் கலியாணம் கட்டேல்ல போல ! லக்கி போய்ஸ் அவங்க கிக்கி!

      // உண்மையில் நானே சில நேரம் எண்டு கத்தவும் யோசிச்சேன்.. //

      எப்பிடி எப்பிடி? :)

      // தங்கைக்கு வாழ்த்துக்களை சொல்லி விடவும்.. //

      நன்றி நன்றி! கன்வே பண்ணிடறேன்..

      //எங்களை அறுப்ப தற்கெல்லாம் சேர்த்து உங்களை அருந்ததி அறுத்தது ரொம்பவே சந்தோசம்..//

      எங்கபாயிடப்போறீங்க.. அதே லோசன் லோன் டொட் கொம்தானே...

      //தனியத்தான்..//
      ??? உண்மையா?//

      இல்லண்டால் ஏனிங்க வந்து நெட்டில கிண்டிக்கொண்டிருக்கபோறன்... ;)

      // சீசீ..//

      பொறுங்க பொறுங்க கள்ளச்சாமியெல்லாம் கடைசில கையும் மெய்யுமா அம்பிடுவாங்க :)

    41. i really made me upset. all comment very bad about aingaran´s villu all over the world and noone comment about Sun Tv´s padikkatahvan. really i mean REALLY compared to padikkathavan villu is better in several times. and more movies from vijay are worse than villu. but those movies never carried this much critism from all. y? I feel this mass effect is created by sunTV. y no one comment bad aobut thanush and padikkathavan. no one wrote. futehr more in suntv news tehy showed 2 news items. one was padikkathan was running successfully. 2nd was danush watched the movie with rasikarkal. so u know how cheap suntv was.

    42. இப்படி தான் சுட்டாங்க்ளா நான் கூட நல்லா இருக்கேனு யோசிச்சேன்

      தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
      http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html


      அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
      http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html