அடிக்கடி ஒரு ஜீவன் : இன்று LOSCAN


    யாழ்ப்பாணத்தில் ஒரு கோடைகாலம்

    சிதம்பரத்தை கன்றுக்கு குழை தாழ்ப்பதற்காக தண்ணர் ஊற்றி கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார் சின்னத்துரை அண்ண… மண்வெட்டியால் கோலி சற்றுத் தள்ளிப் போடப்பட்ட மண்ணை ஒரு குச்சியால் கிளறி விளையாடிக்கொண்டிருந்தாள் மூன்றே வயதான சித்ரா… அவள் காலில் அணிந்திருந்த மிக்கி மவுஸ் சப்பாத்து கிக்கிபிக்கி என்று லயம் தப்பி போடும் இசையைக் கேட்டு தூரத்தில் சமையறையிலிருந்த அவள் அம்மா மெதுவாக புன்முறுவல் பூத்தாள். தன் மகவின் மழலை நடையை மனதில் நினைத்து உருகிய வண்ணம் மறுபடியும் சமையலில் மூழ்கி விட்டாள்.. ஆனால்

    எல்லாம் சிறிது நேரம்தான் ….

    “வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈல்”

    சித்ரா அலறிய சத்தம் எல்லாத்திசையிலயும் எதிரொலிக்க கையிலிருந்ததை போட்டுவிட்டு வாசலை நோக்கி தலைவிரி கோலமாய் நோக்கி ஓடினாள் அந்தத்தாய்.. ஆனால் அங்கே…

    ஹீஹீஹீ….

    குடல் வாயில் வரும்படியாக சிரித்த வண்ணம் பிள்ளையை தோளில் போட்டு “அதொண்டுமில்லடா செல்லம்… பாருங்கோ அங்க பாருங்கோ… அதொண்டும் செய்யாது… பிள்ளைய அழ வச்சதுக்காண்டி சின்னதுரை மாமா அதுக்கு அடி குடுக்கிறார் பாருங்கோ சரியோ .. இனி குட்டி அழப்படாது… என்ன? ”… என்று ஓராட்டிக்கொண்டிருந்தான் சித்ராவின் தந்தை பவன்…

    மூச்சிரைக்க ஓடி வந்து மலங்க மலங்க விழித்த மாலாவை பார்த்த பவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியபடி “பெட்டை தடியால மண்ண கிளறேக்க உது வந்துட்டுது.. அதுதான் பயந்து போனாள் ” என்றார் … “ஆனா உத பாத்து பயப்படுறவள் என்னண்டு உன்ன கண்டு மயங்கி விழாம இருக்காள் எண்டுதான் விளங்கேல்ல ” என்று சொல்லி மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க எரிப்பது போல் முறைத்த மாலா வெடுக்கென்று குழந்தயை பிடுங்கியவாறு வீட்டிற்குள் சென்றுவிட்டாள் …

    எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த நம்ம கதையோட கதா நாயகன் , அதாங்க நம்ம சித்ராவை வெருட்டி அவளோட பெற்றோரிடையே ஒரு ஊடலுக்கு காரணமானவர் , சரி இனி எங்காவது போய் ஒதுங்குலாமெண்டு புறப்பட , பாவம் பலன்ஸ் இல்லாமல் உருண்டார்… ஆ ! யார் அவரெண்டு கண்டு பிடிச்சிட்டீங்களா? அவர்தாங்க நம்ம யாழ்ப்பாணத்து மாரித்தவக்கை….






    தவளை, தவக்கள , தவக்க என்று பல பெயர்களால் அழைக்கப்படும் TOAD இனத்தை சேர்ந்த ஒரு பாவப்பட்ட சீவராசிதாங்க இந்த மாரித்தவக்கை… அப்பிடீன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது எல்லாரும் வழமையா விடுற பிழைதான்… அது FROG எனப்படும் தேரை இனத்தை சேர்ந்தது.. அட ஆமாங்க.. மொழுமொளுன்னு கொழுகொழுன்னு , மண் கிண்டுறப்போ வெளில வந்து விழுவாரே குண்டு தவக்காய் , அவருதாங்க இவரு… இவருக்கு ஏன் மாரித்தவக்கன்னு பேர் வந்திச்சுதெண்டால் கோடை காலத்துல தலைவர் வெறும் அண்ட கிரௌண்ட தாதா… மழை வராட்டி மேலுக்கு வராம ரெண்டு வருசம் கூடி சைலண்டா இருப்பார்… ஆனா மழை வந்துச்சுதெண்டால் அரோகராதான்… தன்ட தாரை தப்பட்டயள தூக்கிக்கொண்டு சிவமணிகிட்ட அசிஸ்டன்ட் சான்ஸ் கேக்கவந்தவன் மாதிரி வாசிச்சு தள்ளுவார்.. அதை யாழ்ப்பாணத்தான் எல்லாரும் கேட்டு ரசிச்சிருப் ங்க..

    இவரோட ஸ்பெசாலிட்டி என்னண்டால் தன்ட தோலால சுத்தியிருக்கிற தண்ணிய உறுஞ்சிக்கொள்ளுவார்.. இதனால்தான் கண்ட இடத்தில வாயை நனைக்காம இவரால மரியாதையோட இருக்க முடியுது…

    அப்புறம் மழை வந்துச்சுதெண்டா இவங்களுக்கு கலியாண சீசனும் ஆரம்பிச்சுடும்.. உண்மய சொன்னா பாட்டுக்கச்சேரியெல்லாம் அதுக்குதாங்க… நம்ம மனுச ஜாதி மாதிரி இல்லாம மாறி இங்க மாப்பிளை பாக்க போற ட்ரடிசன்… மாப்பிளைக்கு நல்லா பாட வருமான்னு கேட்டு விடிய விடிய கச்சேரி நடத்தி நம்மட நித்திரைக்கு வெடி வைச்சிடுவாங்க… ஆனா மாரித்தவக்கைங்கள பொறுத்த வரைக்கும் ஒரு காமெடி ஒண்டிருக்கு…

    அது என்னெண்டால் ஆம்பிள சின்னன்.. பொம்பள கிட்டத்தட்ட 4 அல்லது 5 மடங்கு பெருசு… ஆகவே யாரடா இவன் நல்லா பாடறானே எண்டு ஏதாவது பிகர் பக்கத்தில வந்துச்சுதெண்டால் ஜொய்ங்க் எண்டொரு ஜம்ப் பண்ணி அவளோட முதுகில ஏறி ஒரு பேஸ்ட பூசி நல்லா ஒட்டிக்கொண்டு இருந்திடுவாரு … ஆனா அந்த நேரம் பின்னாடி வரப்போற பிரச்சனை அவருக்கு விளங்கியிருக்காது (யாருக்குதான் விளங்கியிருக்கு?)…

    மச்சான் முதுகில செட்டாயிட்டாருன்னு தெரிஞ்சதும் அவரையும் இழுத்துக்கொண்டு மறுபடியும் நிலத்துக்கு கீழ ஆத்தா பரபரன்னு போக தொடங்கிடுவா…குஜாலா இருக்கலாம் எண்டு நெச்சு முதுகில குந்தினவர்; நிலமை கோவிந்தா… அதான் இறங்கி ஓட முடியாத படி பேஸ்ட்டு போட்டு ஒட்டியாச்சே? சரின்னு ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கீழ போய் ரெண்டு அறை மாதிரி செஞ்சுக்குவாங்க… ஒண்ணு பர்ஸ்ட் நைட் ரூம் மற்றது ரெஸ்டிங் ரும்… பர்ஸ்ட் நைட் ரூமை அழகுபடுத்தி நுரைநுரையா உருவாக்க வேண்டியது குட்டிப்புருசனோட வேலை.. காலால உதைஞ்சு உதைஞ்சு நுரைய உருவாக்கி விட அதுல முட்டைங்கள போடுவா பொஞ்சாதி பீப்பா… அதுக்கு பிறகுதான் புருசனுக்கு லீவு…

    கட்டிய சாரி ஒட்டிய புருசன் துண்ட காணம் துணிய காணம் எண்டு மேல ஏறி வெளில ஓடிவிட , பாவம் பலகாலம் ரெஸ்டிங் சேம்பரில ஓய்வெடுத்தவாறு மற்ற சேம்பரில் வளரும்
    குழந்தைகளையும் கவனித்தவாறு அண்டக்ரெண்டில் அமைதியாகவிருக்கும் அந்ததாய்;…

    ஆனால் லொக்கேசனை சிதம்பரத்தை மரத்துக்கு கீழே செலக்ட் பண்ணியதுதான் சின்ன பிழையாகி விட்டது… ஓல்ரெடி மேலே சின்னத்துரை அண்ணை மண் வெட்டியை ஓங்கியிருந்தார்…


    (மேலதிக இணைப்புக்களுக்காக தேடிய போது எமது மாரித்தவக்கயின் பமிலியை சேர்ந்த ஆபிரிக்க மழைத்தவளையின் வீடியோ ஒன்று யுடியுப்பில் அகப்பட்டது... ஆனால் எம்பெட் செய்யமுடியாது... ஆகவே அட்ரசை தருகிறேன் பார்த்து மகிழுங்கள்... வீடியோ மதிப்பிற்குரிய சேர் அட்டன்பரோவினால் தயாரிக்கப்பட்டது..

    Attenborough: Amazing Rain Frogs - Life in Cold Blood - BBC wildlife

    )

    மேலும் சில தவளைகளைப்பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

    மார்சூப்பியல் தேரைன்னு ஒரு மைனர் ஆஸ்ரேலியாவில இருக்கார்… அவர் கங்காருமாதிரி தண்னோட பேத்தைங்கள வயத்தில ஒரு பையில சுமந்து வளந்து பெரியவங்களா ஆனப்புறம் ரிலீஸ் பண்ணுவார்… இதில என்ன கொடுமைன்னா தாய்த்தேரை முட்டைய இட்டுட்டு தன்பாட்டுக்கு போயிடும்.. ஆனா பாவம் தகப்பன்தான் வாயில பச்ச தண்ணி கூட படாம முட்டை பொரிக்கும் வரை காத்திருந்து எல்லாத்தையும பத்திரமா பக் பண்ணிக்கும்.. நான் மனுசங்க மட்டும்தான் அப்பிடீன்னு நெச்சேன்…

    இன்னொரு காமெடி பெரு நாட்டில… அங்கிட்டு பாய்சன் அம்புத்தேரை எண்டு ஒராள்… காட்டுவாசிங்க அந்த தேரைய பிடிச்சு அம்பில தடவி அதை விச அம்பா மாத்திக்குவாங்க… அந்த தேரையும் பெரிய பம்லி ப்ளானிங் உடையவர்… தாய் முட்டைங்கள ஏதாவது குப்பைக்க இட்டுட்டு போயிடும்.. பாவம் தேப்பன்தான மனசு பொறுக்காம ஒவ்வொரு முட்டையையும் ஒவ்வொரு இலையா மரமா தேடி எங்கயாவது தண்ணி தேங்கி இருந்துதெண்டால் அதுல போடும்.. பிறகு ஒரு ரூட்டீனில ஒவ்வொரு முட்டையா நோட்டம் விட்டு பிரச்சனைங்கள அறிஞ்சுக்கும்… தண்ணி வத்திச்சுதெண்டால் பேத்தைங்கள முதுகில ஏத்திட்டு வேற இடத்தில போடும்… ஆனா பிள்ளைங்களுக்கு பசி வந்திட்டால்தான் பிரச்சனை… உடனே அம்மா தேடிப்பொவார் அப்பா… ஒரு சின்ன டிஸ்கசனுக்கு பிறகு… அம்மா வெரு கூட போய் பசிக்கிற பிள்ளையோட கூட்டில ஒரு முட்டைய இடும்… அதுதான் அந்த பிள்ளையோட லஞ்சு… பாத்தீங்களா எவ்வளவு குரூரமான பெண்களும் அனுதாபத்திற்குரிய ஆண்களும் உலகத்தில இருக்காங்க?

    அப்பிடியே ஆபிரிக்க எருமைத்தேரைங்களும் ஒரு சிறப்புதான்… ஏதாவது ஆறு வழிய பக்கத்திர சின்னதா தண்ணி தேங்கி நிக்கும்தானே… அதுல தான் தாய் முட்டய போடும்…(நேர ஆத்துல போட்டா அத மீனெல்லாம் முழுங்கிரும்) காவலுக்கு தேப்பன்தான்… பேத்தை குட்டிங்களெல்லாம வளர்ரப்போ குட்டையில தண்ணி வத்துதெண்டால் உடனே அவசர கால நடவடிக்கையா ஒரு ட்ரெய்னேஜ் சனல் ஒண்ட ஆத்துக்கும் குழிக்குமிடையில கிண்டுவார் தந்தை… எவ்வளவு ஒரு பாசம்… நான் நினைக்கிறேன் முதமுதல்ல நீர்ப்பாசனம் செய்த உயிரினம் இந்த எருமைத்தவக்கயாத்தான் இருக்குமெண்டு… ஹிஹி!

    அப்ப வரட்டா! அடுத்த அலைவுகளும் அதிர்வுகளும் பதிவில வரும் சனியோ ஞாயிறோ சந்திப்பம்…. :)

    தலைப்பில லோஷன்... சாரி லோஷ்கன் என்று போட்டது ஏனெண்டு கேட்கிறீங்களா? Irish காரங்க தவக்களய அப்பிடி தானுங்கோ கூப்பிடுவாங்கோ! ஹிஹி! நம்பாட்டி இந்த வெப்சைடில பாருங்க..

    International Frogs

    உண்மையா வேற அரசியலொண்டும் இல்லப்பா! ஹிஹி!

    38 Responses

    1. அருமையான பதிவு பாண்டி.. ஒரு தேரையை பற்றி விளக்கும்போது கூட ரொம்ப எளிமையா உங்க நகைச்சுவை ஸ்டைலோட சொல்லி இருக்கீங்க.. அரிய சில தேரை வகைகள் பற்றி தகவல்கள் கூட.. ரொம்ப நல்லா இருக்கு..

    2. யாரோ கூப்பிட்டங்கன்னு சொல்லி எட்டிப் பார்த்தா.. அட நம்ம டுமீல்..
      (நல்ல ஒரு நாளில இந்தப் பெயரோட பதிவு.. தேவையா???)

      தேரை,தவளை பற்றிய அறிவியல் , வாழ்க்கை விஷயங்களையும் உங்கள் பாணியில் கல கலக்க சொல்லியிருப்பது சூப்பர். ;)

      அதிலையும் அந்த விஷயம் இருக்கே.. உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. சும்மா குஜாலா சொல்லி இருக்கீங்க..;)

      இனிமேலும் நம்ம சகோதரனைக் (Loscan) கண்டால் ஹாய் சொல்லிட்டு போறன்..

      எங்க போனாலும் அயர்லாந்து மட்டும் போக மாட்டேன்.. ;)

      உண்மையா வேற அரசியலொண்டும் இல்லப்பா! ஹிஹி!//

      நம்பிட்டேன்.. ;)

      நல்ல காலம் எனக்கு Cஇல்லை losHan

    3. கார்த்திகைப் பாண்டியன்

      அருமையான பதிவு பாண்டி.. ஒரு தேரையை பற்றி விளக்கும்போது கூட ரொம்ப எளிமையா உங்க நகைச்சுவை ஸ்டைலோட சொல்லி இருக்கீங்க.. அரிய சில தேரை வகைகள் பற்றி தகவல்கள் கூட.. ரொம்ப நல்லா இருக்கு..//

      மிக்க நன்றிங்க சேர் :)

    4. @ LOSHAN
      யாரோ கூப்பிட்டங்கன்னு சொல்லி எட்டிப் பார்த்தா.. அட நம்ம டுமீல்..
      (நல்ல ஒரு நாளில இந்தப் பெயரோட பதிவு.. தேவையா???) //

      எல்லாமே பர்ப்போசோடதான் தலைவா ;)

      //தேரை,தவளை பற்றிய அறிவியல் , வாழ்க்கை விஷயங்களையும் உங்கள் பாணியில் கல கலக்க சொல்லியிருப்பது சூப்பர். ;)//

      ஹிஹி நன்றிங்க :)

      //அதிலையும் அந்த விஷயம் இருக்கே.. உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. சும்மா குஜாலா சொல்லி இருக்கீங்க..;)//

      இது கொஞ்சம் ஓவர்... முதுகில ஓறி உண்மையா பேஸ்ட்ட போட்டுதான் ஒட்டிக்கும்... வேற ஒண்ணுமில்ல.. தவளைங்களெல்லாம் பாவம் ஸ்ப்ரே டெக்னிக்குதான்...! அது பற்றி வேணுமெண்டா தனியா சொல்லுறன்.. நல்லா மாட்டுறாங்கய்யா வம்பில :(

      //இனிமேலும் நம்ம சகோதரனைக் (Loscan) கண்டால் ஹாய் சொல்லிட்டு போறன்..//

      அதெல்லாம் தேவையில்ல ...உங்கட வாகனத்த அது மேல ஏத்தாம இருந்தாலே போதும்... :)

      //எங்க போனாலும் அயர்லாந்து மட்டும் போக மாட்டேன்.. ;)//

      ஆமா ஆமா! மாறிக்கீறி பெயரைச்சொன்னீங்கன்னா பிடிச்சு கறி வைச்சுப்போடுவாங்க.. :(

      //உண்மையா வேற அரசியலொண்டும் இல்லப்பா! ஹிஹி!//
      நம்பிட்டேன்.. ;) //

      அதேதான்! :)

      //நல்ல காலம் எனக்கு Cஇல்லை losHan //

      சே! ஜஸ்ட்டு மிஸ்ஸூ! :(

    5. பாவம் லோசனுக்கு april fool...

    6. எங்கு போனாலும் ஆண்களே பாவமா???

      நானும் ஏதோ நம்ம லோசன் எண்டுறவரக் கலாய்ச்சு ஏப்ரல் 01க்கு ஒரு பதிவெண்டு ஆவலா வந்தன்(அவர்தான் எத்தினைபேரைக் கலாய்க்கிறார்?). இங்க வந்தால், அட எங்கட மாரித்தவக்கை!

      றேடியோவில ஓயாம மைக்க முழுங்கிப் பேசுற ஆக்கள, மாரித்தவக்கை மாதிரிக் கத்துறாங்கள் எண்டு வீட்டுப்பக்கம் சொல்லுவினம். இதில அந்த உள்குத்து எதுவும் இல்லைத்தானே? :)

      இப்பிடியான விசயத்தைப் பாடமாப் படிப்பிச்சாக் கொட்டாவிதான் வரும். ஆனா, உங்கட எழுத்துநடை வாசிச்ச பிறகும் மனதுக்குள்ள நிக்க வைக்குது. வாழ்த்துக்கள் புல்லட்.

    7. இங்க பாருங்கோணா கொமடியோடு இந்த மாதிரியான பொது அறிவுக்கு பலம் சேர்க்கும் விடயங்களை புல்லட் பாண்டி தவிர வேறு யாராலும் சொல்ல முடியுமேனோ!

      சூப்பர்.

    8. Rain Frogs வீடியோ நல்ல தேடல்

    9. ராமாயண காலத்துல இருந்தே நம்ம தவகாளைங்க எல்லாம் பாவம் பாஸ்.... ஒருதபா ராமர் குளிக்க போரபொ அம்பை ஆத்தங்கரைல குத்தி வெச்சுட்டு போனாராம்.... குளிச்சுட்டு வந்து அம்பை உருவுனா tip ல ரத்தம்!!! என்னடானு பாத்தா, கீழ ஒரு தவகாள..... என்னபா, நான் அம்பை சொருகரப்பவே காத்திருக்கலாம் தானேனு ராமர் கேட்டாராம்.... அதுக்கு தவளை சொல்லிச்சாம் யாரவது என்னை குத்துனா ராமா னு கத்துவேன்..... ராமரே என்னை குத்துன நானா என்னனு கத்துவேன்னு சொல்லிசாம்பா......

    10. ஜயையோயோ.....! தவளையை பற்றிய பதிவா? அதக் கண்டாலே எனக்காகவே ஆகாது. பொறுங்கோ கண்ண மூடிற்று படிச்சிற்று வந்து Comment போடுறன்.

    11. ஆஹா புல்லட் கிளம்பிருச்சய்யா...
      நல்ல பதிவு புல்லட்...
      நல்ல தகவல்களும் கிடைத்தது...

    12. //இதில என்ன கொடுமைன்னா தாய்த்தேரை முட்டைய இட்டுட்டு தன்பாட்டுக்கு போயிடும்.. ஆனா பாவம் தகப்பன்தான் வாயில பச்ச தண்ணி கூட படாம முட்டை பொரிக்கும் வரை காத்திருந்து எல்லாத்தையும பத்திரமா பக் பண்ணிக்கும்..//

      நீ தான் Good நல்ல தவக்க...

      … //பாத்தீங்களா எவ்வளவு குரூரமான பெண்களும் அனுதாபத்திற்குரிய ஆண்களும் உலகத்தில இருக்காங்க?//

      ந‌ற‌... ந‌ற‌...


      //தலைப்பில லோஷன்... சாரி லோஷ்கன் என்று போட்டது ஏனெண்டு கேட்கிறீங்களா? Irish காரங்க தவக்களய அப்பிடி தானுங்கோ கூப்பிடுவாங்கோ! ஹிஹி! நம்பாட்டி இந்த வெப்சைடில பாருங்க..//

      ஹா...ஹா...

    13. இந்த தவக்கைகளின்ட‌ தொல்லையே முடியல அதில வேற YouTubeம் பாத்தாகனுமா? ஆள விடுங்க சாமி நமக்கும் தவளைக்கும் ரெம்பத் தூரம்.

    14. ஐயோ பாஸ்...இதென்னது தவள தேர எண்டு கொண்டு...Kandy ல ஒரு மழை அடிச்சிட்டா காணும்...எங்க இருந்து வருங்களோ தெரியேல்ல...படை எடுத்துடுங்கள்...ஏன் பாஸ்..ஒரு அணிலோ ஒரு பூனையோ பட்டி எழுதலாமே? இதென்ன இது தவள ? இந்த படங்கள எல்லாம் எப்பிடி தேடிப் போய் சேக்குரீங்கள் ? அப்பா...காலேல விழுங்கின முட்ட பொறியல் முட்டிக் கொண்டு வருது...எஸ்கேப்!!

    15. நல்ல தவளைகள் மற்றும் தேரைகள். நிம்மள் எப்ப தின்னவேலி தேரையின் முதுகில் ஏறிக்கீனம். இல்ல ஒட்டிக்கீனம்.

    16. நல்லா இருக்கு பாண்டி

    17. மொழுமொளுன்னு கொழுகொழுன்னு , மண் கிண்டுறப்போ வெளில வந்து விழுவாரே குண்டு தவக்காய் , அவருதாங்க இவரு… ////////

      சொந்தகாரரோ?

    18. வந்திச்சுதெண்டால் கோடை காலத்துல தலைவர் வெறும் அண்ட கிரௌண்ட தாதா…////////

      ஒ கட்சி தலைவரா

    19. இவரோட ஸ்பெசாலிட்டி என்னண்டால் தன்ட தோலால சுத்தியிருக்கிற தண்ணிய உறுஞ்சிக்கொள்ளுவார்.. இதனால்தான் கண்ட இடத்தில வாயை நனைக்காம இவரால மரியாதையோட இருக்க முடியுது…
      ////////////

      மானஸ்தன் வேறயா ?

    20. நல்லா இருக்கு பாண்டி

      சீன ஆட்களுக்கு தவளைகால் ஸுப் என்டா நல்ல விருப்பம் எண்டு எங்கயோ வாசித்த நினைவு.

      //தலைப்பில லோஷன்... சாரி லோஷ்கன் என்று போட்டது ஏனெண்டு கேட்கிறீங்களா? Irish காரங்க தவக்களய அப்பிடி தானுங்கோ கூப்பிடுவாங்கோ! ஹிஹி!//

      ஹா...ஹா...ஹா...ஹா...

    21. @ டொன்லீ: வருகைக்கு நன்றி :)

      @ வேத்தியன் : வருகைக்கம் வாழத்துக்கம் நன்றி :)

      @ நசரேயன்: வருகைக்கம் வாழத்துக்கும் நன்றி :)

    22. @ கிருஷ்ணா

      எங்கு போனாலும் ஆண்களே பாவமா??? //

      ஏன் உங்களுக்கு கேள் பிரண்ட் இல்லையா? :)

      //நானும் ஏதோ நம்ம லோசன் எண்டுறவரக் கலாய்ச்சு ஏப்ரல் 01க்கு ஒரு பதிவெண்டு ஆவலா வந்தன்(அவர்தான் எத்தினைபேரைக் கலாய்க்கிறார்?). இங்க வந்தால், அட எங்கட மாரித்தவக்கை!
      றேடியோவில ஓயாம மைக்க முழுங்கிப் பேசுற ஆக்கள, மாரித்தவக்கை மாதிரிக் கத்துறாங்கள் எண்டு வீட்டுப்பக்கம் சொல்லுவினம். இதில அந்த உள்குத்து எதுவும் இல்லைத்தானே? :) //

      இது திட்டமிட்டு கோர்த்து விடும் சதி! யாரும் அதை நம்ப வேண்டாம் :)

      //இப்பிடியான விசயத்தைப் பாடமாப் படிப்பிச்சாக் கொட்டாவிதான் வரும். ஆனா, உங்கட எழுத்துநடை வாசிச்ச பிறகும் மனதுக்குள்ள நிக்க வைக்குது. வாழ்த்துக்கள் புல்லட்.//


      நன்றி கண்ணா!

    23. @ கலை : அது 2008 ஆம் ஆண்டு மரியாதைக்குரிய சேர் அட்டன் பரொவினால் தயாரக்கப்பட்ட Life in Cold Bloodசீரீசிலிருந்து வெட்டபபட்டது.. அதன் முதல் பகுதியான Cold Blooded Truth தவளைகள் பற்றி மேலதிக விசயங்களை அறிந்து கொள்ளமுடியும்... :)

      வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்... :)

    24. @ Evanooruvan
      ராமரே என்னை குத்துன நானா என்னனு கத்துவேன்னு சொல்லிசாம்பா...... //

      ராவணா எண்டு கத்தியிருக்க வேண்டியதுதானே? இந்த பெரிய மனுசரே பெரிய பெரிய பல்டி அடிக்கும் போது ஒரு குட்டி தவக்காய் அடிக்கப்படாதா?

      வருகைக்கு நன்றி எவனோ?

    25. @யாழினி: ஏன் அருவருக்கிறீங்க... ஏதாவது தவக்காய பிடிச்சு கிஸ் குடுத்து பாருங்க... சில வேள ராஜகுமாரனா மாறி உங்களுக்கு ராஜயோகம் அடிச்சாலும் அடிக்கலாம்... சின்ன வயசில கதையெல்லாம் படிக்கிறதில்லயா? ;)

    26. @ தியாகி

      ஐயோ பாஸ்...இதென்னது தவள தேர எண்டு கொண்டு...Kandy ல ஒரு மழை அடிச்சிட்டா காணும்...எங்க இருந்து வருங்களோ தெரியேல்ல...படை எடுத்துடுங்கள்...ஏன் பாஸ்..ஒரு அணிலோ ஒரு பூனையோ பட்டி எழுதலாமே? இதென்ன இது தவள ? இந்த படங்கள எல்லாம் எப்பிடி தேடிப் போய் சேக்குரீங்கள் ? அப்பா...காலேல விழுங்கின முட்ட பொறியல் முட்டிக் கொண்டு வருது...எஸ்கேப்!! //

      அந்த முட்டை பொரியல் நீங்க சமைச்சதுதானே?அதில கொஞ்ச பீசை வீட்ட சுத்தி தூவியிருந்தீங்கன்னா தவக்கையென்ன தவக்கை ஒரு தத்துவெட்டி கூட வந்திராது உங்கட வீட்டுப்பக்கம்... அதுகளுக்கும் மூக்குன்னு ஒரு சாமான் இருக்கல்லே? ;)

    27. @ குடுகுடுப்பை : நல்ல தவளைகள் மற்றும் தேரைகள். நிம்மள் எப்ப தின்னவேலி தேரையின் முதுகில் ஏறிக்கீனம். இல்ல ஒட்டிக்கீனம் //

      எல்லாரும் என்ட மெயின் கேட்ட மூடுறதிலேயே நில்லங்கோ! முதல்ல கொங்கருக்கு அடைப்பெடுத்தாச்சோ? அத சொல்லங்கோ! ஆப்ப அல்லவாவில எல்லாம் வச்சு குடுக்குறாஙகள்! அங்கிட்டு என்ன தள்ளிவிடப்பாகிறீங்களா! இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன் :@

    28. @நிலாவும் அம்மாவும்: ம்ம்! என்னயே கடிக்கறீங்களா! சரிசரி நிலாவுக்காண்டி மறுபடியும் ஒரு பொதுமன்னிப்பு வழங்கிக்கிடக்கு! :)

    29. @ amharan:வருகைக்கு நன்றி!
      உங்களுக்காக இந்த லிங்க் :)

      http://www.youtube.com/watch?v=GhLAb83oUNE

    30. பிள்ளைய அழ வச்சதுக்காண்டி சின்னதுரை மாமா அதுக்கு அடி குடுக்கிறார் பாருங்கோ சரியோ .. இனி குட்டி அழப்படாது… என்ன? ”… என்று ஓராட்டிக்கொண்டிருந்தான் சித்ராவின் தந்தை பவன்…//


      இந்தப் பேர் எங்கையோ உதைக்குதே பாஸ்???

    31. ஆ ! யார் அவரெண்டு கண்டு பிடிச்சிட்டீங்களா? அவர்தாங்க நம்ம யாழ்ப்பாணத்து மாரித்தவக்கை….//


      அட மாரித்தவக்கையள் மாதிரி நிறைய அயிட்டங்கள் பதிவுலகத்திலையும் அலையுதாம் உண்மையோ??

      பிந்திய பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்....காரணம் புரியும் என்று நினைக்கிறேன்...

    32. உண்மையா வேற அரசியலொண்டும் இல்லப்பா! ஹிஹி!//



      நீங்கள் சொன்னால் சரி.. நம்புறோமில்லை....

    33. அடடா...அப்போ இவ்வளவு நாளும் கிணற்றுத் தவளைகள் மாதிரி இருந்தவங்களுக்கு நல்ல விருந்து வைச்சிருக்கிறீங்கள்....


      தவளைகள் பற்றிய நிறைய விடயங்களை வழங்கிய புல்லட்டிற்கு ஒரு சபாஷ்...

    34. @கமல் : ஹிி ஹி! எதை யும் கண்டுக்கப்படாது கமல்...
      அப்பிடிுயே நன்றிகளும் உரித்த்தாகட்டும் கமல்!

    35. ஆகா எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க>?

      அடப்பாவி புல்லட் .. நீங்க ரொம்ப அப்பாவியா இருந்தாலும் இவங்க கொத்து விட்ட்ருவாங்க போல..

      கிருஷ்ணா.. நீங்க 'அவரை' சொல்லல தானே? (அப்பாடா நான் தப்பித்தேன்.. )

      வாழ்க புல்லட்.. இப்படியே அடிக்கடி இந்தவாரம் லக்கி, இந்தவாரம் அதிஷா, இந்தவாரம் சாரு என்று போட்டு (விலங்குகள் இருக்கோ இல்லையோ.. ) கலாய்த்து கலக்குங்க..

    36. ஆகா எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க>? //

      குத்துமதிப்பா பாத்தா கனக்க பேரு! :)

      //அடப்பாவி புல்லட் .. நீங்க ரொம்ப அப்பாவியா இருந்தாலும் இவங்க கொத்து விட்ட்ருவாங்க போல..//

      ஆமா ஆமா! நான் பயங்ங்ங்கர அப்பாவி :( !

      //கிருஷ்ணா.. நீங்க 'அவரை' சொல்லல தானே? (அப்பாடா நான் தப்பித்தேன்.. )//

      அவரைத்தான் அவரைத்தன்... ஆனா அவர் எனக்கு யாரெண்டு தெரியாது பிகோஸ் ஐ ஆம் அப்பாவி :( !

      //வாழ்க புல்லட்.. இப்படியே அடிக்கடி இந்தவாரம் லக்கி, இந்தவாரம் அதிஷா, இந்தவாரம் சாரு என்று போட்டு (விலங்குகள் இருக்கோ இல்லையோ.. ) கலாய்த்து கலக்குங்க..//

      ஒரு கதை சொல்லவா அண்ணா! ஒரு ஊரில ஒரு நரி இருந்திச்சாம்... அது ஒரு நாள் கொழி புடிக்க போகும்போது வால் பொறில மாட்டி அறுந்துபோச்சாம்... தொடரும் :)

    37. Awesome... in the beginning i didnt want to read as the toads/frogs looked soo eeeeeeeew.... Also, appa was a nature / animal lover and he used to teach us abt animals; so it reminded me dad too..... @ the end, had to read no coz its ur article.. would say this is one of the best article annoooooooooooooi.... *clap* *clap*.

      why dont u join the education dept and rewrite the books for kids. you NEED to do tat. Not all can write like this... You should not fail in ur duty... pesaama try finding a way to get into the edu dept. D

      yet... பாவம்ப்பா இந்த LOSCAN அண்ணா...

      ஹி ஹி....

      //பாத்தீங்களா எவ்வளவு குரூரமான பெண்களும் அனுதாபத்திற்குரிய ஆண்களும் உலகத்தில இருக்காங்க?//

      ந‌ற‌... ந‌ற‌...என்ன குளிர் விட்டுட்டோ?

    38. Thanks alot for your words... They mean a lot to me.. :)
      Hmmm... It is really nice to hear that your father too , had a craze on animals... :(

      If I listen to you , I can't earn as much as I do now ;) For some reasons , Money always gets the best priority ... :)