நான் கனகலமா பதிவெழுதேல்ல! அட நான்தான் அப்பிடின்னு பாத்தா , நான் மட்டுமில் இப்பிடி பல பேரு ப்யூசு புடுங்கிப்போய்த்தான் இருக்காங்கங்கிற விசயம் தெரிஞ்சுது....
எல்லாருக்கும் பழக பழக பதிவும் புளிச்சிட்டுதாக்கும் எண்டு நீங்க நினைச்சா அதுதான் பிழை... பொதுவா பாருங்க இலங்கை பதிவர்கள்தான் சேடம் இழுக்கிறாங்க... அவங்களில வேத்தியன் மட்டும்தான் வேட்டிய இழுத்து கட்டிக்கொண்டு ஓடித்திரியுறார்.. கலைஞர் உண்ணாவிரதம் இருந்த கப்பிலயே நாலு பதிவு போடக்கூடிய லோசன் அண்ணா இப்ப காய்கறி வெட்டி குடுத்து அண்ணிட்ட நல்ல பெயர் எடுக்கிறார்... கடலேறியும் அப்பப்ப புரைக்கேறினவன் கஸ்டப்படுவது போல முக்கி முக்கி மூண்டு மாசத்துக்கொரு பதிவு போடுறார்... மெல்பேண் கமல் , தியாகி , யாழினி , மாயா , கௌபாய் மது , புல்லட்டு போன்றாக்களுக்கு அந்தியேட்டியும் முடிஞ்சிட்டுதோ தெரியேல்ல...
ஆனா இதுக்கெல்லாம் என்ன காரணம் எண்டு எல்லாருக்கும் தெரியும்... கொழும்பில இப்பெல்லாம் அடிக்கடி பட்டாசு பட்டாசு வெடிக்கேக்க , ஓடிப் போய் டெய்ழிமிரர் வெப்சைட்ட பாத்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கேக்க , எங்கய்ங்க பதிவெழுத நேரம் வரப்போகுது..
எல்லாரும் ஏதோ நடக்கபோகுது எண்ட ஆர்வத்தில பயத்தோட இருக்கிறாங்க
இப்ப தமிழகமும் அடிக்கடி தரமான காமெடியளப்பண்ணி நல்ல எண்டரெட்ன்மன்ட் குடுக்றபடியா.... இப்படியான இன்னோரன்னகாரணங்களால பசங்க பதிவுலகத்தையே மறந்திட்டாங்க...
But , கவலைப்படாதீங்க மறுபடியும் வருவாங்க... ஆனா என்ன கோலத்திலயோ அது தெரியாது.. :)
விரைவில சந்திப்பம் ...
அப்ப கதைக்க கட்டாயம் நிறைய விசயம் இருக்கும்.. :)
Bye!
13 Responses
உங்களை காணோமேன்னு ரொம்ப கவலையா இருந்தது புல்லட்.. அப்பப்ப பதிவுகள் பக்கம் வாங்க.. பத்திரமா இருங்க.. take care
வாங்கண்ணா வாங்க. வெயிட்டிங் பா(f)ர் யூ!
hi bullet anne.. just wanna say hi.. yea.. no one writing nowadays..
ஆஹா...
மாப்ள...
வேட்டிய இழுத்துக்கொண்டோ???
அவுண்டு விழாமல் இருந்தா சரிதான்.. (எனக்கு தானப்பா...)
நீங்கள் சொல்றதும் சரிதான்...
பொறுத்திருந்து பாப்பம்...
வரட்டா...
நன்றிங்க எல்லாருக்கும் ...! மறுபடியும் இலங்கையர் வலைப்பூக்கள் களைகட்டும் நாள் வருமென்று நம்புவோம்... :)
மனித உயிர் இப்படி பறிபோகும்போது எப்படி எழுதுவது? இருக்கும் உயிர்களை காப்பாற்றுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்
அட புல்லட்...நான் ரொம்ப பிசியாக்கும்...நான் மட்டுமல்ல சிங்கை பதிவர்கள் அனைவரும் ரொம்ப பிசியாக்கும்..கனபேர் ஊருக்கு தேர்தல் திருவிழா பாக்க போய்ட்டினம்....:-)))
Bye...
// மெல்பேண் கமல் , தியாகி , யாழினி , மாயா , கௌபாய் மது , புல்லட்டு போன்றாக்களுக்கு அந்தியேட்டியும் முடிஞ்சிட்டுதோ தெரியேல்ல... //
:)
மீண்டு மீண்டும் வரும் காலம் வரும்
அண்ணே நீங்க இன்னும் இருக்கிறியளே எங்க போட்டியளோ எண்டு நினைச்சன் இருந்துட்டு உங்கினேக்க வரலாம் தானே ...........
நாங்களும் இப்ப திரும்பி முகத்தைக் காட்ட ஆரம்பிக்கிறம். முயலுவோம்.
bullet, puthu pathivu padikkalamnu vanthen......kaanume?
Post a Comment