ஈழமும் இரத்தமும்

    நீண்ட காலத்தின் பின்பு இன்று நான் பதிவிடுகிறேன்…. காரணம் நான் எதற்கு பயந்து கொண்டிருந்தேனோ அது நடந்து விட்டது… எனது மனஓட்டங்களை உங்கள் எல்லோருடனும் பகிராவிட்டால் எனக்கு மண்டையே வெடித்து விடும்….


    உண்மையில் மீட்கப்பட்டது என்ன?

    கீமே காணப்படும் படம் பதில் ‌ சொல்லும்...
    கடைசி மோதலின் முடிவில் எனச்சொல்லி அரசு வெளியிட்ட படங்களில் ஒன்று...







    யுத்தம் முடிவடைந்தது

    புலிகளின் வெள்நாட்டு தொடர்பு பொறுப்பாளர் கேபி மூலம் புலிகள் யுத்த முடிவை ஒப்புக்கொண்ட மறுநாள் இராணுவம் தனது கடைசி தாக்குதல்களை மேற்கொண்டு எஞ்சிய புலிகளை கொலை செய்து யுத்தத்தை நிறைவு செய்வதாக அறிவித்தது..


    இழப்புகள்

    நான்காம் ஈழப்போரில் இராணுவத்தரப்பில் 25000 பேர் மரணித்தும் அங்கவீனமடைந்துமிருக்கலாம் என ஊகிக்கபடுகிறது.. அதேவேளை 500 க்கு குறைவான சிங்கள் சிவிலியன்கள் குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்டனர்…

    தமிழர் தரப்பில் , 2006 இல் 30000 போராளிகள் இருந்ததாக கருணா அம்மான் தெரிவித்திருந்தார். தற்போது 2000 பேர் இராணுவக்கட்டுப்பாட்டில் சரணடைந்து உள்ளனர்… மிகுதியான அனேகம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது… ஏனெனில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் அவசர கல்லறைகளில் மட்டும் 15000 வீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாக வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தகவல்கள் தெரிவிக்கிறன. மேலதிகமாக 25000 க்கும அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 100000க்கும் அதிகமான மக்கள் அங்கவீனர்களாயுமுள்ளனர். எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரும் ஒரு சிவில் சமுதாயத்தில் இணைந்து வாழமுடியாத தரத்தில மனப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.

    குற்றச்சாட்டுகள்

    புலிகளுடன் பேசி பிரயோசனமில்லை என முடிவெடுத்த மேற்குலக நாடுகள் தமிழரை கைவிட , இந்திய சீன வல்லரசுகளின் இழுபறியில் இலாபம் காண நினைத்த இலங்கை , சிறிதும் பிசகின்றி தன் திட்டத்தை நிறைவேற்றியது. புலிகளினை அழிக்க தான் எதயும் இழக்க தயாராக இருப்பதாக கூறி தமிழர்களை இழந்தது. இன்று பட்டாசு வெடித்து மகிழ்கிறது…

    தமிழ்நாட்டு மக்களின் மீதான திட்டுதல்கள்

    எனக்கு தெரிந்த எல்லா தமிழர்களும் திமுக வென்றதை கண்டு மூச்சடைத்துபNபுhய் விட்டார்கள்.. ஏதோ வெட்டுறம் புடுங்கிறம் எண்டார்கள்… இப்ப என் சொல்லுவது என்று தெரியாமல் முழிகிறார்கள்…

    நான் சொல்கிறேன்… தமிழ் நாட்டு மக்கள் அப்பாவிகள்.. நல்லவர்கள்.. நமக்கு இருக்கும் பிரச்சனைதான் அவர்களுக்கும்… அவர்கள் இங்கு 6 கோடி மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு குட்டுவதற்கு 100 கோடி ஆரியம் இருக்கிறது.. நாங்கள் 5 இலட்சம் பேர் எப்படி 80 லட்சத்திட் குட்டுப்டுகிறோமோ அப்பிடித்தான்… கருணாநிதியும் தனித்தமிழ் நாடு கேட்டால் இராமேஸ்வரம் கடற்கரையில் மிதக்கவேண்டிவரும்… அது தெரிந்துதான் எல்லாரும் அமத்தி வாசிக்கிறார்கள்… ஜெயலலிதாவின் நாடகம் எல்லோருக்கும் தெரியும்… அவர் சுத்தமாக நம்புதற்கரியவர்… எலெக்சனுக்குhக போட்ட வேடம்… ஆனாலும் எவருக்குமே ஓட்டுப்போடாத மக்களுக்கு என் நன்றிகள்…

    மொத்தத்தில் ஒரு பெரும்பான்மை இனத்துடன் சம்பந்தம் வைத்தாலொழிய தமிழீழம் சாத்தியமானது அல்ல. இதை உணர்ந்துதான் இந்திய ஆரியத்திடமும் அமெரிக்காவிடமும் புலிகளின் தலைமை மன்றாடியது.. காங்கிரசும் ஒபாமாவும் கைவிடடதுடன் பெரியவரின் கனவுகள் சாம்பலாகிவிட்டன..

    வடக்கில வசந்தம்

    கிழக்கின் உதயத்தில் நிகழ்ச்சி நிரல்களாக

    விவசாயிகள் மீள்குடியேற்றம் விளைச்சல் அமோகம் ஆகா ஓகோ என்று புழுகினார்கள்… பிறகுதான் பார்த்தால் அது பெரும்பான்மையினம் என்று தெரிய வந்தது.. முன்பு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்ற வாசிகளை புலிகள் சுட்டு துரத்தினார்கள்.. இப்போது அவர்கள் இராணுவ பாதுகாப்புடன மீளக்குடியேறி வாழ்கிறார்கள். அவர்களுக்குதான இப்போ வசந்தம்.

    அட அது அப்படியென்றால் கிழக்கில் தமிழர்களின் நிகழச்சி நிரலில் இது மட்டும்தான் இருக்கிறது
    பாடசாலைசிறுமிகள் கடத்தி கற்பழிக்கபட்டு கப்பம் பெறப்பட்டபின் கொலை
    அடையாளம் தெரியாத நபரால் பிள்ளையான் குழு உறுப்பினர் கொலை
    கருணா குழு உறுப்பினர் கொலை
    குழும்பஸ்தர் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்ட்டார்..
    சத்தியமா வேறு எதுவிமில்லை.. ஏதாவதிருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்…

    இதுவா உதயம்? எனக்கு பதில் வேண்டும்…

    என்றாலும் அங்கு பிள்ளைகளை கடத்திய குழுவினரை பொலீஸ் என்கொண்டர் செய்ததில் எனக்கு அவர்கள் மீது மரியாதை…

    அப்போ யாழ்ப்பாணம் ?

    எலெக்சன் வரப்Nபுhவதால் கொலை கொள்ளை ஏறத்தாள முற்றாகவே குறைந்து விட்டது. அடுத்த முதலமைச்சர் யாரென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எலெக்சன் முடிந்ததும் மீண்ம் சுரண்ட தொடங்குவார்களா என்று பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்… ஆனாலும் எல்லாம் ஒரு நல்ல நோக்கத்துக்கா தொடங்கப்பட்ட இயக்கம்… இன்னும் மக்கள் மனதை வசீகரிக்க சந்தர்ப்பம் உள்ளது… வெந்த புண்ணில் வெலைப்பாய்ச்சாமல் எரிகிற வீட்டில் பிடுங்காமல் இருந்தால் சும்மாவே மக்களின் ஆதரவை பெறமுடியும்… என்னைப் பொறுத்தவரை புலிகள் மக்களிடம் ஒரு மரியாதையை பெற ஒரே காரணமாயிருந்தது அவர்களது ஒழுக்கம்.

    தீர்வுத்திட்டம்?

    கிடைக்கிறத வாங்கிக்கொண்டு போக வேண்டியதுதான்.. இயலுமெண்டால் கச்சதீவுப்பகுதியில் தமிழக மீனவர்களை சுடவேண்டாம் என கேட்டுககொள்ளலாம். எமக்காக இவ்வளவு நாள் குரல் கொடுத்தவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை.


    தமிழீழம் என்னவாச்சு?

    இனி சிங்களவர்கள் தங்களது காடைத்தனத்தை கலவரங்கள் மூலம் வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியம்..பேரினவாத அரசியல்வாதிகளும்; இதை தெரிந்திருப்பதால் இனி பலவந்த குடியேற்றங்களை மேற்கொண்டு மட்டும் மெதுமெதுவாக தமிழீழ அத்திவாரத்தை மக்க செய்வார்கள்… கருணா அம்மான் , ஈபிடிபி குழுக்கள் நிஜத்தை உணர்ந்து சுயநலத்தை மறந்து அதை எதிர்;த்து குரலெழுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அதோ கதிதான்… அதுபோன்ற நேரங்களில் தமிழ்நாட:டு மக்கள் ஆதரவுகரம் நீட்டவேண்டும்

    தமிழரின் எதிர்கால அரசியல்

    படித்தவர்கள் அரசியலுக்கு வர கட்சிகள் அனுமதிக்க வேண்டும்… உயிருக்கு பயந்தவனுக்குதான் உயிரின் மதிப்புதெரியும்.. கசாப்பு கடையில வளர்ந்தவன் கையில் ஆட்டுக்குட்டி கிடைத்தால் அதை சீவி சிங்காரிப்பானா? இல்லை சீவி சில்லி ப்ரைட் ரைஸ் போமுவானா? தூரநோக்குடைய படித்த இளைஞர்கள வருவதற்கு வசதியாக குறுக்கே நிற்கும் ஆயுதங்களை விலக்கி இடமளிக்க வேண்டும்..


    தற்போது தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன

    எஞ்சியவற்றை பாதுகாப்போம்…
    பெரியவர் இறந்தாரோ இல்லையோ மனம் தளரவேண்டிய அவசியமில்லை.. அவர் செய்ய வேண்டியதை செய்து விட்டார்… எந்த சிங்களவனாவது ஒரு தமிழனை அடிக்க கையை ஓங்கும் போது ஒரு தடைவ அவர் முகம் அவன் கண்ணில் வரும் கையை மீள இறக்கும்…
    ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ தமிழனின் பெயரை , பிரச்சனையை உலகறிய செய்தவர் வீரணமரணமடைந்தார் என்ற செய்தி கேள்விப்பட்ட சமயம் கண்கலங்கி தவித்தது நான் தமிழனாயிருந்து பெருமைப்பட வேண்டிய விடயம்…

    போரில் இறந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் என் அஞ்சலிகளையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    18 Responses

    1. //பெரியவர் இறந்தாரோ இல்லையோ மனம் தளரவேண்டிய அவசியமில்லை.. அவர் செய்ய வேண்டியதை செய்து விட்டார்… எந்த சிங்களவனாவது ஒரு தமிழனை அடிக்க கையை ஓங்கும் போது ஒரு தடைவ அவர் முகம் அவன் கண்ணில் வரும் கையை மீள இறக்கும்.

      உண்மை.. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அவர் இறக்கவில்லை என்பதை முற்று முழுதாக நம்புகிறேன். என் தலைவனை நேசிக்கிறேன் என்று எனக்குத் தெரியம். கடவுளை நம்பாத நான் என் தலைவனை கடவுள் மாதிரி நினைக்கிறேன் என்றும் சொல்லியும் நினைத்தும் வந்திருக்கிறேன்.. ஆனாலும் இந்தளவுக்கு நான் நேசிக்கிறேன் என்பதை நானே அறிந்திருக்கவில்லை. நேற்று இந்தச் செய்தியை நம்பிய பொழுதுகளிலிலேயே அதை அறிந்து கொள்ள முடிந்தது..

      //கடைசியாக இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் உடலம் கிடந்த இடத்தில் இலங்கை இராணுவம் ஆரவாரப்படும் காட்சி வெறும் நாடகமாகத் தெரியவில்லை

      இது பொய்யாக இருந்தால் கூட அங்கிருக்கும் பெரும்பாலான இராணுவத்தினருக்கு இது அவர் தான் என்று தான் சொல்லப்பட்டிருக்கும்.. ஆக அவர்கள் ஆரவாரப்படுவது நாடகமில்லை தான்..

      போரில் வெற்றி பெற்றிருக்கலாம். தமிழில் கதைத்தெல்லாம் எங்களை/சர்வதேசத்தை கவர முயற்சிக்கலாம்.. அவரின் செயற்பாடுகள் மூலம் தமிழர் மனங்களை வெல்லாதவரை தமிழர் உரிமைக்கான போராட்டம் தொடரத் தான் செய்யும் ஏதோ ஒரு வழியில்..

      இத்தனை மாவீரர்களும் மக்களும் சிந்திய இரத்தமும் கண்ணீரும் எங்கள் விடுதலையை என்றாவது பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு இத்தனைக்குப் பிறகும் இன்னமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கத் தான் செய்கிறது..

      இந்த facebook இருக்கிறதே facebook.. அதுவே ஒரு எளிய உதாரணம் நாங்களும் அவர்களும் வேறு வேறு என்பதற்கு... எங்களுக்கும் அவர்களுக்கும் என்றைக்குமே ஆகாது என்பதற்கு...

    2. உங்கள் சோகத்தில் பங்கெடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. எப்பாடு பட்டாவது எஞ்சியுள்ளதை காப்பாற்றுங்கள்.

    3. தயவு செய்து தலைவர் பற்றி கதைக்கும் அருகதை எல்லாருக்கும் வராது என்று தெரிந்து கொண்டு கதையுங்கள் அண்ணா. படித்த சிங்களவனாலேயே ஏற்று கொள்ள முடியாத ஒளிப் பதிவையும், நிலற் பிரதியையும் நீகள் போயும் போயும் அண்ணா, கருணாவுக்கும் உங்களுக்கும் சின்ன வித்தியாசம் தான். தளபதி மக்களுக்கு பொய்ப் படம் காட்டும் போது தனக்கு கீழ இருக்கிற தூசுப் படைக்கு உண்மை சொல்லுவானா? தசாவதாரத்தில புஷ் வந்த மாதிரி இப்ப தாடி அரும்பின தலைவர் புதுசா கண்களை மூட வைத்து பண்ணியிருக்கினம் மோட்டு கூட்டம். இந்த பதிவு பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும், தயவு செய்து நீக்கவும். கெட்ட வார்த்தை பாவிக்க நான் விரும்பவில்லை.

    4. வெறும் ஒற்றை பிஸ்டலை நம்பி போன தலைவன் என்று நீங்கள் கேலிக்கிடமா காமடி பண்ணுறீங்களே! அடையாள அட்டை வைச்சிருந்த தலைவரிடம், வேறை ஒன்றுமே இல்லாமல் போயிட்டுதா தன் உடலை எரிக்க? நீகள் நேரம் பார்த்து இப்ப அரசியல்லை குதிக்கிறீங்களே? உங்களுக்கு துப்பாக்கி தடை? இப்ப அது இருக்க கூடாது என்று இப்படி எல்லாம்? சீ ... முடியலை... கேவலம்...

    5. சாயினி மற்றும் குடுகுடுப்பை பின்னூட்டலுக்கு நன்றிகள்... எம் கவலைகளை வெளிப்படுத்த பதிவுலகம் ஒன்றுதான் வழியாக உள்ளது...

    6. பிளாட்டினம் : நான் முன்பே பல தடவைகள் சில விடய்ங்களை சாடைமாடையாக சொல்ல முயற்சித்த போது நீங்கள் கண்ட கண்ட சொற்களால் காயப்படுத்தினிர்கள்.. இப்போது இவ்வாறு கத்துகிறீர்கள்... எனக்கு அரசியல் ஆர்வமும் இல்லை... தமிழரை தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை... கண்களை திறந்து யோசிப்பவர்களுக்கு புலப்படுபவற்றைதான் நான் சொன்னேன்.. யதார்த்தம் என்பதும் இலட்சியம் என்பதும்வெவ்வேறு திக்குகளில் தென்படும்போது சும்மா வெறுமனே வாய் வளர்த்துக்கோண்டிருப்பது எதற்கும் உதவாது... இவ்வளவு இழப்பின் பின்னரும் கொய்யாமர உச்சிக்கொப்பில் நின்று கத்துவது அழகல்ல... அவர் உயிரோடுஇருப்பினும் கூட மீள அதே உத்வேகம் அடைய காலம் எடுக்கலாம்.. அதற்குள் நாம் ேவறு பாதைகளையும் அலசுவது விரயமானதல்ல. பாதைகள் மாறினாலும் இலக்கு ஒன்றாகுமிடத்து கவலைகள் ‌வேண்டாம்.

      என்றாலும் இவ்வளவு நாளும் இலங்கையில் இருக்கும் படி ஏதோ ஒன்று உள்ளே இருந்து இழுத்து வைத்திருந்தது... நேற்றுடன் அதுவும் போய் விட்டது..

      பார்க்கலாம்....

    7. நன்பர்களே!
      எது எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் உங்கள் முன்னே இருக்கிறார்கள், அவர்கள் மனநிலைகளை எப்படி சரிசெய்துகொள்வது என்பதையும், எதிர்காலத்தில் எம் இளையோர்களை எவ்வாறு வழி நடத்தப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும், முக்கியமாக நாம் ஒரு சில விடயங்களை எளிதில் சொல்லிவிடலாம் அவைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் போனாலும் கூட. we should move from talking to doinக். எதிர்காலத்தில் எம்மவர் வாழ்கையில் உரம் சேர்க்கும் கரங்களாகமாற முயற்சிசெய்வோமாக.

      நன்றி
      சாமி

    8. நன்பர்களே!
      எது எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் உங்கள் முன்னே இருக்கிறார்கள், அவர்கள் மனநிலைகளை எப்படி சரிசெய்துகொள்வது என்பதையும், எதிர்காலத்தில் எம் இளையோர்களை எவ்வாறு வழி நடத்தப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும், முக்கியமாக நாம் ஒரு சில விடயங்களை எளிதில் சொல்லிவிடலாம் அவைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் போனாலும் கூட. we should move from talking to doinக். எதிர்காலத்தில் எம்மவர் வாழ்கையில் உரம் சேர்க்கும் கரங்களாகமாற முயற்சிசெய்வோமாக.

      நன்றி
      சாமி

    9. This comment has been removed by the author.
    10. This comment has been removed by the author.
    11. This comment has been removed by the author.
    12. bullet, hope you are not a Tamil, you born to a......, No more coming to your site. your are next to Karuna......

    13. நீண்ட காலத்திற்கு பிறகு உங்களது பதிவை காண முடிகிறது. எப்படி இருக்கிறீர்கள் புல்லட்?

      பெரியவர் பற்றி என்ன சொல்லுவதன்றே தெரியவில்லை. நினக்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. எதையுமே நம்ப முடியவில்லை புல்லட். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

      அங்கிருக்கும் மக்களாவது நலமாக்கப் பட்டு அவர்கள் வாழ்வில் சிறிதளவாவது சுபீட்ச்ஷம் கிடைத்தால் எம‌க்கு மிகுந்த மகிழ்ச்சியே...

    14. நன்றி Vr4U உங்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...

      ட்ரையம்பு.... ஏற்கனவே எல்லாரும் நொந்து போய்க்கிடக்கிறார்கள்...பலர் உள்ளுக்கு அப்படியிருக்குமோ என்ற பயத்தடன் வெளியேஅதெல்லாம் சும்மா என்கிறார்கள்... நிஜம் எப்படியிருந்தாலேன்ன உன் கடமையை நீ செய் என்பதுதான் என் கருத்து... தற்சமயம் இயற்கையாக அவர் காலமாகியிருந்தால் என்ன செய்திருப்ீர்கள்.. கையிலிருப்பவ்ற்றை கொண்டு மீண்டும் உடைந்ததை கட்டி எழுப்பாமல் எமன்தாடி முளைக்கிற மெழுகுபொம்மய தான் போட்டவன் என்று அழுது கொண்டிருப்பீர்களா? அவர் எங்களுக்காக ஓடாக தேயந்தவர் என்ற நம்பிக்கை பலருக்குண்டு... அவர் இதுவரை சுமந்ததை நாம் எல்லாரும் எமக்கு தெரிந்த வழிகளில் கொஞ்சமாக சுமப்போம்.. எனக்கு கவலையில்லையென்றுசொல்லாதீர்கள்.. எத்தகைய இடர்வரினும் அதனை கண்கலங்காது ஏற்றுககொளவதுதான் தமிழனுக்கழகு..

      @ யாழினி: என்னத்தை சொல்ல யாழினி... யாருடைய தோளிலாவது சாய்ந்து ஓவென அழவேண்டும் போல் தோன்றகிறது... அந்த நேரத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று கூறிய போது துரோகி என்றார்கள்.. இப்போது அப்படியே நடந்துவிடடது... ஆனால் நான் எதிர்வு கூறியதை எந்த தலைவர்களாலயும்யோசிக்க முடியேல்லயா எய்டதுதான் எண்ட கேள்வி. எம் சனமெல்லாம் குற்றுயிரா குலையுயிரா கிடந்து தத்தளிக்குது.. இண்டக்கு ஐசிஆர்சிக்காரனும் கைவிட்டுட்டானாம்...மிஞ்சிக்கிடக்கிற பூவை பிஞ்சையெல்லாம் உலுக்கி கொட்டபோறாங்கள்... ஆம்பிளையள விடுங்கோ இறுக்கமானவனுகள்... உந்த பொம்பிளையளயும் குழந்தையளையும் காப்பாத்த எமக்கு நாதியில்லயே...

      நான் இப்ப வேண்டுறது ஒரு எரிகல் வந்து இலங்கையில விழுந்து எல்லாரும் சாம்பலா போட வேணுமெண்டு....

    15. This comment has been removed by the author.
    16. ஒரு சாதாரண தமிழனின் ஆதங்கங்கள்...
      எனக்கும் உண்டு...

      கொஞ்சம் நக்கலாம அதை எழுதியிருக்கிறன்..
      முடிஞ்சால் வந்து பாருங்க...

      http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_21.html

    17. உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் மத்தியில் நிறையக் குழப்பங்கள்.
      குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க இங்கே பலர் புறப்பட்டிருக்கிறார்கள். அதில் யாருக்கும், முகாம்களில் வாடும் மக்கள் பற்றிக் கொஞ்சமும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை.

      //பிளாட்டினம்:- படித்த சிங்களவனாலேயே ஏற்று கொள்ள முடியாத ஒளிப் பதிவையும், நிலற் பிரதியையும் நீகள் போயும் போயும் அண்ணா, கருணாவுக்கும் உங்களுக்கும் சின்ன வித்தியாசம் தான்//

      கருணாவும் மற்றவர்களும் தமிழ்த் தேசியத்தின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படும் காலமும் வந்துகொண்டிருக்கிறது. உணர்ச்சிகளை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பார்ப்போம். உணர்ச்சிகளால் கே.பியையும் துரோகியாக்க முடியும். ஆனால் தீர்வுகாண முடியாது.