சில கேள்விகளும் பல பதில்களும்

    இன்றைய ஈழநிலவரங்களால் பலர் குழப்பமடைந்திருக்கிறார்கள் என்றால் அதில் நானொனறும் விதிவிலக்கல்ல.. பலகேள்விகள் மனதை குழப்பிய வண்ணம் இருந்தாலும் அவற்றுக்கு நான் காணும் பதில்கள் பலருக்கு வேறு எண்ணக்கருத்துகளை தோற்றுவிக்கலாம்.. தயவுசெய்து அவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்…







    தற்போதைய நிலவரங்களின் படி சோற்றுக் கரண்டி சிங்கள அரசிடமே உள்ளது. பானையிலிருந்து எவ்வளவு அள்ளித்தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



    தருவார்களா?



    நிச்சயமாக வெறும் கரண்டியை தூக்கி மண்டையில் அடிக்க மாட்டார்கள். ஏனென்றால், மறுபடியும் தமிழர்களை ஏய்க்காட்ட வெளிக்கிட்டு இன்னொரு முறை போராட்டம் தொடங்கப்பட்டால் அதற்கு விலை கொடுக்க சிங்களவர்களும் தயாராயில்லை. சர்வதேசமும் தயாராயில்லை. அப்போது விளைச்சல் தமிழர் பக்கம்தான் என்பதை சிங்கள அரசு நன்றாக அமையும். ஆகவே ஏதோ குறைந்தது அரைக்கரண்டியாவது தர முயற்சிப்பார்கள். அதை வாங்கிக்கொள்ளத்தான் இந்கிலீசெல்லாம் சொல்லிக் கொடுத்து தயார் பண்ணி வைத்திருக்கிறார்களே பொம்மைகளை…

    அத்தோடு இப்போதிருக்கும் ராணுவ பலத்தை அப்படியே பத்து வருடத்துக் மேல் தக்க வைத்திருக்கும் சக்தி சிங்கள அரசுகளுக்கில்லை… ஆகவே எப்படியாவது சர்வதேசத்தை திருப்தி படுத்தவவாவது ஏதோ கொஞ்சம் தருவார்கள்..


    புலம்பெயர் மக்களின் பஙகு என்ன?


    இதுவரை போராட்டத்தை சர்வதேச அளவில் இட்டு சென்ற பெருமை அவர்களையே சாரும்… முன்னரெல்லாம் மணித்தியாலங்களை பவுணில் அளக்கும் அவர்கள் பனியில் இறங்கி நாட்கணக்காக போராடியதை கண்டு நாமெல்லாம் கண்பனிக்க நன்றி கூறுகிறோம்… இன்னும் சளைக்காமல் உங்கள் நாளாந்த வாழ்;க்கயை பாதிக்காத வண்ணம் அமைதியாக போராட்டங்களை முன்னெடு;த்துச்செல்லவும்… புலிகள் ஒழிந்தார்கள் என இலங்கை அரசு அறிவித்தது இப்போது தமிழர்களுக்குததான் இலாபம்… அரசியல் தீர்வு எங்கே என கேட்டு அரசின் கழுத்தை நெரிக்க க்ளவ்ஸ்; போட்ட உங்கள் கைகளால் மட்டும்தான் முடியும்….


    சர்வதேசத்தின் பங்கு என்ன?


    சிங்கள அரசிண்ட துணிச்சலை என்ன இருந்தாலும் பாராட்டித்தான் ஆகோணும்… அட அமெரிக்காவுக்கே அப்பளம் சுட்டுக் காட்டுறான் பாருங்க… அவனுகளும்; “அடடே நல்லாருக்கே” எண்டு சொல்லிப்போட்டு செய்மதி செய்மதியே நில்லு எண்டு பாட்டுப்பாடிக்கிட்டிருக்கானுங்க… ஒசாமா நம்ம மகுடத்திண்ட தம்பிய சந்திச்சால் “அண்ணே , ஒரு அரை லீட்டர் பெஞ்சு தரமுடியுமா ? நாhனும் ஒபாமாவும் ஒரு கரையா போயிருந்து குடிச்சுpக்கிறோம் ” எண்டு கேட்டாலும் கேப்பார்..






    மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் நம்மாளு குடுத்தான் பாரு குடுவை …. அதிலும் சுவிஸ்சுகாரனுக்கு பண்ண காமெடி உலகமகா காமெடி… ஐநா அது இதுன்னு எல்லாரும் தங்களால முடிஞ்ச வரைக்கும் முக்கிப் பாத்தாங்க ம்ஹ_ம்… “நல்லா கதலி வாழைப்பழம் சாப்பிடுங்க ”ன்னு நம்ம சால்வை சொன்ன அட்வைச கேட்டுக்கொண்டுபோய் பனியில வாழைமரம் நட்டுக்கிட்டிருக்காங்க கேனப்பயலுக…


    எப்பிடி வந்துச்சு இந்த தைரியம்? காரணம் நான் சொல்ல தேவையில்ல…


    சீனாக்காரன்…

    குடும்பம் குட்டிய கவனிக்காம ஒரு நாளில 18 மணிநேரம் வேலை செய்யிற பேய்ப்பிறப்பு… அவனுக்கு மனிதம் நீதி நேர்மை நியாயம் எல்லாம் அந்த பூந்தல் கண்ணுக்கால பாத்தா தெரியவா போகுது…
    ப்ளான் பண்ணிட்டான்.. “மவனே இந்தியா! வைக்கிறண்டி ஆப்பு உன்ட கவட்டுக்கயிருந்து” எண்டு … அவன்ட கஸ்மாலப்பிளானுக்க நம்ம போராட்டம் மாட்டி இப்பிடியாப்போச்சு… சே!

    ரஸ்யாக்காரனுக்கு பழைய கொதி…மேற்கத்திய காரன் வச்ச வெடியில வீக்கம் இன்னும் வத்தேல்ல… அதுக்குள்ள அவண்ட நிலம சரியில்ல எண்டு தெரிஞ்சவுடன மறுபடியும் சறத்த தூக்கிறார்…


    இந்தியாதான் பாவம்… என்ன செய்யிறதெண்டு தெரியாம முழிக்குது… சுத்தி நிக்கிறாங்க… இலங்கைய பகைச்சுக்கவுமு; முடியாம வெளிப்படையா ஆதரவளிக்கவும் முடியுhம அதுக்கு மூல வியாதியே வந்திருக்கும் இத்தரைக்கும்.. நேற்று சனல்ஏசியா நியுசில கூட்டமா மேசயப்போட்டிருந்து குழறி அழுகினை…பாவமாக்கிடந்துது…. நல்லா வேணும்….


    ஆனாலும் சீனாவும் ரசியாவும் ஒரு குறித்தளவுக்குதான் சப்போட் தரமுடியும்… ஐநாவில நல்ல காரணங்கள மேலைத்தேயம் காட்டிச்சுதெண்டால் அவையால ஒண்டும் செய்ய முடியாது… ஆகவே ஏதாவது இலங்கை தமிழருக்கு ஏதாவது குடுக்க வேண்டிய அவசியமிருக்கு…


    என்ன தருவார்கள்?


    பெயரளவிலான வட மாகாண சபையும் முதலமைச்சர் பதவியும் கட்டாயம் வரும். அபிவிருத்தி நிதியென வெளிநாடுகளால் வழங்கபடும் நிதியில் ¼ பங்கு முதலமைச்சரின் கட்சிக்கும் ¼ பங்கு வட பகுதி புனரமைப்புக்கும் மீதி சில குடும்பத்தாரின் உள்ளாடையிலுள்ள பாக்கெட்டிற்கும் வழங்கப்படும் . காலப்போக்கில் ஏதொ வந்த வரைக்கும் லாபமென கிடைத்ததை ஏற்றுக்கொண்ட வடபகுதி ஐசீயூ வார்ட்டிலிருந்து நார்மல் வார்ட்டிற்கு மாற்றம் செய்யப்படும். அதோடு அது அங்கேNயு இருக்க நிர்ப்பந்திக்கபடும். அப்பிடி மீறி புலம் பெயர்ந்தோர் நிதியை கொண்டு டிஸ்சார்ஜ் ஆக வெளிக்கிட்டால் கிடத்தி வைச்சு கிட்னி புடுங்கப்படும். அவ்வளவுதான்…


    மேலும் தமிழரின் பூர்வீக நிலங்களில் பலவந்த சிங்கள குடிNயுற்றங்கள் மேற்கொள்ள படுவதை கடைசி வரையும் தடுக்கமுடியாது… நாமெல்லாரும் ஒன்றாய் வாழ பழகியவர்கள்.. ஓரு நாட்டு மக்கள். பாருங்கள் நாம் எவ்வளவு ஒற்றுமையானவர்கள் என்று வெள்ளவத்தையிருந்து தற்போது சொய்சாபுர வரை தமிழர் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை உதாரணத்துக்கு காட்டுவார்கள். பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான்.



    மறுபடியும் செம்மணி வரலாறு வருமா?





    நேற்று எங்கள் மதிப்புக்குரிய பாதுகாப்பு செயலாளரின்( இணையதளத்தில் பின்வருமாறு கிடந்தது..

    "இராணுவம் தாயன்போடு தோற்கடிக்கப் பட்ட வன்னித் தமிழர்களைப் பராமரிப்பது நன்றியுணர்வையும் கடமைப்பாட்டையும் தோற்றுவிக்கும் காட்சிகளாகும்"

    ( http://www.vidivu.lk/tm.asp?fname=20090521_03 )



    உதே போல் முன்னொரு முறை யாழில் ஓட்டோக்காரர்கள் ஆட்டிறைச்சிக்கடைகளுக்கு போட்டியாக வெட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது அதே வெப்சைட்டில் வந்த கட்டுரையில் ஒரு வாசகம் காணப்பட்டது… “நெல் பயிர் நடுவில் ரோஜா வளர்ந்தால் ரோஜா களை.. அதே போல ரோஜா தோப்பில் நெல் ஒரு களையப்பட வேண்டிய புல். 2002-2006 யாழ் ஒரு நெல் வயல். இப்போ அது ஒரு ரோஜாத்தோப்பு. நாட்டின் நன்மை கருதி எம் கடமையை செய்கிறோம். “

    இப்போது செம்மணியென்ன செம்மணி பெரிய பெரிய ஏக்கர்கணக்கில கண்டாமணியெல்லாம் கிண்டுப்படும். அது எவராலும் தவிர்க்க பட முடியாதது. ஆனாலும் தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையம் போன்ற சில முகாம்கள் உருவாக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். இதை சில செல்வாக்குடைய அமைச்சர்கள் அரசிடம் பரிந்துரை செய்யலாம்…. செய்வார்களா?


    கல்வியால் பிரச்சனை வருமா?

    தமிழரின் கல்வித்தரம் கடுமையாக வீழ்ச்சி கண்டு விட்டது.. முன்னர் கோட்டாவை எதிர்த்து போராடிய தமிழினம் இப்போ “கோட்டாவில இன்னொண்டு தாங்க சார்” என்று மொட்டை வெயிலில் உண்ணா விரதம் இருக்கிற ரேஞ்சுக்கு போய் விட்டது.. ஆகையால் கோட்டாவைக் கூட்டு என்று பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது… ஆனால் இன்னொரு முறை மக்கள் தொகை கணக்ககெடுப்பு நடத்தப்பட்டு ….. ஹிஹி…….பெரிய விளையாட்டு ஒன்று காத்திருக்கிறது.. 



    ஏ9 திறக்கப்படுமா?


    ஏ9 ஐ மூடினாப்பிறகு யாழ்ப்பாணச் சனத்திட்ட இதுவரையும் அடிச்ச காசை கொண்டு ஒபாiமா வைச்சு ஓஸ்காருக்கு ஒரு படமே எடுக்கலாம்.. அடிச்சது காணும் , இனி வைச்சிருக்க இடமில்ல எண்டு ஒரு பீலிங் வரும் போது வடமாகாண முதலமைச்சர் திறந்து வைப்பார்… அதுக்கு பிறகு யாழ்ப்பாணத்தில ஒளிச்சிருக்கிற ஈழத்தமிழர் கலாச்சாரம் துரத்தித் துரத்திச் சுடப்படும்… பலருக்கு ஜாலிதான்…


    புலம் பெயர்ந்தோர் கதி?


    டயாஸ்போறாக்கள் இங்க வந்து போகலாம்… பிரச்சனையிருக்காது… வந்து நிறகும்போது ஒரு போன் வரும்… கொஞ்சம் நிதியுதவி செய்யச்சொல்லி… நீங்க மறுக்கலாம் அப்பவும் பிரச்சனையில்ல… ஆனா நீங்க போன பிறகு , உங்கள் வீட்ட வச்சிருந்து படங்காட்டினாரே அந்த பரிதாபத்துக்குரியவர் , அவர் எங்கயாவது கிணத்துக்க இருந்து போன் பண்ணுவார் கருணை கூர்ந்து கொஞ்சம் வைப்பிலிடச் சொல்லி…
    எங்கட தேசத்தின்ட தம்பிண்ட கையில டயாஸ்போறாக்கள் கிடைச்சா காலம கிண்டின களிமாதிரி ஆக்கிப்போடுவார்… அவங்கள பற்றி கதைக்கேக்கயே , ஆள் பல்லு நறுமுற சத்தத்தில பக்கத்துல நிக்கிறவனுக்கெல்லாம் மூச்சா போகுதாம்… ஆகவே கவனம் திருப்பி வர யோசிக்கிறாக்கள்….



    இப்பிடி உங்களுக்கும் கன கேள்வியள் இருக்கலாம்….. நீங்கள் கேளுங்க நான் பதில் தாரன்…. வேணுமெண்டா நீங்கNளு பதிலும் தரலாம்… அப்ப தொடருவம் என்ன?.............

    10 Responses

    1. தமிழர்களே நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவ முடியுமா?
      தமிழர்களின் பூர்விக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க உலக நாடுகளிடம் என்ன / எப்படி கோரிக்கை வைப்பது? யார் வைப்பது?
      சிங்களர்கள் விரும்பி வடக்கு/கிழக்கில் குடியேறுவார்களா?
      தமிழ் தேசியக் கூட்டனியின் குரல் எடுபடுமா?இந்தியா யாரை தமிழர் பிரதிநிதியாக முன்னிறுத்துகிறது?

    2. "ஒரு பதிவை வாசிச்சு இப்பிடிச் சிரித்தது இது தான் முதல் தடைவை.. முடியல்ல.... "

      //… ஐநா அது இதுன்னு எல்லாரும் தங்களால முடிஞ்ச வரைக்கும் முக்கிப் பாத்தாங்க ம்ஹ_ம்… “நல்லா கதலி வாழைப்பழம் சாப்பிடுங்க ”ன்னு நம்ம சால்வை சொன்ன அட்வைச கேட்டுக்கொண்டுபோய் பனியில வாழைமரம் நட்டுக்கிட்டிருக்காங்க கேனப்பயலுக…

      இது உச்சம்

      சிரிக்கக் கூடாத ஒரு பதிவைப் பார்த்து இப்பிடி சிரிக்க வைச்சிட்டிங்க.. இந்தப் பாவம் உங்களை சும்மா விடவே விடாது.. ஆமா.. சொல்லிட்டன்...

      எல்லாமே விரும்பத்தகாத ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகள்.. :( :(
      படம் காட்டுறதுக்கு A9 கெதியில திறக்கத் தான் பார்ப்பாங்க...

      சர்வதேசத்தை எந்தளவு நம்பிறது என்று இன்னமும் புரியாமல் தான் இருக்கிறது.. அது புலம்பெயர் தமிழர்களினால் தான் முடியும்...
      அல்லது இலங்கையை இறுக்க விரும்பிற சர்வதேசம் ஆர்வம் காட்டலாம்...

    3. @குடுகுடுப்பை :

      தமிழர்களே நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவ முடியுமா?

      மீள் குடியேற்றம் பெறும்வரை அதாவது காம்புகளில் வசிக்கும் வரை முடியாது...இப்போது இலங்கை வங்கியில் கணக்குள்ளவர்களின் எகௌண்டில் பணம் வைப்புச் செய்யலாம்.. ஆனால் பணம் மூலம் எதையும் றிஸ்க் எடுக்காமல் வாங்கும் சூழ்நிலை உள்ளே இல்லை.

      தமிழர்களின் பூர்விக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க உலக நாடுகளிடம் என்ன / எப்படி கோரிக்கை வைப்பது? யார் வைப்பது?

      இந்தியா இந்த பிரச்சனை பற்றி அறியும்.. தீர்வுத்திட்டத்தில் இது குறித்தும் ஆராயுமாறு இந்தியாவால் வேண்கோள் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த பிரச்சனையை உலகநாடுகளின் பிரதிநிதிகளை டயஸ்போராக்கள் சந்திக்கும் போது முக்கியப்படுத்த வேண்டும்..இது குறித்து கருணநிதி மிக கடும் அழுத்தம் தருவதாக வாக்களித்துள்ளார்.. ஆனால் இது எந்தளவுக்கு இலங்கை அரசிடம் செல்லாக்கு செலுத்துமோ தெரியாது..

      சிங்களர்கள் விரும்பி வடக்கு/கிழக்கில் குடியேறுவார்களா?

      இல்லை.. தாழ்த்தப்பட்ட சொந்தகாணி இல்லாமல் கொழும்பின் கான்களின் ஓரமாக வசிக்கும் மக்களை பலவந்தமாக எழுப்பி தமிழர் பிரதேசங்களில் கட்டாயமாக குடியமர்த்தப்படுகிறார்கள்.. இலவசமாக சொந்த காணி கிடைப்பதால் சிங்களவர்களும் இதை பெரிது படுத்துவதில்லை...

      தமிழ் தேசியக் கூட்டனியின் குரல் எடுபடுமா?

      இதுவரையும் எடுபவில்லை.. இனிசாத்தியக் கூறே இல்லை.

      இந்தியா யாரை தமிழர் பிரதிநிதியாக முன்னிறுத்துகிறது?

      பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... அதற்கு இப்போது பிரச்சனை வேறு.. சீனாவின் தலையீட்டை நிறுத்த வேண்டும்... தமிழர் பிரச்ச‌னை இரண்டாம் பட்சம்தான்...

    4. @ visnu:
      சிரிக்கக் கூடாத ஒரு பதிவைப் பார்த்து இப்பிடி சிரிக்க வைச்சிட்டிங்க.. இந்தப் பாவம் உங்களை சும்மா விடவே விடாது.. ஆமா.. சொல்லிட்டன்...
      //

      மன்னிச்சு கொள்ளுங்க .. நான் வேணுமெண்டு இப்பிடி எழுதேல்ல...என்ட எழுத்து இப்பிடித்தான்..

      எல்லாரும் முடிஞ்சதப்பற்றி எழுதுறாங்களே தவிர இனி சாத்தியமா நடக்கப்போறத பற்றி எழுதாம பழைய புராணம் பாடிக் கொணடிக்கிறாங்க...

      முந்தி 2002 இல அப்பிடி நடந்தது 99 இல இப்பிடி நடந்தது எண்டு கதைச்சு ஒரு பிரயோசனமுமில்ல... அடுத்தது என்ன எண்டதுதான் கேள்வி... அதைத்தான் என்னால முடிஞ்ச மாதிரி ட்ரை பண்ணுறன்.. சரியா வருகுதில்ல... :(

    5. என்கிட்டே கேள்வியும் இல்லை.. பதிலும் இல்லைன்னு சொன்னா நம்பனும்

    6. நக்கல் பதிவு மாஸ்டர்...

      படித்தேன் ரசித்தேன்...

      என்னிடம் சில கேள்விகள் இருக்கு..
      அதை பிறகு கேக்கிறன்...

      :-)

    7. @நசரேயன்:
      // என்கிட்டே கேள்வியும் இல்லை.. பதிலும் இல்லைன்னு சொன்னா நம்பனும் //

      குடுத்து வச்சனீங்க தலைவா! :)

      @ வேத்தியன் :
      நன்றி!

      ஆனால் அந்த சர்வதேசம் தொடர்பான பத்தி தணிக்கைக்குட்படுத்தப் பட்டிருக்க வேண்டும்... ஒரு சாதாரண ஈழத்தமிழனின் சர்வதேசம் மீதான கடும் கோபம்தான் அப்படி அநாகரீகமாக வெளிப்பட்டு விட்டது.. அதை அடிக்கும் போது கண் எல்லாம் ரத்தக் கலரில் இருந்தது... வாயில் வந்ததை எல்லாம் போட்டு இழுத்து விட்டுட்டேன்.. அருவருப்பாக இருந்தால் மன்னித்தருளவும்...

    8. ஹாய் பாண்டி,

      இலங்கைப் படத்துல ஒரு மாவட்டம் குறையுது போல இருக்கே.. :))

      கௌபாய்மது

    9. This comment has been removed by the author.
    10. தமிழ் டயஸ்போறாக்கள் இப்போ டயர் வெடிச்ச வாகனம் மாதிரி திரியத்தொடங்கீற்றினம். என்னுடைய அறிவுக்கெட்டினவரை, இனி அவர்களால் சால்வைகளுக்குப் பெரிய தொல்லை இருக்காது. இங்கயே குறைஞ்சது 3 குழுக்களாப் பிரிஞ்சாச்சு. ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்பவும் அதில சிலர் தயார் எண்டு கேள்வி. தமிழன் எங்கயும் எப்பவும் தன்னை நிரூபிச்சுப்போடுவான்....