இப்ப எதைப்பாத்தாலும் அமங்கலமாத்தான் தெரியுது... ஒரு நாளில 10000, 20000 எண்டு செத்த வீடு கொண்டாடினா எவனுக்குதான் வாழ்க்கை இனிக்கும்?
இப்பல்லாம் ஆராவது மண்டையப்போடுறதெண்டது சிறிலங்காவில ஜர்வஜாதாரணம்... அதிலும் இப்ப கொஞ்ச காலமா ஹாட் அட்டாக்கில போறது ஒரு பாுஸன் ஆகிவிட்டுது.. என்ட அவர் ஹாட் அட் டாக்கிலதான் போனவர் என்டு கோயிலில கும்மியடிக்கிறதில பெண்டுகளுக்கு பெரிய சந்தோசம்...
உண்மையச் சொல்லப்போனா அது ஒரு குடுப்பினைதானுங்கோ! அட்டாக்கு வந்தவன் பெரிசா கட்டிலில கிடந்து இழுபடுறதில்ல... அதோட இநேகமா நித்திரையிலயே போயிடுவாங்கள்... இப்ப நாங்கள் கொஞ்சம் அந்த அட்டாக்க பற்றி ஆராய்வமா?
எப்பிடி வாரார் மைனர்?
நம்ம இதயம் முக்கிற முக்கு இந்த உலகத்தில எந்த பயில்வானாலயும் முடியாது...
டியுட்டி டைம் எண்டு அவர் பாக்கிறது கிடையாது... ராப்பகலா அவர் கஸ்டப்பட்டு வேலைசெய்ய நீங்க அவருக்கு செய்யுற கைமாறுதான் விலங்கத்துக்கு காரணம்...
என்னதான் கடுமையான ஒரு வேலைக்காரனாயிருந்தாலும் அவனுக்கு நேரத்துக்கு கஞ்சித்தண்ணிய க் காட்டாட்டி ஜேவிபி தலைமையில ஒரு ஸ்ட்ரைக்க பண்ணத்தான் யோசிப்பான் இல்லலையா? அதமாதிரித்தான் நம்ம ஹார்ட்ஜியும் ! அவர் நாள் கணக்கில உண்ணாவிரதம் இருக்க என்ன கருணாநிதியா , சொல்லுங்க? ஆகவே தனக்கு தரவேண்டிய நியாயமான உணவு தரப்பட மறுக்கும் போது அவர் ஸ்ரைக் பண்ணினால் நீங்க ஏன் நெஞ்ச பிடிச்சுக் கோண்டு தாம் தூமெண்டு குதிக்கிறீங்க?
அது சரி யார் நிறுத்தினாங்க பூட் சப்ளய?
நான் நிறுத்தலயே , யாரோ உள்ள இருந்து ரோ வேல பாத்திட்டாங்க போல கிடக்கு களவாணிப்பசங்க எண்டு அறிக்க விட்டியளோ அலகைப் பொத்தி நாலு அறை விழும் சொல்லிக்கிடக்கு... நீங்க கவிதை எழுதி சமாளிக்கிறதுக்கு இதயமென்ன ஈனத் தமிழனா?
சரி விடுங்க பாலிடிக்ஜ் வாணாம்... ;)
அப்ப என்னதான் நடக்குது?
சரி கொஞ்சம் சயன்டிபிக்கா பாப்பம்...
உங்கட உடம்பில கல்சியம் , கொழுப்பு போன்றவை கூடினால் இரத்த குழாயளின்ட சுவர்களிற்குள்ள அவை படியும்... அதால சுவர்கள் வீங்கும்... பிறகு அது வெடிச்சு உள்ள இருக்கிற துணிக்கயைள் வெளில வந்து குருதி பாதைய அடைக்கிறதால உடலுறுப்புகளுக்கு பூட் மற்றும் காத்து சப்ளை நிண்டுரும்... இதால உறுப்புகள் செயலிழக்கும்... இதுவே இதயத்திண்ட தேவைக்கான சப்ளையில வழிமறிப்பு தாக்குதல் நிகழ்ந்தால் அரோகரா..
அடுத்த நாள் மகிந்த மலர்ச்சாரையில ஓடிப்போய் இடத்த ரிசேவ் பண்ண வேண்டியதுதான்...
எப்பிடி நடக்குெதெண்டத இந்த வீடியோவில தெளிவா விளக்கிறாங்கள்...
பொம்பிளயள் இதை கவனமா பாத்து எப்பிடி புருசனுக்கு அட்டாக் வராம மடுக்கலாம் எண்டு தெரிஞ்சு கொள்ளலாம்... அதாவது ஹை பிரசர் வருவதுதான் ரத்த குழாய்கள் பிய்வதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது... உங்கட தொணதொணப்பில பக்கத்தில இருக்கிற தண்ணிக்குழாயெல்லாம் ப பிஞ்சு பற்ககுது... கேவலம் ரத்தக்குழதயெல்லாம் எந்த மூலைக்கு... ஹிஹி...! உங்கட புண்ணியத்தில அவர் சந்தொசமா போட்டாரெண்டால் பிறகு பக்கத்து வீட்டுக்க்காரனையும் பம்பலபிட்டி ஐயரையுமல்லோ வதைக்கவேணும்.. யோசிங்க...
நான் சாக விரும்புவது ஹாட் அட்டாக் மூலமாத்தான்... அது ஏனெண்டால் இலங்கைத்தமிழன் அப்பிடிச்சாக குடுத்து வைச்சிருக்கோணும்... :)
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
சிதறிய சிரிப்புக்கள்
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
15 Responses
என்ட அவர் ஹாட் அட் டாக்கிலதான் போனவர் என்டு கோயிலில கும்மியடிக்கிறதில பெண்டுகளுக்கு பெரிய சந்தோசம்...//
நீங்க ஏன் மாஸ்டர் அவங்களுக்குப் பக்கத்துல போய் நிக்கிறீங்க???
:-)
இப்ப நாங்கள் கொஞ்சம் அந்த அட்டாக்க பற்றி ஆராய்வமா?//
ஓகே
ரெடி
ஸ்டார்ட் மியுசிக்...
என்னதான் கடுமையான ஒரு வேலைக்காரனாயிருந்தாலும் அவனுக்கு நேரத்துக்கு கஞ்சித்தண்ணிய க் காட்டாட்டி ஜேவிபி தலைமையில ஒரு ஸ்ட்ரைக்க பண்ணத்தான் யோசிப்பான் இல்லலையா?//
ஆமா ஆமா..
இல்லையா பின்ன??
:-)
(பிறநாட்டு வாசகர்களுக்கு : ஜேவிபி என்பது இலங்கையில இருக்கிற பிரச்சினைக் கும்பல்... (ஒரு அரசியல் கட்சி..)
சரி விடுங்க பாலிடிக்ஜ் வாணாம்... ;)
//
அதூஊஊஊஊஉ...
(ச்சும்மா அஜீத் ஸ்டைல்ல சொல்லிப் பாத்தேன்..)
இதுவே இதயத்திண்ட தேவைக்கான சப்ளையில வழிமறிப்பு தாக்குதல் நிகழ்ந்தால் அரோகரா..
அடுத்த நாள் மகிந்த மலர்ச்சாரையில ஓடிப்போய் இடத்த ரிசேவ் பண்ண வேண்டியதுதான்...//
உம்மோட படு பேஜாராப் போச்சு...
இதுலயும் ‘மகிந்த’வை விடுற மாதிரித் தெரியேல்ல..
:-)
நான் சாக விரும்புவது ஹாட் அட்டாக் மூலமாத்தான்... அது ஏனெண்டால் இலங்கைத்தமிழன் அப்பிடிச்சாக குடுத்து வைச்சிருக்கோணும்... :)//
தி கிரேட் புல்லட் தான் நீங்க..
பன்ச் சூப்பர்மா...
:-)
///நான் சாக விரும்புவது ஹாட் அட்டாக் மூலமாத்தான்... அது ஏனெண்டால் இலங்கைத்தமிழன் அப்பிடிச்சாக குடுத்து வைச்சிருக்கோணும்... :)
///
உங்களின் வலிகளை உணர முடிகிறது..
///பொம்பிளயள் இதை கவனமா பாத்து எப்பிடி புருசனுக்கு அட்டாக் வராம மடுக்கலாம் எண்டு தெரிஞ்சு கொள்ளலாம்... ////
நல்லா கிளப்புறாங்கபா ............
என்ன தான் இருந்தாலும் நல்ல பதிவு தோழரே
எந்த விஷயம் எண்டாலும் நீர் நல்ல அழகாக தருகிறீர் ...
உமது வசன நடைக்கு ஒரு ஓஓஓஓஓஓஒ போடணும்
இப்ப ”நடக்குற அட்டகாசங்களை பார்த்தாலே” ஹார்டு அட்டாக்கு வந்து விடுகின்றது....
:(((((
பின்னூட்டிய ஓட்டிட்ட அனைவருக்கும் நன்றிகள்..
எல்லாத்துக்கும் புத்தி சாலித்தனமாக பதில் சொல்லுறீங்க.. ஏலும் எண்ட எண்ட சந்தேகங்களையும் கொஞ்சம் தீர்த்து வையுங்களன்..
http://siruvan2.blogspot.com/2009/05/blog-post_29.html
தமிழை பற்றி கொஞ்சம் கூடுதலாக கதைக்குறீங்க,,, நாங்க அன்றாடம் பயன்படுத்துற சில ஆங்கில சொற்களிக்கு சிலர் தமிழே தெரியாமல் இருப்பினம்.. அப்புடி ஏதாவது சொல்ல ஏலுமா?
புல்லட் உங்களைப்போன்றவர்கள், தமிழினம் மீண்டெழ நிறைய செய்யவேண்டியுள்ளது. கட்டுரை நன்றாக உள்ளது, இதய சுத்தியோடு நீங்கள் ஆற்ற வேண்டிய சமூக சேவை நிறைய இருக்கிறது..நம்பிக்கையோடு இருங்கள்
தல.. இந்த நடை தங்களுக்குக் கைவந்த கலை. மாரடைப்புக்கு பரம்பரையும் கொஞ்சமா தாக்கம் செலுத்துது. வாழ்க்கை முறை அதிகமா. வவுனியாவில ஒராள் வீதியோர தொலைபேசியில கதைத்துக்கொண்டிருக்க அங்கால ஒரு விபத்து நடந்து ஒரு சின்னப்பிள்ளை தூக்கி எறிபட்டு அவருக்கு முன்னால விழ பாத்து அந்தாள் செத்துப்போட்டுது. பிள்ளை பலத்த காயங்களோட தப்பீட்டுது. :|
புல்லட் பாண்டி பகிடியோட பகிடியா விஷயத்தைச் சொல்லி மர மண்டையளுக்க புகுத்துறதுக்கு சரியான ஆள் நீங்கதான்.தெரிஞ்சுகொள்ள வேண்டிய விஷயம்.அருமை.
Post a Comment