புல்லட்டிற்கு பூமாலை...


    சண்டையெல்லாம் முடிந்து ஏ9 உம் திறந்தாச்சு... அந்த களிப்பிலோ என்னவோ புல்லட்டிற்கு பூமாாலை சூட்டி அழகு பார்த்ள்ளார்கள் பிரபல மற்றும் புஜபல பதிவாளர்கள் லோசன் கமா கடலேறி . நன்றிகள் நன்றிகள்...

    அதற்கு முதல் நடந்த காமெடியை கூறவேண்டும் . எனக்கு விருது தந்த லோசன் அண்ணாவின் பதிவு நானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை . இப்போது பதிவுலகில் செலவிட நேரம் இன்மையால் (சும்மா பொய்தான் இருந்தாலும் தலைய ஆட்டுங்கோ ..) மளமளவென்று என் வலைப்பதிவுின் கரையில் இருக்கும் பதிவர்களின் பதிவுகளை மேலோட்டமாக வாசித்து விட்டு என்வேலையை பார்க்கப்போய் விடுவதுண்டு... அப்படித்தான் இவரது தலைப்பையும் பார்த்தேன்... ம்ம்.. ” நானும் அறுவாரும் ஒரு சுவாரசிய கதை...”
    அட ஆரையடா இவர் இப்படித்திட்டுறாரெண்டு ஒரே குழப்பம்... சிங்கப்பூரில போன இடத்தில நம்ம டொன்லியத்தான் திட்டுறாரோ எண்டு குதூகலிப்போட (மற்றவனுக்கு பூஜை நடந்தால் நமக்கு பொங்கல் கிடைத்த மாதிரிதானே? ;) ) கதிரைய இழுத்துப்போட்டுட்டு வாசிக்க உக்கார்ந்தா அதுக்க என்ட பெயர்... பக்கெண்டு முகமெல்லாம் வேர்த்து கண்ணெல்லாம் சிவந்து போய் என்ன கோதாரியடா இது எண்டு குழம்பி , முழுக்க வாசிச் பிறகுதான் தலைப்ப திருப்ப வாசித்தேன்... ” நானும் அறுவரும் ஒரு சுவாரஸ்ய கதை... ”

    நல்ல காலம் முழுக்க வாசிச்சது , இல்லாட்டா நாறிப்போயிருக்கும் நம்ம கதை.. அங்கால ஒரு கரையா ”ட்ரையம்பு ” ஏதோ கந்த புராணத்துக்கு பொழிப்புரை குடுக்கிறமாதிரி என்ட பதிவுகளில ஒவ்வொரு வசனத்தை எடுத்து அதுக்கு விளக்கம் குடுத்து கிழி கிழி எண்டு கிழிக்குது.. இதுக்குள்ள இவரும் அறுவான் ஆக்கினைப்படுவான் எண்டு பதிவைப்போட்டா எவன் தாங்குவான் எண்டுட்டு எங்கயாவது IDP காம்புக்குள்ள சீட்டைப் பிடிப்பம் எண்டு யோசிச்சன்... நல்லகாலம்...

    அத்தோடு என்னை பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்திய சீரியஸ் பதிவர் கடலேறியும் எனக்கு இவ்விருதை தந்தமை எனக்கு பெருமிதமளிக்கிறது.. இவர் எப்படி தன் பதிவுகளை தொகுக்கிறார் என்று ஆச்சரியப்பட்டதுண்டு.. மறுபடியும் நன்றிகள்...

    வந்தோம் சிரித்தோம் ததிங்கிணத்தோம் என்று போகாமல் வந்த விருதுகளை என்னுடனும் பகிர்ந்த அன்பு நெஞ்சங்களை வாழத்தியவாறு அவர்களுக்காகவேனும் மிகமிக விரைவில் எழுத்துப்பிழைகளற்ற (இந்த சொல்லையே ரெண்டுதரம் திருத்த வேண்டியிருந்தது) நல்ல பதிவுகளிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்..

    ஏ9 ஆப்பன்.

    திறந்துட்டாங்க ... யாழ்ப்பாணம் போக 325 ரூபாயாம்... தவித்த முயலடிச்சவன் , எரியுற வீட்டில பிடுங்கினவன் ( எடுபட்ட எக்போ எயார்காரனத்தாங்க சொல்றேன்.. ஆனா அவனட்ட புடுங்கினவன சொன்னா என்ட தலைய புடுங்கிடுவாங்க.. அதால கப்சிப் ) எல்லாம் இனி வாந்தி பேதில போக.. பண்டிக்காய்ச்சலில போக... புதுசா ஏதாச்சும் வந்து அதில போக... நாசமாப்போவான் , உழைச்ச சாரி உறுஞ்சின காசில போயிங் வாங்கிற ஐடியாவில இருக்கானாம்...


    பாலிடிக்ஸ்

    இப்போதைக்கு எதுவும் வேணாம் ... நல்ல நிலைமைக்கு வருவம் முதல்ல.. பல்கலைக்கழக மாணவர்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வன்னி மாணவர்களுக்கு உதவி செய்யுறது நல்ல நம்பிக்கையளிக்குது ... நாடு கடக்கிறது வீடு கடக்கிறது எல்லாம் இலங்கை வாசிகளுக்கு இப்போதைக்கு வேணாம்... இது என்னோட கருத்து...

    அறிவியல்

    நானும் என்னுடைய பதிவுகள் மூலமா எதையாவது தமிழில செய்து அறிவியல் பதிவர்கள்களை ஊக்குவிக்கோணுமெண்டு பார்த்தால் யாரும் அசையுறதா காணேல்ல.. இனி அறிவியல்தான் எங்கட பாதையா இருக்கோணும் ... மற்ற நாடுகளிலயிருந்து பலபடி பின்னால இருக்கிறம்.. பேஸ்புக் CEO என்ட வயசு... ஆனா அவன் அப்பிடி இருக்கான் ஆனா நான் பேஜ்புக்கில கமண்ட் அடிக்கிறன்.. காரணம் அவன் முதலாவது புரோகிறாம் எழுதின அவன்ட 12வது வயசில நான் கொம்ப்யூட்டர கண்டது என்ட 19வது வயசில.. இதை மாத்துவம் முதல்ல.. இலங்கையில அடுத்த தமிழ் தலைமுறை தன்ட 3வது வயதில தன்ட முதல் புறோகிராம எழுத வைக்கோணும்.. அதுதான் இப்போதைக்கு நம்மட குறிக்கோளாயி ருக்கவேணும்.. புலம்பெயர் நாடுகளில தமிழர்கள் அப்பிடி வந்திட்டாங்க.. ஆனா இங்க இன்னும் அப்பிடியில்லை... ஆகவே தற்போது எது அவசியமெண்டு எல்லாருக்கும் புரியவேணும் ... இருக்கும் போது பிரயோசனமா ஏதாவது செய்யொணும் பாஸ்... :-)

    சரி மறுபடியும் உலக உருவாக்கம் தொடர்பான படபதிவோட சந்திக்கும் வரை விடை பெறுவது
    உங்கள்

    புல்லட் ...




    10 Responses

    1. வந்துட்டீங்களா?

      தொடர்ந்து வாங்க.. வாருங்க..

      அந்த தவிச்ச் முயல் கதை அருமை.. இன்று காலை செய்திகளிலும் சொன்னோம்.. திங்கள் முதல் மீண்டும் பறப்பாம்..
      எங்கள்சனமும் ஆசைப்பட்டு காசைக் கொட்டி கண்டவனை எல்லாம் மறுபடி காசுக்கரன் ஆக்கப் போகுது..

      //பேஸ்புக் CEO என்ட வயசு... ஆனா அவன் அப்பிடி இருக்கான் ஆனா நான் பேஜ்புக்கில கமண்ட் அடிக்கிறன்.. காரணம் அவன் முதலாவது புரோகிறாம் எழுதின அவன்ட 12வது வயசில நான் கொம்ப்யூட்டர கண்டது என்ட 19வது வயசில.. இதை மாத்துவம் முதல்ல..//

      கிளம்பீட்டாரைய்யா நம்ம புல்லட்..
      முதல்ல ஒழுங்கா பள்ளிக்கொடம் அனுப்புற வழியப் பார்ப்பம்..எத்தனை குழந்தைகள் எங்கள் ஊரில் பாடப் புத்தகம் பார்க்க முடியாமல் இருக்குது.. பிறகு கம்பியூட்டர், முகப்புத்தகம் பார்ப்பம்

    2. U supposed to give it to other 6 ppls dum dum.... btw, I used ur words as some views and no personal attacks ne.... i removed ur name at places even.... be happy!!!!!!!

    3. :-)..கனநாளைக்கு பிறகு..

    4. புல்லட் ஏ9 திறந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்காம். ஈரோஸில் இந்திரவிழா பார்த்தீர்கள் என நினைக்கின்றேன்.

    5. This comment has been removed by the author.
    6. நன்றி லோசன் அண்ணா.. திருப்பி அழைத்து வந்ததற்கு..உங்களுடைய கருத்துக்கள் உண்மைதான்.. இலங்கையில் மலையகத்தில் மட்டுமல்ல எல்லாப்பிரதேசங்களிலும் அட்டைகள் மலிந்திருக்கிறன ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு... உங்களுடைய கெலாங் பணயக்கட்டுரை அருமை.. அண்ணி என்னவாம்?

      ட்ரையம்ப்.. தயவு செய்து என்னை போட்டு உழக்குவதை நிறுத்தி விடுங்கள்.. நான் போாராட்டம் தொடர்பாக கூறிய கருத்துக்களை எதிர்த்தீர்கள்... வேறு லூசுகளுடன் சேர்ந்து துரோகி என்றீர்கள்.. என்னவாயிற்று? இப்பொ நாங்கள்தான் மாசாமாசம் வன்னிியில் ஏல் எடுக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்பிக்கொண்டிருக்கிுறோம்..யதார்த்தங்களை புரிந்து கொள்வதற்கு பெரும்கல்வி அவசியமல்ல.. அதே போலத்தான் பெண்ணிய வாதம் தொடர்பான முரட்டு முற்போக்கு சிந்தனைகளும்.. இது தொடர்பாக நான் யாருடனும் வாதிட தயாரில்லை.. ஒருநாள் புரியும்..

      கார்த்திகை .. நன்றி.. வந்திட்டம்.. கலக்குவம்..

      டான்லீ , எல்லாம் ஏதோ வெறுப்பாயிருந்தது. பேசாம நான் உண்டு என் வேலையுண்டு எண்டு இருப்பமொ எண்டு யோசிச்சன்.. ஆனா மறுபடியும் வந்திட்டன்.. இன்னும் கொஞ்ச பேரை சிந்திக்க வைப்பம்..

      வந்தி... என்ன சிக்கலோ .. ஏதோ கொஞ்சம் கொஞ்சமா சரி வரும்.. அப்பிடி நம்புவம்...இந்திரவிாழா பார்க்கவில்லை.. முத்திரை வாமனன் திருட்டு விசிடியில் (அதுவும் ஓசியில) ஓட விட்டு பார்த்தேன்.. சும்மா பரவாயில்லை..ஏன் நீங்க போனீங்களா? படம் எப்பிடி? நமீதா அரைகுறையா அந்த சைசில பாக்கிற மனத்தைரியம் எனக்கில்லை..

    7. விருதுக்கு வாழ்த்துக்கள் புல்லட்!!!!

    8. This comment has been removed by the author.
    9. This comment has been removed by the author.