கடந்த பதிவில் தாவரங்களின் உருவாக்கம் பற்றிப் பார்த்தோம். அவை காபனீரொட்சைட்டை பயன்படுத்தி உணவு சமைத்தமை பற்றி அறிந்தோம். இன்று அதன் தொடர்ச்சியாய் சில விளைவுகளை ஆய்வோம்... சரிதானே? மேட்டருக்கு வருவோம்..
அந்த தாவரங்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஏதோ ஒரு வாயுவை வெளியிட்டன...அந்த வாயு சூழலில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது.. (அய்யோ அவைக்கு காஸ் ட்ரபில் கிடையாதுங்க.. நீங்க வேற)
அந்த வாயு காரணமாக அமோனியா மெதேன் போன்ற அடிப்படை மூலக்கூறுகள் காபனீரொட்சைடாகின. உலோகங்கள் துருப்பிடித்து அழிந்தனஅத்தோடு வானில் ஏதோ ஒரு படையை உருவாக்கி குறிப்பிட்ட சில கதிர்கள் பூமியை வந்தடைவதை நிறுத்தின. அந்த பலான வாயு வேறு யாருமில்லை நம்ம ஓட்சிசன்தான்... வானத்தில் உருவாகிய படைக்கு நம்ம விஞ்ஞானிங்க இட்ட பேர் ஓசோன்...
சூழலில் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுததியற்கு தாவரங்கள் ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.. குறிப்பிட்ட சில் விண்கதிர்கள் பூமியை வந்தடைவது ஓசோன் லேயரால் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் மேலும் ஒட்சிசனின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.. இந்த சுற்றாடல் புதியதொரு வகைக்கலம் உருவாகுவதற்கு வழி சமைத்தது.. அந்த புதிய கலங்களோ ஒட்சிசனை சுவாசித்து தாவரங்களை உண்டுதள்ளின. அவைதான் உலகின் முதலாவது விலங்குகள்..

ஒரு சிறிய கார்ட்டூன் எடிற்றி இணைத்துள்ளேன்.. ஏனோ தெரியவில்லை துரதிஷ்ட வசமாக பெரிதாக்க முடியவில்லை சே!..
இந்த இழவெல்லாம் தொடங்கிய பின்னர்தான் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது.. தம்முடைய பாதுகாப்பு கருதி சில தாவரக்கலங்களும்

விலங்குக்கலங்களும் ஒன்றாக இணைந்து ஒட்டுப்பட்டு கொலனிகளாக வாழத்தொடங்கின. அப்படியே படிப்படியாக கொலனியிலிருந்த கலங்கள் தமக்கிடையே வேலையை பிரித்து ஒரு குறித்த வேலையில் சிறப்புத்தேர்ச்சியடைய ஆரம்பித்தன. சில கலங்கள் உணவை சேகரிக்கவும் , சில பிடித்த உணவை செரிக்கச் செய்யவும் அதை பகிர்ந்து எல்லா கலங்களுக்கு வழங்கவும் , மேலும் சில சூழலை அவதானிக்கவும் , இன்னும் சில புதிய கொலனிகளை உருவாக்குது தொடர்பாகவும் , முக்கியமாக கலங்களுக்கிடையான கோடினேசன் தொடர்பாக சிலவும் சிறப்பு தேர்ச்சியடைந்தன...
காலப்போக்கில் அந்தக்காலனி மேலும் விருத்தியடைந்தபோது புழு என அழைக்கப்பட்டது. கோடினேற் செய்வதில் சிறப்பு மிகுந்த கலக்கூட்டம் மூளை எனவும் சூழல் அவதானிப்பில் பெயர்பெற்ற கலங்கள் கண் எனவும் பின்னாளில் மனிதர்களால் அந்தக்காலனி பகுத்தறியப்பட்டது.

இப்போது நாம் எப்படி உருவானோம் என்று உங்களுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்... எங்கள் கண்கள் மூக்கு அது இதெல்லாம் எப்படி வந்தது என்றால் அந்த காலத்தில் பல வகைப்பட்ட கலங்கள் ஒன்று பட்டு அதிகாரப்பரவலாக்கம் செய்து தத்தமது வேலையை செவ்வனே செய்த படியா இப்படி இருக்கிறம்... பார்க்கிற கலங்கள் கொஞ்சம் பஞ்சிப்பட்டிருந்தா இப்போ நாமெல்லாம் டிம்முதானுங்ணோவ்...
புரிஞ்சு ஒற்றுமையா நம்ம பணியை செவ்வனே செஞ்சு கொண்டு வாழ்வோம்.. எல்லாம் நல்ல படியா நடக்கும்..
அடுத்த பதிவில் செக்ஸ் எப்படி உருவானது என்று பார்க்கலாம்.. அதுபற்றி நானும் கொஞ்சம் வாசிக்கவேண்டியிருக்கிறது.. எங்கயாவது ஈ புக் கிடைக்காமலா போயிரும்? ஹிஹி!
1 Response
அநியாய சீரியஸா பதிவு போடா ஆரம்பிச்சுட்டீங்களே நண்பா..
Post a Comment