இலங்கை பதிவர் சந்திப்பு 2009


    சவுதி அரேபியாவில கூட குசும்பன் பதிவுலக மீட்டிங்க் நடத்திவிட்டிருந்தார்.. ஆனால் பிரபல பதிவாளர்கள் செறிந்த இலங்கையில் ஒருவரை ஒருவர் தற்செயலாக சந்தித்தால் கூட ஒருவரும் போமாலிட்டிக்கு ஒரு ஹலோ சொல்வதில்லை;.. இதை மாற்றுவம் என்று நினைத்து பதிவர் கடலேறியுடன் இரவு ஒரு கோலைப் போட்டு 4 மணித்தியாலங்கள் இது தொடர்பாக கதைத்து விட்டு பெரீய்ய கொட்டாவியுடன் படுக்கைக்கு சென்றார் புல்லட்…


    ஒருவாறாக திங்கட் கிழமை தமிழ்ச்சங்கத்தில் முதலாவது பதிவர் சந்திப்பு நடத்த ஏற்பாடாயிற்று… இலங்கைத்தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு ரகசியமாக அனுப்பியாயிற்று.. ஊடக அனுசரணை வெற்றி எப் எம். ( அதையும் ரகசிமாக அனுசரணை செய்த படியால் யாருக்கும் அட்வடீஸ்மன்ட் கேட்கவில்லை … லோசன் அண்ணா ம்யூட் பண்ணி விட்டிருந்தார்… புத்திசாலி )…


    காலையே கடலேறி காரியங்களை கவனிக்க தமிழ்ச்சங்கத்துக்கு சென்றுவிட புல்லட் வெகு ஆறதலாக பின்னேரம் 5 மணிக்கு தமிழ்ச்சங்க வாயிலைச் சென்றடைந்தார்… ஏரியாவில் ஒரு காக்கா குருவி கூட இல்லை.. அங்கே வாயிலில் ஒரு குண்டா நிறைய சன்குவிக்கை கரைத்து வைத்து விட்டு வாயெல்லாம் பல்லாக கையிலிருந்த குவளையை நீட்டினார் பதிவர் யாழினி… புல்லட்டும் வழிந்து கொண்டு வாங்கி ஓரு மிடறை உள்ளே விட்டுவிட்டு நிமிர்ந்த போது இரைப்பை கிய்யாமய்யா என்றுகத்தியது… ஆத்தாடி என்று கோப்பையை போட்டுவிட்டு ஓட , ஒரு கரையாக வயிற்றைப்பிடித்த படி கண்ணெல்லாம் சொருகிக்போய் படுத்துக்கிடந்த கடலேறி ஒரு குப்பைத்தொட்டியை காட்டினார்.. அதிலே “சன்குவிக் குடித்தோர் வாந்தியை இங்கே எடுக்கவும் “ என எழுதப்பட்டிருந்தது.


    அதே நேரம் மொறட்டுவை பல்கலை மாணவ பதிவர்கள் பலர் ஒரு பொலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினார்கள்.. முந்தி அடிக்கடி பிடித்துக்கொண்டு போய் வெளுத்த அன்பில இப்ப லிப்ட் தாறளவுக்கு நாம சினேகிதமாகிட்டோம் என்று புழுகியபடி வழிந்த பதிவர் கார்த்தி யாழினி கொடுத்த சன்குவிக்கை குடுத்துவிட்டு "ஆஹா சூப்பர் " என்று சொல்லியவாறு கடலேறி கைகாட்டிய பக்கமாக ஓடினார்…

    இப்படியே சுபாங்கன் ,சுபானு ,நிமல் , கௌபாய்மது போன்றோரும் வந்து சேர்ந்த பின்பு சங்கம் களைகட்ட ஆரம்பித்தது.. அனைவரும் உள்ளே சென்று மங்கள விளக்கை கண்டு அதை ஏற்ற முயற்பட்ட வேளை வாயிலில் ஒரு சத்தம் கேட்டது.. எட்டிப்பார்த்தால் நம்ம லோசன் அண்ணா… அவர் யாழினியிடம் சன்குவிக் வாங்கிக்குடிக்க முற்பட்ட வேகத்தை கண்ட அண்ணி தலைவரை குப்புறப்போட்டு கும்மிக்கொண்டிருந்தார்.. ஒருவழியாக அவரை மீட்டு உள்ளே கொண்டு வருவது பெரும்பாடாயிற்று…


    அதற்கிடையில் மேலும் பல புதிய பதிவர்களும் வாசகர்களும் சங்கத்தில் குழுமி விட்டிருந்தனர்… மூத்த பதிவர்கள் எல்லாரும் மங்கள விளக்கை தானும் கொளுத்துவேன் என அடம் பிடித்ததில் பக்கத்தில் நின்ற ஒரு கிழவனின் (அவர் தமிழ்சங்கத்தில் என்னடா வாலிபர் கூட்டம் என்று பராக்கு பார்க்க வந்தவராம்) வேட்டியைப்பிடுங்கி விளக்கில் ஆங்காங்கே கட்டி சொக்கப்பனை போல கொழுத்தி மகிழ்ந்தனர்…


    பிறகு யாரை அறிவிப்பாளராக போடலாம் என்று எல்லாரும் குழுமி நின்று லோசிக்க லோசன் அண்ணா கடுப்பாகிவிட்டார்… இரண்டுமுறை நடுவில் வந்து நின்று செருமியும் யாரும் கவனிக்காமல் " புல்லட்டை போடுவோம் யாழினியைப்போடுவோம் " என்று குசுகுசுக்க , தான் வெளிநடப்பு செய்வதாக கூறி யாழினியிடம் ஒரு சன்குவிக் பாசல் செய்யச்சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரையலானார்.. அதிர்ச்சியடைந்த கடலேறி ஓடிச்சென்று இழுத்து வந்து மைக்கை அவர் கையில் கொடுத்து அறிவிப்பு செய்யச்சொன்னார்…


    லோசன் அண்ணா மேடையில் ஏறியதும் மயான அமைதி… எல்லாரும் ஆர்வத்துடன் அவரது வாயையே பார்தத வண்ணம் இருந்தனர்… அதே நேரம் வாயிலில் யாழினி எஞ்சிய சன்குவிக்கை றோட்டில் வருவோர் போவோருக்கு எல்லாம் அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார்.. வெள்ளவத்தையில் அம்புலன்ஸகள் ஆரவாரமாக ஓடித்திரிந்தன…


    உள்ளே மைக்கை டெஸ்ட் பண்ணிய லோசன் அண்ணா “என்னை அறிவிப்பாளராக போட்ட உங்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு.. வர தாமதிததமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்… வழியில் இளம் பெண்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள்… பின்னர் இளம்பெண்களை விலக்கி இளம்பெண்களுடாக இங்கே வருவது பெரும்பாடாகி விட்டது… பின்னர் செக் பொயிண்டில் ஒரு இராணுவ இளம் பெண்ணொருவர் வாயில் புன்னகையுடன் என்னை நோக்கி வந்தார்… அவரை சமாளித்து வந்தால் இங்கே வாயிலில் ஒரு இளம் பெண் எனக்கு சன்குவிக்… ”
    “யோவ் இறங்கைய்யா கீழ.. உன்ன இளம் பெண் சூழுறது எங்களுக்கு பெரிய ரோதனையாப்போச்சு” என்று யாரோ பெரிசு வயித்தெரிச்சலில் கத்த அதிர்ச்சியடைந்த லோசன் அண்ணா சமாளித்துக்கொண்டு ,” என்னுடைய சீடன் கடலேறியை மேடையில் பேச வருமாறு அழைக்கிறேன்” என்றபடி கீழிறங்கினார்…


    பெருமையாக மேலேறிய கடலேறி தான் ஒரு சீரியஸ் பதிவர் எனவும் தன்னுடைய காதல் கதைகள் தன்னுடைய அனுபவங்கள் இல்லையெனவும் , சிலர் திட்டமிட்டு வதந்தி கிசுகிசுக்களை பரப்புவதாகவும் கூறினார்.. தான் எழுதிய மண்டேலாவின் ஆக்கத்தை வாசிப்பதற்காக மண்டேலா தமிழ் கற்பதாகவும் கூறிக்கொண்டார் ...

    மேலும் “மேலாண்மை உடைந்து சிதறி இறைஞ்சல் இழையோடியது , சிறையில் வாடிய போதும், கொண்ட கொள்கை தவறாது தான் நேசித்த மக்களின் சுதந்திர வாழ்வே பெரிதென ” போன்ற சிக்கலான அழகிய பதங்களை தம்மால் மாத்திரமே பயன்படுத்த முடியும் என கூவினார்… சபையில் பலத்த கரகோசம் எழும்பி
    அடங்கியபோது பலமாக கைதட்டிய ஒருவர் எழும்பி “அது என்ன லாங்குவேஜ் தம்பி? ஹிட்லர் மீடடிங்கில கதைச்சமாதிரிக்கிடக்கு? “
    என்றார்… சபையும் ஆர்வத்துடன் விடையை எதிர்பார்ப்பதை கண்ட கடலறி சட்டென்று டொப்பிக்கை மாற்றி பல அடுக்கு மொழிகளுடன் நன்றி சொல்லிவிட்டு இறங்கினார்....

    சட்டென்று யாரும் எதிர்பார்க்காத வேளை தமிழ்ச்சங்கத்தில் குப்பை கூட்டுபவன் மேடையில் விறுவிறுவென்று ஏறி நாடுகடந்த தமிழீழத்தலைவர் கேபி ஒரு பதிவெழுத ஆரம்பித்திருப்பதாக கூறியதும் ( http://l... அட்ரஸ் தணிக்கைக்கு உட்படுத்தபட்டது ) பின்னால் ஒரு சலசலப்பு கிளம்பியது… எட்டிப்பார்த்தால் நம்ம புல்லட்டைப்போட்டு சிலர் கும்மிக்கொண்டிருந்தார்கள்.. என்ன விசயம் என்று கேட்டால் “ தனக்கு கிடைச்ச சுவாரசிய பதிவர் விருதையும் கரப்பான் பூச்சி விருதையும் அவருக்கு குடுக்கப்பபோறானாம் எண்டு முன் கொமினிகேசனுக்கு ஓடுறான்… பரதேசி ” என்று பதில் வந்தது ….. கண்ணெல்லாம் வீங்கி பரிதாபமாக விழுந்து கிடந்தது புல்லட்…

    அடுத்ததாக மேடையேறிய கார்த்தி தான் ஒரு சிறந்த அனுவப்பதிவரெனவும் தான் ஆமிக்காரனிடம் அடிவாங்கிய கதையெல்லாம் அதிக ஹிட் பெற்றுள்ளதாயும் பெருமை பட்டுக்கொண்டார்… அப்படியே தனது அனுபவப்பதிவுகளின் பெருமையை பற்றி வளவளத்துக்கொண்டிரந்தவர் சட்டென்று கடுப்பாகி லோசன் அண்ணாவைப்பார்த்து காச்சு மூச்சென்று கத்த ஆரம்பித்தார்… லோசன் அண்ணா எழுதும் "சிக்கிய சிங்கம்" எனும் தலைப்பு தான் சின்ன வயதில் ஜிப்பு போடும் போது ஏற்பட்ட பிரச்சனையை மையமாக கொண்டு அனுபவப்பதிவு எழுதுவதற்காக பதிவாளர் சங்கத்தில பதிந்து வைத்திருந்தேன் என்று கூறி கத்தினார்… பின்னர் ஒருவாறு சமரசம் காணப்பட்டதும்.. புல்லட் நொண்டி நொண்டி மேடையேறினார்…


    பின்னாலிருந்து புல்லட் ஒழிக என்று கோசம் எழும்பியது … பார்த்தால் மலேசிய மாதர்சங்கம் , க்ளப்பில் மப்படிக்கும் மாதர் சங்கம் , பிஞ்ச ஜீன்ஸ் போடும் பிகர்கள் சங்கம் , பிகினியுடன் கோயில் போகும் பக்தைகள் சங்கம் என்று இப்படி ஏராளமான பெண்கள் சங்கம் சார்பில் யாரோ ஒரு பெண் தனிய நின்று கத்திக் கொண்டிருந்தார் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை )… அதை சட்டைசெய்யாமல் புல்லட் விஞ்ஞானம் தொழினுட்பம் ட்ரான்சிஸ்டர் டையோட் என்று ஏதோ பெரிய விஞ்ஞானி கணக்குக்கு கத்த , அவனை அழுகிய முட்டைகளாலும் தக்காளிகளாலும் வாசகப்பெருமக்கள் எறிந்து துரத்தினர்…



    தொடர்ந்து சுபானு அவர்கள் வந்து ஈழத்தின் இனிய எதிர்காலம் நான் … என்னுடைய வெப்சைட்டில் பதிந்து உங்கள் வரன்களை தேடிக்கொள்ளுங்கள் என்றார்.. ஏற்கனவே காயப்பட்டு கடுப்பாகி ப்போய் இருந்த புல்லட் கெட்ட வார்த்தைகளால் வைது “நான் ஒருவருசத்துக்கு முதல் பதிஞ்சு இன்னும் ஒரு கிழவி கூட எட்டிப்பாக்கேல்ல… உண்மையச்சொல்லு நானும் நீயும் மட்டும்தானே அதில மெம்பர்ஸ்” என்று உறும எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சுபானு நின்ற வேளை ; ஒரு கிழவி எழும்பி "புறோக்கர்த்தம்பி எனக்கு ஒரு மாப்பிள்ளை பாக்க முடியுமோ ? " என கேட்க வெலவெலத்துப் போய் அப்படியே நைசாக நழுவினார் .. கிழவி புல்லட்டைப்பார்த்துக் கண்ணடித்தது…


    இப்படியே பலர் அறிமுகம் செய்து முடிய மீண்டும் லாசன் அண்ணா மேடையில் ஏறினார்.. இம்முறை கவனமாக சபையை கவரும் வண்ணம் கதைக்க நினைத்த அவர் மைக்கை எடுத்து “கிரிக்கட் இஸ் கிரிக்கட் ; கிரிக்கட் அன்ட் கிரிக்கட் ;கிரிக்கட் வோஸ் கிரிக்கட் ” என்று ஏதோ புறுபுறத்தார்… சபை மீண்டும் எரிச்சலைடய ஆரம்பித்தது .. உடனடியாக டொப்பிக்கை மாத்தி ஏதோ “கெலாங் இஸ் கெலாங் ; சிங்கப்பூர் கெலாங்” என்று ஏதோ சொல்லி கத்தி , தான் கஞ்சிபாய் கூட கெலாங்கில் போன ஜோக் ஒன்று சொல்லப்போவதாக சொன்னதும் இருந்த எல்லோரும் எழும்பி ஓடிவிட்டனர்… கடைசியா ஊர்ந்து ஊர்ந்து ஓடிய புல்லட்டை “தம்பி வாரும் நான் ஜோக் சொல்லேல்ல... திரும்பி வாரும் வாரும் “ என்று கூப்பிட எங்கேயோ எலார்ம் அடித்தது…என்னடா பிரச்சனை என்று பதறிப்போய் பார்த்தால் , வாசலில் வெள்ளைவான் நிறகிறதாம் என்று எல்லோரும் புல்லட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள் ... புல்லட்டால் நகர முடியவில்லை.. வெலவெலத்து எழும்பினால் …

    சே எல்லாம் கனவு ....

    பக்கத்தில் றேடியோவில் லோசன் அண்ணா பேப்பர்த்தம்பியை வாரும் வாரும் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்…

    31 Responses

    1. அனைத்தும் காமெடிக்கே! தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்... எல்லாப்பதிவர் மீதும் அளவுகடந்த அன்பும் மரியாதையும் எனக்குண்டு...

    2. //பெருமையாக மேலேறிய கடலேறி தான் ஒரு சீரியஸ் பதிவர் எனவும் தன்னுடைய காதல் கதைகள் தன்னுடைய அனுபவங்கள் இல்லையெனவும் , சிலர் திட்டமிட்டு வதந்தி கிசுகிசுக்களை பரப்புவதாகவும் கூறினார்.. தான் எழுதிய மண்டேலாவின் ஆக்கத்தை வாசிப்பதற்காக மண்டேலா தமிழ் கற்பதாகவும் கூறிக்கொண்டார் ...//

      kalakkal

    3. என்னதான் இருந்தாலும் சண்குவிக்கு கொடுத்த விளம்பரம் ரொம்ப ஓவர். இந்தபதிவுக்கு எவ்வளவு தந்தாங்க?? வியாபாரம் பிச்சுக்கொண்டு போகபோகுது.

      //அழுகிய முட்டைகளாலும் தக்காளிகளாலும் வாசகப்பெருமக்கள் எறிந்து அவனை துரத்தினர்
      அதையும் புல்லட் சுவைத்து நக்கியதையும் மிஞ்சிய முட்டைகளை வீட்டைகொண்டு போய் ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டதையும் சொல்லவே இல்லையே? ஏன்?

    4. புல்லட் பகிடிக்கில்லை விரைவில் நாம் பதிவர் சந்திப்பு நடத்தவேண்டும். இதுபற்றி நாங்கள் 2007ல் பேசினோம்(நான், மாயா, நிர்ஷன்,ஊரோடி பகீ) ஆனால் பின்னர் சில காரணங்களால் தடைப்பட்டுவிட்டது. பின்னர் நாட்டு நிலைமை காரணமாக ஒன்றும் நடக்கவில்லை. தற்போது நிறைய பதிவர்கள் இருக்கின்றார்கள் அதில் பலர் பிரபலபதிவர்கள் ஆகவே சந்திப்பை விரைவுபடுத்துங்கள். உங்கள் தொடர்பு விபரங்களை எனக்கு அனுப்புங்கள் காத்திருக்கின்றேன்.

    5. நல்ல கற்பனை.. கூடிய சீக்கிரம் பதிவர் சந்திப்பில் கலக்க வாழ்த்துகள்

    6. // எல்லாப்பதிவர் மீதும் அளவுகடந்த அன்பும் மரியாதையும் எனக்குண்டு...
      எவ்வளவு தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கிட்டு கதைவேற...

      "ஈழத்தின் இனிய எதிர்காலம்" இதில நானும் பதிஞ்சுரொம்பவே உடைஞ்சு போய் இருக்கேன். எனக்கு வந்த ஒரே ஒரு வரனுக்கு நான் சீதனம் கொடுக்கோணுமாம். என்ன கொடுமை?? யாரிடம் சொல்லி அழ???

    7. நன்றி செந்தில்...:)

      கார்த்தி: சன்குவிக்க வச்சே கம்பசில எத்தனை பங்சன ஓட்டியிருப்பியள்.. அந்த நன்றி மறக்கலாமா? அழுகின முட்டை நல்ல டேஸ்ட்... ஒருக்கா சாப்பிட்டுப்பாருங்க ...உங்கட கம்பசில கன்டீன் சாப்பாடு சாப்பிட்டால் மாட்டுச்சாணி கூட நல்லாத்தான் இருக்கும்...

      //எவ்வளவு தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கிட்டு கதைவேற...//
      அடிக்கிற கைதான் அணைக்கும்... டொய்ங் டொய்ங் டொய்ங (பாக்ரௌண்ட் மூசிக்கு)

      //வரனுக்கு நான் சீதனம் கொடுக்கோணுமாம்.//
      அதுல வடிவாப்பாருங்க மேல் என்டு குடுத்தீங்களா பீமேல் எண்டு குடுத்தீங்களா? எனக்கு கார்த்தி எண்டு ரெண்டு மூண்டு பெட்டைகளை தெரியும்... ஆகையால கவனம்...

      //வந்தியத்தேவன்: சரி வந்தியத்தேவன்.. எனக்கு பின்விளைவுகளை பற்றி அவ்வளவு விளக்கமில்லை... ஏனைய பதிவர்கள் எல்லாருடனும் கதைத்துவிட்டு (நாமெல்லாம் அடிக்கடி றொலக்சிலும் நளபாகத்திலும் சந்தித்துக்கொள்வோம்) உங்களுக்கு சொல்கிறேன்... உங்களை தாக்கவில்லை என்று சந்தோசப்பட வேண்டாம்..ஹிஹஹி!

      கார்த்திகைப் பாண்டியன்: நன்றி கேபி (இது நாடுகடந்த கேபி கிடையாது ... நம்ம Karthigai Paandian )

    8. அடங்கொய்யாலா....
      நானும் ஒரு கனவு கண்டேன்.
      வெறும் 10 லட்சத்துக்கு புல்லட் ஏலம் போக....
      :P

    9. அடப் பாவி என் பெயரைப் போட்டு இப்படி டமேஜ் பண்ணியா?X-( ந‌ற‌ ந‌ற

    10. This comment has been removed by the author.
    11. கற்பனை நல்லாயிருக்கு..

      என்னை டமேஸ் பண்ணினாப் பறுவாயில்லை.. ஆனா.. ஈழத்தின் இனிய எதிர்காலத்தை இப்படிப் பண்ணீட்டீங்களே புல்லட்..

    12. //வரனுக்கு நான் சீதனம் கொடுக்கோணுமாம்.//
      அதுல வடிவாப்பாருங்க மேல் என்டு குடுத்தீங்களா பீமேல் எண்டு குடுத்தீங்களா? எனக்கு கார்த்தி எண்டு ரெண்டு மூண்டு பெட்டைகளை தெரியும்... ஆகையால கவனம்...


      அங்கதான் பிரச்சனையிருக்கு.. சிஸ்டத்தில இல்ல..

      // நான் ஒருவருசத்துக்கு முதல் பதிஞ்சு இன்னும் ஒரு கிழவி கூட எட்டிப்பாக்கேல்ல…
      காலம் கனியும் போது கிடைக்க வேண்டியது நிட்சயமாக் கிடைக்கும். இப்பவே அவசரப்பட்டா??

    13. ஆனால் இது ஒரு நல்ல யோசனை - ஏன் ஒரு சந்திப்பு நடத்தக்கூடாது???

    14. பதிவர் சந்திப்பா ஏற்பாடு பண்ணப்போறீர்? பொறும் உமக்கு சன்குவிக் இல்ல அசிட்(ட) தான் கரைத்து தர ஏற்பாடு பண்ண வேண்டும்.

    15. ஆதிரை: சேசே! கனவிலும் அப்பிடி நினைக்கக் கூடாது கடலேறி! கனவுகள் சாகலாம்.. இலட்சியங்கள் சாகக்கூடாது..மூணு கோடியை மூச்சுள்ளவரை மறத்தலாகாது...


      யாழினி: நீங்கள் எதைக்கரைத்தாலும் குடிக்கிறவனுக்கு கபால மோட்சம்தான்..பிறகென்ன அசிட்டு...
      இப்பத்தைய காலப்பெண்களுக்கு வாய் மட்டும்தான்... உண்டையா உங்களுக்கு ஒரு டீ போடத்தெரியுமா சொல்லுங்க.. நம்ம கம்பசல பிள்ளையள் ஒருக்கா புட்டு ஹொஸ்டலில சமைத்ததாக சொல்லி கொண்டு வந்து தந்து நல்ல ருசி என்று பாராட்டுவேன் என்று வாயைப்பார்த்துகொண்டு நின்றார்கள்.. ஆனால் அதால் ஒரு யானைக்கு எறிந்தால் பாவம் ஸ்பாட்டிலேயே டிக்கட் வாங்கிவிடும்... அவளவு கடினம் .. பிறகென்ன சிரித்தபடி உடைத்து முழுங்கி டைஜீனை குடித்து சமாளித்ததுதான்.. கம்பஸ் சம்பவங்களில் ஏதாவதுசாப்பாட்டு சாமானகளில் அவர்கள் கைவைத்தால் கவிட்டு கொட்டிவிடுவோம்.. அட சன்குவிக் கரைப்பது கூட நம்ம பசங்கதான்..
      வந்துட்டாங்க பெரூசா கதைக்கிறதுக்கு ( ;) )

      சுபானு: அப்ப எப்பதான் கனியும்..? ஏதாவது புகையடிச்சாவது பழுக்க வைங்கப்பா! எல்லாம் எக்ஸ்பைரி ஆகப்போகுது... ;)

      அசோக்கு: ஹ்ம்ம்! இன்டைக்குதான் உங்கள காணுறன்.. அந்த தூக்கில தொங்கின இடுகை நல்லாருக்கு.. சந்திக்கலாம்... ஆனா வெள்ளைவான யோசிக்கத்தான் பயம்மா கிடக்கு..

    16. உண்மையான பதிவர் சந்திப்பு விரைவில் நடக்கவுள்ளது.. இது குறித்து மெயிலில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்... தற்போது இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது... பங்கு பெற்ற ஆர்வமுள்ளவர்கள் அறிவிக்கவும்.. அது தொடர்பாக ஏனையோருக்கும் அறிவிக்கவும்... அனேகமாக இந்த மாத இறுதியில் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்...

    17. This comment has been removed by the author.
    18. //பின்னாலிருந்து புல்லட் ஒழிக என்று கோசம் எழும்பியது … பார்த்தால் மலேசிய மாதர்சங்கம் , க்ளப்பில் மப்படிக்கும் மாதர் சங்கம் , பிஞ்ச ஜீன்ஸ் போடும் பிகர்கள் சங்கம் , பிகினியுடன் கோயில் போகும் பக்தைகள் சங்கம் என்று இப்படி ஏராளமான பெண்கள் சங்கம் சார்பில் யாரோ ஒரு பெண் தனிய நின்று கத்திக் கொண்டிருந்தார் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை )…//

      Malaysia endavudaneye i got it tat its me.. iru iru oru naal varum appa unda koluppai karaikiren da bullet anna...

      Enda per solla thairiyame illaya.. cha cha.. vetkam vetkam.....

    19. இலங்கையில் முதன்முறையாக “பதிவர் சந்திப்பு” நடக்க முன்கூட்டிய என் வாழ்த்துகள்..:-))

    20. அதென்ன சன்கிவிக் ஃபெவிக்விக் கலந்ததா?

      :)))

    21. ட்ரையம்பு: சே சே உங்களை சொல்வனா பிள்ளை... நீங்க அடுப்படி தாண்டா அம்பிகாபதியல்லோ... எதிர்கால தமிழீழ பெண்களுக்கெல்லாம் ஒரு வரைவிலக்கணம்.. முன்னோடி...

      டொன்லீ: இப்பதான் ஏற்பாடுகளை ஆரம்பிச்சேன்... அதுக்குள் டாவு தீந்திடும் போல இருக்கு... யாருமே றிப்ளை பண்ண மாட்டேங்கிறான்.. ஹிஹி! வழமை போல நானும் கடலேறியும் ஏதாவது சாப்பாட்டுக்கடையில 5 இடியப்பத்த சொதிய ஊத்தி சாப்பிட்டுட்டு , கெத்தா ரெண்டு மூணு போட்டோவ எடுத்துட்டு மாபெரும் பதிவர் சந்திப்பெண்டு ஒரு பதிவை போடவேண்டியதுதான்....

      ஆ இதழு: அதுவந்து இலங்கைத்தயாரிப்பு கலவை பானம் ஒண்ணு... ஏதாவது தண்ணி சாப்பிடுபவர்கள் ராவா அடிக்க பயந்தவர்கள் கலப்பதற்காக தயாரிக்கப்பட்டது... தோடம்பழ தோலில் செய்வது... தனியே அதை மட்டும் குடிப்பதென்றால் மிகமிக பக்குவமாக தயாரிக்க வேண்டும்... குறித்தளவு சீனி ( வேண்டுமென்றால் உப்பு புளி மிளகு தூள் சீரகம் கருவாடு எல்லாம் ) போட்டு கவனமாக மிக்ஸ் பண்ண வேண்டும்... பிழைத்தால் பேதிதான்... அது செய்வது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை... இங்கால் பக்கம் வந்தால் கலந்து தருகிறேன்...ஆனால் திருப்பிப்போகும் போது பண்டிக்காய்ச்சல் அறிகுறி தென்படும் உங்களுக்கு...

    22. total damage..

      நேற்றே இதை வாசிச்சு வயிறு வலிக்க சிரித்தேன்..
      ஏனய்யா இப்படி?
      வந்தியும் நானும் முதலிலேயே பேசினோம்.. கொஞ்சம் வேலை மும்முரமாக இருப்பதால் ஒழுங்குபடுத்த நான் முன்வர மாட்டேன் என்றும், எப்போது வைத்தாலும் எங்கே வைத்தாலும் வரத்தயார் என்றும் சொலி இருந்தேன். (கொழும்பைத் தாண்டி அதுவும் வெள்ளவத்தை தாண்டி செல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை தான்)

      அதுக்குள்ளே இப்படி டமேஜ் பண்ணியது நியாயமா?

      எனக்கும் நேற்று கண்டபடி மேடையிலை வச்சு அடிவாங்கிற மாதிரிக் கனவு வந்துது..;)

      நீங்க அடுத்த பதிவு இதே மாதிரி போடுறதுக்கு முதல்ல பதிவர் சந்திப்புப் போடுவம்


      ஆனால் ஒன்று மட்டும்.. உங்கள் நகைச்சுவை உணர்வு சூப்பர்..

      ஒரே ஒரு ஆறுதல் யாழினி, சுபானுவோடு பார்க்கையில் நான் தப்பித்தேன் போல இருக்கு..

    23. நன்றி அண்ணா... நானும் ஏதோ சூடாகி விட்டீர்களோ என்று நினைத்துபயந்து விட்டேன்.. அரேஞ்மென்ட் எல்லாம் நாங்கள் பாத்துக் கொள்ளுறம்... நீங்க வந்தா மட்டும் போதும்..
      ஆளாளுக்கு ஒவ்வொலு நாட்டில இருந்து பதிவர் சந்திப்பெண்டு பொட்டு மண்டைய காயவச்சாங்க... நானும் ஏன் நம்ம பசங்க யாரும் அதில ஆர்வப்படேல்ல எண்டு யோசிச்சு பாத்தன்.. அதோட விளைவுதான் இந்தப்பதிவு.. எல்லாரும் அதை நகைச்சுவையா எடுத்தது மிக மிக மகிழ்ச்சி ... விரைவில சந்திப்பம்...

    24. //சே சே உங்களை சொல்வனா பிள்ளை... நீங்க அடுப்படி தாண்டா அம்பிகாபதியல்லோ... எதிர்கால தமிழீழ பெண்களுக்கெல்லாம் ஒரு வரைவிலக்கணம்.. முன்னோடி...//

      இதில ஒன்றும் உள் குத்தமில்லையே... அது சரி,,,, அது என்ன மலேசியா மாதர் சங்கம்.. am not convinced yet....

    25. எனக்கு வடிவேலுண்ட ” ரொம்ப நல்லவன் ” காமெடிதான் ஞாபகம் வருது.. ஏதோ கவனமா இருந்துக்க கண்ணு... பொல்லாத லெக்சரர் கிட்டல்லாம் படிக்கிற.. சட்டென்று நம்பிடாத ஆக்கள.. ;)

    26. புல்லட்... சூப்பர்யா... பதிவர் சந்திப்பு நடந்தா நலம்தான்...

    27. நன்றி மாயா அன்ட் மது...
      மது உங்களுக்கு விரைவில் அறிவிக்கிறோம்...
      மாயா .. உங்களுடைய வெப்சைட்டிலுள்ள பலபேர் கடையை மூடிவிட்டார்கள்.. திறந்தால் புழுதியும் புகையுமாக்கிடக்கு..

    28. :)

      அது உண்மை தான் சிலர் வேறுகடையை வைத்திருக்கிறார்கள், சிலர் சொந்தக்கடையை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறன் !

      பகீ, காண்டீபன், கோவையூரான்,..... என கனபேரை காணேல்ல :)

    29. கலக்குறீங்க புல்லட் :)