அழைப்பிதழ்

    எதுவித நக்கலுமில்லாமல் இந்தப்பதிவு இடப்பட்டுள்ளது... தயவு செய்து நக்கலென எண்ணி விடாதீர்கள்.. அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு ஒரு இனிமையான காலைப்பொழுதை எமக்குள் பகிர்ந்து கொள்வோம்.... முதல் சந்திப்பை சிறந்த சந்திப்பாக மாற்ற இலங்கைப் பதிவர் அனைவரும் கூடுவோம்... வணக்கம்


    காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
    நேரம் : காலை 9 மணி.
    இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
    இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
    கொழும்பு 06.

    நோக்கங்கள் :

    இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

    புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

    இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

    பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

    பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

    இன்னும் பல‌..

    வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


    லோஷன் : arvloshan@gmail.com
    புல்லட் : bullettheblogger@gmail.com
    வந்தி : vanthidevan@gmail.com
    ஆதிரை : caskaran@gmail.com

    முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

    இங்ஙனம்
    ஏற்பாட்டுக் குழுவினர்.


    பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

    ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

    உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

    யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

    இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

    உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..


    11 Responses

    1. இலங்கைப் பதிவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நேரம். அனைத்து பதிவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு அழைப்பதோடு. ஏட்பாட்டுக் குழுவினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் என் ஒத்துழைப்பு இருக்கும்...

      நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்...

    2. வாழ்த்துக்கள் விழா களைகட்டட்டும்!!!!

    3. I wish I was there to attend such get together, Have a good time all :)

    4. இந்தப் பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

    5. வாழ்த்துகள்...:-)

    6. ஒன்றுபடுவோம் நண்பர்களே... நினைத்ததை விட வரவேற்பும் ஆதரவும் அதிகமாகவே உள்ளது..

    7. ஆமாம் புல்லட் நாம் எதிர்பார்த்ததை விட பலரிடம் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. பலர் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

    8. இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.

    9. நன்றிங்கப்பா ... உணர்ச்சி வசத்தில கண்ணீரெல்லாம் வருது... புகுந்து விளாடிருவோம் வாங்க எல்லாரும்..

    10. நான் ரெடி. நண்பர்களையும் அழைத்து வருகிறேன்.

      அன்புடன்
      கொல்வின்

    11. நிச்சயமாக கொலவின் எண்ணிக்கையை உறுதிசெய்யமுடியுமா எம் மின்னஞ்சலுக்கு? சிற்றுண்டி ஏற்பாடுகளுக்காகவே கேட்கிறோம்.. தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்..