முதலாவதிலேயே கலக்கிட்டமில்ல...

    வணக்கமுங்கோ! :)




    எனது ஐம்பதாவது பதிவாக எமது முதலாவது இலங்கைப்பதிவர்களின் இனிய ஒன்று கூடலின் வெற்றிச்செய்தியையே பதிய வேண்டுமென்று எண்ணியிருந்தேன்... அதேபோல் ஏறத்தாழ எண்பது பேருக்கும் மேலாக மண்டபம் நிரம்பி வழிய எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சுமுகமாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ந்தேறியது... வந்தவர்கள் அனைவரும் நிறைந்த மனத்துடனும் சந்தோசத்துடனும் சென்றவேளை தேடிவந்து ஏற்பாட்டுக்குழுவினருக்கு பாராட்டுத்தெரிவித்த போது எம் கண்களில் ஓர் ஆனந்தக்களிப்பு...





    எமது முதலாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு இணையத்தில நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.. ஏறத்தாழ 40க்கும் மேற்பட்டவர்கள் ஒன்லைனில் ஒரே நேரத்தில் இருந்தார்கள் என்பது மிகமிக மகிழ்ச்சிக்குரிய விடயம்... அதை ஏற்பாடுசெய்த சகபதிவர் கௌபாய் மதுவுக்கு விசேட நன்றிகள்.மேலும் பலவிடயங்கள் ஆராயப்பட்டன.. என்னை எதுவும் எழுதவேண்டாமென சீரியஸ் பதிவர்கள் வேண்டிக்கொண்டமையால் நான் எதுவும் சொல்லவில்லை... ஹிஹி நான் ஜோக் ஆக்கிவிடுவேனாம்.. உண்மைதானே?





    இன்னும் சொல்வதானால் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் குடிபானங்களும் தாராணமாக வழங்கப்பட்டன.. அனைவருக்கும் பேசுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.. டெக்னிக்கல் விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன.. இலவசமாக இருக்கிறம் சஞ்சிகையின் கடைசி இதழும் மன்னார் அமுதனின் நூல் ஒன்றும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.. வீடியோ மற்றும் போட்டோக்கள் சராமாரியாக எடுக்கப்பட்டன.. ஒரு சிறுவன் பதிவரும் வந்திருந்து பேசி அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தினார்.. சற்றும் போரடிக்காமல் சென்ற இந்த நிகழ்ச்சி , எங்கே முதலாவதே கோணலாகி முற்றும் கோணலாகிவிடப்போகிறதோ என்று பயந்து கொண்டிருந்த எமக்கு பெரிய சந்தோசத்தை கொடுதுள்ளது.





    ஏனைய
    தகவல்களை பல சீரியஸ் பதிவர்கள் தருவார்கள் என்று கூறிக்கொண்டு மிகமிக சந்தோசத்துடனும் திருபதியுடனும் எம்மோடு தோள் கொடுத்துழைத்த நண்பர்களை நினைத்துக்கொண்டு , இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பில் நேரடியாகவும் ஒளிபரப்பினூடாகவும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் வாழத்துக்களையும் தெரிவித்துக்கொண்டு நிம்மதியா தூங்கப்போகிறேன்.. (அந்த "முதன் முதலாய் இலங்கைப் பதிவர்களின் இனிய ஒன்று கூடல்" என்று காணப்பட்ட வரவேற்பு வாசகத்தை சரிக்கட்டி முடிய இரவு 2 மணியாகிவிட்டது சிவனே.. சந்திப்பம்...)







    ஏனைய பதிவர்களின் பார்வையில்


    தாய்மடியின்: சந்திப்பு - எனது பார்வை.


    வந்தியத்தேவரின் : நாம் சாதித்துவிட்டோம்


    கௌபாயின் இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்


    கடலேறியின் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்


    கிருத்தியின் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு


    வசந்தனின் இலங்கை பதிவர் சந்திப்புக்கு ஒரு எதிர்ப்பாட்டு


    ஈழவனின் பார்வையில் இலங்கை பதிவர் சந்திப்பு


    சந்ருவின்,ஒளிபரப்பினூடான பார்வையில்


    மயூரேசனின் இலங்கை பதிவர் சந்திப்பு – 2009


    சயந்தனின் சந்திப்பு ஒரு இசைப்பாட்டு


    விகிபீடியாவில் முதல் சந்திப்பு பற்றி


    லோசன் பார்வையில் பதிவர் சந்திப்பு


    கோபியின் படங்களுடனான ஒரு பதிவு


    சுபானுவின் வரலாற்றின் பக்கங்களில் முதலாவது பதிவர் சந்திப்பு


    ஹரனின் பதிவர் சந்திப்பில நயன்தாரா பரபரப்பு


    மருதமூரானின் அன்புள்ள காதலுக்கு


    அமுதனின் இலங்கை பதிவர் ஒன்றுகூடல்


    இலங்கனின் பதிவர் சந்திப்பும் பற்றீசும்


    மயூரனின் ஆரம்பமே அசத்தல்


    பகீரதனின் பதிந்தோம் சந்தித்தோம்


    மு.மயுரனின் இணையம் இலங்கைத்தரையில்


    குமுதம் "என்ன சந்திப்பு?"


    யோவாய்சின் படதகவல்


    யோவாய்சின் கேக் வெட்டிய பதிவர்கள்


    சத்தீஸின் திடுக்கிடும் உண்மைகள்


    சம்யுக்தாவின்இனிய ஒன்று கூடல்


    இந்தியாவிலிருந்து முத்துலட்சுமியின் பார்வையில்


    லோசனின் பிகைன்ட் த ஸ்கிரீன்ஸ்


    பனையூரானின் நெஞ்சில் நின்றவை


    கானாப்பிரபாவின் பின்பாட்டு


    சுவட்டில் சிதறல்கள்


    யாழினியின் கவிதையாக சந்திப்பு


    சேரன் கிரிஷின் பதிவர்கள் மென்மையானவர்கள்


    செந்தூவாவின் பார்வையில்







    59 Responses

    1. இரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ள விமர்சனம் மனதைத் தொட்டது! வாழ்த்துக்கள்! நீங்களும் இதில் முன்னணியில் இருந்தவர் தானே!

    2. ஏற்பாட்டுக் குழுவில நீயும் ஒராளெல்லோ மச்சான்... வாழ்த்துக்கள்.. ஒரு முன்னுதாரணமாக இந்த ஒன்றுகூடல் அமைந்ததுக்கு...

    3. நன்றி பிரியமுடன் வசந்த் .. உங்கள் நல்லெண்ணஙகளே சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறக்காரணம்

      தமிழன் கறுப்பி ... எனக்கெதுக்கு நன்றி... வந்து வாசித்து பின்னூட்டியதற்கு உங்களுக்குதான் நன்றி

      அன்பின் தங்கமுகுந்தன் ... நான் ஏற்பாட்டுக்குழுவில் ஒருவன்தான்.. ஆனால் எல்லாப்பதிவர்களும் சேர்ந்து இழுத்ததினால்தான் தேர் அசைந்தது... அந்த வகையில் எல்லாருமே பாராட்டுக்குரியவர்கள்.. நீங்கள எல்லாருக்கும் ஊளக்குவிக்கும் வகையில் பின்னூட்டமிட்டிருந்தீர்கள்.. முக்கியமாக உங்களைப்பொன்றவர்களே எம்மை உளரீதியில் சொர்வடையாமல் பாதுகாத்தவர்கள்.. அதற்காக விசேட நன்றிகள்...

      மனப்பூர்வமான நன்றிகள் கிருத்தி... உங்களிடமிருந்து வாழ்த்துக்ள வரும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது... உங்கள் எல்லோரினதும் மனப்பூர்வமான ஆசிகள்தான் நிகழ்வு சிறப்பாக அமைய காரணமாக அமைந்தது.. மேலும் பதிவுலகில் என் நண்பர் வட்டம் சிறிதானாலும் நெருக்கமானது.. அதில் புதிதாக பலரை இணைத்துக்கொள்ள இந்த முயற்சி பயனளிக்குமென நம்புகிறேன்... மறுபடியும் நன்றிகள்

    4. ஆமாம் உண்மையிலேயே கலக்கீட்டீங்க! வாழ்த்துக்கள் புல்லட். என்னால் தங்களது ஒலித் தொகுப்பு மட்டுமே கேட்க முடிந்தது. நேரடி ஒளிபரப்பு முடியும் தவறுவாயிலேயே பார்க்க சந்த்ர்ப்பம் கிடைத்தது. எனினும் உங்கள் புகைப்படங்கள் உணர்த்தி நிற்கின்றன நீங்கள் வெற்றிகரமானதும் மகிழ்ச்சி கரமானதுமான பதிவர் சந்திப்பொன்றை நிகழ்த்தியுள்ளீர்கள் என்று. மிகுந்த சந்தோஷம் அளிக்கின்றது புல்லட். வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும்...

    5. வர வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் கவலையோடு இருந்த என்னை நேரடியாக பங்கு கொண்டது போல் வீட்டிலே இருந்து சந்தோசமடைய வைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.

      ஒளிபரப்பு ஏட்பாடுகளைச் செய்த மது அவர்களுக்கு நன்றிகள் பல...

      இன்று சாதித்துவிட்டோம் என்று சந்தோசம் அடையும் அதே வேளை இன்னும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது இன்றைய ஏற்பாடுகளைப் பார்க்கும் போது..

      இனி வரும் காலங்களில் பல புதுமைகள் படைப்போம்... எனது 100 % பங்களிப்பு இனிவரும் காலங்களில் இருக்கும் நண்பர்களே.


      அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல...

    6. புல்லட்... தங்கள் பகிடி... ஆரவாரமான அறிமுகங்கள்... அனுபவக் கதைப்புக்கள்... புலத்திலிருந்து கேள்விகள்... எனப் புதுப் புது விடயங்களுடன் ஒரு மனநிறைவான நாள்...

    7. அட்டகாசம்...ஏற்பாட்டுக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் . குறுகிய கால அறிவிப்பில் இப்படி பிரமாண்டமாக ஒரு கூட்டத்தை கூட்டி சாதித்து விட்டீர்கள்...இந்த பயணம் தொடரட்டும். :-)))))

    8. சந்தனமுல்லை // நன்றிகள் சந்தனமுல்லை.. இந்தியப்திவர்களின் சந்திப்புகளே எம் நிகழ்ச்சிக்கும் ஒரு ஊக்கிகளாக அமைந்தன

    9. யாழினி // நன்றி யாழினி.. வராவிட்டாலும் உங்கள் எண்ணம் பூராகவும் நிகழ்வைச்சுற்றியே அமைந்திருந்தது எமக்கு மகிழ்வளிக்கிறது.. ஒலிவடிவங்களை கேட்கச்செய்த மது சகோதரர்களுக்கு எம் நன்றிகளை மறுபடி தெரிவிக்கிறேன்...

    10. சந்ரு.. உங்களை மிகவும் எதிர்பார்த்தோம்.. உங்களுக்காக கடும் சுத்த தமிழில் கதைக்கவேண்டுமென்று நாம் பிரயத்தனப்பட்டோம்.. நீங்கள் வாராதது கடும் மனவருத்தத்தை அளித்தது.. பரவாயில்லை.. நீங்கள் நிகழ்வை பார்த்து ரசிக்க முடிந்தது சந்தோசமே.. மது சகோதரர்களுக்கு நன்றிகள்..

    11. என்ன புல்லட்டு! பொம்பிளப் பிள்ளையள் தெரியிற படமாவே எடுத்துப் போட்டிருக்கிறீர் உம்மட வலைப்பதிவில!

    12. மதுவதனன் மௌ. / cowboymathu
      புல்லட்... தங்கள் பகிடி... ஆரவாரமான அறிமுகங்கள்... அனுபவக் கதைப்புக்கள்... புலத்திலிருந்து கேள்விகள்... எனப் புதுப் புது விடயங்களுடன் ஒரு மனநிறைவான நாள்..//

      எது எப்பிடி இருந்தாலும் தங்களின் நேரடி அஞ்சலை மிஞ்ச எதுவுமில்லை.. மது சகோதரர்களுக்கு நன்றிகள்..

      நாள் மிகமிக நிறைவாக இருந்தது...:)

    13. ’டொன்’ லீ
      அட்டகாசம்...ஏற்பாட்டுக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் . குறுகிய கால அறிவிப்பில் இப்படி பிரமாண்டமாக ஒரு கூட்டத்தை கூட்டி சாதித்து விட்டீர்கள்...இந்த பயணம் தொடரட்டும். :-)))) //

      நீங்கள் இல்லாத குறைதான் டொன்லீ.. மற்றும்படி கலக்கி விட்டம்.. இந்த ஒன்றுகூடலுக்கு உங்களுடைய சிங்கப்பூர் சந்திப்பு கட்டுரைகளை வாசித்த ஏக்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

    14. Mayooresan
      என்ன புல்லட்டு! பொம்பிளப் பிள்ளையள் தெரியிற படமாவே எடுத்துப்
      போட்டிருக்கிறீர் உம்மட வலைப்பதிவில! //

      அதிக வாசகர்களை பெறுவது , ஹிட்ஸ் பெறுவது , ஓட்டுபெறுவது எப்படி என்ற கலந்துரையாடலின் போது இதை தொடர்பாக கதைத்திருந்தேன் நண்பா! ஆகவே கண்டுக்கப்படாது... ஹிஹி ;)

    15. முன் பின் அறிமுகமில்லா பல பதிவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. “கலக்கிட்டமில்ல..”

    16. இனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)

    17. வாழ்த்துக்கள். கடல் கடந்து இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போனதில் கவலைதான். நல்ல முயற்சி. ஒலிப்பதிந்த நிகழ்வின் நிமிடங்களை சுவைக்க முடிந்தது.

      இனிய புன்னகையுடன்,
      உதய தாரகை
      http://niram.wordpress.com

    18. பால்குடி
      முன் பின் அறிமுகமில்லா பல பதிவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. “கலக்கிட்டமில்ல..” //

      ஆம் என் வலைப்பூ தாய்மடி அதில் நான் பால்குடி என்று அறிமுகத்திலேயே எல்லாரையும் சிரிக்க வைத்து ஓடிஓடி அனைவருக்கும் சிற்றுண்டி கொடுத்து கலக்கியது தாங்கள்தான்.. இரவு சரியாக தூங்காததால் சிற்றுண்டி கொடுக்கும்போது விழுந்துவிடுவேனோ என அஞ்சினேன்.. ஆனால ஆபத்பாந்தவனாக வந்தமைக்கு நன்றிகள்.. சிறுபிள்ளை போல தாங்கள் ஓடியாடி வேலை செய்ததும் ஒரு மென்மையாகவும் சிறப்பாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த சதீசும் என் கவனத்தை கவர்ந்தது என்னவோ உண்மை!

    19. வேந்தன்
      இனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)//

      நன்றிகள் வேந்தன்

    20. niram
      வாழ்த்துக்கள். கடல் கடந்து இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போனதில் கவலைதான். நல்ல முயற்சி. ஒலிப்பதிந்த நிகழ்வின் நிமிடங்களை சுவைக்க முடிந்தது.//

      இப்படி உங்கள் வாழத்துக்களும் ஊக்குவிப்பும் எம் களைப்பை போக்குகிறன.. நன்றிகள் niram ...

    21. பாராட்டுக்கள் புல்லட், அடித்த அரைச் சதத்துடன் நின்று விடாமல் பல்லாயிரம் சதம் அடிக்க வேண்டும்.

      இன்றைய பதிவர் சந்திப்பில் உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கதே!

    22. முடிந்தவரை வருவதற்கு முயற்சி செய்தேன் முடியவில்லை. இன்னும் கலந்து கொள்ளவில்லையே என்ற கவலை போகவில்லை.

      தமிழ் மீது அதிக பற்று அதுதான் நான் தமிழ் பற்றி அதிகம் பேசுவது. தமிழை வளர்க்கவேண்டும் என்ற அவாதான். இதைக்கூட செய்ய வில்லை என்றால் தமிழனாய் இருந்து என்ன பிரயோசனம்.

      இனிவரும் உங்கள் முயற்சிகளுக்கு எனது

    23. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவேறியதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

    24. பூச்சரம்

      இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

      பூச்சரத்தில் இணைந்து முழு இலங்கை பதிவரிடையே உங்கள் எழுத்துக்களை பிரபலப்படுத்துங்கள்..

    25. ஈழவன்
      பாராட்டுக்கள் புல்லட், அடித்த அரைச் சதத்துடன் நின்று விடாமல் பல்லாயிரம் சதம் அடிக்க வேண்டும்.
      இன்றைய பதிவர் சந்திப்பில் உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கதே! //

      நன்றி ஈழவன்..உங்கள் வார்த்தைகள் மீது மதிப்பு வைத்து தொடர்ந்து எழுதுவேன்..

    26. சந்ரு
      முடிந்தவரை வருவதற்கு முயற்சி செய்தேன் முடியவில்லை. இன்னும் கலந்து கொள்ளவில்லையே என்ற கவலை போகவில்லை. //

      பரவாயில்லை சந்ரு.. நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் சில ஏற்பாடுகள் செய்திருந்தோம்... அது பிழைத்தததுதான் கவலை.. என்றாலும் ஒளிபரப்பபையாவது பார்த்ததது மகிழ்ச்சி..

    27. ஊர்சுற்றி
      பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவேறியதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)//

      எல்லாம் உங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஆசிதான் காரணம்.. நன்றிகள் ஊர்சுற்றி..

    28. அடக்கமாக இப்போது பதிவிட்டாலும், முன்னர் உழைத்த கடுமையான உழைப்பென்ன, நேற்று கலக்கிய கலக்கென்ன, அள்ளி வீசிய கடிகலென்ன புல்லட் நேற்றைய கதாநாயகர்களில் ஒருவர் நீங்கள்.. ;) (மற்றவர்கள் யார் என நானே சொல்வது நல்லா இருக்காது ;))

      ஆனால் ஒட்டுமொத்த முயற்சியும், உழைப்புமே எங்கள் வெற்றி..

      இப்போது உங்களுக்கு உத்தரவு தரப்படுகிறது.. புல்லட்டின் வழமையான டுமீல் பதிவொன்றை பதிவர் சந்திப்பு பற்றி இடலாம்.. :) (எனது பதிவுக்குப் பிறகு)

    29. Poosaram
      பூச்சரம்

      இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
      பூச்சரத்தில் இணைந்து முழு இலங்கை பதிவரிடையே உங்கள் எழுத்துக்களை பிரபலப்படுத்துங்கள்..

      பெரிதாக இலங்கை பதிவரின் சரமென்று சொல்லுகிறீர்கள்..ஆனால் அவர்கள் வைத்த முதலாவது சந்திப்புக்கு வரவில்லை.. செருப்பாலடித்துவிட்டு விருந்துக்கு கூப்பிடுவது போலல்லவா உங்கள் செயல்? நாம் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.. உங்களை எமக்கு தெரியும்.. சந்திப்பின் போது உங்களுக்கு ஒரு சந்தர்பப்ம் வழங்க இருந்தோம்.. ஆனால் உங்களின் ஏனோதானோ செயற்பாடு பொறுப்பான ஒருவருடையதல்ல..

    30. LOSHAN
      அடக்கமாக இப்போது பதிவிட்டாலும், முன்னர் உழைத்த கடுமையான உழைப்பென்ன, நேற்று கலக்கிய கலக்கென்ன, அள்ளி வீசிய கடிகலென்ன புல்லட் நேற்றைய கதாநாயகர்களில் ஒருவர் நீங்கள்.. ;) (மற்றவர்கள் யார் என நானே சொல்வது நல்லா இருக்காது ;)) //

      இது கொஞ்சம் ஓவராப் படேல்ல? நாங்கள் மாறிமாறி டவுசர்களை உருவியதுதான் நிகழ்ச்சியின் கதை என்கிறீர்களா? அப்படியென்றால்தான் நாம் கதாநாயகர்கள்..நீங்களும் உள்ளே வருவீர்கள்.. மற்றும் படிபந்தியில் பாயாசம் வாங்கும் கதையென்றால்ஒரு கோலைபபோட்டுக் கேட்டிருந்தால் புழுபுழுகென்று புழுகியிருபபேன்.. அதைப்பார்த்து ஒபாபமா உங்களை தன் செக்ரட்டரியா வேலைக்கு ப்போட்டிருப்பார்.

      ஆனாலும்ஒரு வார்த்தையில் சொலவதானால் தங்களின் எளிமையே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. அதுவே எல்லாரையும் ஒன்றாக ஆர்வததுடன் செயற்பட தூண்டியது.. அதற்கான நன்றியை வார்த்தையில் சொல்லிவிட முடியாது..


      //ஆனால் ஒட்டுமொத்த முயற்சியும், உழைப்புமே எங்கள் வெற்றி..//
      நிச்சயமான உண்மை


      //இப்போது உங்களுக்கு உத்தரவு தரப்படுகிறது.. புல்லட்டின் வழமையான டுமீல் பதிவொன்றை பதிவர் சந்திப்பு பற்றி இடலாம்.. :) (எனது பதிவுக்குப் பிறகு) //

      அப்பாடா! நீஙக எப்ப போடுறீங்க..? ;)சிம்பு படமெடுத்த கதையா போகாம கெதியன போடுங்க..

    31. நன்றி புல்லட் உங்கள் வடை பட்டீஸ் கேக் மற் நெஸ் கபேக்கு, அப்புறம் சீரியஸா எல்லாரும் பேசுவாங்களோ என பயந்து வந்த எங்களுக்கு கடிகளை வீசி வெடிக்க வைத்ததுக்கு. உங்கள் புல்லட் எழுத்து மட்டுமல்ல பேச்சும் செம பம்மல் தான்.

    32. யோ வாய்ஸ்
      நன்றி புல்லட் உங்கள் வடை பட்டீஸ் கேக் மற் நெஸ் கபேக்கு, அப்புறம் சீரியஸா எல்லாரும் பேசுவாங்களோ என பயந்து வந்த எங்களுக்கு கடிகளை வீசி வெடிக்க வைத்ததுக்கு. உங்கள் புல்லட் எழுத்து மட்டுமல்ல பேச்சும் செம பம்மல் தான். //

      நான் களத்தில் இறங்குவதாக இருக்கவில்லை.. நிகழ்ச்சி போரடிக்கும்போதோ அல்லது பிரச்சனையாக வெளிக்கிடுமிடத்தோதான் லோசன் அண்ணாவும் வந்தியண்ணாவும் என்னை இறக்கினார்கள்.. அவர்களுக்குத்தான் நீங்களும் நானும் நன்றி சொல்லவேண்டும் ... உணவுப்பொறுப்பு மற்றும் வரவேற்பு வாசகம் தயாரத்தல் பொறுப்புகளை எனக்கு தந்ததும் அவர்களதான்.. சிறந்த மனிதர்கள்..

      ஏதோ எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்த்தது சந்தோசம்....நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் யோ வாய்ஸ்..

    33. அண்ணே புல்லட் அண்ணே வெள்ளவத்தயில சங்கத்துக்கு முன்னுக்கு போனாலே உங்களையும் உங்கள் உழைப்பையும் பற்றி தான் ஒரே பேச்சு ........
      உண்மைய சொன்னால் உங்களை போல் நாயகர்கள் தான் இனிய தமிழை வளர்க்க தேவை.
      வாழ்த்துக்கள்... இதய பூர்வமான நன்றிகளும் உரித்தாகட்டும் .

    34. கிராமத்து பயல்
      அண்ணே புல்லட் அண்ணே வெள்ளவத்தயில சங்கத்துக்கு முன்னுக்கு போனாலே உங்களையும் உங்கள் உழைப்பையும் பற்றி தான் ஒரே பேச்சு ........
      உண்மைய சொன்னால் உங்களை போல் நாயகர்கள் தான் இனிய தமிழை வளர்க்க தேவை.
      வாழ்த்துக்கள்... இதய பூர்வமான நன்றிகளும் உரித்தாகட்டும் .//

      அடப்படுபாவி மக்கா!உழைப்ப பற்றி பேசுறாங்களா? ஏண்டா இப்பிடி? அவனவன் திணடவடை தொண்டைக்கால இறங்கமுன்னம் எழும்பி ஓடிட்டாங்கள்.. அதுக்குள்ள நிண்டு கதைச்சாங்களாம்..

      நல்ல கதைதான்..முதல்ல தமிழை என்னட்ட இருந்து பாதுகாக்கிறதுக்கு யாரும் நாயகர்கள கொண்டாற வழிய பாருங்க .. தமிழ வளர்க்கிறதுக்கு பிடிச்சாரு பாரு ஆளை! கடவுளே !

      நன்றி வாழ்த்துக்களுக்கு தம்பி!

    35. //Mayooresan
      என்ன புல்லட்டு! பொம்பிளப் பிள்ளையள் தெரியிற படமாவே எடுத்துப்
      போட்டிருக்கிறீர் உம்மட வலைப்பதிவில! //
      அடியேனும் வழிமொழிகிறேன்...

    36. கனககோபி
      //Mayooresan
      என்ன புல்லட்டு! பொம்பிளப் பிள்ளையள் தெரியிற படமாவே எடுத்துப்
      போட்டிருக்கிறீர் உம்மட வலைப்பதிவில! //
      அடியேனும் வழிமொழிகிறேன்... //

      பாத்தீங்களா ... அப்பிடி போட்டதாலதானே எனக்கொரு பின்னுர்ட்டம் எக்ஸ்ராவா கிடைச்சிருக்கு.. ;)

    37. வாழ்த்துக்கள் புல்லட். விரைவில் ஒருநாள் நானும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறேன்

    38. பல புதிய முகங்களின் இனிய அறிமுகங்கள். வலைப் பூக்களில் முகம் தெரியாது பழகி நண்பர்களாகி இணையத்தில் உலாவியவர்கள் அன்று முகம் மலர்ந்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்..

      எல்லாப் புகழும் புல்லட் வந்தி லோசன் ஆதிரைக்கே..

    39. அது சரி உங்களைத்தான் எதுவும் எழுதவேண்டாமென சீரியஸ் பதிவர்கள் வேண்டிக் கொண்டார்களே அப்புறம் ஏன் முதலில் முண்டியடித்தீர்கள்.. இன்று அலுவலத்தில் ஆணி பிடுங்கும் வேலையில்லையோ..

    40. குடுகுடுப்பை
      வாழ்த்துக்கள் புல்லட். விரைவில் ஒருநாள் நானும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறேன்//

      நன்றி குடுகுடுண்ணா! நிச்சயமாக அது விரைவில் நடக்கும்போல கிடக்கு .. வரும்போது பாப்பாவையும் கூட்டிட்டு வாங்க .. நீந்த நிறைய்ய இடமிருக்கு இங்க

    41. சுபானு.. எம்மீது மட்டும் மாலையை சூட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடமுடியாது.. தங்கள் சட்டம் தொடர்பான பேச்சு அருமை.. வாழ்த்துக்கள்.. அதை தனிப்பதிவாக தருமாறு சிலர் கேட்டிருந்தார்கள்.. நீங்கள் ஏன் செய்யக்கூடாது?

      அய்யோ.. ஒபிசில் பிடுங்க ஆணியில்லையென்றால் நானாக அடித்தாவது பிடுங்கவேண்டும்.. எத்தனை நாள்தான் பொறுப்பார்கள்.. நான் இந்தப்பதிவிட்டது ஞாயிற்றுக்கிழமை.. அத்தோடு நான் கஷ்டப்பட்டு சீரியசாக எழுதியிருக்கிறேன்.. இப்போதாவது என்னை சீரியஸ் பதிவர் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்..

    42. a good news,80 bloggers in a meet,appaadi,Keep it up.

    43. புல்லட் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருக்கின்றேன் பாருங்கள்.

    44. அப்புறம் புல்லட்,

      சந்திப்பு தொடர்பான எல்லா இடுகைகளையும் வாசித்தேன். எல்லோருமே உங்களை நகைச்சுவை சரவெடிகளையும் புல்லட்டுகளையும் வீசித் தெளிப்பவர் என்கிறார்கள்(உங்களை ரொம்ப நல்லவன்னிட்டாங்க). :)

      எல்லோரிடமும் இப்படி பெயர் எடுப்பது, ரொம்ப கடினமானது. நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். :)

    45. பதிவர் சந்திப்பு மூலம் நிறைய நண்பர்களை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.அதை விட புல்லட்டை நேர பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி. தங்களுடைய ஆலோசனைக்கமைய என்னுடைய பதிவையும் பலர் பாக்கிறாங்க ரொம்ப நன்றி

    46. Muniappan Pakkangal
      good news,80 bloggers in a meet,appaadi,Keep it up. //

      ஓமோம்.. நானும் எதிர் பார்க்கவில்லை.. ஆனாலும் சந்தோசம்தான் ... நன்றி ..

    47. ஊர்சுற்றி
      August 25, 2009 11:45 AM

      அப்புறம் புல்லட்,

      சந்திப்பு தொடர்பான எல்லா இடுகைகளையும் வாசித்தேன். எல்லோருமே உங்களை நகைச்சுவை சரவெடிகளையும் புல்லட்டுகளையும் வீசித் தெளிப்பவர் என்கிறார்கள்(உங்களை ரொம்ப நல்லவன்னிட்டாங்க). :)

      எல்லோரிடமும் இப்படி பெயர் எடுப்பது, ரொம்ப கடினமானது. நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். :)

      //

      எல்லாரும் சரியான பாசக்காரப்பயலுகள்.. அவ்வளவுதான் வேற ஒண்டும் என்னில ஸ்பெஷலா கிடையாது..

    48. ilangan
      பதிவர் சந்திப்பு மூலம் நிறைய நண்பர்களை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.அதை விட புல்லட்டை நேர பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி. தங்களுடைய ஆலோசனைக்கமைய என்னுடைய பதிவையும் பலர் பாக்கிறாங்க ரொம்ப நன்றி //
      எனக்கும் உங்கள் எல்லாரையும் கண் டது சரியான சந்தோசம்.. பலர் பாக்கிறாங்கள் எண்டால் தொடர்ந்து கலக்குங்க.. :)

    49. நம்ம பட தகவல் பக்கத்தில எல்லாரும் என்னா நினைப்பாங்கன்னு போட்டுட்டேன், உங்கள தான் போட முடியல வந்து அந்த இடத்தில என்னா நெனச்சீங்கன்னு சொல்லிட்டு போக முடியுமா?

      http://yovoice.blogspot.com/2009/08/blog-post_25.html

    50. ஏனென்றால் மத்தவங்க வில்லங்கமா யோசிச்சாங்கனா எப்படி இருக்கும் என்று நான் யோசிச்சேன் நீங்க சும்மாவே அந்த மாதிரி தான் யோசிச்சிருப்பீங்க

    51. நான் உண்மையாக நினைத்தது இதுதான்..

      இதுங்களெல்லாம் வந்தி தந்த லிஸ்டிலயே இல்லயே? ஒவ்வொண்ணயும் பாத்தா ஒண்ணுக்கு மூணு வடை சாப்பிடும் போல இருக்கே? எக்ஸ்ரா வடைவாங்க IMF இடம்தான் கடன் கேட்கவேண்டிவரப்போகுதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. :(

    52. chk this out.. its so cool http://the-nutty-s.blogspot.com/2009/08/blog-post_25.html

    53. கிராதகி... உனக்கெதிரா மான நட்ட வழக்கு போடப்போறன்..

    54. வாழ்த்துக்கள்..

      சந்திப்புத் தொடர்பான உங்களது ஒளித்தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
      (கடுமையா எடிட்டிங் செய்திராதேங்கோ)

    55. நிச்சயம் மாயா! ஆனால் இன்னும் மாற்றி தரவில்லை கடைக்காரன்.. ஆனால் எடிற்றிங் செய்யப்பட்டே வரும்.. ;)

    56. அன்பர்களே...

      இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆதரிப்பீர்களா?

      http://www.thiva-muru.blogspot.com/