பாமன்கடை பயணிகளுக்கு எச்சரிக்கை. ..

    கனநாளாய் பதிவிடவில்லை.. எழுதவும் எதுவுமில்லை.. அப்போதுதான் மதுவின் பஸ் பதிவை பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. ஆகுவே நானும் ஒரு உண்மைச்சம்பவத்தை பதிவாக...




    ஒரு நாள் வேலையால வெளிக்கிட பிந்தினதால இரவு 8 மணிக்கு 141 பஸ்ஸில வந்துகொண்டிருந்தன்..
    யன்னலோர சீட்டு.. இருந்தாலும சனம் குமிஞ்சு இருந்ததால புழுங்கி அவிஞ்சுது...
    ஒருவழியாக பாமன் கடைச்சந்தி வர எல்லாச்சனமும் இறங்கிவிட நானும் இன்னொரு மனுசனும்தான் ட்ரைவரும் கண்டக்டரும்தான் மிச்சம்...
    ஆசுவாசப்படுத்தி ஆழமாக மூச்சிழுத்து கால்களை அகட்டி அமர்ந்தேன்..


    அப்போதான் அவள் வந்தாள்..

    பஸ் மீண்டும் வெளிக்கிடத் தயாரான போது ஒரு 22 வயசு மதிக்கதக் அந்தப் பெண் அவசரப்பட்டு ஏறினாள்.
    சும்மா
    சொல்லப்படாது நல்ல நிறமாக ஸ்ரக்சரா ஓரளவு அழகாகவே இருந்தாள்..

    உள்ள சீட்டெல்லாத்தையும் அவசரமாக பார்த்தவள் நான் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டாள் , நான் தர்ம சங்கடத்துடன் யன்னலூடே வெளியே பார்த்தேன்..
    ஆனால்
    மனமோ அவள் ஏதாவது சீட்டில் இருந்ததும் லுக்கு விடுவதற்கு அலைந்து கொண்டிருந்தது.. அப்போதுதான் எனக்கு தூக்கிவாரிபபோடுவது போல் ஒன்று நடந்தது..




    விறுவிறுவென்று
    நடந்து வந்தவள் ஒரு ப்ரேக்கடித்து ஸ்டைலாக சுழன்று மடியில இருக்காத குறையாக உராயந்து கொண்டு அருகில் அமர்ந்துவிட்டாள்.. எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது..



    இவ்வளவு சீட்டிருக்க எனக்கு பக்கத்தில வந்தென் இருக்கிறாள்?
    மைனஸ் பக்கம் சிந்திக்க விடாமல் ” நீ ஒரு மன்மதக்குஞ்சுடா .. எஞ்சாய்
    என்று
    உள்ளே ஒரு குருவி உசுப்பேத்திவிட்டுக்கொண்டிருந்தது.... அவளும் ஏதோ நாமிருவரும் மோட்டபைக்கில் போவது பொல உராயலானாள்..

    வெள்ளவத்தை
    மாக்கெட் வரும் வரைக்கும் உரஞ்சலெண்டால்உரஞ்சல் அப்பிடி ஒரு உரஞ்சல்.. டெனிம் சைட்டு பிய்யுற மாதிரி உரஞ்சிக்கொண்டிருந்தாள்.. எனக்கு முகம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.. இருந்தாலும் அவள் வேண்டுமென்று உராயவி்ல்லை என எனக்கு நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்..

    நடுவில ஒரு தடவை அவள் நேரத்தை கேட்டபோது நான் எச்சில விழுங்கி விக்கி விக்கி சொன்னத பார்த்தவள் செக்சியா ஒரு புன்னகையை விட்டாள் .. நான் ப்யுஸ் போன பல்புமாதிரி ஆயிட்டேன்.. அதை கண்டவள் சிரித்துக்கொண்டே யாருக்கோ ஒரு கோலைப் போட்டாள்





    ஓட் டோவ ரெடி பண்ணு .. ஆள் ஓகே
    என்னைப்பார்த்து சிரித்தவாறு சிங்களத்தில் சொன்னது தெளிவாக விளங்கியது..


    நிலமையை
    சுதாரிக்க முதல் நாசமாப்போன பஸ்
    நிண்டுட்டுது..

    அவசர அவசரமாக மூளை பிரச்சனையை அலசியது...அவர்கள் ஆட்டோ மாமா கோஷ்டிகள்.. பிடித்தால் பெட்டாவின் பெட்டிக்கடைகளில் காசைப் புடுங்கிக்கொண்டு அப்பிளை திணிப்பதுபோல் பெண்களை திணிப்துதான் வேலை.. சேரிப்பெண்களை இதற்காகவே தயார்பண்ணி வைத்திருப்பார்கள்.. எவனாவது இளிச்சவாயன் அம்பிட்டால் பூசை புனஸ்காரங்கள‌ை முடித்துஎல்லாவற்றையும் புடுங்கிவீடுவாரகள்.. இது இவ்வளவு காலமும் மருதானை பம்பலபிட்டி பகுதிகளில்தான் சாதாரணம்.. இப்‌போ வெள்ளவத்தையிலுமா? அதிரினலீன் அக்சனை ஆரம்பித்தது..


    பஸ்ஸ்டான்டில் நின்ற எருமைமாடு போன்ற
    ஓட்டோக்காரண் ஒருத்தன் எனைப்பார்தவாறு நெருங்கிவர , சாதாரணமாக நடித்தவாறு இறங்கிச்செல்ல முயன்ற என்ட கைய எதிர்பாராதவிதமா அவள் பிடிக்க , என் ஒண்ட விட்ட பாட்டி ஒருக்கா பரலோகத்தில இருந்து இறங்கி கண்முன்னால வந்தா..



    எயிட்சுடா பேராண்டி எயிட்சு.. எகிறிட்டு ஓடிறு... ”



    ஓட்டோக்காரன்
    மல்லி மல்லி எண்டு கத்தினதையும் பெட்டையின் சிரிப்புயைம் கேக்காமல் ஓடின ஓட்டத்த தமயந்தி தர்சா பாத்திருந்தாளெண்டால் கிடைச்ச கப்பெல்லாத்தையும் கொண்டுுபோய் குப்பையில கொட்டியிருப்பாள்..




    நடுக்கத்தை
    போக்க நாலுமணிநேரம் ஆகியது ... ஒருவாறு தெளிந்தபின்பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்எண்டு பட்டினத்தார் பாட்டைப்பாடியவாறு பாட்டிக்கு நன்றியை சொல்லிவிட்டு நுளம்பு வலைக்கு்ள் புகுந்தேன்..


    இது எல்லாரையும் கவனமாக இருக்க வைக்கும் எண்ணத்துடன் இடப்பட்ட பதிவு..

    58 Responses

    1. கொழும்புல இவளோ ஈஸியா? என் பக்கத்துல ஒரு பெண் காக்கா கூட உட்காந்ததில்லை சாமி. நான் வரும்ப்போது என்னைக்காப்பாத்திருங்க புல்லட்டு.

    2. அப்படியில்லை குடுகுடுப்பை சாப். .. பெண்கள் அருகில் சகஜமாக உட்காருவார்கள்.. ஆணகள் வேறு எங்காயிளும் ஆணகளுக்கு அருகலொ கிழவிகளுக்கு அருகிலோ சீட் இல்லாவிட்டால் மட்டும் பெண்களருகில் உட்காரூவர்கள்..இது எழுதப்படாத விதி..ஆனால் ஆரோக்கியமானதும் கூட.

      ஆனால் உந்த பலான வியாபாரிகள் பயங்கரமானவர்கள்.. முதன் முதலாக யாழிலிருந்து வந்து MCக்கு சென்றிருந்த உறவினரை வரை ஆட்டோவினுள் வைதது விடாப்பிடியாக கன்வின்ஸ் செய்த கதையில் அவரது நண்பர் திறமையாக செயல்படாமல“ விட்டிருந்தால் எயிட்சோடதான் ஏறியிருப்பார் ப்ளைட்.. ஒரே ஓட்டமாக யாழ் ஓடிவிட்ட அவர் இன்னும் கொழும்பில் இருப்ப வனெல்லாம் அடிபட்ட கேசுகள் என்றே கருதுகிறார்.. என்னத்தை செய்ய்?

    3. ஹாஹா...எப்படி இருந்த கொழும்பு இப்படி ஆச்சே..

    4. பெற்ரா குணசிங்கபுரம் பக்கம் தான் இந்தக்கொடுமை என்றால் வெள்ளவத்தையிலுமா? இதற்க்குத் தானப்பா அழகாக இருக்ககூடாது என்பது. எனக்குப் பலதடவைகள் ஓட்டோவில் வந்த அழகிகள் விசிட்டிங்கார்ட் தந்திருக்கிறார்கள். ஹிஹிஹி, அப்படியே தூக்கி எறிந்துவிடுவேன்.

    5. @வந்தியத்தேவன்
      // எனக்குப் பலதடவைகள் ஓட்டோவில் வந்த அழகிகள் விசிட்டிங்கார்ட் தந்திருக்கிறார்கள்

      ஆனால், உங்களுக்கு காரில் வந்த அழகிகள் தந்திருந்தால் பிடித்திருக்கும் என்றொரு கதையும் உலாவுகிறது.

    6. வெள்ளவத்தை மாக்கெட் வரும் வரைக்கும் உரஞ்சலெண்டால்உரஞ்சல் அப்பிடி ஒரு உரஞ்சல்.. டெனிம் சைட்டு பிய்யுற மாதிரி உரஞ்சிக்கொண்டிருந்தாள்.. எனக்கு முகம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

      எவ்வளவு மின்சாரம் உருவானது புல்லட் உரசலில்.நம்ம மன்மதராசா புல்லட் வாழ்க.....

    7. ஆஹா... புல்லட் கொஞ்சம் கவனமாய் இருங்க... "வயது வந்தவர்களுக்கு மட்டும்" அரசாங்கம் இப்ப தடை விதிச்சிருக்கு... ஹி...ஹி..ஹி...

      நல்ல வேள பாட்டி வந்தாங்க இல்லைன்னா என்னவாகியிருக்கும்????

    8. நல்லாருக்குன்னா

    9. //பஸ் மீண்டும் வெளிக்கிடத் தயாரான போது ஒரு 22 வயசு மதிக்கதக் அந்தப் பெண் அவசரப்பட்டு ஏறினாள். //

      சிங்கம் ஒண்டு சிக்கியிருக்கு... ஒரு கை பாத்துடுவோம்..

    10. //அப்போதுதான் எனக்கு தூக்கிவாரிபபோடுவது போல் ஒன்று நடந்தது..//

      என்னத்தை சொல்றீங்கள் தல... உண்மையிலேயே தூக்கிவாரிப்ப போட்டதா?

    11. // ” நீ ஒரு மன்மதக்குஞ்சுடா .. எஞ்சாய் ”
      என்று உள்ளே ஒரு குருவி உசுப்பேத்திவிட்டுக்கொண்டிருந்தது....//

      விவேக் வடிவேலு ஆக்களின்ட இரட்டை அர்த்த வசனங்களை விட நீங்கள் நல்லாவே சொல்லுறியள் புல்லட்.... உள்ளே ஒரு குருவி உசுப்பேத்திச்சோ... எஞ்சாய்.. எஞ்சாய்...

    12. //அவளும் ஏதோ நாமிருவரும் மோட்டபைக்கில் போவது பொல உராயலானாள்.. //

      அந்தப் பிள்ளை என்ன உங்களை நோக்கித் திரும்பியா இருந்தாள்?...

    13. //வெள்ளவத்தை மாக்கெட் வரும் வரைக்கும் உரஞ்சலெண்டால்உரஞ்சல் அப்பிடி ஒரு உரஞ்சல்.//

      141 பேருந்து வெள்ளவத்தை சந்தைக்கு முன்னுக்கே நிண்டுடுமே... இறங்கி ரண்டு பேரும் நடந்து போனீங்களா? சொல்லவேயில்லை...

    14. //எனக்கு முகம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது..//

      முகமே வியர்க்க ஆரம்பிச்சிட்டுதா? ம்ஹீம்...

    15. //நான் ப்யுஸ் போன பல்புமாதிரி ஆயிட்டேன்.. //

      என்ன தல... நீங்க சரிப்பட்டு வரமாட்டியள்... Boys படம் ஞாபகத்துக்கு வந்து துலைக்குது...

    16. //சிரித்துக்கொண்டே யாருக்கோ ஒரு கோலைப் போட்டாள்//

      இந்திய பாசையில் எழுதுற எண்டால் "ஒரு காலைப் போட்டாள்"

    17. // ஓட் டோவ ரெடி பண்ணு .. ஆள் ஓகே” //

      தல உங்கட சைசுக்கு ஓட்டோ காணுமா...

    18. //நிலமையை சுதாரிக்க முதல் நாசமாப்போன பஸ் நிண்டுட்டுது..//

      என்னத்தை சுதாகரிச்சு.. ஏற்கனவே ப்யூஸ் போட்டுதே..

    19. //எவனாவது இளிச்சவாயன் அம்பிட்டால் //

      என்னண்டுதான் பாத்தவுடன கண்டுபிடிக்கிறாங்களோ தெரியாது..

    20. //அதிரினலீன் அக்சனை ஆரம்பித்தது..//

      சரி... மிஞ்சிக்கிடக்கிறது இது ஒண்டுதான்... அதாவது ஆரம்பிக்கட்டும்..

    21. //சாதாரணமாக நடித்தவாறு இறங்கிச்செல்ல முயன்ற என்ட கைய எதிர்பாராதவிதமா அவள் பிடிக்க , என் ஒண்ட விட்ட பாட்டி ஒருக்கா பரலோகத்தில இருந்து இறங்கி கண்முன்னால வந்தா..” எயிட்சுடா பேராண்டி எயிட்சு.. எகிறிட்டு ஓடிறு... ”//

      கையைப் பிடிச்சா எயிட்டு வருமா தல?

      -அப்பாவி முருகேசன்

    22. //நடுக்கத்தை போக்க நாலுமணிநேரம் ஆகியது ... //

      இவ்ளோ நேரம் எடுத்ததா... :((

    23. சரி... கும்மி முடிஞ்சுது... சீரியஸா ஒரு பின்னூட்டம்

      //அப்பிளை திணிப்பதுபோல் பெண்களை திணிப்துதான் வேலை.. சேரிப்பெண்களை இதற்காகவே தயார்பண்ணி வைத்திருப்பார்கள்.. //

      இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை புல்லட்... இதை வாசிக்கும்போது சேரிப்பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா என்றொரு கேள்வி எழுவதை தடுக்கமுடியாதுள்ளது...

      பிரியமுடன்,
      மதுவதனன் மௌ.

    24. ஆகா சுப்பர்..... ஓகோ சுப்பர்....
      எப்புடி தங்களின் ஆலோசனைக்கமைய இந்த பின்னூட்டம்

    25. ” எயிட்சுடா பேராண்டி எயிட்சு.. எகிறிட்டு ஓடிறு... ”

      பிடியுங்கள் கப்பை.

    26. உங்கள் எல்லாருக்கும் நானை பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் வழங்கப்படும்..
      17 வோட்டும் 16 பின்னூட்டமும் கண்டவுடன் அதிர்ச்சி.. அனைவருக்கும் நனறி..

    27. ’டொன்’ லீ
      ஹாஹா...எப்படி இருந்த கொழும்பு இப்படி ஆச்சே. //

      அதேதான்.. ஆனால் நீஙகள் கெலாங்கில சந்திப்பு நடத்தவேண்டுமென்று அடம் பிடிப்பதாக கேள்வி? உண்மையா டொன்லீ?

    28. வந்தியத்தேவன்
      பெற்ரா குணசிங்கபுரம் பக்கம் தான் இந்தக்கொடுமை என்றால் வெள்ளவத்தையிலுமா? இதற்க்குத் தானப்பா அழகாக இருக்ககூடாது என்பது. எனக்குப் பலதடவைகள் ஓட்டோவில் வந்த அழகிகள் விசிட்டிங்கார்ட் தந்திருக்கிறார்கள். ஹிஹிஹி, அப்படியே தூக்கி எறிந்துவிடுவேன். //



      ஆ! அப்படியா? அப்படியானால் நீங்கள் குணசிங்க புரத்தில் வேலையிருக்கிறது என்று கூறுவது இதைத்தானா? உதுக்கு விசிட்டிங்காட் எல்லாம் தருவார்களா ? வடிவாக பார்த்தீர்களா? ஏதாவது பக்கட் போல இருக்கவில்லையா?

    29. ஆதிரை
      @வந்தியத்தேவன்
      // எனக்குப் பலதடவைகள் ஓட்டோவில் வந்த அழகிகள் விசிட்டிங்கார்ட் தந்திருக்கிறார்கள்

      ஆனால், உங்களுக்கு காரில் வந்த அழகிகள் தந்திருந்தால் பிடித்திருக்கும் என்றொரு கதையும் உலாவுகிறது. //

      ம்ம் ...பரவலாக பரவுகிறது.. ஏதோ காற்றடிப்பது பற்றியு்ம் கதைக்கிறார்கள் ..

    30. SShathiesh

      எவ்வளவு மின்சாரம் உருவானது புல்லட் உரசலில்.நம்ம மன்மதராசா புல்லட் வாழ்க..... //

      ஓம் தம்பி.. நிறைய ஸ்டட்டிக் சார்ஜ் உருவாகி யிருக்கும் தானே? நான் சிந்திக்கவில்லை.. இனி ஒரு பல்பு கொண்டு போறன்.. உரஞ்சும்போது பிடிக்கிறன்..
      ஒரு எதிர்கால அப்துல்கலாம் இப்பொதே தெரிகிறார் ..
      நீங்க எப்ப இருந்து இப்பிடி சதீஸ்?

    31. மயில்வாகனம் செந்தூரன்.

      ஆஹா... புல்லட் கொஞ்சம் கவனமாய் இருங்க... "வயது வந்தவர்களுக்கு மட்டும்" அரசாங்கம் இப்ப தடை விதிச்சிருக்கு... ஹி...ஹி..ஹி...

      நல்ல வேள பாட்டி வந்தாங்க இல்லைன்னா என்னவாகியிருக்கும்???? //

      பார்ட்டி செட்டாகியிருக்கும்..

      இது வயதுவந்தவர்களுக்கு மட்டுமெ புரியும்... பழையகால சினிமாப்பாடல்களில் பலான விடய்ங்கள் கவித:துவமாக கூறப்பட்டதுபோல..

    32. தேஜஸ்வினி

      நல்லாருக்குன்னா //
      தாங்சுடா செல்லம்.. நீ தம்பி என்று தெரியும்.. ஆனா அந்த பெயர் என்னை அன்பு சொரிய வைக்குது..

    33. மது... கும்மிட்டியள் ஒரு கும்மு.. நட்டுவேற போல்ட்டு வேறயாகிட்டுது.. கந்தசாமி பாத்துட்டு வந்த காயப்பட் மனசில வேல் பாய்ச்சுறீங்களே நியாயாமா?ஆனால் ட்புள் மீனிங் ட்ரிபிள் மீனிங்கெல்லாம் எனக்கு தெரியாதப்பா..

      அப்பாவி முருகேசனுக்கு அப்பப்பா..

    34. ilangan
      ஆகா சுப்பர்..... ஓகோ சுப்பர்....
      எப்புடி தங்களின் ஆலோசனைக்கமைய இந்த பின்னூட்டம் //
      இதைத்தான் பொல்லு க்குடுத்து அடிவாங்கிறதென்பார்களோ? நடத்து ராசா நடத்து..

    35. மாதேவி
      ” எயிட்சுடா பேராண்டி எயிட்சு.. எகிறிட்டு ஓடிறு... ”

      பிடியுங்கள் கப்பை. //

      மாதேவி... நல்லபெயர்...
      அவசரத்தில் மூதேவி எனறு வாசித்து விட்டேன்.. :(

      அது கிடக்கட்டும் கப்பில என்ன போட்டு தருவியள்? வத்தளை கிழங்கு சிப்ஸ் எண்டால் நான் ஆஸ்பததிரி புக் பண்ண வேண்டும்.. கெதியன சொல்லுங்கள்.. ;)

    36. ///என்னத்தை சொல்றீங்கள் தல... உண்மையிலேயே தூக்கிவாரிப்ப போட்டதா?///
      மது....நக்கல்தானே அது...

    37. என்னன்னவோ சொல்லுதிய நமக்கெல்லாம் இப்புடி ஒரு அனுபவம் வாய்கலேயப்பு

    38. ஆமா இதெல்லாம் உண்மையா? இப்படி கூட நடக்குமா? என் பக்கத்தில ஒரு பொம்புள புள்ள கூட உட்காருது இல்லனு மதுவின் பதிவ பார்த்து கவலைப்பட்டால் இப்படியும் விஷயம் இருக்கா? நல்ல வேளை

    39. Kiruthikan Kumarasamy
      ///என்னத்தை சொல்றீங்கள் தல... உண்மையிலேயே தூக்கிவாரிப்ப போட்டதா?///
      மது....நக்கல்தானே அது...//

      நீங்கள் சீரியசாத்தான் கேக்குறீங்களா? :-O

    40. முகிலன்
      என்னன்னவோ சொல்லுதிய நமக்கெல்லாம் இப்புடி ஒரு அனுபவம் வாய்கலேயப்பு//
      என்னப்பா அமெரிக்கா வில இருந்துட்டு உப்பிடி சொல்றங்க? ஓஹோ! தங்கமணி என் பதிவுங்கள படிக்கிறவங்குளோ? ம்ம்! நடக்கட்டும் நடக்கட்டும் :)

    41. யோ வாய்ஸ்
      ஆமா இதெல்லாம் உண்மையா? இப்படி கூட நடக்குமா? என் பக்கத்தில ஒரு பொம்புள புள்ள கூட உட்காருது இல்லனு மதுவின் பதிவ பார்த்து கவலைப்பட்டால் இப்படியும் விஷயம் இருக்கா? நல்ல வேளை //
      கொழும்பில கொஞ்ச நாள் குப்பை கொட்டி பாருங்க பாஸ்.. ஐயோ வாய்ஸ் எண்டு உங்க பெயரை மாத்திடுவீங்க..ஹிஹி;

    42. நம்ம பக்கமும் கொஞ்சம் வந்துட்டு போறது !!!!

    43. //ஓட்டோக்காரன் மல்லி மல்லி எண்டு கத்தினதையும் பெட்டையின் சிரிப்புயைம் கேக்காமல் ஓடின ஓட்டத்த தமயந்தி தர்சா பாத்திருந்தாளெண்டால் கிடைச்ச கப்பெல்லாத்தையும் கொண்டுுபோய் குப்பையில கொட்டியிருப்பாள்..//

      அந்தக் காட்சிய என்னால பாக்க முடியாம போச்சுதே...
      உத தான் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது எண்டிறது...

    44. பாஸ் இனி உங்க ஆலோசனைப்படி நான் நடக்க தயாரில்லை. என் "தமிழில் பிழை" என்ற பதிவை கூகிள் குழுமத்தில் இணைக்க சொன்னீர்கள் அதன் படி நானும் இணைத்தேன் எல்லோரும் என்னை நார் நாரா கிழிக்கிறாங்க. நீங்க சீரியஸ் பின்னூட்டம் வீடும் போதே நான் சுதாகரிச்சிருக்கணும்.இப்ப தமிழுக்கு எதிரியாயிட்டன்.

    45. நேற்று ஹம்டன் ஒழுங்கையில் சிந்து கபே உணவகத்தில் பதிவர் ஒருவர் கொஞ்சம் சுட தனது பதிவுகளுக்கு சம்பந்தமில்லாதவாறு அமைதியின் உருவமாக சாப்பாட்டை புல்லட் வேகத்தில் இறக்கிக் கொண்டிருந்தார். யாரென்று உங்களுக்கு தெரியுமா?
      தெரிந்தா சொல்லுங்கோ...

    46. அந்தக் காட்சிய என்னால பாக்க முடியாம போச்சுதே...
      உத தான் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறது எண்டிறது...//

      ம்ம்... நல்ல காலம் போட்டோ எடுத்து பேஸ்புக்கில போடாம விட்டாங்கள்..

      நேற்று ஹம்டன் ஒழுங்கையில் சிந்து கபே உணவகத்தில் பதிவர் ஒருவர் கொஞ்சம் சுட தனது பதிவுகளுக்கு சம்பந்தமில்லாதவாறு அமைதியின் உருவமாக சாப்பாட்டை புல்லட் வேகத்தில் இறக்கிக் கொண்டிருந்தார். யாரென்று உங்களுக்கு தெரியுமா?
      தெரிந்தா சொல்லுங்கோ...//

      என்னுடைய பின்னூட்டமொன்றில் அந்த கடையை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.. ;)

      -----------------------------------------------------------------------
      அதுசரி புல்லெட் , நளபாகத்தில பால்அப்பம் என்ன விலை ?
      இப்ப சாய் கணேஷாவ(ராஜ் பவான் ) மூடிட்டதால வெள்ளவத்தைல பால் அப்பத்துக்கு தட்டுப்பாடு.//


      யோவ் யாரய்யா அது நளபாக அப்பத்த சாயிகணேசா நாறல் அப்பத்தோட ஒப்பிட்டது.. நளபாகம் பெஸ்ட்.. அடுத்தது அதுக்கு முன்னால இருக்கிற கடை ஹம்சாவோ என்னவோ! நளபாகம் புட்டு முட்டை கொத்தும் புட்டு நெத்தலிக் கொத்தும் சாப்பிட்டதில்லயோ? என்ன ஆளய்யா நீர்? வெள்ளவத்தையிலருந்து என்ன செய்யுறீர்?

      மற்றது 33வது லேனில் நல்லா உள்ளுக்க இருக்கும் புட்டுக்டையில புட்டும் வெங்காயப்பொரியலும் போடுறான் எக்ஸ்ராவா ஒரு கத்தரிக்காய் வதக்கல் கறியும் எடுத்து கலந்து அடிச்சுப்பாரும்.. சும்மா நாக்கு சுழரும்..

      அப்பிடியே ஹம்டன் லேனில டபிள்யு.ஏ.சில்வா மாவத்தைக்கு கிட்ட ஒரு சைவக்கடை இருக்கு.. வலு சின்னன்.. ஆனா புட்டு, இடியப்பம் , இட்டலி, வடை, றோல்ஸ், வாய்ப்பன், பரோட்டா எல்லாம் சுப்பர்

      றொலக்சில பொரிச்ச கோழி பிரியாணி சாப்பிட்டு முடிய ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் குடிக்கிறதுல ஒரு சுகம்..

      ஸ்டேசன் றோட்டில யாழ் கடையில குத்தரிசி சோறும் மரக்கறி எல்லாம் போட்டு மீன் சாப்பாடு எடுக்கிறதில ஒரு சுகம்..

      அபிராமியில சூடா போளி, றோயலில சொக்லட் கேக் , மயூரியில மட்டன் , சென்னை ரெஸ்டூரண்டில பானிபூரி பேல்பூரி , செட்டிநாட்டில ஸவீட்கோன் சூப் இப்பிடி சொல்லிட்டே பேகலாம்.. சாப்பாடு சம்பந்தமா ஏதெனுமெண்டா என்னட்ட கேளுங்க


      -----------------------------------------------------------------------


      ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் இருந்த பயம் சிலருக்கு மட்டுமே இப்போது தெரியும் ... பின்னர் ஒரு பதிவாக போட்டு விடுகிறேன்..

    47. ilangan
      எல்லோரும் என்னை நார் நாரா கிழிக்கிறாங்க. நீங்க சீரியஸ் பின்னூட்டம் வீடும் போதே நான் சுதாகரிச்சிருக்கணும்.இப்ப தமிழுக்கு எதிரியாயிட்டன். //



      ஆஹா சூப்பர் ஓஹோ சூப்பர்...

      ஹிஹி! என்னுயை ப்ரெண்ட்சுக்கு நான் சீரியசாய் பின்னூட்டியதையும் பயல் நம்பி உரலுக்குள் தலைவிட்டதையும் சொல்லி அன்று சிரித்தேன்.. இப்போதாவது புரிந்ததே? சரி சரி.. ஏதோ பேமசாகிவிட்டாய்தானே? அடிவாங்கித்தான் அரசியல்வாதியாகலாம்.. அதே போல பரிசுகெட்டுத்தான் பதிவராகலாம்..

    48. இது தானா அந்த பப்ளிக்குட்டி நல்லா சொன்னீங்க போங்க

    49. நீங்க சாப்பிடும் போது ஜீன்ஸ் அ பாத்தன், கிளிஞ்சு இருக்கேல.
      மாத்திற்றீங்களா??? ;)

    50. This comment has been removed by the author.
    51. உங்கள் பிறந்தநாள் அன்று இந்தப் பின்னூட்டம் இடவேண்டும் என்று காத்திருந்தேன்..

      இதன் மூலம் அந்த இளவரசிக்கு (அதான் புல்லட்டின் கனவுக் கன்னிக்கு) நீங்கள் சொல்லவருவது தானாக வந்தாலும் தலை தெறிக்க ஓடுமளவுக்கு நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவன் என்று தானே..

      நாங்க நம்பிட்டோம்..;)

      அது சரி பதிவர் சந்திப்புக்குப் பிறகு முதலில் cow boy மது , இப்போ புல்லட்.. இனி வந்தியா?

      எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே..

      இதுக்குள்ளே விழிப்புணர்வுப் பிரசாரம் வேறு..
      யப்பா தாங்க முடியல சாமி..

    52. ஆமாம் நான் தான் என் விழிப்புணர்புப் பதிவுதான் இது.

      சற்றடே நைட் பார்ட்டிக்கு போலாம் வர்றியா? - 18+

      http://enularalkal.blogspot.com/2009/09/18.html

    53. @loshan , Vanthiya thevan சமுதாயத்தை தூய கண்ணூடே நோக்கிஅங்கு காணப் படும் கறைகளை கழுவப்பாடுபடும் எம்மீது , பிகரை பிடிக்க பிளான் போடும் கபட வேடதாரிகள் என சாணியடிக்கும் சிலரை வன்மையாக கண்டிக்கிறோம்..

    54. ப்ளீஸ் முதலில் கண்டாக்டரைப் பாருங்கள்.

    55. நல்ல வேளையாக தப்பித்தீர்கள். இப்படி நம்பவே முடியாத வகையில் இளம்பெண்கள் பலர் கொழும்பில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

      நீங்கள் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் அனுமதி தந்தால் சொல்கிறேன்.

    56. சொல்லுங்க சொல்லுங்க.. எல்லாரும் ஆர்வமாயிருக்கம்.. ;-)

    57. இளம் பெண்கள் மீதிருக்கும் தீராத ஆவல் காரணமாக நீங்கள் அந்தப் பெண்ணோடு உதவிக்கு வந்த ஆட்டோவில் ஏறிப் பயணித்திருப்பீர்கள்.

      உங்களுக்குத் தெரியாத சந்துபொந்துகளில் நுழைந்து ஆட்டோ போயிருக்கும்.

      மனதில் ஒருபக்கம் பயமிருந்தாலும் பெண் மயக்கம் அடுத்தகணங்களை நினைத்து உங்களை திடகாத்திரமாக வைத்திருக்கும்.
      பல கற்பனைகளில் நீங்கள் மிதந்து வருவீர்கள். உங்கள் ஆவலைத் து}ண்ட அந்தப் பெண்ணும் சில்மிஷங்களில் ஈடுபட்டுவருவாள்.
      நாய்கள் கூட உலாவவிரும்பாத அறையொன்றுக்கு உங்களை அழைத்துவந்துவிட்டு கூடுதலான பணத்தை உங்களிடமிருந்து வசூலித்து திரும்புவார் ஆட்டோ நபர்.
      பணம்போனால் பரவாயில்லை இங்கு தனம் நிற்கிறதே என ஆர்வத்தோடு அவளை அணுகிய சில நிமிடங்களில் ஐந்தாறு தடியர்கள் அங்கு தடாலடியாக வருவார்கள். தங்களை பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர்கள் உங்களை தீவிரமாக விசாரித்து அதட்டுவார்கள்.
      பின்னர் உங்கள் மணிப்பர்சை பறித்து அவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொள்வார்கள். முடிந்தால் ஏ.ரி.எம் அட்டையிலுள்ள பணத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.
      பயத்தில் குலைநடுங்கிப்போகும் “புல்லட்” என்ற நபர் தப்பித்தால் போதும் என எப்படியோ வெளியே வந்துசேர்ந்து போன இடம்தெரியாமல் அதிகாலையில் வீட்டுக்கு வருவார்.

      இளம்பெண்,ஆட்டோ நபர்,ஏனையவர்கள் இணைந்து மொத்தப் பணத்தை பிரித்துக்கொள்வார்கள். இளம்பெண்ணுக்கு சற்று அதிகமாகக் கிடைக்கும்.

      நல்லவேளை தப்பித்தீர்கள்.
      உங்களுக்கு நல்லகாலம்தான் போங்கோ.