பான்கேக் பெருவிழா alias தோசைத்திருவிழா: டோட்டல் டாமேஜூ




    எமது கொன்வகேசன் முடிந்த அன்று நான் ஆதிரை இன்னும் சிலர் குடும்பத்தருடன் மதிய உணவுக்காக ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றிருந்தோம்.. அங்கு ஏற்கனவே பல குடும்பத்தவர்கள் சாப்பிட அமர்ந்திருந்தார்கள்.. அத்துடன்அவர்கள் ஏற்கனவே எனக்கு பலமுறை அறிகமானவர்கள்.. வெள்ளவத்தை கானில் வசிக்கும் மாட்டு ஈயும் அவர்தம் சின்ன வீட்டு செட்டப்புகளான வீட்டு ஈயும் குடும்பத்தாருமே அங்கு இடமெல்லாத்தையும் பிடித்து வைத்திருந்தார்கள்.. எங்களுக்கு முன்னமே வந்திருந்த அவர்களை , நாங்கள் வருவதை கண்டதும் அவசர அவசரமாக ரெஸ்டாரண்டிலிருந்த தூங்குமூஞ்சி சேவர்கள் சற்றேனும் மனர்ஸ் இன்றி துரத்திக்கொண்டிருந்தார்கள்…


    உள்ளே அமர்ந்ததும் ஒருத்தன் வந்து கொட்டாவி விட்டபடி என்ன வேணுமென்றான். நாங்கள் தம்பி முதலிலஏசியை போடுமென்றதும் ஆந்தை போல விழித்தவன் சுவிச்சை கஷ்டப்பட்டு தேடி தயங்கி தயங்கி அதைபோட்டான்.. அது ஏதோ பயங்கர சத்தம போட்டு புகை எல்லாம் விட்டு பொட் என்ற சத்தத்துடன் போய்விட்டது.. எங்களுடன் அமர்ந்திருந்த
    ஒரு பெரியவர் யாழில் 70களில் ஓடிய யாழ்தேவியை அது ஞாபகப்படுத்தியதாக சொல்லி கண்ணீர் விட்டு கர்சீப்பால் துடைத்தார். அப்படியே பானை போடச்சொன்னால் அதுவும் முக்கி முக்கி ஓடியது.. கடைசியாக மெனு வந்தது..


    பள்ளிக்குடத்தில படிச்ச கணக்கு புத்தகம் மாதிரி மெனு செம பெரிசு.. அடடே! நல்ல ஹோட்டல்தான் பொல நிறைய வரைட்டியா சாப்பிடலாமோ என்று நினைத்தபடி ஒவ்வொன்றாக ஓடர் பண்ணினோம்.. முதல் ப்ரோன் றைசும் வெஜ் ரைசும் ஓடர் பண்ணியாச்சு.. பிறகு டிஷ் ஓடர் பண்ணப்போன போதுதான் காமெடி.. மட்டன்.. இல்லை நண்டு இல்ல மீன் இல்ல கணவாய் இல்ல .. இல்ல ... இல்ல
    மெனுவில கடைசி பக்கம் வரைக்கும் வந்தாச்சு.. அப்ப என்னதான்யா இருக்கு? போன மாதம் உரிச்ச சிக்கன் மட்டும்தான் இருக்கு எனறு பதில் வந்தது.. கடைசியாக குடிக்க ஜஸ்கிரீமும் இல்லை.. புறுபுறுத்தபடி சாப்பிட்டு விட்டு எல்லோரும் வெளியில் வந்து கலைந்து போனோம்.. மாட்டு ஈயும் வீட்டு ஈயும் மீண்டும் உள்ளே போய் ஓடர் செய்ய ஆரம்பித்தன. அன்றைக்கு பின் நான் அந்த கடை பக்கம் தலை வைத்து படுத்ததில்லை.. யாரும் போவதாயும் அறிந்ததில்லை.. ஆனால் இன்றோ நல்லூர்திருவிழா தோற்றுவிடும்.. சாரிசாரியாக சனங்கள் ரஸினி பட ரிலீஸ் போல திரண்டிருந்தனர்.. காரணம் அங்கு இடம்பெற்ற திருவிழா.. உலகவரலாற்றின் முதன்முறையான தி கிரேட் தோசா திருவிழா..


    திருவிழா நேற்று வெள்ளி மாலை 6 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. இதற்கு திறப்பு விருந்தினரான அழைக்கப்பட்டவர் எமது சக பதிவர் லோசன் ( லோசண்ணர் ) .. நல்ல தோசை போல வட்டமான வெள்ளை முகத்தை உடையவரும் உணவு உண்பதை குறிக்கும் வகையில் உடலமைப்பும் உள்ளவரான அவரை தெரிவு செய்த திருவிழா கமிட்டியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. காலை வேலைக்கு கள்ளமடித்து விட்டு மாலை எப்படி ஒரு 20 தோசையாலது தின்பது என்று பாத்ருமில் இருந்து ப்ளான் போட்டுக்கொண்டிருந்தார்.. அங்கே போய் ஒரு பேப்பர் தொசையை கிழித்து விழாவை ஆரம்பித்து வைத்ததும் 20 தோசையை ஓடர் பண்ணிட்டு சாப்பிட அமர்ந்தவருக்கு அதிர்சசி .. அங்கால சேரன்கிரிசும் மருதமூரானும் ஆளாளுக்கு 4 தோசைகளுடன் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.. ஆடு திருடிய கள்ளர் போல் முழித்த மூவரும் பிறகு வந்து இந்த கதையை வெளியில் அவிழ்த்து விட பதிவுலகம் பரபரப்பானது..

    125 ரூபாய்க்கு அன்லிமிட்டட் தோசையாம்.. 25 விதமான தேசையாம்.. செம டேஸ்ட்டாம்.. செய்தி இரவே பரபரப்பாக ஜிமெயில் ட்விட்டர் கும்மிகளில் பரவியது.. விளைவு காலை 6 மணிக்கு வந்தியதேவர் ரூம் வாசலில் நிற்கிறார்.. நான் தட்டுதடுமாறி தூக்கத்தால் எழுந்து கதவை திறந்தால் “ கெதியன வாரும் இப்பவே போனாத்தான் இடம்பிடிக்கலாமம் ” . திருவிழா காலை 6 மணிக்கு என நினைத்து மனுசன் கொட்டகேனாவிலிருந்து எலாம் வச்சு எழும்பி பஸ் பிடித்து வந்திருக்கிறது தோசை சாப்பிட.. காலை மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்டுட்டு போகலாமென்று வந்திருந்த அவருக்கு அது மாலை 6 மணி எனச்சொல்லி தேற்றுவதற்கு படாத பாடு படவேண்டியதாயிற்று.. பின்னர் மாலை ஆறுமணிக்கு இருவரும் ரூமிலிருந்து ரெஸ்டாரண்டுக்கு போனால் ஆதிரை நின்றார்.. கூடவே எம் கம்பசில் கூட படித்த பெடியங்கள்.. வந்தியரை அறிமுகம் செய்து விட்டு உள்ளே போனால் செத்தவிட்டுக்கு அடிப்பது பொல ஒரு தகரக்கொட்டிலின் கீழ் ஜந்தாறு ப்ளாஸ்டிக் மேசைகள்.. அதன் மேல் யாருடையதோ பழைய வேட்டியை உருவி விரித்திருந்தார்கள்.. உள்ளே போன எமக்கு ஒரே அதிர்ச்சி..


    ஒரு கும்பலாக இளம்பெண்கள் ஒரு மேசையில் அமர்ந்திருந்தார்கள்.. அட அநியாயமே வெள்ளவத்தை பொம்பிளைகளுக்கு அச்சம் மடம் நாணம் பைப்பு எல்லாம் எப்பவோ புடுங்கி விட்டிருந்தது.. பாரதி கண்ட புதுமைப்பெண்கள் தோசை சாப்பிடுவதற்கு அமர்ந்திருந்த அழகில் சொக்கியவாறு நாமும் ஏதோ ஒரு வேட்டியை சுற்றி அமர்ந்தோம்.. வேட்டியில் வெள்ளையாக இருந்த இடம் உலக மப்பில் கண்டங்களை ஒத்திருப்பதாக ஆதிரை அறிவித்தார்.. அதை தொடர்ந்து நாம் எல்லாரும் 125 ருபா படி டிக்கட் எடுத்துவிட ஒருவர் மட்டும் எடுக்கவில்லை.. அவர் சொன்னார் நீஙகள் எல்லாம் எடுத்து எனக்கு தேசை ஒவ்வொண்டு தாங்க காசு மிச்சம் என்று.. அவரது தமிழ் குணாம்சங்களை மெச்சியவாறு நாம் விழாவுக்கு வருபவர்களை ரசிக்கலானோம்..



    காலையிலிருந்து சாப்பிடாமலிருந்த வந்தியோ தோசை மாவை கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.. நேரமோ 7 மணியாகி விட்டது .. அப்போது எம்மூரில கொத்து பரோட்டா போடுபவன் பொல ஒருத்தன் விறுவிறு என்று வந்தான்.. அனைவரும் அவன்தான் தோசை சுடப்போகிறானோ என்று ஆவலுடன் பாரக்க அவன் மூலையாக இருந்த டிஜேக்குரிய இடத்தில் போய் நின்றான்.. அடுத்த பதினைந்து நிமிடத்தில் டிக்கட் கொடுப்பவர் உட்பட கொட்டிலில் இருந்த அனைவர் எழும்பி ஓடிவிட்டிருந்தனர்.. நாமும் புதுமைப்பெண்களும் சீட்டைவிட்டு அசையாமல் இருந்தோம்.. ஏனெனில் 125 ரூபாய்க்கு அன்லிமிட்டட் தோசையென்று வரும்போது இப்படியான சித்திரவதைகளை தாங்கித்தானேயாகவேண்டும்.. இவ்வளவு செலவழித்து செயபவர்கள் பிடிப்பதாயின் ஒரு புரோபசனல் டிஜேயை பிடிக்க வேண்டும் .. இல்லாவிட்டால் தனிய பாட்டை போட்டுவிடலாம்.. அதைவிட்டுட்டு யாரோ ஒரு கேப்மாறியை பிடித்துவந்து வாறவனின் காதுச்சவ்வை ஏன் கிழிப்பான்? தாளம் லயம் பற்றி எதுவித அறிவுமில்லாத அந்த சூனியம. நடுவில் ஒரு பாட்டை சுத்துகிறேன் பேர்வழியென்று இழுத்த இழுப்பில் ,முட்டை இட்ட கோழி போல ஒரு முறை கத்திவிட்டு பாட்டுப்பொட்டி மண்டையை போட்டுவிட்டது.. அனைவரும் ஆசுவாசப்படுத்தி மட்டன் கீமா , சிக்கன் மசாலா , நண்டு கீமா , மட்டன் மசாலா என்று மண்டையில் பளான் பண்ணியபடி மீண்டும் வந்தமரவும் தோசை சுடுபவர் வந்து சேரவும் சரியாக இருந்தது..


    125 ருபாய்க்கு க்கு தோசை என்றவுடன் குடும்பத்துடன் ஓடிவந்த பெண்டுகள் போட்டிருந்த மேக்கப் மட்டும் 3000ரூபா வரும் போல இருந்தது.. அதில ஒருவர் நசனல் எல்லாம் போட்டு கைநிறைய மோதிரத்துடன் வந்திருந்தார்.. திருவிழா என்றவுடன் கோயில் திருவிழாவுக்கு பொவது போல வந்திருந்த அவர்களை கண்டு வந்தியர் எரிச்சல் பட்டார்.. தானும் பட்டு வேட்டியில் அழகாக இருப்பேனென அனைவருக்கும் தலையிலடித்து சத்தியம் செய்துகொண்டிருந்தார்..


    தோசை அடுப்பு மூட்டப்பட்டதும் ஒரு அரும்பு மீசை கூட்டமும் புதுமைப்பெண்கள் 100 மீட்டர் ஓட்டம் ஓடுவது பொல ஓடி அடுப்புக்கு முன்னால் போனாலும் பெண்டுகளுக்கு தோல்வி.. வாலிபர்களின் முகத்தில ஒரு வெற்றிக்களை.. தோசை சுடுபவன் முகத்தில் பயங்கர அதிருப்தி.. பெண்கள் ஜெயிக்க வேண்டுமென்று நினைத்திருப்பான் போலும்.. தோசை சட்டி மீது வேண்டாவெறுப்பாக தண்ணீரை ஊற்றி ஒரு விளக்குமாறால் சளார்புளார் எனறு ஒரு இழுப்பு இழுத்தான்.. அவ்வளவுதான்.. ஆஸபத்திரி கழிப்பறையை கூட்டும் ஈர்க்கு விளக்குமாறு போலிருந்த அதனை திரைப்படங்களில் மட்டும் பார்த்திருந்த அரும்பு மீசைகள் ஙே என்று ஒருவரை ஒருவர் பார்த்து முழியலானார்கள்.. ( இலங்கையில் தோசைசட்டியை விளக்குமாறால் கூட்டும் பழக்கம் இல்லை) .. பின்னர் சமாளி;த்தவாறு பின்வாங்கி சென்று தத்தம் கதிரையில் இருந்து திகைப்பு நீங்காமல் அரவருப்புடன் டிஸ்கஸ் பண்ணலானார்கள். ஆனால் புதுமைப்பெண்களோ சற்றும் அசராமல் முன்னேறிச்சென்று தோசைக்காரணிடம் கதையை குடுத்தார்கள்.. அவனும் ஜொள்ளுவடிய அனைவருக்கும் கோப்பைகளை எடுத்து கொடுத்தான்.. பிறகென்ன நாம் பெண்களின் பின்னால் சென்று குழும எல்லாரும் எம் பின்னால் குழும கூப்பன் கடை போல ஆகிவிட்டது தோசைச்சாவடி.. எல்லாரும் மூன்று நான்கு வரைட்டிகளாக தோசையை எடுத்து சாப்பிட்டு விட்டு திருப்தியாக கைகழுவிவிட்டு வர வரிசையின் இறுதியில் (ஒரு 250பேர் இருப்பார்கள்) புதுமைப்பெண்கள் சட்டியை வழித்து நக்கியவாறு இரண்டாம் போசனுக்காக நின்றிருந்தார்கள்.. அச்சம் மடம் நாணம் பைப்பு மட்டுமல்ல வெக்கம் மானம் சூடு சுரணையும் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தோசைக்காரனின் கரண்டியை வாங்கி தன் தலையில் அடித்த வந்தியர் வேட்டியில் தான அழகாயிருப்பேன் என மறுபடியும் வலியுறுத்தி விட்டு விடைபெற்றார்.. அதற்குள் டிக்கட் எடுக்காமல் எல்லாரும் தோசை தருவார்கள் என்று நம்பி நின்றிருந்தவரை கவனித்தமாதிரியே காட்டாமல் எல்லாரும் ஒரு கட்டு கட்டியதில் செம கடுப்படைந்திருந்தவர் ஒரு விளாம்பழ ஜூஸ் ஓர்டர் செய்தார்.. பில் 200 ரூபா வந்தது.. அழுதழுது கட்டிவிட்டு எல்லாரையும் வைது விட்டு அவரும் விடைபெற்றார்..

    நாமும் வயிற்றை தட்டிவிட்டு ஆரவாரமாக கதைத்தவாறு புறப்பட்டோம்.. தெரிவில் சாரிசாரியாக சனம் தோசை சாப்பிட வந்து கொண்டிருந்தது.

    குறிப்பு: இன்றுடன் தோசை;திருவிழா முடியுது.. உணவு பரவாயில்லை.. 125 க்கு லாபம்.. (மருதமூரானுக்கு பிடிக்கலயாம்.. , ஆனால் வந்தியும் ஆதிரையும் விரல் சூப்பியதில் விரலில் காவாசியை காணவில்லையாம்..) சிறிதாக கியுவில் நிறக வேண்டும்.. மற்றும்படி பிரச்சனை எதுவுமில்ல.. முடிந்ததும் நான் போய் அடுத்த திருவிழா எப்ப என்று ஓனரை விசாரித்தேன்.. பிரியாணி திருவிழா விரைவில் இருப்பதாக கூறினார்.. தொடர்ந்து இப்படியான சேவைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கொண்டு நட்டத்தில் போகாமல் நீடுழி வாழவேண்டு பிரார்தித்த வண்ணம் இதை எழுதுமாறு கரச்சல் செய்த வந்தியருக்கு நன்றியை கூறியபடி விடைபெறுகிறேன்..


    20 Responses

    1. ////சக பதிவர் லோசன் ( லோசண்ணர் ) .. நல்ல தோசை போல வட்டமான வெள்ளை முகத்தை உடையவரும் உணவு உண்பதை குறிக்கும் வகையில் உடலமைப்பும் உள்ளவரான அவரை தெரிவு செய்த திருவிழா கமிட்டியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. காலை வேலைக்கு கள்ளமடித்து விட்டு மாலை எப்படி ஒரு 20 தோசையாலது தின்பது என்று பாத்ருமில் இருந்து ப்ளான் போட்டுக்கொண்டிருந்தார்.. அங்கே போய் ஒரு பேப்பர் தொசையை கிழித்து விழாவை ஆரம்பித்து வைத்ததும் 20 தோசையை ஓடர் பண்ணிட்டு சாப்பிட அமர்ந்தவருக்கு அதிர்சசி .. அங்கால சேரன்கிரிசும் மருதமூரானும் ஆளாளுக்கு 4 தோசைகளுடன் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.. ஆடு திருடிய கள்ளர் போல் முழித்த மூவரும் பிறகு வந்து இந்த கதையை வெளியில் அவிழ்த்து விட பதிவுலகம் பரபரப்பானது..////

      புல்லட்……. “முட்டைத்தோசையும், 125 ரூபாய் இழப்பும்” என்ற தலைப்பில் பதிவொன்று எழுதவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவே நினைத்திருந்தேன்… ஆனாலும், எனக்கு பதிவு எழுதுவதென்பது மருந்து சாப்பிடுவது போல பயங்கரமான வேலை (சோம்போறி என்று சொல்லலாம்). அதுதான் அந்த தலைப்புடன் பதிவுவை சற்று தாமதமாகவே எழுதுகிறேன். ஏனெண்டால் தங்களின் பதிவே என்னை எழுத அதாவது பதிலளிக்க தூண்டியுள்ளது. அதற்காக தங்களுக்கு நன்றி. இதோ……..

      http://maruthamuraan.blogspot.com/2009/09/125.html

    2. //அங்கால சேரன்கிரிசும் மருதமூரானும் ஆளாளுக்கு 4 தோசைகளுடன் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.. ஆடு திருடிய கள்ளர் போல் முழித்த மூவரும் பிறகு வந்து இந்த கதையை வெளியில் அவிழ்த்து விட பதிவுலகம் பரபரப்பானது..//

      அதெல்லாம் ஒன்றுமில்லை.மருதமூரானுக்கும் சேர்த்தெடுத்த ரிக்கெட்காசை எப்படிக்கேட்பது என்று தான் முழுசிக்கொண்டிருந்தேன்.அந்தக்காசை என்னைக்கேட்காமல் வைத்திருப்பது எப்பிடி என்று மருதமூரான் யோசித்துக்கொண்டு தனக்கு தெரியாத தோசையின் பெயரையெல்லாம் சம்பந்தமில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.லோஷனைப்பார்ததும் யோசனை இன்னும் கூடிவிட்டது.மருதமூரானை நச்சரித்து தோசை உறைப்புக்கு ராமகிருஷ்ணபவனில் பிளேன்ரி குடித்தபிறகு தான் மூச்சு வந்தது.

    3. நான் தோசை சாப்பிடச் சென்றது உண்மைதான். ஆனால் புல்லட் எழுதியதுபோல் காலை 6 மணிக்கு நான் செல்லவில்லை. ஒரு ஐந்தரைமணிபோல் வெள்ளவத்தைக்கு சென்றபோது புல்லட்டும் ஆதிரையும் எனக்கு எடுத்த கோல்களில் எண்ணிக்கை ஆதர பூர்வமாக வெளியிடப்படும். அதிலும் நான் புல்லடின் ரூமில் புல்லட் அண்மையில் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று திருடிவந்த பலூன்களைப் பார்வையிட்டுக்கொண்டிந்த சில நிமிடங்களில் ஆதிரை எம்மிருவருக்கும் கிட்டத்தட்ட 10 தடவைகளுக்கு மேல் "கெதியா வாருங்கோ இடம் போகப்போகின்றது" எனப் பதறியபடி எடுத்த அழைப்புகளும் வெளியிடப்படும்.

      மசாலாத் தோசையும், காளான் மசாலாவும் நன்றாக இருந்தன. அத்துடன் ரொக்கட் ஸ்பெசல் என சாதாரண தோசையை பலசரக்கு கடைகளில் சரை சுற்றுவதுபோல் சுற்றித் தந்தார்கள்.

      நான் அதிசயித்த விடயம் அந்த இளம்பெண்கள் தான் எப்படி அவர்களால் முதலில் 4 தோசை சாப்பிட்டுவிட்டு அடுத்த க்யூவில் நிற்கமுடிந்தது.

    4. // மாலை ஆறுமணிக்கு இருவரும் ரூமிலிருந்து ரெஸ்டாரண்டுக்கு போனால் ஆதிரை நின்றார்//

      ஆதிரையின் பார்வை பக்கத்து பிளாட் மேல்மாடத்தில் நின்ற அந்த அழகிய பெண்ணில் மேல் இருந்த கதையை ஏன் மறைத்தனீர்கள்.

      //ஒரு கும்பலாக இளம்பெண்கள் ஒரு மேசையில் அமர்ந்திருந்தார்கள்.//

      அந்த இளம் பெண்கள் மெல்லிய இடைகொண்டவர்கள் என்ற உண்மையையும் புல்லட் மறைத்துவிட்டார். அவர்களைப் பார்த்தால் அரைவாசித் தோசை சாப்பிடக்கூடிய உடல்வாகு ஆனால் முதல்முறை 4 தோசை சாப்பிட்டு இரண்டாவது தடவை தோசைக்கு வரிசையில் நின்றபோது எனக்கு ஹார்ட் நின்ற கதையை ஏன் சொல்லவில்லை.

      //வந்தியர் எரிச்சல் பட்டார்.. தானும் பட்டு வேட்டியில் அழகாக இருப்பேனென அனைவருக்கும் தலையிலடித்து சத்தியம் செய்துகொண்டிருந்தார்..//

      பேஸ்புக்கில் என் வேட்டிப்படம் இருக்கிறது சென்று பாருங்கள்.

    5. //புல்லடின் ரூமில் புல்லட் அண்மையில் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று திருடிவந்த பலூன்களைப் பார்வையிட்டுக்கொண்டிந்த சில நிமிடங்களில்//
      அந்த சிறுவர்களிடம் பறித்தவை தானே? அதனால் தானே கல்யாண வீட்டுக்கு வந்த சிறுவர்களுக்கும் உங்களுக்கும் லடாய் ஏற்பட்டது? ;)

    6. அது சரி உதெங்க நடக்குது???? எனக்கு தெரியாம போச்சே!!!

    7. //ஆதிரை எம்மிருவருக்கும் கிட்டத்தட்ட 10 தடவைகளுக்கு மேல் "கெதியா வாருங்கோ இடம் போகப்போகின்றது" எனப் பதறியபடி எடுத்த அழைப்புகளும் வெளியிடப்படும்.

      இது நடந்திருக்கலாம் என என்னால் ஊகிக்க முடிகிறது.

    8. என்ன புல்லட் அடுத்த திருவிழாவ விரைவில வைக்கச் சொல்லி கஸ்ரப்படுத்துறிங்களாம் என்று அறிந்தேன் உண்மையா?

    9. @பால்குடி
      //இது நடந்திருக்கலாம் என என்னால் ஊகிக்க முடிகிறது.

      ஊகங்களுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. (கலைஞர் பாணியில்...)

    10. @வந்தியத்தேவன்
      //ஆதிரையின் பார்வை பக்கத்து பிளாட் மேல்மாடத்தில் நின்ற அந்த அழகிய பெண்ணில் மேல் இருந்த கதையை ஏன் மறைத்தனீர்கள்.

      பார்த்தீங்களா... என் பார்வை பட்டதெல்லாம் அழகு கொண்டு மிளிர்கிறது

    11. @ஆதிரை
      //பார்த்தீங்களா... என் பார்வை பட்டதெல்லாம் அழகு கொண்டு மிளிர்கிறது//

      சரி சரி அமத்தி வாசிக்கவும் எங்களுக்கு உள்குத்துப் புரிந்துவிட்டது.

    12. //வேட்டியில் வெள்ளையாக இருந்த இடம் உலக மப்பில் கண்டங்களை ஒத்திருப்பதாக ஆதிரை அறிவித்தார்.. //

      உலகத்தில் கண்டங்களின் அளவு மூன்றில் ஒன்றுதானே..மீதி வேட்டி அப்ப என்ன நிறத்தில் இருந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் அடுத்தமுறை திருவிழாக்களுக்கு வரும் எம் பெண்கள் அதற்குத் தோதான நிறத்தில் ஆடைகளை இப்பவே வாங்கவேண்டுமல்லவா?

    13. பின்னூட்டியமைக்கு நன்றி மருதமூரான்.. ஆனால் விரலை சூப்பிவிட்டு சூப்பு சரியில்லை என்பவர்கள நான் நம்புவதில்லை.. எங்கே சேரன் காசைக்கேட்டுவிடப்போகிறானோ எனற பயத்தில் எழுதிய பதிவு போலவே தென்படுகிறது உங்கள் பதிவு.. ஹிஹி

    14. சேரன்.. என்ன படையப்பா என்று நினைப்பு போலும் .. செந்தில் கிடைத்ததும் வேட்டியை குடுப்பது போல குடுத்து உருவிறியளே?

    15. வந்தி வந்தி ! சரி சரி விடுங்கோ.. நீங்கள் 5.30 க்கு வந்ததை வேறு சொல்லி அவமான ப்பட வேணுமா? 6 மணிக்கு வந்ததெண்டு நாங்கள் சொன்னது சரி பாவம் கொஞ்சம் மரியாதையா எழுதுவ மெண்டு.. நீங்கள் இருட்டுக்கால அதிகா லையிலயே தடவிதடவி வந்ததை பப்ளிக்கில சொல்லி ஏன் பரிசு கெடுகுறியள்?

      வேட்டியில் வெருளி கூட அழகாக இருக்குமென்பதால் உங்கள் றிகுவெஸ்ட் நிராகரிக்கப்படுகிறது..

      நான் சும்மா நக்கலுக்கு.. வந்தியண்ணர் பொண்டிங் வைச்சு மேவி இழுத்து வந்தாரெண்டால் இந்திய மொடல்சுக்கு பேதி புடுங்கும்..

    16. கோபி... நான் சின்ப்பிள்ளை ஞர்பகமாக வைத்திருந்த அந்த பலூன்களை ஏதோ ஞாபகத்தி கசக்கு கசக்கு எண்டு கசக்கி ஒண்டை உடைத்து விட்டார் இந்த வந்தி.. சென்டிமென்ட் வால்யு தெரியாத ஆள்.. சேய்.. :(

    17. கார்த்தி.. நல்லூ் திருவிழாவை விட இது முக்கியம்.. பேஸ்புக்கில போட்டிருக்கு பாரும்.. :)

    18. பால்குடி ஆதிரை கும்மிக்கு நன்றி..ஹிஹி

    19. வாகீசன்.. நீஙகள் தான் சரியா என்னுடைய உள்குத்தை புரிஞ்சு கொண்டியள்.. மிகுதியெல்லாம் கறை எண்டு சொல்ல வந்தனான்..பின்னூட்டியமைக்கு நன்றி வாகீசன்..

    20. தோசைன்னா எனக்கு அம்புட்டு பிரியமுங்க! படத்தைப் பார்த்ததுமே....