சுட வந்த கதை..


  வழமையாக நான் தொடர்களுக்கு அழைக்கப்படுவதையோ விருதுக்கு அழைக்கப்படுவதையோ விரும்புவதில்லை.. கிடைக்கும் விருதுகளையும் தொடர்களையும் என்னுடனேயே நிறுத்திக்கொண்டுவிடுவேன்.. காரணம் எனக்கு பதிவுலகில் நட்பு வட்டம் மிகசிறிது.. ஏதாவது புது விருது வருதெண்டால் அனைவருக்கும் ஒரு சுற்று நிருபம் அனுப்புவேன்.. எவனாவது என்னை இழுத்தால் இரவில நரி வெருட்டுமென்று சாபம் குடுப்பேன்.. ஆனால் இந்த முறை நான் மறுக்கமுடியாது.. காரணம் என்னை அழைத்தது மதிப்பிற்குரிய அண்ணா சுதன் அவர்கள் (அருண்மொழிவர்மன்) ..


  ஏறத்தாழ 15 வருடங்களுக்கு பின் அவருடனான தொடர்பு கிடைத்தது எமது பதிவர் சந்திப்பினால்தான்.. அவரது கடிதம் கண்டதும் கொடிகாமத்தில் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் வடலி கிளப்பி குருத்து சாப்பிட்டதும் , முயல்வேட்டைகாரரிடமிருந்து தப்ப மூச்சிரைக்க ஓடியதும் , ஒற்றைக்கண் கிழவன் அப்பு பாண் சாப்பிடும் அழகை ரசித்ததும் , தீப்பெட்டி மருந்தில் சந்திரண் அண்ணை பட்டாசு செய்து தந்ததும் , பனங்கிழங்கு பாத்தியில் படுத்திருக்கும் அந்த கிழட்டு நாயும் , சோடியாக ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த செம்மஞ்சள் வண்ணத்திப்பூச்சிகளை ஓடி ஓடி அடித்து விழுத்தியதும் என்று நினைவுகள் சுழன்ற வேகத்தில் கண்ணில் நீர் பூத்தது..


  எத்தனைதான் எம் பெற்றோர் கஸ்டப்பட்டிருந்தாலும் அந்த காலங்கள் மிகவும் இனிமையானவை.. தமிழனாய் பிறந்ததில் எவ்வளவு திருப்பங்களுடன் வாழ்ந்துவிட்டோம்? ஏசிக்குள் இருந்து டிவியில் பொழுதை போக்குவதை சிறந்த வாழ்க்கையாக அப்போது பலர் நினைத்திருக்கலாம்.. ஆனால் வாழ்வின் ருசி வெறுங்காலில் அந்த சரளைக்கல்லில் தென்னமட்டை பற்றோடு ஓடியபோதுதான் இருந்ததென்பது இப்போதுதான் உறைக்கிறது.. என் பேரன் பொறாமைப்படுமாறு சொல்ல என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது.. சரி விடயத்துக்கு வருவோம்..  எப்படி எழுதவந்தேன்..?


  நான் 7ம் ஆண்டு படிக்கையில் சஞசீவிக்கு என் முதல் கதையை எழுதி அனுப்பினேன்.. "வீரப்பரம்பரை" என்று இடம்பெயர் காலத்தில் உள்ளே நின்று களவெடுத்த எம் ஊரான் ஒருத்தன் பற்றிய கதையை எலிகள் சொல்வதாக எழுதியிருந்தேன்... அடுத்த சனி வரும்
  அடுத்த சனி வரும் என்று பார்த்திருந்தால் இரண்டு மாதங்களாகிற்று இன்னும் வரவில்லை.. ஒரு நாள் பேப்பரில் எலியின் படம் போட்டிருப்பதாக தம்பி தூக்கிவைத்து பார்த்தபோது எனக்கு சட்டென்று பொறிதட்டியது.. பார்த்தால் என் கதை.. அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..


  வாசிப்பு


  பாலகுமாரன் , சிவசங்கரி , சுஜாதா , ராஜேஸ்குமார் என்று ஏராளமான புத்தகங்கள் நான் ஓல் வருமுன்பே படித்து விட்டேன்.. ஏல் இற்கு பிறகு நின்று விட்டது என்றே சொல்லாம்.. இப்போது அனேமாக டெக்னிகல் புத்தகங்கள் மட்டுமெ படிப்பேன்.. ஆங்கில நாவல்கள் நண்பர்களிடம் சுட்டு வைத்துள்ளேன்..
  தூக்கம் வராத நேரங்களில் அவற்றை வாசிப்பேன்..


  இணையத்தில் எழுத்து..


  அது ஒரு பெரிய கொமெடி.. ஒரு ஜாலியான செட்டுடன் சேருவதற்காக கம்பசில் பெண்களை போட்டுத்தாக்கும் ஒரு வெப்சைட் திறந்தேன்.. முதல்நாளிலேயே 325 ஹிட்.. ரகசியமாக எழுதிவந்தாலும் என் கூடவே இருந்த ஒருத்தனை பெண்கள் விழுத்தி யார் எழுதுற ஆள் என்பதை கறந்து விட்டார்கள்.. நீர் எவ்வளவு நல்ல பெடியன்.. நீரும் சேர்ந்துதான் உந்த வெப்சைட் செய்யுறது என்று நெற்று ஹொஸ்டலில கதைச்சவளயள் என்று ஒருத்தி அவனுக்கு பிடியை போட்டதும் மடப்பயல் கக்கிவிட்டான்.. பின்னர் பெண்கள் எச்சரிக்கை விடுத்தாலும் நான் அதை கண்டு கொள்வதாயில்லை..


  புலனாய்வு துப்பறிவு என்று பல நண்பர்களின் உதவியுடன் (மெயில் பண்ணப்படும் செய்திகளும் வெளியிடப்பட்டன) படு பேமசாக ஓடிக்கொண்டிருந்தது வலை.. அவ்வேளை எல்லா பெண்களும் அஞ்சி நடுங்கி எனக்கெதிராக சதிவலைகளை பின்னினார்கள். பின்னர் ஒருநாள் நான் பிழையான இடத்தில் கைவைத்து விடவே சீனியர்கள் கொந்தளித்து விட்டார்கள்.. சீனியர் ஒருவரை நம் பச் பிள்ளை ஒன்று சந்திக்க கம்பசிற்கு வெளியே ஓரிடத்தில் நின்றது என் கண்ணில் பட்டுவிட்டது.. சிக்கன் சுவை கோடி எனும் தலைப்பில் ஒரு செய்தியை போட்டு பாதாளசாக்கடையில் பரமசிவன் இருந்தாலும் பார்வதி பார்க்கப்போய்த்தானே யாக வேண்மென்று எழுதிவிட்டேன்.. அந்த அண்ணரை பாதாள சாக்கடை பரமசிவன் என்று விட்டான் என்று பெண்டுகள் சீனியரிடம் மூட்டிவிடவே நம்ம குழப்படி குருமா ஆகிவிட்டது..

  அத்துடன் சீனியர்களுடன் ஒரு கடுமையான பேச்சுவார்த்தையின் பின்பு வலை இழுத்து மூடப்பட்டது.. அப்படியெல்லாம் எழுதியதை நினைக்க இப்போது சிறுபிள்ளைத்தனமாயும் வெட்கமாயும் இருக்கிறது.. ஆனால் என்ன செய்ய? அந்தந்த வயசு.. பின்னர் பலர் பச் சைட்கள் தொடங்கி நடுநடுவில் விட்டுவிட்டிருந்தார்கள்.. நானும் படிப்பு ட்ரெய்னிங்க் என்று பிசியாகிவிட்டேன்.. நடுநடுவே கம்பஸ் புத்தகங்களுக்கு கதை கட்டுரை எழுதுவது என்று போனது..


  அதன் பின்னர் 2008 டிசெம்பரில் ஆதிரையின் கட்டுரைகளை பேஸ்புக்கில் பார்த்து நல்லாயிருந்ததால் நானும் எழுதபோவதாக ஆதிரையிடம் சகல தொழிநுட்ப உதவிகளையுமு; பெற்று ஆரம்பித்தேன்.. பதிவின் பெயர் சிங்கத்தமிழன்.. அதில் சற்று அரசியல் பற்றி ஆராய்ந்த போது ஆதிரை தணிக்கை செய்யுமாறு அறிவித்து சிலபல தகவல்களை கூறி மிரட்டியதும் நான் பதிவை அழித்துவிட்டேன்.. பின்பு சரி என்னுடைய வழமையான பாணிககு வருவோமென்று தற்போதைய புல்லட்டின் டுமில் என்ற பதிவை ஆரம்பித்து உங்களுடன் பயணித்து வருகிறேன்..


  ஆரம்பத்தில் புல்லட் பாண்டி என்று பெயர் வைத்திருந்தேன்.. அனால் யாரோ எடுபட்ட பயல் அந்த பெயரில் ஒரு பலான ப்ளொக்கை திறந்து மஜா இடுகைகளை போட ஆரம்பித்ததும் புல்லட் என்று மாறிவிட்டேன்.. பல சந்தர்பங்களில் இடுகைகளை ஆதிரையினூடே தணிக்கைக்கு அனுப்பிய பின்பே வெளியிடுவேன்.. ஆகவே அவருக்கு இவ்வேளை நன்றிகளை தெரிவிக்கிறேன்.. மேலும் பதிவுலகம் மூலம் பல புதிய நண்பரகள் கிடைத்துள்ளார்கள்.. அவர்களுள் வந்தியர் மிகமிக நெருக்கமான நண்பராகிவிட்டார்.. அத்துடன் லோசண்ணரின் எளிமை மிகவும் ஆச்சரியப்படுதியது.. வாசிப்பே பல பதிவர்களை பக்குவப்படுத்தியருக்க வேண்டும் என நினைக்கிறேன்.. தற்போது நட்புவட்டத்தை மேலும் பெருப்பிக்க முயன்று கொண்டுள்ளேன்..


  விசைப்பலகை

  நான் ஆரம்பத்தில் பாமினி கீபோர்ட்டை எங்கேயோ பார்த்து கீறிவைத்து அடித்து பழகியிருந்தேன்.. ஏஎல் படிக்கும் போது பள்ளியில் சில வேலைகள் தமிழில் கணிணியில் செய்ததாக ஞாபகம் .. அப்போதும் இப்போதும் எப்போதும் பாமினியில்தான் ராமன் என் விரல்கள் விளையாடும்..


  நான் யாரையும் தொடராக அழைப்பதாக இல்லை.. காரணம் எனக்கு புதிதாக யாரையும் தெரியாது.. ஆகவே மறுபடியும் சுதன் அண்ணாவுக்கு நன்றிகளை தெரிவித்தவாறு விடைபெறுகிறேன்.. நன்றி..


  27 Responses

  1. ஆகா.. ஆகா... உங்கள் வரலாறு சூப்பர் தலைவரே...

  2. அப்போ கம்பசில் கில்லாடி என்று சொல்லுங்க...   //ஆரம்பத்தில் புல்லட் பாண்டி என்று பெயர் வைத்திருந்தேன்.. அனால் யாரோ எடுபட்ட பயல் அந்த பெயரில் ஒரு பலான ப்ளொக்கை திறந்து மஜா இடுகைகளை போட ஆரம்பித்ததும் புல்லட் என்று மாறிவிட்டேன்..//


   இப்போதான் ஞாபகம் வருகிறது திரைப்படம் தொடர்பான ஒரு வலைப்பதிவு உங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அது நீங்கள் தானா?

  3. அடப்பாவி புல்லட் கம்பஸில் நீங்கள் கில்லாடியா? இப்போதான் தெரிகிறது இந்தக் கிசுகிசு விடயங்கள் எல்லாம் எப்படி உங்களுக்கு தண்ணிபட்டபாடு என.

   மிகவும் சுவையாகவும் உங்கள் பாணியிலும் எழுதியிருக்கின்றீர்கள்.

   //அவர்களுள் வந்தியர் மிகமிக நெருக்கமான நண்பராகிவிட்டார்.//

   எனக்கு இதுவரையும் இணையவழி நண்பர்களாக தமிழக உறவுகள் சிலர் இருந்தார்கள், இருக்கின்றார்கள், இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அவர்களுடன் தொலைபேசிமூலமாக நேரடியாக எல்லாம் கதைக்க சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.

   புல்லட்டின் நெருக்கம் சொந்தச் செலவில் தோசை சாப்பிட்டு சூனியம் வைக்கிறவரை போய்விட்டது. நண்பனில் இருந்து ஒரு நல்ல தம்பியாக புல்லட் மாறிவிட்டார். (பாசமலர் பீலிங்ஸ்)

  4. வரலாற வாசிச்சாப் புல்லரிக்குது. ஒரு மார்க்கமான ஆளாத்தான் இருந்திருக்கீங்க ;)

   பிறகு அந்த சீனியரும், சீனியரிச்சியும இப்ப திருமணம் பண்ணிட்டாங்களா?

  5. நிமல்-NiMaL
   ஆகா.. ஆகா... உங்கள் வரலாறு சூப்பர் தலைவரே... //

   வரலாறு முக்கியம் நிமல்.. ;)

  6. சந்ரு
   அப்போ கம்பசில் கில்லாடி என்று சொல்லுங்க... //

   நன்றாக என்ஜோய் பண்ணியிருந்தேன்.. நிறைய மூக்குடைபட்டு ம் இருக்கிறேன்.. :D

   இப்போதான் ஞாபகம் வருகிறது திரைப்படம் தொடர்பான ஒரு வலைப்பதிவு உங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அது நீங்கள் தானா?//

   அது என்னுடையதுதான்.. டெம்ப்ளேட் டெஸ்டிங்குக்காக வைத்திருக்கிறேன்..

  7. //பின்னர் பெண்கள் எச்சரிக்கை விடுத்தாலும் நான் அதை கண்டு கொள்வதாயில்லை.. //
   அது சரி...
   புல்லட்டா கொக்கா...

   ம்... கம்பஸ்ஸை கலக்கிய புல்லட் என்று விருது குடுப்பமா?

  8. வந்தியத்தேவன்

   அடப்பாவி புல்லட் கம்பஸில் நீங்கள் கில்லாடியா? இப்போதான் தெரிகிறது இந்தக் கிசுகிசு விடயங்கள் எல்லாம் எப்படி உங்களுக்கு தண்ணிபட்டபாடு என. //
   ஆனால் பலரின் வெறுப்பையும் உள்ளக்குமைச்சலையும் சம்பாதித்தது விட்டேன்..என்ன செய்வது?

   மிகவும் சுவையாகவும் உங்கள் பாணியிலும் எழுதியிருக்கின்றீர்கள்.//

   நன்றியண்ணார்..

   புல்லட்டின் நெருக்கம் சொந்தச் செலவில் தோசை சாப்பிட்டு சூனியம் வைக்கிறவரை போய்விட்டது. நண்பனில் இருந்து ஒரு நல்ல தம்பியாக புல்லட் மாறிவிட்டார். (பாசமலர் பீலிங்ஸ்)//

   தம்பியுடையான் படைக்கஞ்சான்.. பந்திக்கு அஞ்சுவானா?உங்களுக்குதானே சூனியம் எல்லாம் சுவிங்கம் சாப்பிடுற மாதிரி..

  9. Mayooresan
   வரலாற வாசிச்சாப் புல்லரிக்குது. ஒரு மார்க்கமான ஆளாத்தான் இருந்திருக்கீங்க ;) //
   ம்ம் அரிக்கும் அரிக்கும்.. ஹிஹி

   பிறகு அந்த சீனியரும், சீனியரிச்சியும இப்ப திருமணம் பண்ணிட்டாங்களா? //

   அது இன்னும் இழுபறிதான்.. மச்சான் ஓடப்பாக்கிறார்.. பெட்டை விடுறமாதிரி இல்ல.. நாம பந்தயம் கட்டியிருக்கம்..

  10. September 15, 2009 11:03 AM

   கனககோபி
   //பின்னர் பெண்கள் எச்சரிக்கை விடுத்தாலும் நான் அதை கண்டு கொள்வதாயில்லை.. //
   அது சரி...
   புல்லட்டா கொக்கா... //

   பட்டினத்தார் பாடல்கள் நிறைய்ய படி தம்பி.. அது தானா வரும்

   ம்... கம்பஸ்ஸை கலக்கிய புல்லட் என்று விருது குடுப்பமா? //
   கம்பசை கலக்கிய பலர் உள்ளார்கள்.. நான் எல்லாம் ஜூஜூபி.. அவர்களை பற்றி பின்னர் கூறுகிறேன்..

  11. சுட வந்த கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

   தொடர்ந்து நகைச்சுவையாக எழுதுங்கள்.. வாசிக்கிறோம்..

  12. This comment has been removed by the author.
  13. யார் அந்த இரண்டு பேரும்? பெயரை சொல்லுவீங்களா????

  14. நீங்கள் கம்பஸ்சில கெமிக்கலுக்கு குப்பி எடுக்கேக்க கசிப்பை வைத்து விளங்கப்படுத்தியதாகக இப்போதும் கூறுவார்கள் உங்கள் ஜூனியர்கள், எங்கள் சீனியர்கள். உங்கள் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கிறேன்.

   //கார்த்தி
   September 15, 2009 2:05 PM
   யார் அந்த இரண்டு பேரும்? பெயரை சொல்லுவீங்களா???//

   பச்சிற்கு ஒன்று சொல்லலாமே?!!

  15. ஓ...பாண்டி மிஸ்ஸானதுக்கு பின் ஒரு சிக்கலே இருக்குதா...? :-))

  16. சிறுவயது அனுபவங்களும் உங்கள் வரலாறும் சுலாரஸ்யம்.

  17. யோ வாய்ஸ் (யோகா)
   சுட வந்த கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
   தொடர்ந்து நகைச்சுவையாக எழுதுங்கள்.. வாசிக்கிறோம் //

   நானும் ஐநூறு ருவா காசனுப்பிவியளாக்குமெண்டு நெச்சன்.... ;) ஹிஹி நன்றி..

  18. கார்த்தி
   யார் அந்த இரண்டு பேரும்? பெயரை சொல்லுவீங்களா???? //

   நீ எண்டா பயந்து சாகிறாய்? உனக்கு தெரிஞ்சாக்கள் இல்லை.. அதோட என்ட சீனியர் எண்டனான்.. ஆகவே நீ நினைக்கிறாளும் இல்ல .. ;)

  19. Subankan
   நீங்கள் கம்பஸ்சில கெமிக்கலுக்கு குப்பி எடுக்கேக்க கசிப்பை வைத்து விளங்கப்படுத்தியதாகக இப்போதும் கூறுவார்கள் உங்கள் ஜூனியர்கள், எங்கள் சீனியர்கள். உங்கள் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கிறேன். //


   இருக்கலாம் தம்பி .. கனகாலமாச்சு.. மறந்து போட்டு.. ஒண்டா ரெண்டா உப்பிடி எத்தினை கூத்தடிச்சனாங்கள் ஞாபகம் வச்சிருக்க.. உந்த கசிப்பு மாட்டர் எனக்கு நாகரட்னம் சேர்தான் சொல்லித்தந்தது.. இப்ப எல்லாம் மறந்து போச்சு..

  20. ’டொன்’ லீ
   ஓ...பாண்டி மிஸ்ஸானதுக்கு பின் ஒரு சிக்கலே இருக்குதா...? :-))//

   அவன் என்னை விட நல்ல வடிவா எழுதி வந்தவன்.. இந்தியாப்பாசையில சொல்ல பொனா செம ஹாட்டு.. இப்ப என்னாச்சுதோ தெரியேலல..

  21. மாதேவி
   சிறுவயது அனுபவங்களும் உங்கள் வரலாறும் சுலாரஸ்யம்.//

   உங்களை அழைத்திருக்கலாமோ? ஏய் யாரேனும் இந்த நளபாகமகாராணியை அழையுங்களேன்!

   ஆ மறந்துட்டன்..

   நன்றி நன்றி...

  22. உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.

  23. தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை என் எழுத்து கவர்ந்துள்ளதை நினைக்க பெருமையாகவுள்ளது... ஆனால் விருதை கொடுப்பதற்கு ஆள் இல்லாமையால் வாங்கி ஷோ கேசினுள் வைப்பதை தவிர வேறு வழியில்லை..மீண்டும் நன்றிகள்..

  24. நான் என்னத்தையோ கேக்க நீங்க என்னத்தையோ சொல்லுறீங்கள் :):)

  25. பின்னூட்டத்தை நீக்கவும்

   http://mayuonline.com/blog/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/
   இங்கே உங்களை அழைத்துள்ளேன் முடியுமானால் வந்து கலந்து கொள்ளுங்கள்

  26. உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்.

  27. சதீஸ் மயுரேசன் கட்டாயம் எழுதுகிறேன்.. ஒருவார அவகாசம் வேண்டும்.. மன்னிக்கவும்